கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 31. Mai 2011

சீடை,முறுக்கு செய்யும் போது

சீடை,முறுக்கு செய்யும் போது இடித்த
ஈர மாவை வறுத்து செய்தால் சீடை,
முறுக்கு மிகமிக சுவையாக இருக்கும்.

வெல்லச் சீடை

வெல்லச் சீடை அலண்டு போகாமல்
இருக்க சக்கரையை (வெல்லத்தை)
இளம் பாகு செய்து அதில் மாவை
போட்டு நன்றாக கலந்து செய்ய
வேண்டும்.

பஜ்ஜி

ஒரு சுண்டு கடலைமா,கால்சுண்டு இட்லிக்கு
அரைத்தமா,சிறிதளவு மிளகாய்த்தூள்,சிறிதளவு
மஞ்சள்த்தூள்,சிறிதளவு பெருங்காயம்,சிறிதளவு
உப்பு,சிறிதளவு அப்பச்சோடா ஆகியவற்றைச்
சேர்த்து பஜ்ஜி செய்தால் மெதுமையாகவும்
அதிக சுவையுடையதாக இருக்கும்.

சீடையை உருட்டிய பின்பு

சீடையை உருட்டிய பின்பு அவற்றை பத்திரிக்கை
(பேப்பர்) அல்லது துணியில் வைத்து 15 நிமிடங்கள்
கழித்து அடுப்பில் தாட்சியினை(வாணலியினை )
வைத்து சூடாக்கிய பின்பு செய்து வைத்திருக்கும்
சீடையை போட்டு பொரித்தால் சீடை அதிகம்
எண்ணையை எடுக்காது.

காய்கறிகளைப் பைகளில் போட்டு வைக்கும் போது

காய்கறிகளைப் பைகளில் போட்டு
வைக்கும் போது நீர்சத்துள்ள
பூசணிக்காய்,நீர்த்துப்பூசணிக்காய்
போன்ற காய்கள் உடன் மற்றைய
காய்களையும் சேர்த்து வைத்தால்
அவை மிகஇலகுவாக பழுதடைந்து
விடும்.

நாள் பட்ட அரிசியில் வடகம் செய்தால்

நாள் பட்ட அரிசியில் வடகம் செய்தால்
சிவக்கும் ஆகவே புது அரிசியில் மட்டுமே
வடகம் செய்யவேண்டும்.

மசாலைத்தோசை செய்யும் போது

மசாலைத்தோசை செய்யும் போது
தோசையின் மேல் மசாலையை
வைக்க முன்பு ஏதாவது ஒரு சட்னியை
தடவி விட்டு அதன் பின்பு மசலையை
வைத்து மூடி சிறிது நேரம் வேகவிட்டு
பரிமாறுங்கள் .மசாலத்தோசை
மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

கரட் , பீன்ஸ்(போஞ்சிக்காய் ),அவரைக்காய் போன்ற காய்களில் கறி சமைக்கும் போது

கரட் , பீன்ஸ்(போஞ்சிக்காய் ),அவரைக்காய்போன்ற 
காய்களில் கறிசமைக்கும் போதுஅவை ஒவ்வொன்
றிலும் ஒரு காயைஎடுத்து வைக்கவும் அதன் பின்பு 
வாரக்கடைசியில் எடுத்து வைத்துள்ள எல்லா
காய்களையும் தேவையான அளவுகளில்
வெட்டவும் அதன் பின்பு வெட்டியஎல்லாவற்றையும் 

ஒன்றாக சேர்த்துகறியை சமைக்கவும் இப்படி கறியை
சமைத்தால் பார்ப்பதிற்கு அழகாகவும்அத்துடன் 

எல்லாவித சத்துக்களும்எமக்கு ஒன்றாகவும் கிடைக்கும்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 30. Mai 2011

போஞ்சிக்காய் (பீன்ஸ்)பொரியல்

தேவையான பொருட்கள் 

போஞ்சிக்காய்(பீன்ஸ்)-500கிராம்  
வெங்காயம் -3
உள்ளி -அரைப்பாதி 
கீறிய பச்சைமிளகாய் -3
மிளகாய்த்தூள் -தேவையானளவு 
கடுகு - சிறிதளவு 
பெருஞ்சீரகம் - சிறிதளவு 
உப்பு - சிறிதளவு 
கருவப்பிள்ளை - சிறிதளவு 

செய்முறை 
1 .அடுப்பில் வாணலியினை வைத்து 
    சூடாக்கவும் 

2 .சூடாக்கிய பின்னர் அதில் சிறிதளவு
    எண்ணையை விட்டு சூடாக்கவும் .

3 .சூடாக்கிய பின்னர் அதில் கடுகை
    போட்டு வெடிக்கவிடவும் .

4 .கடுகு வெடித்த பின்னர் நறுக்கிய
    வெங்காயம்பெருஞ்சீரகம்(சோம்பு)
    உள்ளி (பூண்டு ) கீறிய பச்சை
    மிளகாய்  கருவப்பிள்ளை ஆகிய
    வற்றை போட்டுபொன் நிறமாக 
    தாளிக்கவும்.

5.தாளித்த பின்னர் அவற்றை ஒரு 
    பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

6.அதன் பின்னர் போஞ்சிக்காயை (பீன்ஸ்)
    ஓரளவு துண்டுகளாக வெட்டவும்.

7 .வெட்டிய பின்னர் அதனை ஒரு
    பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .

8 .அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
    (வாணலியை)வைத்து சூடாக்கிய
   பின்னர் அதில்  எண்ணையை விட்டு
   சூடாக்கவும் .

9 .சூடாக்கிய பின்னர் அதில் வெட்டிய 
    போஞ்சிகாயை(பீன்ஸ்) போட்டு
    கிளறி மூடி விடவும். 

10 .மூடிய சிறிது நேரத்தின் பின்னர் 
    திரும்பவும் முடியை திறந்து கிளறி 
    விடவும்  .
  
11 .அதன் பின்னர் இவற்றுடன் உப்பு,
    மிளகாய்த்தூள் ஆகியவற்றை 
     சேர்த்து கிளறி 5 நிமிடங்கள்
      மூடி விடவும் .
   (பச்சை வாடை போகும் வரை முடி 
   விடவும் )

12 . அதன் பின்னர் முடியை திறந்து 
       நன்றாக கிளறிவிடவும்

13 .கிளறிய பின்னர் இவற்றுடன் 
       தாளித்தவற்றை போட்டு நன்றாக 
       கிளறி சிறிது நேரம் முடிவைக்கவும் 

14. அதன் முடியை திறந்து மறுபடியும் 
       கிளறி அடுப்பில் இருந்து இறக்கி 
       வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

15 .அதன் பின்னர் சுத்தமான சுவையான 
      சத்தான போஞ்சிக்காய்(பீன்ஸ்)பொரியல்
      தயாராகிவிடும்

குறிப்பு 

1 .அடிக்கடி கிளறவும்.
2.மிளகாய்த்தூளின் பச்சைவாடை
   போகும் வரை மூடவும் 

எழுதியவர்
திருமதி சந்திரிக்கா தவராஜா(பிரான்ஸ்)
   

கரட் அல்வாவை செய்யும் போது


கரட் அல்வாவை செய்யும் போது கரட்டினை
சேர்க்கும் அளவில்கால் பங்கு இனிப்பான
தக்காளிப்பழங்களை சேர்த்தால் கரட்அல்வா
 மிகமிக வித்தியாசம்ஆகவும் சுவையாகவும்
இருக்கும்.

தயிர் வடை செய்யும் போது

தயிர்  வடை செய்யும் போதுதயிரில் போடும் வடைகளை
முதலில் பாலில் போட்டுஎடுத்து விட்டு பிறகு தயிரில்
போடுங்கள் மிகமிக அதிகமானசுவையாக இருக்கும் .

முறுக்கு

முறுக்கு மா கெட்டியாகி பிழிய வராமல் அடம்பிடித்தால் 
அந்த மாவுடன் சிறிதளவு தேங்காய்ப்பாலை சேர்த்து பிசைந்து முறுக்கை பிழிந்தால் வித்தியாசமான சுவையுடன் இலகுவாகவும் பிழியலாம் 

கோடை காலத்தில் நீர்மோர் தயாரிக்கும் போது

கோடை காலத்தில் நீர்மோர் தயாரிக்கும் போது 
நீர்மோருடன்இஞ்சி,பச்சைமிளகாய் சேர்ப்பதிற்கு
பதிலாக சிறிதளவு மிளகு ரசத்தூள்சேர்த்தால் 

சுவை அதிகமாகவும்வித்தியாசமாகவும் இருக்கும்.

தேசிக்காயை(எலுமிச்சம் பழத்தை) சாறு பிழிந்த பின்பு

தேசிக்காயை(எலுமிச்சம் பழத்தை)சாறு பிழிந்த 
பின்பு இருக்கும் தோலினால்குக்கரின் அடிப்
பகுதியில் உள்ள கரையில்தேய்க்கவும் அல்லது
குறுகிய வாயளவுள்ளபோத்தலில் போட்டு நன்றாக 
குலுக்கவும்அதன்பின்பு சிறிது நேரம் விட்டு அவற்றை
துடைக்கவும் அல்லது கழுவவும் அப்படிசெய்தால் 
அவற்றில் உள்ள கரைகள் அகன்றுவிடும்.

பொரியல் வகைகளைச் செய்யும்போது

பொரியல் வகைகளைச் செய்யும்போது
கிழங்கு வகைகளைத் தவிர்த்துவிட்டு
மற்றைய காய்களை வெட்டியவுடன்
கல் உப்பு,சிறிதளவு தண்ணீர் ஆகியவற்

றை  போட்டு பிரட்டி சிறிது  நேரம்ஊற
விட்டு அதன் பிறகு வதக்கினால் காய்கள் 
மிக விரைவாக அவிந்துவிடும் அத்துடன் 
காய்களின் நிறமும் மாறாது .

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 29. Mai 2011

உளுந்து வடைக்கு மாவை அரைக்கும் போது

உளுந்து வடைக்கு மாவை அரைக்கும் போது 
கிரைண்டரில்(மிக்சியில்)உள்ள கோப்பையினுள்
ஒருதேக்கரண்டி எண்ணெய் விடவும் அதன்பின்பு 

உளுந்து வடை தயாரிக்க தேவையான அளவு 
உளுந்தை போட்டு அரைக்கவும். இப்படி செய்தால்
உளுந்து வடைக்கு தேவையான அரைத்த மாவை 

இலகுவாக எடுக்கலாம் அத்துடன் கிரைண்டரை
(மிக்சியை) இலகுவாக கழுவலாம்.

ஊறுகாய் போட விரும்பினாள்-2

(2)ஊறுகாய் எடுக்க தேவைப்படும்
    போது ஊறுகாய்  உள்ள சாடியினுள்
    ஈரமற்ற மரக்கரண்டியை மட்டும்
     பயன்படுத்தவும்

ஊறுகாய் போட விரும்பினாள் - 1

ஊறுகாய் போட விரும்பினாள் அதற்கு
தேவைப்படும்  காயை வெட்டியவுடனே
ஊறுகாய் போடவேண்டும்.

பப்படம்(அப்பளம்),வடகம் ஆகிய வற்றை பொரிக்க முன்பு

பப்படம்(அப்பளம்),வடகம் ஆகியவற்றை 
பொரிக்க முன்பு அதனைபொரிக்க பயன்படும் 
கொதித்தஎண்ணையில் சிறிதளவு மஞ்சள்
தூளை தூவிக் கலந்தபின்புபொரித்தால் அவை 

நிறம் மணம்,சுவையுடன் நன்றாக இருக்கும் 

மோரில் அல்லது தயிரில் ஊறப்போட்டு காயவிட்ட செத்தல்(காய்ந்த)மிளகாயை பயன்படுத்தி


மோரில் அல்லது தயிரில் ஊறப்போட்டு
காயவிட்ட  செத்தல்(காய்ந்த)மிளகாயை
பயன்படுத்தி மிளகாய்ச் சட்னி,மிளாகாய்
பொடி,துவையல் ,சம்பல் ஆகியவற்றைச்
செய்தால் நல்ல அருமையான சுவை
கிடைக்கும்.

முழுக் கத்தரிக்காயில் எண்ணெய் கத்தரிக்காய் அல்லது ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்யும்போது


முழுக் கத்தரிக்காயில் எண்ணெய் கத்தரிக்காய்
அல்லது ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்யும்போது
காம்புப் பகுதியை வெட்டிவிட்டுச் செய்வதால்
சில சமயங்களில் கத்தரிக்காய் துண்டாகிவிடும்
அதனால் கத்தரிக்காயின் காம்புகளை வெட்டாமல்
கத்தரிக்காயின் கீழ்ப்பகுதியை மட்டும் நான்காக
கீறி அப்பகுதியில் ஏதாவது பூச்சி புழுக்கள்
இருக்கிறதா என பார்த்தபின்பு அப்பகுதியில்
மசாலாவை அடைத்தோ அல்லது எண்ணெய்யில்
வதக்கியோ செய்தால் கத்தரிக்காய் முழுதாக
இருக்கும்.

கடலையை வறுப்பது போல கூழ் வற்றலையும்


கடலையை வறுப்பது போல கூழ்
வற்றலையும் எண்ணெய் இல்லாமல்
மணலில் வறுத்து எடுக்கலாம்(பெரிதாகவே
பொறியும்)

சப்பாத்தியின் மேலே

சப்பாத்தியின் மேலே சிறிது எண்ணையை 
தடவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில் 
வைத்து மூடிய பின்பு அப்பாத்திரத்தை 
மேல் பிரிட்ஜில் வைத்தல் சப்பாத்தி பழுதா
காமல் இருக்கும்.


மீனை வாங்கும் போது


மீனை வாங்கும் போது அதன் கண்கள்
பளிச்சென்று இருக்கிறதா எனபார்த்து வாங்க
வேண்டும் அதாவது பளிச்சென்ற கண்களை
உடைய மீன் தான் பழுதடையாத புத்தம் புதிய 
மீனாகும்.  

மிளகாய்த்தூள் அரைப்பதிற்காக


மிளகாய்த்தூள் அரைப்பதிற்காக மிளகாயை
வறுக்கும் போது இதனுடன் ஒரு கைப்பிடி
கச்சானை(நிலக்கடலையை)சேர்த்து வறுத்து
 தூளாக அரைத்த பின்பு இந்த தூளை சேர்த்து
 கறியை  செய்தால் கறி சுவையாக இருக்கும்.


ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 27. Mai 2011

பொரிக்க தயாரான உருளைக்கிழங்குடன்


பொரிக்க தயாரான உருளைக்கிழங்குடன்
சிறிதளவு பயித்தம்மாவை சேர்த்து பிரட்டிய
பின்பு  பொரித்தால் பொரியல் மொறுமொறுப்பாக
இருக்கும்:



செவன் கப் கேக்கினை செய்யும் போது


செவன் கப் கேக்கினை செய்யும் போது 
கயுவை(முந்திரிபருப்பு),பாதாம்பருப்பை 
பாலில் ஊறவைத்த பின்பு அதனை
அரைத்து  சேர்த்து செய்தால் கேக்
சுவையாக இருக்கும் 

உறைப்பான பலகாரங்களை செய்யும் போது


உறைப்பான   பலகாரங்களை செய்யும்
போது மாவுடன் ஒரு குழிக்கரண்டி அளவு 
நல்ல சூடான எண்ணையை சேர்த்து 
குழைத்து பலகாரங்களை செய்தால் 
பலகாரங்களின் உள்ளே மெதுமையாகவும்
பலகாரங்களின் வெளிப்பகுதி நல்ல மொறு
மொறுப்பாகவும் காணப்படும்.



நாங்கள் கடையில் வாங்கிய பீட்ரூட்,கரட் சௌசௌ போன்ற காய்கறிகள்


நாங்கள் கடையில் வாங்கிய பீட்ரூட்,கரட்
சௌசௌ போன்ற காய்கறிகள் சில
நேரங்களில் கொழாகொழாவெனவாகி
விடும்.இப்படியாக மாறிவிட்ட காய்கறிகளை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில்
இவற்றை போட்டு இப்பாத்திரத்தை மூடாமல்
பிரிட்ஜில் வைத்தால் அடுத்தநாள் இக்காய்
கறிகள் நல்ல பிரஸ்ஸாகி விடும் .

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 26. Mai 2011

கிரேவி, குருமா, குழம்பு (கூட்டு) போன்றவை சமைக்கும் போது


கிரேவி, குருமா, குழம்பு (கூட்டு) போன்றவை
சமைக்கும் போது சில நேரங்களில் இவை
கெட்டியாகி (தடிப்பாகி) விடும். தடிப்பான
கிரேவி,குருமா,குழம்பு(கூட்டு) போன்றவைக்கு
தேவையானளவு தக்காளிப்பழத்தை அரைத்து
இவற்றுடன் சேர்த்தால் கிரேவி,குருமா,குழம்பு
(கூட்டு) போன்றவை சுவையாகவும் சரியான
பதத்திலும் காணப்படுவதுடன் இதற்கு எண்ணெய்
சேர்க்கவும் தேவையில்லை .


குழம்பு வகைகளில் உறைப்பு (காரம் ) அதிகமாகி விட்டால்


குழம்பு வகைகளில் உறைப்பு (காரம் ) அதிகமாகி
விட்டால் அந்த குழம்பு வகைகளை  அடுப்பில்
வைத்து அதனுடன் அரைத்த தேங்காய்பால்,சிறிதளவு
தேசிக்காய்சாறு  (எலும்பிச்சை சாறு ) ஆகியவற்றை
கலந்து சிறிதளவு நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால்
அதில் காணப்படும் அதிகமான காரம் குறைந்துவிடும்

கிரேவிவகைகளில் உறைப்பு(காரம் )அதிகமாக காணப்பட்டால்

கிரேவிவகைகளில் உறைப்பு(காரம் )அதிகமாக
காணப்பட்டால் சிறிதளவு தக்காளி,சிறிதளவு
வெங்காயம் ஆகியவற்றை சிறிய  சிறிய
துண்டுகளாக  வெட்டி வதக்கி அரைக்கவும்.
அதன் பின்பு வதக்கி அரைத்ததை  ஏற்கனவே
உறைப்பு (காரம்) அதிகமான கிரேவி வகைகளில்
கலந்தால் ஏற்கனவே கிரேவியில் காணப்படும்
அதிகமான  உறைப்பு (காரம் ) ஆகியவை
 சரியாகிவிடும் .


வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 25. Mai 2011

இறைச்சி வகைகளில் வாடை

இறைச்சி வகைகளில் அதன் வாடை(மணம்)
வராமல் இருக்க அதனை வெட்டிய பின்பு
கழுவும் போது சிறிதளவு வினிகர் அல்லது
சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து கழுவவேண்டும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்

Samstag, 21. Mai 2011

குழிப்பணியாரம்-1

அவல் குழிப்பணியாரம் 

அவல்குழிப்பணியாரம்  செய்வதிற்கு
இலகுவானதும் சுவையானதும்
சத்துக்கள்உடையதுமான ஓர்
உணவாகும் .


தேவையான பொருட்கள் 
பச்சையரிசி - 1 கப்
அவல் - 1 /2கப்
சக்கரை(வெல்லம்) - 1 +1/2 கப்
துளாக்கிய   ஏலக்காய் - 1 /4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - சுடுவதற்கு


செய்முறை 
(1 )ஒரு பாத்திரத்தில் நன்றாக அரிசியை கழுவி
   ஊறவைக்கவும்.

(2 )இன்னொரு பாத்திரத்தில் நன்றாக அவலை
    கழுவி ஊற வைக்கவும்.

(3 )கிரைண்டரில்(மிக்ஸியில் )கழுவி ஊறவைத்த 
    இர‌ண்டையு‌ம் ஒ‌ன்ற‌ன்பி‌ன் ஒ‌ன்றாக த‌ண்‌ணீ‌ர் ‌
    வி‌ட்டு மெதுமையாக (நைசாக) அரைக்கவும்.

(4 )அதன் பின் அரைத்தவற்றுடன் சக்கரையையும் 
    (வெல்லத்தையும்) சேர்த்து அரைக்கவும்.

(5 )அரைத்த பின் இவற்றுடன் ஏலக்காய்த்தூளையும்
    சேர்த்து கலக்கவும்.

(6)இவை யாவற்றையும்  இ‌ட்‌லிமா பத‌த்‌தி‌ற்கு
     கலக்க வே‌ண்டு‌ம்.

(7)அதன் பின்னர் அடுப்பில் குழிப்பணியார சட்டியை
    வைத்து சூடாக்கிய பின் அதில் நல்லெண்ணெய்
    விட்டு சூடாக்கவும்.

(8)சூடாக்கிய பின்னர் அதன் ஒவ்வொரு குழியிலும்
     முக்கால் பகுதியளவிற்கு அரைத்து  கலந்து
     வைத்திருக்கும் குழிப்பணியார மாவை ஊற்றவும்.

(9)குழிப்பணியார மாவை ஊற்றிய பின்னர் இதனை
    வேக (அவிய )விடவும்.

(10)மாவின் அடிப்பகுதி நன்றாக வெந்ததும், குச்சி
    அல்லது கரண்டியின்  உதவியுடன் குழிப்பணியாறத்தை
     திருப்பி விட்டு நன்றாக வேக விடவும்.

(11)குழிப்பணியாரம் நன்றாக வெந்ததும் மெதுவாக
    எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும் .

(12)அதன் பின்னர் சுத்தமான சுவையான இனிப்பான
        குழிப்பணியாரம் தயாராகிவிடும்.

(13)தயாரான பின்னர் ஒரு தட்டில் இனிப்பான
      குழிப்பணியாறத்தை வைத்து பரிமாறவும் ,


ஆட்டிறைச்சி


ஆட்டிறைச்சி நல்ல இளம் ரோஸ் நிறத்தில்
இருந்தால் இளசு அதாவது நல்ல இறைச்சி,ஆனால்
சிகப்பு நிறத்தில் இருந்தால் முற்றல் இறைச்சி .


சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 19. Mai 2011

ஆட்டிறைச்சி,கோழியிறைச்சி


ஆட்டிறைச்சி,கோழி இறைச்சி  முற்றலாக
இருந்தால் அவை நன்றாக வேகாது எனவே
அவற்றுடன்   1 / 2 தேக்கரண்டி அப்பசோடா
போட்டு  அல்லது வினாகிரி சிறிதளவு விட்டு
வேக வைத்தால் நன்றாக வெந்து விடும்.


முறுக்கு,பகோடா,சீடை


முறுக்கு,பகோடா,சீடை ஆகியவை
செய்யும் மாவுடன் சிறிதளவு சோளம்
மாவை கலந்து குழைத்தால் நல்லா
மொறுமொறுப்பாகவும் சுவையாகவும்
இவையாவும் காணப்படும்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 15. Mai 2011

உளுந்து வடை


உளுந்து வடைக்கு அரைக்கும் போது
ஒருசுண்டு உளுந்துடன் ஒருதேக்கரண்டி
கடலைப்பருப்பு சேர்த்து ஊறவைத்து
அரைத்து வடை செய்தால் நல்லமொறு
மொறுப்பான உளுந்து வடை சாப்பிடலாம்.


ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 5. Mai 2011

Sonntag, 1. Mai 2011

கடலை

கடலையை தாளிக்கும் போது இரண்டு கரட்டை
துருவி வெங்காயத்துடன் சேர்த்து தாளித்தால் மிக
மிக சுவையாக இருக்கும்.

மே தின வாழ்த்துக்கள்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்