கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 13. Januar 2011

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 12. Januar 2011

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 9. Januar 2011

கோல்டன் சிக்கின்கறி

கோல்டன் சிக்கன் மிக மிக
சுவையானதும் சத்துக்கள்
உடையதுமாகும்.

தேவையான பொருட்கள் 
கோழி - ஒரு கிலோ
எலுமிச்சம்பழம்(தேசிக்காய்) - 2
தக்காளி - 3
பால் - 2 கப்
எண்ணெய் - தேவையானளவு
இஞ்சி - ஒரு துண்டு
உள்ளி(பூண்டு) - 6 பல்
முட்டை - 3
கார்ன் ப்ளார் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை 
கோழியை சுத்தம் செய்து விரும்பியளவில்
வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்னர் இஞ்சி, உள்ளி(பூண்டு)
ஆகியவற்றை அரைத்து இன்னொரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்னர் கோழி உள்ள
பாத்திரத்தில் அரைத்த (இஞ்சி,உள்ளி
(பூண்டு))விழுது, உப்பு, தேசிக்காய்சாறு
(எலுமிச்சம்பழசாறு) ஆகியவற்றை
போடவும்.

அதன் பின்பு எல்லாவற்றையும்
ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

இக்கலவையை  ஒரு மணித்தியாலம்
ஊறவைக்கவும்.
(கோழித்துண்டுகள் பெரிய அளவில்
இருத்தால் முள்ளுகரண்டியால் கொஞ்சம்
குத்தி விடவும்).

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையின்
மஞ்சள் கருவை எடுத்து வைக்கவும்.

மற்றைய பாத்திரத்தில் முட்டையின்
வெள்ளைக் கருவை எடுத்து வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் தக்காளிப்பழத்தை
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதை
 சூடாக்கவும்

அது சூடானதும் அதில் பட்டரை போடவும்.

அது உருகிய பின்பு அதில் கார்ன் ப்ளார்ரை
போடவும்.

அது லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.

அதன் பின்பு அதனுடன் பாலை சேர்த்து
 தடிப்பாக வரும் வரை கிளறவும்.

பின்பு இக்கலவைய அடுப்பிலிருந்து
இறக்கி இதை ஆறவிடவும்.

முட்டை மஞ்சள்கரு, உப்பு, மிளகுத்தூள்,
மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து
கலக்கி அதை ஆறிய கலவையுடன்
சேர்க்கவும்.

இவையாவற்றையும் கோழித்துண்டு
களுடன் சேர்த்து பிரட்டவும்.

இன்னொருபாத்திரத்தில் முட்டை
வெள்ளைகருவை நன்றாக அடித்து
அதில் கலவையாவும் பிரட்டிய
கோழித்துண்டுகளை ஒவ்வொன்றாக
நனைக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
அதை சூடாக்கவும். அது சூடானதும் அதில்
எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் முட்டை வெள்ளைகரு
பிரட்டிய கோழித்துண்டுகளை போட்டு
பொரித்தெடுக்கவும்.

அதன் பின்பு இதை ஒரு கண்ணாடித்தட்டில்
அடுக்கி வெட்டிய தக்காளித் துண்டுகளை
அதன் மேலே பரப்பி அதை மேலே முட்டை
வெள்ளை கருவை ஊற்றி அதை மைக்ரோவேவ்
அவனில் வைத்து (10 - 15) நிமிடங்கள் பேக்
பண்ணவும்.

அதன் பின்பு அதை எடுத்து கொத்தமல்லி
இலை நறுக்கி போட்டு அலங்கரித்து
பரிமாறவும்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 7. Januar 2011

பாசிப்பயறு டோஸ்டர்

பாசிப்பயறு டோஸ்டர் செய்வதற்கு
இலகுவானதும் சுவையானதும் சத்துக்கள்
நிறைந்ததுமான ஒர் சிற்றுண்டி ஆகும்.


தேவையானபொருட்கள்  
ஊறவைத்தபாசிப்பயறு(பருப்பு)- 1கப்
பாண் துண்டுகள் - 6
பச்சைமிளகாய் - 2
உள்ளி (பூண்டு) - 4
பட்டர் - தேவையானளவு
சிறிதுசிறிதாகவெட்டியகறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு - தேவையானளவு


செய்முறை 
கிரைண்டரில் பாசிப்பயறு(பருப்பு),
பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு), உப்பு
ஆகியவற்றை போட்டு கொரகொரப்பாக
அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்தவற்றை
போடவும்.

பின்பு அதனுடன் கறிவேப்பிலையை,
ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து
கலக்கவும்.

 பின்பு பாண் துண்டுகளின் மேல் பட்டர்
பூசவும்.

அதன் மேல் இக்கலவையை தடவவும்

பின்பு அதை டோஸ்ட் செய்யவும்.

 பின்பு டோஸ்ட் செய்தவற்றை ஒரு
தட்டில் வைத்து பரிமாறவும்.


 எச்சரிக்கை 
இருதயநோயாளர் பாசிப்பயறு அலர்ஜி
உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.


கவனிக்கவேண்டியது 
 கிரைண்டரில் பாசிப்பயறு(பருப்பு),
பச்சை மிளகாய், உள்ளி(பூண்டு), உப்பு
ஆகியவற்றை போட்டு கொரகொரப்பாக
அரைக்கவும்), பின்பு அதனுடன்
கறிவேப்பிலையை, ஒரு தேக்கரண்டி
பட்டர் சேர்த்து கலக்கவும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 6. Januar 2011

வறுத்த உளுத்தம்மா தோசை

உடனடி வறுத்த உளுத்தம்மா தோசை
மிக விரைவில் செய்யகூடியதும்
கார்போஹைட்ரேட், மினரல், உயிர்
சத்துகள், கல்சியம் நிறைந்ததும்,
குழந்தைகள் விரும்பி உண்ண
கூடியதுமான ஒர் சிற்றுண்டி உடனடி
வறுத்த உளுத்தம் மா தோசை ஆகும்.


தேவையானபொருட்கள்  
கோதுமைமா (மைதாமா) - (2-3) கப்
உளுத்தம்மா (வறுத்தது) - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
பட்டர் - ஒரு மேசைகரண்டி
பால் - சிறிதளவு
முட்டை - ஒன்று
கறிவேப்பிலை (சிறிதாகவெட்டியது) - சிறிதளவு
பச்சைமிளகாய் (சிறிதாகவெட்டியது) - 2
எண்ணெய் - சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை 

கோதுமை மா (மைதாமா), உளுத்தம்மா,
உப்பு, பட்டர் பால், கறிவேப்பிலை,
பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து
தண்ணீர்விட்டு (தோசைமாபதம்) கட்டி
இல்லாமல் நன்கு கரைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் காயவைக்கவும்

அது நன்கு சூடானதும் அதில் எண்ணெய்
தடவவும்.

பின்பு அதில் மாவை ஊற்றி பரத்திவிடவும்
(ஒரளவு மெல்லிய தோசைகளாக)

தோசை வெந்தவுடன் தோசையை திருப்பி
விடவும்.

அதன் பின்பு தோசை வெந்ததும் எடுக்கவும்.

 இந்த தோசைக்கு, சட்னி, உருளைக்கிழங்கு
பிரட்டல் கறி நன்றாக இருக்கும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கோதுமைமா, உளுத்தம் மா, உப்பு,பட்டர், பால்,
 கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை
சேர்த்து தண்ணீர்விட்டு தோசைமாவு பதம்
கட்டியில்லாமல் நன்கு கரைக்கவும்.


 எச்சரிக்கை 
உளுந்து அலர்ஜி உள்ளவர்கள், இருதய
நோயாளர், சர்க்கரை நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

யோ யோஸ்

யோ - யோஸ் சுவையானதும் சத்துமிக்கதும்
சிறுவர்கள் விரும்பி உண்ணக்கூடியதுமான
ஒர் சிற்றுண்டியாகும்


தேவையான பொருட்கள் 
பட்டர் - 200 கிராம்
கோதுமைமா(மைதாமா) - 200 கிராம்
ஜஸிங் சுகர் - 100 கிராம்
கஸ்டர்ட் பவுடர் - 80 கிராம்
வனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் பட்டரை ஜஸிங் சுகருடன்,
வனிலா எசன்ஸ் ஆகியவற்றை கலந்து
 நன்றாக எக்பீட்டரினால்
அடிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா),
கஸ்டர்ட் பவுடர் ஆகிய இரண்டையும்
கலக்கவும்.

அதன் பின்பு கலந்தவற்றை அரிதட்டினால்
நன்றாக அரித்து (சலித்து) வைத்து கொள்ளவும்.

பின்பு அடித்து வைத்திருக்கும் பட்டர்
கலவையில் மைதாகலவையை சிறிது
சிறிதாக கலந்து மாவாக பிசையவும்.

மாவாக பிசைந்ததை ஒரு பலகையில் வைத்து
அதை உருளையினால் அல்லது அப்பளக்
குழவியினால்) உருட்டி ஒரளவு மெல்லிய
தட்டையாக்கவும்.

பின்பு அதில் விரும்பிய அச்சுக்களை
வைத்து விரும்பிய உருவங்களை
வெட்டி கொள்ளவும்.

வெட்டிய துண்டுகளை அவனில் வைக்ககூடிய
தட்டில் ஒழுங்காக  அடுக்கவும்.

பின்பு அவனை சூடாக்கி அதில் அடுக்கிய
தட்டினை வைக்கவும்.

அதன் பின்பு இவற்றை 180 டிகிரி c யில் பேக்
செய்யவும்.

இவை நன்றாக பேக் செய்யப்பட்டபின்பு
அவனிலிருந்து வெளியே எடுக்கவும்.

வெளியே எடுத்த தட்டை நன்றாக
ஆறவிடவும்,

அதன் பின்னர் சுத்தமான சுவையான
யோ யோஸ் தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு
யோ யோஸ் வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
சர்க்கரை நோயாளர், இருதயநோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்