கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 31. Juli 2011

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 30. Juli 2011

குமளவடை

இலங்கையில் உள்ள கண்டி மாநகரத்தில்
உள்ள சிங்களமக்கள் தங்களுடைய புதிய
வருட தினத்தன்று முக்கியமாக இந்த
வடையை செய்து தங்களுடைய உறவினர்
நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வார்கள்
அத்துடன் இது காபோவைதரேற்று,இனிப்பு&
சத்து நிறைந்த உணவாகும்

தேவையான பொருட்கள்

பச்சைஅரிசி-1சுண்டு
சவ்வரிசி(ஜவ்வரிசி)-சிறிதளவு
மஞ்சள் தூள்-சிறிதளவு
எண்ணெய்-தேவையானளவு
நிறங்கள் -விரும்பியது
சீனிப்பாகு -தேவையானளவு
உப்பு -தேவையானளவு
கொதித்ததண்ணீர்-தேவையானளவு

செய்முறை

(1)ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசியை
போட்டு இரண்டு மணித்தியாலம்
ஊறவிடவும்


(2)ஊறவிட்ட அரிசியை உரலில் அல்லது
கிரைண்டரில் போட்டு மாவாக இடிக்கவும்


(3)இடித்த மாவை ஒரு பாத்திரத்தில்(ஸ்டீமரில்
அல்லது இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தில்)
போட்டு நன்றாக அவிக்கவும்


(4)அவித்த பின்னர் அதனை அரிதட்டினால்
அல்லது சல்லடையினால் நன்றாக அரிக்கவும்


(5)அரித்தமாவுடன்மஞ்சள் தூள்,உப்பு கொதித்த
தண்ணீர்,சிறியதுளிவிரும்பியநிறங்கள் ஆகிய

வற்றைபோட்டு நன்றாக குழைக்கவும்
.



(6)குழைத்த பின்னர் அதனை ஓரளவு
மெல்லியதாவும் சிறிய வட்டமாகவும்
ரொட்டி போலவும் தட்டவும்.


(7)தட்டிய பின்னர் அதனை சவ்வரிசி
(ஜவ்வரிசி)யில்போட்டு நன்றாக
பிரட்டவும்.


(8)பிரட்டிய பின்னர் அடுப்பில் தாட்சியை
அடுப்பில் வைத்து சூடாக்கி அதில்
எண்ணையைவிட்டு இளம் சூட்டில்
கொதிக்கவிடவும்.


(9)இளம் சூட்டில் எண்ணெய் கொதித்த
பின்னர் அதில் தட்டி சவ்வரிசி(ஜவ்வரிசி)
யில் பிரட்டிய வடையை போட்டு
பொரிக்கவும்


(10)வடை பொரிந்த பின்னர் அவற்றை
ஒரு பாத்திரத்தில் போடவும்,


(11)விரும்பினால்சீனி(சக்கரை)பாகில்
போட்டு ஊறவிடலாம்.


(12)அதன் பின்னர் ஒருதட்டில் தேவையான
குமளவடைகளை வைத்து பரிமாறவும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 29. Juli 2011

குமளவடை

இலங்கையில் உள்ள கண்டி மாநகரத்தில்
உள்ள சிங்களமக்கள் தங்களுடைய புதிய
வருட தினத்தன்று முக்கியமாக இந்த
வடையை செய்து தங்களுடைய உறவினர்
நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வார்கள்
அத்துடன் இது காபோவைதரேற்று,இனிப்பு&
சத்து நிறைந்த உணவாகும்
தேவையான பொருட்கள்
பச்சைஅரிசி-1சுண்டு
சவ்வரிசி(ஜவ்வரிசி)-சிறிதளவு
மஞ்சள் தூள்-சிறிதளவு
எண்ணெய்-தேவையானளவு
நிறங்கள் -விரும்பியது
சீனிப்பாகு -தேவையானளவு
உப்பு -தேவையானளவு
கொதித்ததண்ணீர்-தேவையானளவு
செய்முறை
(1)ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசியை
போட்டு இரண்டு மணித்தியாலம்
ஊறவிடவும்


(2)ஊறவிட்ட அரிசியை உரலில் அல்லது
கிரைண்டரில் போட்டு மாவாக இடிக்கவும்


(3)இடித்த மாவை ஒரு பாத்திரத்தில்(ஸ்டீமரில்
அல்லது இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தில்)
போட்டு நன்றாக அவிக்கவும்


(4)அவித்த பின்னர் அதனை அரிதட்டினால்
அல்லது சல்லடையினால் நன்றாக அரிக்கவும்


(5)அரித்தமாவுடன்மஞ்சள் தூள்,உப்பு கொதித்த
தண்ணீர்,சிறியதுளிவிரும்பியநிறங்கள் ஆகிய

வற்றைபோட்டு நன்றாக குழைக்கவும்
.



(6)குழைத்த பின்னர் அதனை ஓரளவு
மெல்லியதாவும் சிறிய வட்டமாகவும்
ரொட்டி போலவும் தட்டவும்.


(7)தட்டிய பின்னர் அதனை சவ்வரிசி
(ஜவ்வரிசி)யில்போட்டு நன்றாக
பிரட்டவும்.


(8)பிரட்டிய பின்னர் அடுப்பில் தாட்சியை
அடுப்பில் வைத்து சூடாக்கி அதில்
எண்ணையைவிட்டு இளம் சூட்டில்
கொதிக்கவிடவும்.


(9)இளம் சூட்டில் எண்ணெய் கொதித்த
பின்னர் அதில் தட்டி சவ்வரிசி(ஜவ்வரிசி)
யில் பிரட்டிய வடையை போட்டு
பொரிக்கவும்


(10)வடை பொரிந்த பின்னர் அவற்றை
ஒரு பாத்திரத்தில் போடவும்,


(11)விரும்பினால்சீனி(சக்கரை)பாகில்
போட்டு ஊறவிடலாம்.


(12)அதன் பின்னர் ஒருதட்டில் தேவையான
வடைகளை வைத்து பரிமாறவும்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 28. Juli 2011

பயித்தம்பருப்பு தோசை

பயித்தம்பருப்பு தோசை சுவையானதும் சத்தானதும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணகூடியதும் ஆகும்
ஆகவே இதை செயது சாப்பிட்டு இதன்
சுவையை அறியவும்


தேவையான பொருட்கள்
பயித்தம்பருப்பு - 1 சுண்டு
மைதாமா(கோதுமைமா) - 2 சுண்டு
அரிசி - சிறிதளவு
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 6
கடுகு - அரைதேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரைதேக்கரண்டி
கருவப்பிலை( நறுக்கியது)- சிறிதளவு
நல்லெண்ணைய் - தேவையானளவு
முட்டை - 1(விரும்பினாள்)
உருளைக்கிழங்கு(சிறியது) - 1
வெங்காயம் (பெரிது ,நறுக்கியது) - 1

செய்முறை
ஒருபாத்திரத்தில் பயித்தம்பருப்பு,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

மற்றைய பாத்திரத்தில் வெந்தயம்,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் அரிசி,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

ஊறியவெந்தயம்,சிறிதளவு தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு நன்றாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் ஊறவைத்த
அரிசி தண்ணீர் ஆகியவற்றை கலந்து
கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு
நைசாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போடவும்.

பின்பு ஊறிய பயித்தம்பருப்பு, தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு பொங்க பொங்க
அரைக்கவும்(தோசைமா பதத்திற்கு).

அரைத்த பின்பு அதை எடுத்து அரிசி
,வெந்தயம் அரைத்து வைத்து உள்ள
பாத்திரத்தில் போடவும்.

பின்பு கோதுமைமா(மைதாமா),தண்ணீர்
ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்)
போட்டு நன்றாக கலக்கவும்(கட்டியில்லாமல்).

அரைத்த பின்பு அதை அரிசி,வெந்தயம்,
 பயித்தம்பருப்பு அரைத்து வைத்து உள்ள
பாத்திரத்தில் கலந்த கோதுமைமா(மைதாமா)
போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

கலந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.

அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்பு
போட்டு கலக்கவும்.

பின்பு முட்டையை உடைத்து அதன் கோதை
அகற்றிய பின்பு அதனை அப்படியே தோசை
மாவில் போட்டு நன்றாக கலக்கவும்(தோசை
சுவையாகவும் தோசையை அடுப்பில் உள்ள
தோசைக்கல்லிருந்து எடுக்கும் போது
இலகுவாக வந்து விடும்).

பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணையை
ஊற்றி வைக்கவும்.

அதன் பின்பு உருளைக்கிழங்கை இரண்டு
பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி
உருளைகிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்
மாட்டி)வைக்கவும்.

இதனை நல்லெண்ணையுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணையில்படும்படி).

பின்பு செத்தல் மிளகாயையின்(காய்ந்த மிளகாயை)
காம்பினை அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு தட்டில் வைக்கவும்.

அதன்பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு
சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணையில் கடுகைபோட்டு வெடிக்க
விட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை
போட்டு ஓரளவு பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய்,
பெருஞ்சீரகம்,நறுக்கிய கருவப்பிலை ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு
நன்றாக கலக்கவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை
சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில்
குத்திய கிழங்கினால் (கிழங்கினை எண்ணையில்
நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணையை எடுத்து
அதை தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து
தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய
மாவை )தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி
போட்டு வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

இதே போல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து
அதனுடன் சம்பல் (துவையல்), சாம்பார், சட்னி, பிரட்டல்கறி(கிழங்கு,கத்தரிக்காய்,பீன்ஸ்)
ஆகியவற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.



எச்சரிக்கை
உழுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.



கவனிக்க வேண்டிய விசயங்கள்
தோசை குளிர்மையானது

மாற்று முறை
அரிசி(பச்சையரிசி,குத்தரிசி இட்லி அரிசி
,சம்பா, புலுங்கள் )எல்லா அரிசிகளையும்
பாவிக்கலாம்.

சோயாமுளைமுட்டை வறுவல்

சோயா அவரை கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட
ஒரு அவரை இனத்தாவரம் ஆகும்.அத்துடன் இது
ஆண்டுத்தாவரமாகும் இது 5,000 ஆண்டுகளுக்கு
மேலாக சீனநாட்டுமக்களின் உணவாகவும்அத்துடன்
மருந்துகளிற்காகவும்பயன்பட்டு வருகின்றது.சோயா
மனிதனுக்குத் தேவையானஎல்லா அமினோ அமிலங்
களையும் குறிப்பிடத்தக்களவில்கொண்டிருப்பதனால்,
இது புரதச்சத்துக்கான சிறந்தமூலமாகஉள்ளது.சோயா
வில் பல உணவுப்பொருள்கள் தயாரிக்கப்படுகிறன
அவற்றுள் பால் பொருட்களுக்கான மாற்றுஉணவுப்
பொருள்களும் அடங்கும்.அத்துடன் சோயாவில்
கொழுப்பு சத்து,மக்னீசியம்,கலியம்,கல்சியம்,உயிர்சத்து B1,B2,B3,B5,B6,B9.C,E,K1,நீர்சத்து,சிங்த்து,காபோவைத
ரேற்று,இரும்புசத்து,பொஸ்பேற்று ஆகியசத்துக்கள்
அடங்கியதுஇப்படிப்பட்ட சோயாவை முளைக்கவிட்டு
அதில் மற்றைய பொருட்களை சேர்த்து செய்யப்படும்
சோயாமுளைமுட்டை வறுவல் சுத்தமான சுவையான
சத்தானதுமாகும்
தேவையான பொருட்கள்
சுத்தமாக்கிய சோயா முளைகள்- 100கிராம்
மிளகாய்த்தூள்- தேவையானளவு
வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
மாசி -சிறிதளவு (விரும்பினால்)
இறால் கருவாடு - சிறிதளவு (விரும்பினால்)
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
முட்டை- 1
தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

செய்முறை

(1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
சுடாக்கவும்.

(2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
சுடாக்கவும்

(3)எண்ணெயை சூடான பின்னர் அதில் வெங்காயம்,
கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
    (4)தாளித்த பின்னர் அதில்சோயா முளைகள்,மாசி,
    இறால் கருவாடு ,மிளகாய்த்தூள் ஆகியவற்றை
    போட்டு மூடி (2-3)நிமிடங்கள் அவியவிடவும்
      (5)அவிந்த பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
      வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
      வேண்டாம்).
        (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள் முட்டை,
        ,உப்பு, தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்)ஆகிய
        வற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்குகிளறி
        இறக்கவும்.
          (7)கிளரிய பின்னர் சுத்தமான சுவையான
          சத்தான சோயா முளை முட்டை வறுவல்
          தயாராகிவிடும்.

          (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
          ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

          (9)பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம்),
          இடியப்பம்,புட்டு அல்லது பாண்
          ஆகியவற்றில் ஒன்றை வைத்து
          அதனுடன் சுத்தமான சுவையான
          சத்தான சோயா முளை முட்டை
          வறுவலைவைத்து பரிமாறவும்.

          வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


          Mittwoch, 27. Juli 2011

          குடைமிளகாய் வறை



          தேவையானபொருட்கள்
          சிறிதுசிறிதாகவெட்டிய குடைமிளகாய்-100கிராம்
          மிளகாய்த்தூள்- தேவையானளவு
          வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
          பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
          கடுகு - சிறிதளவு
          எண்ணெய் - தேவையானளவு
          உப்பு - தேவையானளவு
          முட்டை- 1
          தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

          செய்முறை

          (1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
          சுடாக்கவும்.

          (2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
          சுடாக்கவும்

          (3)எண்ணெயை சூடான பின்னர் அதில் வெங்காயம்,
          கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
            (4)தாளித்த பின்னர் அதில் சிறிது சிறிதாக
            வெட்டிய குடைமிளகாயை போட்டு மூடி (2-3)
            நிமிடங்கள் அவியவிடவும்
              (5)அவிந்த பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
              வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
              வேண்டாம்).
                (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள் முட்டை,
                உப்பு, தேசிக்காய் சாறு(லைம் ஜூஸ்)ஆகிய
                வற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி
                இறக்கவும்.
                  (7)கிளரிய பின்னர் சுத்தமான சுவையான
                  சத்தான குடைமிளகாய்வறை தயாராகிவிடும்.

                  (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
                  ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

                  (9)பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
                  (சாதத்தை) அல்லது பாணை வைத்து
                  அதனுடன் சுத்தமான சுவையான
                  சத்தான குடைமிளகாய்வறையை
                  வைத்து பரிமாறவும்.

                  புதன்கிழமை வாழ்த்துக்கள்


                  Dienstag, 26. Juli 2011

                  Montag, 25. Juli 2011

                  கரட்முட்டைவறை

                  தேவையான பொருட்கள்
                  துருவியகரட்-100கிராம்
                  மிளகாய்த்தூள்- தேவையானளவு
                  வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
                  பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
                  கடுகு - சிறிதளவு
                  எண்ணெய் - தேவையானளவு
                  உப்பு - தேவையானளவு
                  முட்டை- 1
                  தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

                  செய்முறை

                  (1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
                  சுடாக்கவும்.

                  (2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
                  சுடாக்கவும்

                  (3)எண்ணெயை சூடான பின்னர் அதில் வெங்காயம்,
                  கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
                    (4)தாளித்த பின்னர் அதில் துருவிய கரட்டை
                    போட்டு மூடிவிடவும்
                      (5)பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
                      வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
                      வேண்டாம்).
                        (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள் முட்டை,
                        உப்பு, தேசிக்காய் சாறு(லைம் ஜூஸ்)ஆகிய
                        வற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி
                        இறக்கவும்.
                          (7)கிளரிய பின்னர் சுத்தமான சுவையான
                          சத்தான கரட்வறை தயாராகிவிடும்.

                          (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
                          ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

                          (9)பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
                          (சாதத்தை) அல்லது பாணை வைத்து
                          அதனுடன் சுத்தமான சுவையான
                          சத்தான கரட் வறையைவைத்து
                          பரிமாறவும்.

                          திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


                          Sonntag, 24. Juli 2011

                          அப்பிள் சலாட்


                          செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல் 
                          பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும் 
                          விற்றமின் A, B1, B2, B3, B5, B6, B9, C,கல்சியம்,
                          இரும்பு, மக்னீஸியம், பொஸ்பரஸ்,பொட்டாஷியம்,
                          புரோட்டின், கார்போஹைட்ரேட் கொழுப்பு, நார்சத்து
                          ஆகிய சத்துக்களும்அடங்கியுள்ளதுமான ஒர் சலாட் 

                          ஆகும்


                          தேவையான பொருட்கள்
                          பெரிய துருவிய அப்பிள்-4
                          சிறியதாக வெட்டிய வெங்காயம் - 1
                          சிறியவட்டமாகவெட்டிய பச்சைமிளகாய் -2
                          மிளகு (தூள்) - தேவையான அளவு
                          உப்பு - தேவையான அளவு
                          தேசிக்காய்ச்சாறு (லெமன் ஜூஸ்) -தேவையானளவு
                          பால் அல்லது யோக்கற் - தேவையான அளவு

                          செய்முறை 
                          (1)ஒருபாத்திரத்தில் துருவிய,அப்பிள் சிறிய 
                               வட்டமாக வெட்டிய பச்சைமிளகாய், சிறிய 
                                துண்டுகளாக வெட்டிய வெங்காயம் ஆகிய
                                வற்றை போடவும் .

                          (2)அதன் பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பால் 
                              அல்லது யோக்கற், தேசிக்காய் சாறு (லெமன் 
                               ஜூஸ்) சேர்த்து நன்றாக கலக்கவும்.

                          (3)கலக்கிய இக் கலவையை மூடி 2 நிமிடங்கள் ஊற 
                              விடவும். 

                          (4) அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
                              செய்வதிற்கு இலகுவான அப்பிள்சலாட் 

                               தயாராகிவிடும்.


                          கவனிக்கவேண்டியவை

                          விரும்பினால் தக்காளிப்பழம் ஊறுகாய் இவையிரண்டையும் சேர்க்கலாம் அல்லது ஒன்றை சேர்க்கலாம் அல்லது ஒன்றையும் சேர்க்காமல் விடலாம் (சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்)

                          ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


                          Samstag, 23. Juli 2011

                          அன்னாசிப்பழ கறி


                          அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
                          விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C  கல்சியம்
                          பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
                          மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள்
                          அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்
                          பழத்தில் செய்த கறியானது மேற் 

                          குறிப்பிட்ட சகல வகை சத்துகளுடன் 
                          இனிப்பு கலந்தஉறைப்புடன் சேர்ந்து 
                          மிக மிக சுவையுடன் காணப்படும். இந்த 
                          கறியின் சுவையை எல்லோரும் 
                          விரும்புவார்கள் நீங்களும் இதன் சுவை
                          யை இதனை செய்து சாப்பிட்டு
                          அறியவும்.




                          தேவையான பொருட்கள் 
                          அன்னாசிப்பழம்-1
                          மிளகாய்த்தூள் - சிறிதளவு
                          மஞ்சள் தூள் -சிறிதளவு 
                          உப்பு -தேவையானளவு
                          பொடிபொடியாகநறுக்கியவெங்காயம் -1
                          பெருஞ்சீரகம்(சோம்பு) -கால் தேக்கரண்டி
                          கடுகு - கால் தேக்கரண்டி
                          பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
                          பொடிபொடியாக நறுக்கியஉள்ளி(பூண்டு)-6 
                          பால் - சிறிதளவு 
                          வெட்டிய கறிவேப்பிலை -சிறிதளவு
                          தேசிக்காய்ப்புளி - தேவையானளவு
                          எண்ணெய்- சிறிதளவு 


                          செய்முறை 
                          தோல் நீக்கி சுத்தமாக்கிய அன்னாசிப்
                          பழத்தை ஓரளவு சிறியதுண்டுகளாக 
                          வெட்டவும்


                          வெட்டியபின் அவற்றை ஒரு பாத்திரத்தில்
                          போட்டு மூடி  வைக்கவும் 


                          அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
                          வைத்து சூடாக்கவும்


                          தாட்சி சூடானதும் அதில் சிறிதளவு
                          எண்ணையை விட்டு சூடாக்கவும்.


                          எண்ணெய் சூடானதும் அதில் கடுகு
                          போட்டு பொரிய விடவும்


                          அதன் பின்னர் அதில் பெருஞ்சீரகம்
                          (சோம்பு),பொடிபொடியாகநறுக்கிய
                          வெங்காயம் ஆகியவற்றை போட்டு
                          ஓரளவு பொரியவிடவும்.


                          ஓரளவு பொரிந்த பின்னர் அதனுடன்
                          பொடிபொடியாக நறுக்கிய பச்சை
                          மிளகாயை போட்டு தாளிக்கவும் .


                          தாளித்த பின்னர் தாளித்தவற்றுடன் 
                          மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் பொடி
                          பொடியாக நறுக்கிய உள்ளி(பூண்டு) 
                          ஆகியவற்றை போட்டு பிரட்டி 
                          மிளகாய்த்தூளின் பச்சை வாடை
                          யில்லாமல்  போகும்வரை பொரிய
                          விடவும்.


                          அதன் பின்னர் அவற்றுடன் சுத்தப்
                          படுத்தி கழுவி வெட்டிய அன்னாசிப் 
                          பழத்துண்டுகளை போடவும்


                          அன்னாசிப்பழ துண்டுகளை போட்ட
                          பின்னர் தாட்சியை முடி ஓரளவு 
                          அவியவிடவும்


                          அன்னாசிப்பழ துண்டுகள் ஒரளவு 
                          அவிந்த பின்னர் உப்பு,போடவும் 


                          உப்பு போட்ட பின்னர் அதனுடன் 
                          பாலைவிட்டு கொதிக்கவிடவும்


                          கொதித்த பின்னர் அதனுடன்
                          கறிவேப்பிலையை போட்டு
                          சிறிது நேரம் அவிய விட்டு
                          அடுப்பில் இருந்து இறக்கவும் .


                          அதன் பின்னர் சுத்தமான
                          சுவையான சத்தான அன்னாசிப்பழ
                          கறி தயாராகிவிடும்


                          பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
                          (சாதத்தை)வைத்து அதனுடன்
                          சுத்தமான சுவையான சத்தான
                          அன்னாசிப்பழகறியை வைத்து
                          பரிமாறாவும்

                          நீர்த்துப்பூசணிக்காய்

                          காய்கறிகளைப் பைகளில் போட்டு
                          வைக்கும் போது நீர்சத்துள்ள
                          பூசணிக்காய்,நீர்த்துப்பூசணிக்காய்
                          போன்ற காய்கள் உடன் மற்றைய
                          காய்களையும் சேர்த்து வைத்தால்
                          அவை மிகஇலகுவாக பழுதடைந்து
                          விடும். 

                          கீரையை தண்ணீரில் நன்றாக கழுவிய பின்பு

                          கீரையை தண்ணீரில் நன்றாக கழுவிய
                          பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு
                          தண்ணீர் எடுத்து அதில் ஒருதேக்கரண்டி
                          மஞ்சள் தூளைப் போட்டு கரைத்து அதில்
                          கீரையை முக்கிய பின்பு எடுத்து சமைத்தால்
                          கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் எல்லாம்
                          அழிவதோடு கீரை மணமாகவும் சுவையாகவும்
                          இருக்கும். 

                          சனிக்கிழமை வாழ்த்துக்கள்


                          Freitag, 22. Juli 2011

                          பாதுஷா செய்யும் போது

                           ஒரு பாத்திரத்தில் ஒரு சிட்டிகை
                          அப்பச்சோடா,சிறிதளவு நெய் (டால்டா)
                          ஆகியவற்றை சேர்த்து சூடாக்கவும் அதன்
                          பின்னர் சூடாககியவற்றை பாதுஷா
                          செய்யும் மாவுடன் சேர்த்து குழைத்து
                          (பிசைந்து)  பாதுஷாவை செய்தால் பாதுஷா
                          மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும் 

                          வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


                          Donnerstag, 21. Juli 2011

                          செவன் கப் கேக்கினை செய்யும் போது

                          செவன் கப் கேக்கினை செய்யும் போது கயுவை
                          (முந்திரிபருப்பு),பாதாம்பருப்பை பாலில் ஊறவைத்த
                          பின்பு அதனை அரைத்து சேர்த்து செய்தால் கேக்
                          சுவையாக இருக்கும்

                          உறைப்பான பலகாரங்களை செய்யும்

                                 உறைப்பான   பலகாரங்களை செய்யும்
                                போது மாவுடன் ஒரு குழிக்கரண்டி அளவு 
                                நல்ல சூடான எண்ணையை சேர்த்து 
                                குழைத்து பலகாரங்களை செய்தால் 
                                பலகாரங்களின் உள்ளே மெதுமையா
                                கவும் பலகாரங்களின் வெளிப்பகுதி 
                                நல்ல மொறு மொறுப்பாகவும் 
                                காணப்படும்

                          வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


                          Mittwoch, 20. Juli 2011

                          பீட்ரூட்,கரட் சௌசௌ

                          நாங்கள் கடையில் வாங்கிய பீட்ரூட்,கரட்
                          சௌசௌ போன்ற காய்கறிகள் சில
                          நேரங்களில் கொழாகொழாவெனவாகி
                          விடும்.இப்படியாக மாறிவிட்ட காய்கறிகளை
                          ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில்
                          இவற்றை போட்டு இப்பாத்திரத்தை மூடாமல்
                          பிரிட்ஜில் வைத்தால் அடுத்தநாள் இக்காய்
                          கறிகள் நல்ல பிரஸ்ஸாகி விடும் .

                          புதன்கிழமை வாழ்த்துக்கள்


                          Dienstag, 19. Juli 2011

                          கிரேவி, குருமா, குழம்பு (கூட்டு) போன்றவை சமைக்கும் போது

                          கிரேவி, குருமா, குழம்பு (கூட்டு) போன்றவை
                          சமைக்கும் போது சில நேரங்களில் இவை
                          கெட்டியாகி (தடிப்பாகி) விடும். தடிப்பான
                          கிரேவி,குருமா,குழம்பு(கூட்டு) போன்றவைக்கு
                          தேவையானளவு தக்காளிப்பழத்தை அரைத்து
                          இவற்றுடன் சேர்த்தால் கிரேவி,குருமா,குழம்பு
                          (கூட்டு) போன்றவை சுவையாகவும் சரியான
                          பதத்திலும் காணப்படுவதுடன் இதற்கு எண்ணெய்
                          சேர்க்கவும் தேவையில்லை .

                          குழம்பு வகைகளில் உறைப்பு (காரம் ) அதிகமாகி விட்டால்

                               குழம்பு வகைகளில் உறைப்பு (காரம் ) அதிகமாகி
                               விட்டால் அந்த குழம்பு வகைகளை  அடுப்பில்
                              வைத்து அதனுடன் அரைத்த தேங்காய்பால்,சிறிதளவு
                              தேசிக்காய்சாறு  (எலும்பிச்சை சாறு ) ஆகியவற்றை
                              கலந்து சிறிதளவு நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால்
                              அதில் காணப்படும் அதிகமான காரம் குறைந்துவிடும்

                          செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


                          Montag, 18. Juli 2011

                          கிரேவிவகைகளில் உறைப்பு(காரம் )அதிகமாக

                           கிரேவிவகைகளில் உறைப்பு(காரம் )அதிகமாக
                          காணப்பட்டால் சிறிதளவு தக்காளி,சிறிதளவு
                          வெங்காயம் ஆகியவற்றை சிறிய  சிறிய
                           துண்டுகளாக  வெட்டி வதக்கி அரைக்கவும்.
                          அதன் பின்பு வதக்கி அரைத்ததை  ஏற்கனவே
                          உறைப்பு (காரம்) அதிகமான கிரேவி வகைகளில்
                          கலந்தால் ஏற்கனவே கிரேவியில் காணப்படும்
                          அதிகமான  உறைப்பு (காரம் ) ஆகியவை
                           சரியாகிவிடும்

                          முறுக்கு ,பகோடா,சீடை

                          முறுக்கு ,பகோடா,சீடை ஆகியவை
                          செய்யும் மாவுடன் சிறிதளவு சோளம்
                          மாவை கலந்து குழைத்தால் நல்லா
                          மொறுமொறுப்பாகவும் சுவையாகவும்
                          இவை யாவும் காணப்படும்

                          திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

                          Sonntag, 17. Juli 2011

                          உளுந்து வடைக்கு மாவை அரைக்கும் போது

                          உளுந்து வடைக்கு அரைக்கும் போது
                          ஒருசுண்டு உளுந்துடன் ஒருதேக்கரண்டி
                          கடலைப்பருப்பு சேர்த்து ஊறவைத்து 
                          அரைத்து வடை செய்தால் நல்லமொறு
                          மொறுப்பான உளுந்து வடை சாப்பிடலாம்

                          ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


                          Samstag, 16. Juli 2011

                          கடலை

                          கடலையை தாளிக்கும் போது இரண்டு கரட்டை
                          துருவி வெங்காயத்துடன் சேர்த்து தாளித்தால் மிக
                          மிக சுவையாக இருக்கும்.

                          சனிக்கிழமை வாழ்த்துக்கள்


                          Freitag, 15. Juli 2011

                          அடை

                          அடைக்கு மா அரைக்கும் போது மாவை
                          வழித்தெடுப்பதிற்கு கால்மணித்தியாலத்திற்கு
                          முன்பாக சிறிய வெங்காயத்தை மிக்சியில்
                          (கிரைண்டரில்) போட்டு அரைத்தல் அடை
                          மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மிக
                          இலகுவாக எடுக்க கூடியதாகவும் இருக்கும்.

                          வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


                          Donnerstag, 14. Juli 2011

                          சூப்

                          எல்லா வித சூப்பிற்கு மிளகுத்தூள் ,சின்ன
                          சீரகத்தூள் ஆகியவை கலந்து செய்தால் உடல்
                          செரிமானத்திற்கு நல்லது அத்துடன் சூப்பை
                          இறக்கும் போது பசு நெய்யை சேர்த்து கலக்கி
                          நாள் மிக நல்லது.

                          மில்க் ஷேக்

                          ஜாம் போத்தல் உள்ள ஜாம் முடிந்த பின்பு
                          அந்த போத்தலின் உள்ளே கொஞ்சம் பாலை
                          விட்டு நன்றாக குலுக்கினால் சுவையான
                          மில்க் ஷேக் தயாராகிவிடும்.

                          வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


                          Mittwoch, 13. Juli 2011

                          யாழ் கூழ்

                          தேவையான பொருட்கள்
                          ஒடியல் மா - 100 கிராம்
                          (சுத்தம் செய்தது) இறால் - 100 கிராம்
                          பாதியாக உடைத்த  நண்டு - 8
                          மீன்தலை - 1
                          புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி
                          பயிற்றங்காய் - 10
                          புளி - ஒரு சின்ன உருண்டை
                          பலாக்கொட்டை - 100 கிராம்
                          சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்
                          தண்ணீர் - தேவையான அளவு
                          உப்பு - தேவையான அளவு
                          மஞ்சள் - சிறிதளவு
                          மிளகு - சிறிதளவு
                          நற்சீரகம் - சிறிதளவு
                          செத்தல் மிளகாய் - சிறிதளவு

                          செய்முறை

                          ஒடியல் மாவை அரிதட்டினால் நன்றாக
                               அரிக்கவும் 

                          அதன் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் 
                          போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து 
                          நன்றாக கழுவி வைக்கவும்.

                          பின்னர் அம்மியில் கிரைண்டரில் மஞ்சள், 
                          மிளகு, சின்னசீரகம் ,செத்தல்மிளகாய்
                          ஆகியவற்றில் சிறிதளவை எடுத்து 
                          நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

                          அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து
                              ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

                          பின் நன்றாக கழுவிய அரிசி ,பயிற்றங்காய், 
                          பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு
                          ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு 
                          வேகவிடவும்.

                          வெந்த பின்னர் அதனுடன் மீன்தலை, நண்டு, 
                          இறால் ஆகியவற்றையும் பானைக்குள் 
                          போடவும்.


                          இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் 
                          உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் 
                          இறக்கவும்

                          இப்போது சுத்தமான சுவையான சத்தான  
                          யாழ்கூழ் தயாராகிவிடும்

                          பின்னர் கூழ் குடிக்கும் பாத்திரத்தில் 
                          ஊற்றி பறிமாறவும்

                          புதன்கிழமை வாழ்த்துக்கள்


                          Dienstag, 12. Juli 2011

                          ஆடிக்கூழ்

                          இது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் 
                          மிக மிக பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவு 
                          வகை ஆகும் 



                          தேவையான பொருட்கள் 


                          பயறு - 1/4 கப் 
                          தேங்காய்பால் - 2 கப் 
                          பனங்கட்டி - 3 /4 கப்  
                          தேங்காய்ச்சொட்டு - தேவையான அளவு 
                          உப்பு - தேவையான அளவு 
                          தண்ணீர் - தேவையான அளவு 

                          செய்முறை

                          1 .பயறு ,அரிசிமாவை ஆகியவற்றை
                              தனித்தனியாக வெறும் சட்டியில்
                              போட்டு வறுக்கவும்.

                           2 .இரண்டு கப் தண்ணீரை கொதிக்க
                               வைத்து அதனுள் வறுத்த பயறைப்
                               போட்டு அவிய விடவும்.

                          3 . பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி
                              மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து
                             அதனுள் விட்டு மா கட்டிபடாமல்
                              இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.

                          4 . மா அவிந்ததும் (வெந்ததும்) (கூழ்
                                தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி,
                               உப்பு,தேங்காய்ச்சொட்டு ஆகிய
                               வற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும்.

                          5 .சுடச்சுட அருந்த சுவையான
                              ஆடிக்கூழ் தயார்!

                          செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


                          Montag, 11. Juli 2011

                          நெத்தலி-65


                          தேவையான பொருட்கள்

                          நெத்தலிக்கருவாடு -250 கிராம்
                          கடலை மா -3 தேக்கரண்டி 
                          தேசிக்காய்(எலுமிச்சம்)சாறு-அரைதேக்கரண்டி 
                          இஞ்சி அரைத்தவிழுது -அரை தேக்கரண்டி
                          உள்ளி(பூண்டு)விழுது -அரைதேக்கரண்டி 
                          பச்சை மிளகாய் (அரைத்தவிழுது)-2 
                          செத்தல் (காய்ந்த)மிளகாய் (அரைத்தவிழுது)-7 
                          மஞ்சள்தூள் -கால் தேக்கரண்டி 
                          உப்பு -தேவையானளவு 
                          எண்ணெய் -தேவையானளவு

                          செய்முறை



                          1)ஓரு பாத்திரத்தில் நெத்தலிகருவாட்டை போட்டு 
                          அதன் தலைப்பகுதியை அகற்றிய பின்பு அதனுடன் 
                          தண்ணீர் விட்டு அதிலுள்ள மண்ணை அகற்றி 
                          நன்றாக சுத்தம் செய்யவும்.


                          (2)சுத்தம் செய்த பின்பு அதனை ஓரு பாத்திரத்தில் 
                          போடாவும்.


                          (3)பின்பு அதனுடன் தேசிக்காய்(எலுமிச்சம்)
                          சாற்றினை பிழிந்து விடவும் பின்பு கடலைமா,
                          இஞ்சி அரைத்தவிழுது, உள்ளி(பூண்டு)அரைத்த
                          விழுது, பச்சை மிளகாய்அரைத்த விழுது, செத்தல் 
                          (காய்ந்த)மிளகாய்(அரைத்த விழுது)மஞ்சள்தூள் 
                          உப்பு ஆகிய வற்றை போட்டு நன்றாக கலக்கவும் .


                          (4)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
                          வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு 
                          சூடாக்கிய பின்பு கலந்து வைத்துள்ளவற்றை 
                          கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கவும் .


                          (5)இவை எல்லாவற்றையும் பொரித்தபின்பு 
                          சுவையான சுத்தமான செய்வதிற்கு இலகுவான 
                          நெத்தலி -65 தயாராகி விடும்.


                          (6)இதனை இதனை சோற்றுடன்(சாதத்துடன்)
                          அல்லது தனியாகவோ பரிமாறலாம் .

                          முருங்கைக்காய் குழம்பு

                          தேவையான பொருட்கள் 
                          முருங்கைக்காய் (தோல்சீவிய)-தேவையானளவு
                          பசுப்பால் /தேங்காய்பால் -தேவையானளவு
                          கருவப்பிலை -சிறிதளவு
                          உள்ளி(பூண்டு)(வெட்டியது)-சிறிதளவு
                          மிளகாய்த்தூள்-தேவையானளவு
                          பழப்புளி-சிறிதளவு
                          உப்பு -தேவையானளவு


                          தாளிக்க தேவையான பொருட்கள் 
                          வெங்காயம்(சிறிதாக வெட்டியது) -1 /2பாதி பச்சைமிளகாய்(சிறிதாகவெட்டியது)-(1 -2 )
                          கடுகு -அரை தேக்கரண்டி
                          பெருஞ்சீரகம்(சோம்பு)-அரைதேக்கரண்டி
                          எண்ணெய்-சிறிதளவு

                          செய்முறை 
                          அடுப்பில் வாணலியை(தாட்சியை)வைத்து
                          அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

                          எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில் கடுகை
                          போட்டு வெடிக்கவிடவும்.

                          கடுகு வெடித்த பின்பு அதில் பெருஞ்சீரகம் (சோம்பு), கருவப்பிலை,உள்ளி(பூண்டு), பச்சைமிளகாய்,
                          வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் .

                          தாளித்த பின்பு அதனுடன் வெட்டி சுத்தம் செய்து
                          துண்டுகளாக்கிய முருங்கைக் காய்களை போட்டு
                           நன்றாக கலந்து ஓரளவு பொரிக்கவும் .

                          இவையாவும் தேவையானளவு பொரிந்ததும்
                          அதனுடன் மிளகாய்த்தூளை போட்டு கலந்து
                          மிளகாய்த்தூளின் பச்சவாசனை போகும்வரை
                          பொரிய விடவும் .

                          அதன் பின்பு அதனுடன் பழப்புளி, தண்ணீர் ,உப்பு
                          ஆகியவற்றை கலந்து கொதிக்கவிடவும்.

                          குழம்பு ஓரளவு கொதித்த பின்பு அதனுடன் பாலை
                          கலந்து நன்றாக கொதிக்கவிடவும் .

                          இவையாவும் நன்றாக கொதித்த பின்பு
                          அடுப்பிலிருந்து தாட்சியை(வாணலியை)இறக்கி
                          வைக்கவும்.

                          இப்போது சுவையான சுத்தமான செய்வதிற்கு
                           இலகுவான சத்தான முருங்கைக் காய்
                          குழம்பு தயாராகி விட்டது.

                          அதன் பின்பு ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை) , புட்டினை,இடியப்பத்தை,பரோட்டாவை, ரொட்டியை,சப்பாத்தியை,தோசையை,
                          இட்லியை, வைத்து அதனுடன் இக்குழம்பை
                           விட்டு பரிமாறவும்