கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 31. August 2011

சோயா இட்லி


சோயா இட்லி சுவையானதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரையும் விரும்பி உண்ணும் உணவு
ஆகும். அத்துடன் இது ஒரு பாரம்பரிய உணவாகும்
இதில் விற்றமின், கல்சியம், மினரல்,பொட்டாஷியம்
ஆகிய பலசத்துகள் அடங்கியது.அத்துடன்
செய்வதிற்கு இலகுவானதுமாகும் ஆகவே இதனை
செய்து பார்த்து இதன் சுவையைஅறியவும்.

தேவையான பொருட்கள் 

சோயா  - அரை சுண்டு
ரவை - ஒரு சுண்டு
ஜஸ் கட்டி - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
அப்பச்சோடா - அரை தேக்கரண்டி(விரும்பினால்)
உப்பு - தேவையானளவு

செய்முறை 

சோயாவை(அரை - ஒரு) மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் ரவையை
போட்டு அதை பொன்னிறமாக வறுக்கவும்.

வறுத்த ரவையை ஆறவிடவும்.

கிரைண்டரில்(மிக்ஸியில்)சோயாவை போட்டு
அதனுடன் தண்ணீர் விட்டு அதை இட்லி பதத்திற்கு
அரைக்கவும்.

நன்றாக இட்லி பதத்திற்கு அரைத்த பின்பு அதை
எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதன் பின்பு கிரைண்டரில் (மிக்ஸியில்) வறுத்த
ரவையுடன்,தண்ணீரை சேர்த்து கட்டியில்லாமல்
அடித்து கலக்கவும்.

அரைத்த சோயாவுள்ள பாத்திரத்தில் கட்டியில்லாமல்
 அடித்து கலந்த ரவையை சேர்த்து கலக்கவும்.

பின்பு அதனுடன் அப்பச்சோடா, ஐஸ்கட்டிகளை
சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்த கலவையை புளிக்கவைக்கவும்
(6 - 8 மணித்தியாலம்).

கலவை புளித்ததும் அதில் உப்பை போட்டு
கலக்கவும்.

பின்பு அடுப்பில் இட்லி செய்யும் பாத்திரத்தின்
கீழ் பகுதியின் உள் முக்கால் பகுதிக்கு தண்ணீர்
விட்டு அதனுள் இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன் மேற் மூடியால் மூடி பின்பு
அதனை சூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த
மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு
குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு
குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.

அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள்
 தயாராகிவிடும்.

அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு
பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம்
மூடி வைக்கவும்.

பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும்
 அவிக்கவும்.

பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன்
சம்பல் அல்லது சாம்பாரு அல்லது கறி அல்லது
இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.


மாற்று முறை 
ரவைக்கு பதிலாக 1 + 1/2 சுண்டு இட்லி அரிசி அல்லது
பச்சரிசியை பாவிக்கலாம்.

உருளைக்கிழங்கு ரோஸ்ட் -1

சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட் கார்போவைதரேற்று நிறைந்த ஒர் உணவு ஆகும்.அத்துடன் சிறுவர் முதல் வயோதிபர் வரை இலகுவாக உண்ணக்கூடிய ஓர் உணவாகும் .

 தேவையான பொருட்கள் 
 வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 கப்
பாண் - 2 துண்டு
 தேசிக்காய் சாறு - ஒரு தேக்கரண்டி
 மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

 செய்முறை 
 1 )ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பாண், தேசிக்காய்சாறு, மிளகுத்தூள்,மிளகாய்த்தூள்,கரம்மசாலாத் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும்-

 2 )போட்ட பின்னர் அவை யாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஓரளவு நன்றாக குழைக்கவும்(பிசையவும் ).

 3) ஓரளவு நன்றாக பிசைந்த(குழைத்த) பின்னர் அவற்றை தட்டி சிறு சிறு துண்டுகளாக்கவும்.

 4 ) அதன் பின்னர் அடுப்பில் தோசைக் கல்லினை வைத்து சூடாக்கவும்.

 5 )சூடாக்கிய தோசைக்கல்லில் சிறிது அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

 6 )எண்ணெய் சூடானதும் குழைத்து சிறு சிறு துண்டுகளாக்கிய மாவை சூடான தோசைக்க்கல்லில் போட்டு நன்றாக ரோஸ்ட் போல செய்யவேண்டும்.

 7 )நன்றாக ரோஸ்ட் போல செய்த பின்னர் இவற்றை தோசைக்கல்லில் இருந்து வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

 8 )இப்போது சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயாராகி விட்டது.

 9 )அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான சத்தான உருளைக்கிழங்கு ரோஸ்ட்டினை வைத்து பரிமாறவும்.

 குறிப்பு 

 (1) இதை செய்தவுடன் சுட சுட சாப்பிட்டால் இதன் சுவையே தனியானது . 

(2)இதை பணிஸின்(Bun) உள்ளே வைத்துச் சாப்பிடலாம்.

 (3)இதை சர்க்கரை நோயாளர் மாரடைப்பு (இருதய) நோயாளர் வைத்தியரின் ஆலோசனையுடன் உண்ணலாம்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 30. August 2011

கடலைமா முறுக்கு

பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
கடலைமா முறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
கடலை மா(அரித்தது) - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமாவு (மைதாமாவு) - 2 சுண்டு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
பட்டர் - (1/2 - 1) தேக்கரண்டி (விரும்பினால்)
நன்றாக கொதித்த தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை 
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்மிளகாய்
(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு மிக மிக சிறிய துண்டுகளாக
அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அவித்த
கோதுமைமாவு(மைதாமா), உப்பு, சீரகம், எள்,
இஞ்சி விழுது, உள்ளி(பூண்டு) விழுது, அரைத்த
செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறிவேப்பிலை
துண்டுகள், பட்டர் ஆகியவற்றை நன்றாக
கொதித்த தண்ணீர் சேர்த்து பிசைந்து(குழைத்து)
கொள்ளவும் (இடியப்பமா பதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.

 மாற்று முறை - 
கொதித்த தண்ணீருக்கு பதிலாக சிறிதளவு
பாலை சூடாக்கி அதனை கலந்தமாவில்
விட்டு குழைக்கலாம்.

சோயா முறுக்கு





பாடசாலை விடுமுறை காலங்களில்
சிறுவர்கள் உண்ண சத்துக்கள் நிறைந்த
ஒரு உ.ணவு
தேவையான பொருட்கள்

சோயா மா - 4 கப்
அரிசி மா - 1கப்
வறுத்தஉளுத்தம்மா - 1மேசைக்கரண்டி
நெய் அல்லது பட்டர் - 1/4 கப்
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை

1.நெய் அல்லது பட்டரை லேசாக சூடாக்கி அதனுடன்
சோயாமா,அரிசிமா,உளுத்தம்மா,உப்பு, சீரகம், எள்
சேர்த்து பிசைந்து(குழைத்து)கொள்ளவும்.
2.முறுக்கு உரலில் அச்சு போட்டு குழைத்தவற்றை
அதில் நிரப்பவும்.
3.வாணலியில் (தாச்சியில்) எண்ணெய் சூடாக்கி
அதில் முறுக்கு உரலில் மாவை பிழிந்து பொன்
நிறமாக பொரித்து எடுக்கவும் .
குறிப்பு
இதயநேயாளர் வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும்.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 29. August 2011

மைசூர் வடை




சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பகூடிய, சத்துகள் நிறைந்த சுவையான
சிற்றுண்டியே மைசூர் வடை ஆகும்.

தேவையான பொருட்கள் 
மைசுர்பருப்பு  - ஒரு சுண்டு
உப்பு - தேவையான அளவு
பெரியவெங்காயம்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - ஒன்று
பச்சைமிளகாய்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில்  மைசூர் பருப்பை போட்டு அதன்
மேல் ஒரளவு கொதித்தநீரை)(நகச்சூடு)
விடவும். ( மைசுர்பருப்பை விட தண்ணீர்
கூடுதலாக இருக்கவேன்டும்).

அதன் பின்பு அதை (கால் -அரை) மணி
நேரம் ஊறவிடவும்.

(கால்-அரை) மணித்தியாலங்களுக்கு பின்பு மைசுர்பருப்பில்
உள்ள தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்
(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு
தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்
(நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர்
சேர்க்ககூடாது).

பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).

அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த மைசுர்பருப்புடன் சிறிய
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி(பூண்டு),நசுக்கியஇஞ்சி
ஆகியவற்றை கலக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து
அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு அதை நன்றாக
கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம்
கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி
அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டி
அதன் நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும்.
இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு
பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து
விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி
நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால்
வடையின் உட்பகுதி நன்றாக அவியாது)

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த
எண்ணெயில் போட்டு நன்றாக பொரிக்கவும்

பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்பு அதை எடுத்து சிறிய தட்டில் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை -
மைசுர்பருப்பு அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்று முறை -
1 ::கபேச்(கோவா)சேர்த்தும் செய்யலாம்.
3 :உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.
4 :விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால்
தேக்கரண்டி சேர்க்கலாம்.
5 .வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்துவிட்டு
தேவையான நேரத்தில் அதை எடுத்து செய்யலாம்
6 .அல்லது வடையை செய்து விட்டு டீபீரீசரில் வைத்து
தேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ அவனில்
வைத்து சூடாக்கி உண்ணலாம் .

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1 .வடையின் உட்பகுதி  நன்றாக அவிந்தது விட்டதா
 என்பதை கவனிக்கவும்.

2.வெங்காயம் சேர்த்தவுடன் வடையை பொரிக்கவும்
(கனநேரம் வைத்திருக்ககூடாது. வைத்திருந்தால்
வெங்காயத்தினுள் உள்ள நீர் வெளியேறி வடையை
பழுதாக்கிவிடும்.

இக்குறிப்பை கலைக்கழகத்திற்கு கொடுத்தவர் 
திருமதி நகுலேஸ்வரி ரவீந்திரன் (ஜேர்மனி )



மைசூர் வடை



சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பகூடிய, சத்துகள் நிறைந்த சுவையான
சிற்றுண்டியே மைசூர் வடை ஆகும்.

தேவையான பொருட்கள் 

மைசுர்பருப்பு  - ஒரு சுண்டு
உப்பு - தேவையான அளவு
பெரியவெங்காயம்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - ஒன்று
பச்சைமிளகாய்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில்  மைசூர் பருப்பை போட்டு அதன்
மேல் ஒரளவு கொதித்தநீரை)(நகச்சூடு)
விடவும். ( மைசுர்பருப்பை விட தண்ணீர்
கூடுதலாக இருக்கவேன்டும்).

அதன் பின்பு அதை (கால் -அரை) மணி
நேரம் ஊறவிடவும்.

(கால்-அரை) மணித்தியாலங்களுக்கு பின்பு மைசுர்பருப்பில்
உள்ள தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்
(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு
தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்
(நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர்
சேர்க்ககூடாது).

பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).

அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த மைசுர்பருப்புடன் சிறிய
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி(பூண்டு),நசுக்கியஇஞ்சி
ஆகியவற்றை கலக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து
அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு அதை நன்றாக
கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம்
கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி
அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டி
அதன் நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும்.
இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு
பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து
விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி
நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால்
வடையின் உட்பகுதி நன்றாக அவியாது)

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த
எண்ணெயில் போட்டு நன்றாக பொரிக்கவும்

பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்பு அதை எடுத்து சிறிய தட்டில் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை -
மைசுர்பருப்பு அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்று முறை -
1 ::கபேச்(கோவா)சேர்த்தும் செய்யலாம்.
3 :உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.
4 :விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால்
தேக்கரண்டி சேர்க்கலாம்.
5 .வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்துவிட்டு
தேவையான நேரத்தில் அதை எடுத்து செய்யலாம்
6 .அல்லது வடையை செய்து விட்டு டீபீரீசரில் வைத்து
தேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ அவனில்
வைத்து சூடாக்கி உண்ணலாம் .

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1 .வடையின் உட்பகுதி  நன்றாக அவிந்தது விட்டதா
 என்பதை கவனிக்கவும்.

2.வெங்காயம் சேர்த்தவுடன் வடையை பொரிக்கவும்
(கனநேரம் வைத்திருக்ககூடாது. வைத்திருந்தால்
வெங்காயத்தினுள் உள்ள நீர் வெளியேறி வடையை
பழுதாக்கிவிடும்.


இக்குறிப்பை கலைக்கழகத்திற்கு கொடுத்தவர் 
திருமதி நகுலேஸ்வரி ரவீந்திரன் (ஜேர்மனி )



திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 28. August 2011

இலங்கை உளுந்து வடை


இலங்கையில் மிகபிரபல்யமான பாரம்பரிய,
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பகூடிய, சத்துகள் நிறைந்த சுவையான
சிற்றுண்டியே இலங்கை உளுந்து வடை ஆகும்.

தேவையான பொருட்கள்
உளுந்து - ஒரு சுண்டு
உப்பு - தேவையான அளவு
பெரியவெங்காயம்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - ஒன்று
பச்சைமிளகாய்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதன்
மேல் ஒரளவு கொதித்தநீரை)(நகச்சூடு)
விடவும். (உளுந்தினை விட தண்ணீர்
கூடுதலாக இருக்கவேன்டும்).

அதன் பின்பு அதை (கால் -அரை) மணி
நேரம் ஊறவிடவும்.

(கால்-அரை) மணித்தியாலங்களுக்கு பின்பு உளுந்தில்
உள்ள தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்
(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு
தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்
(நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர்
சேர்க்ககூடாது).

பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).

அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த உளுந்துடன் சிறிய
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி(பூண்டு),நசுக்கியஇஞ்சி
ஆகியவற்றை கலக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து
அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு அதை நன்றாக
கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம்
கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி
அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டி
அதன் நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும்.
இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு
ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து
விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி
நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால்
வடையின் உட்பகுதி நன்றாக அவியாது)

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த
எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக
பொரிக்கவும்

பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்பு அதை எடுத்து சிறிய தட்டில் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை -
உளுந்து அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

மாற்று முறை -
1 :கருப்பு உளுந்துக்கு பதிலாக வெள்ளை உளுந்திலும்
செய்யலாம்,
2 :கபேச்(கோவா)சேர்த்தும் செய்யலாம்.
3 :உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.
4 :விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால்
தேக்கரண்டி சேர்க்கலாம்.
5 .வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்துவிட்டு
தேவையான நேரத்தில் அதை எடுத்து செய்யலாம்
6 .அல்லது வடையை செய்து விட்டு டீபீரீசரில் வைத்து
தேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ அவனில்
வைத்து சூடாக்கி உண்ணலாம் .

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1 .வடையின் உட்பகுதி  நன்றாக அவிந்தது விட்டதா
 என்பதை கவனிக்கவும்.

2.வெங்காயம் சேர்த்தவுடன் வடையை பொரிக்கவும்
(கனநேரம் வைத்திருக்ககூடாது. வைத்திருந்தால்
வெங்காயத்தினுள் உள்ள நீர் வெளியேறி வடையை
பழுதாக்கிவிடும்.

கறிமிளகாய்வெண்டிக்காய்கறி


1.கறிமிளகா(குடைமிளகா)யில் 
மாப்பொருள் ,வெல்லம்

நார்ப்பொருள்  

கொழுப்பு ,புரதம்,தயமின்,ரிபோஃபிளாவின்
,நியாசின் ,பான்டோதெனிக் அமிலம் ,உயிர்
ச்சத்து -பி6 ,இலைக்காடி(உயிர்ச்சத்து பி9),
உயிர்ச்சத்து சி  கல்சியம்,இரும்பு ,மக்னீசியம்,
பொஸ்பரஸ்,பொட்டாசியம் ,துத்தநாகம்
ஆகிய சத்துக்களும்


2.வெண்டிக்காயில் 
மாப்பொருள்,வெல்லம்,நார்ப்பொருள்,கொழுப்பு,
புரதம் நீர் ,கல்சியம் ஆகிய சத்துக்களும்

அத்துடன்
வேறு பல சத்துக்களும்,சுவையும்  உடையது
சுத்தமானது செய்வதிற்கு இலகுவானது
கறிமிளகாய் வெண்டிக்காய் கறி ஆகும்


தேவையான பொருட்கள் 
சிறிதுசிறிதாக வெட்டிய கறிமிளகாய்(குடைமிளகாய்)-1
சிறிதுசிறிதாக வெட்டிய வெண்டிக்காய் -1/4 கிலோ
சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1
ஸ்ரீ லங்கா மிளகாய்த்தூள்-(2-4) மேசைக்கரண்டி
சிறிது சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு -தேவையானளவு
எண்ணெய் -தேவையானளவு
தேசிக்காய் சாறு(எலும்மிச்சம் சாறு ) - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உழுத்தம்பருப்பு - 1தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு)-1தேக்கரண்டி
பால்(பசுஅல்லது தேங்காய் ) . 2மேசைக்கரண்டி


செய்முறை 
1.அடுப்பில் தாச்சியை அல்லது வாணலியை வைத்து
    அதில் எண்ணெயை விட்டு சூடாக்கவும்-

2.எண்ணெய் சூடான பின்னர் அதில் கடுகை போட்டு
    வெடிக்கவிடவும்.

3.கடுகு வெடித்த பின்னர் அதனுடன் பெருஞ்சீரகம்
   (சோம்பு ) கறிவேப்பிலை,வெங்காயம் ஆகியவற்றை
   போட்டு தாளிக்கவும்.

4.தாளித்த பின்னர் அதனுடன் உழுத்தம்பருப்பை போட்டு
   சிறிது  நேரம் பொரியவிடவும்.

5.அதன் பின்னர் அதனுடன் வெண்டிக்காயை  போட்டு
   நன்றாக பிரட்டி நன்றாக பொரிந்து அவிய விடவும்.

6..வெண்டிக்காய் நன்றாக பொரிந்துஅவிந்ததும் அதனுடன்
    கறிமிளகாயை (குடைமிளகாயை) போட்டு  நன்றாக
    பிரட்டி ஓரளவு பொரிந்து நன்றாக அவிய விடவும்.

7.அதன் பின்னர் இவற்றுடன்  ஸ்ரீ லங்கா மிளகாய்த்தூளை ,
    போட்டு அதன் பச்சைவாசனை போகும்வரை பிரட்டவும்.

8.பிரட்டிய பின்னர் அதனுடன் உப்பு,பால் (பசுஅல்லது
   தேங்காய் ) ஆகியவற்றை போட்டு பிரட்டி  சிறிது நேரம்
   பொரிந்து அவியவிடவும்.

9.இவையாவும் பொரிந்து அவிந்த பின்னர் இவற்றுடன்
   கறிவேப்பிலை,தேசிக்காய் சாற்றினை  (எலும்மிச்சம்
   சாற்றினை)விட்டு நன்றாக கலக்கவும்.

10. கலந்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான கறி
      மிளகாய் வெண்டிக்காய் கறி  தயாராகிவிடும் .

11.அதன் பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம் ),தோசை .
      பாண்,ரொட்டி,சப்பாத்தி இட்லி ஆகியவற்றுடன்
     வெண்டிக்காய் கறிமிளகாய்(குடைமிளகாய்) கறியை
     சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் . 

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 27. August 2011

கொழுக்கட்டையின் மேல் மாவை


கொழுக்கட்டையின் மேல் மாவை
செய்யும் போது தண்ணீருடன் பாலை
சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக
இருக்கும்.

கொய்யாப்பழ குழம்பு


கொய்யாப்பழ குழம்பு

நறுக்கப்பட்ட கொய்யாப் பழங்கள்-2 ;
கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன்;
சிவப்பு மிளகாய்த்தூள்-2 ஸ்பூன் ;
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்;
கடுகு-1/4 ஸ்பூன்;
உளுத்தம்பருப்பு- ½ ஸ்பூன்;
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
கருவேப்பிலை- தேவையான அளவு;
வெல்லப்பொடி –கொஞ்சம்:

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்

அதன் பின்னர் அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

எண்ணைய் சூடான பின்னர் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் 

தாளித்தபின்னர் அதனுடன் நறுக்கிய கொய்யாத்துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். 

நன்றாக வதக்கிய பிறகு அதனுடன்  கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து  ஊற்றவும். 

அதன் பின்னர் நன்றாக கலக்கிவிடவும்.

 நன்கு கலக்கிவிட்டபின், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்  உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு கொதிக்கவிட வேண்டும்.

 கொதித்தபின் இவற்றுடன் கருவேப்பிலை ,கொத்தமல்லி ஆகியவற்றை தூவி விட வேண்டும்.

இதன் பின்னர் இவற்றுடன் கொஞ்சம் வெல்லப்  பொடியைப் போட்டு அடுப்பில் இருந்து இறக்கவேண்டும்.

குறிப்பு
கொய்யாப் பழங்களை , முழுவதும் பழங்களாகவோ, முழுவதும் காய்களாகவோ இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடையே மீடியமாக இருக்கவேண்டும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 25. August 2011

ரவைகேசரி-1

"கேசரியானது செய்வதிற்கு இலகுவானது
சுத்தமானது சுவையானது இனிப்பானது
அழகானது ரவையில் செய்யப்பட்டது
அத்துடன் இதில் கொழுப்புசத்து,சீனிசத்து,
மினரல்சத்து போன்ற பலசத்துக்கள் அடங்கியது
அத்துடன் சிறுவர் முதல் வயதானவரை
விரும்பியும் சாப்பிடுவதிற்கு இலகுவான ஒரு
தேனீர் நேர சிற்றுண்டியும் ஆகும்".


தேவையான பொருட்கள்
ரவை-1சுண்டு
சீனி-1சுண்டு
தேங்காய்ப்பால் or பசுப்பால்-1 +1/2தம்ளர் அல்லது 1 சுண்டு
நெய் ,பட்டர் அல்லது மாஜரீன்-25கிராம்
முந்திரியவற்றல் (பிளம்ஸ்) -25கிராம்
இரண்டாக உடைத்த முந்திரியபருப்பு(கயூ)-25கிராம்
கேசரிப்பவுடர் -தேவையானளவு
ஏலக்காய்தூள்-2தேக்கரண்டி


செய்முறை
முதலில் வாய் அகண்ட ஒரு
தாம்பாளத்தில் அல்லது தட்டில் 
1கிராம் நெய்,பட்டர் அல்லது 
மாஜரீனை போடவும்.

அதன் பின் அதனை அப்பாத்திரம் 
முழுவதிலும் படுமாறு நன்றாக 
பூசவும்.

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
அல்லது வாணலியைவைத்து சூடாக்கவும்.

சூடாக்கியபின் அதில் ரவையை போடவும்.

அதன் பின்னர் ரவையை மர அகப்பையால் 
அடிப்பிடிக்காமல் வறுக்கவும்.

ரவையை ஒரளவு பொன்னிறமாக 
வறுக்கவும்.

ரவை பொன்னிறமாக வறுக்கப்பட்ட 
பின்னர் அதனை ரவையுள்ள தாச்சியை 
அல்லது வாணலியை அடுப்பிலிருந்து 
இறக்கவும்.

அதன் பின்னர் பொன்னிறமாக வறுத்த 
ரவையை வேறு ஒரு பாத்திரத்தில்  
போட்டு ஆறவிடவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு தாட்சியை 
அல்லது வாணலியை வைத்து அதில் 
10 கிராம் நெய் ,பட்டர் அல்லது மாஜரீனை 
போட்டு சூடாக்கவும்.

நெய் ,பட்டர் அல்லது மாஜரீனை சுடாக்கிய 
பின்னர் அதில் உடைத்த முந்திரிய பருப்பை
(கயூவை) அதில் போட்டு ஓரளவுபொரிக்கவும்.

ஓரளவு பொரிந்தபின்னர் அதில் முந்திரிய
வற்றலை போட்டு (கருகாமல்) ஓரளவு 
பொரிக்கவும்.

பொரித்தபின்னர் முந்திரியப்பருப்பு 
முந்திரியவற்றல் போடப்பட்டுள்ள 
பாத்திரத்தை அடுப்பில் இருந்து 
இறக்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் 
முந்திரியப்பருப்பு முந்திரியவற்றலை 
வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு 
வைக்கவும்.

அதன்பின்னர் ஒருபாத்திரத்தில் தேங்காய் 
பாலுடன் அல்லது பசுப்பாலுடன் தேவையா
னளவு கேசரிப்பவுடரை நன்றாகவும் கட்டிப்
படாமலும் கலக்கவும்.

கலந்த பின்னர் அப்பாத்திரத்தை அடுப்பில் 
வைத்து நன்றாக கொதிக்கவிடவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் பொன்னிற
மாக வறுத்த ரவையை போடவும்.

வறுத்த ரவை போட்டபாத்திரத்தினுள் 
சீனியை போட்டு நன்றாக கலக்கவும்.
(எல்லா ரவையுடனும் சீனி நன்றாக 
கலந்துவிட்டதா என கவனிக்கவும்)

அதன் பின்னர் கேசரிப்பவுடர் கலந்த 
பால் நன்றாக கொதித்த பின்னர் சீனி
யுடன் கலந்துவைத்துள்ள ரவையை 
கேசரிப்பவுடர் கலந்து கொதிக்க
வைத்துள்ள பாலுடன் கொஞ்சம்
கொஞ்சமாக போட்டு கட்டிப்படாமல்
நன்றாக கிளறி ஓரளவு அவிய விடவும்.

ஓரளவு அவிந்த பின்னர் அதனுடன் நெய்,
பட்டர் அல்லது மாஜரீனில் பொரித்து 
வைத்துள்ள முந்திரியப்பருப்பு (கயூ) முந்திரி
யவற்றல் ஆகியவற்றை போட்டு நன்றக 
கலந்து அவியவிடவும்.

அதன் பின்னர் அதனுடன் ஏலக்காய் தூளை 
கலக்கவும்.

அதன் பின்னர் மிகுதியாக உள்ள 14கிராம் 
நெய்,பட்டர் அல்லது மாஜரினை  சிறிது 
சிறிதாக கலக்கவும். 

இவையாவும் சேர்ந்து அடிப்பிடிக்காமல் 
இறுகி திரளும்பதம் வந்ததும்.

அதனை அடுப்பிலிருந்து இறக்கி நெய்,
பட்டர் அல்லது மாஜரீன் பூசிய பாத்திரத்தில் 
போடவும்.

போட்டபின் சூட்டுடன் ஓரளவு உயரத்தில் 
அதனை நன்றாக பரப்பவும்.

பரப்பிய பின்னர் ஒரு கத்தியால் தேவைனளவு
துண்டுகளாக  ஓரளவு உயரத்தில் கீறிவிடவும்.

அதன் பின்னர் அதனை ஆறவிடவும்.

விரும்பினாள் குளிர்சாதனப்பெட்டியில்
வைத்து குளிரேற்றி ஆறவிடலாம்.

ஆறிய பின்னர் சுவையான சுத்தமான பார்ப்பதிற்கு
அழகான கேசரி தயாராகிவிடும்.

அதன் பின்னர் தேவையானளவு துண்டுகளை
வெட்டி ஒரு தட்டில் வைத்து பறிமாறவும் 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 24. August 2011

புதன்கிழமை வாழ்த்துக்கள்