கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 31. Juli 2012

சீரக சாதம்

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி-1 கப்
பெருஞ்சீரகம் (சோம்பு)-2 தேக்கரண்டி
புதீனா இலை- 1 /3 கப்
எண்ணெய் -6 தேக்கரண்டி
உப்பு-1 /2 கப்
பச்சை மிளகாய் - -6
தண்ணீர் -2 கப் 30

செய்முறை
 ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை 
போட்டு அதனுடன் தேவையானளவு 
தண்ணீரை விட்டு  ஊற விடவேண்டும்

அதன்  பின்னர் ஒரு தாட்சியை அடுப்பில் 
வைத்து சூடாக்கி அதில் வெண்ணெயை 
போட்டு சூடாக்கி அதனுடன் உடைத்த 
முந்திரி பருப்பு,சிறிது சிறிதாக வெட்டிய 
புதீனாஇலை  பெருஞ்சீரகம் (சோம்பு) 
சிறிது சிறிதாக வெட்டிய  பச்சை மிளகாய்  
ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம்
 பொரியவிடவும் .

அதன் பின்னர் இவற்றை அடுப்பில் இருந்து 
எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 
அதில் தேவையானளவு தண்ணீர் விட்டு 
கொதிக்கவிடவும் .

தண்ணீர் கொதித்ததும் அதில் ஊறிய அரிசி 
ஒரு நிமிடம் பொரியவிட்டவை யாவற்றையும்
 போட்டு வேகவிடவும் .

இவையாவும் வெந்த பின்னர் சுத்தமான 
சுவையான சத்தான சீரகசாதம் தயாராகி
விடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான 
சுவையான சத்தான சீரகசாதத்தை வைத்து 
பரிமாறவும் 

செவ்வாய்க்கிழமைவாழ்த்துக்கள்


Montag, 30. Juli 2012

மாங்காய்சாதம்

தேவையான பொருட்கள்
பச்சை மாங்காய்-1
பச்சை மிளகாய்-2
உப்பு -தேவையானளவு
சாதம் (சோறு)-1கப்
மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை
பெருங்காயம் அரைத்தது- ஒரு சிட்டிகை
எண்ணெய்/நெய்-2 தேக்கரண்டி
சாதா பருப்பு-2 தேக்கரண்டி

செய்முறை 

 மாங்காயின் தோல் சிவீ  சிறு சிறு துண்டுகளாக
நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்

அதன் பின்னர் பச்சை மிளகாயை சிறு சிறு
துண்டுகளாக நறுக்கி இன்னொரு பாத்திரத்தில்
போடவும்


 பின்னர் அடுப்பில் வாணெலி (தாட்சி)யை
வைத்து அதில் எண்ணெய் ஊற்றி
கொதிக்க வைக்கவும்

எண்ணெய் கொதித்ததும் அதில்கடுகு,பருப்பு
ஆகியவற்றை போட்டு அவற்றின் நிறம்
மாறும் வரையில் வதக்கவும்,

வதக்கிய பின்னர் அதனுடன் அரைத்த பெருங்
காயத்தை  போட்டு வதக்கவும்

 பின்னர் அவற்றுடன் பச்சை மிளகாயை போட்டு
வதக்கவும்,

வதக்கியதும் இதனுடன் மஞ்சள் தூள் நறுக்கிய
மாங்காய்
ஆகியவற்றை போட்டு வதக்கவும்,

மாங்காய் நன்றாக அவிந்ததும்,அதனுடன் சாதம்
சோறுஉப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக
கிளரவும்.

 கிளரிய பின்னர் சுத்தமான சுவையான சத்தான
மாங்காய் சாதம் தயாராகிவிடும்

பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி
வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு
சாதத்தை வைத்து ஏதாவது சட்னியுடன்
பறிமாறவும்

இட்லி வகை-3


தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 2 கப்,
முழு உளுத்தம் பருப்பு - அரை கப்,
உப்பு-தேவையானளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசியை  ஒரு
 மணித்தியாலம் ஊற வைக்கவும்.

மற்றைய பாத்திரத்தில் முழு
உளுத்தம் பருப்பை ஒரு மணித்தி
யாலம்ஊறவைக்கவும்.

அதன் பின்னர் முழு உளுத்தம்
பருப்பினை நன்றாக கழுவி அதன்
தோலை அகற்றவும்

அதன் பின்னர் மிக்ஸியில் அல்லது
கிரைண்டரில் ஊறிய அரிசியை
போட்டு நைஸாக அரைக்கவும்

அரைத்த பின்னர் அதனை ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

பின்னர் மிக்ஸியில் அல்லது
கிரைண்டரில் ஊறிய உளுந்தை
போட்டு தண்ணீர் தெளித்து
பொங்க அரைக்கவும்


அரைத்த பின்னர் அதனை அரைத்த
அரிசியை உள்ளபாத்திரத்தில் போட்டு
வைக்கவும்


பின்னர் அவற்றிற்கு உப்பு போட்டு
நன்றாகஅடித்து கலந்து 6 முதல் 8 மணி
நேரம் வரை புளிக்கவிடுங்கள்.


இட்லி மா புளித்த பின்பு அடுப்பில் இட்லி
செய்யும் பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு அதனுள்
இட்லி அவிக்கும் தட்டினைவைத்து அதன்
மேற் மூடியால் மூடி பின்பு அதனை
சூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த
மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு
குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு
குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.

அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள்
 தயாராகிவிடும்.

அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு
பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம்
மூடி வைக்கவும்.

பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும்
 அவிக்கவும்.

பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன்
சம்பல் அல்லது சாம்பார் அல்லது கறி அல்லது
இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.

திங்கள்கிழமைவாழ்த்துக்கள்