கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 30. November 2012

கருணை கிழங்கு பக்கோடா


கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள்
இருக்கின்றன. கருணை கிழங்கை
வழக்கமான வறுவல் போல் செய்யாம
ல், இப்படி பக்கோடாக்களாக செய்தால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
 அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை
 கருணை கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 1/4 கப்
சோள மாவு - 2 ஸ்பூன்
 அரிசி மாவு - 1 ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
 பூண்டு - 5
 சீரகம் - 1 ஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
 உப்பு,
எண்ணெய் - தேவைகேற்ப

 செய்முறை

கருணை கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக
 நறுக்கிகொள்ளவும்.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள்
தூள், கருணை கிழங்கு சேர்த்து வேகவைக்கவும்.

வேகவைத்த கிழங்கை தனியே வைக்கவும்

 சீரகம் மற்றும் பூண்டை அரைத்து, அதனோடு
மிளகாய் தூள், கடலை மாவு, சோள மாவு,
அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து
பேசியாவும். (இந்த கலவையில் நிறைய
தண்ணீர் சேர்க்க கூடாது.)

 தயாரித்த கலவையுடன் வேகவைத்த கருணை
கிழங்கை சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து
எண்ணெய்யில் பொரிதெடுத்தால் மொறு
மொறுப்பான சுவைமிகுந்த கருணை கிழங்கு
பக்கோடா தயார்

இக்குறிப்பை வழங்கியவர்
திரு துஷ்யந்தன் பாலேந்திரன் (பிரான்ஸ்)

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 29. November 2012

சோளக்கட்லெட்

தேவையானபொருட்கள் 
பச்சையான சோளமுத்து- 1 கப், 
கருப்பு கொண்டைக் கடலை - 1 கப், 
பொடியாகவெட்டியவெங்காயம்-தேவையானளவு
பச்சை மிளகாய்-தேவையானளவு
இஞ்சி,-தேவையானளவு
கொத்தமல்லி - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
 உப்பு -தேவையானளவு
எண்ணெய் -தேவையானளவு
கராம்பு -2.

 செய்முறை 
மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் பச்சையான
சோளமுத்துக்களை போட்டு கரகரப்பாக
 அரைக்கவும்.

 அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு
 வைக்கவும்

 அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் கொண்டைக்
 கடலையை போட்டு ஊற வைக்கவும்.

 பின்னர் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில்
 கொண்டைக் கடலை,கராம்பு, காய்ந்த மிளகாய்
ஆகியவற்றை போட்டு கரகரப்பாக அரைக்கவும்.

 அரைத்த பின்னர் அதனை எடுத்து அரைத்த
 சோளமுத்துக்கள் போட்ட பாத்திரத்தில் போடவும்.

 பின்னர் இவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய்,
இஞ்சி, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை போடவும்.

 அதன் பின்பு எல்லாவற்றையும் நன்றாக சேர்த்துப்
பிசையவும்.

 பிசைந்த பின்னர் சின்னச் சின்ன கட்லெட்டுகளாக
செய்யவும் .

 சின்னச் சின்ன கட்லெட்டுகளாக செய்த பின்னர்
அதனை சூடான தோசைக்கல்லின் மேல்வைத்து,
எண்ணெய் விட்டு, இரண்டு பக்கங்களும்
வேகவிடவும்.

 வெந்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
 சோளக்கட்லெட் தயாராகிவிடும்

 அதன் பின்னர் ஒரு தட்டில் கட்லெற் சிலவற்றை
 வைத்து அதனுடன் சட்னி சம்பல்அல்லது சோஸ்
வைத்து பரிமாறவும்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 28. November 2012

கொண்டைக்கடலை பாயாசம்


தேவையான பொருட்கள் 

கொண்டைக்கடலை - 1 கப்
சீனி - 2 கப்
பால் - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய்(உடைத்தது) - 5
கயூ (முந்திரிப்பருப்பு) - 10

 செய்முறை
உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)
கொடைக்கடலை தண்ணீர் ஆகியவற்றை
சேர்த்து மெதுமையாக அரைத்துக் கொள்ளவும்

 அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து
அதில் கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை
போட்டு பொரிக்கவும்

அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)
இறக்கிய  பின்னர் பொரித்தவற்றை வானொலி
யில்(தாட்சியில்) இருந்து எடுத்து ஒரு தட்டில்
 போட்டு ஆறவிடவும்

 அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்
தை வைத்து அதில் அரைத்தகொண்டைக்கடலை
பால் சேர்த்து காச்சவும். பால் பொங்கி வந்த
பின்பு அதனுடன் சீனியை (சக்கரையை)சேர்த்து
காச்சவும்

 இவை யாவும் கொதித்த பின்பு உடைத்த
ஏலக்காய்,நெய்யில்பொரித்த கயூ(முந்திரிப்
பருப்பு)ஆகியவற்றைப் போட்டு அடிப்பிடிக்
காமல் நன்றாக கிளறவும்

 அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை
இறக்கவும்.

 இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்து
மிக்க கொண்டைக்கடலை பாயாசம்தயாராகி
விடும்.

Donnerstag, 22. November 2012

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 20. November 2012

Freitag, 16. November 2012

கறிவேப்பிலை குழம்பு

தேவையான பொருட்கள்

எண்ணெயில் பொறித்து
அரைக்க

துவரம் பருப்பு - 1தேக்கரண்டி
பச்சைஅரிசி -1தேக்கரண்டி
 மிளகு -1தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
ள்ளி (பூண்டு) - 1/2தேக்கரண்டி
இஞ்சி-1/2தேக்கரண்டி
வரமிளகாய் -6 
கருவேப்பிலை -1கைப்பிடி

தனியாக வறுக்க 

திருவிய தேங்காய் -1கப்
வெட்டிய வெங்காயம் -1 
வெட்டிய தக்காளி-1 
புளிகரைசல் -1கப் 

செய்முறை     

அடுப்பில் தாட்சியை வைத்து 
அதில் எண்ணெய் விட்டு 
சூடாக்கவும் 

எண்ணெய சூடானதும் அதில் 
வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும் 
தக்காளியை சேர்க்கவும் . 

தக்காளி வதங்கியவுடன் 
புளிகரைசலை அரைத்த 
மசாலாவுடன் சேர்த்து
அதில் ஊற்றவும்.

அதன் பின்னர் அதனுடன் 
உப்பு மஞ்சள்தூள் ஆகியற்றை 
போடவும் நன்றாக கொதிக்க
விடவும் 

நன்றாக கொதித்து எண்ணெய் 
கறியை விட்டு பிரிந்ததும் 
தாட்சியை அடுப்பில் இருந்து 
இறக்கவும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்



Mittwoch, 14. November 2012

புதன்கிழமைவாழ்த்துக்கள்


Dienstag, 13. November 2012

செவ்வாய்கிழமைவாழ்த்துக்கள்


Montag, 12. November 2012

திங்கள்கிழமைவாழ்த்துக்கள்


Sonntag, 11. November 2012

முந்திரி முறுக்கு

முந்திரி முறுக்கு சுத்தமானது மிகமிக
சுவையானது. செய்வதற்கும் மிகவும்
இலகுவானது.இதில் இலிப்பிட்டு
கார்போவைதரேட்நார்சத்து கொழுப்பு
சத்து புரதசத்து தியமின்சத்து ரைப்போ
ஃப்ளேவின்சத்து அயோடின்சத்து விற்ற
மின்சத்து  B3 B5 B6 B9 C, கல்சியம்சத்து
மக்னீஷியம்சத்து பொஸ்பரஸ்சத்து
இரும்புசத்து பொட்டாஷியம் போன்ற
பல சத்துகள் காணப்படுகிறது. முந்திரி
(cashew)யின் சுவையை எல்லோரும்
விரும்பி உண்பார்கள். ஆகவே இதன் 
சுவையையும், இதில் காணப்படும் சத்து
களையும் அறிய முந்திரி முறுக்கை செய்து 
பார்த்து சாப்பிட்டு அறியவும்.

தேவையான பொருட்கள் 
(ஊறிய, அரைத்த)முந்திரிவிழுது - அரை கப்
அரிசிமா - ஒரு கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு (விரும்பினால்)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் (ஊறி, அரைத்த)முந்திரிவிழுது
அரிசிமா, நெய், எள், உப்பு, பெருஞ்சீரகம்(சோம்பு)
ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

மாவை கலக்கிய பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை) வைத்து எண்ணெய் விட்டு
சூடாக்கவும்.

எண்ணெய் சூடாகிய பின்பு முறுக்கு உரலில்
முறுக்கு அச்சு போடவும்.

பின்பு கலந்து வைத்திருக்கும் மாவில் சிறிதளவு
எடுத்து அதனை அச்சு போட்ட முறுக்கு உரலில்
போடவும்.

பின்பு சூடாகிய எண்ணெயில் அச்சில் போட்ட
மாவினை முறுக்கு வடிவில் பிழியவும்.

எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்த மாவினை
போட்ட பின்பு அதனை பொன்னிறமாக பொரித்து
எடுக்கவும்.

பொன்னிறமாக பொரித்த முறுக்கினை ஒரு
பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

இப்படியே மிகுதியாக உள்ள எல்லா மாவினையும்
பொரித்து எடுத்து தட்டில் வைக்கவும்.

இப்போது சுவையான சத்தான முந்திரிமுறுக்கு
தயாராகி விட்டது.

ஒரு தட்டில் சுவையான சத்தான முந்திரி முறுக்கு
சிலவற்றை வைத்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள்- 
நன்றாக ஊறிய அரைத்த முந்திரி விழுது
எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

எச்சரிக்கை - 
முந்திரி அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

புளிச்சாதம்

இப்புளிச்சாதத்தில் காபோவைதரேற்று 
கொழுப்புச்சத்து, உயிர்சத்து,புரதச்சத்து,
மினரல் போன்ற பல சத்துக்கள்  அடங்கி
உள்ளது. அத்துடன் சுத்தமானதும் சுவை
யானதும் ஆகும். ஆகவே இதன் சுவையை 
அறிய விரும்பினால் இதனை செய்து 
சாப்பிட்டு அறியலாம் . 

தேவையான பொருட்கள்
பச்சை அரிசி அல்லது சம்பா அரிசி - 1 சுண்டு
துப்பரவாக்கிய கடலைப்பருப்பு - 50கிராம்
பழப்புளி - பாக்களவு 
சிறிது சிறிதாக வெட்டிய செத்தமிளகாய் - 5 
சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1            
சிறிது சிறிதாக வெட்டிய உருளைகிழங்கு - 1 
மாஜரீன், பட்டர்அல்லது நெய் - தேவையானளவு
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி 
மிளகுத்தூள் -1 தேக்கரண்டி 
கடுகு -சிறிதளவு 
பெருஞ்சீரகம் (சோம்பு) - சிறிதளவு     
கறிவேப்பிலை - தேவையானளவு 
உப்பு - தேவையானளவு 
தண்ணீர் - தேவையானளவு 
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை


ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு நன்றாக ஊறவிடவும்,

அதன் பின்னர் அடுபில் பானையை வைத்து அல்லது ரைஸ்குக்கரின் சட்டியில்  அரிசி ,கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு அவியவிடவும்.

இவையாவும் நன்றாக அவிந்ததும் கஞ்சியை வடித்துவிடவும் அல்லது ஈரப்பதன் நீங்க ஊறவிடவும்.

அதன் பின்னர் அடுப்பில் இருந்து அல்லது ரைஸ் குக்கரில் இருந்து இப்பாத்திரத்தினை எடுத்து இறக்கிவைக்கவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு ஆறவிடவும்.

பின்னர்  சிறிது சிறிதாக வெட்டிய உருளைக்கிழங்கினை ஒரு பாத்திரத்தில் போடவும்.

போட்ட பின்னர் அப்பாத்திரத்தில் உப்பு , மிளகாய்த்தூள் போட்டு பிரட்டவும்.

பிரட்டிய பின்னர் அடுப்பில் ஒரு தாட்சியை வைத்து அதில் எண்ணையை விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடான பின்னர் சிறிது சிறிதாக வெட்டி பிரட்டிய உருளைக் கிழங்கினை போட்டு மொருக பொரிக்கவும்.

பொரித்த பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

போட்டு வைத்த பின்னர் ஒரு தம்ளரில் பழப்புளி, தண்ணீர் ஆகியவற்றை போட்டு கரைக்கவும் (அரைத்தம்ளர் அளவு கரைசல்)

பின்னர் அடுபில் தாச்சியை வைத்து அதில் மாஜரீன் அல்லது நெய்யை விட்டு அதில் கடுகை போட்டு வெடிக்கவிடவும்.

கடுகு வெடித்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டிய செத்தமிளகாய் ,சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதங்கவிடவும்.

அவை ஓரளவு வதங்கிய பின்பு  பெருஞ்சீரகம் (சோம்பு), கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகுதூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.

அவையாவும் நன்றாக வதங்கிய பின்னர் அதனுடன் அரை தம்ளர் புளிக்கரைசலை விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

கொதிக்கவிட்ட பின்னர்  இவற்றுடன் உப்பை சேர்க்கவும்.

சேர்த்த பின்னர் அவற்றை நன்றாக கொதிக்கவிடவும்.

இவை யாவும் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் போது இதில் ஆறவைத்திருக்கும் சோறு (சாதம்) பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கினையும் போட்டு நன்றாக கிளரி விடவும்.

இவையாவும் நன்றாக சேர்ந்த பின்னர்  அதில் உள்ள தண்ணீரை வற்ற விடவும்.

அதில் உள்ள தண்ணீர் யாவும் வற்றிய பின்னர் இப்பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு நன்றாக ஆறவிடவும்.

அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான புளிச்சாதம் தாயாராகிவிடும்.

சுத்தமான சுவையான சத்தான புளிச்சாதம் தயாரான பின்னர் ஒரு தட்டில்  தேவையானளவு இப் புளிசாததை வைத்து  அதனுடன் சிறிதளவு இஞ்சி சம்பலை அல்லது ஏதாவது இறைச்சி கறியை வைத்து பறிமாறவும்.

இக்குறிப்பினை எமக்கு வழங்கியவர் - 

திருமதி சுமனா பவானந் (ஜேர்மனி)

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 9. November 2012

சனிக்கிழமை வாழ்த்துக்கள்



Freitag, 2. November 2012

காளான் - சிக்கன் தொக்கு

 தேவையான பொருட்கள்

 கோழி - 1/2 கிலோ
குடை மிளகாய் - 150 கிராம்
காளான் - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் இடித்தது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பற்கள்

 செய்முறை

கோழித் துண்டுகளைச் சுத்தம் 
செய்துவேக வைத்துக் கொள்ளவும்
.
சாம்பார் வெங்காயத்தை உரித்து 
கீறிக்கொள்ளவும்,

பச்சை மிளகாயை இடித்துக் 
கொள்ளவும்.

இஞ்சி,உள்ளி (பூண்டு) தட்டி 
எடுத்துக் கொள்ளவும்.

ஒரு தாட்சியில் எண்ணெய் 
விட்டு சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில்  
வெங்காயத்தை போட்டு 
நன்றாக வதக்கவும்

பின் நறுக்கிய குடைமிளகாய், 
காளான்கோழி ஆகியவற்றை 
போட்டு வதக்கவும்.

தொடர்ந்து தட்டிய மிளகாய், 
இஞ்சி பூண்டு ஆகியவற்றை 
சேர்த்து வதக்கவும்

இவை ஒன்று சேர்ந்து வேகுமளவு 
நீர் சேர்த்து,பின்னர் போதுமான 
அளவு உப்பு சேர்த்துக்கிளறவும்.

நன்றாக வெந்தவுடன் மிளகுத்தூள் 
சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Donnerstag, 1. November 2012

நெல்லிக்காய் தயிர் பச்சடி



சுத்தமான சுவையான விற்றமின் சி 
சத்து நிறைந்த நெல்லிக்காய் தயிர் 
பச்சடி 

தேவையானவை: 
 நெல்லிக்காய் / நெல்லிக்கனி- 6
 தயிர்: ஒரு கப் 
தேங்காய்த்துருவல்: கால் கப் 
பச்சை மிளகாய்: இரண்டு 
இஞ்சித்துண்டு: ஒன்று 
உப்பு: வேண்டிய அளவு 

 தாளிக்க: 
 கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை 
தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 

 செய்முறை: 
 நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும்

பின்னர் கிரைண்டரில் கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கிய நெல்லிக்கனிகள்,
தேங்காய்பூ,வெட்டிய பச்சை மிளகாய்,
தோல்நீக்கிநசுக்கிய இஞ்சி ஆகியவற்
றையும் போட்டு நன்றாக அரைக்கவும் 

அரைத்த ,பின்னர் அவற்றுடன்  தயிர் உப்பு 
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
தாளிக்காத நெல்லிக்காய் தயிர் பச்சடி 
தயாராகிவிடும்

 விரும்பினாள்
 அடுப்பிள் தாட்சியை வைத்து அதில் 
நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகை 
போட்டு வெடிக்கவிடவும்

கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயம் 
 தாளிக்காத பச்சடி ஆகியவற்றை போட்டு 
ஒன்றாகக் கலந்து, கிளறிவிடவும் 

அதன் பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை 
 வெளியே எடுத்து வைக்கவும்  

அதன் பின்னர் விற்றமின் சி சத்து நிறைந்த  
பச்சடி தயார்