கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 30. April 2014

பேரீச்சம்பழ பாயசம்

தேவையான பொருட்கள்: 
கொட்டை நீக்கியபேரீச்சம்பழம் - 1 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
நறுக்கியவெல்லம்  - 1/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை(விரும்பினாள் )
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை 
பொடிப் பொடியாக அரிந்து தேங்காய்
ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் 
கொள்ளவும்.

வெல்லத்தை சிறிது தண்­ணீர் ஊற்றி 
ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு 
உலோக வடிகட்டியில் தூசி நீங்க 
வடிகட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில்  அல்லது நான்ஸ்டிக் 
தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து 
 அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல 
நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்

 (விரும்பினாள் ) ஒரு சிட்டிகை பச்சை 
கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் 
ட்காட்டி விரலுக்கு மத்தியில் 
வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் 
பாயசத்தில் போடலாம் 

பின்னர் ஏலக்காய்பொடி தூவி 
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு 
கலந்து அடுப்பை  அணைக்கவும்.

குறிப்பு:

தேங்காய்த் திருவலை சிறிது சுடுநீருடன் 
சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு 
உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி 
எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப்பாலை 
உபயோகிக்க வேண்டும். 

ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும்
 உபயோகிக்கலாம்.

ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதால் 
வெல்ல சுவையை  காட்டும்.

 வெல்லத்திற்கு பதிலாக தேவைப்பட்டால் 
சிறிது தேனும் உபயோகிக்கலாம்.

 மற்ற பாயசங்களில் இருந்து வேறுபட்ட 
சுவையுடன் இயற்கை இனிப்புடனும்
 கமகம மணத்துடனும் இருக்கும் 
பேரீச்சம் பழ பாயசம் சுவையும் 
ஆரோக்கியம் நிறைந்தது 

Dienstag, 29. April 2014

கத்தரிக்காய், பிரை


Brinjal Fry - Cooking Recipes in Tamil
  
தேவையான பொருட்கள்:
பெரிய கத்தரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

 நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும்.

 ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

சாம்பார், தயிர், ரசம் சாதமுடன் சாப்பிட மிகவும் நன்றாகயிருக்கும்.

Montag, 28. April 2014

உளுந்து பாயசம்


Urad Dal Kheer - Cooking Recipes in Tamil
பாயசத்தில் சேமியா பாயசம், ரவை பாயசம், அரிசி பாயசம்னு செஞ்சுருப்பீங்க....உளுந்து பாயசம் செஞ்சுருக்கீங்களா...இது வழக்கமான பாயசத்தை விட வித்தியாசமான சுவையுடன் இருக்கும். உளுந்து உடம்புக்கு வலுவானதும்கூட. அதோடு இதுல புரோட்டீன் சத்தும் நிறைய இருக்கு. அப்பறம் என்னங்க.. உடனே செஞ்சு அசத்திட வேண்டியதுதானே.....

தேவையான பொருட்கள்

உருட்டு உளுந்து - 100 கிராம்
பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 350 கிராம்
உப்பு - 1 டீ ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - 10

செய்முறை

உளுந்தையும், அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்பு சிறிதளவு தண்ணீ­ர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அதில் உப்பு, தேங்காய் பால் சேர்க்கவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரைத்த உளுந்து, உப்பு, தேங்காய் பால் கலவையை ஊற்றவும்.

கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணீ­ர் ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.

அடிபிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிண்டி விடவும்.

சிறிது நேரம் கழித்து கெட்டியாகி உளுந்து வாசம் வீசும்.
இப்போது சர்க்கரையை சேர்த்து இறக்கவும்.

முந்திரிப் பருப்பை துறுவி இறக்கி வைத்த பாயசத்தில் சேர்க்கவும்.

குறிப்பு: பாயசம் கெட்டியாக இருப்பதை விரும்பாதவர்கள் நிறைய தண்­ணீர் சேர்த்துக்கொள்ளலாம். 

இனிப்பும் போதாது என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

திங்கள்கிழமை


Sonntag, 27. April 2014

மால்ட் புடிங்

தேவையான பொருட்கள்:
கலவை மா - 2 டேபிள் ஸ்பூன்
கெட்டியாகக் கரைத்த வெல்லம் அல்லது பனைவெல்லம் - 2 டீ ஸ்பூன்
நெய் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் வாழைப்பழம் - 1 அல்லது முட்டை 1
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை

அதிகம் பழுக்காத வாழைப்பழத்தை வட்ட வட்ட வில்லைகளாக நறுக்கவும்.

மாவைத் திட்டமாக நீர் சேர்த்துக் கெட்டியான கரைசலாக்கவும்.

ஒரு கப் தண்­ணீரைக் கொதிக்கவிடவும்.

அதில் வெல்லக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும்.

கொதிக்கும்போது அத்துடன் மா கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும்.

ஏலப்பொடி சேர்க்கவும்.

கெட்டியாகும்போது பாதி நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.

வெந்த பக்குவத்தில் மீதி நெய்யை விட்டுக் கிளறவும்.

இறக்கிய உடன் அகலமான தட்டில் கொட்டி அதன் மீது வாழைப்பழத் துண்டங்களை வைத்து உடனடியாக மூடி வைக்கவும்.

முட்டை சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் ஸ்லைஸ் செய்து அந்த வில்லைகளை வாழைப்பழத் துண்டங்களுக்குப் பதிலாக வைத்து அலங்கரிக்கலாம்.

அல்லது ஒரு வாழைப்பழத் துண்டம் மற்றும் ஒரு முட்டை ஸ்லைஸ் என்றும் அலங்கரிக்கலாம்.

ஆறிய பிறகு நல்ல மணத்துடன் சுவையான சத்துமிக்க இனிப்பு தயார்!

கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச் சத்து ஆகிய அனைத்தும் முறையே இருப்பதால் முழு உணவை உண்ட திருப்தி, உடனடி சக்தி!

Samstag, 26. April 2014

ரவா லட்டு

தேவையான பொருட்கள்
வெள்ளை ரவை - 1 கிலோ
சர்க்கரை - 1-1/2 கிலோ
ஏலக்காய் - 10 (பொடித்தது)
நெய் - 200 கிராம்
முந்திரி - 50 கிராம்

செய்முறை
உலர்ந்த வாணலியில் ரவையை வறுத்து பொடி செய்யவும்.

நன்றாக பொடி செய்த சர்க்கரை ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து இந்தக் கலவையில் சேர்க்கவும்.

நெய்யை உருகுமளவிற்கு இலேசாக சூடு செய்து அதனுடன் கலந்து நன்கு கலக்கவும்.

 இந்த மாவை சீரான அளவு உருண்டைகளாக உருட்டவும்.

 இந்த இனிப்பு வகையுடன் பால் சேர்க்கலாம். ஆனால் லட்டை சீக்கிரமாக பயன்படுத்திவிட வேண்டும்.

Freitag, 25. April 2014

ஜாங்கிரி

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - 250 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
எண்ணெய் - வறுப்பதற்கு
ஏலக்காய் - 4
கலர் - தேவைப்பட்டால்

செய்முறை 

 உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைக்கவும்

. சர்க்கரை சிரப் தயார் செய்து கலர் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

 மெல்லிய பிளாஸ்டிக்கவரில் இந்தமாவைஊற்றிகவரின் அடிப்பாகத்தில் நுனியில் சிறு துளை செய்யவும்.

வாணலியில் எண்ணெயை சூடு செய்து எண்ணெயில் முறுக்கு போல பிழிந்து முழுவதுமாக வேகும் வரை வறுக்கவும்.
எண்ணெயிலிருந்து எடுத்து 2 நிமிடத்திற்கு சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு

நல்ல முறையாக செய்வதற்கு உளுத்தம்பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக்கொள்ளவும். 

 மொறு மொறுவென்று வருவதற்கு அரிசி மா சேர்க்கவும்.

Donnerstag, 24. April 2014

மாம்பழப் பாயசம்

தேவையான பொருட்கள்:
இனிப்பான மாம்பழங்கள் - 4
சர்க்கரை - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:
 மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

 சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்­ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.

பாலில் கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.

 மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்.

Mittwoch, 23. April 2014

மாம்பழ பர்பி

தேவையான பொருட்கள்

மாம்பழச் சாறு - 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 1 கப்
ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை

 அடுப்பில்அடிக்கனமான பாத்திரத்தினை வைத்து அதில் நெய்விட்டு சூடாக்கவும்

சூடானதும் அதில் மாம்பழக் கூழைப் போட்டுக் கிளரவேண்டும்

 கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

மீதியுள்ள நெய்யை விட வேண்டும்.பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும்

.லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.

Dienstag, 22. April 2014

நூடுல்ஸ் மெது போண்டா



தேவையான பொருட்கள் 

வேகவைத்த நூடுல்ஸ்  - 1 பக்கற்
பொட்டுக்கடலை மா- 1 மேசைக்கரண்டி
இஞ்சிசிறிதளவு
பச்சை மிளகாய்- 4-6
கறிவேப்பிலை-தேவையானளவு
வெங்காயம்- 1
முட்டை கோவா-சிறிதளவு
கரட்-சிறிதளவு
 எண்ணெய்-தேவையானளவு
உப்பு-தேவையானளவு
கடலை மா-தேவையானளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டை கோவா கரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.

இதனுடன் கடலை மாவு, பொட்டுக் கடலை மா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.

வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள நூடுல்ஸை சிறு உருண்டைகளாக உருட்டி பொறித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான " நூடுல்ஸ் மெது போண்டா " ரெடி

Montag, 21. April 2014

ஓட்ஸ் ரவா இட்லி

தேவையான பொருட்கள்

தயிர் - அரை கப் 
ஓட்ஸ் - 1 கப் 
ரவை - அரை கப் 
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு - 1/4 தே.கரண்டி 
ப. மிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிதளவு 
இஞ்சி - சிறிய துண்டு 

செய்முறை


முதலில் ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 

ரவையை வெறும் கடாயில் போட்டு 4 நிமிடம் போட்டு வறுத்துக் கொள்ளவும். 

இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும். 

பெரிய பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், வறுத்த ரவை, தயிர், தாளித்த பொருட்கள், தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து இதனை 30 நிமிடம் ஊற வைக்கவும். 

பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். 

சுவையான சத்தான ஓட்ஸ் இட்லி ரெடி

திங்கள்கிழமை


Sonntag, 20. April 2014

உருளைக்கிழங்கு பொரியல்

உருளைக்கிழங்கு பொரியல்  செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Samstag, 19. April 2014

இட்லி மா


இட்லி மா புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

Freitag, 18. April 2014

காலிபிளவர், கீரை


காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.

Donnerstag, 17. April 2014

வாழைக்காய்


*வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.

Mittwoch, 16. April 2014

உருளைக்கிழங்கு ரோல்

தேவையான பொருட்கள்

கோதுமை  மா – 1 கப்
மெல்லிய ரவை – 1/2 கப்
எண்ணெய் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மசாலா செய்வதற்கு
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பொடியாக நறுக்கியவெங்காயம்– 3 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கியமல்லித்தழை  – 2 தேக்கரண்டி
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையானளவு

மைதா பசை செய்வதற்கு
தண்ணீர் – 2 பங்கு
மைதா – 3 பங்கு

செய்முறை 

 ஒரு பாத்திரத்தில் கோதுமை மா ரவை, 
எண்ணெய், உப்பு ஆகியவற்றை போட்டு 
கலந்து தேவையான அளவு தண்ணீர் 
சேர்த்து சப்பாத்தி மாபதத்திற்கு 
பிசைந்து கொண்டு ஈரத்துணி கொண்டு 
மூடி வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து 
தோலுரித்து நன்கு பிசைந்து இன்னொரு 
பாத்திரத்தில் பொட்டு வைக்கவும்.

அதன் பின்னர் இதனுடன் வெங்காயம், 
மல்லித்தழை, இஞ்சி,பச்சை மிளகாய் 
விழுது, மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், 
மிளகாய்த்தூள், கறிமசாலாதூள், 
சிறிது உப்பு ஆகியவற்றை போட்டு  
நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

இக்கலவையை எலுமிச்சை அளவு 
உருண்டைகளாக உருட்டிய பிறகு 
நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்.

பிசைந்த சப்பாத்தி மாவிலிருந்து சிறிய 
உருண்டைகள் செய்து சப்பாத்தி போல 
இடவும்.

தேய்த்த சப்பாத்தியின் ஒரு மூலையில் 
மசாலா உருட்டியதை வைத்துப் பாய் 
போல் சுருட்டவும்.

குழல் போல் சுருட்டியதும் ஓரங்களை 
உள்ளே மடித்து மைதா பசை கொண்டு 
ஒட்டவும். 

பிரிந்து வராமல் எல்லா பக்கங்களையும்
 சரியாக ஒட்டவும்.

இதே போல மா முழுவதையும் செய்து 
கொண்டு ஈரத்துணி கொண்டு மூடி 
வைக்கவும்.

ஒரு தடவைக்கு 4 அல்லது 5 சுருள்களை 
மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்
னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மூன்று அல்லது நான்கு துண்டுகளாக 
வெட்டி தக்காளி சாஸ் உடன் 
பரிமாறவும்.

Dienstag, 15. April 2014

இறால் பக்கோடா


தேவையான பொருட்கள்:

இறால் - 200 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
பயித்தம்மா - 50 கிராம்
பச்சை மிளகாய் - சிறிதளவு
பூண்டு - சிறிதளவு
சோம்பு தூள் - சிறிதளவு
கடலைமா - 100 கிராம்
பொரிக்கடலை - 50 கிராம்
அரிசிமா - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு


செய்முறை:

இறாலை சுத்தம் செய்து சிறு
துண்டுகளாக நறுக்க வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய்,
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை,
உப்பு, சோம்பு தூள், எல்லா
வற்றையும் இறாலில் ஒன்றாக
சேர்த்து கலக்க வேண்டும்.

அதனுடன் அரிசி மா, பயித்தம்மா 
 சிறிது சூடாக்கிய எண்ணெய்
சேர்த்து தண்ணீர் தெளித்து
உதிர்ந்து விடும் பக்குவத்தில்
பிசைய வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு
பக்கோடாவை பக்குவமாக
உதிர்த்து போட்டு பொன்னிறமாக
வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.

Montag, 14. April 2014

வேர்க்கடலை பகோடா


தேவையான பொருட்கள்

வறுக்காத கச்சான்(வேர்க்கடலை) -  2 கப்
கடலை மா – 1 1 / 4 கப்
அரிசி மா – 1 / 4  கப்
மிளகாய்தூள்  – 2 +1 /2  தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி  (அல்லது)
இஞ்சி பூண்டு விழுது  – 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய்  – தேவையானளவு
செய்முறை       

  ஒரு பாத்திரத்தில் வறுக்காத கச்சான்
(வேர்க்கடலை )கடலை மா அரிசி மா
மிளகாய்த்தூள் இஞ்சி  விழுது 
உள்ளி(பூண்டு)  விழுது,உப்பு  
ஆகியவற்றை போட்டு குழைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து அதில் எண்ணெய் ஊற்றி 
கொதிக்க விடவும்.

 எண்ணெய் கொதித்த  பின்னர் 
பாத்திரத்தில் குழைத்து வைத்துள்ள 
கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து 
 மீண்டும் குழைக்கவும்  

குழைத்த பின்னர் எண்ணெய்யில் 
போட்டு மிதமான தீயில் நன்றாக
வேகவிட்டு எடுக்கவும். 

அதன் பின்னர் அதனை எடுத்து 
ஒரு பாத்திரத்தில் போடவும்

  பின்னர் சுத்தமான சுவையான 
சத்தான கச்சான்(வேர்கடலை) பகோடா   
தயாராகிவிடும்.





திங்கள்கிழமை


Sonntag, 13. April 2014

சோள தோசை

தேவையான பொருட்கள் 

சோளம் - 2 கப் 
உளுந்து - அரை கப் 
வெந்தயம் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தில் சோளத்தை 
போட்டு கழுவி 5 மணித்தியாலம்  ஊற
வைக்கவும். 


 இன்னொரு பாத்திரத்தில் உளுந்தினை 
போட்டு  கழுவி ஊற வைக்கவும். 

அதன் பின்னர் மற்றைய பாத்திரத்தில் 
வெந்தயத்தை போட்டு ஊற வைக்கவும். 

பின்னர் கிரைண்டரில் உளுந்தையும்
வெந்தயத்தையும் சேர்த்து அரைக்கவும் 

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் 
போடவும் 

அதன் பின்னர் கிரைண்டரில்சோளத்தை 
போட்டு அரைக்கவும் 

அரைத்தவற்றை உளுந்து வெந்தயம் 
ஆகியவை அரைத்து போட்ட  பாத்திர
த்தில் போடவும் 

பின்னர் இரண்டு மாவையையும் 
ஒன்றாக கலக்கவும் 

கலந்த பின்னர் அதனுள்  உப்பு போட்டு
 5 மணி நேரம் புளிக்கவைக்கவும். 

பின்னர் தோசை கல்லை அடுப்பில் 
வைத்து மாவை தோசைகளாக ஊற்றி 
வெந்ததும் எடுக்கவும். 

•சத்தான, சுவையான சோள தோசை ரெடி.

Samstag, 12. April 2014

முட்டை பஜ்ஜி

தேவையான பொருட்கள்

அவித்து தோலுரித் முட்டை   -  2
கடலை மா  – 1 /4 கப்
அரிசி மா – 4  தேக்கரண்டி
கோதுமை மா  – 3  தேக்கரண்டி
அப்பச்சோடா   – ஒரு பின்ச்
மிளகாய்த்தூள்  – 1 /2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்   – 1 /4  தேக்கரண்டி
பெருஞ்சீரகம்  – 1 /4  தேக்கரண்டி
உப்பு  – 1 /4  தேக்கரண்டி
எண்ணெய்  – தேவையானளவு


செய்முறை   
ஒரு தட்டில் அவித்து தோலுரித் 
முட்டையை விருப்பமான வடிவில் 
வெட்டி வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் கடலைமா 
அரிசிமா கோதுமைமா  அப்பச்
சோடா மிளகாய்த்தூள் உப்பு 
பெருங்காயத்தூள் பெருஞ்சீரகம்
சிறிது தண்ணீர் ஆகியவற்றை 
போட்டு பஜ்ஜி மா பதத்தில் 
கரைத்துக் கொள்ளவும்.

வெட்டி வைத்திருக்கும் முட்டை
 துண்டுகளை, பஜ்ஜி மாவில் 
தோய்த்து , சூடான எண்ணெயில் 
பொரித்தெடுக்கவும்.

Freitag, 11. April 2014

இறால் உப்புமா

தேவையான பொருட்கள்:

ரவை - 250 கிராம்
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைகரண்டி
கரட் - 1
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு – தேவையானளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய்- 6 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி


செய்முறை:

இறாலை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். 

பின்பு கழுவி மஞ்சள்தூள் போட்டு சுருட்ட வேண்டும். 

ரவையை கருகாமல் வறுத்து ஆறவைக்க வேண்டும். 

சட்டியை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தையும் கரட்டையும் வட்டவடிவமாக அரிந்து அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின்பு தக்காளி, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 

பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். 

வெந்தததும் இறாலை சேர்த்து இலேசான சூட்டில் ஐந்து நிமிடம் விட வேண்டும்.

ஒரு கப் ரவைக்கு ஒன்றரை பங்கு வீதம் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் ரவையைக் கொட்டி தீயைக் குறைத்து நெய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

Donnerstag, 10. April 2014

மிக்சர்

தேவையான பொருட்கள்

கடலை மா – 4  கப்
மிளகாய்த்தூள் – 7  தேக்கரண்டி
பூண்டு நசுக்கியது – 5  – 7
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கருவேப்பிலை – சிறிது
வேர்க்கடலை – 1 /2 கப்
அவல் – 1 /4 – 1 /2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

பூந்தி தயாரிக்கும் முறை

கடலை மா(2 கப்), மிளகாய்த்தூள்(2 தேக்கரண்டி), உப்பு, 1 – 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். 

மா பதம் சிறிது தண்ணியாக இருக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். 

எண்ணெய் சூடானதும் பூந்தி  தேய்க்கும் கரண்டியில் மேலே ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மற்றொரு கரண்டியால் அல்லது கையால் நன்கு தேய்த்து விடவும்.

மொறு மொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

ஓமப்பொடி தயாரிக்கும் முறை

மீதி இருக்கும் கடலை மா, மிளகாய்த்தூள்(5 தேக்கரண்டி), உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்(முறுக்கு மாவைப் போல).

கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டு பிழிந்து விடவும். பாத்திரம் முழுவதும் நிரப்பி விட வேண்டாம்.

எண்ணெயில் சிறு சிறு குமிழ்கள் வருவதைப் பார்க்கலாம். குமிழ்கள் வருவது நின்றவுடன் உடனடியாக ஓமப்பொடியை எடுத்து விடவும்.

அவல் பொரிக்கும் முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும். 

பொரிக்கும் கரண்டியின் மேலே அவலை வைத்து எண்ணெயில் பொரிக்கவும். 

அவல் கரண்டியின் மேலேயே இருக்க வேண்டும். கடாயின் உள்ளே போகக் கூடாது.

வறுக்க வேண்டியவை

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து வேர்க்கடலை கறுப்பாகும் வறுத்து எடுத்து வைக்கவும்.

இறுதியாக பொரித்து வைத்துள்ள பூந்தி, ஓமப்பொடி, அவல் மற்றும் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை, சிறிது உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் மொறு மொறுப்பான , காரசாரமான மிக்சர் ரெடி.

Mittwoch, 9. April 2014

ரிப்பன் பகோடா

தேவையான பொருள்கள்

கடலை மா- 3 கப்
அரிசி மா - 1 கப்
மிளகாய் தூள் - தேவையானளவு
உப்பு - தேவைக்கேற்ப
சோடா மா - சிட்டிகை அளவு
எணணெய் பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய்
ரிப்பன் அச்சு

செய்முறை

 கடலைமா அரிசி மா உப்பு, மிளகாய்த்தூள்,
 சோடாமா ஆகியவற்றை ஒன்றாக கலந்து
சலித்து வைத்துக்கொள்ளவும்.

தேவையான அளவு சூடானநீர் ஊற்றி முறுக்கு
மாபதத்திற்கு பிசையவும்.

அதனுடன் சூடான  எண்ணெய் விட்டு மேலும்
இலகுவாக பிசையவும்.

(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு
இலகுவாக இருக்க வேண்டும் அதேசமயம்
 பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
எண்ணெய் விட்டு சூடாக்கவும்

அதன் பின்னர்  குழைத்து  வைத்திருக்கும்
மாமை ரிப்பன் அச்சில் இடவும்

 பின்னர் ஒரு தட்டில்அச்சில் உள்ள மாமை
 பிழிந்து ஓரளவு நீளத்தில் குறுக்காக
வெட்டவும்

அதன் பின்னர் எண்ணெய் சூடானதும்
 வெட்டிய துண்டுகளை  சூடான எண்ணெய்
யில் போட்டு  பொரிய விடவும்.

பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து
இன்னொருபாத்திரத்தில் போடவும்.

போட்டவற்றை ஆறவிடவும்

இப்போது சுத்தமான சுவையான சத்தான
ரிப்பன் பக்கோடா தயாராகிவிடும்

Dienstag, 8. April 2014

கேள்வரகு – ராகி களி

தேவையானப் பொருட்கள் 

தண்ணீர்  - 4 டம்ளர் (225மி.லீ அளவு)
கேள்வரகு (ராகி மா) -2 டம்ளர் (225மி.லீ அளவு ). 

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து 
அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு 
கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்தவுடன் 
கேள்வரகு மாவை கொஞ்சம் 
கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் 
போட்டுக் கொண்டே கிளறவும்.

கட்டி கட்டாமல் கிளறுதல் 
முக்கியம்.(ரவா கிண்டுதல் 
போல.) பின்னர் மிதமான 
தீயில் வைத்து வேக விடவும்.

மா அடியில் ஒட்டாது கிளறிக்
கொண்டே இருக்கவும்.

மா கட்டி கட்டியிருந்தால் 
உடைத்துவிட்டு கிளறவும்.

மா கலவை இறுகி களி போல 
வந்ததும் இறக்கி
பரிமாறலாம்.

களி சூடாக உண்டால் ருசி அதிகம்.

சாப்பிடும் முறை: 

களியை சிறு உருண்டையாக
தொட்டுக் கொள்ள இருப்பதை தொட்டு
அப்படியே விழுங்க வேண்டும்

மென்று சாப்பிட்டால் ருசி இருக்காது.
களியில் ஒட்டியிருக்கும் காய் / கறியை
வாயில் தனியே பிரித்து மென்று சாப்பிடுதல்
தனி சாமர்த்தியம்.

ஆறிய களியில் தயிர் ஊற்றி சாப்பிட்டால்
நன்றாக இருக்கும்.

சிறு உருண்டையாக பியத்து போட்டு தயிர்
ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு
கூழ் போல பிசைந்து சாப்பிடுங்கள்.

பாத்திரத்தில ஒட்டியகளியுடன் தண்ணீர் 
ஊற்றி வைங்க காலைல தயிர் ஊற்றி கூழ் 
செயது சின்ன வெங்காயம் கடிச்சு குடிச்சு 
பாருங்க.அதன் ருசியே தனி. 

தொட்டுக் கொள்ள :
 கீரை கடைசல் , பாசி பயிறு கடைசல் , 
கோழி / ஆட்டுக் கறி / மீன் குழம்பு என 
எல்லாமே – எதுவுமே களிக்கு நல்ல 
கூட்டணிதான்.

 குறிப்பு : 

1.) பாத்திரம் – குண்டா(வாய் சிறிதான 
பாத்திரம்) வகையாக இருந்தால் 
கிளறுதல் எளிது

 2.) களி கிண்ட தட்டையான நீளமான 
மர கரண்டி கடையில் கிடைக்கும் 
இல்லாவிட்டால் தோசை திருப்பியை 
உபயோகிக்கலாம். 

 3.) கேள்வரகு – ராகிக்கு பதில் கம்பு / 
சோள / கோதுமை மா சேர்த்தும் 
களி கிண்டலாம். 

4) மா கட்டி கட்டாமல் கிளற 
தெரியாதென்றால் , மா போட்டு 
கிளறும் முன் கொஞ்சம் பழைய 
சாதம் அல்லது சம்பா ரவையை
 சேர்த்துக் கொள்ளலாம் 

கட்டி கட்டாமல் கிளற இது உதவும்.(மாவு அளவை ஏற்றாட்போல் குறைத்துக் கொள்ளவும்.) 6.) சர்க்கரை உள்ளவர்க

Montag, 7. April 2014

திங்கள்கிழமை