கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 31. Oktober 2010

அப்பிள் சட்னி


தினம் ஓர் ஆப்பிள் மருத்துவரைத் தூர
வைக்கும்.அப்பிள்களுக்குப் பலவிதமான
புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல்
உள்ளது. இதயநோய்கள் எடை குறைவு
கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும்
அப்பிள் உதவுகிறது. அப்பிள் நோய்களிலிருந்து
மூளையை பாதுகாக்கின்றன அத்துடன் அப்பிள்
உயிர்சத்து சி நிறைந்தது. இப்படிப்பட்ட அப்பிளில்
செய்யப்பட்டதும் சுவை நிறைந்ததுமான உணவுப்
பொருளே அப்பிள் சட்னியாகும்.


தேவையான பொருட்கள் 
ஆப்பிள்(தோலுடன் துருவியது) - ஒன்று
சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
மல்லித்தூள் - ஒரு சிட்டிகை
கறுவாபட்டைத்தூள் - ஒருசிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
ஜாதிக்காய்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
அப்பிள் சாறு - அரை கப்
சீனி - ஒரு கப்
ஒலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு


செய்முறை 
அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடாகியதும்
அதில் ஒலிவ் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் சீரகத்தூள் மல்லித்தூள்
ஏலக்காய்தூள் கறுவாப் பட்டைத்தூள்
ஜாதிக்காய்த்தூள் மிளகாய்தூள் அப்பிள் சீனி
உப்பு இவையாவற்றையும் வதக்கவும்.

சீனி நன்றாக பசையாகி(பேஸ்ட்)ஆகி எண்ணெய்
பிரியும் வரை வதக்கிய பின் அப்பிள் சாறு
சேர்க்கவும். இதோ ஆப்பிள் சட்னி தயார்.

எச்சரிக்கை - 
அப்பிள் அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்

Halloween வாழ்த்துக்கள்

Orkut Scraps

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்



Samstag, 30. Oktober 2010

அன்னாசிப்பழகோடியல்


அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C, கல்சியம்,
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவித சத்துகள்
அடங்கியது. அன்னாசிப்பழத்தில் செய்த
 கோடியலானது மேற்குறிப்பிட்ட சகலவகை
 சத்துகளுடனும் இனிப்பு சுவையுடனும்
காணப்படும். இந்தகோடியலின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
சுவையை அறிய இதனை செய்து குடிக்கவும்.

தேவையானபொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகள்) - 500 கிராம்
சீனி - 600 கிராம்
தண்ணீர் - 650 மி.லி
சோடியம்பென்சொயிட் - ஒரு யோக்கற் கரண்டி(மட்டமாக)


செய்முறை 
அன்னாசி துண்டுகளை கிரைண்டரில் போட்டு
அடித்து வடித்து கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சீனியுடன்
சோடியம் பென்சொயிட்டை கலந்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மிகுதி சீனியுடன் தண்ணீர்
சேர்த்து அடுப்பில் வைத்து பாகு பொங்கிக்
கொதிக்கும் வரை காய்ச்சி இறக்கி 10 நிமிடத்திற்கு
 ஆற வைத்து அதனுடன் அன்னாசிச்சாறு
சோடியம் பென்சொயிட் ஆகியவற்றை சேர்த்து
கலக்கி அகன்ரியில் அல்லது மிகசிறியதுளையு
டைய வடிதட்டில் வடித்து எடுக்கவும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90°c
யில் கொதிக்க வைத்து இறக்கி தொற்று நீக்கிய
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
போத்தலை மூடி சீல் வைக்கவும்.

பின்பு தேவையான நேரங்களில் இக்கலவையுடன்
தேவையான அளவு தண்ணீர் கலந்து அருந்தலாம்.


மாற்று முறை - 
அன்னாசி பழத்திற்கு பதிலாக பசன் பழத்தை
பாவிக்கலாம்.


எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி அருந்தவும்.

 கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90
பாகையில் கொதிக்க வைத்து இறக்கி துப்பரவான
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
ஆற விட்டு போத்தலை மூடி சீல் வைக்கவும்.

பால்

பாலை காய்ச்சும் போது பாத்திரத்தின் 
அடிப்பகுதியில் பால் ஒட்டாமல் 
இருக்கவேண்டுமானால் 
  
பாலைக்காய்ச்சும்  போது பாலுடன்  
சிறிய அளவில் சீனியை(சக்கரையை)
போட்டு கலந்து காய்ச்சினால் பால் 
பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஒட்டாமல் 
இருக்கும். 

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

Freitag, 29. Oktober 2010

பீட்ரூட் உருளை சான்வீச்


உருளைக்கிழங்கு - கார்போஹைட்ரேட், 
கொழுப்பு, புரதம், உயிர்சத்து A,B1,B2,B3,
B6,C,D, இரும்பு, பொட்டாசியம், பொஸ்பரஸ், 
மக்னீஸியம், சோடியம், கல்சியம் அத்துடன் 
நார்சத்தும் நிறைந்த ஒர் உணவு பொருள்.

 கரட் - கார்போஹைட்ரேட், கொழுப்பு, 
கரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,B2,
B3,B6,C,D, பொட்டாசியம், பொஸ்பரஸ், 
மக்னீஸியம், சோடியம், கல்சியம் 
ஆகியவை நிறைந்த ஒர் உணவு பொருள்.
 பீட்ரூட் - கார்போஹைட்ரேட், கொழுப்பு, 
புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,B2,B3,B5,B6, 
B9,C, பொட்டாசியம், பொஸ்பரஸ் மக்னீஸியம், 
சோடியம், கல்சியம் ஆகியவை நிறைந்த 
ஒர் உணவுப்பொருள். ஆகவே உருளைக்
கிழங்கும், கரட்டும், பீட்ரூட்டும் ஒன்றாக 
சேரும் போது கிடைக்கும் உணவு சத்துக்கள்
யாவும் மூன்று மடங்காகவே கிடைக்கும். 
ஆகவே இவை மூன்றும் சேர்த்து செய்யப்பட்ட
 உணவான கரட் பீட்ரூட் உருளை சாண்ட்விச்சில் 
மேலே குறிப்பிடப்பட்ட சகல சத்துக்களும் 
மூன்று மடங்காகவே கிடைக்கின்றன. 
அத்துடன் நல்ல சுவையும் கிடைக்கும். 
ஆகவே இதில் அடங்கும் சத்துக்களை பெற 
இந்த சாண்விச்சை செய்து சாப்பிடவும். 

தேவையானபொருட்கள் 
சாண்ட்விச் பாண் துண்டுகள் - 12

கேரட் (துருவியது) - 100 கிராம்
உருளைக்கிழங்கு (அவித்து மசித்தது) - 200 கிராம்
பீட்ரூட் (துருவியது) - 100 கிராம்
சீஸ்(துருவியது) - தேவையானளவு
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பட்டர் - 100 கிராம்
பச்சை கலரிங் - ஒரு தேக்கரண்டி


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட்டை
ஓரளவு பிழிந்து அதில் பட்டர் (ஒரு
தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள்
சேர்த்து பிரட்டவும்.

இன்னொரு பாத்திரத்தில் துருவிய கரட்டை
 ஓரளவு பிழிந்து அதில் பட்டர் (ஒரு
தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள்
 சேர்த்து பிரட்டவும்.

அவித்து மசித்த உருளைக்கிழங்கை
இடியப்ப உரலில் போட்டு ஓரளவு பிழிந்து
அதில் பட்டர் பச்சை கலரிங் (ஒரு
தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள்
சேர்த்து ஓரளவு பிரட்டவும்.

மிகுதியான பட்டரை ஒவ்வொரு பாண்
துண்டுகளின் ஒரு பக்கத்திற்கு மட்டும்
பூசவும்.

அதன் பின்பு பட்டர் பூசிய பாண் துண்டுகளில்
6 ஜ எடுத்து அதில் ஒவ்வொன்றிற்கும் கரட்
கலவையை வைக்கவும். பின்பு உருளைக்
கிழங்கு கலவையை வைக்கவும்.

அதில் பீட்ரூட் கலவையை வைக்கவும்.

பின்பு துருவிய சீஸ் வைக்கவும்.

அதன் பின்பு மற்றைய பாண் துண்டினால்
மூடி சாதுவாக அழுத்தி கொள்ளவும்.

இப்படியே 6 பாண் துண்டுகளுக்கும்
செய்யவும்.

பின்பு அதை ஒரு மணித்தியாலம் குளிர்சாதன
பெட்டியில் வைக்கவும்.

பின்பு அதை எடுத்து மூலைக் குறுக்காக வெட்டி
பரிமாறவும்.

(A)கவனிக்க வேண்டிய விஷயங்கள்- 
1)அவித்து மசித்த கரட், அவித்து மசித்த 
   உருளைக்கிழங்கு இவையிரண்டையும் 
  சேர்த்து குழைக்கவும். 
(2) ஒரு மணித்தியாலம் குளிர்சாதனபெட்டியில் 
   வைக்கவும். 
(3)அதை மூலைக்குறுக்காக வெட்டி பரிமாறவும்.

 (B)மாற்று முறை- 
பட்டர்ருக்கு பதிலாக மாஜரீனை பாவிக்கவும்.
இருதய,சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்

மோர்க்குழம்பு

உங்களுக்கு மோர்க்குழம்பு நல்லவாசனையுடன்
சுவையாக இருக்கவேண்டுமானால் 
மோர்க்குழம்பு கொதிக்கும் போது அதில் இரண்டு
கற்பூரவள்ளி(ஓமவல்லி) இலையை போட்டு
கொதிக்க வைத்தால் போதும், அப்படி செய்வது
உடலுக்கும் நல்லது.  

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

Donnerstag, 28. Oktober 2010

வட்டிலப்பம்

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லீம்
மக்களினால் செய்யப்படும் முக்கியமான
உணவு வட்டிலப்பம் ஆகும். இதை
அவர்கள் நோன்பு காலங்களில்
முக்கியமாக செய்வார்கள் .

தேவையான பொருட்கள் 
சர்க்கரை - 250 கிராம்
தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) - (1-2) கப்
முட்டை - 5
ஏலக்காய்த்தூள் - அரைதேக்கரண்டி
கஜூ - 30 கிராம்
பிளம்ஸ் - 30 கிராம்
ஜாதிக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி(விரும்பினால்)
மாஜரின் - ஒரு தேக்கரண்டி


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால்
சர்க்கரை ஆகியவற்றை போட்டு
நன்றாக கரைக்கவும்.

சர்க்கரை நன்றாக கரைந்ததும்
வடிதட்டினால் நன்றாக 
வடிக்கவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில்
எல்லா முட்டைகளையும் உடைத்து
போடவும்.

அதன் பின்னர் எக்பீட்டரினால்
முட்டையை நன்றாக நுரைக்கும்படி
அடிக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின்
சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ,
பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.

பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின்
நுரையை கைகளினால் கிள்ளி(அள்ளி) இக்
கலவையின் மேலே போடவும் (கரண்டி
பாவிக்ககூடாது அத்துடன் கலக்கவும் கூடாது,
அசைக்கவும் கூடாது).

அப்பாத்திரத்தை மைக்ரோ அவனில் அல்லது
நீராவியில் அவிக்கவும்.

அவித்த பின்பு பிரிட்ஜில் வைத்து குளிருட்டிய
பின்பு அதை ஐஸ்கிரீம் போடும் கரண்டியால்
எடுத்து ஐஸ்கிரீம் கப்பில் போட்டு பரிமாறவும்.



எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர்கள் வைத்தியரின்
ஆலோசனை கேட்டு உண்ணவும்.


 மாற்று முறை-
 (1)சர்க்கரைக்கு பதிலாக கித்தூள்
பாவிக்கலாம்
.(2)ஏலக்காய்த்தூள்க்கு பதிலாக வனிலா
பாவிக்கலாம்.
(3)மாஜரின் பதிலாக பட்டர் பாவிக்கலாம்

 கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
(1) தேங்காய் பால் (தடிப்புகூடிய முதல்பால்)
(2)எக்பீட்டரினால் முட்டையை நன்றாக
 நுரைக்கும்படி அடிக்கவும்.
 (3)தேங்காய்ப்பாலில் சர்க்கரையை
கட்டியில்லாமல் நன்றாக கரைக்கவும்.

தோசை

"சிறிதளவு தேங்காய்ப்பால்,தோசைமா 
 ஆகியவற்றை நன்றாக கலந்து அதன் 
 பின்னர் தோசை வார்த்தால் தோசை 
 மிகவும் சுவையாக இருக்கும்". 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

Mittwoch, 27. Oktober 2010

அன்னாசிப்பழ ஜெலி

அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C, கல்சியம், 
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு 
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள் 
அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசி பழத்தில்
செய்த ஜெல்லியானது மேற்குறிப்பிட்ட சகல 
வகை சத்துகளுடனும் இனிப்பு சுவையுடனும் 
காணப்படும். இந்த ஜெல்லியின் சுவையை 
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும் இதன் 
சுவையை அறிய இதனை செய்து சாப்பிடவும்.


தேவையானபொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறிதாக வெட்டியது) - 1கிலோகிராம்
தண்ணீர் - 4 டம்ளர் (80 மேசைக்கரண்டி)
ஜெலற்றீன் - ஒரு பாக்கெட்
தயிர் - கால் டம்ளர் (5 மேசைக்கரண்டி)

செய்முறை 

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
அன்னாசிப்பழத்தை போட்டு அதனுடன்
3 டம்ளர் (60 மேசைக்கரண்டி) தண்ணீர்
விட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் அதை அடுப்பில் இருந்து
இறக்கி தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்தில்
வடிக்கவும்.

பின்பு வடித்த நீர் சூடாக இருக்கும் போது
அதனுள் ஜெலற்றீனை போட்டு நன்றாக
கரைக்கவும்.

அதன் பின்பு அவித்து வைத்துள்ள அன்னாசிப்பழ
துண்டுகளை கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு
நன்றாக அரைத்தெடுக்கவும்.

அரைத்தெடுத்த கலவையை கரைத்து வைத்துள்ள
ஜெலற்றீன் கலவையில் ஊற்றி தயிரும் கலந்து
நன்றாக பீட்டரினால் அடிக்கவும்.

பின்பு ஒரு அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி
ஊறைபெட்டியில்(ஃபீரீசரில்) வைத்து நன்கு
உறைந்த பின் எடுத்து ஐஸ்கிரீம் பரிமாறும்
கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

மாற்று முறை - 
தயிர்க்கு பதிலாக யோக்கட் பாவிக்கலாம்.


எச்சரிக்கை - 
அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள்
இந்த ஜெல்லியை வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

பாண்(பிரெட்)

"காய்ந்து போன பாண் (பிரெட்)
துண்டுகளை இட்லி பாத்திரத்தின்
ஆவியில் வேக வைத்து எடுத்தால்
அவை புதியது போலாகிவிடும்".

புதன்கிழமை வாழ்த்துக்கள்

Dienstag, 26. Oktober 2010

தக்காளிப்பழ ஊறுகாய்

தக்காளிப்பழ ஊறுகாயில் கார்போஹைட்ரேட்
கொழுப்பு, விற்றமின் A,C அந்தோசியமின்
(P 20 Blue)போன்ற சத்துகள் அடங்கியது
அத்துடன் புற்றுநோயை குணப்படுத்த
இது உதவும்.


தேவையானபொருட்கள் 
தக்காளிப்பழம் - 500 கிராம்
வெங்காயம் - 5
பச்சைமிளகாய் - 10
இஞ்சி - ஒரு துண்டு (3 அங்குலம்)
உள்ளி - 3 பல்
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
சீனி - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு

செய்முறை 
தக்காளிப்பழத்தை கொதித்த நீரில்
போட்டு கால் மணித்தியாலம் மூடி
வைக்கவும்.

அதன் பின்பு தக்காளிப்பழத்தை எடுத்து
அதன் தோலை உரிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் உரித்த பழங்களைப்
போட்டு அதை நன்றாக மசிக்கவும்.

கிரைண்டரில்(மிக்ஸியில்) அல்லது
அம்மியில் இஞ்சி, உள்ளி வெங்காயம்,
பச்சைமிளகாய் என்பவற்றை தண்ணீர்
சேர்க்காது வினிகர் விட்டு விழுது
போல அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அது
சூடானதும் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் அரைத்த
விழுதினை போட்டு ஓரளவு பொரிய
விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதில் மசித்த
தக்காளிப்பழம், உப்பு ஆகியவற்றை
போட்டு சேர்த்து கிளறவும்.

அதில் உள்ள நீர் சுண்டிய(வற்றிய)பிறகு
 இறக்கவும்.

அதன் பின்பு அதை ஆறவிடவும்.

ஆறிய பின்பு அதனை தொற்று நீக்கிய
ஜாம் போத்தலில் போட்டு இறுக மூடி
வைக்கவும்.

தேவையான நேரங்களில் இதை பரிமாறலாம்.


எச்சரிக்கை - 
தக்காளிப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

இட்லி

இட்லிக்கு மா அரைக்கும் போது
வெண்டிக்காயில் இருந்து வெட்டிய
பின்பகுதியையும் மேலும் சில முழு
வெண்டிக்காய்களையும் இதனுடன்
போட்டு அரைத்தால் இட்லி பூப்போல
மெதுமையாக இருக்கும்.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

Montag, 25. Oktober 2010

எள்ளுப்பாகு

எள்ளுப்பாகு இலங்கை மக்களிடையே மிகவும்
பிரபல்யமான ஓர் உணவு வகையாகும். இதை
இலங்கையில் பெரியபிள்ளையான(வயதிற்குவந்த (ருதுவான))குழந்தைகளுக்கு சத்துமிக்க உணவாக 
எள்ளுப்பாகு கொடுக்கப்படும் அத்துடன் இதை 
நெஞ்சுதிடமாக(தையரியமாக) இருப்பதற்கும் 
கொடுப்பார்கள் அத்துடன் கறுப்பு எள்ளு  அதிகமான  
மருத்துவப் பண்புகளை கொண்டது அத்துடன் கறுப்பு 
எள்ளில்அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது
வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள 
எள்ளின் வகைகளில் அதிகளவு இரும்புச்சத்து 
நிறைந்து உள்ளது அத்துடன் எள்ளின் இலைகளை 
எடுத்து நீரில் போட்டு கசக்கினால் நீரில் வழுவழு
வென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் 
கழுவினால் கண்கள் நன்கு பிரகாசிக்கும்  அத்துடன் 
கண் நரம்புகள் பலப்படும் எள்ளின் பூவானது கண்
நோய்களை குணப்படுத்தும்.எள்ளினது  இலைகளை 
நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் 
கட்டிகள் மறையும்.எள்ளின் காயையும், தோலையும் 
உலர்த்திச்(காயவைத்து ) சுட்டு சாம்பலாக்கி ஆறாத 
புண்கள் மீது தடவினால் புண்கள் மிகவிரைவில் 
ஆறும்.எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து 
தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளுவிதை
யை இலேசாக வறுத்துபொடிசெய்து நெய்யுடன்சேர்த்து 
சாப்பிட்டால் மூலநோய் குறையும்.தோலில் சொறி
சிரங்கு புண்கள்உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து
 மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.
நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு 
கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் 
அணுகாது.கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக 
வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் 
போட்டு 2 மணித்தியாலம்  ஊறவைத்து அதனுடன் 
தேவையானஅளவு பால் மற்றும் பனைவெல்லம் 
சேர்த்து காலையும்மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்
சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.வயிற்றுப் 
போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு
தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று 
வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் கொலரா 
மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு 
நீங்கும்.எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் 
தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை
குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.உடற்சூடு 
தலைப் பாரம் குறையும்.
தேவையானபொருட்கள் 
துப்பரவாக்கிய எள்ளு 250 கிராம்
இடித்தரித்தசீனி - 150 கிராம் (2 மேசைக்கரண்டி)
நெய் - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி (மட்டமாக)


செய்முறை 
1.அடுப்பில் தாட்சியை வைத்து அதை சூடாக்கி 
  அதில் எள்ளை போட்டு மெல்லிய பொன்னிறமாக
   வரும் வரை வறுக்கவும்.

2.வறுத்த பின்னர் எள்ளை உரலில் இட்டு சீனியும்
   சேர்த்து மென்மையாக (பசுந்தையாக) இடிக்கவும்.

3.  இடித்தபின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து
    அதில் நெய்யை விட்டு சூடாக்கவும்.

4.நெய் சூடான பின்னர் சூடான நெய்யை இடித்த
    கலவையில் ஊற்றி ஏலக்காய்த்தூளும் சேர்த்து
    இடித்து ஓரளவு (விரும்பியளவு) பெரிய உருண்டை
    களாக பிடிக்கவும்.

5.அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
   எள்ளுப்பாகு தயாராகிவிடும்

6.அதன்பின்னர் ஒருதட்டில் தயாரித்த எள்ளுபாகில்
   சிலவற்றை வைத்து பரிமாறவும்.

தயிர்

"கொதிக்கும் பாலை உடனே உறை
ஊற்றி நல்ல கெட்டியான தயிரைப் 
பெற வேண்டுமானால்- 
ஒரு துண்டு வாழைப்பட்டையை
துண்டுகளாக்கிப் கொதிக்கும்
பாலுடன் போட்டு உறை ஊற்றினால்
நல்ல கெட்டியான தயிராய் பெறலாம்".

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்



Sonntag, 24. Oktober 2010

பிரன்ஞ் பூரி

ஃப்ரஞ்ச் பூரியை ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள்
விரும்பி உண்பார்கள். இதில் புரதம்,
மாப்பொருள், மினரல், கல்சியம்,
உயிர்சத்துகள் அடங்கியுள்ளது

தேவையான  பொருட்கள் 
அவித்தஉருளைக்கிழங்கு (சிறுதுண்டுகள்) - 250 கிராம்
பால் - 20 மேசைக்கரண்டி
பட்டர் - 25 கிராம்
சீஸ் - 25 கிராம்
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பாண் துண்டுகள் - 5


செய்முறை 

1 .அவித்து வெட்டிய உருளைக்கிழங்கு
    த்துண்டுகளை பாலுடன் சேர்த்து
    கிரைண்டரில் அடிக்கவும்.

2 .அடுப்பில் தாட்சியை வைத்து அது
   சூடானதும் இக்கலவையை தாட்சியிலிட்டு
   காய்ச்சவும். இக்கலவையுடன் பட்டர், சீஸ்,
   உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்க்கவும்.

3 .அதன் பின்பு இக்கலவை நன்றாக இறுகித்திரளும்
    பதத்தை அடைந்ததும் இறக்கி (பாண், வாட்டிய
     இறைச்சி, நீராவியில் அவித்த மரக்கறியுடன்)
   பரிமாறவும்.



குறிப்பு

. எச்சரிக்கை -
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனையுடன்உண்ணலாம்.


மாற்று முறை - 
பட்டருக்கு பதிலாக
 மாஜரினை பாவிக்கலாம்.

முட்டை

அவித்த முட்டையை உடையாமல் 
கத்தியால் வெட்டவேண்டுமா?
அவித்த முட்டையை வெட்டும்
கத்தியை ஜஸ்தண்ணீரில் அல்லது
நல்ல குளிர் தண்ணீரில் கழவி
(நனைத்து)விட்டு முட்டையை
வெட்டினால் முட்டை வெட்டும்
போது உடையாது.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்

Samstag, 23. Oktober 2010

லவேரியா

லவேரியாவில் மாச்சத்து, இனிப்புசத்து, புரதச்சத்து கொழுப்புச்சத்து போன்ற பல சத்துகள் உள்ளது .இந்த லவேரியாவை இலங்கையில் வாழ்கின்ற சிங்களமக்கள் மிகமிக விரும்பி உண்பார்கள் அத்துடன் லவேரியா சிங்கள மக்களின் பாரம்பரிய உணவாகும்.லவேரியாவில் கல்சியம், இரும்பு, காபோவைதரேட் விற்றமின் B1,B2,B3,B6,B9 மக்னீசியம் ,பொஸ்பரஸ், பொட்டாசியம் சோடியம் ஆகியசத்துக்கள் காணப்படுகின்றன.

தேவையான பொருட்கள்

தோல்நீக்கிவறுத்துகுற்றிய பாசிப்பயறு -1 சுண்டு
தேங்காய்ப்பூ - 3 சுண்டு
சக்கரைதூள் /கற்கண்டு தூள்- 1 சுண்டு
ஏலக்காய்த்தூள் - 2 தேக்கரண்டி
வறுத்துஅரித்தஅரிசிமா - 2 சுண்டு(நிரப்பி)
உப்பு -தேவையானளவு
எண்ணைய்- 6 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - தேவையானளவு
எண்ணைய்பூசிய வாழையிலை - 36 துண்டுகள்

செய்முறை 

(1 ) அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தோல் நீக்கிவறுத்துகுற்றிய பாசிப்பயறு, தண்ணீர் ஆகியவற்றை போட்டு அவிய விடவும் .

(2 )பாசிப்பயறு முக்கால் பதமாக அவிந்த பின்பு அடுப்பில் உள்ள அந்த பாத்திரத்தை இறக்கி அதில் உள்ள தண்ணீரை வடிக்கவும் .

(3 )தண்ணீரை வடித்தபின்பு முக்கால்பதம் அவிந்த பாசிப்பயறை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்ப்பூ,சக்கரை/கற்கண்டு ஆகியவற்றை போட்டு கரண்டியினால் நன்றாக கலக்கவும்

(4 )பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சக்கரை/கற்கண்டு முற்றாக கரையும் வரை நன்றாக கிளரவும்.

(5 )சக்கரை /கற்கண்டு நன்றாக கரைந்து பாகு தடிக்கத் தொடங்கும் போது ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.

(6 )நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போடவும் .

(7 ) பின்பு வேறொரு பாத்திரத்தில் அரிசிமா,உப்பு நீர்,எண்ணைய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும் .

(8 )கலந்த பின்பு அதனுடன் தேவையானளவு கொதித்த நீரை விட்டு கையில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக குழைக்க வேண்டும்.(இடியப்ப பதம் )

(9 )பின்பு குழைத்த மாவை இடியப்ப உரலில் போட்டு அதை எண்ணைய்பூசிய வாழையிலைதுண்டில் மெல்லிய இடியப்பங்களாக பிழியவும்.

(10 )இடியப்பங்களாக பிழிந்தவற்றின் நடுவில் 1மேசைக் கரண்டி பாசிப்பயற்று கலவையை வைத்து இலை யுடன் சேர்த்து பாதியாக மடித்து விளிம்பு பகுதிகளை மெதுவாக அமர்த்தவும்.

(11 )அடுப்பில் இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தை வைத்து அதில் தேவையானளவு தண்ணீர் விட்டு சூடாக்கவும்.

(12 ) தண்ணீர் சூடான பின்பு ஏற்கனவே செய்து மடித்து வைத்துள்ள இடியப்பங்களை இடியப்ப தட்டில் இரண்டு இரண்டாக வைத்து ஆவியில் அவிக்கவும் .

(13 ) அவித்து எடுத்த பின்பு அதை ஆறவிடவும்.

(14 )ஆறிய பின்பு சுவையான சத்தான லவேரியா தயாராகிவிடும்

(15 ) அதன் பின்பு அதை பரிமாறலாம்.

மாற்று முறை
(1)வாழையிலைக்கு பதிலாக சாப்பாடு கட்டும் தாள்கள் அல்லது சாதாரண தாள்கள் பயன்படுத்தலாம். (2)ஏலக்காய்த்தூளுக்கு பதிலாகஅரைத்தேக்கரண்டி) மிளகுத்தூள்,(அரைதேக்கரண்டி) சீரகம் சேர்த்து பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை

சக்கரை நோயாளர்,இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். 

பரிமாறும் அளவு
(10 - 16 )நபர்களுக்கு

ஆயத்த நேரம் 
1 மணித்தியாலங்கள்


சமைக்கும் நேரம் 
1 மணித்தியாலங்கள்

ஆட்டுக்கறி

ஆட்டுக்கறியில் கொழுப்புச்சத்து அதிகளவில் 
காணப்படுகின்றன.அதில் சிறிதளவை என்றாலும் 
குறைப்பதிற்கு 
ஆட்டுக்கறியை துண்டு துண்டுகளாக வெட்டிய
பின்பு அதனை நல்ல கொதிநீரில்(வெந்நீரில்)
கழுவினால் ஆட்டுக்கறியில் உள்ள கொழுப்புச் 
சத்து சிறிதளவு குறையும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

Freitag, 22. Oktober 2010

அன்னாசிப்பழ சலாட்


அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C  கல்சியம்
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள்
அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்
பழத்தில் செய்த சலாட்டானது மேற்குறிப்பிட்ட
சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த
உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன்
காணப்படும். இந்த சலாட்டின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
 இதன்சுவையை இதனை செய்து சாப்பிட்டு
அறியவும்.


தேவையான பொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறியது) - ஒன்று
மிளகாய்த்தூள் (தனி) - ஒரு தேக்கரண்டி(மட்டமாக)
உப்புத்தூள் - தேவையானளவு
சீனி - ஒரு மேசைக்கரண்டி(நிரப்பி)
வினிகர் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
சாலட் இலைகள் - (2-3) துண்டுகள்

செய்முறை 
அன்னாசிப்பழத்தை தோல் சீவிக் அதன் கண்கள்
தெரியாதவாறு மேற்பரப்பை துப்பரவாக்கவும்.

பின்பு அன்னாசிப்பழத்தை நிலைக்குத்தாக
வைத்து கொண்டு நீளப்போக்கில் நான்கு சம
துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

அதன் பின்பு அவற்றின் நடு நரம்பு பகுதியை
வெட்டி நீக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒவ்வொரு துண்டுகளையும் அரை
அங்குல தடிப்புடைய கால் வட்ட வடிவ
துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

அதன் பின்பு வெட்டிய துண்டுகளை ஒரு
பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள்
உப்புத்தூள் சீனி வினிகர் இவையாவற்றையும்
போட்டு நன்றாக பிரட்டி கலக்கவும்.

பின்பு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பின்பு துண்டுகளை மட்டும் தனியாக
எடுத்து சலாட் கோப்பையில் அலங்கார
வடிவில் அடுக்கி சாலட் இலைகளை
கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

எச்சரிக்கை - 
அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள்
இந்த சாலட்டை வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

பஜ்ஜி

ஏதாவது சில நாட்களில் உங்களுக்கு பஜ்ஜி 
செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது ஆனால் 
உங்களிடம் பஜ்ஜி செய்யத் தேவையான காய்கறிகள் 
இல்லை 
பொரிக்காத பப்படத்தை(அப்பளத்தை)உங்களுக்கு 
விரும்பிய வடிவத்தில் வெட்டிய பின்பு அதனை 
பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்தால் சுவையான 
பஜ்ஜி தயாராகிவிடும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

Montag, 18. Oktober 2010

அன்னாசி பச்சடி

அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட், வைட்டமின் B1,B2,B3,B5,B6,B9,C, கல்சியம், பொட்டாசியம், பொஸ்பரஸ், இரும்பு, மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவித சத்துகள் அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்பழத்தில் செய்த பச்சடியானது மேற் குறிப்பிட்ட சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன் காணப்படும். இதன் சுவையை இதனை செய்து சாப்பிட்டு அறியவும்.


தேவையான பொருட்கள் 
அன்னாசித்துண்டுகள் (சிறிதாக வெட்டியது) - 2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் சிறிதாக வெட்டியது - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
சீனி (சர்க்கரை) - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் (தனி) - ஒரு மேசைக்கரண்டி(நிரப்பி)
ஏலக்காய்த்தூள் - 3 சிட்டிகை
தண்ணீர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு


செய்முறை 

அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
அதில் நெய்யை விட்டு அது சூடானதும்
வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் அரை பதமாக வதங்கியவுடன்
வெட்டிய அன்னாசித்துண்டுகளை போட்டு
வதக்கவும்.

அன்னாசித்துண்டுகள் முக்கால் பதமாக
வதங்கியவுடன் அதனுள் தண்ணீர் சீனி
மிளகாய்த்தூள் ஏலக்காய்த்தூள் உப்பு
ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.

இக்கலவை திரளாகத்(கட்டியாகத்)
தொடங்கியதும் இறக்கி பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
(1)அன்னாசிதுண்டுகள்(சிறிதாக வெட்டியது. 
(2)வெங்காயம் அரை பதமாக வதங்கியவுடன் 
வெட்டிய அன்னாசித்துண்டுகளை போட்டு 
வதக்கவும். 

எச்சரிக்கை - 
அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள் 
இந்த பச்சடியை வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும்

அரியதரம்

அரியதரம் இலங்கை மக்களால் மிக மிக
விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும்.
இலங்கை மக்களால் கொண்டாடப்படும்
திருமணம் போன்ற கலாச்சார வைபவங்
களில் இது மிகமிக முக்கிய இடத்தை
வகிக்கிறது. அத்துடன் இந்த இனிப்பானது
அரிசிமாவை அரித்து(சலித்து) செய்வதாலும்
தரமாக இருந்தாலும் இதற்கு பழமையான
காலத்து மக்களால் அரியதரம் எனப்பெயர்
சூட்டப்பட்டது


தேவையானபொருள்கள்
வெள்ளை பச்சரிசி - 4 கப்
கம்பிக்குருணல் - ஒரு கப்
சீனி (சர்க்கரை) - 500 கிராம்
ஏலப்பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - ஒரு போத்தல்

செய்முறை 

பச்சரிசியை ஒரு மணி நேரம்
நீரில் ஊறவிடவும்.

அதன் பின்பு அரிசியை மாவாக
இடிக்கவும்.

இடித்த மாவை 3 தரம் அரிக்கவும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில்
 மாவை போடவும்.

மாவை அரித்த பின்பு கிடைக்கும்
சிறிய குருணலை எடுத்து அதிலுள்ள
அழுக்குகளை(நெல்உமி)அகற்றவும்.

அதன் பின்பு மா போட்ட பாத்திரத்தில்
மாவிற்கு மேலே குருணலை போடவும்.

அப்பாத்திரத்தில் சீனி (சர்க்கரை), ஏலக்காய்
த்தூள் இவையிரண்டையும் போடவும்.

அதன் பின்பு அப்பாத்திரத்தை காற்று உள்ளே
போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும்.

அடுத்த நாள் பாத்திரத்திலுள்ள மாவை நன்றாக
கைகளால் குழைக்கவும் (இந்த மாவுடன்
வேறு எந்த பொருளும் சேர்க்ககூடாது.
அத்துடன் வேறு எந்த ஆயுதமும்
பாவிக்ககூடாது).

குழைத்த மாவை அளவான உருண்டை
களாக்கவும். பின்பு உருண்டைகளை
இலேசாக அமர்த்தவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி
அதில் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

கொதித்த எண்ணெயில் அமர்த்திய
உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்துப்
பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
(1)மா போடும் போது அல்லது மாவுடன்
மற்றைய பொருட்களை போடும் போது வேறு
எந்த பொருளும் சேர்க்ககூடாது. அத்துடன்
வேறு எந்தஆயுதமும் பாவிக்ககூடாது
மாவின் மேலையே மற்றபொருட்களை
போடவும் அத்துடன் குழைக்கவும் கூடாது
அடுத்த நாளே மாவை குழைக்கவும்.

(2) இதை பொரித்தெடுத்து ஆறியதும்
     டப்பாவில் போட்டு மூடி(2- 3) கிழமைகளுக்கு
வைத்து உண்ணலாம்.

மாற்று முறை - 
வெள்ளை பச்சரிசிக்கு பதிலாக தீட்டிய
சிவத்த பச்சரிசியை (பொங்கள் அரிசி)
பாவிக்கலாம்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

Sonntag, 17. Oktober 2010

அப்பிள் ரசம்



நாம் தினமும் ஓர் அப்பிள்பழத்தை
சாப்பிட்டு வந்தாள் நாம் தினமும்
சாப்பிடும் அந்த அப்பிள் பழமானது
எமக்கு நோய் ஏற்படாது எங்களை
காக்கும்.அத்துடன் எமக்கு நோய்
ஏற்பட்டால் நோயிடம் இருந்து
எம்மைகாக்கும் மருத்துவரைகூட
தூரத்தில் வைக்கும் சக்தி அப்பிள்
பழங்களுக்கு உண்டு.அத்துடன்
அப்பிள் பழங்களுக்குப் பலவித
மான புற்றுநோய்களைத் தடுக்கும்
ஆற்றல் உள்ளது இதயநோய்கள்
எடைக்குறைவு கொழுப்புச்சத்துக்
குறைவு ஆகியவற்றிற்கும் அப்பிள்
பழம் உதவுகிறது. அப்பிள்பழம்
நோய்களிலிருந்துமூளையை
பாதுகாக்கின்றன. அப்பிள்பழம் உயிர்
சத்து சி நிறைந்தது இப்படிப்பட்ட
அப்பிள்பழத்துடன் புரதசத்து நிறைந்த
பருப்பும் சேர்ந்து செய்யப்பட்ட ரசமே
அப்பிள் ரசமாகும்.
தேவையான பொருட்கள்
பருப்பு -1கப்
தண்ணீர் - 1கப்
அப்பிள்பழம் - 1
தக்காளி - 2
தேசிக்காய்(எலுமிச்சைச்)சாறு - 1மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
பெருங்காய்த்தூள் - 1/4தேக்கரண்டி
மிளகு - 1+1/2தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
செத்தமிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையானளவு
கடுகு - 1/2தேக்கரண்டி
நெய் - 1மேசைக்கரண்டி
செய்முறை
1.முதலில்ஆப்பிளை தோல், விதை 
   ஆகியவற்றைஅகற்றி ய பின்னர்
   சிறிய சிறிய துண்டுகளாக 
   வெட்டுங்கள்.
2.அதன் பின்னர் தக்காளிப்பழத்தை 
   கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு 
   அரைத்து வடிகட்டவும்.
3. பின்னர் ஒரு பாத்திரத்தில் பருப்பு ,
    தண்ணீர் ஆகியவற்றை போடவும்.

4.போட்டபின்னர் அதனுடன் அரைத்து
    வைத்திருக்கும் தக்காளிப்பழத்தை 
   போட்டு நன்றாக கலக்குங்கள்.
5.கலக்கிய பின்னர் அதனுடன் தண்ணீர் 
   ஒரு கப், மஞ்சள்தூள், பெருங்காயத்
   தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக 
   கலக்குங்கள்.
6.பின்பு மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், 
   கறிவேப்பிலை ஆகியவற்றை
   தூளாக்கி   கொள்ளவும்.
7.அடுப்பிள் தாட்சியை வைத்து 
   சூடாக்கவும்.

8.சூடாக்கிய பின்னர் அதில் நெய்யை 
   விட்டு சூடாக்கவும்.

9. நெய் சூடான பின்னர் அதில் கடுகு, 
    கறிவேப்பிலை ஆகியவற்றை 
    போட்டு தாளிக்கவும்.    
     
10.தாளித்த பின்னர் அதனுடன் ஆப்பிள் 
   துண்டுகளையும் சேர்த்து 3 நிமிடங்கள் 
   வதக்கவும்.

11. வதக்கிய பின்னர் அதனுடன் 
   ஏற்கனவே செய்துவைத்திருக்கும் 
   கலவையை சேர்த்து கலக்குங்கள் .
12.கலக்கிய பின்னர் கொதிக்க விடுங்கள்.

13.கொதித்து இக்கலவை பொங்கி வரும்
      போது தேசிக்காய் (எலுமிச்சை) சாறு 
    சேர்த்து அடுப்பிள் இருந்து இறக்குங்கள்.
14.அதன் பின்னர் இதோ சுத்தமான சுவை
     யான சத்தான அப்பிள் ரசம் தாயாராகி
     விட்டது. 
     
15.தயாரான பின்னர் ஒரு தட்டில் 
    சோற்றினை வைத்து அதனுடன் 
   சுத்தமான சுவையான சத்தான அப்பிள்
   ரசத்தை வைத்து பரிமாறுங்கள்.
குறிப்பு
எச்சரிக்கை
அப்பிள்பழ அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும்.

இஞ்சித்தொக்கு


இஞ்சி (Zingiber officinale) உணவின் ருசி கருதி உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இஞ்சி ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சியை உண்பதால் தீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக்கம்மல் ஆகும். ஆகவே அதில் செய்யப்படும் இஞ்சி தொக்கினை சுவையை அறிய இதனை செய்து சாப்பிடவும்.


தேவையான பொருட்கள் 
இளசான இஞ்சி - 100கிராம்
மிளகாய்த்தூள் - 6 தேக்கரண்டி
புளி - தேசிக்காயளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு


செய்முறை 

1 .கிரைண்டரில்(மிக்சியில)தோல் நீக்கி
     சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய
     இஞ்சியுடன் உப்பு, புளி மிளகாய்த்தூள்
    ஆகியவற்றை போட்டு நன்றாக சேர்த்து
    அரைக்கவும்.

2,அதன் பின்பு அடுப்பில் தாட்சி வைத்து
   (வாணலி வைத்து) கடுகு, பெருங்காயம்
   தாளித்து அதனுடன் அரைத்த விழுதை
    போட்டு வதக்கவும்.

3.அவை வதங்கியதும் சுத்தாமான
    சுவையான மருத்துவகுணமுடைய
    சத்தான இஞ்சிதொக்கு தயாராகிவிடும்.

4அதன் பின்பு அதை எடுத்து ஒரு
   பாத்திரத்தில் போடவும்

5.அதன் பின்னர் ஒருதட்டில் சோற்றினை
   (சாதத்தை )வைத்து அதனுடன்
   இஞ்சி தொக்கினை வைத்து பரிமாறவும்

 அல்லது 
ஒரு சுத்தமான தண்ணிர் இல்லாத காய்ந்த
போத்தலில் போட்டு காற்றுப் போகாதவாறு
நன்றாக முடி வைக்கவும்.

நெல்லிக்காய் ஊறுகாய் பரிமாற தேவைப்படும்
போது போத்தலின் மூடியை அகற்றிய பின்னர்
சுத்தமான ஈரமற்ற கரண்டியால் அல்லது
சுத்தமான ஈரமற்ற மர அகப்பையால் எடுத்து
வைத்து பரிமாறவும்


எச்சரிக்கை -
1.மரவள்ளி கிழங்கு உணவுகளை சமைக்கும் போது
அல்லது சாப்பிடும்போது இஞ்சி உணவுகளை
சமைக்கவோ அல்லது சாப்பிடகூடாது.

2.மரவள்ளி கிழங்கு,இஞ்சி ஆகிய இவையிரண்டும்
  சேர்ந்தால் மரவள்ளிக் கிழங்கு   கறி நஞ்சாகிவிடும்
( மரவள்ளி கிழங்கிலுள்ள பால் இஞ்சியுடன்
சேர்ந்தால் நஞ்சாகிவிடும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள்-
தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக
நறுக்கிய இஞ்சி.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்

Samstag, 16. Oktober 2010

நெல்லிக்காய் தொக்கு


நெல்லிக்காயில் விற்றமின் சி, கல்சியம் 
ஆகியவை மிக மிக நிறைந்ததுள்ளது 
அத்துடன் உங்கள் சருமத்தை பளபள
வென்று மாற்றும் இளமையை அதிகரிக்க 
செய்யும்ஒரு தேவலோகத்து கனி
அப்படிப்பட்ட நெல்லிக்காயில்செய்யப்படும் 
தொக்கின் சுவையெப்படியிருக்கும் என்பதை 
நீங்களே செய்து சாப்பிட்டு அறிந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள் 
பெரிய நெல்லிக்காய் - கால்கிலோ
மிளகாய்த்தூள் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 150 கிராம்
உப்பு - தேவையானளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி

செய்முறை 

1.அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
   பெரிய நெல்லிக்காய் தண்ணீர் ஆகியவற்றை
   போட்டு அவியவிடவும் .

2. நெல்லிக்காய் அவித்த பின்னர் அதனை
    எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்

3.போட்டபின்னர் ஆறவிடவும்

4. ஆறியபின்னர் அதனை கத்தியால் வெட்டி
     அதனுள் உள்ள  விதையை  நீக்கவும்.

5.அதன் பின்பு அவித்து விதை நீக்கிய பெரிய
   நெல்லிக்காய், உப்பு, மிளகாய்த்தூள்
   இவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்)
   விழுதாக அரைக்கவும்.

6.அரைத்த   பின்னர் அடுப்பில் தாட்சியை
     (வாணலியை) வைத்து அதை சூடாக்கவும்.

7.பின்பு தாட்சி(வாணலி) சூடானதும்
  நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்

8.சூடாக்கிய பின்னர் அதில் கடுகு போட்டு
   வெடிக்க விட்டு சீரகம்(சோம்பு), பெருங்காயம்
   ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

9.தாளித்த பிறகு விழுதாக அரைத்தவற்றை
  போட்டு கிளறவும்.

10.அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
    நெல்லிக்காய் தொக்கு தயாராகிவிடும்

11.தயாரான பின்னர் அதனை அடுப்பில் இருந்து
    இறக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்

12.போட்ட பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
   (சாதத்தினை ) வைத்து அதனுடன் சுத்தமான
    சுவையான சத்தான நெல்லிக்காய் தொக்கினை
     வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை - 
பெரிய நெல்லிக்காய் அலர்ஜி
உள்ளவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

புடலங்காய் ஊறுகாய்

 புடலங்காய் ஊறுகாய் மினரல் சத்து
நிறைந்தது இது ஆசியா கண்டத்தினை
சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களால்
பெரும்பாலும் விரும்பி உண்ணப்படும்
உணவு இதுவாகும்


தேவையானபொருட்கள் 
பொடியாக நறுக்கிய பிஞ்சு புடலங்காய் - 2
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடியளவு
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
செத்தல் மிளகாய் (வத்தல்) - ௨


செய்முறை 
1.அடுப்பில் வாணலியை (தாட்சியை)
   வைத்து அதை சூடாக்கவும்.

2.அதில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
   விட்டு சூடானதும் நறுக்கிய புடலங்காயை
  அதில் போட்டு வதக்கிக் கொள்ளவும் .

3.புடலங்காய் வதங்கியதும் அதை எடுத்து
  ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்

4.திரும்பவும் அடுப்பில் வாணலியை
   (தாட்சியை)வைத்து அதை சூடாக்கி
   அதில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
   விட்டு அதை சூடாக்கவும்.

5.அதில் துவரம் பருப்பு, பெருங்காயம்,
   மிளகு, செத்தல் மிளகாய் போட்டு
  பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும்.

6.ஆறிய பின்பு பொன்னிறமாக வறுத்த
   துவரம்பருப்பு, பெருங்காயம், மிளகு,
   செத்தல் மிளகாய் ஆகியவற்றை
   கிரைண்டரில் (மிக்ஸியில்)போட்டு
   கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் .

7.அதனுடன் வதங்கிய புடலங்காயை
   சேர்த்து நைசாக அரைக்கவும்.

8.இதோ சுவையான புடலங்காய்
   ஊறுகாய் தயாராகி விட்டது.

9.அதன் பின்பு இதை பரிமாறவும்.

எச்சரிக்கை - 

புடலங்காய் அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

Freitag, 15. Oktober 2010

கடலைப்பருப்பு லட்டு

கடலைப்பருப்பு லட்டு செய்வதற்கு இலகுவானதும்
சுவையானதுமான ஓர் இனிப்பு வகையாகும்

தேவையான பொருட்கள்   
வறுத்தகடலைப்பருப்பு - 2 கப்
தூளாக்கியசீனி - ஒன்றரை கப்
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு(கஜூ)- கால் கப்
நெய்யில் வறுத்த பிளம்ஸ் - கால் கப்
ஏலக்காய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
நெய் / பட்டர் / மாஜரின் - அரை கப்


செய்முறை 
1.கடலைப்பருப்பை மாவாக்கவும்

2.அதன் பின்னர் அதனுடன் நெய்யில்
  வறுத்த கஜூ (முந்திரிப்பருப்பு),சீனி
  (தூளாக்கியது) நெய்யில் வறுத்தபிளம்ஸ்
  ஏலக்காய் (தூளாக்கியது, உப்பு ஆகியவற்றை
  கலந்து நெய்யை சூடாக்கிஅதில் விட்டு
  உடனடியாக லட்டு பிடிக்கவும்
.
எச்சரிக்கை -
சர்க்கரை நோயாளர், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்

வெள்ளை சாக்லட் பிஸ்கட்

வெள்ளை சாக்லெட் பிஸ்கட் சிறுவர்களுக்கு
விருப்பமான ஒர் பிஸ்கட்

தேவையான பொருட்கள் 
மென்மையான பட்டர்/மாஜரீன் - 150 கிராம்
ப்ரவுன் சீனி (சர்க்கரை) - 75 கிராம்
சீனி (சர்க்கரை) - 75 கிராம்
வனிலா சீனி - ஒரு பக்கற்
முட்டை (மீடியம் அளவு) - 2
கோதுமைமா(மைதாமா) - 200 கிராம்
அப்பச்சோடா - ஒரு தேக்கரண்டி
கோக்கோ பவுடர் - 30 கிராம்
பால் - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை சாக்லெட் (சிறியதாக வெட்டியது) - 200 கிராம்
கோதுமைமா (மைதாமா) - ஒரு மேசைக்கரண்டி
வால்நட்/முந்திரிப்பருப்பு (உடைத்தது) - 2 தேக்கரண்டி

செய்முறை 
1.கிரைண்டரில் முட்டையுடன் பிரவுன்சீனி
   (பிரவுன்சர்க்கரை) சீனி (சர்க்கரை) வனிலா
   சீனி(வனிலாசர்க்கரை) ஆகியவற்றை
   போட்டு சீனி வகைகள் கரையும் வரை
     அடிக்கவும்

2.அதன் பின்பு சீனி (சர்க்கரை) கரைந்ததும்
   அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்

3. அதன பின்னர் அதனுடன் பட்டரை போட்டு
   சேர்த்து அடித்து கலக்கவும்.

4 -அடித்த பின்னர் கலந்த சீனி (சர்க்கரை), பட்டர்
    ஆகியவற்றுடன் கோதுமைமா(மைதாமா),
    அப்பச்சோடா ஆகியவற்றை கலந்து அடிக்கவும் .

5.அதன் பின்னர் இக்கலவை ஓரளவு அடித்த
   பின்பு இதனுடன் வெள்ளை சாக்லெட் கலந்து
   அடிக்கவும்.

6.அதன் பின்பு இக்கலவை ஓரளவு அடித்த பின்பு
    இதனுடன் கோக்கோபவுடர், பால் ஆகியவற்றை
   கலந்து  அடிக்கவும்.

7.ஒரு தட்டில் கேக் தாள் போடவும் அல்லது
   கொஞ்சம் பட்டரை எல்லா இடத்திலும் பூசவும்.

8.அதன் மேல் மைதாமா (கோதுமைமா) தூவவும்.

9.அதன் பின்பு இக்கலவையை சிறிய சிறிய
   வட்டமாக 4 செ.மீ அளவு உயரத்திற்கு அதிக
  எண்ணிக்கையில் இடைவெளி விட்டு ஊற்றவும் .

10.ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு முந்திரிப்
  பருப்பு அல்லது வால்நட் நடுவில் வைத்து பேக்
   (Bake) பண்ணவும்.

11.அதன்பின்பு பிஸ்கட் தயாரானதும் பரிமாறவும்.
 
கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
(1) வால்நட்/முந்திரிப்பருப்பு(இரண்டாக உடைத்தது).

பேக்கிங் நேரம்  -
மின்னடுப்பு  10 நிமிடம்
காஸ் 3- 4 நிமிடம்
வெப்பளவு 180-200 பாகை

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

திருமணகேக்


Donnerstag, 14. Oktober 2010

டோட்டிலா(ஸ்பானிய)ஒம்லட்


    டோட்டிலா(ஸ்பானிய )ஆம்லட் 
    செய்வதற்கு இலகுவானதும் 
    சுவையானதும் ஆகும் இது 
    ஸ்பானிய மக்கள் விரும்பி 
    உண்ணும் உணவாகும். 

    தேவையான பொருட்கள் 
    மீடியம் அளவு முட்டை - 5
    உப்பு - தேவையான அளவு
    மிளகு - தேவையான அளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று
    உருளைக்கிழங்கு (சிறியது) - 250 கிராம்
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    செய்முறை 
    1 .உருளைக்கிழங்கின்  தோலையுரித்து 
        ஒரு செ.மீ துண்டுகளாக வெட்டவும்.

    2 .வெட்டியவற்றை ஒரு பாத்திரத்தில் 
        எடுத்து வைக்கவும் .
    3 .அதன் பின்னர் வெங்காயத்தின் 
        தோலையுரித்து சிறு சிறு துண்டுகளாக 
        வெட்டவும்.

    4 .வெட்டியவற்றை ஒரு பாத்திரத்தில் 
        எடுத்து வைக்கவும் 
    5.அடுப்பில் தாட்சியை(வாணலியை ) 
         வைத்து அதில் இரண்டு மேசைக்
        கரண்டி எண்ணெயை விட்டு 
         சூடாக்கவும்.
    6 .ஒரு பாத்திரத்தில் வெட்டிய 
         உருளைக்கிழங்கு வெங்காயம், 
        உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை 
        போட்டு  கலக்கவும்.
    7 ,அதன் பின்பு எண்ணெய் சூடானதும் 
        அடுப்பின் சூட்டை குறைத்து விட்டு 
        கலந்த பொருட்களை எண்ணெயில் 
        போட்டு ஓரளவு பொரிய(அவிந்ததும்)
        விடவும். (ஓரளவு மென்மையாக 
         இருக்க 20 நிமிடங்களுக்கு பொரிய
        விடவும், அதில் 10 நிமிடங்களுக்கு 
         ஒருமுறை தாட்சியை(வாணலியை) 
        குலுக்கவேண்டும் ) .
    8 .பின்பு ஒரு பாத்திரத்தில் எல்லா 
       முட்டைகளையும் போட்டு அதனுடன் 
       உப்பு, மிளகு சேர்த்து முள்ளுகரண்டியால்
       அடிக்கவும் (மிக அதிகமாக அடிக்க
       கூடாது ).
     9 .உருளைக்கிழங்கும்,வெங்காயமும் 
        தேவையானளவு பொரிந்ததும்
        (அவிந்ததும்) அடித்த முட்டையுடன் 
        உடனடியாக கலக்கவும் .
    10.அதன் பின்பு முட்டை பொரிக்கும்
         பாத்திரத்தில் (தாட்சி அல்லது 
         வாணலியில்)மிகுதி எண்ணெயை 
         விட்டு அது கொதித்ததும் கலந்த
          கலவையை ஊற்றவும்.
    11.அடுப்பின் சூட்டை குறைத்து விட்டு
         20 - 25 நிமிடங்கள் வேகவிடவும்.
    12 .பின்பு திருப்பி போட்டு 2 நிமிடங்கள் 
         வேகவிடவும். 

    13 .முட்டை வெந்ததும் இறக்கி துண்டு
         களாக வெட்டி பரிமாறவும்.
       குறிப்பு 

    1 .இருதய நோயாளர் வைத்தியரின் 
       ஆலோசனைப்படி உண்ணவும்


    சப்பாத்தி -1

    சப்பாத்தி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை
    விரும்பி உண்ணுக்கூடியதும் சுவையானதும்,
    கல்சியம், கார்போஹைட்ரேட், மினரல்,
    உயிர்சத்துகள் போன்ற பல சத்துக்கள் மிகமிக
    அதிகமாக உள்ளதுமான ஓரு உணவுப்
    பொருளே சப்பாத்தி ஆகும்


    தேவையான பொருட்கள் 
     - 500 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    பால் - ஒரு மேசைக்கரண்டி
    பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
    முட்டை - ஒன்று (விரும்பினால்)
    கொதிநீர் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    1.ஒரு பாத்திரத்தில் ஆட்டாமா,
      உப்பு, பால், பட்டர், முட்டை
      ஆகியவற்றை போட்டு நன்றாக
       கலக்கவும்.

    2.அதன் பின்பு அதனுடன் கொதிநீர்
       விட்டு நன்றாக குழைக்கவும்.

    3.குழைத்த மாவை சிறு சிறு உருண்டை
        களாக உருட்டவும்.

    4.சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து
      வட்டமாக தட்டவும் .

    5.வட்டமாக தட்டியபின்னர் அடுப்பில்
       தோசைக்கல் வைத்து அது சூடானதும்
      கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.

    6.எண்ணெய் தடவிய பின்னர் வட்டமாக
      தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்

    7.அது வெந்ததும் அதனை மறுபக்கம்
      திருப்பி போட்டு வேகவிடவும்.

    8.இருபக்கமும் வெந்ததும் சுவையான,
      மென்மையான(soft) சுத்தமான சத்தான
        சப்பாத்தி தயாராகிவிடும் .

    9.இதனைப்போல மற்றைய சப்பாத்தி
       ளையும் தயார் செய்யவும்.

    10.அதன்பின்னர் ஒருதட்டில் சுத்தமான
       சுவையான சத்தான சப்பாத்திகளில்
    சிலவற்றை வைத்து  பரிமாறவும் .


     (1)
    எச்சரிக்கை - 
    இருதய, சர்க்கரை நோயாளிகள்
    வைத்தியரின் ஆலோசனைப்படி
    சாப்பிடவும்.


    (2) 
    மாற்று முறை
     (a)(கொழுப்பு)(fat) பட்டருக்கு
    பதிலாக கொழுப்பு குறைந்த
    பட்டரோ அல்லது எண்ணெய்
    பாவிக்கலாம்.

    (b)பாலுக்கு பதிலாக தயிர்
    பாவிக்கலாம்.


    (3) 
    கவனிக்க வேண்டிய விஷயங்கள்
    (a)சப்பாத்திகள் நன்றாக வெந்துவிட்டதா
    என்பதை கவனிக்கவும்.

    (b) ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும்,

    (c) பால் பட்டர், முட்டை ஆகியவற்றை
    சேர்த்து செய்தால் சப்பாத்தி மென்மையாக
    (soft) இருக்கும்.

    வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


    Mittwoch, 13. Oktober 2010

    அப்பிள்கோவா(கபேஜ்) சலாட்




    அப்பிள்கோவா(கபேஜ்) சலாட்டானது 
    விற்றமின் சி சத்து நிறைந்த சலாட் ஆகும் . 

    தேவையானபொருட்கள் 
    அப்பிள்பழம் - ஒன்று
    வெட்டியகோவா(கபேஜ்)  - 250 கிராம்
    பெரியவெங்காயம் - 2
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - ஒன்று
    மெல்லியகுவாக்- 2 மேசைக்கரண்டி
    பிளம்ஸ்(சுல்டானாஸ்) - 2 மேசைக்கரண்டி
    உடைத்த முந்திரிகை (கஜு) - 2 மேசைக்கரண்டி
    சீனி (சர்க்கரை) - அரைத் தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையானளவு


    செய்முறை 

    1.அப்பிள் பழத்தை கழுவி அதன் தேவையற்ற
    பகுதியை (விதை அதனுடன் சேர்ந்த பகுதி)
    அகற்றி சிறு துண்டுகளாக வெட்டவும்

    2.வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
    போடவும்

    3.அதன் பின்னர் வெங்காயத்தின் தோலை
      யுரித்து குருணியாக வெட்டவும்.

    4.குருணியாக வெட்டிய வெங்காயத்தை
       ஒரு பாத்திரத்தில் போடவும்.

    5.பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை
        விடவும்.

    6. அதன் பின்னர் அதனுடன் தேசிக்காய்
       சாறு (லெமன் ஜூஸ்), வெங்காயம்,
       உப்பு, சீனி (சர்க்கரை), கடுகு குவாக்
        ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

    7.கலக்கிய பின்னர் சாஸ் தயாராகிவிடும்

    8.அதன் பின்னர் வெட்டிய கோவா(கபேஜை)
       வெட்டிய அப்பிள் துண்டுகள் ஆகியவற்றை
       செய்து வைத்துள்ள சாஸில் போடவும்.

    9.போட்ட பின்பு அதனுடன் பிளம்ஸ்(சுல்டா
      னாஸ்) சுத்தம் செய்து சாஸில் போடவும்.

    10.போட்ட பின்னர் அதை குளிரான ஒரு இடத்தில்
           வைக்கவும்.

    11.அதன் பின்பு அதை எடுத்து அதில் கஜூ போட்டு
         உடனே பரிமாறவும்.

    கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
    1.அப்பிளை கழுவி அதன் தேவையற்ற பகுதியை
    (விதை அதனுடன் சேர்ந்த பகுதி)அகற்றி சிறு
    துண்டுகளாக வெட்டவும்.
    2.வெங்காயத்தினை குருனியாக வெட்டவும்.
    3.குளிரான இடத்தில் வைக்கவும்.
    4.கஜூ போட்டவுடன் பரிமாறவும்.

    ஜம்பு (சப்போட்டா)பழச்சாறு

    இது கண்களுக்கு குளிர்ச்சியை தருவதும்,
    உயிர்சத்து சி நிறைந்ததும் சுவையானதும்
    குழந்தைகளுக்கு விருப்பமானதும் இலகுவாக
    செய்யகூடியதும், கோடை காலத்திற்கு மிக
    மிக சிறந்ததும், ரோஜா நிறமானதுமான ஒரு
    பழரசமாகும்.


    தேவையான  பொருட்கள்  
    ஜம்புபழங்கள் (சப்போட்டா (விதைநீக்கியது) - 10
    பால் - 2 கப்
    வனிலா - ஒரு தேக்கரண்டி
    உப்பு - சிறிதளவு (விரும்பினால்)
    ஐஸ்கட்டி - அரை கப்
    கஜு - 25 கிராம்
    பிளம்ஸ் - 25 கிராம்
    மிளகுத்தூள் - சிறிதளவு (விரும்பினால்)


    செய்முறை 

    1 .மிக்ஸியில்(கிரைண்டரில்)ஜம்புபழங்கள்
        (சப்போட்டா),தண்ணீர், பால், வனிலா,
       மிளகுத்தூள்(விரும்பினால்),உப்பு
       (விரும்பினால்) இவையாவற்றையும்
        போட்டு நன்றாக அடிக்கவும் .

    2 .அதன் பின்னர் இவற்றை ஒரு பாத்திரத்தில்
       ஊற்றவும் .

    3 ஊற்றிய பின்னர் சுத்தமான சுவையான
       சத்தான  ஜம்பு (சப்போட்டா)பழச்சாறு
      தயாராகிவிடும் .

    4 .அதன் பின்பு இந்த பழரசத்தை அழகான
       பூக்கள், பழங்கள், வர்ணங்கள் போட்ட
       கிளாஸில் (கப், குவளை) ஊற்றி அதன்
       மேல் கஜு, பிளம்ஸ், ஐஸ் கட்டி சேர்த்து
       அலங்கரித்து பரிமாறுங்கள்.


    எச்சரிக்கை - 
    ஜம்பு (சப்போட்டா)பழ அலர்ஜி உடையவர்கள்
    வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும்