கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 30. August 2012

பிரெட் சப்பாத்தி

தேவையானவை

பிரெட் துண்டுகள் – 2,
கோதுமை மா– 1கப்,
துருவிய பனீர் – 1/4கப்,
பால் – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2
 கொத்தமல்லி - தேவையான அளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு,
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

 செய்முறை

 பிரெட் துண்டுகளை தண்ணீரில்
நனைத்து பிழிந்து

துருவிய பனீர், வெங்காயத்தாள்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி,
உப்பு, கோதுமை மா சேர்த்துக்
கலந்து,பால் விட்டு கெட்டியாகப் 
பிசையவும்.


இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு,

காயும் தோசைக்கல்லில் போட்டு,
எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

Mittwoch, 29. August 2012

லாலி பாப்



தேவையான பொருட்கள்

கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) - 1
தேசிக்காய் (எலுமிச்சை) - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி உள்ளி (பூண்டு) விழுது - 2 தேக்கரண்டி
சோளம் மா- 2 மேசைக்கரண்டி
கோதுமை மா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு

 செய்முறை

 கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்) 
சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக 
இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, 
ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து
 அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற 
வைக்கவும்.

 பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய 
கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில் 
கழுவி தண்ணீரை வடிக்கவும்.

 இதனுடன் கோதுமை மா -சோளம்மா, 
உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை 
சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.

 பிறகு மிளகு தூள், இஞ்சி உள்ளி 
(பூண்டு) விழுது, மிளகாய் தூள், 
ண்ணெய்ஆகியவற்றைசேர்த்து 
நன்கு பிசறி மூன்று மணி நேரம் 
ஊற வைக்கவும்.

 அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
எண்ணெய் விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில்  
மசாலாவில் ஊறிய கோழிக்கறி 
துண்டுகளை போட்டு நன்றாக 
பொறித்து எடுக்கவும்.

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
சத்தான  நல்ல எலுமிச்சையின்
 மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த 
கோழிக்கறி லாலி பாப் தயார்.

 குறிப்பு

 கோழிக்கறியுடன் ஒவ்வொரு
பொருளாக சேர்த்து பிசறுவதால் 
மசாலா நன்றாக ஒட்டி பிடிக்கும்.

 பொரிக்கும் போது எண்ணெய் சூடானதும் 
தீயை மிதமாக வைத்து பொரிக்கவும். 
அப்போதுதான் கோழிக்கறி நன்கு வேகும்.

 கோழிக்கறி மசாலாவில் ஒரு மணி நேரம் 
ஊறினாலே போதுமானது. இருந்தாலும் 
அதிக நேரம் நன்றாக  ஊறினால் சுவை 
கூடுதலாக இருக்கும்.

பிரெட் சுருள்


தேவையானப் பொருட்கள்

முழு பிரெட் - 1 
பொடியாக நறுக்கியவெங்காயம் - 2  
பொடியாக நறுக்கியபச்சை மிளகாய் - 3 
கறிவேப்பிலை - சிறிதளவு 
தயிர் - அரை கப் 
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு 

 செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முழு பிரெட்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
பொடியாக நறுக்கிய பச்சை 
மிளகாய்,கறிவேப்பிலை,உப்பு, 
தயிர்ஆகியவற்றை போட்டு 
கெட்டியாக பிசைந்து 
கொள்ளவும். 

அடுப்பில் தாட்சியை (வாணலியை) 
வைத்து அதில்  எண்ணெய் விட்டு 
சூடாக்கவும்  அதன் பின்னர் பிசைந்த 
மாவை சிறுசிறு உருண்டைகளாகவோ
நீளவாக்கிலோ உருட்டி சூடான 
எண்ணெய்யில் பொன்னிறமாக 
பொரித்தெடுக்கவும்.

பொரித்தவற்றை எடுத்து ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
பிரெட்சுருள் தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையா
னளவு பிரெட் சுருலை வைத்து 
அதனுடன் விரும்பிய சோஸ்ஸை 
வைத்து பரிமாறவும்

Dienstag, 28. August 2012

சிக்கன் கட்லெட்


தேவையான பொருட்கள்
முள்ளில்லாதகோழிதசை - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
சிறிதாக வெட்டியபச்சைமிளகாய் - 2 
சிறிதாக வெட்டியபெரியவெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
ஸ்ரீலங்காமிளகாய்தூள் - 1மேசைகரண்டி
உப்பு - தேவையானளவு
வெட்டியகறிவேப்பிலை- தேவையானளவு
முட்டை - 1
ரஸ்க்தூள் - 25 கிராம்
எண்ணெய் - தேவையானளவு


 செய்முறை

ஒரு பாத்திரத்தில் முள்ளில்லாத
கோழிதசையை போடவும் 

 அதன் பின்னர் அதில் கோழி வேக
வைக்க தேவையானளவு தண்ணீர் 
ஊற்றவும்

அதன் பின்னர் அப்பாத்திரத்தை 
அடுப்பில் வைத்து கோழி துண்டினை
 வேகவிடவும்

கோழி வெந்த பின்னர் அதை அடுப்பில் 
இருந்து எடுத்து இன்னொரு பாத்திரத்தில் 
போட்டு ஆறவிடவும் 

ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக்
கொள்ளவும்.

அதன் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் 
போடவும் 

உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு
மசித்துக் கொள்ளவும்.

 அதன் பின்னர் வேக வைத்து மசித்த 
உருளைக்கிழங்கினை வெந்தகோழி 
போட்ட பாத்திரத்தில் போடவும் .

அதன் பின்னர் அவற்றுடன் சிறிதாக 
வெட்டியவெங்காயம்,சிறிதாக வெட்டிய
பச்சைமிளகாய், உப்பு சிறிதாக வெட்டிய
கறிவேப்பிலை மிளகுத்தூள் ஸ்ரீலங்கா
மிளகாய்தூள் மஞ்சள்கரு முட்டை 
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் அவற்றை ஓரளவு சிறு 
உருண்டைகளாகஉருட்டி வட்டமாகவும் 
கனமாகத் தட்டவும்.

 தட்டியபின்னர் அடித்து வைத்த வெள்ளை
கரு முட்டையில் தட்டியவற்றை போட்டு
 நன்றாக முட்டையை பிரட்டவும் .

அதன் பின்னர் அவற்றை ரஸ்க்தூளில் 
நன்றாக எல்லாபக்கமும் பிர்ட்டவும்

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து எண்ணெய் விட்டு நன்றாக 
கொதிக்கவிடவும்  

எண்ணெய் நன்றாக கொதித்த பின்னர் 
அடுப்பினை ஓரளவு குறைத்துவிடவும் 

அதன் பின்னர் தட்டிய கட்லட்டில் 
சிலவற்றைனை உடையாமல் கொதித்த 
எண்ணெயில் போட்டு பொரியவிடவும்

கட்லட் ஒருபக்கம் பொரிந்ததும் மற்றைய 
பக்கம் திருப்பி பொரியவிடவும் 

கட்லட்டின் இருபுறமும் நன்றாக பொரிந்ததும் 
சுத்தமான சுவையான சத்தான கோழி கட்லட் 
தயாராகிவிடும். .

அதன் பின்னர் அதனை அடுப்பில் உள்ள 
தாட்சியில் உள்ள சூடான எண்ணெய்யில் 
இருந்து எண்ணெய் இல்லாதவாறு 
எடுக்கவும் .

எடுத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு 
சிறிது நேரம் மூடிவிடவும்  


 சிறிது நேரத்தின் பின்னர் ஒருதட்டில் 
பொரித்த சுத்தமான சுவையான சத்தான 
கோழிகட்லட்டில் சிலவற்றை வைத்து 
அதனுடன் தக்காளிசோஸ் வைத்து 
பறிமாறவும் 

கோழி கட்லெட் :

தேவையான பொருட்கள்
முள்ளில்லாதகோழிதசை - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
சிறிதாக வெட்டியபச்சைமிளகாய் - 2 
சிறிதாக வெட்டியபெரியவெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
ஸ்ரீலங்காமிளகாய்தூள் - 1மேசைகரண்டி
உப்பு - தேவையானளவு
வெட்டியகறிவேப்பிலை- தேவையானளவு
முட்டை - 1
ரஸ்க்தூள் - 25 கிராம்
எண்ணெய் - தேவையானளவு


 செய்முறை

ஒரு பாத்திரத்தில் முள்ளில்லாத
கோழிதசையை போடவும் 

 அதன் பின்னர் அதில் கோழி வேக
வைக்க தேவையானளவு தண்ணீர் 
ஊற்றவும்

அதன் பின்னர் அப்பாத்திரத்தை 
அடுப்பில் வைத்து கோழி துண்டினை
 வேகவிடவும்

கோழி வெந்த பின்னர் அதை அடுப்பில் 
இருந்து எடுத்து இன்னொரு பாத்திரத்தில் 
போட்டு ஆறவிடவும் 

ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக்
கொள்ளவும்.

அதன் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் 
போடவும் 

உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு
மசித்துக் கொள்ளவும்.

 அதன் பின்னர் வேக வைத்து மசித்த 
உருளைக்கிழங்கினை வெந்தகோழி 
போட்ட பாத்திரத்தில் போடவும் .

அதன் பின்னர் அவற்றுடன் சிறிதாக 
வெட்டியவெங்காயம்,சிறிதாக வெட்டிய
பச்சைமிளகாய், உப்பு சிறிதாக வெட்டிய
கறிவேப்பிலை மிளகுத்தூள் ஸ்ரீலங்கா
மிளகாய்தூள் மஞ்சள்கரு முட்டை 
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் அவற்றை ஓரளவு சிறு 
உருண்டைகளாகஉருட்டி வட்டமாகவும் 
கனமாகத் தட்டவும்.

 தட்டியபின்னர் அடித்து வைத்த வெள்ளை
கரு முட்டையில் தட்டியவற்றை போட்டு
 நன்றாக முட்டையை பிரட்டவும் .

அதன் பின்னர் அவற்றை ரஸ்க்தூளில் 
நன்றாக எல்லாபக்கமும் பிர்ட்டவும்

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து எண்ணெய் விட்டு நன்றாக 
கொதிக்கவிடவும்  

எண்ணெய் நன்றாக கொதித்த பின்னர் 
அடுப்பினை ஓரளவு குறைத்துவிடவும் 

அதன் பின்னர் தட்டிய கட்லட்டில் 
சிலவற்றைனை உடையாமல் கொதித்த 
எண்ணெயில் போட்டு பொரியவிடவும்

கட்லட் ஒருபக்கம் பொரிந்ததும் மற்றைய 
பக்கம் திருப்பி பொரியவிடவும் 

கட்லட்டின் இருபுறமும் நன்றாக பொரிந்ததும் 
சுத்தமான சுவையான சத்தான கோழி கட்லட் 
தயாராகிவிடும். .

அதன் பின்னர் அதனை அடுப்பில் உள்ள 
தாட்சியில் உள்ள சூடான எண்ணெய்யில் 
இருந்து எண்ணெய் இல்லாதவாறு 
எடுக்கவும் .

எடுத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு 
சிறிது நேரம் மூடிவிடவும்  


 சிறிது நேரத்தின் பின்னர் ஒருதட்டில் 
பொரித்த சுத்தமான சுவையான சத்தான 
கோழிகட்லட்டில் சிலவற்றை வைத்து 
அதனுடன் தக்காளிசோஸ் வைத்து 
பறிமாறவும் 

கோழிக்கறி



தேவையானவை 

 கோழி இறைச்சி -500கிராம் 
 காய்ந்த மிளகாய்-5 
 மிளகாத்தூள்-1 +1/2 தேக்கரண்டி 
 திருவியதேங்காய்- அரை மூடி 

 தாளிக்க 

 கடுகு - சிறிதளவு 
 கடலைபருப்பு- சிறிதளவு 
 கறிவேப்பிலை- சிறிதளவு 
 எண்ணெய்-100 மில்லிலீற்றர் 
 உப்பு- தேவைக்கேற்ப 

 செய்முறை

 கோழி இறைச்சியை மிக சிறு 
துண்டாக வெட்டிகழுவி நீரின்றி 
 பிழிந்துஎடுக்கவும் 

 அடுப்பினை குறைத்து அதன் 
மேல் தாட்சியை (வாணலியை
வைக்கவும் 

 அதன் பின்னர் அதில் எண்ணெய் 
 விட்டு சூடாக்கவும் 

 எண்ணெய் சூடான பின்னர் அதில் 
 கடுகு,கடலைபருப்பு ஆகியவற்றை 
 போட்டு தாளிக்கவும்

 தாளித்த பின்னர் அதில் நறுக்கின 
வெங்காயம் ,மிளகாய்,கறிவேப்பிலை 
 ஆகியவற்றை போட்டு வதக்கவும். 

 சுத்தம் செய்து வெட்டி பிழிந்த கோழி 
 இறைச்சி மிளகாய்தூள் ஆகியவற்றை 
 சேர்த்து எண்ணெயில் வதக்கவும் .

 அதன் பின்னர் அதனுடன் தேவையா 
னளவு உப்பு போட்டு அதன் மேல் 
 தேவையானளவுநீர் ஊற்றி அப்பாத்தி 
ரத்தை மூடி வைக்கவும் 

 கோழி இறைச்சி வெந்து தண்ணீர் 
 வற்றியதும் திருவிய தேங்காய் சேர்த்து 
 பிரட்டிஇறக்கவும். 

 அதன் பின்னர் சுத்தமான சுவையான 
 சத்தான கோழி இறைச்சி தயாராகிவிடும் 

 பின்னர் ஒரு தட்டில் சோற்றினை(சாதத் 
தினை) வைத்து அதன் மேல் சுத்தமான 
 சுவையான சத்தான கோழி இறைச்சியில் 
 தேவையானளவினை வைத்து பறிமாறவும்

 தயிர்,ரசம் சாப்பாட்டிற்கும் நன்றாக 
 இருக்கும். 

 குறிப்பு

எண்ணெய் சற்று அதிகமாக 
இருந்தால் தான் ருசியாக இருக்கும்

Montag, 27. August 2012

காளான் கோழிதொக்கு

தேவையான பொருட்கள் 
 கோழி இறைச்சி - 1/2 கிலோ 
நறுக்கியகுடை மிளகாய் - 150 கிராம் 
நறுக்கியகாளான் - 100 கிராம் 
சாம்பார் வெங்காயம் - 150 கிராம் 
பச்சைமிளகாய் - 4 
இடித்தமிளகுத்தூள்  - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி 
இஞ்சி - சிறு துண்டு 
உள்ளி (பூண்டு) - 6 பற்கள் 

 செய்முறை 

கோழி இறைச்சி  துண்டுகளைச் வெட்டி 
கழுவி சுத்தம்செய்து ஒரு பாத்திரத்தில் 
போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து 
அடுப்பில் வைத்து வேக வைக்கவும் 

பின்னர் சாம்பார் வெங்காயத்தை 
சுத்தமாக உரிக்கவும் 

உரித்து  வெங்காயத்தினை நான்காக 
கீறிக்கொள்ளவும், 

கீறிய வெங்காயத்தை ஒரு தட்டில் 
வைக்கவும் 

பின்னர் மிக்ஸியில் அல்லது அம்மியில் 
பச்சை மிளகாயை போட்டு இடிக்கவும். 

மிக்ஸியில் இஞ்சி, உள்ளி (பூண்டு) ஆகிய
வற்றை போட்டு நறுவல் நெறுவலாக
 அரைத்து எடுக்கவும் 

அதன் பின்னர் ஒரு தாட்சியை அடுப்பில் 
வைத்து அதில் எண்ணெய் விட்டு 
சூடாக்கவும் 

எண்ணெய் சூடான பின்னர் அதில் 
வெங்காயத்தை போட்டு நன்றாக 
வதக்கவும். 

வெங்காயம் வதங்கிய பின்னர் அதனுடன்  
நறுக்கியகுடைமிளகாய், நறுக்கியகாளான், 
வேகவைத்த கோழி இரைச்சி துண்டுகள் 
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்

நன்றாக கலந்தவற்றை நன்றாக வதக்கவும். 

வதக்கிய பின்னர் வதக்கியவற்றுடன் இடித்த  
மிளகாய், அரைத்த இஞ்சி உள்ளி(பூண்டு) 
ஆகியவற்றை போடவும் 

போட்டவற்றை நன்றாக கலந்து வதக்கவும் 

 இவையாவற்றையும் நன்றாக கலந்த பின்னர் 
இதனுடன் தேவையானளவு தண்ணீர் விட்டு 
வேகவைக்கவும் 

இவை யாவும் ஓரளவு வெந்த பின்னர் 
இதனுடன் உப்பை போட்டு நன்றாக  கிளறவும். 

நன்றாக கிளறிய பின்னர் நன்றாக வேக விடவும் 

இவை யாவும் வெந்தவுடன் இதனுடன் அரைத்த 
மிளகுத்தூளை போட்டு நன்றாக கிளரவும்  

கிளறிய பின்னர் 2 நிமிடம் பாத்திரத்தை மூடி 
வைத்துவிட்டு அதன் பின்னர் கறியை இறக்கி 
வேறு பாத்திரத்தில் போடவும்.

இப்போது சுத்தமான சுவையான சத்தான 
காளான் கோழி தொக்கு தயாராகிவிட்டது

ஒரு தட்டில் சோறு /சாதம்), புட்டு, இடியப்பம், 
பாண் ஆகியவற்றில் ஒன்றை வைத்து 
அதனுடன் சுத்தமான சுவையான சத்தான 
காளான் கோழிதொக்கினை வைத்து பறிமாறவும்

நெல்லிக்காய் பச்சடி


நெல்லிக்காயில் விற்றமின் ‘சி’சத்து  உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும். 

தேவையானவை: 
பெரிய நெல்லிக்காய் – 6,
தயிர் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையானளவு.

செய்முறை: 
 பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி சீவி
ஒரு பாத்திரத்தில்போடவும்

பின்னர் அதில் உப்பு, பச்சைமிளகாய் தயிர்
ஆகியவற்றை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

கலக்கிய பின்னர் அடுபில் தாட்சியை வைத்து
எண்ணெய் விட்டு சூடாக்கி அதில்  கடுகு
போட்டு தாளிக்கவும்

தாளித்த பின்னர் அதனை கலக்கியவற்றுடன்
போட்டு மெதுவாக கலக்கவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான
நெல்லிக்காய் பச்சடி தயாராகிவிடும்

நெல்லிக்காய் பச்சடி


தேவையானபொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 6, 
தயிர் – 1 கப், 
பச்சை மிளகாய் – 1, 
கடுகு – 1/2 தேக்கரண்டி 
எண்ணெய் –1 தேக்கரண்டி  
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை:

பெரிய நெல்லிக்காயை சீவவும் 

அதன் பின்னர் அதனை மிக்ஸியில்
போடவும் 

போட்டபின்னர் அதனுடன்  உப்பு, 
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு 
நைஸாக அரைக்கவும்,

அரைத்த பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் 
போடவும் 

போட்ட பின்னர் அதனுடன்  தயிர் 
போட்டு எல்லாவற்றையும் நன்றாக  
கலக்கவும்.

கலந்த பின்னர் அடுப்பில் தாச்சியை 
வைத்து சூடாக்கவும் 

தாச்சி சுட்டதும் எண்ணெய் விட்டு 
சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில் கடுகை 
போட்டு தாளிக்கவும் 

கடுகு தாளித்த பின்னர் அடுப்பில் உள்ள
 தாளித்த தாச்சியை இறக்கி வைக்கவும் 

வைத்த பின்னர் தாளித்த கடுகை எடுத்து 
கலந்து வைத்தவற்றுடன் சேர்த்து நன்றாக 
கலக்கவும்
இப்போது சுத்தமான சுவையான சத்தான 
நெல்லிக்காய் பச்சடி தயாராகி விடும் 

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு 
சாதத்தைவைத்து அதனுடன் சுத்தமானதும் 
சுவையானதும் சத்தானதுமான நெல்லிக்காய் 
பச்சடியினை வைத்து  பறிமாறவும்


குறிப்பு: 
நெல்லிக்காயில் நிறைய விற்றமின் ‘சி’சத்து  
உள்ளது அத்துடன் நெல்லிக்காயை சாப்பிட்டால் 
உடல் குளுமை அடையும். 

Sonntag, 26. August 2012

மோர்க் குழம்பு

தேவையானவை:

 1) அரைக்கவும்

தேங்காய் துண்டுகள் – 2,
பொட்டுக்கடலை – 1 மேசைக்கரண்டி
 பச்சை மிளகாய் – 3,
பூண்டு – ஒரு பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
சீரகம் – 2 தேக்கரண்டி

2)பொறிக்கவும் 

மோர் – ஒரு கப்,
மஞ்சள்தூள்-அரைத்தேக்கரண்டி
வெந்தயம் – அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங் காயம்- சிறிதளவு
வெண்டைக்காய் (அ) கத்தரிக்காய் வத்தல்

3)
வெள்ளரிக்காய்-1
கொத்தமல்லி இலை– சிறிதளவு,
கடுகு- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு –  1தேக்கரண்டி, 
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை: 

அடி கனமான பாத்திரத்தினை 
வைத்து அதில்  மோரை 
விடவும்

அதன் பின்னர் அதில் அரைத்த 
தேங்காய் கலவை, மஞ்சள்தூள், 
உப்பு ஆகியவையை போட்டு 
இப்பாத்திரத்தை அடுப்பில் 
வைத்து மிதமான தீயில் 
கிளறவும். 

சிறிது நேரத்தின் பின்னர் கலர் 
மாறியதும் அதில் சிறிது தண்ணீர் 
விட்டு கொதிக்க வைக்கவும்  

கொதித்ததும் அதில் பொறித்து 
வைத்துள்ள  வத்தல் வெட்டி 
வைத்துள்ள வெள்ளரிக் ஆகிய
வற்றை சேர்த்து கொதிக்க  
வைக்கவும் 

இவை யாவும் கொதித்ததும் 
இப்பாத்திரத்தை அடுப்பில் 
இருந்து இறக்கவும். 

 அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில் 
 கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், 
பெருங்காயம், கறிவேப்பிலை 
ஆகியவற்றை போட்டு நன்றாக 
தாளிக்கவும் 

தாளித்த பின்னர் இதை செய்து 
வைத்துள்ள  குழம்பில் போட்டு 
அதன் மேல் , கொத்தமல்லி 
இலையை போடவும் 

இபோது சுத்தமான சுவையான 
சத்தான் மோர் குழம்பு தயாராகி
விட்டது 

ஒரு தட்டில் சோற்றினை போட்டு 
அதன் மேல் இக் குழம்பை விட்டு 
பரிமாறவும் 

Samstag, 25. August 2012

ரவை


தேவையான பொருட்கள் 
கோதுமை ரவை- 1/2 கிலோ 
பீன்ஸ்- 100 கிராம் 
காலிபிளவர்- 1 /2 கிலோ 
பச்சை பட்டாணி - 1/2 கிலோ 
பச்சை மொச்சை -100 கிராம் 
கத்தரிக்காய் - 100 கிராம் 
வெங்காயம் - 150 கிராம் 
தக்காளி - 150 கிராம் 
பச்சை மிளகாய்- 4 
இஞ்சி - சிறுதுண்டு 
பூண்டு -10 பல் 
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் 
தனியாதூள் -3 டீஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன் 
எலுமிச்சம் பழம் -1 (சாறு எடுக்கவும்) 
பட்டை - 2 சிறுதுண்டு
 லவங்கம் - 2 
புதின இலை - சிறுகட்டு 
எண்ணெய் -1/2 குழிக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
நீர் - இரு பங்கு 

 செய்முறை 

 பச்சை மொச்சையை உரித்துக் 
கொள்ளவும். 

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் 
 கொள்ளவும்.

 இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் 
விழுதாக்கவும். 

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் 
ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் 
சேர்த்துத் தாளிக்கவும்.

 நறுக்கிய வெங்காயம், தக்காளி 
இவற்றைச் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது, புதினா
இலை சேர்த்து வதக்கவும். 

நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, 
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 
வேக விடவும். 

மிளகாய்த்தூள், தனியாதூள், 
மஞ்சள்தூள் சேர்க்கவும். 

அத்துடன் ரவையைப் போல் 
இருமடங்கு நீர் ஊற்றி கொதித்ததும், 
ரவையைச் சேர்த்து உப்பு சரி பார்த்து 
வேக விடவும். 

குறைந்ததீயில் சில நிமிடங்கள் 
வைத்திருந்து, எலுமிச்சம் பழச்சாறு 
சேர்த்து இறக்கவும்.

தக்காளி கொத்சு


தேவையானவை : 
தக்காளி - 1/2 கிலோ,
மிளகாய் வற்றல் - 7,
(தனியா )- 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1.5 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் 1/4 - கப்,
பெருங்காயப் போடி - 2 சிட்டிகை,
பெரிய வெங்காயம் - 2,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு.  - தேவையான அளவு

செய்முறை : 

ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர்
விட்டு அதனை அடுப்பில் வைத்து, அதில் தக்காளிப்
பழங்களைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன்
இறக்கவும்.

ஆறிய பின், தண்ணீரை வடித்து
தக்காளியின் மேல்தோலை நீக்கி,

நன்கு பிசைந்து வடிகட்டி வைத்துக்
கொள்ளவும்.

மிளகாய் வற்றல், தனியா, சீரகம்,
தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு
ஆகியவற்றை நைசாக அரைத்துக்
கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, நறுக்கிய
வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும், அரைத்த
விழுதை அதில் சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்கவும்.

அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், இரண்டு
சிட்டிகை பெருங்காயப் போடி சேர்த்து
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி
இட்லி/தோசையுடன் பரிமாறவும்.

Freitag, 24. August 2012

கறிவேப்பிலை குழம்பு


தேவையான பொருட்கள்

உதிர்த்த கறிவேப்பிலை - 1 கப்,
செத்தமிளகாய் - 6,
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு -1மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் -  1தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4  தேக்கரண்டி

 தாளிக்க
கடுகு -தேவையானளவு
வெந்தயம் - தேவையானளவு
வடகம் - சிறிதளவு (இருந்தால் போடலாம்)

 செய்முறை :

 தாச்சியில்எண்ணெய் ஊற்றாமல்,
கறிவேப்பிலையை சிறிது சிறிதாக
மொரமொரப்பாக வறுத்து தனியாக
எடுத்து வைக்கவும்.

பிறகு, கடாயில் சிறிது எண்ணெய்
ஊற்றி மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு
சீரகம், மிளகு, பெருங்காயம் இவற்றை
வறுத்து

அதோடு, வறுத்த கறிவேப்பிலையை
சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்க
வேண்டும்.

புளியைக் கரைத்து, கப் தண்ணீர் விட்டு
அதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு,
அரைத்ததையும் சேர்த்து நன்றாக கலந்து
 கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி
தாளிக்கும் பொருட்களைப் போட்டு 
தாளித்துகரைசலை ஊற்றி கொதிக்க
விடவும்.

எண்ணெய் மேலே வந்ததும், இறக்கி
பரிமாறவும்.

 சாதத்தோடு ஊற்றி சாப்பிட்டால் மிகவும்
ருசியாக இருக்கும்.

Donnerstag, 23. August 2012

வெண்டிக்காய் சாதம்



தேவையான பொருட்கள் 

 வெட்டிய பிஞ்சு வெண்டிக்காய் - 1 கப், 
வெட்டிய தக்காளிப்பழம் - 2, 
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி(தனியா)தூள் - 1 தேக்கரண்டி
வெட்டிய பச்சை மிளகாய் - 2, 
தேங்காய்ப்பால் - 1 மேசைக்கரண்டி
 உதிரியாக வடித்த சாதம் - 2 கப், 
சீரகம் - தேவையானளவு
 உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை : 

தாச்சியில் எண்ணெய் விட்டு கொதித்ததும், 
அதில் சீரகத்தை போட்டு தாளிக்கவும். 

தாளித்தபின்னர் அதனுடன்  தக்காளிப்பழம், 
வெண்டிக்காய், மிளகாய்த்தூள், கொத்தமல்லி
த்தூள், பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை 
போட்டு  நன்றாக வதக்கவும். 

வெண்டைக்காய் நன்றாக வதங்கியதும் 
அதனுடன் தேங்காய்ப்பாலை விட்டு 
நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் கலவை தடிப்பாகும் வரை 
விடவும்

கலவை தடிப்பானதும் அதனுடன்  வடித்த 
சாதத்தை சேர்த்துக் கிளறவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
வெண்டிக்காய் சாதம் தயாராகிவிடும் 

அதன் பின்னர் ஒரு தட்டில் வெண்டிக்காய் 
சாதத்தை வைத்து  சூடாக பரிமாறவும்.

வெண்டிக்காய் சாதம்


தேவையான பொருட்கள் : 
நறுக்கிய பிஞ்சு வெண்டிக்காய் - 1 கப்
நறுக்கிய தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி 
தனியா தூள் (மல்லி) - 1 தேக்கரண்டி 
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - 1 மேசைக்க்ரண்டி
உதிரியாக வடித்த சோறு (சாதம்) - 2 கப்
சீரகம் -தேவையானளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் - தேவையானளவு

 செய்முறை : 

வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்ததும்
சீரகத்தை சேர்த்துத் தாளிக்கவும். 

அதன் பின்னர் தக்காளி, வெண்டிக்காய், மிளகாய்த்தூள், 
மல்லித்தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு 
சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெண்டிக்காய் வதங்கியதும், தேங்காய்ப்பாலை 
சேர்க்கவும். 

கலவை கெட்டியானதும், வடித்த சாதத்தை சேர்த்துக் 
கிளறி சூடாக பரிமாறவும்.

Mittwoch, 22. August 2012

முப்பருப்பு ஊத்தாப்பம்

 தேவையான பொருட்கள் 
பச்சரிசி - 3 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு - 1 கப் 
பயித்தம்(பாசிப்)பருப்பு - 3மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 கப் 
செத்த (காய்ந்த) மிளகாய் - 8 
பெருஞ்சீரகம்சோம்பு - 1/4 தேக்கரண்டி
சின்னசீரகம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு 
தேங்காய் துருவல் - 1/4 மூடி 
சின்ன வெங்காயம் - 1/2 கப் 
எண்ணெய் - 1+1/2 கப் 

 செய்முறை 

முதல் நாள் இரவு  ஒரு பாத்திரத்தில் 
அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பயித்தம்(பாசிப்)பருப்பு ஆகியவற்றை 
போட்டு கழுவி ஊறவைக்கவும். 

 மறுநாள் காலை முதல் நாள் ஊறப்
போட்டவற்றை சிறிதளவு கரகரப்பாக 
அரைக்கவும். 

அரைத்த பின்னர் அவற்றை ஒரு 
பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .

 பின்னர் கிரைண்டரில், மிக்ஸியில் 
அல்லது அம்மியில் மிளகாய், சின்ன
சீரகம், பெருஞ்சீரகம்(சோம்பு), உப்பு 
ஆகியவற்றை போட்டு நன்றாக 
அரைக்கவும். 

 அரைத்த பின்னர் சின்ன வெங்காயத்
தினை சுத்தம் செய்து அதனை பொடிப் 
பொடியாக வெட்டிக்கொள்ளவும். 

வெட்டிய சின்ன வெங்காயத்தை 
ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

 பின்னர் கரகரப்பாக அரைத்த மா 
போட்ட பாத்திரத்தில்  திருவிய 
தேங்காய், நறுக்கிய வெங்காயம், 
அரைத்த மிளகாய் விழுது ஆகிய
வற்றை போடவும் 

அதன் பின்னர் அவற்றை நன்றாக 
கலக்கவும் 

கலந்தவற்றை  அடைமா செய்யும் 
பதத்தில் வைத்துக் கொள்ளவும். 

பின்பு அடுப்பில் தோசைக்கல்லினை 
வைத்து சூடாக்கவும் 

தோசைக்கல் சூடேறிய பின்னர்  அதில் 
சிறு ஊத்தாப்பங்கலாக ஊற்றவும் 

ஊற்றிய பின்னர் அதனை ஓரளவு 
வேக விடவும் 

ஓரளவு வெந்த பின்னர் அவற்றை 
திருப்பி போடவும்  

திருப்பி போட்ட பின்னர் அதனை 
ஓரளவு வேகவிடவும்  

ஓரளவு  வெந்த பின்னர் அதனை 
எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 
வைக்கவும் 

இப்படியே எல்லா ஊத்தப்பங்க
ளையும் செய்து பாத்திரத்தில் 
போட்டு வைக்கவும் 

 பின்னர் அடுப்பில் தாட்சியினை வைத்து 
அதில் பொரிக்கத் தேவையானளவு 
எண்ணைய்யை விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடேரினதும் செய்த 
 ஊத்தாப்பங்களை ஒன்றோண்டாக 
போட்டு பொரிக்கவும்  

இவை நன்றாக சிவந்து மொருமொரு
வென பொரிந்ததும் அதனை எடுத்து 
வேறு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
சத்தான சூடான முப்பருப்பு ஊத்தாப்பம் 
தயாராகிவிடும்

தயாரான பின்னர் ஒருதட்டில் தேவை
யானளவு முப்பருப்பு ஊத்தாப்பங்களை
 வைத்து பரிமாறவும் 

விருபினாள் ஏதாவது சட்னி அல்லது 
ஏதாவது இனிப்புவகை வைத்து பரிமாறலம்

Dienstag, 21. August 2012

சமையலில் காரம் அதிகமாக இருந்தால்


சமையலில் காரம் அதிகமாக இருந்தால் தேவையானளவு தேசிக்காய்சாறு (எலுமிச்சைப் பழச்சாறு) சேர்க்கவும்.

Montag, 20. August 2012

கொள்ளு ரசம்


உடல் இளைக்க உபயோகப்படுத்தும் ஒரு பொருள் கொள்ளு ரசம் ஆகும் கொள்ளின் மூலம், ரசம், துவையல் ஆகியவை செய்ய இயலும். 

தேவையான பொருட்கள்:- 

கொள்ளு - இரண்டு டீஸ்பூன் 
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன் 
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன் 
மிளகு - ஒரு டீஸ்பூன் 
சீரகம் - அரைடீஸ்பூன் 
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது 
தக்காளி - 1 1/௨ 
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளி - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 

தாளிக்க:- 
நெய் - ஒரு டீஸ்பூன் 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன் 
பெருங்காயம் - சிறிது 
கொத்தமல்லி - சிறிதளவு 


செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிறிது நேரம் சிவக்க வருக்க வேண்டும். 

ஆறியவுடன், கொள்ளுடன், தனியா, முக்கள் தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை vizhuthaaga அரைக்கவும்.

 ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஏழு நிமிடம் கொதிக்க விடவும். 

நன்றாக கொதித்தவுடன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நுரைத்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். 

தாளிக்கும் சட்டியில், எண்ணெய் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும். 

கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு அருந்தலாம்.

கொள்ளு ரசம்

கொள்ளு ரசம் - உடல் இளைக்க உபயோகப்படுத்தும் ஒரு பொருள். கொள்ளின் மூலம், ரசம், துவையல் ஆகியவை செய்ய முடியும். 

தேவையான பொருட்கள்

கொள்ளு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி(தனியா) - 2 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு -  2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
தக்காளி பழம்- 2
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
புளி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

 தாளிக்க:-
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி(தனியா)  - சிறிதளவு

செய்முறை

வெறும் தாட்சியை (வாணலியினை) அடுப்பில்
வைத்து அதில் கொள்ளை போட்டு எண்ணெய்
விடாமல் சிறிதுநேரம் சிவக்க வறுக்கவேண்டும்.

வறுத்தபின்னர் அதனை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போட்டு ஆறவிடவேண்டும்

ஆறியவுடன் மிக்ஸியில் கொள்ளு
கொத்தமல்லி(தனியா), தக்காளிபழம்
ஒன்று ,துவரம்பருப்பு, மிளகு, சீரகம்,
வெந்தயம் ஆகியவற்றை போடவும்

போட்டபின்னர் அவற்றி விழுதாக
அரைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ரசம் வைக்கும்
பாத்திரத்தினை வைத்து அதில் , ஒரு
தக்காளிபழம், புளி விழுது, ஆகியவற்றை
போடவும்

ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஏழு நிமிடம் கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நுரைத்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்.

தாளிக்கும் சட்டியில், எண்ணெய் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.

கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு அருந்தலாம்.

கம்மங்கூழ்


கூழ். இந்த கம்மஞ்சோறு கொஞ்சம்
வெதுவெதுன்னு இருக்கறப்போவே
உருண்டைகளாக உருட்டி தண்ணீரில்
போட்டு வைக்க வேண்டும்.

வேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு ,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து
கூழாக குடிக்கலாம்.

அல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர்
சாதமாகவும் சாப்பிடலாம். ஒரு வாரம்
வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.
ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால்,

அந்த தண்ணீரை மட்டும் தினமும்
மாற்ற வேண்டும்.

 அந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து
குடித்தால் நல்லா இருக்கும்.

புளி தண்ணீன்னு சொல்லுவாங்க.
வெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும்.

கம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி
எடுப்பாங்க.

இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி
எடுக்கலாம்.

 - கம்மங்கூழ் சாப்பிடுவதால் உடல் சூடு
தனியும் - குடல் நோய்களுக்கு வராமல்
பாதுகாக்கும்

 - உடல் வலிமை சேர்க்கும் கம்மஞ்சோறு
செய்து அதனுடன் முருங்கைகீரை குழம்பு
வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே
தனிதான்.

கம்மஞ்சோறு செய்து இரவில் தண்ணீர்
ஊற்றி வைத்து காலையில் கொஞ்சம் தயிர்
சேர்த்து குடிக்க வேண்டும்

இத்துடன் கொஞ்சம் வெங்காகயம் சேர்த்து
குடிக்க வேண்டும்.

Sonntag, 19. August 2012

கம்மஞ்சோறு

தேவையானவை

 கம்பு - 2 கப்

 செய்முறை

கம்பு எடுத்து மிக்ஸியில் விட்டு சிறிது
தண்ணீர் தெளித்து 2 முறை பல்ஸ் பண்ணி
எடுக்கவும்.

அதில் தண்ணீர் விட்டு கழுவினால் கம்பின்
மேல் உள்ள தவிடு நீங்கி விடும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர்
விட்டு, கொதிக்க வைத்து, கழுவி வைத்த
கம்பை சேர்த்து கலக்கவும்.

5 நிமிடம் கொதித்ததும், சிறு தீயில் வைத்து,
 அடிக்கடி கிளறி விடவும்.

நன்கு கெட்டியானதும் மிகவும் சிறு தீயில் 5
நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும்.

கம்மஞ்சோறு ரெடி. கருவாட்டு குழம்போட
நல்லா இருக்கும் கத்தரிக்காய் குழம்பும்
நல்லா இருக்கும்.

கச்சான் (வேர்க்கடலை) சப்பாத்தி

தேவையான பொருட்கள்
கச்சான் (வேர்க்கடலை )– 1/4கப்,
கோதுமை மா – 1கப்,
பால்-1மேசைக்கரண்டி
பட்டர்-1-2 தேக்கரண்டி
முட்டை -1(விரும்பினாள்)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
சின்ன வெங்காயம், – 4,
செத்த மிளகாய் – 4,
சிறிய மாங்காய் துண்டு – 1,
உப்பு -தேவையானளவு.
எண்ணெய் – தேவையானளவு. 

 செய்முறை: 
மிக்ஸியில் கச்சான் (வேர்க்கடலை )
வெங்காயம், செத்த மிளகாய், மாங்காய்
துண்டு, இஞ்சி, உப்பு ஆகியவற்றை
போட்டு கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த பின்னர் ஒரு பாத்திரத்தில்
கோதுமை மாவை போட்டு அதனுடன்
அரைத்தவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்

நன்றாக கலந்த பின்னர் அதனுடன்
பட்டர் ,பால் , முட்டை ,தண்ணீர்
ஆகியவற்றை போட்டு நன்றாக
குழைக்கவும்

 குழைத்த மாவை சிறு சிறு உருண்டை
 களாக உருட்டவும்.

சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து
 வட்டமாக தட்டவும் .

வட்டமாக தட்டியபின்னர் அடுப்பில்
தோசைக்கல் வைத்து அது சூடானதும்
கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.

எண்ணெய் தடவிய பின்னர் வட்டமாக
தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்

அது வெந்ததும் அதனை மறுபக்கம்
திருப்பி போட்டு வேகவிடவும்.

இருபக்கமும் வெந்ததும் சுவையான,
மென்மையான சுத்தமான சத்தான
வேர்க்கடலை சப்பாத்தி தயாராகிவிடும் .

இதனைப்போல மற்றைய சப்பாத்தி
 ளையும் தயார் செய்யவும்.

அதன்பின்னர் ஒருதட்டில் சுத்தமான
சுவையான சத்தான வேர்க்கடலை
சப்பாத்திகளில் சிலவற்றை வைத்து 
அதனுடன் குழம்பு.சம்பல்.ஜாம் 
இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து 
பரிமாறவும் .

Samstag, 18. August 2012

ஓலைப் பக்கோடா


தேவையான பொருட்கள்
கடலை மா– 3 கப்
அரிசி மா– 1 கப்
மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி
உப்பு- தேவையனளவு
அப்பச்சோடா– சிட்டிகை அளவு
எண்ணெய்- தேவையானளவு
முறுக்குக் குழாய்,
ரிப்பன் அச்சு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைமா, அரிசி மா,
உப்பு, மிளகாய்த்தூள்,அப்பசோடா ஆகிய
வற்றை ஒன்றாக கலந்து அரித்து வைக்கவும்.

அதன்பின்னர் அதில்தேவையானளவு கொதிநீர்
ஊற்றி முறுக்கு மா பதத்திற்கு பிசையவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து  அதில் எண்ணெய்
ஊற்றி சூடாக்கவும்

மேலும் மாவை இலகுவாக பிசையவும்.
 (கடினமாக இல்லாமல் பிழிவதற்கு
 இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம்
பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

எண்ணெய்  சூடானதும்  முறுக்கு பிழியும்
குழாயில் ரிப்பன்அச்சை போடவும்

அதன் பின்னர் அதில் குழைத்து வைத்திருக்கும்
மாவை போடவும்

அதன் பின்னர் அதனை எண்ணெய்யில் பிழிந்து
பொரிக்கவும்.

அதனை செம்பொன்னிறமாக பொரிக்கவும்

பொரித்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
ஓலைப்பகோடா தயாராகிவிடும்

அதன் பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போட்டு சூடு ஆறவிடவும்

பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு ஓலைப்ப
கோடாவை வைத்துப்பரிமாறவும்.

மிளகாய் பொடி.-2

தேவையான பொருட்கள்

சிகப்பு மிளகாய் - 1கிலோகிராம்
தனியா(மல்லி)  -  1கிலோகிராம்
சமையல் கொம்பு மஞ்சள் - 100கிராம்
மிளகு  - 150கிராம்
சீரகம்  - 150கிராம்
வெந்தயம் - 100கிராம்
துவரம் பருப்பு  - சிறு கைபிடி 
உளுத்தம் பருப்பு - சிறு கை பிடி 
காய்ந்த கறிவேப்பில்லை - சிறு கை பிடி 
அரிசி - சிறு கை பிடி 

 செய்முறை

 மிளகாய், தனியா, மஞ்சள் இவற்றை நன்றாக 
வெயிலில் காய வைக்க வேண்டும்

மீதி எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக 
வானலியில் (கடாய்) போட்டு பொன்னிறமாக
 வறுக்கவும்....

இவற்றை மொத்தமாக மிளகாய், தனியா 
உடன் அரவை மில்லில் அரைத்துக் கொள்ள 
வேண்டும்.... 

மிளகாய், தனியா வறுக்க கூடாது....

Freitag, 17. August 2012

தக்காளிச்சட்டினி


தேவையான பொருட்கள்
தக்காளி – நன்கு பழுத்தது 4
பச்சை மிளகாய் – 4-5 (தேவைக்கேற்ப)
உப்பு – தேவையானளவு

தாளிக்க – 
கடுகு -1 தேக்கரண்டி
உளுந்து-1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
பெருங்காயத்தூள்-சிறிதளவு
கறிவேப்பிலை -தேவையானளவு

செய்முறை
தக்காளிப் பழங்களை கீறி 5 நிமிடம்
மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும்
(அல்லது பிரஷர் குக்கரில் சிறிதளவு நீர் 
விட்டுஒரு விசில் வரும் வரை வேக
வைக்கவும்.அல்லது அடுப்பில் பாத்திரத்தை 
வைத்து அதில்  தக்காளிப்பழம் மூழ்கும் 
வரை நீர் விட்டு வேக வைக்கவும்)

தக்காளிப்பழங்கள் வெந்ததும் அதனை 
ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்

 தக்காளிப் பழங்கள் ஆறியதும் அதன்
தோலைஉரித்துவிட்டு மிக்ஸியில் 
போட்டு நன்றாக மசிக்கவும்

 (தக்காளிப்பழத்தை மசிப்பதிற்கு 
தண்ணீர் விட வேண்டாம்) 

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
எண்ணெய் விட்டு சுடவைக்கவும் 

எண்ணெய் கொதித்ததும் அதில் 
கடுகு, உளுந்து,கறிவேப்பிலை, 
பச்சைமிளகாய் ,பெருங்காயத்தூள் 
ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். 


மசித்த தக்காளிச் சாற்றில் உப்பு, 
தாளித்தவை ஆகியவற்றையும் 
போட்டு கிளறவும். 

இப்போது சுத்தமான சுவையான 
தக்காளி சட்னி தயாராகிவிட்டது

 ஒரு தட்டில்  தோசை, இட்லி 
இடியப்பம் ஆகியவற்றில் ஒன்றை 
வைத்து அதனுடன் சுத்தமான 
சுவையான தக்காளிசட்னியை
 வைத்து பறிமாறவும் 

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்




Donnerstag, 16. August 2012

சனிக்கிழமைவாழ்த்துக்கள்


Mittwoch, 15. August 2012

முட்டைப்பந்து


1. முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து
 ஊற்றிக் கொள்ளவும்.

2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய்,
 உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கிக்
 கொள்ளவும்.

3. சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சிறிது
சேர்த்துக்கொள்ளவும்.

4. பின் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து
ஊற்றி அரைவேக்காட்டில் கொழ கொழவென
புரட்டி புரட்டி பந்து போல செய்து சாப்பிடலாம்.
 இதன் சுவையை அடித்துக் கொள்ளவே
முடியாது.

வெள்ளிக்கிழமைவாழ்த்துக்கள்


Dienstag, 14. August 2012

கருணை கிழங்கு பக்கோடா


கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள்
இருக்கின்றன. கருணை கிழங்கை வழக்க
மான வறுவல் போல்செய்யாமல், இப்படி
 பக்கோடாக்களாக செய்தால் குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விரும்பி சாப்பிடுவர்.

 தேவையானவை 
 கருணை கிழங்கு - 1/2 கிலோ
 கடலை மாவு - 1/4 கப்
 சோள மாவு - 2 ஸ்பூன்
 அரிசி மாவு - 1 ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
 பூண்டு - 5
 சீரகம் - 1 ஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
 உப்பு - தேவைகேற்ப
 எண்ணெய் - தேவைகேற்ப

 செய்முறை 
 கருணை கிழங்கை தோலுரித்து,
சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

 பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது
மஞ்சள் தூள், கருணை கிழங்கு சேர்த்து
 வேகவைக்கவும்.

 வேகவைத்த கிழங்கை தனியே வைக்கவும்

 சீரகம் மற்றும் பூண்டை அரைத்து, அதனோடு
 மிளகாய் தூள், கடலை மாவு, சோள மாவு,
 அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து
 பேசியாவும். (இந்த கலவையில் நிறைய
 தண்ணீர் சேர்க்க கூடாது.) தயாரித்த
கலவையுடன் வேகவைத்த கருணை கிழங்கை
சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து
 எண்ணெய்யில் பொரிதெடுத்தால் மொறு
மொறுப்பான சுவைமிகுந்த கருணை கிழங்கு
 பக்கோடா தயார்

வியாழக்கிழமைவாழ்த்துக்கள்


Montag, 13. August 2012

கருணை கிழங்கு பகோடா

கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள்
இருக்கின்றன. கருணை கிழங்கை
வழக்கமான வறுவல் போல் செய்யாம
ல், இப்படி பக்கோடாக்களாக செய்தால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
 அனைவரும் விரும்பி சாப்பிடுவர். 

தேவையானவை
 கருணை கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 1/4 கப்
சோள மாவு - 2 ஸ்பூன்
 அரிசி மாவு - 1 ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
 பூண்டு - 5
 சீரகம் - 1 ஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
 உப்பு,
எண்ணெய் - தேவைகேற்ப

 செய்முறை

கருணை கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக
 நறுக்கிகொள்ளவும். 

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள்
தூள், கருணை கிழங்கு சேர்த்து வேகவைக்கவும்.

வேகவைத்த கிழங்கை தனியே வைக்கவும்

 சீரகம் மற்றும் பூண்டை அரைத்து, அதனோடு
மிளகாய் தூள், கடலை மாவு, சோள மாவு,
அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து
பேசியாவும். (இந்த கலவையில் நிறைய
தண்ணீர் சேர்க்க கூடாது.)

 தயாரித்த கலவையுடன் வேகவைத்த கருணை
கிழங்கை சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து
எண்ணெய்யில் பொரிதெடுத்தால் மொறு
மொறுப்பான சுவைமிகுந்த கருணை கிழங்கு
பக்கோடா தயார்

இக்குறிப்பை வழங்கியவர்
திரு துஷ்யந்தன் பாலேந்திரன் (பிரான்ஸ்)

புதன்கிழமைவாழ்த்துக்கள்


Sonntag, 12. August 2012

உருளைக்கிழங்கு குருமா


கிழங்கு வகைகளிலேயே எல்லோருக்கும்
மிகவும் பிடித்தமான ஒரே கிழங்கு உருளைக்
கிழங்கு ஆகும் இக்கிழங்கில் மாச்சத்து
அதிகளவில் காணப்படுகிறது அத்துடன் இதில்
எத்தனையோ விதமான சமையல்  குறிப்பு
களும் உள்ளன அதிலும் குறிப்பாக பலருக்கு
உருளைக்கிழங்கை சிப்ஸ் செய்து சாப்பிட
பிடிக்கும் .சிலருக்கு அதனை பொரியல்,
வறுவல் என்று செய்து சாப்பிட பிடிக்கும்.
ஆனால் நாங்கள் உங்களுக்கு உருளைக்
கிழங்கில் குருமாவை எப்படி செய்யலாம்
என்ற குறிப்பை தருகிறோம் அதன் படி
 உருளைக்கிழங்கில் குருமாவை செய்து
சாப்பிட்டு அதன் சுவையை அறிந்து மகிழவும்.
அத்துடன் நீங்கள் விரும்பினாள் நீங்கள் செய்த
உருளைக்கிழங்கு குருமாவின் சுவை அதன்
படம் ஆகியவற்றை எங்களுக்கு அறியத்தரவும்

 தேவையான பொருட்கள்: 
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 6 
நறுக்கியவெங்காயம் - 2 
நறுக்கியதக்காளி - 4
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
கருவாப்பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
துருவியதேங்காய் - 1/2 மூடி
 கசகசா - 2 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 உப்பு - தேவையானளவு

 செய்முறை: 
 மிக்ஸியில் தேங்காய்.கசகசா ஆகியவற்றை 
போட்டு நன்கு அரைக்கவும்

 அதன் பின்னர் ஒரு வாணலி(தாட்சி)யை
 அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்
ஊற்றி கொதிக்கவிடவும்.

 எண்ணெய் கொதித்ததும், அதில் கருவாப்
பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி
விழுது பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து
வதக்கவும்

 பின்னர் நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய
தக்காளி ஆகியவற்றை அதனுடன் சேர்த்து
 நன்றாக வதக்கவும்.

 இவையாவும் நன்றாக வதங்கிய பின்னர்
அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை
 போட்டு வதக்கவும்.

 அதன் பின்னர் அவற்றுடன் மிளகாய்த்
தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் உப்பு
ஆகியவற்றை சேர்க்கவும்.

 அதன் பின்னர் இவற்றுடன் தண்ணீர் விட்டு
நன்றாக கொதிக்க விடவும்

 இவையாவும் நன்றாக கொதித்ததும்
இவற்றுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய்
கலவையைப் போட்டு நன்றாக கிளறிவிடவும்

. அதன் பின்னர் இவற்றின் பச்சை வாசனை
போகும் வரை கொதிக்கவிடவும்.

 இவையாவும் கொதித்த பின்னர் சுத்தமான
சுவையான சத்தான உருளைக்கிழங்கு குருமா
 தயாராகிவிடும்.

 அதன் பின்னர் தயாரான உருளைக்கிழங்கு
குருமா உள்ள பாத்திரத்தை அடுப்பில் இருந்து
இறக்கவும்.

 ஒரு தட்டில் சாதம், சப்பாத்தி ,பூரி,பாண்,
இடியப்பம்,பிட்டு ஆகியவற்றில் ஒன்றை
வைத்து அதனுடன் சுத்தமான சுவையான
சத்தான உருளைக் கிழங்கு குருமாவையும்
வைத்து பரிமாறவும் .

இக்குறிப்பை வழங்கியவர் -
திரு.துஷ்யந்தன் பாலேந்திரன் (பிரான்ஸ்)

செவ்வாய்க்கிழமைவாழ்த்துக்கள்


Samstag, 11. August 2012

உருளைக்கிழங்கு குருமா



கிழங்கு வகைகளிலேயே எல்லோருக்கும்
மிகவும் பிடித்தமான கிழங்கு உருளைக்கிழங்கு
ஆகும் இக்கிழங்கில் மாச்சத்து அதிகளவில்
காணப்படுகிறதுஅத்துடன் இதில் எத்தனையோ
விதமான சமையல்குறிப்புகளும் உள்ளன
அதிலும் குறிப்பாக பலருக்கு உருளைக்
கிழங்கை சிப்ஸ் செய்து சாப்பிட பிடிக்கும்
.சிலருக்கு அதனை பொரியல், வறுவல் என்று
செய்து சாப்பிட பிடிக்கும். ஆனால் நாங்கள்
உங்களுக்கு உருளைக்கிழங்கில் குருமாவை
எப்படிசெய்யலாம் என்ற குறிப்பை தருகிறோம்
அதன் படி உருளைக்கிழங்கில் குருமாவை
செய்து சாப்பிட்டு அதன் சுவையை அறிந்து
மகிழவும்.அத்துடன் நீங்கள் விரும்பினாள்
நீங்கள் செய்த உருளைக்கிழங்கு குருமாவின்
சுவை அதன் படம் ஆகியவற்றை எங்களுக்கு
அறியத்தரவும்

தேவையான பொருட்கள்: 
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 6
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 4
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
கருவாப்பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
துருவியதேங்காய் - 1/2 மூடி
கசகசா - 2 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 உப்பு - தேவையானளவு

 செய்முறை: 
 மிக்ஸியில் தேங்காய்.கசகசா ஆகியவற்றை
போட்டு நன்கு அரைக்கவும்

 அதன் பின்னர் ஒரு வாணலி(தாட்சி)யை
அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி
கொதிக்கவிடவும்.

 எண்ணெய் கொதித்ததும், அதில் கருவாப்
பட்டை,இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி
விழுது .பூண்டு விழுது ஆகியவற்றை
சேர்த்து வதக்கவும்

 பின்னர் நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய
தக்காளிஆகியவற்றை அதனுடன் சேர்த்து
நன்றாக வதக்கவும்.

இவையாவும் நன்றாக வதங்கிய பின்னர்
அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை
போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் அவற்றுடன் மிளகாய்த்
தூள், மஞ்சள்தூள், மல்லித் தூள்  உப்பு
ஆகியவற்றை சேர்க்கவும்.

அதன் பின்னர் இவற்றுடன் தண்ணீர்
விட்டு நன்றாக கொதிக்க விடவும்

 இவையாவும் நன்றாக  கொதித்ததும்
இவற்றுடன்அரைத்து வைத்துள்ள
தேங்காய் கலவையைப் போட்டு
நன்றாக கிளறிவிடவும்.

அதன் பின்னர் இவற்றின் பச்சை
வாசனை போகும் வரை கொதிக்க
விடவும்.

இவையாவும் கொதித்த பின்னர்
சுத்தமான சுவையான சத்தான
உருளைக்கிழங்கு குருமா தயாராகி
விடும்.

அதன் பின்னர் தயாரான உருளைக்
கிழங்கு குருமா உள்ள பாத்திரத்தை
அடுப்பில் இருந்து இறக்கவும்.

 ஒரு தட்டில் சாதம், சப்பாத்தி ,பூரி,பாண்,
இடியப்பம்,பிட்டு ஆகியவற்றில் ஒன்றை
வைத்துஅதனுடன் சுத்தமான சுவையான
சத்தான உருளைக்கிழங்கு குருமாவையும்
 வைத்து பரிமாறவும் .


இக்குறிப்பை வழங்கியவர் -
திரு.துஷ்யந்தன் பாலேந்திரன் (பிரான்ஸ்)

திங்கள்கிழமைவாழ்த்துக்கள்


Freitag, 10. August 2012

இனிப்பு உளுந்து வடை

தேவையான பொருட்கள் 
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
சீனி(சர்க்கரை) - 250 கிராம்
அரிசி மா - 1 தேக்கரண்டி 
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி 
உப்பு - 1 சிட்டிகை 
எண்ணெய் - 1/2 லிட்டர் 

 செய்முறை 
 ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதனுடன் உளுந்தை விட ஓரளவு அதிகமான தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .

அதன் பின்னர் கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் ஊரிய உளுந்தை போட்டு  சிறிது தண்ணீர் தெளித்து, அதனுடன் அரிசி மாவும் உப்பும் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். 


 அதன் பின்னர் அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும் 

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து அதில் சீனி (சர்க்கரை) யை போடவும் . 

சீனி(சர்க்கரை)  போட்ட பின்னர் அதனுடன் சீனி(சர்க்கரை) மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும்.

பின்னர் இவற்றுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.  

இவை யாவற்றையும் பாகு காய்ச்சவும்.

பாகு பிசுபிசு பதத்தில் வந்த பின்னர் காச்சிய பாகினை இறக்கி வைக்கவும் 

பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்

எண்ணெய் சூடான பின்னர் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும் 

பொரித்து எடுத்த வடைகளை சீனி (சர்க்கரைப்) பாகில் போட்டு சிறிது நேரம் ஊற விடவும். 

 சிறிது நேரத்தின் பின்னர் அவற்றை  பாகில் இருந்து வடையை எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். 

குறிப்பு 
 உளுந்தை தண்ணீர் நிறைய சேர்த்து  அரைக்க கூடாது அப்படி அரைத்தால் எண்ணெய் அதிகம் தேவைப்படும் 

 உளுந்தை கெட்டியாக அரைத்தால் அரிசி மாவு சேர்க்கத் தேவையில்லை.

ஞாயிற்றுக்கிழமைவாழ்த்துக்கள்


Donnerstag, 9. August 2012

சோளம் கட்லட்

தேவையானபொருட்கள்
பச்சையான சோளமுத்து- 1 கப்,
கருப்பு கொண்டைக் கடலை - 1 கப்,
பொடியாகவெட்டியவெங்காயம்-தேவையானளவு
பச்சை மிளகாய்-தேவையானளவு
இஞ்சி,-தேவையானளவு
கொத்தமல்லி - சிறிது,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு -தேவையானளவு
எண்ணெய் -தேவையானளவு
கராம்பு -2.

செய்முறை
மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் பச்சையான
சோளமுத்துக்களை போட்டு கரகரப்பாக
அரைக்கவும்.

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் கொண்டைக்
கடலையை போட்டு ஊற வைக்கவும்.


பின்னர் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில்
கொண்டைக் கடலை,கராம்பு, காய்ந்த
மிளகாய் ஆகியவற்றை போட்டு கரகரப்பாக
அரைக்கவும்.


அரைத்த பின்னர் அதனை எடுத்து அரைத்த
சோளமுத்துக்கள் போட்ட பாத்திரத்தில்
போடவும்.

பின்னர் இவற்றுடன் வெங்காயம், பச்சை
மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு
ஆகியவற்றை போடவும்.

அதன் பின்பு எல்லாவற்றையும் நன்றாக
சேர்த்துப் பிசையவும்.

பிசைந்த பின்னர் சின்னச் சின்ன கட்லெட்டு
களாக செய்யவும் .

சின்னச் சின்ன கட்லெட்டுகளாக செய்த
பின்னர் அதனை சூடான தோசைக்கல்லின்
மேல்வைத்து, எண்ணெய் விட்டு, இரண்டு
பக்கங்களும் வேகவிடவும்.

 வெந்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
சோளக்கட்லெட் தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் கட்லெற் சிலவற்றை
வைத்து அதனுடன் சட்னி சம்பல்அல்லது
சோஸ் வைத்து பரிமாறவும்.

சனிக்கிழமைவாழ்த்துக்கள்


Dienstag, 7. August 2012

ஓடப்பம்


தேவையானபொருட்கள்
மைதாமா(கோதுமைமா) - 500கிராம்
முட்டை - 1
உப்பு - தேவையானளவு.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமைமா (மைதா)
வை போட்டு அதன் மேல் முட்டையை
உடைத்து ஊற்றவும்

பின்னர் அதனுடன் உப்பு, தண்ணீர்
ஆகியவற்றை  சேர்த்து தோசைமாவு
பதத்துக்கு கரைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் இம்மாவை அப்பதாட்சியில்
ஊற்றவும்

அதன் பின்னர் அத்தாட்சியை இரு பக்கமும்
சுழற்றவும்

அதன் பின்னர் அப்பத்தை வேக வையுங்கள்.

அப்பம் வெந்ததும் ஓடப்பம் தயாராகிவிடும்

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 6. August 2012

கொத்தமல்லிசாதம்

நோய் எதிர்ப்பு சக்திக்கு கொத்தமல்லி 
சாதம் சிறந்தது

தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 1 கப்
கொத்தமல்லி - 2 கப்
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது
 நெய் - சிறிது. 

 வறுத்தரைக்க:
 உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
பெருங்காயம் - சிறிது. 

 தாளிக்க:

 கடுகு - அரை டீஸ்பூன். 
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன். 

செய்முறை
அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
எண்ணெய் விட்டு சூடாக்கவும்

சூடான பின்னர் அதில் கடுகு, உளுத்தம் 
பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய்
வற்றல் ஆகியவற்றை போட்டு பொரிக்கவும்

அதன் பின்னர் அதனை அடுப்பில் இருந்து 
எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும் 

ஆறியதும் அவற்றை மிக்ஸியில் போடவும் 

போட்ட பின்னர் அவற்றுடன்  புளி, உப்பு, 
கொத்தமல்லி ஆகியவற்றையும் போட்டு 
அரைக்கவும். 

அரைத்த பின்னர் ஒருபாத்திரத்தில் சூடான 
சாதம் அரைத்த விழுது சிறிது நெய் ஆகிய
வற்றை சேர்த்துக் கலக்கவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
கொத்தமல்லிசாதம் தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுவையான சத்தான 
கொத்தமல்லிசாதம்  அதனுடன் விரும்பிய 
சம்பல் ஒன்றை வைத்து பரிமாறவும். 

சோளஇட்லி


தேவையானபொருட்கள்
அவித்து ஆறிய சோள முத்துகள் - 1 கப், 
இட்லி மாவு - 2 கப், 
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், 
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கேற்ப, 
எண்ணெய் - சிறிது. 

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அவித்து ஆறிய 
சோளமுத்தை போடவும்

பிறகு அதனுடன் இட்லி மாவை 
போட்டு நன்றாக கலக்கவும்

 பின்னர் அவற்றுடன் இஞ்சி-பூண்டு 
(உள்ளி) விழுது, மஞ்சள் தூள், உப்பு 
சேர்த்துக் கலக்கவும். 

அதன் பின்னர் அடுப்பில் இட்லி
செய்யும் பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு அதனுள்
இட்லி அவிக்கும் தட்டினைவைத்து அதன்
மேற் மூடியால் மூடி பின்பு அதனை
சூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் 
எண்ணெய் தடவும் 

அதன் பின்னர் கலந்த மாவை ஒரு குழி 
கரண்டியால் எடுத்து( ஒருகுழிக்கு முக்கால் 
கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொருகுழியின் 
முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லாகுழி
களையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.

அவிந்ததும் சின்னச் சின்ன துண்டுகளாக
வெட்டி, சட்னியுடன் பரிமாறவும்.

திங்கள்கிழமைவாழ்த்துக்கள்


Sonntag, 5. August 2012

அவல்தோசை

அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள்
அவல்-1 கப்
தயிர்-1 கப்
பச்சையரிசி-1 கப்
புழுங்கல் அரிசி-1 கப்
சோறு (சாதம்)-1தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு
 செய்முறை


ஒரு பாத்திரத்தில் பச்சையரிசி தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 1 மணித்தியாலம்
ஊற விடவும்


அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில்
புழுங்கல் அரிசி தண்ணீர் ஆகியவற்றை
போட்டு 1 மணித்தியாலம் ஊற விடவும்

இவையாவும் ஊறிய பின்னர் இன்னொரு
பாத்திரத்தில் அவல் ,தயிர் ஆகியவற்றை


போட்டு கலந்து  சிறிது நேரம் ஊற விடவும்.

இவையாவும் ஊறிய பின்னர் கிரைண்டரில்
அல்லது மிக்ஸியில் ஊறிய பச்சையரிசி,
ஊறியபுழுங்கல் அரிசி  தண்ணீர் ஆகியவற்
றை போட்டு ஓரளவு நன்றாக அரைக்கவும்.

இவையாவும் அரைத்த பின்னர் அவற்றுடன்
வேக வைத்த சோறு (சாதம்)சேர்த்து
அரைக்கவும்.

 அதன் பின்னர் அவற்றுடன் கலந்து ஊற
வைத்துள்ள அவல் ,தயிர் ஆகியவற்றையும்
 போட்டு  நன்றாக அரைக்கவும்.

இவையாவற்றையும் அரைத்த பின்னர் ஒரு
பாத்திரத்தில் போட்டு இரண்டு மணித்தியாலம்
புளிக்க விடவும்.


புளித்தபின்புஅதற்கு உப்பு,மஞ்சள்தூள்
போட்டு நன்றாக கலக்கவும்.

அதன்பின்பு அடுப்பில் தோசைக்கல்லை
(வாணலியை) வைத்து சூடாக்கவும்.

தோசைக்கல்(வாணலி) சூடானதும் ஒரு
துணியில் (அல்லது ஒரு சிறியஉருளைக்
கிழங்கினை பாதியாக வெட்டி அதன்தோல்
பாகத்தில் முள்ளுக்கரண்டியை செருகவும் )
சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து
எடுத்து அதை அதனை தோசைக்கல்லில்
தடவும்.

அதன் பின்பு கரைத்து புளிக்கவைத்துள்ள
மாவில் ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசைக்
கல்லில் ஊற்றி அதனை நன்றாககரண்டியால்
தடவி தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன்
மேல் கிழங்கு பிரட்டல் கறியை வைத்து அதன்
இரு பக்கமும் மடித்த பின்பு மடித்த தோசையை
திருப்பிபோட்டு வேகவிடவும்.

தோசையின் இரு பக்கமும் நன்றாக வெந்த
பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தேவையானளவு
தோசைகளை வைத்து சட்னி,சம்பல்,கிழங்கு
பிரட்டல்கறி இவற்றில் ஏதாவது ஒன்றை
வைத்து  பரிமாறவும்.

ஞாயிற்றுக்கிழமைவாழ்த்துக்கள்


Samstag, 4. August 2012

அரிசிபருப்பு சாதம்

தேவையான பொருட்கள்
 புழுங்கல் அரிசி - 1 கப் 
 துவரம்பருப்பு - 3/4 கப் 
 சின்ன வெங்காயம் - 10 
 பச்சை மிளகாய் - 2 
 வர மிளகாய் - 2 
 உள்ளி (பூண்டு )- 5 பற்கள் 
 நறுக்கிய தேங்காய் பற்கள் - 1/2 கப் 
 மிளகாய்தூள் -  1/2 தேக்கரண்டி 
 மஞ்சள்தூள் -  1/2 தேக்கரண்டி 
 தக்காளிப்பழம்- 2 
 கத்திரிக்காய் - 1
 உருளைக்கிழங்கு - 1

தாளிக்க தேவையானவை 
உளுத்தம் பருப்பு,   1/2 தேக்கரண்டி 
கடலைப்பருப்பு -  1/2  தேக்கரண்டி 
 கடுகு, -  1/4தேக்கரண்டி 

அரைக்க தேவையானவை
 மிளகு - 1/2 தேக்கரண்டி 
 சின்ன சீரகம் -  1/2 தேக்கரண்டி 
 பெருஞ்சீரகம் (சோம்பு) -  1/2 தேக்கரண்டி 

செய்முறை

சின்ன வெங்காயம், உள்ளி (பூண்டு ), தக்காளி ஆகியவற்றை வெட்டவும் 

வெட்டியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும் .

அதன் பின்னர் பச்சைமிளகாய், வரமிளகாயை ஆகியவற்றை கீறி இன்னொரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். 

வைத்த பின்னர் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடி பொடியாக வெட்டவும்.

வெட்டிய கத்தரிக்காய்,உருளைக்கிழங்கினை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்னர் மிக்ஸியில் மிளகு , சின்னசீரகம் ,பெருஞ்சீரகம் (சோம்பு) ஆகியவற்றை போட்டு அரைக்கவும்.

அரைத்தவற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்தி சூடாக்கவும்.

எண்ணெய் சூடான பின்னர்  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் .

 தாளித்த பின்னர் அதனுடன் வரமிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், உள்ளி (பூண்டு) தக்காளிப்பழம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 

வதக்கிய பின்னர் அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்

தண்ணீர் சேர்த்த பின்னர் அதனுடன்  மிளகாய்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய தேங்காய் பற்கள், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, உப்பு  ஆகியவற்றை சேர்க்கவும்.

இவையாவும் சேர்ந்த பின்னர்  ஓரளவு அவிந்ததும்

இவற்றுடன்  புழுங்கல் அரிசி ,துவரம்பருப்பு போட்டு சிறிது நேரம் மூடி விடவும் 

சிறிது நேரத்தின் பின்னர் அவற்றுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு  பாத்திரத்தை மூடி அவிய விடவும் 

இவையாவும் அவிந்த பின்னர் அடுப்பை நிறுத்திவிடவும் 

அடுப்பை நிறுத்தி சரியாக 10 நிமிடம் கழித்ததும் அடுப்பில் இருந்து இவையாவும் போடப்பட்ட பாத்திரத்தை இறக்கி விடவும்.

இப்போது சுத்தமான சுவையான சத்தான அரிசிபருப்புசாதம் 
தயாராகிவிட்டது

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான சத்தான அரிசிபருப்பு சாதத்தை வைத்து அதனுடன் அப்பளம் ,பொரித்த உப்பு மிளகாய் வத்தல் , கீரை சம்பல் அல்லது தூதுவளை சம்பல் ஆகியவற்றை வைத்து பறிமாறவும்