கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 31. März 2014

திங்கள்கிழமை


Montag, 24. März 2014

திங்கள்கிழமை


Montag, 17. März 2014

திங்கள்கிழமை


Montag, 10. März 2014

திங்கள்கிழமை


Freitag, 7. März 2014

ரிப்பன் பக்கோடா

தேவையான பொருட்கள்


அரிசி மா– 1  கப்
கடலை மா– 1 /4 கப்
வெண்ணெய் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 -2  தேக்கரண்டி
எள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை

ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தில்
 பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெ
ய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.

அரிசி மா, கடலை மா, பெருங்காயத்தூள்,
மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும்
ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இதனுடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து
கொள்ளவும்.

இதனுடன் எள்மற்றும் தண்ணீர் சேர்த்து
மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.


முறுக்கு அச்சில் உள்ள ரிப்பன் பக்கோடா
அச்சைப் பயன்படுத்தி எண்ணெயில் பாத்திரம்
பிடிக்கும் அளவுக்கு பிழிந்து விடவும்.

பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

சூடு ஆரிய பின்பு கற்றுப் புகாத டப்பாவில்
போட்டு வைக்கவும்.


குறிப்பு

நிறைய பக்கோடா செய்ய விரும்புபவர்கள், 
முதலில் மா ,தூள் மட்டும் கலந்து வைத்துக் 
கொள்ளவும். 

பொரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 
தண்ணீர் சேர்த்து பிசைந்தால் போதுமானது.

பொரிப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே 
மாவை பிசைந்து வைத்தால் பக்கோடாவின் நிறம் 
மாறுவதுடன், அதன் மொறு மொறுப்பும் குறைந்து 
விடும்.

Donnerstag, 6. März 2014

இட்லி


தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு 1 கப்
புளித்த தயிர் 1 கப்
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 
 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் சிறிதளவு
நெய் 2 
தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு - தேவையானளவு


செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக 
6 மணி நேரம் ஊற வைக்கவும்.

அவற்றை; களைந்து சுத்தப்படுத்தி 

வடித்தெடுத்து, தண்ணீர் விடாமல் க
ரகரப்பாக அரைக்கவும், 

அரைக்கும் போது உப்பு, பெருங்காய
த்தூள் கலக்கவும்.

அரைத்தெடுத்த மாக்கலவையை 7-8 
மணி நேரம் புளித்துப்போக (தோசை
க்கு வைப்பதுபோல் பொங்க)
 வைக்கவும்.

பொங்கிய மாக்கலவையுள் மிளகு 

தூள், சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை 
ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.

மாக் கலவை தோசைக்கலவை போல் 

இளகியதாக இராது கொஞ்சம் 
இறுக்கமாக இருத்தல் வேண்டும். 

அதன்பின்எண்ணெய் தடவிய இட்லித் 
தட்டில் உள்ள குண்டுகளில் பாதி 
 அளவுக்கு மாவை ஊற்றி மூடி 
ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை 
அவிய விடவும். 

இட்லி அவிந்ததும் இட்லித் தட்டை

 வெளியே எடுத்து அதன் மேல் கொஞ்ச 
ண்ணீர் தெளித்தபின் இட்லியை 
ஒவ்வொன்றாக எடுக்கவும்.

இப்போது இட்லி ரெடி.

இட்லியை சம்பலில் தொட்டும்

 சாப்பிடலாம்

சாம்பார், பருப்புக்கறியுடன் சேர்த்தும் 
சாப்பிடலாம்.

Mittwoch, 5. März 2014

மீன்


தேவையான பொருட்கள் 

மீன் துண்டுகள்-2 

அரைக்க

 வரமிளகாய்-4 
 சோம்பு-2 தேக்கரண்டி
 பொடியாக நறுக்கிய இஞ்சி -1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு -1தேக்கரண்டி
 பொடியாக நறுக்கிய வெங்காயம் -2தேக்கரண்டி
துருவிய தேங்காய்-2தேக்கரண்டி 



 செய்முறை

 மீன் துண்டுகளை முழுதாக 
வேக வைத்து எடுத்துக் 
கொள்ளவும்

 ஒரு நான் ஸ்டிக் பேனில் சிறிதளவு 
எண்ணெய் ஊற்றி  மீன் துண்டுகளை
பொட்டு பொரிக்கவும்

பாதி  அவிந்தவுடன் அரைத்து வைத்த 
மசாலாவைப் அதனுடன் போடவும். 
தண்ணீர் சேர்க்க வேண்டாம். அதன் 
பின்னர் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். 
 நன்றாக பொரிந்தவுடன் இறக்கவும். 

Dienstag, 4. März 2014

வாழைக்காய், வறுவல்


: தேவையான பொருட்கள் 

 வாழைக்காய்-2 

அரைக்க

 வரமிளகாய்-4 
 சோம்பு-2 தேக்கரண்டி
 பொடியாக நறுக்கிய இஞ்சி -1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு -1தேக்கரண்டி
 பொடியாக நறுக்கிய வெங்காயம் -2தேக்கரண்டி
துருவிய தேங்காய்-2தேக்கரண்டி 



 செய்முறை

 வாழைக்காயைமுழுதாக வேக வைத்து 
எடுத்துக் கொள்ளவும்)

 ஒரு நான் ஸ்டிக் பேனில் சிறிதளவு 
எண்ணெய் ஊற்றி வாழைக்காயைத் 
தோல் உரித்து, வட்டமாக வெட்டி 
பொரிக்கவும்

 பாதி  அவிந்தவுடன் அரைத்து வைத்த 
மசாலாவைப் அதனுடன் போடவும். 
தண்ணீர் சேர்க்க வேண்டாம். அதன் 
பின்னர் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். 
 நன்றாக பொரிந்தவுடன் இறக்கவும். 

செவ்வாய்க்கிழமை


Montag, 3. März 2014

மிளகு இடியப்பம்

இதில் மிளகு தூள் சேர்ப்பதால் சளி 
பிரச்சனை மற்றும் தொண்டை 
பிரச்சனைகளுக்கு இதமாக இருக்கும்

தேவையான பொருள்கள்: 

இடியப்ப மா -  2 சுண்டு
மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - சிறிதளவு 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு 
தண்ணீர் - தேவையானளவு 
கொத்தமல்லி இலை - சிறிதளவு 

செய்முறை: 

கொத்தமல்லிஇலையை பொடியாக 
நறுக்கிக்கொள்ளவும். 

1 கப் தண்ணீரை நன்றாக 
கொதிக்க வைக்கவும். 

இடியப்ப மாவில் சிறிதளவு 
உப்பு போட்டு அதில் கொதிக்க
வைத்த தண்ணீரை ஊற்றி 
இடியப்ப மா பதத்திற்கு 
பிசையவும். 

இடியப்பம் குழலில் மாவை 
போட்டு இடியப்ப தட்டில் 
பிழியவும். 

பிழிந்த இடியப்பத்தை ஆவியில் 
வேக வைத்து எடுத்து ஆறவிடவும். 

ஆறியபின் அதில் அரை மேசைக்கரண்டி
எண்ணெய் ஊற்றி பிசைந்து வைக்கவும். 

அப்போது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் 
உதிரியாக இருக்கும். 

தாட்சியை அடுப்பில் வைத்து அரை 
மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி 
அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் 
கறிவேப்பிலை தாளித்து அதனுடன் 
மிளகு தூள் சேர்த்து அடுப்பை 
அணைக்கவும். 

தாளித்த கலவையில் இடியப்பத்தை 
போட்டு லேசாக கிளறவும். 

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி 
இலையை தூவி பரிமாறவும். 

சுவையான மிளகு இடியப்பம் ரெடி. 

.

திங்கள்கிழமை


Sonntag, 2. März 2014

முட்டைகோஸ்(கோவா), பொரியல்

தேவையானவை : 

முட்டைகோஸ்(கோவா),  - 1/2 கிலோ
வெங்காயம் - பெரியது 1 / சிறியது 5,6
செத்தல் மிளகாய்  - 5,6
எண்ணெய் - 3  தேக்கரண்டி
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையானளவு
தேங்காய் துருவல் - கொஞ்சம்

செய்முறை : 

முட்டைகோஸை(கோவாவை)
பொடியாக நறுக்கி/சீவிக்
கொள்ளவும்.

பின் நறுக்கிய முட்டைகோஸை
(கோவாவை), பாத்திரத்தில் போட்டு
தண்ணீரில் கழுவியபின் தண்ணீரை
வடித்துவிடவும்.

பின் அடுப்பில் அந்தப் பாத்திரத்தை மூடி
வைத்துமுட்டைகோஸை(கோவாவை)
வேகவைக்க வேண்டும்.

அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்துக்
கொள்ளவும்.

 தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

முட்டைகோஸில்(கோவில்) ஒட்டி
யிருக்கும் தண்ணீரே போதும்.
அவ்வப்போது கிளறி விட்டுக்
கொள்ளவும்.

முட்டைகோஸ்(கோவா), வேகும்
நேரத்தில் வெங்காயத்தை நறுக்கிக்
கொள்ளவும்.

பின் வாணலியில் எண்ணெய் விட்டு
கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம்,
செத்தல் மிளகாய் ஆகியவற்றை
போட்டுத் தாளிக்கவும்.

முட்டைகோஸ்(கோவா), வெந்தவுடன்
தாளித்த கலவை உப்பும், தேங்காய்
துருவல் ஆகியவற்றை போட்டு
நன்றாகக் கிளறவேண்டும்.

சிறிது நேரம் மூடி வைத்து பின்
பரிமாறினால் சுவையாக இருக்கும்.

குறிப்பு : 

காரப்பிரியர்கள் கொஞ்சம் மிளகாய்ப்
பொடியையும் உப்புடன் சேர்த்துச்
சமைக்கலாம்.

Samstag, 1. März 2014

முளைக்கீரை

முளைக்கீரையை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்துக்கொண்டால் ருசியாக இருக்கும். 8