கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 26. April 2011

அடை

அடைக்குமா அரைக்கும் போது மாவை

வழித்தெடுப்பதிற்கு கால்மணித்தியாலத்திற்கு
முன்பாக சிறிய வெங்காயத்தை மிக்சியில்
(கிரைண்டரில்) போட்டு அரைத்தல் அடை
மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மிக
இலகுவாக எடுக்க கூடியதாகவும் இருக்கும்.


சூப்


எல்லா வித சூப்பிற்கு மிளகுத்தூள் ,சின்ன
சீரகத்தூள் ஆகியவை கலந்து செய்தால் உடல்
செரிமானத்திற்கு நல்லது அத்துடன் சூப்பை
இறக்கும் போது பசு நெய்யை சேர்த்து கலக்கி
நாள் மிக நல்லது.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 25. April 2011

மில்க் ஷேக்


ஜாம் போத்தல் உள்ள ஜாம் முடிந்த பின்பு
அந்த போத்தலின் உள்ளே கொஞ்சம் பாலை
விட்டு நன்றாக குலுக்கினால் சுவையான
மில்க் ஷேக் தயாராகிவிடும்.


முறுகல் தோசை

தோசை சுவையானதும் சத்தானதும்சிறுவர்கள்முதல்
பெரியவர்கள் வரைவிரும்பி உண்ணகூடியதும் ஆகும்
ஆகவே இதை செயது சாப்பிட்டுஇதன்சுவையை அறியவும்


தேவையான பொருட்கள் 
புழுங்கலரிசி - 2 கப்
பச்சரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 /2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
மஞ்சள்தூள் -சிறிதளவு
தண்ணீர் - தேவையானளவு

 செய்முறை 
(1 )பாத்திரம் ஒன்றில் புழுங்கல்அரிசி,பச்சையரிசி,
     தண்ணீர் ஆகியவற்றை கலந்து இரண்டு மணித்
    தியாலம்  ஊற வைக்கவும்.

(2 )இன்னொருபாத்திரத்தில் உளுத்தம்பருப்பு,வெந்தயம்,
      தண்ணீர் ஆகியவற்றை கலந்து 15நிமிடங்கள் ஊற
     வைக்கவும்.

 (3 )இவையாவும் ஊறியபின்பு ஊறிய உளுத்தம் பருப்பு,
      வெந்தயம்,தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில்
      (மிக்ஸியில்) போட்டு பொங்க பொங்க அரைக்கவும்.

(4 )அரைத்தபின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
     போடவும்.

(5 )பின்பு ஊறவைத்த புழுங்கல்அரிசி,பச்சரிசி,தண்ணீர்
     ஆகியவற்றை கலந்து கிரைண்டரில் (மிக்ஸியில்)
      போட்டு நைசாக அரைக்கவும்.

(6 )பின்பு அதை எடுத்து முதலில் வெந்தயம் உளுந்து
     அரைத்து போட்டு வைத்துள்ளபாத்திரத்தில் போடவும்.

 (7 )பின்பு அரைத்து பாத்திரத்தில் போட்டு வைத்திருக்கும்
      யாவற்றையும் புளிக்கவைக்கவும்.

(8 )அடுத்த நாள் உப்பு,மஞ்சள்தூள் போட்டு நன்றாக
     கலக்கவும்.

 (9 )அதன்பின்பு அடுப்பில் தோசைக்கல்லை(வாணலியை)
      வைத்து சூடாக்கவும்.

(10 )தோசைக்கல்(வாணலி) சூடானதும் ஒருதுணியில்
       (அல்லது ஒரு சிறிய உருளைக்கிழங்கினை பாதியாக
      வெட்டி அதன்தோல்பாகத்தில் முள்ளுக்கரண்டியை
      செருகவும் )சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து
      எடுத்து அதை அதனை தோசைக்கல்லில் தடவும்.

(11 )அதன் பின்பு கரைத்து புளிக்கவைத்துள்ள மாவில்
        ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி
        அதனை நன்றாக கரண்டியால் தடவி தோசையை
       வேகவிடவும்.

 (12 )ஒரு பக்கம் வெந்த பின்பு அதை திருப்பி போட்டுவேக
        விடவும்.

(13)தோசையின் இரு பக்கமும் நன்றாக வெந்தபின்பு அதை
      எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

(14)அதன் பின்பு சுவையான சத்தான முறுகல் தோசை
     தயாராகிவிடும்.
   
(15)அதன் பின்பு தயாரான முறுகல் தோசையை எடுத்து
    ஒரு பாத்திரத்தில் வைக்கவும் .

 (16)இதேபோல மற்றைய முறுகல் தோசைகளையும்
       சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
       வைக்கவும்.

 (17)ஒருதட்டில் தேவையானளவு முறுகல் தோசைகளை
       வைத்து அதனுடன் சட்னி,சம்பல் குழம்பு, சாம்பார்
      இவற்றில் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையும்
     வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை
உழுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

ஆயத்த நேரம்
( 1 - 2 ) மணித்தியாலம்

சமைக்கும் நேரம் -
1மணித்தியாலம்

மசாலைத்தோசை

சாலைத்தோசை செய்யும் போது
தோசையின் மேல் மசாலையை
வைக்க முன்பு ஏதாவது ஒரு சட்னியை
தடவி விட்டு அதன் பின்பு மசலையை
வைத்து மூடி சிறிது நேரம் வேகவிட்டு
பரிமாறுங்கள் .மசாலத்தோசை
மணமாகவும் சுவையாகவும் இருக்கும்
.

முட்டைஇறால் தீச்சல்




 முட்டையில் புரோட்டின்சத்து,அல்புமின் 
சத்து,கொழுப்புசத்து ஆகியவை 
காணப்படுகிறது இறாலில் கல்சியம்.
அயடீன்,கொழுப்புசத்து ஆகியன 
காணப்படுகின்றன,பாலில் கொழுப்பு 
சத்து ,உயிர்சத்து ஆகிய பல சத்துக்கள் 
காணப்படுகின்றன. ஆகவே இவை 
யாவற்றையும் சேர்த்து செய்யப்பட்ட 
முட்டை இறால் தீச்சல் கறி சுத்தமான 
சுவையான,சத்தான கறியாக்கும்.இதன் 
சுவையை அறிய இக்கறியை செய்து 
பார்த்து உண்ணவும்.  

தேவையான பொருட்கள் 
அவித்த முட்டை - 4
சுத்தமாக்கிய இறால் - 50கிராம் 
சிறிதாக நறுக்கிய வெங்காயம்- அரைப்பாதி 
கடுகு - சிறிதளவு 
பெருஞ்சீரகம் (சோம்பு) - சிறிதளவு 
மிளகாய்த்தூள் - தேவையானளவு
கருவப்பிலை - சிறிதளவு 
எண்ணெய் - சிறிதளவு 
பால் - தேவையானளவு 
உப்பு - தேவையானளவு 

செய்முறை  
1 . அடுப்பில் தாட்சியை(வாணலியை)
    வைத்து அதில் எண்ணையை விட்டு 
    சூடாக்கவும் .

2 .எண்ணெய் சூடான பின்னர் அதில் 
    சிறிதாக நறுக்கிய வெங்காயம்,கடுகு
   ,பெருஞ்சீரகம் ஆகியவற்றை போட்டு 
    தாளிக்கவும் .

3 . தாளித்த பின்னர் அவற்றுடன் சுத்தம் 
     செய்த இறாலை போட்டு கிளறி 
     ஓரளவு பொரிய விடவும். 

4 .அதன் பின்னர் அவித்த முட்டையை 
    எடுத்து அதன்ஒருபாகத்தில் சிறிதளவு 
    கீறவும் .

5 .  கீறிய பின்னர் தாளித்து ஓரளவு பொரிந்த
     இறாலுடன்  போட்டு எல்லா பக்கமும் 
     திருப்பி போட்டு சிறிது நேரம் பொரிய 
     விடவும் .

6 .சிறிது நேரம் பொரிந்ததும் அதனுடன்
    மிளகாய்த்தூள்,உப்பு, கருவப்பிலை 
    ஆகியவற்றை போட்டு மிளகாய்த்தூளின் 
    பச்சைவாடை (மணம் )போகும் வரை 
     பொரிய விடவும் .

7 . அதன் பின்னர் இவற்றுடன் பால்,உப்பு 
      ஆகியவற்றை போட்டு பிரட்டி வேக 
     விடவும்
     
8 .இவையாவும் வெந்த பின்னர் இவற்றுடன் 
   பழப்புளி அல்லது தேசிகாய்(எலுமிச்சம்
     பழ)சாறு  ஆகியவற்றை போட்டு 
    பிரட்டி வேக விடவும்.

9 . இவையாவும் வெந்த பின்னர் சுத்தமான 
     சுவையான சத்தான முட்டைஇறால் 
     தீச்சல் கறி தாயாராகிவிடும். 

10 .முட்டைஇறால் தீச்சல் கறி தயாரான 
       பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
       (சாதத்தை ) வைத்து அதனுடன் 
      முட்டைஇறால் தீச்சல் கறியை 
      வைத்து பரிமாறவும். 

குறிப்பு 
              இருதய நோயாளர் வைத்தியரின் 
                   அனுமதியுடன் உண்ணவும் .

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 24. April 2011

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 23. April 2011

பிறந்தநாள் கேக் அலங்காரங்கள்


சுக்கினி பொரியல்


சுக்கினி நீர்சத்துகள், வைட்டமின் சத்துகள்
நிறைந்தது. இதனை மேல் நாட்டு மக்கள்
விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட
சுக்கினியில் செய்யப்பட்ட பொரியல்
சத்துகள் நிறைந்தது, செய்வதற்கு
இலகுவானது சுவையானது. 

தேவையான பொருட்கள் 
சுக்கினி - ஒன்று
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை 
சுக்கினியை கழுவி தோலுடன் மேலிருந்து
கீழாக ஓரளவு மெல்லிய துண்டுகளாக
வெட்டவும்.

வெட்டிய சுக்கினி துண்டுகளை ஒரு தட்டில்
அடுக்கி வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் மிளகாய்த்தூள்,
உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

கலந்த பின்பு அக்கலவையில் வெட்டிய
சுக்கினி துண்டு ஒன்றை வைக்கவும்.

வெட்டிய சுக்கினிதுண்டு ஒன்றின் எல்லா
பக்கமும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,
உப்பு கலவையை படும்படி நன்றாக பிரட்டி
சிறிது நேரம் சுக்கினி துண்டை அதில்
ஊறவிடவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
சூடாக்கி அதில் ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் மிளகாய்த்தூள்,
மஞ்சள் தூள், உப்பு கலவையில் ஊறிய சுக்கினி
துண்டுகளை போட்டு நன்றாக பொரிக்கவும்.

நன்றாக பொரிந்ததும் அதனை மற்ற பக்கம்
திருப்பி போட்டு பொரிக்கவும்.

பின்பு மேலதிகமாக உள்ள எண்ணெயை நன்றாக
 வடித்து விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

இதனை போல மற்றவற்றையும் பொரித்து
எடுத்து தட்டில் வைக்கவும்.

சுவையான சத்தான செய்வதற்கு இலகுவான
சுக்கினி பொரியல் தயாராகி விட்டது.

ஒருதட்டில் பாண்(ப்ரெட்)துண்டுகள், இடியாப்பம்,
 புட்டு, சோறு(சாதம்)இவற்றில் ஒன்றுடன்
சுவையான சத்தான சுக்கினி பொரியலை வைத்து
பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் 
சுக்கினியை கழுவி தோலுடன் மேலிருந்து
கீழாக ஓரளவு மெல்லிய துண்டுகளாக
வெட்டவும்.


மாற்று முறை 
இதே முறையில் கத்தரிக்காயிலும்
செய்யலாம்.
மிளகாய்த்தூளுக்கு பதிலாக மிளகுத்தூளை
பாவிக்கலாம்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 22. April 2011

ஈஸி பட்டர் கேக்

பட்டர் கேக் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரை விரும்பி உண்ணக்கூடியதும், சுவை
யானதும், மாச்சத்து, கொழுப்புச்சத்து,
கார்போஹைரேட்டு, இலிப்பிட்டு, புரதம்
கல்சியம், விற்றமின் B12, C, D, பொஸ்பரஸ்,
ஜசன், சிங்க், இரும்பு,கலியம் ஆகியசத்துகள்
அடங்கியதும் செய்வதற்கு இலகுவானது
மாகும். ஆகவே இதன் சுவையை அறிய
இதனை செய்து சுவைத்தறியவும்.

தேவையான பொருட்கள் 
அரித்தகோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
பட்டர்(உருக்கிய) - 500 கிராம்
சீனி - 450 கிராம்
முட்டை - 8 முட்டை
பிளம்ஸ் - சிறிதளவு
முந்திரிக்கொட்டை(cashsew) - சிறிதளவு
வனிலா - 4 தேக்கரண்டி
பேக்கிங் பௌடர்  (baking  pawdar)-4  தேக்கரண்டி


செய்முறை 
கிரைண்டரில் (மிக்ஸியில்)சீனி, முட்டை
ஆகியவற்றை போட்டு சீனி கரையும்
வரை நன்றாக அடிக்கவேண்டும்.

பின்பு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில்
உருக்கியபட்டர் அடித்த சீனி முட்டை
கலவை ஆகியவற்றை போட்டு நன்றாக
கேக் அடிக்கும் பீட்டரினால்(15 -20)நிமிடங்கள்
அடிக்கவும்.

அந்த கலவையுடன் அரித்தகோதுமைமா
(மைதாமா), பேக்கிங் பவுடர் ஆகியவற்றை
போட்டு கேக் பீட்டரினால் அடித்து கலக்கவும்.

அதனுடன் வனிலா பிளம்ஸ் முந்திரி
கொட்டை(cashsew) ஆகியவற்றை போட்டு
கலக்கவும்.

பின்பு அளவான கேக்தட்டில் பட்டர் தடவி
அதில் கேக் கலவையை தட்டின் அரை வாசி
உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 
டிகிரியில் 20 நிமிடங்கள் அதன் பின்பு
200 டிகிரியில் 20அல்லது 25 நிமிடங்கள்
(உங்கள் ஓவனின் வெப்ப தட்பத்தை பொறுத்து
உள்ளது) பேக் செய்யவும்.

பேக் செய்த பின்பு சுவையான இலகுவான
 சத்துகள் நிறைந்த கேக் தயாராகி விடும்.

தயாராகிய கேக்கை விரும்பியவடிவில்
வெட்டி அதனை ஒரு தட்டில் அடுக்கி
பரிமாறவும்.

எச்சரிக்கை 
இருதய நோயாளர், சர்க்கரைநோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

 கவனிக்க வேண்டிய விசயங்கள் 
அளவான கேக் தட்டில் பட்டர் தடவி அதில்
கேக் கலவையை தட்டின் அரை வாசி உயரத்
திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் 20
நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 20
அல்லது 25 நிமிடங்கள்(உங்கள் ஓவனின்
வெப்ப தட்பத்தை பொறுத்து உள்ளது) பேக்
செய்யவும்.


மாற்று முறை 
பட்டர்(உருக்கிய)பதிலாக உருக்கிய
மாஜரினை பாவிக்கலாம் .

மாங்காய் சட்னி

மாங்காய் சட்னி சுவையானது, செய்வதற்கு
இலகுவானது தண்ணீர் கொழுப்பு மாப்
பொருள் கலியம் கல்சியம், மக்னீஷியம்,
விற்றாமின் C B1 A புளோரைட் ஆகிய
சத்துகள் அடங்கியதும் ஆகும். இதன்
சுவையை இதனை செய்து சுவைத்து
அறியவும்


தேவையான பொருட்கள் 
முற்றிய,பெரிய மாங்காய் - 2
வினிகர் - 200 மில்லி லிட்டர்
செத்தல்(காய்ந்த)மிளகாய் - 5
இஞ்சி (1+1/2 செ.மீ) - ஒரு துண்டு
உள்ளி(பூண்டு) - 3 பற்கள்
சீனி (சர்க்கரை) - 1+1/2மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை 
மாங்காயின் தோலை சீவி கழுவி
சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி
கிரைண்டரில் (மிக்ஸியில்) போடவும்.

தோலைசீவி கழுவி வெட்டிய மாங்காயுடன்
வினிகரை சேர்த்து அரைக்கவும்.

அரைத்தவற்றை ஒரு தட்டில் எடுத்து
 வைக்கவும்.

கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்(காய்ந்த)
மிளகாய், இஞ்சி, உள்ளி(பூண்டு, வினிகர்
ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

அரைத்தவற்றை இன்னொரு தட்டில் எடுத்து
வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
சூடாக்கி அதில் அரைத்த மாங்காய், அரைத்த
மிளகாய் இஞ்சி, உள்ளி(பூண்டு)கலவை,
சீனி(சர்க்கரை), உப்பு, வினிகர் ஆகியவற்றை
சேர்த்து நன்றாக காய்ச்சவும்.

அடுப்பில் உள்ள கலவை கொதித்து கூழ்
பதமாக வரும் போது இக்கலவையை
அடுப்பிலிருந்து இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை
ஆறவிடவும்.

இக்கலவையை ஓரளவு சூட்டுடன் தொற்று
நீக்கிய போத்தலில் போட்டு இறுக்கி மூடி
வைக்கவும்.

சட்னி தேவைப்படும்போது ஒரு தட்டில்
சோறு(சாதம்), இடியாப்பம், புட்டு இவற்றில்
ஒன்றை வைத்து அதனுடன் சுவையான
இச்சட்னியை வைத்து பரிமாறலாம்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் 
மாங்காய் சட்னியை போத்தலில் இருந்து
எடுப்பதற்கு ஈரமற்ற சுத்தமான மரக்கரண்டி
அல்லது பிளாஸ்டி கரண்டியை பாவிக்கவும்.


 எச்சரிக்கை 
அல்சர் உள்ளவர்கள், மாங்காய் அலர்ஜி
உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
 உண்ணவும்.

முந்திரி முறுக்கு

முந்திரி முறுக்கு சுத்தமானது மிகமிக
சுவையானது. செய்வதற்கும் மிகவும்
இலகுவானது.இதில் இலிப்பிட்டு
கார்போவைதரேட்நார்சத்து கொழுப்பு
சத்து புரதசத்து தியமின்சத்து ரைப்போ
ஃப்ளேவின்சத்து அயோடின்சத்து விற்ற
மின்சத்து  B3,B5,B6,B9,C, கல்சியம்சத்து
மக்னீஷியம்சத்து பொஸ்பரஸ்சத்து
இரும்புசத்து பொட்டாஷியம் போன்ற
பல சத்துகள் காணப்படுகிறது. முந்திரி
(cashew)யின் சுவையை எல்லோரும்
விரும்பி உண்பார்கள். ஆகவே இதன் 
சுவையையும், இதில் காணப்படும் சத்து
களையும் அறிய முந்திரி முறுக்கை செய்து 
பார்த்து சாப்பிட்டு அறியவும்.

தேவையான பொருட்கள் 
(ஊறிய, அரைத்த)முந்திரிவிழுது - அரை கப்
அரிசிமா - ஒரு கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு (விரும்பினால்)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் (ஊறி, அரைத்த)முந்திரிவிழுது
அரிசிமா, நெய், எள், உப்பு, பெருஞ்சீரகம்(சோம்பு)
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

மாவை கலக்கிய பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை) வைத்து எண்ணெய் விட்டு
சூடாக்கவும்.

எண்ணெய் சூடாகிய பின்பு முறுக்கு உரலில்
முறுக்கு அச்சு போடவும்.

பின்பு கலந்து வைத்திருக்கும் மாவில் சிறிதளவு
எடுத்து அதனை அச்சு போட்ட முறுக்கு உரலில்
போடவும்.

பின்பு சூடாகிய எண்ணெயில் அச்சில் போட்ட
மாவினை முறுக்கு வடிவில் பிழியவும்.

எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்த மாவினை
போட்ட பின்பு அதனை பொன்னிறமாக பொரித்து
எடுக்கவும்.

பொன்னிறமாக பொரித்த முறுக்கினை ஒரு
பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

இப்படியே மிகுதியாக உள்ள எல்லா மாவினையும்
பொரித்து எடுத்து தட்டில் வைக்கவும்.

இப்போது சுவையான சத்தான முந்திரிமுறுக்கு
தயாராகி விட்டது.

ஒரு தட்டில் சுவையான சத்தான முந்திரி முறுக்கு
சிலவற்றை வைத்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள்- 
நன்றாக ஊறிய அரைத்த முந்திரி விழுது
எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

எச்சரிக்கை - 
முந்திரி அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

குவாகுவா

மலேசிய நாட்டில் வாழுகின்ற தமிழ்
மக்கள் பலர் விரும்பி உண்ணும்
சிற்றுண்டி குவாகுவா ஆகும்.அத்துடன்
இதை இலகுவாக தயாரிக்கலாம். இது
ஒரளவு உப்பு சுவையும் ஒரளவு, உறைப்பு
சுவையும் கலந்து காணப்படும்.

தேவையான பொருட்கள் 
கோதுமை மா(மைதாமா) - 500 கிராம்
அப்பச்சோடா - (1/4 - 1/2) தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
தேங்காய் எண்ணெய் - 1/2 போத்தல்
நறுக்கிய செத்தல்(காய்ந்த)மிளகாய் - (2 - 4)
நறுக்கிய வெங்காயம்(பெரியது) - 2
கடுகு - சிறிதளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை 

அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு
நன்றாக கொதிக்க விடவும்.

எண்ணெய் கொதித்த பின்பு அதில் கடுகு
போட்டு வெடிக்கவிடவும்.

கடுகு வெடித்த பின்பு அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு), சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி
ய வெங்காயம், சிறிய சிறிய துண்டுகளாக
நறுக்கிய செத்தல்(காய்ந்த)மிளகாய்,
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.

தாளித்த பின்பு தாளித்தவற்றை எடுத்து
ஒரு தட்டில் போட்டு வைக்கவும்.

பின்பு அடுப்பில் உள்ள தாட்சியை
(வாணலியை) இறக்கி வைக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமைமா
(மைதாமா) ஆப்பச்சோடா, உப்பு,
தாளித்தவை,மஞ்சள் தூள், தண்ணீர்
ஆகியவற்றை போட்டு நன்றாக
குழைக்கவும்(ஓரளவு தண்ணீர் பதத்தில்).

குழைத்தவற்றை (2- 5)நிமிடங்கள் மூடி
வைக்கவும். (2- 5)நிமிடங்கள் மூடி வைத்த
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கி அதில் தேங்காய்
எண்ணெயைவிட்டு நன்றாக கொதிக்க
விடவும்.

எண்ணெய் கொதித்த பின்பு ஒரு சிறிய
கரண்டியால் குழைத்தவற்றில் சிறிதளவு
எடுத்து அதனை கொதித்த எண்ணெயில்
 போடவும்.

கொதித்த எண்ணெயில் போட்ட மாக்கலவை
ஊதி(உப்பி)காணப்படும்.

எண்ணெயில் போட்ட மாக்கலவை
முழுவதையும் பொன்னிறமாக பொரிக்கவும்.

பொன்னிறமாக பொரிந்த பின்பு அதனை
எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இப்படியே குழைத்தமா முழுவதையும் போட்டு
பொன்னிறமாக பொரித்து அதனை பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.

அதன் பின்பு சுவையான குவாகுவா தயாராகி
விடும்.

குவாகுவா தயாராகிய பின்பு ஒரு தட்டில்
வைத்து பரிமாறவும்.


மாற்று முறை 
தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக மரக்கறி
எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய்
பாவிக்கலாம். செத்தல்(காய்ந்த)மிளகாய்க்கு
பதிலாக பச்சைமிளகாய் பாவிக்கலாம்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 21. April 2011

குலாப்ஜாமூன்

குலாப்ஜாமூன் மிகமிக சுவையான இனிப்பு
ஆகும். இனிப்பு பிரியர்களுக்கு மிகமிக
பிடித்த இனிப்பு வகை இதுவாகும். அத்துடன்
 இதில் பல சத்துகள் அடங்கியுள்ளது. 


தேவையான பொருட்கள் 
கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
டின் பால் (கன்டென்ஸ்டு மில்க்) - அரை டின்
சீனி (சர்க்கரை) - 250 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
அப்பச்சோடா - அரை தேக்கரண்டி
வனிலா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - அரை போத்தல்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா)
அப்பச்சோடா உப்பு, நெய், வனிலா, டின்பால்
(கன்டென்ஸ்டு மில்க்) ஆகியவற்றை சேர்த்து
நன்றாக குழைக்கவும்.

குழைத்த பின்பு இந்த பாத்திரத்தை ஒரு
மணித்தியாலம் நன்றாக மூடிவைக்கவும்.

ஒரு மணித்தியாலத்தின் பின்பு பாத்திரத்தை
 திறந்து முதலில் குழைத்து வைத்துள்ள
மாவை மறுபடியும் குழைக்கவும்.

பின்பு குழைத்து வைத்துள்ள எல்லா மாவை
யும் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து
சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு
நன்றாக கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்தபின்பு அதில் உருட்டி
வைத்திருக்கும் சிறிய சிறிய உருண்டைகள்
முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு
பொன்னிறமாக பொரிக்கவும்.

உருண்டைகள் யாவும் பொரித்த பின்பு தாட்சியை
(வாணலியை) அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து
சூடாக்கி அதில் சீனி(சர்க்கரை)யை போட்டு
அதனுடன் தண்ணீர் விட்டு பாகு பதத்தில்
காய்ச்சவும்.

பாகு பதத்தில் காய்ச்சிய பின்பு அப்பாத்திரத்தை
அடுப்பிலிருந்து இறக்கவும்.

பிறகு பாகு உள்ள பாத்திரத்தில் பொரித்து
வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு
பாத்திரத்தை (1 - 2)மணித்தியாலம் நன்றாக
மூடிவைக்கவும்.

(1 - 2)மணித்தியாலத்தின் பின்பு சுவையான
சத்தான குலாப்ஜாமுன் தயாராகிவிடும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தேவையான
குலாப்ஜாமூனை வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
சர்க்கரை நோயுள்ளவர்கள், இருதய
நோயுள்ளவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள்
சீனி(சர்க்கரை)யை போட்டு அதனுடன்
 தண்ணீர் விட்டு பாகுபதத்தில் காய்ச்சவும்.

கோதுமை மா குழிப்பணியாரம்

திடீர் விருந்தினர்களுக்கும், குழந்தைகளுக்கும்
மிக மிக விரைவாக செய்து கொடுப்பதற்கு
இலகுவானதும் சுவையானதும் கால்சியம்,
புரதம், கொழுப்பு, மாப்பொருள் போன்ற பல
சத்துகள் அடங்கியதுமான சிற்றுண்டியே
கோதுமைமாவு குழிப்பணியாரம் ஆகும். இதன்
சுவையை அறிய இதனை செய்து சுவைத்து
அறியவும். 


தேவையான பொருட்கள் 
ரவை - அரை கப்
பால் - கால் கப்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
சீனி (சர்க்கரை) - அரை கப்
கோதுமைமா (மைதாமா) - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - அரை கப்
வறுத்த கஜூ(முந்திரி பருப்பு) - 10
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை 

அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து ரவையை லேசாக வறுக்கவும்.
 அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் வறுத்த
 ரவையை போடவும்.

பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்)
கோதுமைமாவு(மைதாமா), பால்,
தண்ணீர், சீனி(சர்க்கரை) ஆகியவற்றை
போட்டு நன்றாக அடித்து கரைக்கவும்.

கரைத்த பின்பு ரவை போட்டு வைத்திருக்கும்
பாத்திரத்தில் இக்கலவையை ஊற்றி இதனுடன்
ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பூ, வறுத்த கயூ
(முந்திரிப்பருப்பு) ஆகியவற்றை போட்டு நன்றாக
 கலக்கவும்.

பின்பு அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து
அதில் இக்கலவையை ஊற்றி அதனுடன் எண்ணெய்
ஊற்றி நன்றாக வேகவிடவும்.

வெந்தபின்பு சுவையான சத்தான கோதுமைமா
குழிப்பணியாரம் தயாராகிவிடும். ஒரு தட்டில்
தயாரான கோதுமை மாவு குழிப்பணியாரத்
தை வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
- சர்க்கரை நோயாளர், இருதயநோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்று முறை - 
சீனி(சர்க்கரை) பதிலாக வெல்லம் சேர்க்கலாம், கோதுமைமா(மைதாமா)பதிலாக ஆட்டாமா
(கோதுமைமா) சேர்க்கலாம்.

சிக்கின் சூப்

சிக்கன்சூப் உடல்வலியை தீர்க்ககூடியதும்,
 மழை, குளிர் காலங்களுக்கும் ஏற்றதும்
சுவையானதும் சக்தி(Energy) ஈரப்பதம்/நீர்
Moisture), புரதம்(Protein), கொழுப்பு(Fat),
தாதுக்கள்(Minerals), கல்சியம்(Calcium),
பொஸ்பரஸ்(Phosporous), ரைப்போஃப்ளே
வின்(Riboflavin), போலிக் அமிலம்(Folic acid)
ஆகிய சத்துகள் நிறைந்ததும் ஆகும்.
ஆகவே இதில் உள்ள சத்துகளையும்
சுவையையும் அறிய சிக்கன் சூப்பை
செய்து சாப்பிட்டு அறியவும்.

தேவையானபொருட்கள் 

சிக்கன் (வெட்டி சுத்தம் செய்ததுண்டுகள்) - 250 கிராம்
பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
மிளகு - 3 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சின்னசீரகம்(சீரகம்) - ஒரு தேக்கரண்டி
மல்லி(தனியா) - ஒரு தேக்கரண்டி
செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 4 பற்கள்
சின்னவெங்காயம் - 2
தக்காளிப்பழம் - ஒன்று
கருவப்பட்டை(பட்டை) - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தயிர் - சிறிதளவு
தண்ணீர் - சிறிதளவு

செய்முறை 

ஒரு சிறியபாத்திரத்தில் தயிர், உப்பு,
தண்ணீர், ஆகியவற்றை போட்டு
நன்றாக கலக்கினால் மோராகிவிடும் .

பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில்
சுத்தமாக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு
அதன் மேல் மோரை விடவும்.

இதில் உள்ள மோர் கலவையினால்
சிக்கனை நன்றாக கழுவவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கவும்.

 தாட்சி(வாணலி)சூடானதும் அதில் சின்ன
சீரகம்(சீரகம்), மல்லி(தனியா), செத்தல்
மிளகாய்(காய்ந்தமிளகாய்) கடலைப்பருப்பு,
மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக
வறுக்கவும்.

நன்றாக வறுத்த பின்பு அதில் வெந்தயத்தை
போட்டு கலக்கவும்.

கலந்த பின்பு இறக்கி ஒரு பாத்திரத்தில்
போட்டு ஆறவிடவும்.

இவையாவும் ஆறிய பின்பு இதனை
கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு
மாவாக்கவும் (பவுடராக்கவும்).

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதனை சூடாக்கவும். தாட்சி
(வாணலி) சூடானதும் அதில் அரை
தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் மோரில் கழுவிய
சிக்கனை போட்டு வதக்கவும்.

வதக்கிய சிக்கனுடன் நறுக்கிய தக்காளிப்
பழம், சின்ன வெங்காயம், உள்ளி(பூண்டு),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
 நன்றாக கலக்கவும்.

பின்பு இவற்றுடன் மாவாக்கியவற்றை
(பவுடராக்கியவற்றை) போட்டு நன்றாக
கலக்கவும்.

கலந்த பின்பு இதனுடன் (2-3) டம்ளர்
தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு போட்டு
இவையாவற்றையும் நன்றாக
வேகவிடவும்.

பின்பு அடுப்பில் இன்னொரு தாட்சியை
(வாணலியை) வைத்து சூடாக்கவும்.

சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு), கருவப்பட்டை(பட்டை),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
 தாளிக்கவும்.

தாளித்த பின்பு இவற்றை சிக்கனில் போட்டு
கலக்கவும்.

அதன் பின்பு அதனை இறக்கி வைத்துவிடவும்.

தாட்சியை(வாணலியை)இறக்கிய பின்பு
சுவையான, சத்துகள் நிறைந்த சிக்கன் சூப்
தயாராகிவிடும்.

சிக்கன் சூப் தயாராகிவிட்ட பின்பு இதனை
சூப் பரிமாறும் கோப்பையில் ஊற்றி
பரிமாறவும்.

கடலை மா முறுக்கு

பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
கடலைமாவு முறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
கடலை மா(அரித்தது) - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமாவு (மைதாமாவு) - 2 சுண்டு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
பட்டர் - (1/2 - 1) தேக்கரண்டி (விரும்பினால்)
நன்றாக கொதித்த தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை 
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்மிளகாய்
(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு மிக மிக சிறிய துண்டுகளாக
அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அவித்த
கோதுமைமாவு(மைதாமா), உப்பு, சீரகம், எள்,
இஞ்சி விழுது, உள்ளி(பூண்டு) விழுது, அரைத்த
செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறிவேப்பிலை
துண்டுகள், பட்டர் ஆகியவற்றை நன்றாக
கொதித்த தண்ணீர் சேர்த்து பிசைந்து(குழைத்து)
கொள்ளவும் (இடியப்பமா பதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.


கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.


 மாற்று முறை - 
கொதித்த தண்ணீருக்கு பதிலாக சிறிதளவு
பாலை சூடாக்கி அதனை கலந்தமாவில்
விட்டு குழைக்கலாம்.

பஞ்சகல்யானி தோசை

பஞ்சகல்யாணி தோசை சுவையானதும்
கார்போவைதரேட், கொழுப்பு, விற்றமின், 
மினரல் போன்ற பலசத்துக்கள் உடையதும் 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 
விரும்பி உண்ண கூடியதும் ஆகும். ஆகவே 
இதை செய்து சாப்பிட்டு இதன் சுவையை 
அறியவும். 

தேவையான பொருட்கள் 
உளுத்தம்பருப்பு - 4 மேசைகரண்டி (நிரப்பி)
மைசூர்பருப்பு - 4 மேசைகரண்டி (நிரப்பி)
கடலைப்பருப்பு - 4 மேசைகரண்டி (நிரப்பி)
துவரம்பருப்பு - 4 மேசைகரண்டி (நிரப்பி)
பயத்தம்பருப்பு(பாசிப்பயறு) - 4 மேசைகரண்டி (நிரப்பி)
மைதாமா(கோதுமைமா) - 2 சுண்டு
அரிசி - சிறிதளவு
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 6
கடுகு - அரைத்தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரைத் தேக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
முட்டை - ஒன்று (விரும்பினால்)
சிறிய உருளைக்கிழங்கு - ஒன்று (விரும்பினால்)
நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
ஒரளவு கொதித்த தண்ணீர் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு,
மைசூர்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்
பருப்பு(பாசிப்பயறு சிறுபயறு), துவரம்
பருப்பு, ஒரளவு கொதித்ததண்ணீர்
ஆகியவற்றை கலந்து அரை மணித்தியாலம்
 ஊறவைக்கவும்.

மற்றைய பாத்திரத்தில் வெந்தயம், அரிசி,
ஒரளவு கொதித்த தண்ணீர் ஆகியவற்றை
கலந்து அரை மணித்தியாலம் ஊறவைக்கவும்.

கிரைண்டரில் (மிக்ஸியில்)ஊறிய வெந்தயம்,
ஊறிய அரிசி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை
போட்டு நன்றாக அரைக்கவும்.

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும்.

பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்)ஊறிய உளுத்தம்
பருப்பு, மைசூர்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்
பருப்பு, பயத்தம்பருப்பு தண்ணீர் ஆகியவற்றை
கிரைண்டரில் (மிக்ஸியில்)போட்டு பொங்க
பொங்க அரைக்கவும்(தோசைமா பதத்திற்கு).

அரைத்த பின்பு அதை எடுத்து அரிசி, வெந்தயம்
ஆகியவை அரைத்து வைத்து உள்ள பாத்திரத்தில்
 போடவும்.

பின்பு கோதுமைமா(மைதாமா), தண்ணீர்
ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்)
போட்டு நன்றாக கலக்கவும்(கட்டியில்லாமல்).

கலந்த பின்பு அதை அரிசி, வெந்தயம், உளுத்தம்
பருப்பு, பயத்தம்பருப்பு(பாசிப்பயறு), துவரம்பருப்பு,
கடலைப் பருப்பு, மைசூர்பருப்பு அரைத்து வைத்து
உள்ள பாத்திரத்தில் கலந்த கோதுமைமாவையும்
(மைதாமாவையும்), மஞ்சள்தூள் ஆகியவற்றையும்
போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

கலந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.

அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்பு
போட்டு கலக்கவும்.

பின்பு முட்டையை உடைத்து அதன் கோதை
அகற்றிய பின்பு அதனை அப்படியே தோசை
மாவில் போட்டு நன்றாக கலக்கவும்(தோசை
சுவையாகவும் தோசையை அடுப்பில் உள்ள
தோசைக்கல்லிருந்து எடுக்கும் போது
இலகுவாக வந்து விடும்).

பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணெயை
 ஊற்றி வைக்கவும்.

அதன் பின்பு உருளைக்கிழங்கை இரண்டு
பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு
பாதி உருளைக்கிழங்கை குத்தி (முள்ளு உள்ள
பகுதியில் மாட்டி) வைக்கவும்.

அல்லது ஒரு அளவான துணியினை எடுத்து
பொட்டனம் கட்டி வைக்கவும்.

இதனை நல்லெண்ணெயுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணெயில் படும்படி).

பின்பு செத்தல் மிளகாயையின்(காய்ந்த மிளகாயை)
காம்பினை அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு தட்டில் வைக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணெயில் கடுகைபோட்டு
வெடிக்கவிட்ட பின்பு அதில் நறுக்கிய
வெங்காயத்தை போட்டு ஓரளவு
பொரியவிடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல்
மிளகாய், பெருஞ்சீரகம், நறுக்கிய
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை தோசை மாவில்
போட்டு நன்றாக கலக்கவும். பின்பு அடுப்பில்
தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளு
கரண்டியில் குத்திய கிழங்கினால்
(கிழங்கினை எண்ணெயில் நன்றாக புரட்டி)
சிறிதளவு நல்லெண்ணெயை எடுத்து அதை
தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை
எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக
தேய்த்து(ஊற்றிய மாவை)தோசையை
வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை
திருப்பி போட்டு வேகவிடவும். தோசை
நன்றாக வெந்த பின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

இதே போல மற்றைய தோசைகளையும்
சுட்டு முதலில் சுட்ட தோசை போட்ட
பாத்திரத்தில் வைக்கவும்.

அதன்பின்பு ஒருதட்டில் தோசைகளை
வைத்து அதனுடன் சம்பல் (துவையல்),
 சாம்பார், சட்னி, பிரட்டல்கறி (கிழங்கு,
கத்தரிக்காய், பீன்ஸ்) ஆகியவற்றில்
ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.



எச்சரிக்கை 
உளுத்தம்பருப்பு, மைசூர்பருப்பு, துவரம்
பருப்பு, பயத்தம்பருப்பு(பாசிப்பயறு),
 கடலைப்பருப்பு ஆகியவற்றில்
அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
தோசை குளிர்மையானது .


மாற்று முறை 
அரிசி (பச்சையரிசி, குத்தரிசி இட்லி
அரிசி, சம்பா, புழுங்கல்)எல்லா
அரிசிகளையும் பாவிக்கலாம்.

மசாலா பான்கேக்


மசாலா பான் கேக் சுவையானதும், கார்போ
ஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கரோட்டீன்,
 நார்சத்து, நீர்சத்து, பொட்டாஷியம், பொஸ்
பரஸ், கல்சியம், விற்றமின், மினரல் போன்ற
பலசத்துக்கள் உடையதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும்
ஆகும். ஆகவே இதை செய்து சாப்பிட்டு இதன்
சுவையை அறியவும்.


தேவையான பொருட்கள் 
கோதுமை மா(மைதா மா) - 2 சுண்டு
ஆட்டா மா(கோதுமை மா) - ஒரு சுண்டு
துருவிய கரட் - ஒரு கப்
துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்
துருவிய தக்காளிப்பழம் - ௧கப்
முட்டை - ஒன்று (விரும்பினால்)
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அ ப்பசோடா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தக்காளிசாஸ் - தேவையான அளவு


செய்முறை 
கிரைண்டரில் (மிக்ஸியில்) கோதுமைமா
 (மைதாமா), ஆட்டா மாவு (கோதுமைமா)
துருவிய கரட், துருவிய வெள்ளரிக்காய்,
துருவிய தக்காளிப்பழம், முட்டை, பால்,
பட்டர், உப்பு, அப்பசோடா, தண்ணீர்
ஆகியவற்றை போட்டு கட்டியில்லாமல்
நன்றாக கலக்கவும் (தோசைமாபதத்திற்கு).

நன்றாக கலந்தபின்பு அதனைஎடுத்து
ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பாத்திரத்தில் போட்டவற்றை(2-4)
மணித்தியாலங்கள் புளிக்க வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் சிறிதளவு எண்ணெயை
ஊற்றி வைக்கவும்.

உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக
வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில்
ஒரு பாதி உருளைக்கிழங்கை குத்தி
(முள்ளுஉள்ள பகுதியில்மாட்டி)வைக்கவும்.

இதனை எண்ணெயுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணெயில்படும்படி).

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை
சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளு
கரண்டியில் குத்திய கிழங்கினால்(கிழங்கினை
எண்ணெயில் நன்றாக புரட்டி)தோசைக்கல்லில்
 தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை
எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக
தேய்த்து(ஊற்றிய மாவை)பான்கேக்கை
வேகவிடவும்.

பான்கேக்கின் ஒருபக்கம் வெந்ததும் அதை
திருப்பி போட்டு வேகவிடவும்.

பான்கேக் நன்றாக வெந்தபின்பு அதை
எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய பான்கேக்குகளையும்
சுட்டு முதலில் சுட்ட பான்கேக் போட்ட
பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் பான்கேக்குகளைவைத்து
அதன் மேல் தக்காளிசாஸ் அல்லது வேறு
ஏதாவது சாஸ்ஸினை பூசி பரிமாறவும்.

எச்சரிக்கை 
சர்க்கரைநோயாளர் கோதுமைமா(மைதா
மா)சேர்க்காமல் செய்யவும்,இருதய
நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்,
தக்காளிப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் அதனை
சேர்க்காமல் செய்யவும்


மாற்றுமுறை 
பட்டர் பதிலாக மாஜரீனை சேர்க்கலாம்,
தக்காளி சாஸ்க்கு பதிலாக விரும்பிய
சோஸ் வகைகளை பாவிக்கலாம்.

திடீர் தோசை


தோசை சுவையானதும் கார்போஹைட்ரேட்,
கொழுப்பு, புரதம், கரோட்டீன் சத்து, நார்சத்து,
நீர்சத்து பொட்டாசியம் பொஸ்பரஸ் கல்சியம்
விற்றமின், மினரல் போன்ற பல சத்துக்கள்
உடையதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரை விரும்பி உண்ணகூடியதும் ஆகும்.
ஆகவே இதை செய்து சாப்பிட்டு இதன்
சுவையை அறியவும்



தேவையானபொருட்கள்
கோதுமை மா(மைதா மா) - 2 சுண்டு
ஆட்டா மா(கோதுமை மா) - ஒரு சுண்டு
துருவிய கரட் -ஒரு கப்
துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்
துருவிய தக்காளிப்பழம் - ஒரு கப்
முட்டை - ஒன்று (விரும்பினால்)
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 பின்ச்
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம்- 1
செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 2
தண்ணீர் - தேவையானளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
அப்ப சோடா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சிறிய துண்டுகளாக நறுக்கியகறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையானளவு

செய்முறை
கிரைண்டரில்(மிக்ஸியில்) கோதுமைமா(மைதாமா),
 ஆட்டாமா(கோதுமைமா), துருவிய கரட், துருவிய
வெள்ளரிக்காய், துருவிய தக்காளிப்பழம், முட்டை,
பால், பட்டர், மஞ்சள்தூள், உப்பு, ஆப்பசோடா,
தண்ணீர் ஆகியவற்றை போட்டு கட்டியில்லாமல்
 நன்றாக கலக்கவும்.(தோசைமாபதத்திற்கு).

நன்றாக கலந்தபின்பு அதனை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பாத்திரத்தில் போட்டவற்றை(10 -15) நிமிடங்கள்
புளிக்க வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் சிறிதளவு நல்லெண்ணெயை
ஊற்றி வைக்கவும்.

உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி
 உருளைக்கிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்
மாட்டி)வைக்கவும்.

இதனை நல்லெண்ணெயுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணெயில்படும்படி).

செத்தல் மிளகாயின்(காய்ந்தமிளகாயின்)காம்பினை
அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில்
வைக்கவும்.

பின்பு அடுப்பில்தாட்சியை(வாணலியை)வைத்து
 அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணெயில் கடுகைபோட்டு வெடிக்க
விட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை
போட்டு ஓரளவு பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய்,
 பெருஞ்சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு
நன்றாக கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில் குத்தியகிழங்கினால்(கிழங்கினை எண்ணெயில்
நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணெயை எடுத்து
அதை தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து
தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய
மாவை )தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி
போட்டு வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

பின்பு ஒருதட்டில் தோசைகளை வைத்து
அதனுடன் சம்பல்(துவையல்), சாம்பார், சட்னி,
பிரட்டல்(கிழங்கு கத்தரிக்காய்,பீன்ஸ்) ஆகிய
வற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
சர்க்கரைநோயாளர் கோதுமைமா(மைதா
மா) சேர்க்காமல் செய்யவும்.
தக்காளிப்பழம்அலர்ஜி உள்ளவர்கள்
அதனை சேர்க்காமல் செய்யவும்,
இருதய நோயாளர்வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும் .


 மாற்றுமுறை 
பட்டர் பதிலாக மாஜரீனை சேர்க்கலாம்.
தாளித்து போடாமலும்செய்யலாம்,
முட்டைபோடாமலும் செய்யலாம்.

இலங்கை மிளகாய்த்தூள்

மிளகாயில் விற்றமின் C சத்து காணப்ப
டுகின்றது. இதில் காணப்படும் விற்றமின்
C சத்தானது தக்காளிப்பழத்தில் காணப்படும்
விற்றமின் C சத்தினை விட 9 மடங்கு
அதிகமாகும். அப்படிப்பட்ட மிளகாயை
காயவைத்த பின்பு பெறப்படுவதே செத்தல்
மிளகாய்(காய்ந்தமிளகாய்) ஆகும். இப்படிப்
பட்ட மிளகாயுடன் ஆயுள்வேதம், சித்த
வைத்தியம், யுனானி, இருதயநோய், பல்
சம்பந்தபட்ட நோய்கள், சளி, கோழை,
இருமல், விஷமுறிவு போன்ற பல
நோய்களுக்கும் பயன்படும் மிளகும்,
வயிற்றுப் பகுதியை சீரமைப்பதில்
பங்காற்றும், கார்ப்பு இனிப்பு சுவையுடன்,
குளிர்ச்சித்தன்மையும், மணம் சுவை
 செரிமானத்தன்மைக்காக உணவுப்
பொருட்களில் சேர்க்கப்படுகிற சீரகத்தில்
 கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டின்,
 நீர்சத்து, விற்றமின் A,B2,B3,B6,B9,B12,M,C,E
K, கல்சியம், இரும்பு, மக்னீஷியம்,
பொஸ்பரஸ், சோடியம் பொட்டாஷியம்
போன்ற பல சத்துகள் அடங்கிய சீரகமும்
பலசத்துகள் அடங்கியதும் பல நோய்களை
மாற்றக் கூடிய மஞ்சள் தூள், கறுவாபட்டை
(பட்டை), கறிவேப்பிலை, கடலைப்பருப்பு
ஆகியவையாவும் கலந்து சுவையுடன்
செய்யப்பட்டது இலங்கை மிளகாய்த்தூள்.


தேவையான பொருட்கள் 

செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 250 கிராம்
மல்லி(தனியா) - 250 கிராம்
சின்னசீரகம்(சீரகம்) - ஒரு மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்துண்டு - ஒரு சிறியதுண்டு
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
அரிசி - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கருவாப்பட்டை(பட்டை) - சிறிய துண்டு


செய்முறை 
மல்லியை(தனியாவை) துப்பிரவு செய்து
கழுவி அதனை ஒரு தட்டில் போட்டு
நன்றாக காயவிடவும்.

நன்றாககாய்ந்த(ஈரமில்லாமல்)மல்லியை
(தனியாவை) ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

செத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை)
துப்பிரவாக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதனை சூடாக்கி அதில் செத்தல்
மிளகாயை(காய்ந்த மிளகாயை)போட்டு
அதனை ஓரளவாக வறுக்கவும்.

ஓரளவு வறுத்த செத்தல்மிளகாயை
(காய்ந்தமிளகாயை) எடுத்து ஒருதட்டில்
போட்டு வைக்கவும்.

செத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை)
3 துண்டுகளாக வெட்டவும் (இலகுவாக
கிரைண்டரில் (மிக்ஸியில்)அரைப்பதற்காக).

பின்பு அடுப்பில் உள்ள தாட்சியில்
(வாணலியில்)மல்லி(தனியாவை) மெல்லிய
சூட்டுடன் வறுக்கவும்.

மெல்லிய சூட்டுடன் வறுத்த மல்லியுடன்
(தனியாவுடன்)மிளகு, சின்னசீரகம்(சீரகம்),
பெருஞ்சீரகம்(சோம்பு), மஞ்சள் துண்டு,
கறிவேப்பிலை, கறுவாப்பட்டை(பட்டை)
ஆகியவற்றை போட்டு சிறிது நேரம்
வறுக்கவும்.

வறுத்த பின்பு இதனை வறுத்த செத்தல்
மிளகாயுடன்(காய்ந்த மிளகாயுடன்)போட்டு
வைக்கவும்.

பின்பு அடுப்பில்உள்ள தாட்சியில் கடலைப்
பருப்பை போட்டு ஓரளவு வறுக்கவும் .

வறுத்த கடலைப்பருப்பை செத்தல்
மிளகாயுடன்(காய்ந்த மிளகாயுடன்)
 போடவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் கழுவி
துப்பிரவு செய்த அரிசியை போட்டு வறுக்கவும்.

வறுத்த அரிசியை செத்தல் மிளகாயுடன்
(காய்ந்த மிளகாயுடன்)போடவும்.

வறுத்த யாவற்றையும் சிறிது நேரம்
ஆறவிடவும்.

ஆறிய பின்பு வறுத்து இரண்டாக வெட்டிய
செத்தல் மிளகாய்(காய்ந்த மிளகாய்)வறுத்து
வைத்திருக்கும் மல்லி(தனியா), மிளகு,
சின்னசீரகம்(சீரகம்), பெருஞ்சீரகம்(சோம்பு),
மஞ்சள்துண்டு, கறிவேப்பிலை, கருவாப்
பட்டை ஆகியவற்றை கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு நன்றாக அரைக்கவும்.

நன்றாக அரைத்த பின்பு அதனை எடுத்து
அரிதட்டில் போட்டு மா போல அரிக்கவும்.

நன்றாக அரித்த பின்பு அரிபடாமல்
 இருப்பவற்றை திரும்பவும் எடுத்து
கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு
அரைக்கவும்.

திரும்பவும் அரைத்தவற்றை எடுத்து
அரிதட்டில் போட்டு மா போல அரிக்கவும்.

இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும்.

எல்லாவற்றையும் அரைத்து முடிந்தபின்பு
அரைத்தவற்றை சிறிது நேரம் ஆறவிடவும்.

சிறிது நேரத்தின் பின்பு ஆறியவற்றை
எடுத்து ஒரு போத்தலில் போட்டு காற்று
உட்புகாதவாறு மூடி வைக்கவும்.

அதன் பின்பு மிளகாய்த்தூள் தேவைப்படும்
போது தேவையானளவில் எடுத்து
பயன்படுத்தவும்.



எச்சரிக்கை 
அல்சர்நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்றுமுறை 
கிரைண்டரில்(மிக்ஸியில்அரைப்பதற்கு
பதிலாக வறுத்தமிளகாயை மிளகாய்த்தூள்
அரைக்கும் மில்லில் கொடுத்து அரைக்கலாம்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
வறுக்கும் போது வறுக்கபடும் பொருட்கள்
கருகாமல் வறுக்கவும், குழந்தைகளை வைத்து
கொண்டு மிளகாய்த்தூளை தயாரிக்கவேண்டாம்,
மிளகாய்த்தூளை தயாரிக்கும் போது மிக மிக
கவனமாக தயாரிக்கவும்.

Mittwoch, 20. April 2011

பேரீச்சம்பழ அல்வா

இனிப்பு சுவையை உடையதும் இரும்புசத்து
கார்போஹைட்ரேட் சீனிச்சத்து, நார்சத்து,
கொழுப்பு புரோட்டின் நீர்சத்து, விற்றமின்
C, மக்னீஸியம் ஆகிய சத்துகள் நிறைந்தது
மருத்துவ குணம் உடையது சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண
கூடிய,பழமே பேரீச்சம்பழம் ஆகும். இப்படிப்
பட்ட பேரீச்சம்பழத்துடன் புரோட்டீன் விற்ற
மின் கல்சியம் கார்போஹைட்ரேட் சீனிசத்து
கொழுப்பு, நீர்சத்து, விற்றமின் A B1 B2 B12 D
மக்னீஸியம், பொட்டாஷியம் அகிய சத்துகள்
அடங்கிய பால் நெய் சத்துகள் அடங்கிய நெய்
 பலசத்துகள் உள்ள முந்திரி(cashew nut)குங்கும
ப்பூ ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட
பேரீச்சம்பழ அல்வா பல சத்துகளுடன் மிக
மிக சுவையானதும் ஆகும். இதன் சுவையை
அறிய இதனை செய்து சாப்பிட்டு பார்த்து
அறியவும். இது 18ம் நூற்றாண்டில் கண்டு
பிடிக்கபட்டதாக வரலாறு கூறுகிறது.


தேவையானபொருட்கள் 
பேரீச்சம்பழம் (விதைநீக்கிபொடியாகநறுக்கிய) - ஒரு கப்
சீனி(சக்கரை) - ஒரு கப்
நெய் - ஒரு கப்
பால் - அரை கப்
பாதாம்பருப்பு - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
குங்குமப்பூ - தேவையான அளவு
வெந்நீர் (சுடுதண்ணீர்) - (1 - 1+1/2) கப்


செய்முறை 

முதல் நாள் இரவு ஒருபாத்திரத்தில்
பேரீச்சம்பழத்தை போட்டு அதனுடன்
வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு
ஊற வைக்கவும். (பேரீச்சம்பழத்தின்
அளவை விட சிறிதளவு அதிகமாக
வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு
 (4 - 6மணித்தியாலம்) நன்றாக ஊற
விடவும்.

அதாவது பேரீச்சம்பழம் முழுவதும்
வெந்நீரின் உள்ளே தாழ்ந்து இருக்க
வேண்டும்).

பேரீச்சம்பழம் ஊறிய பின்பு
கிரைண்டரில்(மிக்ஸியில்) ஊறிய
 பேரீச்சம்பழம், பால் ஆகியவற்றை
போட்டு நன்றாக அரைக்கவும்.

ஒரு தட்டு முழுவதற்கும் சிறிதளவு
பட்டரை அல்லது நெய்யை பூசி
வைக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கி அதில் சீனி(சர்க்கரை),
தண்ணீர் ஆகியவற்றை போட்டு பாகு
காய்ச்சவும்.

சீனி(சர்க்கரை) இளம்பாகு பதத்தை
அடைந்ததும் அதனுள் அரைத்து
வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுது,
நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக
மரஅகப்பையால் அல்லது கரண்டியால்
கிளறவும்.

அதன் பின்பு இதனுடன் முந்திரி குங்குமப்பூ,
பாதாம் பருப்பு ஆகியவற்றை போட்டு
நன்றாக மரஅகப்பையால் அல்லது
கரண்டியால் கிளறவும்.

இவையாவும் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில்
ஒட்டாத பதத்தை அடைந்ததும் பேரீச்சம்பழ
 அல்வா தயாராகி விட்டது.

பின்பு தயாரான பேரீச்சம்பழ அல்வா உள்ள
 தாட்சியை (வாணலியை)அடுப்பிலிருந்து
இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில்
(வாணலியில்) உள்ள பேரீச்சம்பழ
அல்வாவை பட்டர் அல்லது நெய் பூசிய
தட்டில் போடவும்.

தட்டில் போட்ட பின்பு பேரீச்சம்பழ
அல்வாவை நன்றாக பரப்பி விடவும்.

பின்பு அதன் மேல் கத்தியால் விரும்பிய
வடிவங்களில் அத்துடன் வெட்டக்கூடிய
ஆழத்திற்கு கோடுகளை போடவும்.

இவையாவற்றையும் செய்த பின்பு
பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக
ஆற விடவும்.

இந்த அல்வா நன்றாக ஆறியதும் கோடு
போட்ட இடங்களில் கத்தியால் வெட்டி
எடுக்கவும்.

தேவையான அளவு வெட்டி எடுத்த
பேரீச்சம்பழ அல்வா துண்டுகளை
ஒருதட்டில் விரும்பியவடிவத்தில்
வைத்து அடுக்கவும்.

அதன் பின்பு தட்டி உள்ள பேரீச்சம்பழ
அல்வாவை பரிமாறவும் .

எச்சரிக்கை 
பேரீச்சம்பழம் அலர்ஜியுடையவர்கள்,
சர்க்கரைநோயாளர், இருதய நோயாளர்
 ஆகியோர் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
(பேரீச்சம்பழத்தின் அளவை விட சிறிதளவு
அதிகமாக வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு
(4 - 6மணித்தியாலம்) நன்றாக ஊறவிடவும்.
அதாவது பேரீச்சம்பழம் முழுவதும் வெந்நீரின்
உள்ளே தாழ்ந்து இருக்க வேண்டும்)

இஞ்சி மாங்காய் ஊறுகாய்


மாங்காய் இஞ்சியில் கொழுப்பு புரதம் கல்சியம்,
இரும்பு, பொஸ்பரஸ், தாதுக்கள், மக்னீஸியம்,
நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், விற்றமின் C
ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன்
மாங்காய் இஞ்சி முக்கிய நறுமண அல்லது
பலசரக்கு பொருள் ஆகும். இது மருத்துவ
மூலிகையும் ஆகும். மாங்காய் இஞ்சியை
உண்பதால் தீரும் நோய்கள் பசியின்மை,
செரியாமை, வயிற்றுப்பொருமல், தொண்டை
க்கம்மல் ஆகும். இப்படிப்பட்ட மாங்காய் இஞ்சி
யுடன் பலவித சத்துகள் நிறைந்த மாங்காயையும்
சேர்த்து செய்யப்பட்ட ஊறுகாய் சுவையானதும்
சத்துகள் நிறைந்ததும் புது விதமானதுமாகும்.
அத்துடன் இது நல்ல ஜீரணத்தை தரக்கூடியது
ஆகவே மாங்காய்இஞ்சி மாங்காய்ஊறுகாய்
செய்து சாப்பிட்டு இதன் பலனை அறியவும்.


தேவையானபொருட்கள்
மாங்காய் இஞ்சி - 50 கிராம்
மாங்காய் (சிறியது) - ஒன்று
பச்சைமிளகாய்(நறுக்கியது) - 8
உப்பு -தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)


செய்முறை
மாங்காய் இஞ்சியின் தேவையற்ற ப
குதிகளை அகற்றவும். பின்பு மாங்காய்
 இஞ்சியின் தோலை சீவவும்.

தோலை சீவிய மாங்காய்இஞ்சியினை
சிறிய சிறிய துண்டுகளாக(பொடி
பொடியாக) நறுக்கவும்.

சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய
மாங்காய் இஞ்சியை ஈரமற்ற ஒரு
பாத்திரத்தில் போடவும்.

அதன் பின்பு மாங்காயை நன்றாக க
ழுவவும்.

கழுவிய மாங்காயை ஈரமில்லாதவாறு
துணியினால் நன்றாக துடைக்கவும்.

ஈரமில்லாமல் துடைத்தபின்பு மாங்காயில்
உள்ள தேவையற்ற பகுதிகளை அகற்றவும்.

தேவையற்ற பகுதிகளை அகற்றிய
மாங்காயை சிறிய சிறிய(பொடி பொடியாக)
துண்டுகளாக நறுக்கவும்.

பின்பு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய
மாங்காய், மாங்காய்இஞ்சி, உப்பு ஆகிய
வற்றை போட்டு நன்றாக கலக்கவும் .

 நன்றாக கலந்த பின்பு கறிவேப்பிலையை
கழுவி சுத்தம் செய்யவும்.

சுத்தம் செய்த கறிவேப்பிலையை ஒரு
 துணியினால் அல்லது ஈரம் உறிஞ்சக்கூடிய
ஒரு தாளினால் ஈரமில்லாமல் துடைக்கவும்.

ஈரமில்லாமல் துடைத்த கறிவேப்பிலையை
சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
அதனை சூடாக்கவும்.

சூடாக்கிய பின்பு அதில் சிறிதளவு எண்ணெய்
விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, நறுக்கிய
பச்சை மிளகாய், சிறிய சிறிய துண்டுகளாக
நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு தாளித்தவற்றை எடுத்து
முதலில் கலந்து வைத்திருக்கும்
பொருட்களுடன் போடவும்.

பின்பு மரக்கரண்டியால் எல்லாவற்றையும்
நன்றாக கலக்கவும்.

எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு புது
விதமான சுவையான மாங்காய் இஞ்சி
மாங்காய் ஊறுகாய் தயாராகிவிடும்.

சூடு ஆறியபின்பு சுத்தமான போத்தலில்
போட்டு காற்று, தண்ணீர் போன்றவை
உட்புகாதவாறு போத்தலின் மூடியை இறுக
மூடி வைத்து உண்ணலாம் .



எச்சரிக்கை 
மாங்காய் இஞ்சிஅலர்ஜி உள்ளவர்கள்,
இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனை
ப்படி உண்ணவும்,
மாங்காய் இஞ்சி ஊறுகாய் சாப்பிட விரும்பினால்
மரவள்ளிக்கிழங்கை உண்ணகூடாது. (மாங்காய்
இஞ்சியும், மரவள்ளிகிழங்கும் சேர்ந்தால்
நஞ்சாகிவிடும்).


 கவனிக்க வேண்டிய விசயங்கள்
மாங்காய் இஞ்சி போட்டு வைத்திருக்கும்
போத்தலில் ஈரம்உட்புகாதவாறு கவனமாக
 பாவித்தால் நீண்ட நாட்களுக்கு வைத்து
பாவிக்கலாம். அத்துடன் மாங்காய் இஞ்சியை
செய்யும் போதும் சுத்தமாகவும் ஈரம்பாடாமலும்
 கவனமாகவும் செய்யவும். மாங்காய் இஞ்சிக்கு
பதிலாக கறிக்கு பயன்படும் இஞ்சியை பயன்
படுத்தலாம் பச்சைமிளகாய்க்கு பதிலாக
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்)
பயன்படுத்தலாம்.

மாங்காய் இஞ்சி ஊறுகாய்


மாங்காய் இஞ்சி(white Turmeric/mango ginger)யில்
கொழுப்பு, புரதம், தாதுக்கள் கல்சியம்,
பொஸ்பரஸ், இரும்பு, மக்னீஸியம், நார்ச்
சத்து, கார்போஹைட்ரேட், விற்றமின் C
ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன்
மாங்காய் இஞ்சி(white Turmeric/mango ginger)
முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள்
ஆகும், இது மாங்காய் சுவையானதும்,
மருத்துவ மூலிகையும் ஆகும். மாங்காய்
இஞ்சியை(white Turmeric/mango ginger)உண்பதால்
தீரும் நோய்களாவன - பசியின்மை,
செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டை
க் கம்மல் ஆகும் இப்படிப்பட்ட மாங்காய்
இஞ்சியில் (white Turmeric/mango ginger) செய்யப்பட்ட
ஊறுகாய் சுவையானதும் சத்துகள் நிறைந்ததும்
புது விதமானதுமாகும். அத்துடன் இது நல்ல
ஜீரணத்தை தரக்கூடியது. ஆகவே மாங்காய்
இஞ்சி ஊறுகாய்(white Turmeric/mango ginger pickle)
செய்து சாப்பிட்டு இதன் பலனை அறியவும்.


தேவையானபொருட்கள்
மாங்காய்இஞ்சி(white Turmeric) - 100 கிராம்
பச்சைமிளகாய் (நறுக்கியது) - 3
தேசிக்காய்(எலுமிச்சம்பழ) சாறு - ஒன்று
உப்பு - தேவையானளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை
மாங்காய் இஞ்சியின்(white Turmeric/mango ginger)
தேவையற்ற பகுதிகளை அகற்றவும். பின்பு
மாங்காய் இஞ்சியின்(white Turmeric/mango ginger)
தோலை சீவவும்.

தோலைசீவிய மாங்காய்இஞ்சியினை(white
Turmeric/mangoginger) சிறிய சிறிய துண்டுகளாக
 (பொடிபொடியாக) நறுக்கவும்.

சிறிது சிறிதாக நறுக்கிய மாங்காய் இஞ்சியை
(white Turmeric/mangoginger)ஈரமற்ற ஒரு பாத்திரத்தில்
போடவும்.

அதனுடன் உப்பு, நறுக்கிய பச்சைமிளகாய்
ஆகியவற்றை போட்டு நன்றாக மரக்கரண்டி
யால் கலக்கவும்.

நன்றாக கலந்த பின்பு அதனுடன் தேசிக்காய்
(எலுமிச்சம்பழ)சாற்றை தூவி மரக்கரண்டியால்
கலக்கவும்.

பின்பு கறிவேப்பிலையை கழுவி சுத்தம்
செய்யவும்.

சுத்தம் செய்த கறிவேப்பிலையை ஒரு
 துணியினால்(ஈரம் உறிஞ்சக்கூடிய ஒரு
தாளினால்)ஈரமில்லாமல் துடைக்கவும்.

ஈரமில்லாமல் துடைத்த கறிவேப்பிலையை
சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும். பின்பு
அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து
சூடாக்கவும்.

சூடாக்கிய பின்பு அதில் சிறிதளவு எண்ணெய்
விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சிறிய
சிறிய துண்டுகளாக நறுக்கிய கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு தாளித்தவற்றை எடுத்து முதலில்
கலந்து வைத்திருக்கும் பொருட்களுடன் போடவும்.

பின்பு மரக்கரண்டியால் எல்லாவற்றையும் நன்றாக
கலக்கவும்.

எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு புது
விதமான சுவையான மாங்காய் இஞ்சி ஊறுகாய்
(white Turmeric/mango ginger pickle)தயாராகிவிடும்.

இதன் சூடு ஆறிய பின்பு சுத்தமான போத்தலில்
போட்டு காற்று, தண்ணீர் போன்றவை உட்
புகாதவாறு போத்தலின் மூடியை இறுக மூடி
வைத்து உண்ணலாம்.


எச்சரிக்கை 
மாங்காய் இஞ்சி(white Turmeric/mango ginger
pickle) அலர்ஜி உள்ளவர்கள் இருதய
நோயாளர் வைத்தியரின் ஆலோசனை
ப்படி உண்ணவும்,
மாங்காய் இஞ்சி ஊறுகாய்(white Turmeric/
mango ginger pickle) சாப்பிட விரும்பினால்
மரவள்ளிக்கிழங்கை உண்ணகூடாது
(மாங்காய்இஞ்சியும் மரவள்ளிகிழங்கும்
சேர்ந்தால் நஞ்சாகிவிடும்).


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
மாங்காய் இஞ்சி(white Turmeric/mango ginger)
போட்டு வைத்திருக்கும் போத்தலில்
ஈரம் உட்புகாதவாறு கவனமாக
பாவித்தால் நீண்ட நாட்களுக்கு வைத்து
பாவிக்கலாம் ,அத்துடன் மாங்காய்
இஞ்சியை(white Turmeric/mango ginger)
செய்யும் போதும் சுத்தமாகவும் ஈரம்
பாடாமலும் கவனமாகவும் செய்யவும்


. மாற்று முறை
 மாங்காய் இஞ்சிக்கு (white Turmeric//mango g
inger)பதிலாக கறிக்கு பயன்படுத்தும்
இஞ்சியையும் பயன்படுத்தலாம்.

பிரட் மசாலத்தோசை

ப்ரெட் மசாலாத் தோசை சுவையானதும்
சத்தானதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி உண்ண
கூடியதுமாகும். ஆகவே இதை செய்து
சாப்பிட்டு இதன் சுவையை அறியவும். 


தேவையானவை
மசாலாத்தோசை மா - 2 கப்
ப்ரெட் (சிறியது) - ஒரு துண்டு
மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கியபெரிய வெங்காயம் - 1
மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கியதக்காளிப்பழம் - 2
மிளகாய்த்தூள் - (1 - 2) தேக்கரண்டி
மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையானள அளவு
எண்ணைய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பால் - சிறிதளவு
புளிக்கரைசல் - சிறிதளவு
உள்ளி (பூண்டு,சிறியதுண்டுகளாகநறுக்கியது) - ஒன்று
கறிவேப்பிலை (சிறியதுண்டுகளாக நறுக்கியது) - சிறிதளவு


செய்முறை

ஒரு பலகையில் ப்ரெட்டை வைத்து
சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டி
அதனை ஒருதட்டில் வைக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கி அதில் சிறிதளவு
எண்ணெய்விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் சிறிய
சிறிய சதுர துண்டுகளாக வெட்டிய
ப்ரெட் துண்டுகளை போட்டு
பொன்னிறமாக பொரிக்கவும்.

பொன்னிறமாக பொரித்த பின்பு ப்ரெட்
துண்டுகளை எடுத்து ஒரு தட்டில்
வைக்கவும்.

பின்பு அடுப்பில் உள்ள தாட்சியில்
(வாணலியில்) சிறிதளவு எண்ணெய்
விட்டுசூடாக்கி அதில்மிகச் சிறிய
துண்டுகளாக நறுக்கிய பெரிய
வெங்காயம், தக்காளிப்பழம், உள்ளி
(பூண்டு)ஆகியவற்றை போட்டு நன்றாக
வதக்கவும்.

வதக்கிய பின்பு அதில் மிளகாய்த்தூளை
 சேர்த்து பிரட்டி பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் உப்பு,
சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை
சேர்க்கவும்.

இவை எல்லாவற்றையும் அவியவிடவும்.

 பிறகு ஓரளவு அவிந்ததும் இதனுடன்
மசாலாத்தூள் சிறிய துண்டுகளாக நறுக்கி
ய கறிவேப்பிலை, பால், புளிக் கரைசல்
ஆகியவற்றை போட்டு நன்றாக
அவியவிடவும்.

இவை நன்றாக அவிந்து குழம்பாகியதும்
இதனுடன் எண்ணெயில் பொரித்து
வைத்திருக்கும் ப்ரெட்துண்டுகளை
போட்டு பிரட்டி (2 - 5) நிமிடங்கள்
அவியவிடவும்.

நன்கு அவிந்து பிரட்டல்(தடிப்பான)
குழம்பாகியதும் அடுப்பில் இருந்து
பிரட்டல் குழம்பு உள்ள தாட்சியை
(வாணலியை)இறக்கி சிறிதளவு
நேரம் மூடிவைக்கவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை
வைத்து அதை சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் சிறிதளவு
நல்லெண்ணெயை ஒருதுணியில்
எடுத்து அதை தோசைக்கல்லில்
தடவும்.

பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை
எடுத்து தோசைக் கல்லில் ஊற்றி
நன்றாகதடவி தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன்
மேல் செய்து வைத்திருக்கும் ப்ரெட் மசாலா
பிரட்டல் கறியை வைத்து அதன் இருபக்க
மும் மடித்து அதை திருப்பிபோட்டு
வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து
ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய தோசைகளை சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து
பரிமாறவும்.



எச்சரிக்கை 
உளுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
தோசை குளிர்மையானது,(மசாலாத்தோசைமா
செய்ய தேவையானது - 1/2 கப் புழுங்கலரிசி
(2மணித்தியாலம் ஊறவைத்த),1/2கப் பச்சரிசி
(2மணித்தியாலம் ஊறவைத்த),(1/4கப் உளுத்தம்
பருப்பு,1/2தேக்கரண்டி வெந்தயம், தண்ணீர்
ஆகியவற்றைகலந்து 15நிமிடங்கள்
ஊறவைத்தது) ஊறவைத்த எல்லாவற்றையு
ம் சேர்த்து அரைத்தது).

திடீர் கரட் ஊறுகாய்

கரட்டில் கார்போஹைட்ரேட், கொழுப்பு,
கரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,
B2,B3,B6,C,D, பொட்டாசியம் பொஸ்பரஸ்,
மக்னீஸியம், சோடியம், கல்சியம் ஆகிய
வை நிறைந்த ஒர் உணவுபொருள் ஆகும்
. இதில் செய்யப்பட்ட கரட் ஊறுகாயில்
மேலே கூறப்பட்ட சகல சத்துகளுடன்
மேலதிகமாக கொழுப்பு சிட்ரிக் அமில
சத்து போன்ற இன்னும் பல சத்துகள்
அடங்கியது. அத்துடன் மிகமிக சுவை
யானது இதனை செய்து பார்த்து இதன்
சுவையையும் சத்துகளையும் அறியவும். 


தேவையானவை
துருவியகரட் - 6 கப்
தேசிக்காய்சாறு (எலுமிச்சங்காய்சாறு) - அரைகப்
எண்ணெய் - அரைகப்
கடுகுத்தூள் - 4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 6 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை (வெல்லம்) - சிறிதளவு (விரும்பினால்)
பெருஞ்சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி


செய்முறை

ஒரு பாத்திரத்தில் துருவிய கரட், கடுகுத்தூள்,
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரை
(வெல்லம்), தேசிக்காய் சாறு(எலுமிச்சங்காய்
சாறு) ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக
கலக்கி வைக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
 எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு,
பெருஞ்சீரகம்(சோம்பு) பெருங்காயம்,
செத்தல் மிளகாய் ஆகியவற்றை போட்டு
 நன்றாக தாளிக்கவும்.

பின்பு தாளித்தவற்றை கலந்து வைத்துள்ள
வற்றுடன் போட்டு நன்றாக கலக்கவும்.

இவை யாவும் நன்றாக கலந்தவுடன்
சுவையான சத்தான மிகமிக ஈசியான
திடீர் கரட் ஊறுகாய் தயாராகி விடும்.

அதன் பின்பு இதனை சோறு(சாதம்),
பாண், இட்லி ஆகியவற்றில் ஒன்றுடன்
 சேர்த்து சாப்பிடலாம்.

எச்சரிக்கை -
கரட் அலர்ஜி உள்ளவர்கள், அல்சர்
உள்ளவர்கள், இருதய நோயாளர்
ஆகியோர் வைத்தியரின் ஆலோச
னைப்படி சாப்பிடவும்.

Dienstag, 19. April 2011

மாதுளை கொய்யா சட்னி

மாதுளை கொய்யா சட்னியில் விற்றமின்
A,B1,B2,B3, C,கல்சியம், மினரல்,பொட்டா
ஷியம், மக்னீஸியம், இரும்பு, நார்ச்சத்து,
பொஸ்பரஸ், கார்போஹைட்ரேட் இவை
யாவும் நிறைந்து காணப்படும். அத்துடன்
இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும்
ஆகும்.

தேவையான பொருட்கள் 
கொய்யாப்பழம் (முற்றியவிதைகளற்ற) - ஒரு கப்
முற்றிய)மாதுளம்பழ முத்துகள் - ஒரு கப்
செத்தல்மிளகாய் - தேவையானளவு
இஞ்சி - சிறு துண்டு
உள்ளி(பூண்டு) - ஒரு பல்
வெங்காயம் - அரைப்பாதி
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ - 2 கப்
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) -1தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
வெங்காயம் - கால் பாதி

செய்முறை 

கொய்யாப்பழம், மாதுளம்பழ முத்துகள்,
பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம்(கால்
பாதி), உப்பு, உள்ளி(பூண்டு) இவை எல்லா
வற்றையும் போட்டு நன்றாக அரைக்கவும்.

நன்றாக அரைத்த பின்பு தேங்காய்ப்பூ,
கறிவேப்பிலை ஆகியவற்றையும் போட்
டு நன்றாக அரைக்கவும்.

பின்பு ஒரு வாணலியில்(தாச்சியில்)எண்ணெய்
விட்டு அது கொதித்ததும் கடுகு, சீரகம்,
வெங்காயம்(கால்பாதி) போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்தவை,
தாளித்தவை, கறிவேப்பிலை, தேசிக்காய் சாறு
சேர்த்து கலக்கவும்.

அதன் பின்பு பரிமாறவும்.

எச்சரிக்கை 
இருதயநோயாளர், மாதுளம்பழம், கொய்யா
ப்பழம் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

கோப்பித்தூள்

கோப்பியை குடிப்பதால் களைப்படைந்து
காணப்படுகின்ற எமது உடல் புத்துணர்ச்சியை
 பெறுகிறது. அத்துடன் கோப்பியின் பிறப்பிடம்
 ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா ஆகும்
. ஆகவே நீங்கள் சுத்தமான சுவையான கோப்பி
தூளை தயாரித்து அதன் பின்பு சுத்தமான
சுவையான கோப்பியை குடித்தால் களைப்படைந்து
காணப்படும் உங்கள் உடல் புத்துணர்ச்சியை பெறும்.


தேவையான பொருட்கள் 
துப்பிரவாககழுவிகாயவைத்தகோப்பிவிதை-500கிராம்
சீனி(சர்க்கரை) - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 2 தேக்கரண்டி


செய்முறை 

1 )அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
    அதில் கோப்பிவிதையை போட்டு நன்றாக
    (கோப்பி விதை கருகாமல்) வறுக்கவும்.

2 )கோப்பி விதை நன்றாக வறுபட்டதும் அதில்
சீனி (சர்க்கரை), பட்டர் ஆகியவற்றை நன்றாக
கலந்து விட்டு உடனடியாக இறக்கவும்.

3 )நன்கு ஆறியபின்பு நன்றாக வறுத்த கோப்பி
விதையை கிரைண்டரில் அரைத்து,
அரிதட்டினாள் அரிக்கவும் (சலிக்கவும்).

4 )அரிதட்டினாள் அரித்த(சலித்த)கோப்பித்தூளை
காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து
தேவையான போது தேவையான அளவில்
 எடுத்து பாவிக்கவும்.





செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 18. April 2011

கச்சான் அல்வா


கச்சான் (வேர்க்கடலை,நிலக்கடலை)
அல்வா சுவையானது  கொழுப்பு,
கார்போஹைட்ரேட் போன்ற பல
சத்துகள் உடையது  சிறுவர்கள் முதல்
 பெரியவர்கள் வரை விரும்பி உண்ண
க்கூடியதும் ஆகும்.

தேவையான பொருட்கள் 
கச்சான் (வறுத்து சுத்தம்செய்துபாதியாக்கிய) - 250கிராம்
சர்க்கரை(வெல்லம் ) - 250 கிராம்
அப்பச்சோடா - 2 சிட்டிகை
கோதுமை மா(மைதா மா) - 2 மேசைக்கரண்டி(நிரப்பி)
பட்டர் - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)


செய்முறை 

ஒரு தட்டினை எடுத்து அதன் முழுப்பகுதிக்கும்
 நன்றாக பட்டரை பூசி வைக்கவும்.

பின்பு ஒரு உருளையை(பரோட்டா,
ரொட்டி, சப்பாத்தி தட்ட பயன்படுத்துவது)
எடுத்து அதன் மேல் முழுப் பகுதிக்கும்
பட்டரை நன்றாக பூசிவைக்கவும்.

பட்டரை நன்றாக பூசிய பின்பு அடுப்பில்
தாச்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும் .

தாச்சியை(வாணலியை)சூடானதும் அதில் சர்க்கரையை(வெல்லத்தை)போட்டு அதனை
கரண்டியால் இடை விடாது வறுத்து
கொண்டிருக்கவும்.

சர்க்கரை(வெல்லம் ) முழுவதும் இளகிபாகாக
வரத்தொடங்கியதும் அதனுள் ஒரு மேசை
க்கரண்டி பட்டர், ஆப்பச்சோடா ஆகியவற்றை
போட்டு நன்றாக கலக்கவும்.

எல்லாம் நன்றாக கலந்தபின்பு அதனுடன்
வறுத்து கோது நீக்கி தோல் உரித்து இரண்டாக
 உடைத்து வைத்திருக்கும் (இரண்டாக பிளந்த
 வெள்ளை முத்து) கச்சானை(நிலக்கடலை,
வேர்கடலை) கொஞ்சம் கொஞ்சமாக முழுவ
தையும் துவவும்.

கச்சான்(நிலக்கடலை, வேர்க்கடலை)முழுவதும்
 தூவி சேர்த்த பின்பு உடனடியாக அடுப்பிலிருந்து
 இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கியதை உடனடியாக பட்டர்
பூசிய தட்டில் போட்டு அதனை பட்டர் பூசிய
உருளையினால் நன்கு அழுத்தி பரப்பவும்.

அழுத்தி பரப்பியவுடன் உடனடியாக ஒரு கூரான
கத்தியால் 1" தர 1" அளவான துண்டுகளாக அதன்
மேல் நன்றாகவும் ஆழமாகவும் கீறவும்.

அதன் பின்பு அதனை நன்றாக ஆறவிடவும்.

•நன்றாக ஆறிய பின்பு சுவையான சத்தான
கச்சான் (நிலக்கடலை,வேர்கடலை)அல்வா
 தயாராகிவிடும்.

தயாரான கச்சான் (நிலக்கடலை,வேர்கடலை)
அல்வா துண்டுகளை பிரித்தெடுத்து ஒரு தட்டில்
வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
சர்க்கரைநோயாளர், கச்சான்(நிலக்கடலை,
வேர்க்கடலை)அலர்ஜி உடையவர்கள்,
இருதயநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
அடுப்பில் தாச்சியை (வாணலியை வைத்து
அதனை சூடாக்கி அதில் சிறிதளவு குருமணலை
போட்டு நன்றாக சூடாக்கவும், மணல் சூடானதும் கச்சானை(நிலக்கடலை,வேர்க்கடலை)
போட்டு நன்றாக வறுக்கவும். அல்லது
வறுத்த கச்சானை(நிலக்கடலை,வேர்க்கடலை)
கடையில் வாங்கவும், அதனை உடைத்து
 முத்துக்களை எடுக்கவும், பின்பு முத்துகளி
ல் காணப்படும் சிகப்புதோலை அகற்றவும்,
பின்பு முத்துகளின் நடுவில் இரண்டாக
பிளக்கவும்.


மாற்றுமுறை 
கச்சான்(நிலக்கடலை)பதிலாகஉடைத்த
 பாசிபயரிலும்(பாசி பருப்பிலும்)
செய்யலாம். பட்டருக்கு பதிலாக
மாஜரின் அல்லது நெய் விட்டு
செய்யலாம்.
சக்கரை(வெல்லத்திற்கு) பதிலாக
சீனி(சக்கரை) உபயோகிக்கலாம் 

ஸ்ரீலங்கா முட்டை மா(ஓட்டு மா)


சுவையானது சத்தானது சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை உண்ணக்கூடியதும்
கல்சியம், மினரல், கொழுப்பு, கார்போஹைட்
ரேட், புரதம், விற்றமின், பொஸ்பரஸ், இரும்பு
போன்ற பலசத்துகள் அடங்கியதும் வித்தியா
சமானதும் ஆகும். இதனை ஓட்டுமா எனவும்
அழைப்பார்கள். 

தேவையான பொருட்கள் 
அரிசிமா (வறுத்தது) - ஒரு சுண்டு (நிரப்பி)(399 கிராம்)
முட்டை - 2
சீனி (சர்க்கரை) - அரை சுண்டு (199 கிராம்)
நல்லெண்ணெய் - அரை சில்வர் டம்ளர்
வனிலா - 2 மேசைக்கரண்டி
உளுத்தம்மா - கால் சுண்டு (99 கிராம்)

செய்முறை 

ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து
அதில் முட்டைகளை உடைத்து
ஊற்றவும்.

உடைத்து ஊற்றிய முட்டைகளின் மேல்
சீனியை(சர்க்கரையை) போடவும்.

பின்பு இவையிரண்டையும் நன்றாக
அடித்து கரைக்கவும்.


(சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக
கரைய வேண்டும் (எக் பீட்டரினால்
அடிக்கவும்).

சீனி(சர்க்கரை) முட்டையுடன் சேர்ந்து
நன்றாக கரைந்த பின்பு அதனுடன்
வனிலாவையும் சேர்த்து அடிக்கவும்.

அதன் பின்பு அடித்து வைத்து உள்ள
 இக்கலவையுடன் வறுத்த அரிசிமா,
உளுத்தம்மா ஆகியவற்றை சிறிது
சிறிதாக தூவி எல்லாவற்றையும்
நன்றாக கலக்கவும்.

எல்லாம் கலந்த பின்பு அதனுடன்
 நல்லெண்ணெயை விட்டு நன்றாக
குழைத்து கொள்ளவும்.

குழைத்த பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு
நல்லெண்ணெய் விடவும்.

நல்லெண்ணெய் விட்டபின்பு தாட்சியை
(வாணலியை) அடுப்பிலிருந்து எடுத்து
நல்லெண்ணெய் தாட்சியின்(வாணலியின்)
எல்லா பக்கமும்படும்படி நன்றாக சுற்றவும்
(அப்பத்திற்கு சுற்றுவது போல).

பின்பு தாட்சியை (வாணலியை) அடுப்பில்
வைத்து அதில் குழைத்து வைத்த
மாக்கலவையை போடவும்.

தாட்சியில்(வாணலியில்) போட்ட மாக்கலவை
அடிப்பிடிக்காமல் இருக்க கரண்டியால்
இடைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டிருக்கவும்.

இக்கலவை நன்றாக உதிர்ந்து மண்ணிறமான
சிறு மணிகள்போல இருக்கும்போது முட்டைமா
 தயாராகி விடும்.

முட்டைமா தயாராகிய பின்பு இந்த முட்டைமா
உள்ள தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில் இருக்கும்
முட்டை மாவை ஒருபாத்திரத்தில் போட்டு
நன்றாக ஆறவிடவும்.

முட்டை மா நன்றாக ஆறிய பின்பு இதை சுத்தமான
 போத்தலில் போட்டு காற்று போகாதவாறு நன்றாக
 இறுக்கி மூடிவைக்கவும்.

முட்டைமா சாப்பிட தேவைப்படும் போது முட்டை
மா உள்ள போத்தலை எடுத்து அதன் மூடியை திறந்து
தேவையான முட்டைமாவை எடுத்து சாப்பிடலாம்.

எச்சரிக்கை 
இருதயநோயாளர், சர்க்கரைநோயாளர் வைத்தியரின்
ஆலோசனையை கேட்ட பின்பு சாப்பிடலாம்.


 கவனிக்கவேண்டியவிசயங்கள் 
முட்டைமாவை(2 - 8)கிழமைவரை வைத்து சாப்பிடலாம்.