கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 30. November 2010

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

Montag, 22. November 2010

Samstag, 13. November 2010

மைக்கிரோவே ஸ்டஃப்ட் கத்தரிக்காய் கறி


மைக்ரோவேவ் ஸ்டஃப் கத்தரிக்காயில்
உயிர்சத்துகள்,மினரல்,கல்சியம்,
பொஸ்பரஸ்,பொட்டாசியம் நிறைந்து
காணப்படும் அத்துடன் சுவையானதும்
சுத்தமானதுமாகும்



தேவையான  பொருட்கள் 
பிஞ்சு கத்தரிக்காய் - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - கால் கப்
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
நெல்லிக்காய் பவுடர்(ஆம்லாபவுடர்)-1தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பெரியவெங்காயம் - 1
உப்பு - தேவையானளவு


செய்முறை 
பிஞ்சு கத்தரிக்காயின் காம்பை வெட்டாமல்
அதன் அடிப்புறத்தில் லேசாகவும் நான்காக
வும் பிளக்கவும்.

பிளந்த கத்தரிக்காயை ஒரு மைக்கிரோவில்
வைக்ககூடிய பாத்திரத்தில் போடவும்.

 இப்படியே எல்லா கத்தரிக்காயையும் வெட்டி
முதலில் வெட்டிய கத்தரிக்காய் போட்ட பாத்தி
ரத்தில் போடவும்.

அதன் பின்னர் அவற்றை எண்ணெயில் பிரட்டி
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி மைக்ரோ
வே அவனில் வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

5 நிமிடங்களின் பின்பு அதை இறக்கவும்

அதன் பின்னர் அந்த கத்தரிக்காயை வெளியே
எடுக்கவும்

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,
 உப்பு, நெல்லிக்காய்பவுடர்(ஆம்லாபவுடர்),
மிளகுத்தூள், கரம்மசாலாத்துள் ஆகியவற்றை
போட்டு நன்றாக கலக்கவும்.

கலந்த பின்னர் அவற்றை கத்தரிக்காய்க்குள்
வைத்து ஸ்டஃப்டு செய்யவும்.

ஸ்ட்ஃப்டு செய்யப்பட்ட கத்தரிக்காய்களை
மைக்ரோ அவனில் மீடியம் ஹையில்
3 நிமிடங்கள் வைக்கவும். பின்பு 2 நிமிடங்கள்
விடவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
மைக்ரோவேவ் ஸ்டஃப்டு கத்தரிக்காய்
தயாராகி விடும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தினை) அல்லது சப்பாத்தியை வைத்து
அதனுடன் சுத்தமான சுவையான சத்தான
 மைக்ரோவேவ் ஸ்டஃப்டு கத்தரிக்காய்
வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
கத்தரிக்காய் அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

மைக்கிரோவே சேமியா கேசரி


சுவையான மைக்ரோவே சேமியா கேசரியை
எல்லோரும் விரும்பி உண்ணுவார்கள்.

தேவையான பொருட்கள் 

சேமியா - 100 கிராம்
சீனி - 50 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
ஆரஞ்சு சிகப்பு - 1சிட்டிகை
உப்பு - 1சிட்டிகை
தண்ணீர் - 1கப்

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு
சேமியாவும் தண்ணீரும் சேர்த்து
மூடி மைக்ரோவேவ் அவனில்
வைத்து 5 நிமிடங்கள் ஹையில்
வேக விடவும் .

பின்பு பாத்திரத்தை திறந்து சீனி,
ஆரஞ்சு சிகப்பு நிறம், உப்பு சேர்த்து
மூடி அவனில் வைத்து 3 நிமிடங்கள்
ஹையில் வைக்கவும்.

பிறகு 2 நிமிடங்கள் திறந்து வைக்கவும்.

அதன் பின்பு 3 நிமிடங்கள் ஹையில்
வைக்கவும்.

பின்பு சுத்தமான சுவையான சத்தான
மைக்கிரோவே சேமியா கேசரி
தயாராகிவிடும்

அதன் பின்னர் அந்தப் பாத்திரத்தை
மைக்கிரோவேவில் இருந்து எடுத்து
வெளியே எடுக்கவும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையா
னளவு சுத்தமான சுவையான சத்தான
மைக்கிரோவே சேமியா கேசரியை
வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

அச்சாறு

கரட், பப்பாசிக்காய், போஞ்சிக்காய் ஆகிய
காய்களில் அச்சாறு தயாரிக்கப்படுகின்றன.
அச்சாறு கார்போஹைட்ரேட், கொழுப்பு,
கரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து (A,B1,
B2,B3,B6,C,D) பொட்டாசியம், பொஸ்பரஸ்,
மக்னீசியம்,சோடியம், கல்சியம் ஆகியவை
நிறைந்த ஒர் உணவு பொருள்.


தேவையானபொருட்கள் 
பச்சைமிளகாய் - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
பப்பாசிக்காய் - 125 கிராம்
போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்
கரட் - 125 கிராம்
வினிகர் - 3 கப்
செத்தல் மிளகாய் - 5
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி - 5 பல்
2 இன்ச் நீளத்துண்டுஇஞ்சி - 1
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பெருங்காயம் - 1துண்டு

செய்முறை 
கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு
ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி
வினிகர் சேர்த்து மென்மையாக
அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது
போல அரைக்கவும்.

வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி
கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும்.

போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி
துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3")
துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின்
தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக
வெட்டி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின்
காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி
நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி
அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி
வைக்கவும்.

பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து
அதில் அரை கப் வினிகரை ஊற்றி
அதனுடன் விதை நீக்கிய பச்சை
மிளகாயை போட்டு அவிய விடவும்.

பச்சைமிளகாய் அவிந்து வினிகர்
வற்றியதும் அதிலிருக்கும் பச்சை
மிளகாயை வேறு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரை கப்
வினிகரை ஊற்றி வெங்காயத்தை
போட்டு அவித்து வினிகர்வற்றியதும்
 எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி கரட்டை போட்டு அவித்து
வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதே சட்டியில் அரை கப் வினிகரை
ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து
ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை
 ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து
வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில்
விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு
நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த
பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த கரட்டை போட்டு நன்றாக
கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு
நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள்,
மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து
இறக்கி அதை ஆற விடவும்.

அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில்
போட்டு மூடி வைக்கவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
அச்சாறு தயராகிவிடும்

அதந பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தினை) ,தயிர் சாதத்திணை அல்லது
சப்பாத்தி ஆகியவற்றை வைத்து அதனுடன்
 அச்சாறு சிறிதளவு வைத்து பரிமாறவும்



 கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
அச்சாறை நீண்ட காலத்திற்கு வைத்து
பயன்படுத்தலாம்.
ஈரக்கரண்டியை அச்சாறு போத்தலினுள்
போட்டு அச்சாறினை எடுத்தால் அது
பழுதடைந்து விடும்.


மாற்று முறை 
மரக்கறிவகைகளை நீராவியில் அவித்
தெடுத்து பின்பு அரை கப் வினிகர்
விட்டு கரைத்த கூட்டில் இட்டு அவித்து
கொள்ளலாம்.


எச்சரிக்கை
பப்பாசிக்காய் அலர்ஜி உடையவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

Freitag, 12. November 2010

கறி பணிஸ்

கறி பணிஸை எல்லோரும் விரும்பி
சுவைத்து உண்பார்கள். அத்துடன் இது
பிரயாணங்கள் செய்யும் போது
இலகுவாக எடுத்து சென்று உண்ணக்
கூடிய சிற்றுண்டியாகும்.


தேவையான பொருட்கள் 
கோதுமைமா (மைதாமா) - 1கிலோ
உப்பு - தேவையானளவு
பட்டர் - 1மேசைக்கரண்டி
அப்பச்சோடா(Baking powder) - (1- 3) தேக்கரண்டி
அல்லது ஈஸ்ட் - கால் பாக்கெட்
முட்டை - (1- 3)
பால் (நகச்சூடுள்ள ) - தேவையான அளவு
எண்ணெய் -தேவையானளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா),
அப்பச்சோடா(Baking powder)அல்லது ஈஸ்ட்,
பட்டர், உப்பு, ஒரு முட்டை ஆகியவற்றை
போடவும் .

அதன் பின்பு நகச்சூடுள்ள பாலை கோதுமை
மா(மைதாமா) உள்ள பாத்திரத்தில் விட்டு
சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக்
கொள்ளவும்.

பின்பு சிறிதளவு தண்ணீரை எடுத்து மாக்
கலவையின் மேல் எல்லா பக்கமும் பூசவும்.

பின்பு பாத்திரத்தில் மாக்கலவையை வைத்து
 பாத்திரத்தின் வாயை துணியினால் இறுக
மூடி கட்டி (காற்று உட்புகாதவாறு)(3 -6) மணி
நேரங்கள் வைத்திருக்கவும் .

இப்போது மாவு இரு மடங்காகி இருக்கும்.

பின்னர் மாவை சிறிதளவு எடுத்து உருண்டையாக
 உருட்டி ஒரு தட்டில் வைத்து சப்பாத்திக்கு
 தட்டுவது போல் வட்டமாக தட்டி நடுவில் செய்து
வைத்திருக்கும் கறி கலவையை வைக்கவும்.

அதன் பின்பு அதை ரோல்ஸ்க்கு மடிப்பதை
போல ஆனால் சிறிதளவு தடிப்பமாகவும்
மடிக்கவும்.

(பின்பு ஒரு கிண்ணத்தில் 2 முட்டை மஞ்சள்
கருவை போட்டு முள்ளுகரண்டியால் அடிக்கவும்).

அதன் பின்பு மடித்த பணிஸின் மேலே முட்டை
மஞ்சள் கருவை தடவவும்.

மஞ்சள் கரு தடவிய பணிஸ் மேலே பிரஷினால்
எண்ணெயை பணிஸ் முழுவதும் தடவி வைக்கவும்.

இதைப் போல் தேவையான அளவு செய்துக்
கொள்ளவும்.

இந்த பணிஸை பேக் செய்யும் தட்டில் இடைவெளி
விட்டு அடுக்கவும்.

அவனை முதலிலேயே 350 F அல்லது 250°C
சூடுப்படுத்தி வைக்கவும்.

சூடுப்படுத்திய அவனில் பணிஸை அடுக்கிய
தட்டை வைக்கவும்,

25 நிமிடங்களுக்கு பின்பு அவனில் சூட்டை
குறைக்கவும் (200°c அல்லது 300°f). 20 நிமிடங்
களுக்கு பின்பு பணிஸை எடுத்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
குழைக்கும் முறையும், பாத்திரத்தை சுற்றி
கட்டி வைக்கும் முறை, பேக் பண்ணும் முறை,
பிரட்டல் கறி.


எச்சரிக்கை 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

யோக்கட்

யோக்கட் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்
மிகவும் பிடித்ததும் பாலில் காணப்படும் சகல
சத்துகளும் நிறைந்ததுமான ஒர் குளிர் உணவு.

தேவையான பொருட்கள் 
பால் - ஒரு லிட்டர்
சீனி - 130 கிராம்
ஜெலற்றீன் - ஒரு தேக்கரண்டி
யோக்கற் - ஒரு கப்
யோக்கற் கப் - 30 கப்
தேமோ மீற்றர் - ஒன்று
கொதிநீர் - 4 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையானளவு
ஓகண்டி துணி - தேவையானளவு
கலரிங் - 4 துளிகள் (விரும்பினால்)
எசன்ஸ் - 3 துளிகள் (விரும்பினால்)
இக்குபேற்றர்

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் பால் சீனி ஆகிய
இரண்டையும் போட்டு நன்றாக
கரைத்து கொள்ளவும்.

இன்னொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை
போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டி
கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பெரிய
பாத்திரத்தை வைத்து அந்த பெரிய
பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு
தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை
அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.

பால் கொதித்தபின்பு பாலின் வெப்பநிலை
யை தேமா மீற்றரினால் அளக்கவும்.
பாலின் வெப்பநிலை 90°c க்கு வந்தவுடன்
அடுப்பை அணைத்து விடவும்.

அடுப்பை அணைத்த  பின்பு கொதித்த  
பாலை 30 நிமிடத்திற்கு அடுப்பிலே
வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பிலிருந்து பாலை
இறக்கி ஆறவிடவும் .

பால் ஆற தொடங்கும் போது தேமோ
மீற்றரினால் அளக்கவும்.

பாலின் வெப்பநிலை 60°cக்கு வந்த
பின்பு அதனுடன் ஜெலற்றீன் கலவையை
விட்டு நன்றாக கரைக்கவும் .

நன்றாக கரைத்த பின்னர் ஒரு பாத்திரத்தின்
வாய்ப்பகுதியில் ஓகண்டி துணியை வைத்து
அதன் மேல் கொதித்து ஆறி செலற்றீன் கரைத்த
பாலை ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.

அதன் பின்பு திரும்பவும் பாலினை ஆறவிடவும்.

பால் ஆறி பாலின் வெப்பநிலை 40°c அடையும்
போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால்
நன்றாக கலக்கவும்.

கலக்கிய பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து
யோக்கற் கப்பில் ஊற்றி 40°c வெப்பநிலையில்
5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.

அதன் பின்னர் யோக்கற் இறுகியதும்
இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து
அறை வெப்பநிலையில் 10 நிமிடம்
 வைக்கவும்.

அதன் பின்பு எடுத்து 24 மணித்தியாலம்
குளிரூட்டியில் வைக்கவும்.

 பின்பு எடுத்து அறை வெப்பநிலையில்
2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.


 மாற்று முறை - 
இக்குபேற்றர் இல்லாதவிடத்தில் பெரிய
ரெஜிபோம் பெட்டியை எடுத்து அலுமினிய
தாளை அதன் உட்புறம் எல்லா பக்கங்கலி
லும் விரித்து அதனுள் கொள்ளக்கூடிய
அளவிற்கு யோக்கற் கப்பை பரவலாக
அடுக்கி அதன் பின்பு அதன் மேலாக 3
வரிசைகளுக்கு யோக்கற் கப்புகளை
அடுக்கிப் பெட்டியின் மூலையில் பல்ப்பை
பொருத்தி 2" இடைவெளி விட்டு மூடி 42°c
வெப்பநிலையில் 12 மணித்தியாலத்திற்கு
வைத்து எடுத்து முன்னைய முறையில்
குளிசாதனபெட்டியில் வைத்தெடுக்கவும்.


 எச்சரிக்கை - 
அஸ்மா, அலர்ஜிநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் - 
பாலின் வெப்ப நிலையை தேமா மீற்றரினால்
அளக்கவும்,

பாலின் வெப்பநிலை 90°c க்கு வந்தவுடன் அடுப்பை
அணைத்து விடவும்,

ஆற தொடங்கி 60°cக்கு பின்பு ஜெலற்றீன் கலவையை
விடவும்,

40°c அடையும் போது யோக்கற் இட்டு கரண்டியால்
நன்றாக கலக்கவும்,

40°c வெப்பநிலையில் 5 மணித்தியாலம்
இக்குபேற்றரில் வைக்கவும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

Donnerstag, 11. November 2010

இலங்கை மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு(ஆள்வள்ளி கிழங்கு)
கறி மிகவும் சுலபமாக செய்ய கூடியதும் .
சுத்தமானதும் சத்தானதும் ஆகும்.

தேவையான பொருட்கள் 
மரவள்ளிக்கிழங்கு - 400 கிராம்
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - சிறிதளவு
பால் - 4 மேசைகரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1மேசைகரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு


செய்முறை 

மரவள்ளிக் கிழங்கினை தோல் உரிக்கவும்.

அதன் பின்னர் அதன் நடுவில் உள்ள
வேரினை வெட்டி எடுக்கவும்

பின்னர் தேவையானளவு சிறு சிறு
துண்டங்களாக வெட்டவும்

அதன் வெட்டிய துண்டுகளை ஒரு
பாத்திரத்தில் போடவும்.

அதன் பின்னர் அவற்றை நன்றாக
கழுவி வைக்கவும்.

அதன் பின்னர் வெவ்வேறு பாத்திரங்களில்
வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை
சின்னதாக அரிந்து வைக்கவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து
எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடாகியதும் அதில் கடுகு, சோம்பு
போட்டு வெடிக்க விடவும்

அவை வெடித்ததும் அதனுடன் வெங்காயத்தை
போட்டு பொரிய விடவும்

அதன் பின்பு அவற்றுடன்  மரவள்ளிக்கிழங்கு,
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் என்பவற்றை
போட்டு பிரட்டி ஒரளவு தண்ணீர் விட்டு அவிய
விடவும்

கிழங்கு அவிந்ததும் அதனுடன் உப்பு,
கறிவேப்பிலை போட்டு பிரட்டவும்.

 பின்பு அதனுள் பால் விட்டு கிளறி, 5 நிமிடம்
மெல்லிய தீயில் மூடி வைக்கவும்.

வைத்த பின்பு சுத்தமான சுவையான சத்தான
மரவள்ளிக் கிழங்கு கறி தயாராகிவிடும்

அதன் பின்னர் அடுப்பில் இருந்து அவற்றை
இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் போடவும் .

அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாத்தத்தை) அல்லது இடியப்பத்தை,
புட்டினை வைத்து அதனுடன் சுத்தமான
சுவையான சத்தான மரவள்ளிக் கிழங்கு
கறியை வைத்து பரிமாறவும்

எச்சரிக்கை 
தயவு செய்து இஞ்சி சேர்க்க வேண்டாம்.
இதை செய்து சாப்பிடும் நாட்களில்
இஞ்சி சாப்பாடு எதுவும் சாப்பிட வேண்டாம்.

முட்டைக்கோப்பி


முட்டை கோப்பி புரதச்சத்து, மினரல் நிறைந்த
ஒரு பானம் ஆகும் .

தேவையான பொருட்கள் 
முட்டை -1
கோப்பித்தூள் - 1தேக்கரண்டி (மட்டமாக)
சீனி - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
கொதிநீர் - 1டம்ளர்


செய்முறை 

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்திலிட்டு
அதனுடன் சீனியையும் சேர்த்து நன்றாக
நுரை பொங்கக் கூடியதாக அடிக்கவும்.

ஒரு டம்ளரில் கோப்பித்தூளை போட்டு
அதனுடன் கொதிநீர் விட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அடித்த முட்டையுள்ள பாத்திரத்தில்
சூடான கோப்பியை சிறிது சிறிதாக ஊற்றிக்
கொண்டு முள்ளுக்கரண்டியால் இடை விடாது
அடிக்கவும்.

அடிக்கும் போது அதில் நுரை வரும் அந்த
நுரையுடன் பரிமாறவும்.

எச்சரிக்கை - 
சர்க்கரைநோயாளர், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி
முட்டைக்கோப்பி அருந்தவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
(1) அடித்த முட்டையுள்ள பாத்திரத்தில் சூடான
கோப்பியை சிறிது சிறிதாக ஊற்றிக் கொண்டு
முள்ளு கரண்டியால் இடை விடாது அடிக்கவும்.

(2) அடித்த முட்டையுள்ள பாத்திரத்தில் சூடான
கோப்பியை ஊற்றும் போது முட்டை அவியாது
பார்த்து கொள்ள வேண்டும்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

Mittwoch, 10. November 2010

லஸி

இலங்கையில் வெயில் காலங்களுக்குரிய
பிரபல்யமான பானம் லஸி. அத்துடன் 
இது ஒரு குளிர்மையான பானம் ஆகும் . 

தேவையான பொருட்கள் 
தயிர் - 4 கப்
சீனி - 200 கிராம்
வனிலா - ஒரு மேசைக்கரண்டி
கலரிங்(விரும்பிய) - 4 துளிகள் (விரும்பினால்)

செய்முறை 
கிரைண்டரிலில் (மிக்சியில் )தயிர், சீனி
ஆகிய இரண்டையும் ஒன்றாக போட்டு
கலந்து சீனி கரையும் வரை நன்றாக
அடிக்கவும்.

அடித்த கலவையினுள் வனிலா, கலரிங்
ஆகியவற்றை விட்டு மீண்டும் நன்றாக
அடிக்கவும்.

அதன் பின்பு அதை ஒரு பாத்திரத்தில் அடித்த
வற்றை ஊற்றவும் .

ஊற்றிய பின்னர் அப்பாத்திரத்தை  குளிர்சாதன
பெட்டியில் வைத்து குளிராக்கவும்.

குளிராக்கிய பின்பு சுத்தமான சுவையான
சத்தான லஸி தயாராகிவிடும் .

அதன் பின்னர் ஒரு கிளாசில் தேவையானளவு
சுத்தமான சுவையான சத்தான லஸியை ஊற்றி
 பரிமாறவும் .

எச்சரிக்கை - 
அஸ்மா நோயாளர், சர்க்கரைநோயாளர்,
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி லஸி அருந்தவும்.

மோர்

மோர் இலங்கையில் வெயில் காலங்க
ளுக்குரிய பிரபல்யமான பானம் ஆகும்
அத்துடன் இது ஒரு வகை குளிர்மையான
சத்தான சுவையான  பானமும் ஆகும்.


தேவையான பொருட்கள் 
தயிர் - 4 கப்
தண்ணீர் - 2 கப்
சிறியஐஸ்கட்டி- 6
உப்பு - தேவையானளவு
சிறியவட்டமாக வெட்டியபச்சைமிளகாய் - 2
சிறியதுண்டுகளாக வெட்டியபெரியவெங்காயம்-௧


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் தயிருடன் தண்ணீர்
விட்டு நன்றாக கரைக்கவும்.

கரைத்த கலவையுடன் வெட்டிய வெங்காயம்,
உப்பு, வெட்டிய பச்சைமிளகாய், ஐஸ்கட்டி
ஆகியவற்றை போட்டு நன்றாக  கலக்கவும்.

கலக்கிய பின்னர் சுத்தாமான சுவையான
சத்தான மோர் தயாராகிவிடும் .

அதன் பின்னர் இதனை அழகான கப்பில்
ஊற்றி பரிமாறவும் .

எச்சரிக்கை 
ஆஸ்துமா நோயாளர், சர்க்கரைநோயாளர்,
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி மோர் அருந்தவும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்

Dienstag, 9. November 2010

பலாப்பழ ஜுஸ்



பலாப்பழ ஜுஸ்மிக மிக சுவையானதும்   
உடனடி புத்துணர்ச்சிக்கு எளிய ஜூஸும்
அத்துடன் சத்துக்கள் பல நிறைந்ததுமான 
ஒரு பானமுமாகும்.

தேவையான பொருட்கள்  
பலாப்பழம் - 20 சுளைகள்
பால் - 2 கப்
தண்ணீர் - 1கப்
சீனி - 12 தேக்கரண்டி
வனிலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் கலரிங் (ஐஸிங் கலர்) -அரை/கால் தேக்கரண்டி
ஐஸ்கட்டி - 10 துண்டுகள்

செய்முறை 
கிரைண்டரில் பலாப்பழசுளைகள், பால்,
 தண்ணீர், சீனி, வனிலா, மஞ்சள்கலரிங்
ஆகியவற்றை  போட்டு நன்றாக அடித்து
கொள்ளவும்.

அதன் பின்பு அடித்த ஜுஸை எடுத்து
வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டியவற்றை ஒரு கிளாசில்
ஊற்றவும்.


ஊற்றிய பின்னர் அதனுடன் ஐஸ்
கட்டிகளை
போட்டு  கலக்கவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான
சத்தான உடலுக்கு உடனடி புத்துணர்
ச்சியை தரக் கூடிய பலாப்பழ ஜுஸ்
தயாராகிவிடும்.

 அதன் பின்னர் அதனை பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
கிரைண்டரில் முற்றிய பழாப்பழசுளைகள்,
பால், தண்ணீர், சீனி, வனிலா, மஞ்சள் கலரிங்
போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.

எச்சரிக்கை
 சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி குடிக்கவும்.

கரும்பு ஜுஸ்

கரும்பு ஜூஸ் ஈரலுக்கு மிக நல்லதும் ,
உடனடி புத்துணர்ச்சிக்கு எளியதும் ஆகும்


தேவையான பொருட்கள் 
தோல்சீவியகரும்பு (மிகவும்சிறுதுண்டுகள்)-200 கிராம்
குளுக்கோஸ் - 1மேசைக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - சிறிதளவு

செய்முறை 
மிக்ஸியில்அல்லது  கிரைண்டரில்
கிரஷர் பிளேடு போடவும் 

 அதன் பின்னர் அதில் கரும்புத் 
துண்டுகள் குளுக்கோஸ் உப்பு 
தண்ணீர் ஆகியவற்றை போடவும்.

போட்ட   பின்னர் அவற்றை நன்றாக 
அடித்து கொள்ளவும்.

அடித்த பின்பு சுத்தமான சுவையான
சத்தான கரும்பு ஜுஸ் தயாராகி விடும்

அதன் பின்னர் அந்த ஜூஸை வடி
கட்டவும்

வடிகட்டிய பின்னர் அதனை ஒரு
தம்ளரில் அல்லது கிளாசில் ஊற்றி
அதனுடன்  வெள்ளை மிளகுத்தூள்
கலந்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
தோல்சீவிய மிகவும் சிறுதுண்டுகள்
கரும்புத்துண்டுகளோடு குளுக்கோஸ்
உப்பு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து
மிக்ஸியில் கிரஷர் பிளேடு போட்டு
நன்றாக அடித்து கொள்ளவும்.


எச்சரிக்கை
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி குடிக்கவும்.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

Montag, 8. November 2010

முட்டை ரொட்டி

சுத்தமானதும் கல்சியம்,புரதம், 
கார்போவைதரேட்,மினரல்,
உயிர்சத்துகள் போன்ற பற்பல 
சத்துக்கள் நிறைந்ததும் சுவை
யானதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி
உண்ணக் கூடியதுமான ஒர்
உணவே முட்டை ரொட்டி
ஆகும்.

தேவையான பொருட்கள் 
கோதுமைமா (மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையானளவு
பால் - ஒரு மேசைக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
கொதிநீர் - (1- 2) கப்
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை - 5
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் கோதுமைமா, உப்பு,
பால், பட்டர் ஆகியவற்றை போட்டு
நன்றாக கலக்கவும்.

அதன் பின்பு கலந்தவற்றுடன் கொதிநீர்
விட்டு நன்றாக குழைக்கவும்.

அதன் பின்னர் குழைத்த மாவை சிறு
சிறு உருண்டைகளாக உருட்டவும்.

அதன் பின்னர் ஒரு பலகையில்
சிறிதளவு கோதுமைமா(மைதாமா)
வை எடுத்து எல்லா இடமும்
தூவவும் . 

அதன் பின்னர் செய்து வைத்துள்ள
சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து
மா தூவிய பலகையின் நடுப்பக்கத்தில்
வைக்கவும்.

வைத்த பின்னர் அதன் மேல் ஒரு
உருளையை வைக்கவும்.

அதன் பின்னர் அந்த உருளையினால்
மெதுவாக அமர்த்தவும்(எல்லாப்பக்கமும்
ஒரேயளவு தடிப்பு வருமாறு)

பின்னர் அந்த மாவை வட்டமாக தட்டவும்.

வட்டமாக தட்டிய பின்பு அடுப்பில்
தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் கொஞ்
சமாக எண்ணெய் தடவவும்.

பின்பு வட்டமாக தட்டிய மாவினை
சூடான தோசைக்கல்லின் மேல்
போடவும்.

போட்ட பின்னர் அந்த மாவின்  மேல்
ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும்

 அதன் பின்னர் விரும்பினாள் அதன்
மேல் மிளகுத்தூள் போடலாம்

இவையாவற்றையும் செய்த பின்னர்
வேக விடவும்.

அது வெந்ததும் அதனை மறுபக்கம்
திருப்பி போட்டு வேக விடவும்.

 இருப்பக்கமும் வெந்ததும் சுவையான
சத்தான சுத்தமான முட்டை ரொட்டி
தயராகி விடும் .

அதன் பின்னர் சுவையான சத்தான
சுத்தமான முட்டை ரொட்டியை
அடுப்பில் இருந்து எடுத்து ஒரு
தட்டில் போடவும்.

இதனைப்போல மற்றைய முட்டை
ரொட்டிகளையும் தயாரிக்கவும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் சூடான
சுவையான சத்தான சுத்தமான
தேவையான முட்டை ரொட்டியை
 வைத்து தனியாகவோ அல்லது
ஏதாவது கறியோடு வைத்து
பரிமாறவும்.

எச்சரிக்கை
இருதய, சர்க்கரை நோயாளிகள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
சாப்பிடவும்.

மாற்று முறை
கொழுப்பு பட்டருக்கு பதிலாக
கொழுப்பு குறைந்தபட்டரோ
அல்லது எண்ணெய் பாவிக்கலாம்.
பால்க்கு பதிலாக தயிர் பாவிக்கலாம்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ரொட்டி நன்றாக வெந்துவிட்டதா
என்பதை கவனிக்கவும்.
ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும்.
பால் பட்டர், முட்டை ஆகியவற்றை
சேர்த்து செய்த ரொட்டி மென்மையாக
இருக்கும் .

காய்கறி ரொட்டி

காய்கறி ரொட்டி எல்லோராலும்
விரும்பி உண்ண கூடியதும்
சுவையானதும், கல்சியம், புரதம்,
கார்போவைதரேட்,மினரல்,
உயிர்சத்துகள் போன்ற பல
சத்துக்கள் நிறைந்ததும்அத்துடன்
சிறுவர்களுக்கு மிகமிக நல்ல
சத்தான உணவும் ஆகும்.


தேவையானபொருட்கள் 
கோதுமைமா (மைதாமா)-500 கிராம்
உப்பு - தேவையானளவு
பால் - 1மேசைக்கரண்டி
பட்டர்(மாஜரீன்) - 1மேசைக்கரண்டி
கொதிநீர்- (1- 2) கப்
எண்ணெய் - தேவையானளவு
சிறிதுசிறிதாகவெட்டியபெரிய வெங்காயம்- 1
சிறிதுசிறிதாகவெட்டியபச்சைமிளகாய்- 3
சிறிதுசிறிதாகவெட்டியகறிவேப்பிலை- சிறிதளவு
சிறிதுசிறிதாக வெட்டியலீக்ஸ்- 25கிராம்
கரட்(துருவியது) -25கிராம்
சிறிய மெல்லிய வட்டமாக வெட்டியபீன்ஸ்- 25 கிராம்
சிறிதுசிறிதாக வெட்டியமுட்டைகோஸ்- 15 கிராம்
சிறிது சிறிதாக வெட்டியதக்காளிப்பழம் (சிறியது) -1
துருவியஉருளைக்கிழங்கு -1


செய்முறை 
கோதுமைமா, உப்பு, பால், பட்டர்,
வெங்காயம், பச்சைமிளகாய்,
கறிவேப்பிலை, லீக்ஸ், கரட்,
 பீன்ஸ், முட்டைகோஸ்,
தக்காளிப்பழம், உருளைக்கிழங்கு
ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன் பின்பு கலந்தவற்றுடன் 
கொதிநீர் விட்டு நன்றாக
குழைக்கவும்.

பின்னர் குழைத்தமாவை சிறு
உருண்டைகளாக உருட்டவும்.

 உருட்டிய பின்னர் ஒரு பலகை
யில் சிறிதளவு கோதுமைமாவை
(மைதாமாவை) தூவவும்


தூவிய பின்னர் அதன் மேல்
குழைத்து செய்த சிறு உருண்டை
களில் ஒன்றை எடுத்து வைக்கவும் .

அதன் பின்னர் அதன் மேல் உருளை
ஒன்றை வைத்து ஓரளவு தடிப்பாகவும்

வட்டமாகவும்  தட்டவும்.

அதன் பின்னர் அடுப்பில் தோசைக்கல்
வைத்து சூடாக்கவும்

தோசைக்கல் சூடானதும் அதில்
கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.

அதன் பின்பு வட்டமாக தட்டிய
மாவினை அதன் மேல் வைத்து
வேகவிடவும்.

அது வெந்ததும் அதனை மறுபக்கம்
திருப்பி போட்டு வேகவிடவும்.

இருபக்கமும் வெந்ததும் சுவையான
மென்மையான சத்தான காய்கறி
ரொட்டி தயராகி விடும்.

அதன் பின்னர் அதனை அடுப்பில்லிருந்து
எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்

இதனைப்போல மற்றைய ரொட்டிக
ளையும் தயார் செய்து வைக்கவும்

அதன் பின்னர் ஒரு தட்டில் காய்கறி
ரொட்டிகளில் சிலவற்றை வைத்து அதனுன்
கறிவகைகளையோ அல்லது தனியாகவோ
வைத்து பரிமாறவும் .


எச்சரிக்கை 
இருதய, சர்க்கரை நோயாளிகள் வைத்தியரின்
ஆலோசனைப்படி சாப்பிடவும்.


மாற்று முறை 
கொழுப்புபட்டருக்கு பதிலாக கொழுப்பு
குறைந்த பட்டரோ அல்லது எண்ணெய்
பாவிக்கலாம்.
பாலுக்கு பதிலாக தயிர் பாவிக்கலாம்.
விரும்பினால் ஒரு முட்டையை  சேர்க்கலாம்.
காய்கறிகளில் விரும்பியதை பாவிக்கலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள 
ரொட்டி நன்றாக வெந்துவிட்டதா என்பதை
கவனிக்கவும்.
ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும்.
பால் பட்டர், முட்டை ஆகியவற்றை சேர்த்து
செய்த ரொட்டி மென்மையாக இருக்கும்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

Sonntag, 7. November 2010

கறிவேப்பிலை ரொட்டி

கறிவேப்பிலைரொட்டி சிறுவர் முதல்
 பெரியவர்கள் வரை விரும்பி உண்ணு
க்கூடியதும் சுவையானதும் கல்சியம்,
 கார்போவைத ரேட், மினரல், உயிர்சத்து
 A,B,C நிறைந்ததும் ஆன ஓரு உணவு
தேவையானபொருட்கள் 
கோதுமைமா (மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையானளவு
பால் - 1மேசைக்கரண்டி
பட்டர் - 1 மேசைக்கரண்டி
முட்டை - 1
கொதிநீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சிறிதுசிறிதாகவெட்டியபெரிய வெங்காயம் - 1
சிறிதுசிறிதாகவெட்டியபச்சைமிளகாய் - 3
சிறிதுசிறிதாகவெட்டியகறிவேப்பிலை-சிறிதளவு 

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் கோதுமைமா, உப்பு,
பால், பட்டர், முட்டை, வெங்காயம்,
பச்சை மிளகாய், கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன்   பின்பு கலக்கியவற்றுடன்  
கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும்.

குழைத்த மாவை சிறு உருண்டைகளாக
உருட்டவும்.

 அதன் பின்னர் ஒரு மரப்பலகையில்
சிறிதளவு கோதுமைமாவை தூவி
அதன் மேல் குழைத்தமாவில் செய்ய
ப்பட்ட  சிறு உருண்டைகளில் ஒன்றை
எடுத்து  வைக்கவும்.

மரப்பலகையில் வைக்கப்பட்டுள்ள
மாவின் மேல் உருளை ஒன்றை
வைத்து மெதுவாக அமர்த்தி சிறிதளவு
மாவை தூவி வட்டமாக தட்டவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல் வைத்து
அது சூடானதும் கொஞ்சமாக எண்ணெய்
 தடவவும்.

அதன் பின்பு வட்டமாக தட்டிய மாவினை
போட்டு வேக விடவும்.

வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி
போட்டு வேக விடவும்.

இருபக்கமும் வெந்ததும் சுவையான,
சத்தான மென்மையான கறிவேப்பிலை
ரொட்டி தயாராகி விடும்.

இதனைப்போல மற்றைய ரொட்டிகளையும்
 தயார் செய்து பரிமாறவும் .



எச்சரிக்கை - 
இருதய, சர்க்கரை நோயாளிகள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
சாப்பிடவும்.


மாற்று முறை 
கொழுப்பு பட்டருக்கு பதிலாக கொழுப்பு
குறைந்த பட்டரோ அல்லது எண்ணெய்
பாவிக்கலாம்.
பாலுக்கு பதிலாக தயிர் பாவிக்கலாம்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
ரொட்டி நன்றாக வெந்துவிட்டதா
என்பதை கவனிக்கவும்,
ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும்.
பால் பட்டர் , முட்டை ஆகியவற்றை
சேர்த்து செய்த ரொட்டி மென்மையாக இருக்கும்.

ரொட்டி

ரொட்டி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணுக்கூடியதும் சுவைவை
யானதும், கல்சியம், கார்போ வைதரேட்,
மினரல், உயிர்சத்துகள் நிறைந்ததுமான
ஓரு உணவு.
தேவையானபொருட்கள் 
கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையானளவு
பால் - 1மேசைக்கரண்டி
பட்டர் - 1மேசைக்கரண்டி
முட்டை - 1(விரும்பினால்)
கொதிநீர் - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
சிறிதுசிறிதாகவெட்டியபெரிய வெங்காயம் - 1
சிறிதுசிறிதாகவெட்டியபச்சைமிளகாய்- 3 


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் கோதுமைமா, உப்பு, பால்,
பட்டர், முட்டை, வெங்காயம், பச்சைமிளகாய்
ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

அதன் பின்பு கலக்கியவற்றுடன் கொதிநீரை
விட்டு நன்றாக குழைக்கவும்.

குழைத்த மாவை சிறு உருண்டைகளாக
உருட்டவும்.

சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து
வட்டமாக தட்டவும்.

வட்டமாக தட்டிய பின்னர் அடுப்பில்
தோசைக்கல் வைத்து அது சூடானதும்
அதில் கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.

சூடான தோசைக்கல்லில் எண்ணையை
தடவிய பின்னர் வட்டமாக தட்டிய மாவினை
போட்டு வேகவிடவும்.

வெந்த பின்னர் அதனை மறுபக்கம் திருப்பி
போட்டு வேக விடவும் .

இருபக்கமும் வெந்ததும் சுத்தமான சுவையான
சத்தான மெதுமையான ரொட்டி தயராகி விடும் .


சுத்தமான சுவையான சத்தான மெதுமையான
ரொட்டி தயரான அதனை தோசைக்கல்லில்
இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு
வைக்கவும் .


இதனைப்போல மற்றைய ரொட்டிகளையும்
தயார் செய்யவும் .

 அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையான ரொட்டி
களை வைத்து அதனுடன் கறிவகைகள் ,ஜாம்
வகைகள் பட்டர் மாஜரீன் சம்பல்வகைகள் பொடி
வகைகள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து
பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இருதய, சர்க்கரை நோயாளிகள் வைத்தியரின்
ஆலோசனைப்படி சாப்பிடவும்.


மாற்று முறை - 
கொழுப்பு பட்டருக்கு பதிலாக கொழுப்பு
குறைந்த பட்டரோ அல்லது எண்ணெய்
பாவிக்கலாம்.

பாலுக்கு பதிலாக தயிர்
பாவிக்கலாம்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள
ரொட்டி நன்றாக வெந்துவிட்டதா என்பதை
 கவனிக்கவும்.

ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும்,

பால் பட்டர் ,முட்டை ஆகியவற்றை சேர்த்து
செய்த ரொட்டி மென்மையாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்

Samstag, 6. November 2010

பீட்ரூட் இலை வறை

பீட்ரூட் இலை வறுவல் கார்போவைதரேட்,
கொழுப்புசத்து, புரதசத்து, இரும்புசத்து,
உயிர்சத்து A,B1,B2B3,B5,B6,B9,C,பொட்டாசியம்,
பொஸ்பரஸ்,மக்னீஸியம்,சோடியம்,கல்சியம்
ஆகியசத்துக்கள் நிறைந்த ஒர் உணவுப்பொருள்
ஆகும் அத்துடன் இது சுத்தமானது சுவையானது
சத்தானது


தேவையான பொருட்கள்  
குறுணியாக வெட்டியபீட்ரூட் இலை - 1கட்டு
உப்பு - தேவையானளவு
குறுணியாக  வெட்டியபெரிய வெங்காயம் - 1
தேசிக்காய்ச்சாறு (லைம்(லெமன்)ஜூஸ்) - சிறிதளவு
குறுணியாக வெட்டியபச்சைமிளகாய் - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய்ப்பூ - தேவையான அளவு
மிளகாய்த்தூள் -அரை தேக்கரண்டி


செய்முறை 
 ஒரு பாத்திரத்தில்குறுணியாக  வெட்டி
கழுவிய பீட்ரூட் இலைகளை போட்டு
வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து அது சூடாகியதும் தாட்சியில்
(வாணலியில்)எண்ணெய் விட்டு அது
கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம்,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்னர் அதனுடன்  குறுணியாக
வெட்டி கழுவிய பீட்ரூட் இலைகளை
போட்டு ஓரளவு பொரிய விடவும்.
.
அது ஒரளவு பொரிந்த  பின்பு அதனுடன்
மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பூ
ஆகியவற்றை சேர்த்து கலந்து சிறிது
நேரம் பொரிய விட வேண்டும்.

அதன் பின்பு இவற்றுடன் தேசிக்காய்ச்
சாறு(லெமன்)ஜூஸ்) சேர்த்து கலக்கி
நன்றாக பிரட்ட வேண்டும்.

எல்லாம் கலந்து பிரட்டிய  பின்பு 2
நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்பு
இறக்கவும் .

இறக்கிய பின்னர் சுத்தமான சுவையான
சத்தான பீட்ரூட் இலை வறை தயாராகி
விடும்.

தயாரான பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை) வைத்து அதனுடன் சுத்தமான
சுவையான சத்தான பீட்ரூட் இலை வறையை
வைத்து பரிமாறவும் .

எச்சரிக்கை 
இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ண
வேண்டும்.

முளைக்கீரை கறி


முளைக்கீரை நார் சத்து நிறைந்த ஓர்
உணவு பொருள்.
தேவையான பொருட்கள் 
முளைக்கீரை - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம் (சோம்பு )- கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கடுகு - கால் தேக்கரண்டி
பால் - ஒரு கப்
உள்ளி - 4 பல்
வெங்காயம் - அரைப்பாகம்


செய்முறை 
முளைக்கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக
நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி
யினையோ  அல்லது பாத்திரத்தினையோ
வைத்து அதில் கழுவிய முளைக்கீரை உள்ளி
(பூண்டு) ஆகியவற்றை போட்டு அவிய
விடவும்.

முளைக்கீரை ஓரளவு அவிந்ததும் அதனுடன்
பச்சை மிளகாயை  (நீளவாக்கில்) வெட்டி
போடவும்.

இவையாவும் ஒரளவு அவிந்ததும் பால்
விடவும்.

அதன் பின்னர் உப்பு சேர்த்து பின்பு நன்றாக
அவியவிடவும்.

வெந்ததும் அப்பாத்திரத்தை அடுப்பில்
இருந்து இறக்கவும்

இறக்கிய பின்னர் அவிந்த முளைக்கீரையை
மத்தால் அல்லது மரஅகப்பையால்
 மசிக்கவும்.

மசித்த பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து
அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

அதன் பின்னர் அதில் கடுகு,பெருஞ்சீரகம்,
 வெங்காயம் ஆகியவற்றை தாளிக்கவும்,

தாளித்த பின்னர் தாளித்தவற்றை மசித்த
கீரையில் போடவும்.

அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
முளைக்கீரை கறி தயாராகிவிடும்


அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன் சுத்தமான
சுவையான சத்தான முளைக்கீரை கறியை
வைத்து பரிமாறவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
வெந்ததும் மத்தால் மசிக்கவும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

Freitag, 5. November 2010

பேரீச்சம்பழ கேக்

 பேரீச்சம்பழத்தில் அதிகளவு இரும்புசத்து
நிறைந்ததுள்ளது பேரீச்சம்பழத்துடன்
கொழுப்புசத்து நிறைந்த பட்டர் காபோவைத
ரேற்று சத்து நிறைந்த மைதாமா(கோதுமை)
மா கயூ, பிளம்ஸ் ஆகியவை சேர்ந்து பேரீச்சம்
பழ கேக் மிக மிக சுவையுடன் காணப்படும் .

 தேவையான பொருட்கள் 

பேரீச்சம்பழம் - 800 கிராம்
கோதுமை மா - 500 கிராம்
உருக்கியபட்டர் - 500 கிராம்
சீனி - 350 - 400கிராம்
முட்டை - 8
பிளம்ஸ்(சிறுதுண்டுகளாகவெட்டிய) - 300 கிராம்
வனிலா - (2 - 4 ) தேக்கரண்டி
தேயிலை - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
கயூ(சிறுசிறுதுண்டுகளாகவெட்டிய) - (100 )கிராம்

 செய்முறை 

முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் விதை
நீக்கிய பேரீச்சம்பழத்தினை சிறுசிறு துண்டு
களாக வெட்டிய பின்பு அதனுடன் சிறுசிறு
துண்டுகளாக வெட்டியபிளம்ஸ் சேர்த்து
நன்றாககலக்க வேண்டும்.

 அதன் பின்னர் இவையிரண்டையும் தேனீரில் ஊறவைக்கவேண்டும்(பேரீச்சம்பழம்,பிளம்ஸ்
 இவையிரண்டும் தேநீரில் மூழ்கி இருக்க
 வேண்டும்).

 அடுத்த நாள் ஒரு பாத்திரத்தில் உருக்கிய
 பட்டர், சீனி, முட்டை ஆகிய மூன்றையும்
 ஒன்றாய்சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக
 அடிக்க வேண்டும்.

 சீனி நன்றாக கரையும் வரை கலந்து அடித்த
 பின்பு அதனுடன் கோதுமைமா(மைதாமா).
 பேக்கிங்பவுடர் கலந்துஅரித்து அடித்தகலவை
 யுடன் வனிலாகலக்கவும்.

 அதன் பின்பு இக்கலவையுடன் பேரீச்சம்பழக்
 கலவை சிறு சிறு துண்டுகளாக வெட்டிய கயூ
 ஆகியவற்றை போட்டு ஒரளவாக கலக்கவும்.

 அதன் பின்பு அளவான கேக் தட்டில் பட்டர்
 தடவி அதில் கேக்கலவையை தட்டின்
 அரைவாசிஉயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி
 250 டிகிரியில் 20 நிமிடங்கள் அதன் பின்பு 200
 டிகிரியில் 20அல்லது 25 நிமிடங்கள் (உங்கள்
 ஓவனின் வெப்ப தட்பத்தை பொறுத்து உள்ளது)
 பேக் செய்யவும்.

பேக்கிங்செய்தபின்பு செய்வதிற்கு இலகுவான
 சுவையான சத்தான பேரீச்சம்பழ கேக்
 தயாராகிவிடும். ´

 கவனிக்க வேண்டிய விசயங்கள்- 

 (அ)நல்லதேயிலைதூளாக இருக்கவேண்டும்.
 (அப்போது தான் கேக் நல்ல கொக்கோ
நிறமாகவும் அழகாகவும் இருக்கும்)

 ஆயத்த நேரம்

 40 நிமிடங்கள்

 சமைக்கும் நேரம் 

 (45- 50) நிமிடங்கள்

நெல்லிக்காய் ஜாம்


நெல்லிக்காய் ஜாம் உண்பதால் உங்கள்
இளமை அதிகரிக்கும், நீண்ட காலம்
வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும்,
முடி வளர்ச்சியை தூண்டும்.


தேவையான பொருட்கள் 
நெல்லிக்காய்ச்சதை (விதைகளை நீக்கி) - 250 கிராம்
தண்ணீர் - 2 டம்ளர்
சீனி - - 250 கிராம்
கராம்பு - 3
வனிலா - ஒரு மேசைக்கரண்டி


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காயைச்
சதை போட்டு தேவையான அளவு
தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

நெல்லிக்காய் நன்கு வெந்ததும்
தண்ணீரை வடித்து விட்டு சதையை
நன்றாக மசிக்கவும்.

மசித்த நெல்லிகாயில் சீனி போட்டு
கொதிக்கவிட்டு, நெல்லிக்காயை நன்கு
மசித்துக் கொண்டே இருக்கவும்.

இதை 2 அல்லது 3 மணி நேரங்கள் ஒரளவு
சூட்டில் வைத்திருக்கவும்.

சீனி முழுவதும் நன்கு கரைந்து பாகு
பொங்கி கொதித்து ஒரளவாகத் தடிக்க
தொடங்கி நன்கு சிவந்த கலர் வந்ததும்
இறக்கிஆற வைக்கவும்.

ஜாம் நன்றாக ஆறிய பின்பு வனிலா,
கராம்பு கலந்து தொற்று நீக்கிய ஜாம்
போத்தலில் ஊற்றி விடவும்.

பின்பு போத்தலை மூடி வைத்து பரிமாறவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள்
(1)ஜாம் நன்றாக ஆறிய பின்பு வனிலா,
கராம்பு கலந்து தொற்று நீக்கிய ஜாம்
போத்தலில் ஊற்றி விடவும்.
(2)சீனி முழுவதும் நன்கு கரைந்து பாகு
பொங்கி கொதித்து ஒரளவாகத் தடிக்க
தொடங்கி நன்கு சிவந்த கலர் வந்ததும்
இறக்கிஆற வைக்கவும்.
(3)ஒரளவு பிஞ்சு நெல்லிக்காயில்
செய்த ஜாம் நன்கு சிவந்த நிறமாகவும்,
முற்றிய நெல்லிக்காயில் செய்த ஜாம்
செம்பச்சை நிறமாகவும் காணப்படும்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

கோவா(கபேஜ்) வடை

கோவா வடை கார்போவைதரேட்,
கொழுப்பு, புரதம், இரும்பு, உயிர்சத்து
A,B1,B2,B3,B5,B6,B9,C, பொட்டாசியம்,
பொஸ்பரஸ், மக்னீஸியம்,சோடியம்,
கல்சியம் ஆகியசத்துக்கள் நிறைந்ததும்
சுத்தமானதும் செய்வதிற்கு இலகுவான
துமான  ஒர் உணவுப்பொருள் ஆகும் .

தேவையான பொருட்கள் 
உளுத்தம் பருப்பு - ஒரு சுண்டு
வெங்காயம் (பெரியது) - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கோவா(கபேஜ்) - சிறிதளவு
உள்ளி - ஒரு பல்


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை
போட்டு அதனுடன் தண்ணீரை விட்டு
(தண்ணீர் உளுத்தம்பருப்பை விட
ஓரளவு அதிகமாக இருக்கவேண்டும்)
 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்னர் ஊறிய பருப்புடன் உப்பு,
சுத்தம் செய்து ஓரளவு துண்டுகளாக
வெட்டிய கோவா, உள்ளி, இஞ்சி ஆகிய
வற்றை சேர்த்து தண்ணீர் விடாமல்
மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.

அரைத்த பின்னர் வெங்காயம், பச்சை
மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை
பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைக்க
 வேண்டும் .

 அதன் பின்னர் அரைத்த மாவை எடுத்து
ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.

பாத்திரத்தில் போட்ட அரைத்த மாவுடன்
பொடியாக நறுக்கி தட்டில் வைத்திருக்கும்
யாவற்றையும்  சேர்த்து கலந்துகொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாயகன்ற
பாத்திரத்தினை வைத்து (தாச்சியில் அல்லது
வாணலியில்)எண்ணெய் ஊற்றி அடுப்பில்
வைத்து சூடாக்க வேண்டும்.

எண்ணெய் சூடான பின்னர்   அரைத்து கலந்து
வைத்திருக்கும் மாவை சிறு உருண்டையாக
எடுத்து தட்டி துளையிட்டவும்

அதன் பின்னர் சூடான எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

வடைகள் பொன்னிறமாக பொரிந்த பின்பு
சுத்தமான சுவையான சத்தான கோவா
(கபேஜ்) வடை தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான கோவா(கபேஜ்)
வடைகள் சிலவற்றை வைத்து அதனுடன்
விரும்பினால் சம்பல் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இருதய, சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

Dienstag, 2. November 2010

நண்டு கட்லட்

நண்டு கட்லெட் ஒர் சுவையான சிற்றுண்டி
யாகும். இது அசைவ உணவு பிரியர்களுக்கு
மிக மிக விருப்பமானதும் சுவையானதுமான
ஒர் உணவாகும்.


தேவையான பொருட்கள்
(அவித்த)பெரியநீளக்கால் நண்டு(சதை) - 5
முட்டை - 2
கடலை மா - கால் கிலோ
பொடியாக நறுக்கியசின்னவெங்காயம் - அரை கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பொடியாக நறுக்கியபச்சை மிளகாய்- 10
ரக்ஸ்தூள் - 100 கிராம்
உள்ளி - ஒன்று
கறுவாப்பட்டை - சிறிய துண்டு
கராம்பு - 3
பெருஞ்சீரகம் - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

1 .மிக்சியில்(கிரைண்டரில் )இஞ்சி,
   உள்ளி(பூண்டு ), பெருஞ்சீரகம்
   (சோம்பு ), கராம்பு, கறுவாப்பட்டை
    ஆகியவற்றை நீர் விட்டு மைய
   அரைக்கவும்.

2•அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி
    அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி
     அதில் பச்சைமிளகாய், வெங்காயம்
     போட்டு வதக்கவும்.

3•அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் நண்டு
   சதையுடன், கடலைமா, வதக்கிய
   பச்சைமிளகாய் வெங்காயம் அரைத்த
   கலவை, உப்பு, கறிவேப்பிலை ஆகிய
   வற்றை சேர்த்து நன்றாக குழைத்து
   சிறு சிறு உருண்டைகளாக உருட்டி
   அவற்றை சாதுவாக அமர்த்தி
   கொள்ளவும்.

4.ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து 
   ஊற்றி நன்றாக நுரை வரும்வரை அடிக்கவும்.

5.அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து
  அதில் எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும்
  உருட்டி தட்டிய கட்லெட்டை முட்டையில்
 தோய்த்து ரக்ஸ் தூளில் பிரட்டி அதை
 எண்ணெயில் போட்டு சிவக்க பொரிக்கவும்.

6. பொரித்த பின்னர் சுத்தமான சுவையான
    சத்தான நண்டு கட்லட் தயாராகிவிடும்

7.அதன் பின்னர் ஒருதட்டில் பொறித்த
   நண்டு கட்லட்களை வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை - 
நண்டு அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்-
 நண்டுகளின் கொடுக்கு, ஓடு, கால்களை
அகற்றி உடல் பகுதியை மட்டும் துப்பரவு
செய்து தண்ணீரில் வேக வைக்கவும்.

முந்திரிக்குழம்பு

முந்திரிக்குழம்பு கார்போஹைட்ரேட்
கொழுப்பு புரதம் இரும்பு உயிர்சத்து
A,B1,B2,B3,B5,B6, B9,C, பொட்டாசியம்
பொஸ்பரஸ் மக்னீஸியம் சோடியம்,
 கல்சியம் ஆகியவை நிறைந்த ஒர்
உணவுப்பொருள் ஆகும் 

தேவையானபொருட்கள் 
பச்சை முந்திரிப்பருப்பு - 30
தேங்காய் (துருவியது) - கால் கப்
செத்தல் மிளகாய் - 10
மல்லி - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
புளி - தேசிக்காயளவு
பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு
பச்சைகச்சான் - 100 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு


தாளிக்க:
கறுவாபட்டை - சிறிதளவு
பெருஞ்சீரகம் - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை 

பச்சை முந்திரிக்கொட்டையை
நெருப்பு தணலில் போட்டு சுடவும்.

அதன்பின்பு இரண்டாக நறுக்கி
கத்தியால் கவனமாக முந்திரிப்
பருப்பை பேர்த்து எடுத்து கொள்ளவும்.

கொதிதண்ணீரில் இந்த பருப்பை
போட்டு சிறிது நேரத்தின் பின்பு
அதன் தோலை உரித்து கொள்ளவும்.

புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற
விட்டுக் கரைத்து கொள்ளவும்.

செத்தல்மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை
 எண்ணெயில் வறுத்து கொரகொரப்பாக
 அரைத்து கொள்ளவும்.

தேங்காய் துருவலை விழுதாக அரைத்து
கொள்ளவும்.

அதன் பின்பு சிறிதளவு நெய்யில் உரித்த
முந்திரிப் பருப்புடன் கச்சானை சேர்த்து
வறுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்
விட்டு வேகவிடவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
எண்ணெய் விட்டு சூடாக்கி அதில்
கறுவாபட்டை, பெருஞ்சீரகம் தாளித்து
அதில் புளிக்கரைசலை ஊற்றி உப்பு,
மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.

அதன் பின்பு இக்கலவை கொதித்து
நுரைத்து வரும் போது அரைத்து
வைத்தவற்றை சேர்த்து கொள்ளவும்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதை
சேர்த்து கொள்ளவும். நன்றாக கொதித்ததும்
வேகவைத்த முந்திரிப்பருப்பு கச்சான்
 கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க
வைக்கவும்.

நன்றாக கொதித்ததும் இறக்கி அதில்
கருவப்பிலை சேர்த்து சிறிது நேரத்தின்
பின்பு பரிமாறவும்.




கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
பச்சை முந்திரிக்கொட்டையை நெருப்பு
தனலில் போட்டு சுடவும்.பின்பு இரண்டாக
நறுக்கி கத்தியால் கவனமாக முந்திரிப்
பருப்பை பேர்த்து எடுத்து கொள்ளவும்

நெல்லிக்காய் தயிர் பச்சடி


நெல்லிக்காய் பச்சடி உண்பதால் உங்கள் இளமை
அதிகரிக்கும். நீண்ட காலம் வாழ உதவும்
உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியை
தூண்டும்


தேவையான பொருட்கள் 
பெரிய நெல்லிக்காய் - 10
தயிர் - 1+1/2 கப்
இஞ்சி (துருவியது) - சிறிதளவு
உப்பு - (தேவையானளவு)

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் ஒரு பாத்திரத்தில்
தயிரினை போடவும். தயிரில் நெல்லிக்
காய்களை நறுக்கி போட்டு சிறிதளவு
இஞ்சி துருவல், உப்பு சேர்க்கவும்.

அதன் பின்பு நெல்லிகாய் பச்சடி
தயாராகி விடும்.

பஞ்சகல்யாணி தோசை

உளுந்தம்பருப்பு கடலைபருப்பு,துவரம்பருப்பு,மைசூர்
பருப்பு,பயித்தம்பருப்பு,ஆகிய ஜவகை பருப்புகளையும் 
பஞ்சகல்யாணி எனஅழைக்கப்படும்ஆகவே தான்
ஜவகையான பருப்புகளை சேர்த்தசெய்தஇந்த தோசை
பஞ்சகல்யானி தோசைஆகும்இந்த தோசை மிகமிக 
சுவையானதும் காபோவைதரேற்று,கொழுப்பு,விற்றமின்,
மினரல்,புரதம் போன்ற பலசத்துகளை உடையதும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி உண்ண
கூடியதும் ஆகும் ஆகவே இந்ததோசையின்சுவையை
நீங்கள் அறிய விரும்பினால்இதனை செய்து சாப்பிட்டு
இதன் சுவையை அறியவும்.


தேவையான பொருட்கள்

உளுந்தம்பருப்பு- 4 மேசைகரண்டி 
மைசூர்பருப்பு - 4 மேசைகரண்டி
கடலைபருப்பு - 4 மேசைகரண்டி
துவரம்பருப்பு - 4 மேசைகரண்டி 
பயித்தம் பருப்பு- 4 மேசைகரண்டி
கோதுமை மா (மைதாமா) - 2 சுண்டு
அரிசி - சிறிதளவு 
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
மஞ்சள் தூள் -சிறிதளவு 
சிறிதாக வெட்டிய செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 4
கடுகு - சிறிதளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - சிறிதளவு
கருவப்பிலை( நறுக்கியது)- சிறிதளவு 
நல்லெண்ணைய் - தேவையானளவு
முட்டை - 1(விரும்பினாள்) 
உருளைக்கிழங்கு(சிறியது) - 1(விரும்பினாள்)
வெங்காயம் (பெரிது ,நறுக்கியது) - 1ஒரளவு 
கொதித்த தண்ணீர் - தேவையானளவு

செய்கைமுறை

(1 )ஒருபாத்திரத்தில் எல்லா வகையான பருப்புகள் ,ஓரளவு கொதிதண்ணீர் ஆகியவற்றை போட்டுஅரைமணித்தியாலம் ஊறவிடவும் .

(2 ) இன்னொரு பாத்திரத்தில் வெந்தயம்,அரிசி,ஒரளவு கொதிதண்ணீர் ஆகியவற்றறை போட்டு1/2 மணித்தியாலம் ஊறவிடவும்.

(3 )அரை மணித்தியாலத்தின் பின்பு கிரைண்டரில் (மிக்ஸியில்) வெந்தயம் ,அரிசி சிறிதளவு தண்ணீர்ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்து அதனை
ஒரு பாத்திரத்தில் போடவும்


(4 )அதன் பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சேர்த்துஊற வைத்த எல்லா வகையான பருப்புகள் ,தண்ணீர்ஆகியவற்றை போட்டு பொங்க பொங்க அரைக்கவும்
(தோசைமாபதத்திற்கு).


(5 ) பின்பு அரைத்தவற்றை எடுத்து அரிசி,வெந்தயம்ஆகியவை அரைத்து வைத்துள்ள பாத்திரத்தில்போடவும்.


(6 )அதன் பின்பு கோதுமைமா(மைதாமா),தண்ணீர்ஆகியவற்றை கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டுகட்டியில்லாமல் நன்றாக கலந்து அரைக்கவும் .


(7 ) கலந்து அரைத்த பின்பு இதனை அரிசி,வெந்தயம்,பருப்பு வகைகள் ஆகிய வற்றை அரைத்து எடுத்துவைத்து உள்ள பாத்திரத்தில் கட்டியில்லாமல்
அரைத்த கோதுமைமா (மைதாமா),மஞ்சள்தூள்ஆகியவற்றையும் போட்டு நன்றாக கலந்துபுளிக்க வைக்கவும் .


(8 ) அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்புபோட்டு நன்றாக கலக்கவும்(விரும்பினால்கோதை அகற்றிய ஒரு முட்டையை தோசைமாவில் போட்டு நன்றாக கலக்கவும்).


(9 ) அதன் பின்பு ஒரு துணியை பொட்டலமாக கட்டிவைக்கவும் அல்லது ஒரு உருளைக் கிழங்கினைஇரண்டு சமபாதியாக வெட்டி அதில் ஒருபாதியை
எடுத்து அதன் தோல்பகுதியில் முள்ளுக்கரண்டியால் குத்தி மாட்டவும் .


(10 )பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணையை ஊற்றிஅதில் ஏற்கனவே கட்டிய துணி பொட்டனத்தைஅல்லது முள்ளுகரண்டியில் குத்தி வைத்திருக்கும் உருளைக்கிழங்கினை (எண்ணையில் படும்படி) அதில் ஊறவைக்கவும்.


(11 )அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு எண்ணையை விட்டு சூடாக்கி அதில்கடுகைபோட்டு வெடிக்கவிட்ட பின்பு நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஓரளவு பொரியவிட்ட பின் .செத்தல்மிளகாய், பெருஞ்சீரகம்,நறுக்கிய கருவப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.


(12 )இவை யாவும் தாளித்த பின்பு தாளித்தவற்றை தோசைமாவில் போட்டு நன்றாக கலக்கவும்.


(13 )பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கிஅதில் நல்லெண்ணெய் பூசிய துணி போட்டனத்தால்அல்லதுமுள்ளுகரண்டியில் குத்தப்பட்டு நல்லெண்ணய்பூசப்பட்டஉருளைக்கிழங்கினால் நன்றாக தோசைக் கல்லில்தடவும்.


(14 ) தடவிய பின்பு ஏற்கனவே கலந்து வைத்துள்ள தோசைமாவில் ஒரு குழிக்கரண்டியில் எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கிய தோசைக்கல்லில் தோசை வடிவில் ஊற்றிநன்றாக தேய்த்து(ஊற்றிய மாவை)பின்பு அதை வேகவிடவும்.


(15 )ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி போட்டு மற்ற பக்கமும் வேகவிடவும். (16 )இரண்டு பக்கமும் நன்றாக வெந்தபின்பு சுவையான சத்தான செய்வதிற்கு இலகுவான தோசை தயாராகிவிடும் அதன் பின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.(இதனைப்போல மற்றையதோசைகளையும் சுட்டு முதலில் சுட்டதோசை போட்ட பாத்திரத்தில் வைக்கவும்).


(17 )பின்பு ஒரு தட்டில் தேவையானளவு தோசைகளை வைத்துஅதனுடன் சம்பல் சாம்பார் சட்னி அல்லது எதாவது பிரட்டல்கறி ஆகியவற்றில் ஒன்றினை வைத்து பரிமாறவும்.
எச்சரிக்கை -ஏதாவது பருப்பு வகைகளில்அலர்ஜி உடையவர்கள் அந்த பருப்பினை தவிர்த்து விட்டு மற்றைய பருப்பு வகையில் சிறிதளவு கூடுதலாக போட்டு தோசையை செய்யவும் அல்லது வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் -

தோசை குளிர்மையானது ,தோசை மாவில் முட்டையை போட்டு கலந்து தோசையை சுட்டால் தோசை கல்லில்அல்லது வாணலியில் இருந்து இலகுவாக கழற்றி எடுக்கலாம்

மாற்று முறை - விரும்பிய அரிசிவகைகளை பாவிக்கலாம்.

கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகள் மிக வேகமாக (சீக்கிரமாக) 
அவிய(வேக) வேண்டுமா 
ஒருபாத்திரத்தில் அரிசிகழுவிய தண்ணீரினை
எடுத்து அதில் அவிக்க வேண்டிய கிழங்கு
வகைகளை போட்டு அடுப்பில் வைத்து
அவியவிட்டால்(வேகவிட்டால்)அவிக்க(வேக)
வேண்டிய கிழங்கு வகைகள் மிக வேகமாக
(சீக்கிரமாக) அவிந்து (வெந்து) விடும்