கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 31. Dezember 2010

நெக்டோ புடிங் கேசரி

நெக்டோ புடிங் சிறுவர்கள் விரும்பும்
சுவை கூடிய புடிங் ஆகும். அத்துட
ன் இந்த புடிங்கில் கார்போஹைட்ரேட்,
மினரல், வைட்டமின், கல்சியம்,
பொஸ்பரஸ் ஆகிய சத்துகள் 
நிறைந்து உள்ளது

தேவையான பொருட்கள் 
மில்க் மெயிட் (கன்டென்ஸ்ட் மில்க்) - ஒரு டின்
சீனி(சர்க்கரை) - அரை கப்
தண்ணீர் - ஒரு டின்
நெக்டோ - ஒரு போத்தல்
ரவை(வறுத்தது) - (அரை - ஒரு) சுண்டு
பட்டர் -தேவையானளவு
வெனிலா - அரை தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு (கயூ)(சிறுதுண்டுகள்) - 25 கிராம்
பிளம்ஸ் - 25கிராம்


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் மில்க் மெயிட்
(கன்டென்ஸ்ட் மில்க்), தண்ணீர்,
சீனி(சர்க்கரை)ஆகியவற்றை
நன்றாக கலக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து
அதை சூடாக்கி அதில் இக்கலவையை
ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

இக்கலவை நன்றாக கொதித்தும்
அதனுடன் ரவை போட்டு கட்டிப்ப
டாமல் நன்றாக கிளறவும்.

அதன் பின்பு அதனுடன் பட்டர், வனிலா,
 பிளம்ஸ், முந்திரிப்பருப்பு(கயூ)ஆகிய
வற்றை கலந்து கிளறவும். பின்பு
அடுப்பிலிருந்து இறக்கி இக்கலவையை
 ஆறவிடவும்.

இக்கலவை ஒரளவு சூடாக இருக்கும் போது
நெக்டோ(குளிர்பானம்) கலந்து நன்றாக ஆற
விடவும். ஆறிய பின்பு அதை குளிர்ரூட்டியில்
வைக்கவும்.

அதன் பின்பு அதை எடுத்து ஓரளவு பெரிய
சதுர துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

எச்சரிக்கை 
சர்க்கரை நேயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்று முறை 
நெக்டோவிற்கு பதிலாக பன்டா,
போட்டலோ போன்ற குளிர்பானங்களை
 பாவிக்கலாம்.

கத்தரிக்காய் ரோஸ்ட்

கத்தரிக்காய் ரோஸ்ட் மிக மிக சுவையானதும்.
சத்துக்கள் நிறைந்ததும் எல்லோருக்கும் 
விருப்பமான ஓரு கறிவகையாகும்


தேவையான பொருட்கள் 
நீளமாக மெல்லியதாகவெட்டியகத்தரிக்காய்-1 /2கிலோ
நறுக்கியவெங்காயம்து- கால் கிலோ
நறுக்கியதக்காளி- கால் கிலோ
இஞ்சிவிழுது - 1தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)விழுது - 1தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம்(சோம்பு) - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கறிவேப்பிலை - தேவையானளவு

செய்முறை 

அடுப்பில் தாட்சியை வைத்து அது
சூடானதும் அதில் எண்ணெயை
விட்டு சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் கடுகை போட்டு
அது வெடித்ததும் அதில் சீரகம்(சோம்பு)
போட்டு தாளிக்கவும்.

தாளித்ததும் அதில் இஞ்சிவிழுது,
உள்ளி(பூண்டு) விழுது ஆகியவற்றை
போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் அதில் வெங்காயத்தை
 போட்டு வதக்கவும்.

 ஒரளவு வதங்கிய பின்பு அதனுடன்
தக்காளியை போட்டு வதக்கவும்.

இவையாவும் ஒரளவு வதங்கியவுடன்
இதில் கத்தரிக்காயை போட்டு நன்றாக
வதக்கவும்.

அதன் பின்பு அதில் உப்பு, மஞ்சள்தூள்,
மிளகாய்த் தூள், கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு நன்றாக வதக்கிக்
கொண்டே அடுப்பிலிருந்து இறக்கவும்.

இறக்கிய பின்பு அதை சாதம்(சோறு),
ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா இவற்றில்
 ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கத்தரிக்காய்(நீளமாக மெல்லியதாக வெட்டியது),
நன்றாக வதக்கிக் கொண்டே அடுப்பிலிருந்து
இறக்கவும்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

பாதாம் அல்வா

பாதாம் அல்வா சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பும் சுவை
கூடிய அல்வா ஆகும் அத்துடன் இந்த
பாதாம் அல்வாவில் கார்போஹைட்ரேட்,
 மினரல், விற்றமின், கல்சியம், பொஸ்பரஸ்
ஆகிய சத்துகள் நிறைந்து உள்ளது.

தேவையான பொருட்கள் 
பாதாம் பருப்பு - 100 கிராம்
சீனி(சர்க்கரை) - 200 கிராம்
நெய் - 100 மில்லி லிட்டர்
பால் - 200 மில்லி லிட்டர்
தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் பாதாம் பருப்பை
தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.

ஊறிய பருப்பின் தண்ணீரை வடித்து
விட்டு பருப்பின் தோலை நீக்கவும்.

தோல் நீக்கிய பருப்பினை பால் விட்டு
நன்றாக அரைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அது
சூடாகியதும் அதில் சீனி, தண்ணீர்
கலந்து பாகு காய்ச்சவும்.

காய்ச்சிய பாகுடன் அரைத்த பாதாம்
 கலவையை கலக்கவும். கலக்கியவற்
றை நன்றாக (கட்டிபாடாமல்) கிளறவும்.

இக்கலவை ஒட்டும் பதத்தை அடைந்ததும்
இக்கலவையில் நெய்யை சிறிதுசிறிதாக
 விட்டு கிளறவும்.

கிளறிய பின்பு இக்கலவை பாத்திரத்தில்
ஒட்டாமல் திரண்டு வரும் போது அப்
பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு தட்டில் எல்லா பக்கமும் கொஞ்சம்
நெய் தடவி அதன் மேல் பாதாம் கலவையை
போட்டு நன்றாக பரப்பவும் (ஓரளவு
உயரமாகவும் மட்டமாக தட்டவும்).

பரப்பிய பாதாம் அல்வாவை வில்லைகளாக
வெட்டவும்.

ஆறியதும் வெட்டிய வில்லைகளை ஒரு
 தட்டில் வைத்து பரிமாறவும்.



எச்சரிக்கை 
சர்க்கரை நேயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ஊறிய பருப்பின் தண்ணீரை வடித்துவிட்டு
பருப்பின் தோலை நீக்கவும்,
தோல் நீக்கிய பருப்பினை பால் விட்டு நன்றாக
அரைக்கவும்.


மாற்று முறை 
தண்ணீருக்கு பதிலாக பாலில் பாதாம்
பருப்பை ஊற விடலாம்.

உளுத்தங்களி


இலங்கையில் பூப்பெய்தும் பெண்
குழந்தைகளுக்கு தினமும் உளுத்தங்களி
சாப்பிட கொடுப்பது வழக்கம் உளுத்தங்
களியில் காபோவைதரேட், கொழுப்பு,
பொட்டாசியம், பொஸ்பரஸ், கல்சியம்,
விற்றமின் ஆகிய பலசத்துகள் அடங்கி
யுள்ளது. அத்துடன் உளுத்தங்களியை
கொடுப்பதால் அவர்களின் இடுப்பெலும்பு
வலுவாகும்.


தேவையான பொருட்கள்
வாசனை வரும்படி வறுத்தசிகப்பு அரிசிமா- 2 சுண்டு
தேங்காய் பால்- ஒன்று
சீனி (சர்க்கரை) - முக்கால் சுண்டு
ஏலக்காய்த்தூள்  - 5 கிராம்
வாசனை வரும்படி வறுத்த உளுத்தம்மா - ஒரு சுண்டு
வறுத்த பாசிப்பருப்புமா (பயறு) - அரை சுண்டு

செய்முறை

1.அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
   தேங்காய்பால், சீனி(சர்க்கரை)ஆகிய
    வற்றைபோட்டு நன்றாக காய்ச்சவும்.

2.அதன்பின்பு அதில் அரிசிமா, உளுத்தம்மா,
    பயறு (பயித்தம்மா) ஆகியவற்றை போட்டு
    அடிப்பிடிக்காமலும் கட்டிபடாமலும் நன்றாக
    கிண்டவும் (களி பதத்திற்கு).

3,அதன் பின்பு ஏலக்காய்த்தூள் போட்டு அதை
   நன்றாக கிண்டவும்.

4.கிண்டிய களி தாட்சியில் ஒட்டாமல் திரளும்
   பதத்தை அடைந்ததும் தாட்சியை அடுப்பில் 
  இருந்து இறக்கி களியை ஒரு பாத்திரத்தில் 
  போடவும். அதன் பின்பு அதை பரிமாறவும்.



குறிப்பு 
அரிசிமா, உளுத்தம்மா, பயறு (பயித்தம்மா)
ஆகியவற்றைபோட்டு அடிப்பிடிக்காமலும்
கட்டிபடாமலும் நன்றாக கிண்டவும்
(களிபதத்திற்கு), கிண்டிய களி தாட்சியில்
ஒட்டாமல் திரளும் பதத்தை அடைந்ததும்
தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கி களியை
ஒரு பாத்திரத்தில் போடவும்.

புதுவருட வாழ்த்துக்கள்

New Year Flower Scraps, Graphics, Comments for Orkut, Myspace, Facebook

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

Donnerstag, 30. Dezember 2010

மஞ்சள் நீராட்டு புட்டு

இலங்கையில் உள்ள பெண்குழந்தைகள்
பூப்பெய்தும் போது தினமும் மஞ்சள்
நீராட்டு புட்டை சாப்பிட கொடுப்பது
வழக்கம் அத்துடன் இப்புட்டை செய்து
தலையை சுற்றியும் தீட்டு கழிப்பதும்
 வழக்கம். இப் புட்டில்கார்போஹைட்ரேட்,
கொழுப்பு, பொட்டாசியம், பொஸ்பரஸ்,
கல்சியம், விற்ற மின் A B1, B2, B3, B4, B5,
 B9, B11 ஆகிய பல சத்துகள்
அடங்கியுள்ளது.


தேவையான பொருட்கள் 
பச்சரிசி - 500 கிராம்
வெல்லம் - 500 கிராம்
தண்ணீர் - 300 மி. லிட்டர்
தேங்காய் - ஒன்று
ஏலக்காய் - 5 கிராம்
உளுத்தம்மா - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
கொதிதண்ணீர் - தேவையானளவு
நெய் - 250 கிராம்


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை
நீரில் கழுவி சுத்தம் செய்து
அதில் உள்ள நீரை முழுவதும்
 வடித்து விடவும்.

அதன் பின்பு ஈரமான அரிசியை
கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
(அரைக்கும் மெஷினில் கொடுத்தும்
அரைக்கலாம்).

அரைத்த ஈரமான(பச்சை)மாவினை
தூய்மையான வெள்ளைத்துணியில்
கட்டி இட்லி தட்டில் வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் இட்லி பாத்திரத்தை
 வைத்து அதனுள் பாத்திரத்தின் முக்கால்
அளவு தண்ணீர் விட்டு அதன் மேல் இட்லி
தட்டை வைத்து ஆவியில் வேகவிடவும்.

மா வெந்தவுடன் காய்ந்து இருக்கும்
(ட்ரையாக இருக்கும்). அதன் பின்பு வெந்த
மாவில் உப்பு, உளுத்தம்மா, கொதி தண்ணீர்
சேர்த்து அதை புட்டு பதத்திற்கு குழைக்கவும்
(சிறு சிறு உருண்டைகளாக).

குழைத்தமாவை நீத்து பெட்டியில் அல்லது
புட்டுகுழலில் (ஸ்டீமரில்) வைத்து நீராவியில்
அவிக்கவும்.

புட்டு அவிந்ததும் அதை இறக்கி ஒரு
பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்
(சூட்டுடன்).

ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை
ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில்
தேங்காயை துருவி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு
அதனுடன் தண்ணீர் விட்டு அதை நன்றாக
கரைக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
அது சூடானதும் அதில் கரைத்த வெல்லத்தை
ஊற்றி பிசுக்கு பத பாகு காய்ச்சவும்.

பிசுக்கு பத பாகு பதம் வந்தவுடன் அந்த பாகில்
தேங்காய்துருவல், ஊறியகடலைப்பருப்பு,
ஏலக்காய்த்தூள் போட்டு கிளறவும்.

தேங்காய்துருவலில் உள்ள தண்ணீர் வற்றி
மறுபடியும் பிசுக்கு பதம் வந்தவுடன் பாகை
இறக்கவும்.

அதன்பின்பு வெந்தபுட்டுடன் நெய் விட்டு
அதனுடன் காய்ச்சிய பாகை சேர்த்து கிளறவும்.

இப்போது மஞ்சள் நீராட்டு புட்டு தயாராகி விட்டது.
 பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு பரிமாறவும்.



 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
வெந்தமாவில் உப்பு, உளுத்தம்மா, கொதிதண்ணீர்
சேர்த்து புட்டுபதத்திற்கு குழைக்கவும்(சிறுசிறு
உருண்டைகளாக).
அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அது
 சூடானதும் அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி
பிசுக்கு பத பாகு காய்ச்சவும்


 மாற்று முறை 
குழைத்தமாவை நீத்து பெட்டியில் அல்லது
புட்டுகுழலில் (ஸ்டீமரில்) வைத்து நீராவியில்
அவிக்கவும்.

எச்சரிக்கை 
சர்க்கரை நோயுள்ள குழந்தைகளுக்கும்,
இருதயநோயுள்ள குழந்தைகளுக்கும்,
வைத்தியரின் ஆலோசனைப்படி பரிமாறவும்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

Mittwoch, 29. Dezember 2010

பயித்தம் லட்டு

பயத்தம்லட்டு சுவையானதும் செய்வதற்கு
இலகுவானதும் சத்துக்கள் நிறைந்ததும்
வயதானவர்களுக்கும் மிக மிக எளிதாக
ஜீரணமாககூடியதுமான ஓர் இனிப்பு வகை
யாகும்.

தேவையான பொருட்கள் 
பாசிப்பயறு (பயத்தம்பருப்பு) - 500 கிராம்
சர்க்கரை (சீனி) - 500 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு (கஜு) - தேவையானளவு
நெய் - 100 கிராம்
உப்பு - சிறிதளவு

செய்முறை 

அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதை சூடாக்கவும். சூடாக்கிய
தாட்சியில்(வாணலியில்)பாசிப்பயற்றை
(பயித்தம்பருப்பை) போட்டு வாசனை
வரும் வரை வறுக்கவும்.

வறுத்த பாசிப்பயற்றை(பயித்தம்பருப்பை)
வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.

ஆறவைத்த பாசிப்பயற்றை(பயித்தம்பருப்பை) கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு மாவாக்கவும்.

அடுப்பிலுள்ள தாட்சியில்(வாணலியில்)
கொஞ்சம் நெய் விட்டு சூடாக்கவும்.

அதில் உடைத்த முந்திரிப்பருப்பை(கஜு)
போட்டு பொரிக்கவும்.

பொரித்த முந்திரிப்பருப்பை(கஜு) ஒரு பாத்திரத்தில்
போடவும்.

அதன் பின்பு மிகுதி நெய்யை உருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்த பாசிப்பயறுமா(வறுத்த
பயித்தம்பருப்பு மா), சர்க்கரை(சீனி), ஏலக்காய்த்தூள்,
பொரித்த முந்திரிப்பருப்பை(கஜு), உருக்கியநெய்,
உப்பு,ஆகியவற்றை சேர்த்து சூட்டுடன்
உருண்டைகளாக பிடிக்கவும்.

உருண்டைகளை பிடித்ததும் பயித்தம் லட்டு
 தயாராகிவிடும்.

பயத்தம் லட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

அதன் பின்பு அதை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

மாற்று முறை 
முந்திரிப்பருப்புக்கு(கஜு) பதிலாக வேர்கடலையை
(கச்சான்) வறுத்து இரண்டாக உடைத்து
 போடலாம்.

எச்சரிக்கை
 இருதய நோயாளர் ,சர்க்கரை நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
 சூடாக்கிய தாட்சியில் (வாணலியில்)
பாசிப்பயற்றை (பயித்தம்பருப்பை) போட்டு
வாசனை வரும் வரை வறுக்கவும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்

  

Dienstag, 28. Dezember 2010

கணவாய் கறி-1

தேவையான பொருட்கள் 
சுத்தமாக்கிய கணவாய்- 1  கிலோகிராம்
மிளகாய்த்தூள் - தேவையானளவு
உப்பு -தேவையானளவு
பொடிபொடியாகநறுக்கியவெங்காயம் -1
பெருஞ்சீரகம்(சோம்பு) -கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பொடிபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
பொடிபொடியாக நறுக்கியஉள்ளி(பூண்டு)-6
பால் - தேவையானளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
தேசிக்காய்ப்புளி - தேவையானளவு
எண்ணெய்- தேவையானளவு


செய்முறை 
சுத்தமாக்கி கழுவிய கணவாயை
விரும்பியளவில் ஓரளவு சிறிய
துண்டுகளாக வெட்டவும்

வெட்டியவற்றை ஒரு பாத்திரத்தில்
போடவும்

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து சூடாக்கவும்

தாட்சி சூடானதும் அதில் சிறிதளவு
எண்ணையை விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு
போட்டு பொரிய விடவும்

அதன் பின்னர் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு),பொடிபொடியாகநறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
ஓரளவு பொரியவிடவும்.

ஓரளவு பொரிந்த பின்னர் அதனுடன்
பொடிபொடியாக நறுக்கிய பச்சை
மிளகாயை போட்டு தாளிக்கவும் .

தாளித்த பின்னர் தாளித்தவற்றை
ஒரு பாத்திரத்தில் எடுத்து
வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் உள்ள
தாட்சியில் சுத்தப்படுத்தி கழுவி
வெட்டிய கணவாயை போடவும்

அதன்பின்னர் கணவாய் போட்ட
தாட்சியை முடி அவியவிடவும்

கணவாயில் உள்ள தண்ணீர்
எல்லாம் வற்றி கணவாய்
ஒரளவு அவிந்த  பின்னர்
அதனுடன்மிளகாய்த்தூள்,
பொடிபொடியாக நறுக்கிய
உள்ளி(பூண்டு) சிறிதளவு
எண்ணெய் ஆகியவற்றை
போட்டு பிரட்டி மிளகாய்த்
தூளின் பச்சை வாடையில்
லாமல்  போகும்வரை பொரிய
விடவும்

பொரிந்த  பின்னர் உப்பு,
ஆகியவற்றை போட்டு அவிய
விடவும்

அவிந்த பின்னர் அதனுடன் பாலை
விட்டு கொதிக்கவிடவும்

கொதித்தபின்னர் அதனுடன்
கறிவேப்பிலையை போட்டு
சிறிது நேரம் அவிய விட்டு
அடுப்பில் இருந்து இறக்கவும் .

அதன் பின்னர் சுத்தமான
சுவையான சத்தான கணவாய்
கறி தயாராகிவிடும்

பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன்
சுத்தமான சுவையான சத்தான
கணவாய் கறியை வைத்து
பரிமாறாவும் 

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

Montag, 27. Dezember 2010

வாழைப்பழ சிப்ஸ்

வாழைப்பழ சிப்ஸ் மிக மிக சுவையானதும்
சத்துக்கள் நிறைந்ததுமாகும்.


தேவையானபொருட்கள் 
வாழைப்பழம் - 2
முட்டை - ஒன்று
மைதா மா - ஒரு கப்
சர்க்கரை (சீனி) - தேவையானளவு
உப்பு - ஒரு சிட்டிகை
மஞ்சள் கலர் - சிறிது(விருப்பபட்டால்)
எண்ணெய் - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு

செய்முறை 

1.வாழைப்பழத்தை பஜ்ஜிக்கு நறுக்குவது
  போல் நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கி
   கொள்ளவும்.

2 .அதன் பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில்
    போடவும்

3.அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதாமா,
    முட்டை, சர்க்கரை (சீனி), உப்பு, மஞ்சள் கலர்
    ஆகியவற்றையும் போட்டு தண்ணீர் ஊற்றி
    கரைத்துக் கொள்ளவும்.

4.அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி
  யை) வைத்து சூடாக்கவும்.

5.அது சூடாகியதும் எண்ணெய் ஊற்றி நன்றாக
   சூடாக்கிய பின்பு அதில் வாழைப்பழத்தை
    மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து
   எடுக்கவும்.

6.பின்பு எண்ணெயை வடித்து விட்டு ஓரு தட்டில்
வைத்து பரிமாறவும்.



மாற்று முறை - 
தேங்காய் பாலும் ஊற்றலாம், முட்டை
இல்லாமலும் இதை செய்யலாம்,
மீதியிருக்கும் மாவினை வீணாக்காமல்
சின்ன ஸ்பூனால் எடுத்து அதில்
எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுத்து
சாப்பிடலாம்.

அவக்காடோ டிப்ஸ்

அவகோடா சத்தானதும் சுவையானது
மாகும்.ஆகவே அப்படிப்பட்ட அவ
கோடாவில்  டிப் மிக மிக சத்தானதும்
சுவையானதாகும்.அத்துடன் அவகோடா
இரத்தத்தில் L.D.L கொலஸ்ட்ரோல்
அளவைக் குறைக்க உதவும்.


தேவையான பொருட்கள் 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
உள்ளி (பூண்டு) - ஒரு பல்
அவகோடா (பட்டர் புருட்) - ஒன்று
கொத்தமல்லி தழை - 2 இணுக்கு
உப்பு - 2 சிட்டிகை
எலுமிச்சைப்பழம் - அரை பாதி

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,
தக்காளி, உள்ளி (பூண்டு), மிளகாய்
ஆகியவறை மிகவும் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அவகோடா 2
ஆக கட் செய்து அதன் உள் இருக்கும்
 பகுதியை ஸ்பூனால் எடுக்கவும்.

அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

நறுக்கிவைத்தவற்றை அதனுடன்
போட்டு நன்கு கலக்கி உப்பு, எலுமிச்சை
 ஜுஸ் ஊற்றவும்

அதன் பின்னர் ஒரு தட்டில்  சிப்ஸ் வைத்து
அதனுடன் ஒரு சிறிய கிண்ணத்தில்
சுத்தமான சுவையான அவக்காடோ டிப்ஸ்
வைத்து பரிமாறவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ஒரு பாத்திரத்தில் அவகோடா 2 ஆக
கட் செய்து அதன் உள் இருக்கும்
பகுதியை ஸ்பூனால் எடுக்கவும்.

அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 26. Dezember 2010

சிக்கின் பிரியாணி

சிக்கன் பிரியாணி சத்தானதும்
சுவையானதும் ஆகும்.


தேவையான பொருட்கள் 
கோழி (சிறு துண்டுகள்)- ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 6
தக்காளி - 6
பச்சை மிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 10
ஏலக்காய் - 15
அன்னாசி மொக்கு - 2
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எலுமிச்சை - ஒன்று
புதினா - ஒரு கப்
கொத்தமல்லி - ஒரு கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
ரம்பை இலை - தேவையானளவு
கலர் பொடி(சிகப்பு) - சிறிதளவு (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு
தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற
வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் வெங்காயம்,
 தக்காளி இரண்டையும் மெல்லிய
 நீளவாக்கில் நறுக்கி வைத்து
கொள்ளவும்.

இன்னொரு பாத்திரத்தில் பச்சை
மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக்
கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில்
புதினா, கொத்தமல்லி தழைகளை
கழுவி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில்)கறியினை
சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு
கழுவி அதில் தயிர் பாதி இஞ்சி,
பூண்டு விழுது மிளகாய் தூள் போட்டு
 கிளறி வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அது
சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசி மொக்கு போட்டு
பொரியவிடவும்.

அதன் பின்பு அதில் நறுக்கின வெங்காயம்
போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின
பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம்
வதக்கவும்.

பிறகு நறுக்கின வெங்காயம் தக்காளி,
கறியை போட்டு வதக்கவும். (தக்காளி
நன்கு வதக்கவேண்டும்).

புதினா கொத்தமல்லி போட்டு வதக்க
வேண்டும்.

இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு
மசாலா கறி துண்டங்களை சேரும்படி
நன்கு பிரட்டி விடவும்.

அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா
சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.

பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி
உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி
மூடி விடவும்.

சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து
வாசனை வந்ததும் அரிசியை களைந்து
போட்டுக் கிளறி விடவும்.

சகலதும் அவிந்ததும் சிக்கன் பிரியாணி
தயாராகிவிடும். அதன் பின்பு அதை
பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர்
ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில்)கறியினை சுத்தம்
செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில்
தயிர் பாதி இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்
தூள், போட்டு கிளறி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை
மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

டயப்பிட்டீஸ் தோசை

சர்க்கரை நோயளருக்கு மிக மிக சிறந்த
 தோசை டயாபெட்டீஸ் தோசை ஆகும்.
டயாபெட்டீஸ் தோசையில் சர்க்கரை
நோயளருக்கு தேவையான சத்துக்கள்
யாவும் நிறைந்ததுள்ளது.


தேவையான பொருட்கள் 

ஆட்டாமா (கோதுமைமா) - 250கிராம்
கேழ்வரகுமா - 100கிராம்
அரிசி மா - 50கிராம்
ரவை - 50கிராம்
குறுனியாக வெட்டியசின்ன வெங்காயம்- 150கிராம்
சின்ன சீரகம்( சீரகம்) - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
குறுனியாக வெட்டியபச்சைமிளகாய்- சிறிதளவு
குறுனியாக வெட்டியகறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி(மல்லி)இலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையானளவு
மிளகாய்த்தூள் - தேவையானளவு(விரும்பினால்)


செய்முறை 

ஆட்டாமா(கோதுமைமா), கேழ்வரகுமா,
அரிசிமா, ரவை ஆகியவற்றை தண்ணீர்
விட்டு தோசை மா பதத்திற்கு கரைத்து
கொள்ளவும்.

கலக்கி வைத்துள்ள மாவுடன் சின்ன
 வெங்காயம், சின்ன சீரகம், உப்பு,
கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,
கொத்தமல்லி இலை, மிளகாய்த்தூள்
இவையாவற்றையும் கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து
அது சூடானதும் தோசைகல்லில்
 எண்ணெய் தடவி அதில் கலக்கி

வைத்த மாவை மெல்லிய தோசையாக
ஊற்றவும்.

ஊற்றிய தோசை நன்கு சிவந்து மொறு
மொறுப்பாக விடவும்.

தோசை மொறுமொறு பாகியதும்
டயாபெட்டீஸ் தோசை தயாராகிவிடும்.

அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு டயாபெட்டீஸ் தோசையை
வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
 ஆட்டாமா(கோதுமைமா), கேழ்வரகுமா,
அரிசிமா, ரவை ஆகியவற்றை தண்ணீர்
விட்டு தோசைமா பதத்திற்கு கரைத்து
கொள்ளவும்.
ஊற்றிய தோசை நன்கு சிவந்து மொறு
மொறுப்பாக விடவும்.


எச்சரிக்கை 
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 25. Dezember 2010

இஞ்சி பகோடா

நீங்கள் சாப்பிட்ட உணவுகளை மிகவும்
எளிதில் ஜீரணமாக்கும். அத்துடன்
சுவையானதும், சத்துகள் நிறைந்ததுமான
ஓர் சிற்றுண்டியே இஞ்சி பக்கோடா ஆகும்.


தேவையானபொருட்கள் 
கடலைமா - 150 கிராம்
அரிசிமா - 25 கிராம்
இஞ்சி - 50 கிராம்
பச்சைமிளகாய் - 50 கிராம்
பட்டர்  - 25 கிராம்
அப்பசோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
கறிவேப்பிலை - தேவையானளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - அரை தேக்கரண்டி
தண்ணீர் - தேவையானளவு

செய்முறை 

பாத்திரத்தில் இஞ்சி, பச்சை மிளகாய்
ஆகியவற்றை நன்றாக இடித்து வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் அரிசிமா, கடலைமா,
அப்பசோடா, உப்பு, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம்
(சோம்பு), பட்டர் , தண்ணீர், இடித்த(பச்சைமிளகாய்
, இஞ்சி) கலவை ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக
பிசையவும்.

அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அது
சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி அதை
சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கெட்டியாக பிசைந்து
வைத்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி
போட்டு பொரிய விடவும்.

உருண்டைகள் நன்கு பொரிந்ததும் அதை எடுத்து
ஒரு பாத்திரத்தில் வைத்து பரிமாறவும்.



மாற்று முறை - 
 பட்டர் அல்லது மாஜரீன்(மாகரின்)விற்கு
பதிலாக டால்டாபாவிக்கலாம்.


 கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக
இடித்து வைக்கவும்.

அரிசிமா, கடலைமா, அப்பசோடா, உப்பு,
கறிவேப்பிலை, பெருஞ்சீரகம்(சோம்பு),
பட்டர் அல்லது மாஜரீன்(மாகரின்)அல்லது
டால்டா, தண்ணீர், இடித்த(பச்சைமிளகாய்,
இஞ்சி) கலவை ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக
பிசையவும்.

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்


சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 24. Dezember 2010

மாலுப்பாண்

இலங்கையில் உள்ள சிங்கள மக்களால்
விரும்பி உண்ணப்படும் ஓர் சிற்றுண்டி
மாலுப்பாண் ஆகும். இதில் காபோவைதரேட், 
மினரல், புரதம், விற்றமின் ஆகிய சத்துகள்
அடங்கியுள்ளது அத்துடன் மாலுப்பாண்
 மிக மிக சுவையானது ஆகும்


தேவையான பொருட்கள் 

மா - 3 பேணி
ஈஸ்ட் - 3 தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
பட்டர் - அரை தேக்கரண்டி
முட்டை (மஞ்சள் கரு) - 1
உப்பு - தேவையானளவு
மீன் டின் பிரட்டல் கறி - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு


செய்முறை 

1 )ஒரு கண்ணாடிக் குவளையில் ஈஸ்ட், சீனி
    இரண்டினையும் போட்டு மூன்று தேக்கரண்டி
    இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக்
    கொள்ளவும்
    (2 நிமிடங்களுக்குள் இக்கலவை பொங்கி வரும்).

2 )இக்கலவை பொங்கி வந்த பின்பு இதில் மா,
    உப்பு, பட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக 
    குழைத்துக் கொள்ளுங்கள்.

3 )இதை கொஞ்ச நேரம் மூடியினால் மூடி வைத்துக் 
    கொள்ளுங்கள்.

4 )பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச்
    செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு 
   உருண்டையினுள்ளும் மோதகத்தில் வைப்பது
    போல் மீன் டின் பிரட்டல் கறியினை போட்டு 
    மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள்.

5 )பின்னர் எண்ணெய் தடவிய தட்டில் எல்லா 
    உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள்.

6 )வேகும் போது பாணின் மேற்பக்கம் 
    பொன்னிறமாக வருவதற்கு நன்றாக 
   அடித்த முட்டையின் மஞ்சள் கருவை ஒரு 
   தூரிகையினால் (Brush) தொட்டு பூசிவிடுங்கள்.

7 )200 டிகிரி Cயில் 15 நிமிடங்கள் 150 டிகிரி C யில் 
    20 நிமிடங்கள் அவனில் பேக் பண்ணி 
    கொள்ளுங்கள். நன்றாக பேக் பண்ணியதும் 
    அதை பரிமாறவும்.

குறிப்பு 

. எச்சரிக்கை -
 சர்க்கரைநோயாளர் வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும். 

கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
ஈஸ்ட் சீனி இரண்டினையும் ஒரு 
கண்ணாடிக் குவளையில் போட்டு 
மூன்று தேக்கரண்டி இளம் சூடான
 தண்ணீர் விட்டு கரைத்துக் 
கொள்ளவும். (2 நிமிடங்களுக்குள் 
இக்கலவை பொங்கி வரும்)

கிறிஸ்மஸ்(நத்தார்)வாழ்த்துக்கள்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

Donnerstag, 23. Dezember 2010

கத்தரிக்காய் பிரட்டல் கறி

இலங்கை மக்கள் பொரித்த கத்தரிக்காய்
கறியை மிகவும் விரும்பி உண்பார்கள்.
கத்தரிக்காய் கறி இலங்கையில் மிகவும்
பிரச்சித்தம் பெற்ற ஒரு உணவு பதார்த்தம்.


தேவையானபொருட்கள்   
கத்தரிக்காய் - 250 கிராம்
வினிகர் - 2 மேசைக்கரண்டி
கடுகு (அரைத்தது) - 2 தேக்கரண்டி
மிளகு (அரைத்தது) - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை 

கத்தரிக்காயை சுத்தம் செய்து இரண்டு
இஞ்சிற்கு நீளவாக்கில் வெட்டி எடுத்துக்
 கொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து சூடாக்கவும்.

சட்டி சூடானதும் சட்டியில் எண்ணெயை
விட்டு சூடாக்கி கத்தரிக்காயை பொன்னிறமாக
பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

பொரித்த கத்தரிக்காயில் இருந்து எண்ணெயை
நன்றாக வடிக்கவும்.

 அதன் பின்பு அடுப்பில் இன்னொரு சட்டி
வைத்து சூடாக்கவும்.

சட்டி சூடானதும் சட்டியில் வினிகர், கடுகு
(அரைத்தது), மிளகு(அரைத்தது), மஞ்சள்தூள்,
உப்பு ஆகிய பொருட்களையும் சேர்த்து
கொதிநிலைக்கு வரும் வரை சூடாக்கவும்.

கொதித்த கலவையில் பொரித்த கத்தரிக்காயை
கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடங்கள் அடுப்பில்
 வைத்திருக்கவும்.

அதன் பின்பு சுவையான கத்தரிக்காய்கறி
தயாராகிவிடும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
சூடான எண்ணெயை கவனமாக
பாவிக்கவும்.


எச்சரிக்கை 
கத்தரிக்காய் அலர்ஜி உடையவர்களும்,
இருதய நோயாளரும் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

ஜஸ் அப்பிள் பாதாம்கீர்

உடலிலுள்ள அதிகப்படியான சூட்டைத்
தணிக்கும் ஸ்பெஷல் கீர் அத்துடன்
இதில் பல வகையான சத்துக்கள்
அடங்கியுள்ளது


தேவையான பொருட்கள் 
நுங்கு (ஐஸ் ஆப்பிள்) - 15
பால் - 200 மில்லி லீற்றர்
அரைத்தமுந்திரிப்பருப்பு (கஜு)- 50 கிராம்
ஏலக்காய் - 2
உப்பு - 2 சிட்டிகை
சீனி(சர்க்கரை) - தேவையானளவு
பாதாம் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

செய்முறை 

ஐஸ் ஆப்பிளை (நுங்கை) பொடி
பொடியாக வெட்டவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து
அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

காய்ச்சிய பாலில் அரைத்த
முந்திரிப்பருப்பு(கஜு),சீனி(சர்க்கரை)
ஆகியவற்றை கலக்கவும்.

கலந்த பால் பாத்திரத்தை அடுப்பில்
வைத்து நன்றாக கொதிக்க விடவும் .

பால் நன்றாக கொதித்ததும் அடுப்பி
லிருந்து பால் பாத்திரத்தினை
இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய பாலை
ஆறவிடவும்.

பால் ஆறிய பின்பு அதனுடன் பொடி
பொடியாக வெட்டிய ஐஸ் ஆப்பிள்
(நுங்கு), ஏலக்காய், உப்பு, பாதாம்
எசன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.

பின்பு குளிர்சாதன பெட்டியில் வைத்து
குளிர வைக்கவும். இக்கலவை தேவை
யானளவு குளிர்ந்ததும் பரிமாறவும்.

இக்கலவையானது தேவையான அளவு
குளிர்ந்ததும் பரிமாறவும்.

 எச்சரிக்கை 
சர்க்கரைநோயாளர், ஐஸ் ஆப்பிள்(நுங்கு)
அலர்ஜி உள்ளவர்கள், இதயநோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ஐஸ் ஆப்பிளை (நுங்கை)பொடி
பொடியாக வெட்டவும்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

Mittwoch, 22. Dezember 2010

வெஜிட்டபிள் குட்டி தோசை

சிறுவர்களுக்கு(குட்டீஸ்களுக்கு) மிக மிக
பிடித்ததும் சத்துகள் நிறைந்ததுமான ஓர்
சிற்றுண்டியே வெஜிடபிள் குட்டி தோசை
ஆகும். ஆகவே இதை குட்டீஸ்க்கு செய்து
கொடுக்கவும், இதை குட்டீஸ் விரும்பி
சாப்பிடுவார்கள்.


தேவையான பொருட்கள்
தோசை மா - 2 கப்
துருவியகரட் - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கியபீன்ஸ் - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கியவெங்காயம் - 1மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கியதக்காளி - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கியகறிவேப்பிலை  - அரை தேக்கரண்டி
உரித்தபட்டாணி - 1 மேசைக்கரண்டி
சோம்பு (சீரகம்) - 1தேக்கரண்டி
கடுகு -  தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு


செய்முறை

அடுப்பில் வாணலியை(தாட்சியை)
வைத்து சூடாக்கவும்.

அது சூடானதும் அதில் எண்ணைய்
விட்டு கொதிக்கவிடவும்

எண்ணைய் கொதித்ததும் அதில்
கடுகை போட்டு வெடிக்க விடவும்.

கடுகு வெடித்ததும் சீரகத்தை(சோம்பு)
போடவும்.

அது ஓரளவு பொரிந்ததும் அதில்
வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி,
கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை
போட்டு வதக்கவும்.

வதக்கிய பின்பு தாட்சியை அடுப்பி
லிருந்து இறக்கவும்.

வதக்கியவற்றை தோசை மாவில்
 கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து
அது சூடானதும் அதில் கொஞ்சம்
எண்ணெய் தடவி அதன் மேல் கலக்கி
வைத்திருக்கும் தோசை மாவினை ஒரு
சிறு கரண்டியால் எடுத்து சிறிய சிறிய
வடிவங்களில் தோசையாக(சிறுவர்
களுக்கு பிடித்த வடிவங்களில்) ஊற்றவும்.

அது நன்கு சிவக்க வெந்ததும் அதை
திருப்பி போட்டு எடுக்கவும். அத்
தோசைகளை சிறுவர்களுக்கு
சூட்டுடன் கொடுக்கவும்.



கவனிக்க வேண்டிய விஷயங்கள்
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து
அது சூடானதும் அதில் கொஞ்சம்
எண்ணெய் தடவி அதன் மேல் கலக்கி
வைத்திருக்கும் தோசை மாவினை
சிறு கரண்டியால் எடுத்து சிறிய சிறிய
வடிவங்களில் தோசையாக
(சிறுவர்களுக்கு பிடித்த வடிவங்களில்)
ஊற்றவும்.

கிரேப்ஸ்(திராட்சைப்பழ) ஜுஸ்

கிரேப்ஸ்(திராட்சைப்பழ) ஜுஸ் மிக
மிக சுவையானதும் விற்றமின்,
இரும்பு, பொஸ்பரஸ் போன்ற பல
சத்துகள் அடங்கியதும் அத்துடன்
கூடிய நாட்கள் வைத்து பாவிக்க
 கூடியதுமாகும்.

தேவையான பொருட்கள் 
கிரேப்ஸ் (திராட்சைப்பழம்) - 200 கிராம்
சீனி - 200 கிராம்
சித்திரிக்கமிலம் - 25 கிராம்
தண்ணீர் - 3 டம்ளர்


செய்முறை 

கிரேப்ஸை(திராட்சைப்பழத்தை) கழுவி
ஒரு பாத்திரத்திலிடவும்.

அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு
அடுப்பில் வைத்து அவியவிடவும்.

பழங்கள் நன்றாக அவிந்ததும்
அதை நன்றாக கடையவும்.

கடைந்தபின் ஓகன்றி துணியில்
ஊற்றி பிழிந்து சாறை மட்டும்
எடுக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் பாத்திரத்தை
வைத்து அதில் சீனியை போட்டு
ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு
காய்ச்சவும்.

சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக
கரைந்து பாகு நன்றாக கொதிக்க
தொடங்கியதும் கிரேப்ஸ் ஜுஸை
 (திராட்சை சாற்றை) கலந்து நன்றாக
காய்ச்சவும்.

நன்றாக காய்ச்சியதும் அந்த பாத்திரத்தை
அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.

பாகு ஓரளவு ஆறியதும் அதனுடன்
சித்திரிக்கமிலம் இட்டு நன்றாக கலந்து
ஆற விடவும்.

ஆறியதும் தொற்று நீக்கிய போத்தல்களில்
அடைத்து தேவையான போது அளவாக
எடுத்து தண்ணீர், ஐஸ் கட்டி ஆகியவற்றை
கலந்து அழகிய கிளாஸ்களில் ஊற்றி
பரிமாறவும்.



எச்சரிக்கை 
கிரேப்ஸ்(திராட்சைப்பழ)அலர்ஜி
உள்ளவர்களும், சர்க்கரை
நோயாளர்களும் வைத்தியரின்
ஆலோசனைப்படி பருகவும்.

 மாற்று முறை 
கிரேப்ஸை (திராட்சைப்பழத்தை)
அவிக்காமல் கிரைண்டரில் (மிக்ஸியில்)
போட்டு அடித்து சாறு எடுத்தும்
செய்யலாம்,
(ஓகன்றி துணியில் ஊற்றி பிழிந்து சாறை
மட்டும் எடுக்கவும்).

புதன்கிழமை வாழ்த்துக்கள்

Dienstag, 21. Dezember 2010

பிகடா

போர்த்துக்கல் நாட்டு மக்களால் மிகவும்
விரும்பி உண்ணப்படும் ஓர் உணவு வகை
பிகடா ஆகும் இதில் கார்போஹைட்ரேட்,
விற்றமின் (A,C), மினரல், பொட்டாசியம்,
பொஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்
படுகின்றன. இதை செய்வது இலகுவானது.
அத்துடன் சுவையான ஓர் உணவு வகையே
பிகடா ஆகும்.

தேவையானபொருட்கள் 
நன்கு பழுத்த வாழைப்பழ கூழ் - 2 கப்
சீனி(சர்க்கரை) - 2 கப்
பட்டர் - 1மேசைக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - 1மேசைக்கரண்டி
தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழசாறு) - 2 பழம்
பிளம்ஸ் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு(கஜூ) - சிறிதளவு

செய்முறை 

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை
 வைத்து அதில் பட்டரை போட்டு
உருக்கவும்.

உருக்கிய பட்டருடன் கார்ன்ஃப்ளாரை
போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.

வறுத்தவற்றுடன் வாழைப்பழம்,
சீனி(சர்க்கரை) ஆகியவற்றை சேர்த்து
அடிப்பிடிக்காமல் கிளறவும்.

நன்கு கிளறிய பின்பு இதனுடன்
தேசிக்காய்சாறு (எலும்பிச்சைபழசாறு)
பிழிந்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல்
வரும் பதத்திற்கு கிளறுங்கள்.

ஒரு தட்டின் எல்லா பக்கங்களுக்கும்
நெய் தடவவும்.

இக்கலவை தயாரானதும் அதை நெய்
தடவிய தட்டில் ஊற்றி ஆறவிடவும்.

இக்கலவை ஆறியதும் பிளம்ஸ்,
முந்திரிப்பருப்பு (கஜூ) தூவி விருப்பம்
போல வெட்டி பரிமாறவும்.

எச்சரிக்கை 
சர்க்கரை நோயாளர், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
நன்கு கிளறிய பின்பு இதனுடன்
தேசிக்காய்சாறு (எலும்பிச்சை பழசாறு)
பிழிந்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல்
வரும் பதத்திற்கு கிளறுங்கள்.

அப்பிள் புடிங்


அப்பிள் புடிங்கில் கார்போஹைட்ரேட்,
விற்றமின் ஏ, சி அதிகமாக காணப்படும்,
அப்பிள் புடிங் மிக மிக சுவையானதும்,
சத்துடையதும், வித்தியாசமானது இது
சர்க்கரைநோயாளர், இதயநோயாளர்
 உண்ணக்கூடிய ஒரு உணவு வகை ஆகும்.

தேவையான பொருட்கள் 
அப்பிள் - ஒன்று
சீனி(சர்க்கரை) - தேவையானளவு
அல்லது சுகர் ஃபிரீ பவுடர் - ஒரு சிறிய பாக்கெட்
சோளம்மா(கார்ன்ஃப்ளார் மா) - ஒரு மேசைக்கரண்டி
கலர் எசன்ஸ் - விருப்பத்திற்கேற்ப

செய்முறை 
அப்பிளை விரும்பியவாறு வெட்டி
இட்லி குக்கரில் வேகவைத்து அதன்
தோலை உரித்து கொள்ளவும்.

அதன் பின்பு அவித்து தோல் உரித்த
அப்பிளை ஏதேனும் புடிங் மோல்டில்
நன்றாக அடைக்கவும்.

மோல்டில் அடித்த அப்பிளை ஒரு
தட்டில் தலைகீழாக கவிழ்க்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சோளம்
மாவுடன் (கார்ன்ஃப்ளார் மாவுடன்)
கலர் எசன்ஸ்ஸை சேர்த்து கரைக்கவும்.

இக்கலவையுடன் சீனி (சர்க்கரை)
அல்லது சுகர் ஃபிரீ பவுடர் சேர்த்து
கலக்கவும்.

அதன் பின்பு கவிழ்த்து வைத்த அப்பிள்
மீது இக்கலவையை ஊற்றி ஃப்ரீட்ஜில்
வைக்கவும்.

அதன் பின்பு அரை மணி நேரம் கழித்து
எடுத்து பரிமாறவும்.

மாற்று முறை 
சீனிக்கு பதிலாக சுகர் ஃபிரீ பவுடர் -
ஒரு சிறிய பாக்கெட் பாவிக்கலாம்.

எச்சரிக்கை 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

Montag, 20. Dezember 2010

ஜில் ஜில் பாயாசம்


சத்தானதும்,சுவையானதும்,வெயில்
காலங்களுக்கு ஏற்றதுமான பாயாசம்
ஜில் ஜில் பாயாசம் ஆகும். இதன்
சுவையோ தனிச்சுவை ஆகவே இதை
செய்து சுவைத்து மகிழவும்.


தேவையானபொருட்கள் 
இளநீர்வழுக்கை (பொடியாக அரிந்தது) - ஒன்று + அரை கப்
நுங்கு(பொடியாக அரிந்தது) - அரை கப்
தேங்காய் பால்(தடிப்பானது) - ஒரு கப்
பால் டின்(கன்டென்ஸ்ட்மில்க்) - அரை டின்
இளநீர் - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
பால் - கால் கப்
முந்திரியகொட்டை (கஜூ) - 50 கிராம்
பிளம்ஸ் - 50 கிராம்


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் பால், இளநீர் வழுக்கை
(பொடியாக அரிந்தது), நுங்கு, (பொடியாக
அரிந்தது), தேங்காய்பால் (தடிப்பானது),
பால் டின்(கன்டென்ஸ்ட் மில்க்), இளநீர்,
ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து
கலக்கவும்.

கலக்கியவற்றை சிறிய கிண்ணங்களில்
ஊற்றி அதன் மேல் முந்திரிக்கொட்டை
(கஜூ), பிளம்ஸ் ஆகியவற்றை வைத்து
அலங்கரித்து பரிமாறவும்.


 எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

ஜில் ஜில் ஐஸ் ஆப்பிள் இளநீர்


ஜில் ஜில் ஐஸ் ஆப்பிள் இளநீர் மிக
மிக சுவையானது. வெயில்
காலங்களுக்கு ஏற்றதும், சத்து
ள்ளதும் ஆகும்.

தேவையானபொருட்கள் 
ஐஸ் ஆப்பிள் (நுங்கு) - 10
இளநீர் - 3
தேசிக்காய் (எலுமிச்சம் பழம்) - 2
நன்னாரி சிரப் (சர்பத்) - அரை கப்
தண்ணீர் - 2 டம்ளர்
ஐஸ் கட்டி - தேவையான அளவு

செய்முறை 
ஐஸ் ஆப்பிளை(நுங்கை) தோல் சீவி
கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு
ஒரு சுற்று சுற்றி அதை ஒரு பாத்திர
த்தில் வைக்கவும்.

இளநீரிரை சீவி வழுக்கையுடன்
சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி
 வைக்கவும்.

 தேசிக்காயை(எலுமிச்சம் பழுத்தை)
பிழிந்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில்
ஊற்றி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நுங்கு, இளநீர்,
எலுமிச்சம்பழசாறு (தேசிக்காய்சாறு),
தண்ணீர், நன்னாரி சிரப்(சர்பத்)
ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

கலக்கியவற்றை அழகிய கிளாஸ்களில்
 ஊற்றி ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு
பரிமாறவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள்
ஜஸ் ஆப்பிளை(நுங்கை) தோல் சீவி
கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு
ஒரு சுற்று சுற்றி அதை ஒரு பாத்திரத்தில்
வைக்கவும்,
இளநீரிரை சீவி வழுக்கையுடன் சேர்த்து
ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்

. எச்சரிக்கை
ஐஸ் ஆப்பிள்(நுங்கு) அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி பருகவும்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

Sonntag, 19. Dezember 2010

உடனடி உளுத்தம்மா தோசை

மிக விரைவில் செய்யகூடியதும்,
கார்போஹைட்ரேட், மினரல்,
உயிர்சத்துகள், கல்சியம் நிறைந்
ததும், குழந்தைகள் விரும்பி
உண்ணகூடியதுமான ஒர்
சிற்றுண்டி உடனடி உளுத்தம்
மாதோசை ஆகும்


தேவையான பொருட்கள் 
கோதுமைமா - 1கப்
வறுகாதஉளுத்தம்மா - 1கப்
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் கோதுமைமா, உளுத்தம்மா,
உப்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு
(தோசைமாபதம்) கட்டி இல்லாமல் நன்கு 
கரைக்கவும்.

அதன் பின்னர் தோசைக்கல்லை அடுப்பில்
 காயவைக்கவும்.

அது நன்கு சூடானதும் அதில் எண்ணெய்
 தடவவும்.

அதன் பின்பு அதில் மாவை ஊற்றி பரத்தி
விடவும்.

தோசை வெந்தவுடன் தோசையை திருப்பி
 விடவும்.

அதன் பின்பு தோசை வெந்ததும் எடுக்கவும்.

இந்த தோசைக்கு, சட்னி நன்றாக இருக்கும்.



கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
கோதுமைமா, உளுத்தம்மா, உப்பு
ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்
விட்டு தோசைமாவு பதம்
கட்டியில்லாமல் நன்கு
கரைக்கவும்.


எச்சரிக்கை 
உளுந்து அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
 உண்ணவும்.

குளுக்கோரஸ்

சிறுவர் முதல் பெரியவர் வரை
இலகுவாக உண்ண கூடியதும்
சுவையானதுமான இனிப்பு
குளுக்கோரஸ் ஆகும். அத்துடன்
இது இலங்கை மக்கள் மிக மிக
விரும்பி உண்ணும் இன்னொரு
இனிப்பு வகையாகும்.

தேவையான பொருட்கள் 
சீனி - 250 கிராம்
ஜெலற்றீன் - 25 கிராம்
லிக்விட் குளுக்கோஸ் - 75 கிராம்
சித்திரிக்கமிலம் - அரை தேக்கரண்டி(2 கிராம்)
எசன்ஸ்(விரும்பியது) - 5 துளிகள்
கலரிங் (விரும்பியது) - 5 துளிகள்
தண்ணீர் - ஒரு டம்ளர்
சீனி - 100 கிராம்
மாஜரீன் (தட்டுக்கு பூச) - ஒரு தேக்கரண்டி


செயல்முறை 
ஒரு கப்பில் ஜெலற்றீனை
போட்டு அதனுடன் நன்கு
கொதித்த தண்ணீர் 10
மேசைக்கரண்டி (அரை
 டம்ளர்) விடவும்.

அதன் பின்பு அதை நன்றாக
கொதித்த தண்ணீரை உள்ள
இன்னொரு பாத்திரத்தில்
அமிழ்த்தி வைத்து கொண்டு
ஜெலெற்றீன்முற்றாககரையும்
வரைநன்றாககரைத்துஅப்படியே
கொதி நீர் உள்ள பாத்திரத்தினுள்
 வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து
சூடாக்கி அதில் சீனியை போட்டு
அதனுடன் தண்ணீர்(அரைடம்ளர்)
விட்டு காய்ச்சவும்.

சீனி முழுவதும் கரைந்ததும் லிக்விட்
குளுக்கோஸ் ஒன்றாக சேர்த்து 250°f
இல் வெப்பமாக்கி அடுப்பிலிருந்து
இறக்கி உடனே சித்திரிக்கமிலம்
கலந்து நன்றாக ஆறவிடவும்.

ஆறிய பின்பு கலரிங், எசன்ஸ் என்பன
சேர்க்கவும். அச்சுக்களில் பட்டர் பூசவும்.

பின்பு பட்டர் பூசிய அச்சுக்களில் ஊற்றி
8 மணித்தியாலத்திற்குப் பதமாகும் வரை
வைத்து கத்தியால் தட்டி எடுத்து சீனியில்
 பிரட்டி எடுத்து அதிகமான சீனியை
அகற்றிய பின்பு பொதி செய்க. அதன் பின்பு
அதை எடுத்து பரிமாறவும்.

எச்சரிக்கை 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
 சீனி முழுவதும் கரைந்ததும் லிக்விட்
குளுக்கோஸ் ஒன்றாக சேர்த்து 250°f
இல் வெப்பமாக்கி அடுப்பிலிருந்து
இறக்கி உடனே சித்திரிக்கமிலம்
 கலந்து நன்றாக ஆறவிடவும்.
பட்டர் பூசிய அச்சுக்களில் ஊற்றி 8
மணித்தியாலத்திற்குப் பதமாகும்
வரை வைத்து கத்தியால் தட்டி
எடுத்து சீனியில் பிரட்டி எடுத்து
அதிகமான சீனியை அகற்றிய
பின்பு பொதி செய்க.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்

Samstag, 18. Dezember 2010

ஜுஜுப்ஸ்

சிறுவர் முதல் பெரியவர் வரை இலகுவாக
உண்ண கூடியதும் சுவையானதுமான ஒர்
இனிப்பே ஜுஜுப்ஸ் ஆகும். அத்துடன்
ஜுஜுப்ஸ் இலங்கை மக்கள் மிக மிக
விரும்பி உண்ணும் ஒர் இனிப்பு ஆகும் 

தேவையான பொருட்கள் 
சீனி - 250 கிராம்
ஜெலற்றீன் - 20 கிராம் (3மேசைகரண்டி மட்டமாக)
சிட்ரிக் அமிலம் - அரை தேக்கரண்டி
(நன்கு)கொதித்த தண்ணீர் - தேவையானளவு
தண்ணீர் - 10 மேசைக்கரண்டி (அரை டம்ளர்)
கலரிங் (விரும்பியது) - 1 தேக்கரண்டி
சீனி - 4 மேசைக்கரண்டி
மாஜரீன் (தட்டுக்கு பூச) - 1 தேக்கரண்டி


செயல்முறை   
ஒரு கப்பில் ஜெலற்றீனை போட்டு
அதனுடன் 10 மேசைக்கரண்டி(அரை
டம்ளர்) நன்கு கொதித்த தண்ணீர்
விடவும்.

அதன் பின்பு அதை நன்றாக கொதித்த
தண்ணீர் உள்ள இன்னொரு பாத்திரத்தில்
அமிழ்த்தி வைத்து கொண்டு ஜெலெற்றீன்
முற்றாக கரையும் வரை நன்றாக கரைத்து
அப்படியே கொதி நீர் உள்ள பாத்திரத்தினுள்
 வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி அதில்
சீனியை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு
காய்ச்சவும்.

பாகு காய்ச்சும்போது சீனி முழுவதும் கரைந்து
வெளுப்பான நுரைபதம் தோன்றி மறைந்து பாகு
 கொதிக்கும் பதத்தை அடைந்ததும் ஒரு குளிர்நீர்
கொண்ட பாத்திரத்தில்சிறிதளவுஇப்பாகை விட்டு
 பார்க்கும் போது நீரில் கரையாமல் தண்ணீரில்
பாகு தெரியும்.

பதத்தை அடைந்ததும் (தொட்டு பார்க்கும் போது
கையில் பசை போல ஒட்டும்) தாட்சியை உடனே
அடுப்பிலிருந்து இறக்கவும்.

பின்பு சூடாக இருக்கும் போது அதனுடன் கலத்து
வைத்துள்ள ஜெலற்றீன், கலரிங், சிட்ரிக் அமிலம்
ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அதன்
பின்பு ஒரு தட்டு முழுவதும் மாஜரீன் பூசவும்.

மாஜரீன் பூசிய தட்டில் செய்த கலவையை ஊற்றி
12 மணித்தியாலம் வைத்த பின்பு 1/2"தர 1/2" அளவான
துண்டுகளாக ஒரு கூரான கத்தியால் கீறிக் கொண்டு
ஒரு மாஜரீன் பூசிய கரண்டியால் ஒவ்வொரு துண்டு
களையும் தூக்கி எடுத்து சீனியில் பிரட்டிய பின்
பரிமாறவும்.

எச்சரிக்கை 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ஒரு கப்பில் ஜெலற்றீனை போட்டு
அதனுடன் 10 மேசைக்கரண்டி (அரை
டம்ளர்)நன்கு கொதித்த தண்ணீர்
விட்டு நன்றாக கொதித்த தண்ணீர்
உள்ள இன்னொரு பாத்திரத்தில்
அமிழ்த்தி வைத்து கொண்டு
ஜெலெற்றீன் முற்றாக கரையும்
வரை நன்றாக கரைத்து அப்படியே
கொதிநீர் உள்ள பாத்திரத்தினுள்
வைக்கவும்.
தொட்டு பார்க்கும் போது கையில்
பசை போல ஒட்டும்.

அப்பிள் அப்சைட் டவுன்சைட் கேக்

அப்பிள் அப்சைட் டவுன் கேக்
சுவையானதும் சத்துக்கள்
 நிறைந்ததும்சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி
உண்ணக்கூடியதும்    ஆகும்.
தேவையான பொருட்கள் 
பட்டர் (வெண்ணெய்) - 500 கிராம்
கோதுமைமா(மைதா) - 500 கிராம்
சீனி(சர்க்கரை) - 500 கிராம்
முட்டை - 8
புளிப்பற்றஅப்பிள் - 2
அப்பிள்எசன்ஸ் - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 4 தேக்கரண்டி
வனிலா - 2 தேக்கரண்டி


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் பட்டர், சீனி ஆகியவற்றை
போட்டு முட்டை அடிக்கும் பீட்டரினால்
நன்றாக கலந்து அடிக்கவும்.

அதன் பின்னர் அதனுடன் முட்டையையும்
 சேர்த்து சீனி கரையுமாறு நன்றாக அடிக்கவும்.

சீனி நன்றாக கரைந்ததும் அதனுடன்
கோதுமைமா (மைதா), பேக்கிங்பவுடர்,
அப்பிள் எசன்ஸ், வனிலா ஆகியவற்றை
சேர்த்து அடிக்கவும்.

அடித்த பின்பு அப்பிள்பழத்தின் தோல்,
விதை ஆகியவற்றை நீக்கவும்.

அதன் பின்னர் அதனை  மெல்லிய அரை
வட்டமாக வெட்டி ஒரு பாத்திரத்தில்
வைக்கவும்.

வைத்த பின்பு கேக் தட்டில் பட்டர் பூசி
அதன் மேல் அப்பிள் துண்டுகளை அடுக்கி
அதன் மேல் கேக் கலவையை ஊற்றி
பேக் செய்யவும்.

கேக் பேக்(Bake)பண்ணியதும் சுத்தமான
சுவையான சத்தான சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட
கூடியஅப்பிள் அப்சைட் டவுன்சைட் கேக்
தயாராகிவிடும்.

(வெந்தபின் கேக்கை தலை கீழாக வெட்ட
அப்பிள் துண்டுகள் கேக்கின் மேற்புறமாக
இருக்கும்).


அதன் பின்னர் ஒருதட்டில் அப்பிள்
அப்சைட் டவுன்சைட் கேக் துண்டுகள்
சிலவற்றை வெட்டிவைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை 
அப்பிள் அப்சைட்டவுன் கேக் இருதய
 நோயாளர்,சர்க்கரை நோயாளர்
 வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்


கவனிக்க வேண்டியது  
பேக்கிங் நேரம் - 250°c - 20 நிமிடங்கள்
அத்துடன் திரும்பவும் 200°c -25
நிமிடங்கள் ஆகும்

வெந்தபின்கேக்கை தலை கீழாக
வெட்டஅப்பிள் துண்டுகள் கேக்கின்
மேற்புறமாக இருக்கும்.

மைக்கிரோவேவ் சிக்கின் கிரேவி

மைக்ரோவேவ் சிக்கன் கிரேவி மிகவும்
சுவையானதும், சத்துக்கள் நிறைந்ததும்
 எல்லோரும் விரும்பக்கூடியதும்,
செய்வதற்கு இலகுவானதும் ஆகும்.


தேவையான பொருட்கள் 
கோழி துண்டுகள் - 250 கிராம்
அரைத்தவெங்காயவிழுது - 2
அரைத்த தக்காளிவிழுது- 1
மிளகுத்தூள் - தேவையானளவு
மல்லி(தனியா)தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
பால் - (1 - 2) கப்
தயிர் - 1தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
அரைத்த இஞ்சி விழுது - கால் மேசைக்கரண்டி
அரைத்தஉள்ளி(பூண்டு) விழுது- கால் மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் கோழிதுண்டுகள்,
உப்பு, மஞ்சள் தூள், இஞ்சிவிழுது,
உள்ளி(பூண்டு)விழுது ஆகியவற்றை
போட்டு நன்றாக கலக்கவும்.

அதன் பின்னர் கலந்தவற்றுடன்  தயிர்
சேர்த்து இறுக்கமான மூடி போட்டு மூடி
மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடங்கள்
ஹையில் அவிக்கவும்.

பிறகு அந்த பாத்திரத்தை திறந்து அவற்றுடன்
மிளகுத்தூள், மல்லித்தூள்(தனியாத்தூள்),
அரைத்ததக்காளிவிழுது, அரைத்தவெங்காய
விழுது, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து
மூடி 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.

முன்று நிமிடங்களின் பிறகு மைக்ரோவேவ்
அவனில் இருந்து பாத்திரத்தை  வெளியில்
எடுத்து அதன் மூடியை திறந்து விட்டு திருப்பி
மைக்ரோவேவ் அவனில் 3 நிமிடங்கள் மீடியம்
ஹையில் வைக்கவும்.

3 நிமிடங்களின்  பிறகு மைக்ரோவேவ் அவனை
நிறுத்தி விட்டு பாத்திரத்தை 2 நிமிடங்கள்
மைக்ரோவேவ் அவனில் அப்படியே
வைக்கவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
மைக்ரோவேவ் சிக்கன் கிரேவி தயாராகி
விடும்.

தயாரான பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன் சுத்தமான
சுவையான சத்தான மைக்ரோவேவ் சிக்கன்
கிரேவியை வைத்து பரிமாறவும்


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
கோழிதுண்டுகள் அவிந்துவிட்டதா என
கவனிக்கவும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

Donnerstag, 2. Dezember 2010

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

Mittwoch, 1. Dezember 2010

புதன்கிழமை வாழ்த்துக்கள்

Dienstag, 30. November 2010

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

Montag, 22. November 2010

Samstag, 13. November 2010

மைக்கிரோவே ஸ்டஃப்ட் கத்தரிக்காய் கறி


மைக்ரோவேவ் ஸ்டஃப் கத்தரிக்காயில்
உயிர்சத்துகள்,மினரல்,கல்சியம்,
பொஸ்பரஸ்,பொட்டாசியம் நிறைந்து
காணப்படும் அத்துடன் சுவையானதும்
சுத்தமானதுமாகும்



தேவையான  பொருட்கள் 
பிஞ்சு கத்தரிக்காய் - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - கால் கப்
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
நெல்லிக்காய் பவுடர்(ஆம்லாபவுடர்)-1தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பெரியவெங்காயம் - 1
உப்பு - தேவையானளவு


செய்முறை 
பிஞ்சு கத்தரிக்காயின் காம்பை வெட்டாமல்
அதன் அடிப்புறத்தில் லேசாகவும் நான்காக
வும் பிளக்கவும்.

பிளந்த கத்தரிக்காயை ஒரு மைக்கிரோவில்
வைக்ககூடிய பாத்திரத்தில் போடவும்.

 இப்படியே எல்லா கத்தரிக்காயையும் வெட்டி
முதலில் வெட்டிய கத்தரிக்காய் போட்ட பாத்தி
ரத்தில் போடவும்.

அதன் பின்னர் அவற்றை எண்ணெயில் பிரட்டி
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி மைக்ரோ
வே அவனில் வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

5 நிமிடங்களின் பின்பு அதை இறக்கவும்

அதன் பின்னர் அந்த கத்தரிக்காயை வெளியே
எடுக்கவும்

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,
 உப்பு, நெல்லிக்காய்பவுடர்(ஆம்லாபவுடர்),
மிளகுத்தூள், கரம்மசாலாத்துள் ஆகியவற்றை
போட்டு நன்றாக கலக்கவும்.

கலந்த பின்னர் அவற்றை கத்தரிக்காய்க்குள்
வைத்து ஸ்டஃப்டு செய்யவும்.

ஸ்ட்ஃப்டு செய்யப்பட்ட கத்தரிக்காய்களை
மைக்ரோ அவனில் மீடியம் ஹையில்
3 நிமிடங்கள் வைக்கவும். பின்பு 2 நிமிடங்கள்
விடவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
மைக்ரோவேவ் ஸ்டஃப்டு கத்தரிக்காய்
தயாராகி விடும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தினை) அல்லது சப்பாத்தியை வைத்து
அதனுடன் சுத்தமான சுவையான சத்தான
 மைக்ரோவேவ் ஸ்டஃப்டு கத்தரிக்காய்
வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
கத்தரிக்காய் அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

மைக்கிரோவே சேமியா கேசரி


சுவையான மைக்ரோவே சேமியா கேசரியை
எல்லோரும் விரும்பி உண்ணுவார்கள்.

தேவையான பொருட்கள் 

சேமியா - 100 கிராம்
சீனி - 50 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
ஆரஞ்சு சிகப்பு - 1சிட்டிகை
உப்பு - 1சிட்டிகை
தண்ணீர் - 1கப்

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு
சேமியாவும் தண்ணீரும் சேர்த்து
மூடி மைக்ரோவேவ் அவனில்
வைத்து 5 நிமிடங்கள் ஹையில்
வேக விடவும் .

பின்பு பாத்திரத்தை திறந்து சீனி,
ஆரஞ்சு சிகப்பு நிறம், உப்பு சேர்த்து
மூடி அவனில் வைத்து 3 நிமிடங்கள்
ஹையில் வைக்கவும்.

பிறகு 2 நிமிடங்கள் திறந்து வைக்கவும்.

அதன் பின்பு 3 நிமிடங்கள் ஹையில்
வைக்கவும்.

பின்பு சுத்தமான சுவையான சத்தான
மைக்கிரோவே சேமியா கேசரி
தயாராகிவிடும்

அதன் பின்னர் அந்தப் பாத்திரத்தை
மைக்கிரோவேவில் இருந்து எடுத்து
வெளியே எடுக்கவும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையா
னளவு சுத்தமான சுவையான சத்தான
மைக்கிரோவே சேமியா கேசரியை
வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

அச்சாறு

கரட், பப்பாசிக்காய், போஞ்சிக்காய் ஆகிய
காய்களில் அச்சாறு தயாரிக்கப்படுகின்றன.
அச்சாறு கார்போஹைட்ரேட், கொழுப்பு,
கரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து (A,B1,
B2,B3,B6,C,D) பொட்டாசியம், பொஸ்பரஸ்,
மக்னீசியம்,சோடியம், கல்சியம் ஆகியவை
நிறைந்த ஒர் உணவு பொருள்.


தேவையானபொருட்கள் 
பச்சைமிளகாய் - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
பப்பாசிக்காய் - 125 கிராம்
போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்
கரட் - 125 கிராம்
வினிகர் - 3 கப்
செத்தல் மிளகாய் - 5
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி - 5 பல்
2 இன்ச் நீளத்துண்டுஇஞ்சி - 1
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பெருங்காயம் - 1துண்டு

செய்முறை 
கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு
ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி
வினிகர் சேர்த்து மென்மையாக
அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது
போல அரைக்கவும்.

வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி
கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்.

போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி
துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3")
துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின்
தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக
வெட்டி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின்
காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி
நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி
அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி
வைக்கவும்.

பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து
அதில் அரை கப் வினிகரை ஊற்றி
அதனுடன் விதை நீக்கிய பச்சை
மிளகாயை போட்டு அவிய விடவும்.

பச்சைமிளகாய் அவிந்து வினிகர்
வற்றியதும் அதிலிருக்கும் பச்சை
மிளகாயை வேறு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரை கப்
வினிகரை ஊற்றி வெங்காயத்தை
போட்டு அவித்து வினிகர்வற்றியதும்
 எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி கரட்டை போட்டு அவித்து
வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து
ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை
 ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து
வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில்
விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த கரட்டை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள்,
மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து
இறக்கி அதை ஆற விடவும்.

அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில்
போட்டு மூடி வைக்கவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
அச்சாறு தயராகிவிடும்

அதந பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தினை) ,தயிர் சாதத்திணை அல்லது
சப்பாத்தி ஆகியவற்றை வைத்து அதனுடன்
 அச்சாறு சிறிதளவு வைத்து பரிமாறவும்



 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
அச்சாறை நீண்ட காலத்திற்கு வைத்து
பயன்படுத்தலாம்.
ஈரக்கரண்டியை அச்சாறு போத்தலினுள்
போட்டு அச்சாறினை எடுத்தால் அது
பழுதடைந்து விடும்.


மாற்று முறை 
மரக்கறிவகைகளை நீராவியில் அவித்
தெடுத்து பின்பு அரை கப் வினிகர்
விட்டு கரைத்த கூட்டில் இட்டு அவித்து
கொள்ளலாம்.


எச்சரிக்கை
பப்பாசிக்காய் அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

Freitag, 12. November 2010

கறி பணிஸ்

கறி பணிஸை எல்லோரும் விரும்பி
சுவைத்து உண்பார்கள். அத்துடன் இது
பிரயாணங்கள் செய்யும் போது
இலகுவாக எடுத்து சென்று உண்ணக்
கூடிய சிற்றுண்டியாகும்.


தேவையான பொருட்கள் 
கோதுமைமா (மைதாமா) - 1கிலோ
உப்பு - தேவையானளவு
பட்டர் - 1மேசைக்கரண்டி
அப்பச்சோடா(Baking powder) - (1- 3) தேக்கரண்டி
அல்லது ஈஸ்ட் - கால் பாக்கெட்
முட்டை - (1- 3)
பால் (நகச்சூடுள்ள ) - தேவையான அளவு
எண்ணெய் -தேவையானளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா),
அப்பச்சோடா(Baking powder)அல்லது ஈஸ்ட்,
பட்டர், உப்பு, ஒரு முட்டை ஆகியவற்றை
போடவும் .

அதன் பின்பு நகச்சூடுள்ள பாலை கோதுமை
மா(மைதாமா) உள்ள பாத்திரத்தில் விட்டு
சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக்
கொள்ளவும்.

பின்பு சிறிதளவு தண்ணீரை எடுத்து மாக்
கலவையின் மேல் எல்லா பக்கமும் பூசவும்.

பின்பு பாத்திரத்தில் மாக்கலவையை வைத்து
 பாத்திரத்தின் வாயை துணியினால் இறுக
மூடி கட்டி (காற்று உட்புகாதவாறு)(3 -6) மணி
நேரங்கள் வைத்திருக்கவும் .

இப்போது மாவு இரு மடங்காகி இருக்கும்.

பின்னர் மாவை சிறிதளவு எடுத்து உருண்டையாக
 உருட்டி ஒரு தட்டில் வைத்து சப்பாத்திக்கு
 தட்டுவது போல் வட்டமாக தட்டி நடுவில் செய்து
வைத்திருக்கும் கறி கலவையை வைக்கவும்.

அதன் பின்பு அதை ரோல்ஸ்க்கு மடிப்பதை
போல ஆனால் சிறிதளவு தடிப்பமாகவும்
மடிக்கவும்.

(பின்பு ஒரு கிண்ணத்தில் 2 முட்டை மஞ்சள்
கருவை போட்டு முள்ளுகரண்டியால் அடிக்கவும்).

அதன் பின்பு மடித்த பணிஸின் மேலே முட்டை
மஞ்சள் கருவை தடவவும்.

மஞ்சள் கரு தடவிய பணிஸ் மேலே பிரஷினால்
எண்ணெயை பணிஸ் முழுவதும் தடவி வைக்கவும்.

இதைப் போல் தேவையான அளவு செய்துக்
கொள்ளவும்.

இந்த பணிஸை பேக் செய்யும் தட்டில் இடைவெளி
விட்டு அடுக்கவும்.

அவனை முதலிலேயே 350 F அல்லது 250°C
சூடுப்படுத்தி வைக்கவும்.

சூடுப்படுத்திய அவனில் பணிஸை அடுக்கிய
தட்டை வைக்கவும்,

25 நிமிடங்களுக்கு பின்பு அவனில் சூட்டை
குறைக்கவும் (200°c அல்லது 300°f). 20 நிமிடங்
களுக்கு பின்பு பணிஸை எடுத்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
குழைக்கும் முறையும், பாத்திரத்தை சுற்றி
கட்டி வைக்கும் முறை, பேக் பண்ணும் முறை,
பிரட்டல் கறி.


எச்சரிக்கை 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

யோக்கட்

யோக்கட் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்
மிகவும் பிடித்ததும் பாலில் காணப்படும் சகல
சத்துகளும் நிறைந்ததுமான ஒர் குளிர் உணவு.

தேவையான பொருட்கள் 
பால் - ஒரு லிட்டர்
சீனி - 130 கிராம்
ஜெலற்றீன் - ஒரு தேக்கரண்டி
யோக்கற் - ஒரு கப்
யோக்கற் கப் - 30 கப்
தேமோ மீற்றர் - ஒன்று
கொதிநீர் - 4 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையானளவு
ஓகண்டி துணி - தேவையானளவு
கலரிங் - 4 துளிகள் (விரும்பினால்)
எசன்ஸ் - 3 துளிகள் (விரும்பினால்)
இக்குபேற்றர்

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் பால் சீனி ஆகிய
இரண்டையும் போட்டு நன்றாக
கரைத்து கொள்ளவும்.

இன்னொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை
போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டி
கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பெரிய
பாத்திரத்தை வைத்து அந்த பெரிய
பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு
தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை
அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.

பால் கொதித்தபின்பு பாலின் வெப்பநிலை
யை தேமா மீற்றரினால் அளக்கவும்.
பாலின் வெப்பநிலை 90°c க்கு வந்தவுடன்
அடுப்பை அணைத்து விடவும்.

அடுப்பை அணைத்த  பின்பு கொதித்த  
பாலை 30 நிமிடத்திற்கு அடுப்பிலே
வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பிலிருந்து பாலை
இறக்கி ஆறவிடவும் .

பால் ஆற தொடங்கும் போது தேமோ
மீற்றரினால் அளக்கவும்.

பாலின் வெப்பநிலை 60°cக்கு வந்த
பின்பு அதனுடன் ஜெலற்றீன் கலவையை
விட்டு நன்றாக கரைக்கவும் .

நன்றாக கரைத்த பின்னர் ஒரு பாத்திரத்தின்
வாய்ப்பகுதியில் ஓகண்டி துணியை வைத்து
அதன் மேல் கொதித்து ஆறி செலற்றீன் கரைத்த
பாலை ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.

அதன் பின்பு திரும்பவும் பாலினை ஆறவிடவும்.

பால் ஆறி பாலின் வெப்பநிலை 40°c அடையும்
போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால்
நன்றாக கலக்கவும்.

கலக்கிய பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து
யோக்கற் கப்பில் ஊற்றி 40°c வெப்பநிலையில்
5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.

அதன் பின்னர் யோக்கற் இறுகியதும்
இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து
அறை வெப்பநிலையில் 10 நிமிடம்
 வைக்கவும்.

அதன் பின்பு எடுத்து 24 மணித்தியாலம்
குளிரூட்டியில் வைக்கவும்.

 பின்பு எடுத்து அறை வெப்பநிலையில்
2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.


 மாற்று முறை - 
இக்குபேற்றர் இல்லாதவிடத்தில் பெரிய
ரெஜிபோம் பெட்டியை எடுத்து அலுமினிய
தாளை அதன் உட்புறம் எல்லா பக்கங்கலி
லும் விரித்து அதனுள் கொள்ளக்கூடிய
அளவிற்கு யோக்கற் கப்பை பரவலாக
அடுக்கி அதன் பின்பு அதன் மேலாக 3
வரிசைகளுக்கு யோக்கற் கப்புகளை
அடுக்கிப் பெட்டியின் மூலையில் பல்ப்பை
பொருத்தி 2" இடைவெளி விட்டு மூடி 42°c
வெப்பநிலையில் 12 மணித்தியாலத்திற்கு
வைத்து எடுத்து முன்னைய முறையில்
குளிசாதனபெட்டியில் வைத்தெடுக்கவும்.


 எச்சரிக்கை - 
அஸ்மா, அலர்ஜிநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் - 
பாலின் வெப்ப நிலையை தேமா மீற்றரினால்
அளக்கவும்,

பாலின் வெப்பநிலை 90°c க்கு வந்தவுடன் அடுப்பை
அணைத்து விடவும்,

ஆற தொடங்கி 60°cக்கு பின்பு ஜெலற்றீன் கலவையை
விடவும்,

40°c அடையும் போது யோக்கற் இட்டு கரண்டியால்
நன்றாக கலக்கவும்,

40°c வெப்பநிலையில் 5 மணித்தியாலம்
இக்குபேற்றரில் வைக்கவும்.