கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 30. Juni 2014

திங்கள்கிழமை


Freitag, 27. Juni 2014

வெள்ளிக்கிழமை


Donnerstag, 26. Juni 2014

வியாழக்கிழமை


Montag, 23. Juni 2014

திங்கள்கிழமை


Samstag, 21. Juni 2014

சனிக்கிழமை


Freitag, 20. Juni 2014

வெள்ளிக்கிழமை


Donnerstag, 19. Juni 2014

வியாழக்கிழமை


Montag, 16. Juni 2014

திங்கள்கிழமை


Freitag, 13. Juni 2014

தேன் மிட்டாய்

தேவையான பொருள்கள் 
புழுங்கல் அரிசி - 4 கப்
முழு உளுந்து - ஒரு கப்
சீனி - 4 கப்
தண்ணீர் - ஒரு கப்
ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை 
1.அரிசி மற்றும் உளுந்தை கழுவி 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும்.
2.அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
(இட்லி மாவு பதத்தை விடவும் சிறிது கெட்டியாக இருப்பது நல்லது)
3.அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
4.ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.
5.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவு கலவையை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
6. உருண்டைகள் பொரிந்து மேலே வரும்.
7.பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும்.
8.ஊறியதும் மிட்டாயை வேறோரு தட்டிற்கு மாற்றவும். ஆறியதும் சுவைக்கவும்.
சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய் ரெடி.

வெள்ளிக்கிழமை


வெள்ளிக்கிழமை


Donnerstag, 12. Juni 2014

வியாழக்கிழமை


Dienstag, 10. Juni 2014

பன்னீர்

தேவையான பொருட்கள் 
பால்.2 லிட்டர்
எலுமிச்சை சாறு -2 டேபிள்ஸ்பூன்

செய்முறை 

2 லிட்டர் பாலினை நன்கு காய்ச்சி அது 

கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை சாறு ஊற்றினால் பால் 
நன்கு திரிந்து தண்ணீர் பிரியும். 

இதனை மென்மையான வடிகட்டியில் 
வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் 
சுற்றி பிழிந்து பின்னர் அதன் மேல் 
கனமான ஒரு பாத்திரத்தினை அழுத்தி 
வைக்க 20 நிமிடத்தில் பன்னீர் தயார். 

சுமார் 200 கி வரை இதில் பனீர் 

கிடைக்கும். இதனை ஒரு பாத்திரத்தில் 
நீர் ஊற்றி இதனை அதில் மூழ்கும் படி 
வைத்து ஸ்ப்ரிட்ஜில் வைத்து 2-3 நாட்கள் 
வரை உபயோகிக்கலாம்.

உள்ளி (பூண்டு) மிளகுக் குழம்பு

உள்ளி(பூண்டு)மிளகுக்குழம்பு

தேவையானபொருட்கள் 

உரித்த உள்ளி(பூண்டு) - ஒரு கிண்ணம், 
தனியா - 3 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
புளி - சிறிய உருண்டை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

கடுகு - அரை டீஸ்பூன்.



 செய்முறை 


கடாயில் தனியா, மிளகு, காய்ந்த
மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலை
ப்பருப்பு ஆகியவற்றை வரட்டு
வறுவலாக வறுத்து மிக்ஸியில்
பொடிக்கவும்.

 சீரகம், கறிவேப்பிலையைப்
பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.

கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை
விழுது, வறுத்து அரைத்த பொடி,
உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல்
கரைத்து வைத்துக்கொள்ளவும்.



தாட்சியில் அரை ஸ்பூன் எண்ணெய் 

விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் 

சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி

 வேகவிடவும். 

வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, 
நன்றாகக் கொதிக்கவிடவும். 

கெட்டியானதும் இறக்கவும். மீதம் 
உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச்
 சேர்க்கவும்.

புல்கா

தேவையான பொருட்கள் :  

கோதுமை மாவு - 2 கப் 
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை 

கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

பிசைந்த மாவு, மெத்தென்று இருக்க வேண்டும். 

அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளுங்கள்.

பிறகு தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய சப்பாத்தியை போட்டு இருபுறமும் இரண்டு நிமிடம் திருப்பிவிடுங்கள். 

பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து சப்பாத்தி சுடும் வலையிலோ அல்லது நேரடியாக அடுப்பிலோ சப்பாத்தியை போட்டால் இது நன்கு எழும்பி வரும். வந்தபின் திருப்பிவிட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடுங்கள். இதுதான் எண்ணெய் இல்லாத புல்கா.

Montag, 9. Juni 2014

கோதுமை இட்லி

தேவையான பொருட்கள் : 

கோதுமை மா - 1 கிலோ 
உளுத்தம் பருப்பு - 100 கிராம் 
உப்பு - தேவையான அளவு  

செய்முறை :  

 உளுத்தம் பருப்பை  நன்றாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். 

இதனுடன் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். 

மறுநாள் எடுத்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து ஏதாவது ஒரு கார சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

சப்பாத்தி பீட்ஸா

தேவையான பொருட்கள்

குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
துருவிய சீஸ் – 1/4 கப்
சாஸ் செய்வதற்கு.
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 12 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1/2 கப்
தக்காளி – 1 (பெரியது)
தக்காளி சாஸ் – 1 டேபிள்
ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/8 டீஸ்பூன்

செய்முறை

கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு, தக்காளியில் உள்ள தோல் வெளிவரும் வரை வேக வைத்து இறக்கி, தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து சாஸ் போன்று நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் குடைமிளகாயை போட்டு, எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒவ்வொரு சப்பாத்திகளாக எடுத்து, அதன் மேல் செய்து வைத்துள்ள சாஸை தடவி, மேலே வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் சீஸ் தூவி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு, 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.

இதேப்போல் அனைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்தால், சப்பாத்தி பிட்சா ரெடி

திங்கள்கிழமை


Sonntag, 8. Juni 2014

ஜவ்வரிசி ரொட்டி

தேவையான பொருட்கள்: 

ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 3 
கொத்தமல்லி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 
பச்சை மிளகாய் - 1 
வேர்க்கடலை - 1/2 கப் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
கோதுமை மா - 1/4 கப் 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துகொள்ளவும். 

கொத்தமல்லி,ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

வேர்க்கடலையை வறுத்து ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும். 

முதலில் ஜவ்வரிசியை 1/2 கப் நீரில், 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 

பின் ஊற வைத்த ஜவ்வரிசியில், எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். 

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். 

பின்பு அந்த மாவை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து வட்டமாக தட்டி, தோசைக்கல் சூடானதும், கல்லில் எண்ணெய் தடவி, தட்டி வைத்துள்ளதை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். 

இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும். 

இப்போது சுவையான ஜவ்வரிசி ரொட்டி ரெடி!!! 

அவல் கிச்சடி

தேவையானப் பொருள்கள்: 

அவல்- 2 கப் 
பச்சைப்பட்டாணி-ஒரு கைப்பிடி 
கேரட்-1/4 பாகம் 
காலிஃப்ளவர்-கொஞ்சம் 
சின்ன வெங்காயம்-10 
தக்காளி-பாதி 
இஞ்சி-ஒரு சிறிய துண்டு 
பூண்டு-2 பற்கள் 
பச்சை மிளகாய்-2 
மஞ்சள் தூள்-சிறிது 
உப்பு-தேவைக்கு 
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து 
எலுமிச்சை சாறு-1/2 டீஸ்பூன் 

தாளிக்க: 

நல்லெண்ணெய்-2 டீஸ்பூன் 
கடுகு உளுந்து 
கடலைப் பருப்பு 
சீரகம் 
முந்திரி 
பெருங்காயம் 
கிராம்பு-2 
பிரிஞ்சி இலை-1 
கறிவேப்பிலை 

செய்முறை


பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். 

அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். 

அவல் நன்றாக ஊறி இருக்க வேண்டும்.ஆனால் குழைந்து இருக்கக்கூடாது. 

கரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும். 

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும். 

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும். 

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு

 இஞ்சி, பூண்டு வதக்கிவிட்டு அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

 அடுத்து கரட், பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். 

காய்கள் நன்றாக வதங்கியதும் சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

காய் வெந்ததும் அவலைக்கொட்டிக் கிளறவும். தண்ணீர் சேர்க்க கூடாது. 

உப்பு தேவையானால் சேர்த்துக்கொள்ளவும். 

மிதமானத்தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். 

பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 7. Juni 2014

பாசி பருப்பு இட்லி

தேவையான பொருட்கள் :

பாசி பருப்பு - 1 கப் 
புளுங்கல் அரிசி - அரை கப் 
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

பாசி பருப்பு, அரிசி, உளுத்தம் பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். 

அரைத்த மாவை உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். 

பின்னர் மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். 

சுவையான, சத்தான பாசி பருப்பு இட்லி ரெடி

உருளைக்கிழங்கு பக்கோடா

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
அரிசிமா– 2 கப்
தயிர் – அரை கப்
சீனி – ஒரு தேக்கரண்டி
வெந்தயக்கீரை – 50 கிராம்
பச்சைமிளகாய் – 6
இஞ்சி துண்டு – சிறியது
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
உருளைக்கிழங்கினை வேகவைத்துத் 
தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

கீரையை சுத்தம் செய்து சிறியதாக 
அரிந்து வைத்துக் கொள்ளவும்.

அரிசி மா, தயிர், சுத்தம் செய்த கீரை
,சர்க்கரை, பச்சை மிளகாய்,இஞ்சி,
தேவையான அளவு உப்பு சேர்த்து
 நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இந்த கலவையுடன் மசித்து வைத்த
 உருளைக்கிழங்கினை சேர்த்து 
மீண்டும் நன்றாக பிசையவும்.

தாட்சியில் எண்ணெயை சூடாக்கவும்
  
கலந்த கலவையை எண்ணெயில்
 உதறி உதறி விடவும், மிதமான 
தீயில் பொன்னிறமாகப் பொரித்து 
எடுக்கவும்

சனிக்கிழமை


Freitag, 6. Juni 2014

வெங்காய ரிங்ஸ்

தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1
மைதா மா– 1/2 கப்
சோள மா – 1/2 கப்
இஞ்சிஉள்ளி  பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
ரஸ்க் தூள் – தேவையான அளவு
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை
முதலில் வெங்காயத்தை 
பட்டையான வளையங்களாக 
வெட்டிக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் 
மைதாமா, சோள மா, இஞ்சி 
உள்ளி பேஸ்ட், மிளகு தூள், 
பேக்கிங் பவுடர் மற்றும் 
 உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி 
ஓரளவு கெட்டியாக கலந்து 
கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் 
வைத்து, அதில் பொரிப்பதற்கு
 தேவையானளவு எண்ணெய் ஊற்றி 
சூடானதும் அதில் ஒரு வெங்காய 
வளையத்தை, எடுத்து கலந்து 
வைத்துள்ள மாவில் பிரட்டி, ரஸ்க்  
தூளில் கோட்டிங் கொடுத்து, 
எண்ணெயில் போட்டு பொன்னிறமாக 
பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து வெங்காய
 வளையத்தையும் மா மற்றும் ரஸ்க்
 தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்து
 எடுத்து, அவற்றின் மேலே சாட் 
மசாலாவை தூவி பரிமாறினால், 
வெங்காய ரிங்ஸ் ரெடி!!!

வெள்ளிக்கிழமை


Donnerstag, 5. Juni 2014

வல்லாரைசம்பல்

 தேவையானவை
வல்லாரை – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 3
திருவிய தேங்காய் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
புளி – 2 சுளை
உப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு 

செய்முறை

வல்லாரையை நன்கு அலசி வைக்கவும்

 வெங்காயத்தை தோலுரித்துக் கழுவிப் 
பொடியாக நறுக்கவும். 

அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி 
அதில்  எண்ணெயை விட்டு சூடாக்கவும் 

பின்னர் அதில் கடுகு போட்டு அது 
வெடித்ததும். 

அதனுடன் உளுந்தை போட்டு அது 
சிவந்ததும் 

அதனுடன்  பெருங்காயம்., பச்சை 
மிளகாய்., வெங்காயம் போட்டு 
நன்கு வதக்கவும். 

பின்னர் அதனுடன் உப்பு., புளி
தேங்காய் போட்டு வதக்கிய 
பின்னர் அந்த தாட்சியை 
அடுப்பை வீட்டு எடுக்கவும் 

பின் அவற்றை வேறு 
பாத்திரத்தில் போடவும்  

அதன் பின்னர் அதில் 
வல்லாரையைப் போட்டு 
நன்கு கலக்கவும். 

இவை யாவும் ஆறியபின் 
சம்பலாக அரைக்கவும்

அரைத்த பின்னர்  இட்லி., 
தோசை., அல்லது கலவை 
சாதங்களுடன் பரிமாறவும்.

பொட்டுக்கடலை லட்டு

       தேவையான பொருள்கள் :

பொட்டுக்கடலை – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
நெய் – 3 மேஜைக்கரண்டி
மிதமான வெந்நீர் – 50 அல்லது 75 ml

செய்முறை :

 பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை துருவி கொள்ளவும்.

இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.

 பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

 எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.

சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.

இது குழந்தைகளுக்கு கொடுக்க

வியாழக்கிழமை


Mittwoch, 4. Juni 2014

வறுத்த கோதுமை இடியப்பம்

தேவையான பொருட்கள் 

 வறுத்த கோதுமை மா - 2 கப் 
 தண்ணீர் அளவு - 2 1/2 டம்ளர் 
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 
 உப்பு - தேவைக்கு.

 செய்முறை 

 ஒரு பாத்திரத்தில் தண்ணீரை 
ஊற்றி கொதிக்க வைக்காமல் 
வெதுவெதுப்பாக சுட வைக்கவும். 

 மற்றொரு பாத்திரத்தில் மா உப்பு, 
வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி
 பிசைந்து கொள்ளவும். 
(மா கையில் ஒட்ட கூடாது) 

 இடியப்ப தட்டில் சிறிது எண்ணெய்
 தடவிக் கொள்ளவும்.

 பிசைந்த மாவை தட்டில் இடியப்பமாக 
 பிழியவும். 

 அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 
அதன் மேல் இடியப்ப தட்டை வைத்து 
அதன் மேல் ஒரு கிண்ணம் வைத்து 
மூடவும் . (இட்லி சட்டியிலும் வைக்கலாம்) 

 7 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் 
 கோதுமை இடியாப்பம் ரெடி.  இது மிகவும் சத்தானது உணவாகும்.

பலாக்கொட்டை உள்ளி மசாலா

தேவையானவை:
பலாக்கொட்டை – 10 – 15
வெள்ளை உள்ளி  – ஒன்று
சின்ன வெங்காயம் – 10
சாம்பார் பொடி – 1 +1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
தக்காளி – ஒன்று

தாளிக்க
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு
சீரகம்
உளுந்து
கடலைபருப்பு
மிளகாய் வற்றல் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

சின்ன வெங்காயம் மற்றும் உள்ளியை 
தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி 
வைக்கவும்.

பலாக்கொட்டையை தோல் நீக்கி நறுக்கி 
உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு 
சூடானதும் அதில் கடுகு,சீரகம்,உளுந்து
கடலைபருப்பு  ஆகியவற்றை போட்டு 
தாளிக்கவும்.;

அதன் பின்னர் அதில் செத்தல் மிளகாய்
கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், 
உள்ளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பொடியாக 
நறுக்கிய தக்காளி, தேவையான உப்பு 
சேர்த்து குழைய வதக்கவும்.

பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி,
 தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 
பச்சை வாசம் போக மசாலா திரண்டு 
வரும் வரை பிரட்டவும்.

பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி, 
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 
பச்சை வாசம் போக மசாலா திரண்டு 
வரும் வரை பிரட்டவும்.

.சுவையான பலாக்கொட்டை உள்ளி 
 மசாலா தயார். 

சாம்பார், ரசம் அல்லது தயிர் சாதத்துடன் 
பக்க உணவாக பரிமாறவும் 

தம் பிரியாணி

தேவையான பொருட்க
பாசுமதி அரிசி-1/4 கிலோ              
மாமிசம்-1/4 கிலோ                      
பெரிய வெங்காயம்-150 கிராம்
தக்காளி-150 கிராம்
எண்ணெய்-100 கிராம்
நெய்-150 கிராம்
தேங்காய்-பெரியது 1
சிவப்பு மிளகாய்த் தூள்
பச்சை மிளகாய்- 10
இஞ்சி-15-கிராம்
பூண்டு-பெரியது 1
சின்ன வெங்காயம்-25 கிராம்
கறுவா பட்டை-தாளிக்க
கராம்பு.தாளிக்க
பெருஞ்சீரகம் -தாளிக்க
லவங்கம்-தாளிக்க
மஞ்சள் தூள்-கொஞ்சம்
உப்பு- தேவையானளவு
புதினா
கருவேப்பிலை
கொத்தமல்லித் தழை
 கொஞ்சம்முந்திரிப் பருப்பு.-அலங்கரிக்க


செய்முறை
முதலில் அரிசியை ஒரு அரை மணி நேரம்
ஊற வைத்துக்கொள்ளவும்.

மாமிசத்தை லேசாக உப்பும் கொஞ்சம்
மிளகாய்த் தூளும் போட்டு அரை
வேக்காடாக வேக வைத்துக்கொள்ளவும் .

 தேங்காய்ப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

 பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும்
 சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை
விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை ஏற்றி அதில் எண்ணெய்
ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு,
லவங்கம்,சோம்பு போட்டு தாளித்துக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காய விழுதை
அத்துடன் சேர்த்து லேசாக வதக்கியபின், அரிந்து
வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து
வதக்கவும்.

அரிசியின் அளவைப்போல் இரு மடங்கு
தண்ணீர் தேவைப்படும். எனவே தேங்காய்ப்பால்,
மற்றும் மாமிசம் வேக வைத்த தண்ணீருடன்
எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அவ்வளவு
தண்ணீர் சேர்த்து குக்கர் பாத்திரத்தில்
 ஊற்றவேண்டும்.

எல்லாம் சேர்த்து மொத்தம் இரு மடங்கு
தண்ணீர்தான் இருக்கவேண்டும்

அதில் மாமிசத்தையும் ஊற வைத்த
அரிசியையும் நீரை வடித்துவிட்டுப் போடவும் .

அத்துடன் மீதமுள்ள மிளகாய்த்தூள்
மஞ்சள் தூள் போட வேண்டும்.

மாமிசத்துடன் சிறிது உப்பு சேர்த்திருப்பதால்,
உப்பை அளவு பார்த்து போடவேண்டும்.

இப்போது குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை
அடுப்பில் வைக்கவும்.

பிறகு ஸ்டவ்வை அணைத்துவிட்டு 10 நிமிடம்
கழித்து திறந்து அதில் புதினா, கருவேப்பிலை
மற்றும் கொத்தமல்லித் தழை போட்டு நெய்யைச்
சூடு பண்ணி அதில் ஊற்றிக் கிளறி இறக்கவேண்டும்.

 கொஞ்சம் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப்
போட்டுக்கொள்ள்லாம். சூடான பிரியாணி தயார்.

பிடித்தமான சைட் டிஷ்ஷுடன் பறிமாறலாம்.

குருமா, தயிர்ப் பச்சடி, மற்றும் கத்தரிக்காய்க்
கறி முதலியவை சூட்டாகும் .சூடாக சாப்பிட
சுவையாக இருக்கும். இது குக்கரில்
பிரியாணி செய்யும் முறை .

தம் பிரியாணியும் செய்யலாம்.
தம் பிரியாணி செய்யும் முறை:

இந்த முறையில் மேற்சொன்னபடி
பொருட்களைக் கலக்க வேண்டும்.
ஆனால், விறகு அடுப்பு தேவைப்படும்.

அடுப்பை எரியவிட்டு, அதில்
குக்கருக்குப் பதில் பிரியாணி செய்யும்
தாவாவை வைக்க வேண்டும்.

அனைத்துப் பொருட்களையும் கலந்தபின்
 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட
வேண்டும். நன்கு கொதித்து வருகையில்
ஒரு தட்டு போட்டு பிரியாணி வேகும்
பாத்திரத்தை மூடி அந்த தட்டில் அடுப்பை
அணைத்துவிட்டு அந்த தணலை
அள்ளிப்போடவேண்டும்.

கீழே தீ இருக்கவேண்டிய அவசியமில்லை.
அதேநேரத்தில் மேலிருத்து உஷ்ணம்
கிடைக்க வேண்டும்.

20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால்,
பிரியாணி உதிரியாக வந்திருக்கும்.
அதில் கொத்தமல்லித் தழை, புதினா,
 கருவேப்பிலை போட்டு சூடு பண்ணிய
 நெய் ஊற்றிக் கிளறி இறக்கவேண்டும்

. கொஞ்சம் முந்திரிப் பருப்பை நெய்யில்
வறுத்த் சேர்த்துக்கொள்ளலாம்.

தம் பிரியாணியின் சுவையும் அலாதியானது.

புதன்கிழமை


Dienstag, 3. Juni 2014

சிவப்பரிசி வெஜிடபிள் தோசை

தேவையான பொருட்கள்

 கருப்பரிசி (பச்சரிசி), - 1 கப் 
 சிவப்பரிசி (புழுங்கலரிசி) - ஒரு கப்,
 உளுந்து - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2 -4
துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் -  ஒரு டீஸ்பூன்,
 இஞ்சி - சிறு துண்டு,
 தக்காளி - மூன்று, 
 சீரகம் -அரை டீஸ்பூன்
 மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், 
 வெங்காயம் - 2 
கரட் - தேவையான அளவு
பீன்ஸ் - தேவையான அளவு
கோஸ் -தேவையான அளவு
குடமிளகாய் - தேவையான அளவு
  உப்பு - ஒரு சிட்டிகை. 

 செய்முறை

இஞ்சியை தோல் சீவி வைக்கவும். 

 வெங்காயம், தக்காளி, காய்கறிகளை 
பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

அரிசி, பருப்புகள், வெந்தயம் 
அனைத்தையும் களைந்து தண்ணீரில் 
12 மணி நேரம் ஊறவைக்கவும். 

 பின்னர், அதனுடன் இஞ்சி, காய்ந்த 
மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து
 அரைத்துக்கொள்ளவும். 

அரைத்த மாவில் வெங்காயம், 
தக்காளி, காய்கறிகளை சேர்த்து,
 மெல்லிய தோசைகளாக வார்த்து,
 எண்ணெய் விட்டு, மிதமான தீயில் 
இருபுறமும் நன்றாக வெந்ததும் 
எடுக்கவும். 
இரத்த அழுத்தத்திற்கு இந்த சிவப்பரிசி வெஜிடபிள் தோசை மிகவும் நல்லது.

பருப்பு கஞ்சி

தேவையான பொருட்கள் :

பாதாம்,முந்திரி,வேர்க்கடலை சேர்த்து – 1/2 கப்,
பால் – 1/2 லிட்டர்,
தேங்காய்ப் பால் – 1/2 கப்,
சுக்குத் தூள் – 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை,
வெல்லம்orபனைவெல்லம்orகருப்பட்டி


செய்முறை :
பாலை நன்றாகக் காய்ச்சி இதனுடன் ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்க்கவும்.

நட்ஸ் எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் நன்றாக பொடி செய்து பாலில் கலக்கவும்.

தேவையான வெல்லத்தை பொடித்து சிறிது தண்ணீருடன் கொதிக்க விட்டு வடிகட்டி பாலுடன் சேர்க்கவும்.

இப்போது இறக்கி குடிக்கும் பதம் இருக்கும் போது தேங்காய்ப்பால் சேர்த்து சூடாக உடனே பரிமாறவும்.

வெல்லம் பாலில் இருப்பதால், அதிகம் சூடாக பால் இருந்தால் தேங்காய்ப்பால் திரிந்து விடும். 

அதனால் குடிக்கும் பதத்தில் சூடு இருக்கும் போதுதான் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும்.

வளரும் குழந்தைகளுக்கு நல்லது. வயிற்றுப்புண் ஆற்றும் சக்தி வாய்ந்த பானம்.

செவ்வாய்க்கிழமை


Montag, 2. Juni 2014

ரவை சேமியா இட்லி

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப் 
 சேமியா – 1/4 கப் 
 சற்று புளித்த தயிர் – 1 கப் 
 கொத்தமல்லி- சிறிதளவு
 பச்சை மிளகாய்-2 
 இஞ்சி – சிறிது 
 நெய் – 2 டீஸ்பூன் 
 கடுகு – 1/2 டீஸ்பூன்
 உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் 
 கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் 
 மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
 சீரகம் – 1/2 டீஸ்பூன் 
 உப்பு – தேவையான அளவு 
 எண்ணெய் – தேவையான அளவு

 செய்முறை

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 
அதில் நெய் ஊற்றி சூடானதும் 
சேமியா மற்றும் ரவையை வறுத்து
 தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

 பச்சை மிளகாய், கொத்தமல்லி, 
இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில்
 வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், 
அதில் கடுகு, உளுத்தம் பருப்பு , 
கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள், 
பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு 
வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை 
மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும். 

  பிறகு அதோடு தயிர், கொத்தமல்லி, 
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி 
மா பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற 
வைத்து, பின் அதனை இட்லிகளாக 
ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து 
எடுக்க வேண்டும். • இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி!

செட்டிநாடு இறால் குழம்பு!

தேவையான பொருட்கள்
இறால் – 400 கிராம்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
அரைத்த பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 5
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

இறாலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீருடன், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும். வடிகட்டிய பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும். பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும். பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி

திங்கள்கிழமை


Sonntag, 1. Juni 2014

வெங்காய கார சட்னி

தேவையான பொருள்கள்

 சிறியதாகவெட்டியசின்ன வெங்காயம் -1கப்
பொடியாக நறுக்கியதக்காளி-1-2
பூண்டு-5 பல்
கருவேப்பில்லை -சிறிது
தேங்காய்-2 சில்
உப்பு
எண்ணெய்  ஒரு குழிகரண்டி
சிவப்பு மிளகாய்-5 (காரத்திற்கு ஏற்ப) 
புளி -கொட்டைபாக்கு அளவு
கடுகு-சிறிது
உளுந்தபருப்பு-1 1/2 டேபிள்ஸ்பூன்

 செய்முறை

1)கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் 1 1/2 டேபிள்ஸ்பூன் உளுந்தபருப்பை சிவப்பு மிளகாய் , பூண்டு பொன்னிறமாக வறுத்து அடுப்பை அனைத்து விட்டுஅதே சூட்டில் தேங்காய்ப்பூ புளி , கருவேப்பில்லை சிறிது போட்டு வதக்கவும்.

2)இது ஆறிய உடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.

 3)மறுபடியும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் ,மற்றும் தக்காளி போட்டு வதக்கி, இது ஆறிய உடன் மிக்சியில் அரைத்து .முதலில் அரைத்து வைத்து உள்ள உளுந்தபருப்பு, தேங்காய் கலவை உடன் உப்பு,தேவையான நீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

 4)கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை  போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்,

 5)வெங்காயம் நன்றாக வதக்கியதும் இந்த கலவையை சட்னி உடன் கலந்து விடவும்.. 

6)சின்ன வெங்காயம் போட்டு வதக்கி சேர்ப்பது சாப்பிடும் போது நன்றாக இருக்கும். 

7)சின்ன வெங்காயம் நறுக்க நேரம் இல்லை என்றால் தவிர்த்து விடலாம் 

8)அல்லது ஒருமுறை வெறும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தும்,

9)மற்றொரு முறை சின்ன வெங்காயம் வதக்கியும் செய்து பாருங்கள் ,சுவையில் வித்தியாசம் தெரியும்

. இட்லி,தோசை உடன் சாப்பிடலாம் .   

குறிப்பு 

1)அனைத்து பொருள்களும் எண்ணையில் வதக்கி அரைத்து வைத்து இருப்பதால் ,மீண்டும் கொதிக்க வைக்க தேவை இல்லை.தாளித்து மட்டும் சேர்த்தால் போதும்,

 2)இதில் பாதி உளுத்தம்பருப்பு ,பாதி கடலைபருப்பு பொன்னிறமாக வறுத்தும், உளுத்தம்பருப்புக்கு பதிலாக கடலைபருப்பு சேர்த்தும் செய்யலாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி செய்து பாருங்கள்

ஞாயிற்றுக்கிழமை