கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 31. Januar 2012

வெண்டிக்காய் கறிமிளகாய் கறி



1.கறிமிளகா(குடைமிளகா)யில் 
மாப்பொருள் ,வெல்லம்  நார்ப்பொருள்
கொழுப்பு ,புரதம்,தயமின்,ரிபோஃபிளாவின்
,நியாசின் ,பான்டோதெனிக் அமிலம் ,உயிர்
ச்சத்து -பி6 ,இலைக்காடி(உயிர்ச்சத்து பி9),
உயிர்ச்சத்து சி  கல்சியம்,இரும்பு ,மக்னீசியம்,
பொஸ்பரஸ்,பொட்டாசியம் ,துத்தநாகம்
ஆகிய சத்துக்களும்


2.வெண்டிக்காயில் 
மாப்பொருள்,வெல்லம்,நார்ப்பொருள்,கொழுப்பு,
புரதம் நீர் ,கல்சியம் ஆகிய சத்துக்களும்

அத்துடன் 
வேறு பல சத்துக்களும்,சுவையும்  உடையது
சுத்தமானது செய்வதிற்கு இலகுவானது
கறிமிளகாய் வெண்டிக்காய் கறி ஆகும்

தேவையான பொருட்கள் 
சிறிதுசிறிதாக வெட்டிய கறிமிளகாய்(குடைமிளகாய்)-1
சிறிதுசிறிதாக வெட்டிய வெண்டிக்காய் -1/4 கிலோ
சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1
ஸ்ரீ லங்கா மிளகாய்த்தூள்-(2-4) மேசைக்கரண்டி
சிறிது சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு -தேவையானளவு
எண்ணெய் -தேவையானளவு
தேசிக்காய் சாறு(எலும்மிச்சம் சாறு ) - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உழுத்தம்பருப்பு - 1தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு)-1தேக்கரண்டி
பால்(பசுஅல்லது தேங்காய் ) . 2மேசைக்கரண்டி


செய்முறை 
1.அடுப்பில் தாச்சியை அல்லது வாணலியை வைத்து
    அதில் எண்ணெயை விட்டு சூடாக்கவும்-

2.எண்ணெய் சூடான பின்னர் அதில் கடுகை போட்டு
    வெடிக்கவிடவும்.

3.கடுகு வெடித்த பின்னர் அதனுடன் பெருஞ்சீரகம்
   (சோம்பு ) கறிவேப்பிலை,வெங்காயம் ஆகியவற்றை
   போட்டு தாளிக்கவும்.

4.தாளித்த பின்னர் அதனுடன் உழுத்தம்பருப்பை போட்டு
   சிறிது  நேரம் பொரியவிடவும்.

5.அதன் பின்னர் அதனுடன் வெண்டிக்காயை  போட்டு
   நன்றாக பிரட்டி நன்றாக பொரிந்து அவிய விடவும்.

6..வெண்டிக்காய் நன்றாக பொரிந்துஅவிந்ததும் அதனுடன்
    கறிமிளகாயை (குடைமிளகாயை) போட்டு  நன்றாக
    பிரட்டி ஓரளவு பொரிந்து நன்றாக அவிய விடவும்.

7.அதன் பின்னர் இவற்றுடன்  ஸ்ரீ லங்கா மிளகாய்த்தூளை ,
    போட்டு அதன் பச்சைவாசனை போகும்வரை பிரட்டவும்.

8.பிரட்டிய பின்னர் அதனுடன் உப்பு,பால் (பசுஅல்லது
   தேங்காய் ) ஆகியவற்றை போட்டு பிரட்டி  சிறிது நேரம்
   பொரிந்து அவியவிடவும்.

9.இவையாவும் பொரிந்து அவிந்த பின்னர் இவற்றுடன்
   கறிவேப்பிலை,தேசிக்காய் சாற்றினை  (எலும்மிச்சம்
   சாற்றினை)விட்டு நன்றாக கலக்கவும்.

10. கலந்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான கறி
      மிளகாய் வெண்டிக்காய் கறி  தயாராகிவிடும் .

11.அதன் பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம் ),தோசை .
      பாண்,ரொட்டி,சப்பாத்தி இட்லி ஆகியவற்றுடன்
     வெண்டிக்காய் கறிமிளகாய்(குடைமிளகாய்) கறியை
     சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் .

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்