கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 25. August 2014

திங்கள்கிழமை


Montag, 18. August 2014

திங்கள்கிழமை


திங்கள்கிழமை


Freitag, 15. August 2014

பருப்பு வடை

தேவையான பொருட்கள்

பட்டாணி பருப்பு - 1கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் - 1 - 2
கருவேப்பிலை - கொஞ்சம்
செத்தல் மிகாய்- 2
சீரகம் -1ஸ்பூன்
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சிலர் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்ப்பார்கள்

செய்கை முறை

பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து சொரு சொருப்பாக அரைக்கவும். இதனுடன் செத்தல் மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும். அரைக்கும்போது அதிகம் நீர் விடாது குமையலாக வரக்கூடியதாக அரைத்தெடுக்கவும்.
பச்சைமிளகாய், வெண்காயத்தை சிறிதாக வெட்டி வைத்திருக்கவும்.
அரைத்தெடுத்த மாவுடன் வெட்டிவைத்த வெண்காயம், மிளகாய், மற்றும் மேலே சொன்ன பொருட்களில் எஞ்சியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைக்கவும்.

அதனை சிறு சிறு உருண்டைகள் செய்து வடை வடிவில் (தட்டையாக) தட்டி வைக்கவும். (உருண்டையாக இருந்தால் நடுப்பகுதி அவியாது போகும்)

தாச்சியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு  வடைகளை பொரித்து எடுக்கவும்.  குறைந்த தணலில் பொரிக்கவும். அப்பொழுதுதான் உள்பகுதி அவியும்.

வடைகள் பொன்நிறம் ஆன பின்பு வடித்து எடுக்கவும்.

அசைவம் விரும்புபவர்கள் இதில் மாசிக்கருவாட்டுத் தூள், அல்லது இறால் ஒன்று அல்லது இரண்டு  பொரிப்பதற்கு முன் செய்து வைத்த வடையினுள் பதித்து பொரித்தெடுக்கவும்.

இப்பொழுது பருப்பு வடை, இறால் வடை றெடி.

Donnerstag, 14. August 2014

வியாழக்கிழமை


Montag, 11. August 2014

திங்கள்கிழமை


Freitag, 8. August 2014

வெள்ளிக்கிழமை


Donnerstag, 7. August 2014

வியாழக்கிழமை


Montag, 4. August 2014

திங்கள்கிழமை