கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 15. März 2011

ஸ்ரீலங்கா ஃபிரைட்ரைஸ்

ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் சுவையானது.
 கார்போஹைட்ரேட் மினரல்,கரோட்டீன்,
விற்றமின் ஏ,பி,சி பொட்டாசியம்
பொஸ்பரஸ் கல்சியம் இரும்பு மக்னிசீயம்
 போன்ற பலசத்துகள் அடங்கியது
ஸ்ரீலங்கன் மக்கள் விரும்பி உண்ணும்
உணவாகும். ஆகவே இதனை செய்து
 பார்த்து இதன் சுவையை அறிவதுடன்
இதில் காணப்படும் சத்துகளையும்
பெற்றுக்கொள்ளலாம்.


தேவையானபொருட்கள் 
பாஸ்மதி அரிசி - 3 கப்
பட்டர் - தேவையானளவு
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - அரை கப்
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய பீன்ஸ் - 2 கப்
உள்ளி (பூண்டு) - 3 பல்
இஞ்சி நறுக்கியது - 1 தேக்கரண்டி
தக்காளி நறுக்கியது - 1 கப்
கோவா (முட்டைகோஸ்) நறுக்கியது - 2 கப்
முட்டை (அவித்து, சிறுதுண்டுகள்) - 2
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
கோழி இறைச்சி(பொரித்த) - 2 கப்
பொரித்தஉருளைக்கிழங்கு (சிறியதுண்டுகள்) - 1கப்
அஜினோமோட்டோ - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
லீக்ஸ் - 2 கப்
கரட்-1 கப்
இறால் (சுத்தமாக்கி, பொரித்த ) - 2 கப்
கத்தரிக்காய் (சிறியதுண்டுகள்,பொரித்த) - 1 கப்


செய்முறை 

பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்யவும்

பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து
சூடாக்கிய பின்பு பட்டர், கழுவி துப்பிரவு செய்த
பாஸ்மதி அரிசி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.

பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை இறக்கி வறுத்த
அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில்
முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க
 விடவும்.

அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி
வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.

அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள
 கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி
வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.

பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில்
முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க
விடவும்.

அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி
வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.

அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள
கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி
வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
 வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய்
விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய்,
உள்ளி(பூண்டு), இஞ்சி போட்டு பொன்னிறமாக
வதக்கவும்.

பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் நறுக்கிய
பீன்ஸ் போட்டு வதக்கவும்.

பீன்ஸ் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய கரட்
போட்டு வதக்கவும்.

கரட் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய கோவா
(முட்டைகோஸ்) போட்டு வதக்கவும்.

கோவா(முட்டைகோஸ்) போட்டு வதக்கிய
பின்பு அதில் நறுக்கிய தக்காளி போட்டு
வதக்கவும்.

தக்காளி போட்டு வதக்கிய பின்பு அதில் பொரித்த
உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.

உருளைக்கிழங்கு போட்டு வதக்கிய பின்பு
அதில் நறுக்கிய லீக்ஸ் போட்டு வதக்கவும்.

பின்பு அதில் பொரித்த கத்தரிக்காய் போட்டு
வதக்கவும்.

பின்பு பொரித்த இறால் போட்டு வதக்கவும்.

பொரித்த இறால் போட்டு வதக்கிய பின்பு
அதில் பொரித்த கோழி இறைச்சி போட்டு
வதக்கவும்.

இவையாவும் நன்றாக வதங்கியதும் அவித்த
முட்டை, உப்பு, அஜினோமோட்டோ,
 மிளகுத்தூள், கறிவேப்பிலை, தேசிக்காய்
(எலுமிச்சம்பழ)சாறு, சோயா சாஸ் சேர்த்து
நன்றாக கலக்கவும்.

அதன் பின்பு சோற்றையும்(சாதத்தையும்)
சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்த ஒரு நிமிடத்தின் பின்பு சுவையான
ஃப்ரைட்ரைஸ் தயாராகி விடும்.

அதன் பின்பு அடுப்பிலிருந்து இறக்கி ஒரு
தட்டில் ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் வைத்து
 இதனுடன் கறிவேப்பிலை துவையல்
அல்லது இஞ்சித்துவையல் அல்லது
வேறு ஏதாவது துவையலுடன் பரிமாறவும்.



எச்சரிக்கை 
இருதய நோயாளர், கத்தரிக்காய், இறால்,
தக்காளி,முட்டை கோழிஇறைச்சி,
உருளைக் கிழங்கு, சோயா சாஸ் அலர்ஜி
உடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்