கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 22. Juni 2011

துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன்


துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

மட்டின்,கோழி குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால்


மட்டின்,கோழி குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் 
மட்டின்,கோழி குழம்பில் வேக வைத்த 
உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி 
போட்டு குழம்பை கொதிக்க விட்டு 
எடுத்தால் குழம்பில் உப்பு குறைந்துவிடும் 

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 21. Juni 2011

வறுத்த கோதுமைமா (மைதாமா)இடியப்பம்



கோதுமைமா (மைதாமா)இடியப்பம் 
 இலகுவில் சமிபாடடையும் ஒரு 
உணவுப் பொருள் ஆகும் .இதிலுள்ள 
 கோதுமைமாவில் காபோவைதரேட் 
சத்து உள்ளது ,உப்பில் புளோரைட் 
சத்து உள்ளது ஆகவே தான் இவை 
இரண்டையும் சேர்த்து செய்யப்படும் 
 கோதுமைமா இடியப்பத்தில் 
புளோரைட்டு, காபோவைத ரேட்டு 
ஆகிய இரண்டு சத்துக்களும் காணப்படு
கின்றன.அத்துடன் இந்த கோதுமை  
மா இடியப்பம் சுத்தமானதும் சுவை
யானதும், மென்மையானதும்  இலகு
வில் சமிபாடடையக்கூடியதும் ஆகும். 

தேவையானபொருட்கள் 
கோதுமைமா(மைதாமா) - 500 கிராம் 
உப்பு - தேவையானளவு 
நன்றாக கொதித்த நீர் - தேவையானளவு 

 செய்முறை 
 (1)இலங்கை கோதுமைமாவை (மைதாமா) 
 நன்றாக (ஓரளவு பிரவுன் நிறமாக) 
 வறுக்கவும்

 (2)வறுத்தமாவை மூன்று தடவைகள் 
 அரிக்கவும் (சலிக்கவும்). 

 (3)அரித்த(சலித்த)மாவை ஒரு பாத்திரத்தில் 
போடவும் .

 (4)பாத்திரத்தில் போட்டு வைத்துள்ள மாவில்
 தேவையானளவு உப்பு போடவும். 

(5)அதன் பின்பு நன்றாக கொதித்த நீர் விட்டு 
 மர அகப்பையால் (மரக்கரண்டியால் ) 
 நன்றாக குழைக்கவும். 

(6)நன்றாக குழைத்தபின்பு குழைத்த மா 
 எல்லாவற்றையும் ஒன்றாக்கி(பந்துபோல) 
 சேர்க்கவும். 


 (7)ஒன்றாக சேர்த்த மாவிலிருந்து சிறிதளவு 
 எடுத்து இடியப்ப உரலில்(இடியப்ப அச்சுடன்
 (சிறிய துளைகள் அதிகமுடைய))போடவும். 

 (8)இடியப்ப உரலில் போட்ட மாவை இடியப்ப 
 தட்டில் வட்டமாக பிழியவும். 

 (9)இப்படியே ஓரளவு தேவையான இடியப்ப
ங்களை இடியப்ப தட்டில் பிழிந்து அவற்றை 
ஒரு பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்



. (10) பின்பு இடியப்பங்கள் அவிக்கும் 
  பாத்திரத்தின் (ஸ்டீமர்) கீழ்ப்பகுதியினுள் 
தேவையானளவு தண்ணீரை விட்ட பின்பு 
அதன் மேல் மேற் பாத்திரத்தை வைத்து 
அதன் பின்பு மேற் பாத்திரத்தை அதற்கு 
அளவான மூடியால் நன்றாக மூடி அடுப்பில் 
வைத்து இப்பாத்திரத்தில் உள்ள தண்ணீரை 
ஆவி வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும்.

 (11)பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்றாக
 கொதித்து ஆவி வந்து மேல் உள்ள பாத்திரம்
 நன்றாக சூடாகிய பின்பு மேல் உள்ள 
பாத்திரத்தில் இடியப்ப தட்டில் பிழிந்து 
வைத்திருக்கும் இடியப்பங்களை அவற்றுக்
குரிய தட்டுக்கள் உடன் சரியான முறையில் 
அடுக்கவும்

. (12)எல்லா இடியப்ப தட்டுகளையும் சரியான 
முறையில் அடுக்கிய பின்பு இடியப்பம் அவிக்கும் 
பாத்திரத்தின் (ஸ்டீமர்)மேற்பகுதியை மூடி 
இடியப்பங்களை ஆவியில் அவிக்கவும்.

 (13)இடியப்பங்கள் ஆவியில் தேவையானளவு 
அவிந்த பின்பு மேல் ஸ்டீமரின் மேற்பகுதியை 
திறந்து இடியப்ப தட்டுகளை எடுத்து ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும். (14)அதன் பின்பு 
இன்னொரு பாத்திரத்தில் இடியப்ப தட்டில் 
உள்ள அவிந்த இடியப்பங்களை எடுத்து 
 அடுக்கி வைக்கவும். 

 (15)இப்போது சுவையானதும் சுத்தமானதும் 
 மென்மையானதுமான வறுத்த கோதுமைமா 
 (மைதாமா)இடியப்பம் தயாராகிவிட்டது.

 (16)ஒரு தட்டில் தேவையான வறுத்த 
கோதுமை மா(மைதா மா) இடியப்பத்தினை 
வைத்து அதனுடன் ஏதாவது கறி,சொதி 
சம்பல் இவற்றில் ஒன்றையோ அல்லது 
எல்லா வற்றையும் வைத்து பரிமாறவும். 



 கவனிக்க வேண்டிய விசயங்கள் 
 (1) எல்லோரும் (சர்க்கரை நோயுள்ளவர்கள் 
 வைத்தியரின் ஆலோசனையுடன்) 
 உண்ணக்கூடிய உணவு, 

 (2) (a)வறுத்து 3 தரம் அரித்த(சலித்த) இலங்கை 
கோதுமைமா (மைதாமா ),

 (b)நன்றாக கொதித்த நீர் 

 (3)இலங்கை கோதுமைமா(மைதாமா) மாவை 
முதலிலே வறுத்து அரித்து, ஆறவைத்து 
காற்று,பூச்சி,புழு போகாதவாறு மூடியுள்ள 
ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து 
 இடியப்பம் தேவையான நேரத்தில் 
 செய்யலாம்.

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி


கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி
போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக்
பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல்
எளிதாக கிளறலாம்.


பார்ச்மென்ட் ஜசிங்


தேவையான பொருட்கள் 


ஜெலட்டீன் -1 தேக்கரண்டி 
தண்ணீர் -6 தேக்கரண்டி 
ஜசிங் சீனி(சக்கரை)-200 கிராம்
ஜசிங் நிறங்கள் -விரும்பியது 

செய்முறை 

(1)
ஓருகனமான பாத்திரத்தில் தண்ணீர்,
ஜெலட்டீன் ஆகியவற்றை கலந்து 
அரைமணித்தியாலம் ஊறவைக்கவும்.

(2)
அதன் பின்பு ஊறவைத்தவற்றை
அடுப்பில் வைத்து மூன்று 
நிமிடங்கள் சூடு படுத்தினால் 
பசை(பேஸ்ட்) போல உருண்டு 
திரண்டு வரும் பின்பு அதனை 
அடுப்பில் இருந்து இறக்கவும் .

(3)
பின்பு இறக்கிய பாத்திரத்தில் 
உள்ள பசையின்(பேஸ்ட்)அளவுக்கு
தேவையான அளவில் ஜசிங்சீனி 
(சக்கரை) கலந்து பூரிமா அல்லது
இடியப்ப மா பதத்தில் குழைக்கவும்.

(4)
அதன் பின்பு மாவை ஓரு பலகையில்
வைத்து கட்டையால் தேய்த்துக்
கொள்ளவும் .

(5)
அதன் பின்பு அதில் பூ,பழங்கள் போன்ற
வடிவங்களை செய்து ஓருமணித்தியாலம்
அதனை காய விடவும் .

முறுக்கு


முறுக்கு மா கெட்டியாகி பிழிய வராமல் அடம்பிடித்தால் 
அந்த மாவுடன் சிறிதளவு தேங்காய்ப்பாலை சேர்த்து பிசைந்து முறுக்கை பிழிந்தால் வித்தியாசமான சுவையுடன் இலகுவாகவும் பிழியலாம் 

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 4. Juni 2011

தேங்காய்த் துருவல்


தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.


சக்கரைப் பொங்கல்

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.



சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 2. Juni 2011

சப்பாத்தி

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.


வெங்காய பக்கோடா

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.


கரகரப்பான இன்ஸ்டன்ட் சீடை

செய்வதற்கு இலகுவானதும், சுவையானதும், 
மினரல் கார்போவைதரேட் பொஸ்பரஸ் 
பொட்டாசியம் கல்சியம் கொழுப்பு ஆகிய 
சத்துகள் நிறைந்ததுமான ஓர் சிற்றுண்டியே 
கரகரப்பான இன்ஸ்டன்ட் சீடையாகும் இதனை 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி 
உண்பார்கள் 

தேவையானபொருட்கள் 
அரிசி மா - 200 கிராம்
வறுத்த மைதாமா(கோதுமைமா) - 50 கிராம்
நறுக்கியபச்சைமிளகாய் - 5
பெருங்காயம் - சிறிதளவு
சமையல் சோடா - சிறிதளவு
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் -தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை

1.ஒரு பாத்திரத்தில் அரிசிமா, வறுத்த 
மைதாமா 
   (கோதுமைமா)நறுக்கிய பச்சைமிளகாய் பெருங்காயம், 
   சமையல்சோடா பொட்டுக்கடலை உப்பு தண்ணீர் 
  ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.

2.பிசைந்தவற்றை சீடைகளாக உருட்டி ஒரு 
  பாத்திரத்தில் வைக்கவும். 

3.அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
  (வாணலியை)வைத்து அதை சூடாக்கவும்.

4.அது சூடானதும் அதில் எண்ணெயை 
   ஊற்றி கொதிக்கவிடவும். 

5.எண்ணெய் கொதித்ததும் அதில் உருட்டிய 
சீடைகளை போட்டு பொரிக்கவும்.

6.சீடைகள் பொரிந்ததும் சுத்தமான சுவையான 
   கரகரப்பான இன்ஸ்டன்ட் சீடை  தயாராகிவிடும். 

7.அதை ஒரு தட்டில் போட்டு பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
பிசைந்தவற்றை சீடைகளாக உருட்டி ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும், எண்ணெய் 
கொதித்ததும் அதில் உருட்டிய சீடைகளை 
போட்டு கரகரப்பாக பொரிக்கவும்.

எச்சரிக்கை- 
இருதய நோயாளர், சர்க்கரை நோயாளர் 
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

பாயாசம்

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

இறால் 65


தேவையான பொருட்கள் 
பெரிய இறால் – 20
பொடியாக வெட்டிய இஞ்சி – 1 துண்டு 
பொடியாக வெட்டிய உள்ளி (பூண்டு) – 5 பல்
பொடியாக வெட்டிய பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கான் பிளவர் – 3 தேக்கரண்டி
மைதாமா  – 3 தேக்கரண்டி
அஜினோமோட்டோ – கால்தேக்கரண்டி
ஆரஞ்சு சிவப்பு கலர் – 1 துளி
பொடியாக வெட்டியவெங்காயத்தாள் – 3தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
முதலில் இறால் சுத்தம் செய்து
கழுவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பிறகு கிரைண்டரில் அல்லது
மிக்சியில் பொடியாக வெட்டிய இஞ்சி
பொடியாக வெட்டிய உள்ளி (பூண்டு)
பொடியாக வெட்டிய பச்சை மிளகாய்
பொடியாக வெட்டியவெங்காயத்தாள்
ஆகியவற்றை போட்டு பசை போல
அரைக்கவும்

அரைத்த பின்னர் ஒரு பாத்திரத்தில்
கான் பிளவர்,மைதாமா,மிளகாய் தூள்
அஜினோமோட்டோ,ஆரஞ்சு சிவப்பு கலர்
உப்பு,பசை போல அரைத்தவை ஆகிய
யாவற்றையும் கலந்து   பஜ்ஜிமாவு
பதத்தில் கரைத்து வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில்
சுத்தமாக்கிகழுவிய இறால் உப்பு
ஓரளவு தண்ணீர் ஆகியவற்றை
போட்டு அடுப்பில் வைத்து  அரைப்
பதத்தில் வேகவிட்டவும்.

இறால் அரைப்பதத்தில் வேந்ததும்
அடுப்பில் இருந்து பாத்திரத்தை
இறக்கி வைக்கவும்.

அதன் பின்னர் இறாலில் உள்ள தண்ணீரை
வடித்து விடவும் .

வடித்த பின்னர் ஒவ்வொரு இறாலாக எடுத்து
கரைத்து வைத்துள்ள மாவில் நன்றாக
பிரட்டவும்.

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து
சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

 எண்ணெய் சூடானதும் அதில் மாவில் பிரட்டி
வைத்துள்ள இறாலை போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.

பொன்னிறமாக பொறித்த இறாலை எண்ணெய்
வடிய விட்டு எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான
இறால் 65  சிப்ஸ் தயாராகிவிடும்

தயாரான பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு
இறால் 65 வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
இறால் அலர்ஜி உடையவர்கள் 
வைத்தியரின் ஆலோசனைப்படி  
உண்ணவும் 

கோவா(கபேச்) (முட்டைக்கோஸ்)பொரியல்



கோவாவில் (கபேச்சில்)காபோவைதரேற்றுசத்து 
சீனிச்சத்து நார்சத்து புரதச்சத்து உயிர்சத்து B6 C
நீர்சத்து கொழுப்புச்சத்து இரும்புசத்து சோடியம்
ஆகியசத்துக்கள் காணப்படுகின்றன இப்படிப்பட்ட 
கோவாவுடன் (கபேச்சுடன்)சுவையுட்டிகளான 
வெங்காயம் உள்ளி(பூண்டு ) கீறிய பச்சைமிளகாய் 
மிளகாய்த்தூள் போன்ற பல பொருட்கள் சேர்த்து 
செய்யப்பட்டது கோவா(கபேச்) பொரியல் ஆகும் 
இப் கோவா(கபேச்) பொரியல் சுத்தமானது 
சுவையானது சத்தானது ஆகும் 

தேவையான  பொருட்கள் 
கோவா(கபேச்) -500கிராம்
வெங்காயம் -3
உள்ளி -அரைப்பாதி
கீறிய பச்சைமிளகாய் -3
மிளகாய்த்தூள் -தேவையானளவு
கடுகு - சிறிதளவு 
பெருஞ்சீரகம் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
கருவப்பிள்ளை - சிறிதளவு


செய்முறை
1 .அடுப்பில்வாணலியினை வைத்துசூடாக்கவும்.

2 .சூடாக்கிய பின்னர் அதில் சிறிதளவு
எண்ணையை விட்டு சூடாக்கவும்.

3 .சூடாக்கிய பின்னர் அதில் கடுகை
போட்டு வெடிக்கவிடவும் .

4 .கடுகு வெடித்த பின்னர் நறுக்கிய
    வெங்காயம்பெருஞ்சீரகம்(சோம்பு)
    பூண்டு)கீறிய பச்சைமிளகாய்
   கருவப்பிள்ளை ஆகியன போட்டு
   பொன் நிறமாக தாளிக்கவும்.

5.தாளித்த பின்னர் அவற்றை ஒரு
   பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

6.அதன் பின்னர் கோவாவை(கபேச்)
   ஓரளவு மெல்லிய நீளத்துண்டுகளாக
    வெட்டவும்

7 .வெட்டிய பின்னர் அதனை ஒரு
   பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .

8 .அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
    (வாணலியை)வைத்து சூடாக்கிய
   பின்னர் அதில் எண்ணையை விட்டு
   சூடாக்கவும்.

9 .சூடாக்கிய பின்னர் அதில் வெட்டிய
   கோவா(கபேச்) போட்டு கிளறி
    விடவும்.

10 .மூடிய சிறிது நேரத்தின் பின்னர்
      திரும்பவும் கிளறி விடவும்

11.அதன் பின்னர் இவற்றுடன் உப்பு,
   மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து
   5 நிமிடங்கள் கிளறி விடவும்

12.கிளறிய பின்னர் இவற்றுடன் தாளித்தவற்றை
    சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம்
   வைக்கவும்.

13 .அதன் பின்னர் மறுபடியும் கிளறி 
      விடவும்


14. அதன் பின்னர் மறுபடியும் கிளறி 
      அடுப்பில் இருந்து இறக்கி 

       வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

15 .போட்ட பின்னர் சுத்தமான சுவையான 
      சத்தான கோவா(கபேச்) பொரியல்
      தயாராகிவிடும்

குறிப்பு 

1 .அடிக்கடி கிளறவும்.
2.மிளகாய்த்தூளின் பச்சைவாடை
   போகும் வரை மூடவும் 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 1. Juni 2011

கிறீம் சீஸ் ஜசிங்

தேவையான பொருட்கள்

சீனி(சக்கரை) -2 கப்
எசன்ஸ்( விரும்பியது)-1 தேக்கரண்டி

செய்முறை 

(1)
ஒரு பாத்திரத்தில் கெட்டியானதயிருடன் 
சீனி(சக்கரை) சேர்த்துநுரைக்க அடிக்கவும்.

(2)
நுரைக்க அடித்த பின்னர் 
அதனுடன்எசன்ஸ்சேர்க்கவும்.

(3)
அதன் பின்னர் இக்கலவையை 
குளிர்சாதனப்பெட்டியில்(பிரீட்ஜில் வைக்கவும்.

(4)பின்னர் தேவைக்கு உபயோகப்
படுத்தலாம் 
பூரிக்கு மா தயாரிக்கும் போது வடித்த 
சோற்று(சாதம்)கஞ்சியை சேர்த்து 
குழைத்தால் பூரி மொறுமொறு என 
உப்பலாக இருக்கும்:கஞ்சி எல்லை 
என்றால் ஒருதேக்கரண்டி அரிசி மாவை 
தண்ணீரில் கரைத்தபின்பு சிலமணிநேரம் 
அடுப்பில் வைத்துகூழாக்கிய பின்பு  
பூரி மாவுடன் சேர்த்து குழைத்துபூரி செய்யலாம். 

தேநீர் தயாரிக்கும் போது

தேநீர் தயாரிக்கும் போது பத்து - பதினைந்து
துளசி இலைகளை சேர்த்து கொதிக்க
வைத்தால் நல்லசுவையுடன் தேநீர் கிடைக்கும்
அத்துடன் ஜலதோஷம் ,மூக்கடைப்பு ஆகிய
நோய்கள் வராது.

கீரையை தண்ணீரில் நன்றாக கழுவிய பின்பு

கீரையை  தண்ணீரில் நன்றாக கழுவிய பின்பு 
ஒரு பாத்திரத்தில் சிறிதளவுதண்ணீர் எடுத்து 
அதில்  ஒருதேக்கரண்டிமஞ்சள் தூளைப் போட்டு 
கரைத்து அதில்கீரையை முக்கிய பின்பு எடுத்து 
சமைத்தால்கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் எல்லாம்
அழிவதோடு கீரை மணமாகவும் சுவையாகவும்
இருக்கும்.

கொழுக்கட்டையின் மேல் மாவை செய்யும் போது

கொழுக்கட்டையின் மேல் மாவை செய்யும் 
போது தண்ணீருடன் பாலைசேர்த்து செய்தால் 
மிகவும் சுவையாக இருக்கும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்