கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 30. November 2013

திருமணகேக்


Freitag, 29. November 2013

பப்பாசிக்காய்அல்வா,

தேவையான பொருட்கள்

பப்பாசிக்காய்துண்டுகள் : 2 கப்
சர்க்கரை : 1 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் 
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
கேசரிபொடி- சிறிதளவு 



செய்முறை        

 பப்பாளிக்காயை தோல் நீக்கி 
துறுவிக்கொள்ளவும்.

முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து 
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். 

  பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது 
நெய்விட்டு துறுவிய பப்பாசிக்காய் 
போட்டு வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும் காய்ச்சின 
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.

பப்பாளி குழைந்து வரும், 

அதனுடன் சர்க்கரை  கேசரிபொடி 
ஆகியவற்றை சேர்த்து கிளறி 
விடவும்.

அல்வா சுண்டிவரும்போது 
மீதமுள்ள நெய்விட்டு 
கிளறிவரவும்.

பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் 
வரும்பொது முந்திரி, பாதாம், 
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்

பப்பாசிக்காய் அல்வா தயார்.

Donnerstag, 28. November 2013

திருமணகேக்


Mittwoch, 27. November 2013

சிக்கன் லிவர் பஜ்ஜி

தேவையானப் பொருட்கள்: 

 சிக்கன் ஈரல்- 1/4கிலோ 
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன் 
கடலைமா- 100கிராம் 
சோடாமா- 1சிட்டிகை
 கலர்பவுடர்- 1சிட்டிகை 
 இஞ்சிபூண்டுவிழுது- 1ஸ்பூன் 
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன் 
உப்பு – தேவைக்கு 
எண்ணெய்- பொறிக்க 

செய்முறை: 

ஈரலுடன் மஞ்சள்த்தூள் சேர்த்து 
கொஞ்சம் தண்ணீர் விட்டு 10நிமிடம்
 வேக வைத்து இறக்கவும். 

தண்ணீரய் வடித்து விட்டு ஈரலுடன் 
கடலைமாவு சோடாமாவு, கலர்பவுடர், 
இஞ்சிபூண்டுவிழுது, மிளகாய்த்தூள் 
உப்பு தேவையான தன்னீர் ஊற்றி 
கொஞ்சம் திக்காக கலந்து வைக்கவும். 

 வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் 
பஜ்ஜியில் முக்கிய ஈரலை பொறித்து 
எடுக்கவும்.

Dienstag, 26. November 2013

முளைகட்டிய நவதானிய சூப்

முளைகட்டிய நவதானிய சூப் 

தேவையானவை


முளைகட்டிய பயறுகள் - ஒரு கப், 
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பால் - 1 கப்
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,
உப்பு - தேவையான அளவு. 



செய்முறை


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். 

மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். 


காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். 

பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Montag, 25. November 2013

பப்பாசிபழ அல்வா

தேவையான பொருட்கள்

பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் 
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7

செய்முறை    



முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து 
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். 

  பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது 
நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை 
போட்டு வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும் காய்ச்சின 
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.

பப்பாளி குழைந்து வரும், 

அதனுடன் சர்க்கரை சேர்த்து 
கிளறி விடவும்.

அல்வா சுண்டிவரும்போது 
மீதமுள்ள நெய்விட்டு 
கிளறிவரவும்.

பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் 
வரும்பொது முந்திரி, பாதாம், 
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்

.பப்பாளி பழ அல்வா தயார்.

குறிப்பு:

பப்பாளி நன்றாக பழுத்ததாக 

இருக்கவேண்டும் (தோல் 
மஞ்சள் நிறமாக இருக்கும்)

பப்பாளி இயல்பாகவே இனிப்பு 
என்பதால் சர்க்கரை அளவை 
குறைத்துக்கொள்ளுங்கள்.

Sonntag, 24. November 2013

கல் தோசை

 தேவையானவை

தோசை மா – இரண்டு கப்
எண்ணெய்  - தேவையானளவு


 செய்முறை

சூடான தோசைக் கல்லில்,
மாவை சற்று கனமாக விட்டு,
சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி,
மிதமான தீயில் வேக விடவும்.

அப்போதுதான் ஓரத்தில் முறுகலாகவும்,
நடுவில் ‘மெத்’தென்றும் இருக்கும்

. இதனை ஒரு பக்கம் மட்டுமே வேக
வைக்க வேண்டும்.

 எந்த சட்னி வைத்து பரிமாறினாலும்
சுவையாக இருக்கும்.

Samstag, 23. November 2013

பீட்சா தோசை


தேவையானவை: 

இட்லி மா– 2 கப், 
நறுக்கிய வெங்காயம்-1 
குடமிளகாய் -1
 தக்காளி –1 
 பச்சை மிளகாய் – 2
சீஸ் துருவல் – 2 மேசைகரண்டி
தக்காளி கெட்சப் – ஒரு மேசைகரண்டி
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)– 2 பல்,
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய்– தேவையானளவு
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை

தாட்சியில் வெண்ணெய் விட்டு நறுக்கிய 
உள்ளி(பூண்டு), வெங்காயம், குடமிளகாய், 
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், 
உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி
தக்காளி, சிறிதளவு சீஸ் துருவல் 
சேர்த்து இறக்கவும். 

 தோசைக் கல் சூடானதும் எண்ணெய் 
தேய்த்து, சற்று தடிமனாக மாவை 
வார்த்து மூடி வைத்து, அடுப்பை 
மிதமான தீயில் வைக்கவும். 

பிறகு, மூடியைத் திறந்து.. தோசை 
மீது தக்காளி கெட்சப் விட்டு, வதக்கிய 
காய்கறியைப் பரப்பி, கடைசியாக 
வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல் 
ஆகியவற்றைத் தூவி, வாசனை 
வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

Freitag, 22. November 2013

புளிப்பு-கார தோசை

தேவையானவை:

 புழுங்கல் அரிசி -ஒரு கப்,
பச்சரிசி – ஒரு கப், 
கடலைப்பருப்பு – அரை கப், 
புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், 
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4, 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
எண்ணெய், தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு, 

 செய்முறை:

 புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பைத் 
தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற 
வைக்கவும். 

அவற்றை ஒன்றாக்கி, தேங்காய் துருவல், 
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 
அரைக்கவும். 

கடைசியாக, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, 
20 முதல் 30 நிமிடங்கள் வரை புளிக்க 
வைத்து, தோசைக்கல்லில் எண்ணெய் 
தேய்த்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும். 

 இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னி 
தேவையில்லை

வெள்ளிக்கிழமை


Donnerstag, 21. November 2013

பனீர் தோசை

தேவையானவை

தோசை மா– இரண்டு கப், 
பனீர் துருவல் – ஒரு கப், 
நறுக்கிய பச்சை மிளகாய் – 3, 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, 
சீரகம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய்- தேவையானளவு. 
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை:

 பனீர் துருவலுடன் பச்சை மிளகாய்,
 கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து
 நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். 

தோசைக் கல்லில் மாவை தோசையாக 
வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு 
பாதி வெந்ததும் பனீர் கலவையை
 அதன் மேலே தூவி, சிறிது நேரம் 
மூடி வைக்கவும். 

பிறகு மூடியைத் திறந்து தோசையை 
திருப்பி போட்டு, வெந்தவுடன் 
எடுத்து சூடாகப் பரிமாறவும்.

Mittwoch, 20. November 2013

தக்காளி தோசை

தேவையான பொருட்கள் :
அரிசி - மூன்று கப்
உளுந்து மூன்று கப்,
துவரை ஒரு கப்
தக்காளி எட்டு
வெங்காயம் இரண்டு.
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்,
பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை : 

முதலில் தக்காளியை வெந்நீரில் 
இட்டு தோலை உரித்து விடவும், 

பின்னர் நாம் உளுந்து மா  அரிசி 
ஆட்டி(வழக்கமாக மாவு அரைப்பது 
போல), மாவை எடுக்கும் தருவாயில்
 மூன்று அல்லது நாலு தக்காளியை 
மாவில் விட்டு ஆட்டவும். 

சில சுற்றுக்களில் தக்காளி அரைத்ததும் 
மாவை எடுத்து, சில மணி நேரம் 
மாவை புளிக்க விடவும்

.வெங்காயத்தை சிறிதாக அரிந்து, 
வாணலியில் இட்டு வதக்கிப், பின்னர் 
அதில் மீதம் உள்ள தக்காளியை 
நறுக்கி அல்லது பிய்த்து போட்டு,
மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள் 
சேர்த்து வதக்கி, மாவில் கலக்கி 
தோசை இடவும்

Dienstag, 19. November 2013

பப்பாளி தோசை


தேவையானவை: 
தோசை மா – இரண்டு கப், 
பப்பாளிப்பழத் துண்டுகள் – ஒரு கப், 
பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் – 3, 
வெங்காயம் – ஒன்று, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

 செய்முறை: 

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு 
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் 
(அ) காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். 

கடைசியாக, பப்பாளிபழத் துண்டுகளைப் 
போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். 

ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து, 
தோசை மாவில் கலந்து தோசைகளாக 
வார்த்தெடுக்கவும்.

சுரைக்காய் தோசை

தேவையான பொருட்கள்

அரிசி- 3 கப் 
துவரம் பருப்பு- ஒரு பிடி
சிறிய சுரைக்காய் ஒன்று
உப்பு தேவையானளவு.

செய்முறை : 

அரிசியையும் துவரம் பருப்பையும் 
ஒன்றாக இட்டு, தண்ணீரில் ஒரு 
ஜந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

சுரைக்காயை தோலுரித்து அதன்
 சதைப் பகுதிகளை மட்டும் 
தனியாக வெட்டி எடுத்துப் பின்னர்
 மாஅரைக்கும் போது சுரைக்காயும் 
சேர்த்து அரைக்கவும்.

 மா புளிக்க வைத்து தோசை 
ஊற்றினால் மிகவும் மென்மையான 
சுவையான சுரைக்காய் தோசை ரெடி. 

Montag, 18. November 2013

புதினா – கொத்தமல்லி தோசை

தேவையானவை: 
தோசை மா – 2 கப், 
நறுக்கிய புதினா, –1/2 கப், 
கொத்தமல்லி –1/2 கப், 
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், 
பச்சை மிளகாய் – 3, 
பூண்டு – 2 பல். 

 செய்முறை: 

புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், 
பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து,
 எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

 இந்தக் கலவையை தோசை மாவுடன் 
கலந்து கொள்ளவும்

இதை தோசைக் கல்லில் எண்ணெய் 
தேய்த்து, தோசைகளாக வார்த்த
சுட்டெடுக் கவும்

.இது, வித்தியாசமான சுவையுடனும் 
மணத்துடனும் இருக்கும்.

Sonntag, 17. November 2013

கரட் தோசை

தேவையானவை

தோசை மா – இரண்டு கப், 
கரட் விழுது – அரை கப், 
பொடித்த காய்ந்த மிளகாய் – தேவையானளவு
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு. 

 செய்முறை: 

தோசை மாவில் கரட் விழுது, 
பொடித்த காய்ந்த மிளகாய், 
உப்பு சேர்த்து நன்கு கலந்து 
கொள்ளவும். 

தோசைக் கல்லில் சிறிது கனமாக 
மாவை வார்த்து, இருபுறமும் 
எண்ணெய் விட்டு வேகவிட்டு 
எடுக்கவும். 

(விருப்பப்பட்டால் பொடியாக 
நறுக்கிய வெங்காயத்தை மாவில் 
சேர்த்தும் செய்யலாம்). 

 இந்த தோசையை எந்த சட்னியுடனும் 
பரிமாறலாம்.

Samstag, 16. November 2013

பீட்ரூட் தோசை

தேவையானவை
தோசை மா – இரண்டு கப்
அரைத்த பீட்ரூட் விழுது – அரை கப்
எண்ணெய் – தேவையானளவு

 செய்முறை
 தோசை மாவுடன் பீட்ரூட் விழுதைச் 
சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

தோசைக் கல்லில் ஊத்தப்பத்தை விட 
மெல்லியதாக வார்த்து, இருபுறமும் 
எண்ணெய் விட்டு வெந்தவுடன் 
எடுத்துப் பரிமாறவும்

 சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம்.

சனிக்கிழமை


Freitag, 15. November 2013

வெள்ளிக்கிழமை


Donnerstag, 14. November 2013

வியாழக்கிழமை


Mittwoch, 13. November 2013

புதன்கிழமை


Dienstag, 12. November 2013

செவ்வாய்க்கிழமை


Montag, 11. November 2013

திங்கள்கிழமை


Sonntag, 10. November 2013

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 9. November 2013

சனிக்கிழமை


Freitag, 8. November 2013

வெங்காய பஜ்ஜி


தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம்   -  3
கடலைமா  – 1  கப்
அரிசிமா– 1 மேசைக்கரண்டி
அப்பசோடா   – 1/2 சிட்டிகை
மிளகாய்த்தூள்  – 1  தேக்கரண்டி
சீரகம்  – 1 /2  தேக்கரண்டி
உப்பு  –தேவையானளவு 
எண்ணெய்  – தேவையானளவு

செய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய 
வட்டமாக வெட்டி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும். 

இன்னொரு பாத்திரத்தில் கடலைமா  
அரிசிமா  அப்பசோடா  மிளகாய்த்தூள்  
சீரகம் உப்பு  ஆகியவற்றை போடவும் 

அதன் பின்னர்  சிறிது தண்ணீர் விடவும் 

அதன் பின்னர் அவற்றை இட்லி மா 
பதத்தில் கரைக்கவும். 

பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து 
அதில் எண்ணெய் விட்டு நன்றாக 
சூடாக்கவும் 

பின்னர் வெங்காய வில்லைகளை 
கரைத்து வைத்துள்ள மாவில் நன்றாக  
அமிழ்த்து எடுக்கவும்

 அதன் பின்னர் அதனை   சூடான 
எண்ணெயில் போடவும் போட்ட 
வெங்காய வில்லைகளை பொரிய
விடவும்  

பின்னர் மற்றய பக்கம் திருப்பி 
போட்டு பொரியவிடவும் 

வெங்காய வில்லைகள் இருபுறமும் 
பொரிந்த பின்னர் அதனை எடுத்து 
ஒரு பாத்திரத்தில் வைக்கவும் 

இப்போது சுத்தமான சுவையான 
வெங்காய பஜ்ஜி தயாராகிவிட்டது 

அதன் பின்னர் இப்படியே எல்லா
வற்றையும் பொரித்தெடுக்கவும் 

பின்னர் ஒரு தட்டில் வெங்காய 
பஜ்ஜியை வைத்து அதனுடன் 
தேவையானளவு தக்காளி சோஸ் 
அல்லது மிளகாய் சோஸ் வைத்து 
பறிமாறவும்

வெள்ளிக்கிழமை


Donnerstag, 7. November 2013

வியாழக்கிழமை


Mittwoch, 6. November 2013

புதன்கிழமை


Dienstag, 5. November 2013

சோள தோசை





தேவையான பொருட்கள்

வெள்ளைச் சோளம்- 1 கப், 
பச்சையரிசி – 1 கப், 
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு. 
எண்ணெய் – தேவையானளவு. 

 செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் வெள்ளைச்
சோளம் தண்ணீர் ஆகியவற்றை 
போட்டு இரண்டு மணி நேரம் 
ஊற வைக்கவும். 

இன்னொரு பாத்திரத்தில் பச்சையரிசி 
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 
இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். 

வேறு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு 
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 
இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். 

பிறகு கிரைண்டரில் ஊறிய வெள்ளை 
சோளம் தண்ணீர் ஆகியவற்றை  
போட்டு தோசைமா பதத்தில் தனியாக 
அரைக்கவும். 

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் 
போட்டு வைக்கவும்

பின்பு கிரைண்டரில் ஊறிய உளுத்தம்
பருப்பு தண்ணீர் ஆகியவற்றை  போட்டு 
தோசைமா பதத்தில் தனியாக 
அரைக்கவும். 

அரைத்தவற்றை அரைத்தசோளம் போட்ட
 பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

பின் கிரைண்டரில் ஊறிய பச்சையரிசி  
தண்ணீர் ஆகியவற்றை  போட்டு 
தோசைமா பதத்தில் தனியாக 
அரைக்கவும்

அரைத்தவற்றை அரைத்த சோளம் 
உழுத்தம்பருப்பு ஆகியவை போட்ட  
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

பிறகு பாத்திரத்தில் போட்ட எல்லா 
மாவையும் ஒன்றாக கலந்து 
அதனுடன் உப்பு போட்டு கலக்கவும். 

கலந்த பின்னர் இந்த மாவை, 10 முதல் 
12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். 

சூடான தோசைக் கல்லில், எண்ணெய் 
பூசிஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் 
வகையில் அரைத்த மாவை தோசைக்
கல்லில் ஊற்றவும்.

அதன் பின் ஒரு பக்கம் வேகவிடவும்

பிறகு சிறித்தளவு எண்ணெயை தோசை 
மேல் விடவும் 

அதன் பின்னர் தோசையை மற்றைய
பக்கம் திருப்பிப் போட்டு வேகவிடவும் 

தோசை இருபக்கமும் நன்றாக வெந்ததும் 
எடுக்கவும். 

இப்போது சுத்தமான சுவையான சத்தான 
சோளதோசை தயாராகிவிட்டது  

அதன் பின்னர் எடுத்த தோசையை
 ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும் 

இப்படியே மற்றதோசைகளையும் சுட்டு 
எடுத்து முதல் தோசை போட்ட 
பாத்திரத்தில் வைக்கவும்

பின்பு ஒரு தட்டில் தேவையானளவு 
தோசைகளை வைத்து அதனுடன் காய்கறி 
குருமா சிறிதளவு வைத்து பறிமாறவும்

செவ்வாய்க்கிழமை


Montag, 4. November 2013

சோயாபீன்ஸ் தோசை


தேவையான பொருட்கள்
சோயாபீன்ஸ் – 1கப்
புழுங்கல் அரிசி – 1கப் 
வெந்தயம் – 1தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை: 
 ஒரு பாத்திரத்தில் சோயாபீன்ஸை 
போடவும் 

அதன் பின்னர் அதனுள் சோயாபீன்ஸ் 
மூழ்கும் அளவு  தண்ணீர் விடவும் 

பின்பு அதனை 10 மணி நேரம் ஊற 
வைக்கவும்

இன்னொரு பாத்திரத்தில் புழுங்கல் 
அரிசிவெந்தயம் ஆகியவற்றை 
போடவும் 

அதன் பின்னர் அதனுள்ஒரு கப் தண்ணீர் 
விடவும் 

பின்பு அதனை ஒரு மணி நேரம் ஊற 
வைக்கவும்

அதன் பின்னர் கிரைண்டர்ல் ஊறிய 
சோயாபீன்ஸ் தண்ணீர் ஆகியவற்றை 
போடவும் 

போட்டவற்றை தோசைப்பதத்தில் 
அரைக்கவும். 

அரைத்தவற்றை ஒருபாத்திரத்தில் 
போடவும் 

அதன் பின்னர் கிரைண்டர்ல் ஊறிய 
புழுங்கல் அரிசி வெந்தயம் ஆகிய
வற்றை போடவும் 

போட்டவற்றை தோசைப்பதத்தில் 
அரைக்கவும். 

அரைத்தவற்றை  அரைத்த சோயாபீன்ஸ் 
போட்ட பாத்திரத்தில் போடவும் 

பாத்திரத்தில் போட்ட இரண்டு மாவையும் 
நன்றாக கலக்கவும் , 

பின்னர் அதனுடன் உப்பு போட்டு நன்றாக 
கலக்கவும் 

கலந்தவற்றை ஒரு இரவு முழுவதும் புளிக்க 
வைக்கவும். 

சூடான தோசைக் கல்லில் எண்ணெய் பூசவும் 

அதன் பின்னர் அதில் புளித்த மாவை விடவும் 

பின்னர் இருபுறமும் எண்ணெய் விட்டு 
தோசையாக சுடவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
சோயாபீன்ஸ்தோசை தயாராகிவிடும்

சுட்ட தோசைகளை ஒரு பாத்திரத்தில்
 போடவும்

இப்படியே மற்ற தோசைகளையும் சுட்டு 
பாத்திரத்தில் போடவும் 

 அதன் பின்னர் ஒரு தட்டில்  சுத்தமான 
சுவையான சத்தான சோயாபீன்ஸ் தோசை 
தேங்காய் சட்னி  ஆகியவற்றை வைத்து 
பறிமாறவும் 

திங்கள்கிழமை


Sonntag, 3. November 2013

ஞாயிற்றுக்கிழமை


Freitag, 1. November 2013

சனிக்கிழமை