கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 31. März 2013

திருமணகேக் அலங்காரம்


ஞாயிற்றுக்கிழமைவாழ்த்துக்கள்,


Donnerstag, 28. März 2013

திருமணகேக் அலங்காரம்


வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 24. März 2013

திருமணகேக் அலங்காரம்


காளான் - சிக்கன் தொக்கு


காளான் - சிக்கன் தொக்கு : தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ குடை மிளகாய் - 150 கிராம் காளான் - 100 கிராம் சாம்பார் வெங்காயம் - 150 கிராம் பச்சைமிளகாய் - 4 மிளகுத்தூள் இடித்தது - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணை - ஒரு குழிக்கரண்டி இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பற்கள் செய்முறை * சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்து கீறிக்கொள்ளவும், பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும். * இஞ்சி, பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும். * பின் நறுக்கிய குடைமிளகாய், காளான், சிக்கன் இவற்றை வதக்கவும். * தொடர்ந்து தட்டிய மிளகாய், இஞ்சி பூண்டு இவை சேர்த்து வதக்கவும் * இவை ஒன்று சேர்ந்து வேகுமளவு நீர் சேர்த்து, பின்னர் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். * நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 23. März 2013

அவித்த ஆம்லெட்


 தேவையானவை

முட்டை - 1
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

 செய்முறை

ஒரு அகன்ற வாணலியில் அரைபாகத்திற்கு
நீர் விட்டு கொதிக்கவிடவும்.

கொதிவர ஆரம்பித்தவுடன் அடுப்பின் தீயைக்
குறைத்துக் கொள்ளவும்.

முட்டையின் கூரிய பகுதியை சற்றுப் பெரிதாக
உடைத்துக் கொள்ளவும்.

முட்டை கரு எளிதில் வெளியே வருமாறு
உடைத்துக் கொள்ளவும்.

முட்டை கருவை ஒரே ஊற்றில், தெறிக்காத
வண்ணம் அருகில் வைத்து, கொதிக்கும் நீரில்
ஊற்றவும்.

 இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு பிறகு எடுத்து
 நீரை வடித்துக் கொள்ளவும். சூடாக இருக்கும்
போதே அதில் மிளகுத்தூள் உப்பு இரண்டையும்
கலந்து தூவவும்.

பட்டரை மேலே இலேசாக தடவி விடவும்.

இதோ சுத்தமான சுவையான அவித்த ஆம்லெட் தயார்

முளைக்கீரைதொக்கு



தேவையான பொருட்கள் :
உருவியமுளைக்கீரை – 2 கப்
பொடியாக நறுக்கியவெங்காயம் : 2
பொடியாக நறுக்கியதக்காளி பெரியது - 1
நறுக்கியகறிவேப்பிலை -சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 மேசைக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 4 பல் தட்டி கொள்ளவும்
செத்தல் மிளகாய் – 10
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையானளவு
நல்லெண்ணெய் – தேவையானளவு
தேங்காய்பூ _ 1/4 கப் ( விரும்பினாள் )

செய்முறை :
உருவியமுளைக்கீரையை நன்றாகக்
கழுவி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்

அடுப்பில் தாச்சியை வாணலியை
வைத்து சூடாக்கவும்

பின்னர் அதில் சிறிது நல்லெண்ணெய்
விட்டு சூடாக்கவும்

எண்ணெய் சூடான பின்னர் அதில் செத்தல்
மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம்
பருப்பு,புளி ஆகியவற்றை போட்டு ஓரளவு
பொரித்தெடுக்கவும் .

ஓரளவு பொரித்தெடுத்த பொருட்களை
அடுப்பில் இருந்து எடுத்து ஒரு தட்டில்
போட்டு ஆறவிடவும்

பொரித்தெடுத்த பொருட்கள் ஆறியவுடன்
கிரைண்டரில் போட்டு அவற்றுடன் உப்பை
போட்டு  கரகரப்பாக அரைக்கவும்.

கரகரப்பாக அரைத்த பொருட்களை எடுத்து
ஒரு தட்டில் போட்டு வைக்கவும்

அதன் பின்னர் அடுப்பில் தாச்சியை வைத்து
சூடாக்கவும்

பின்னர் அதில்  நல்லெணைய் விட்டு
சூடாக்கவும்

எண்ணெய் சூடான பின்னர் அதில் கடுகு,
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி ,
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும் .

தாளித்த பின்னர் அவற்றுடன் வெங்காயம்,
உள்ளி (பூண்டு) சேர்த்து நன்றாக வதக்கவும் ,

வதக்கியபின்னர்  தக்காளி சேர்த்து வதக்கவும் ,

அதன் பின்னர் இவற்றுடன் உருவி கழுவிய
முளைக்கீரையை போட்டு வதக்கவும்

வதக்கியபின்னர்இதனுடன்  உப்பை போட்டு
வதக்கவும்

இவையாவும் வதங்கிய பின்னர் வதங்கிய
வற்றின் மேல் சிறிதளவு  கொஞ்சம் தண்ணீர்
தெளித்து சிறிது நேரம் மூடி வைக்கவும்

 அதன் பின்னர் இவற்றுடன்  தேங்காய் பூவை
போட்டு   கிளரிய பின்னர்  இரண்டு நிமிடம்
விட்டு  அடுப்பில் இருந்து இறக்கவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான
முளைக்கீரைதொக்கு தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை) வைத்து அதில் சிறிதளவு சுத்தமான
சுவையான முளைக்கீரை தொக்கினை வைத்து
பறிமாறவும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 22. März 2013

பச்சைப்பயறு போண்டா

தேவையான பொருட்கள்
முழு பச்சைப் பயிறு - 200 கிராம்
கொத்துமல்லி இலை- ஒரு சிறு கட்டு
அரிசி - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
கோவா(கோஸ்) - 100 கிராம்
துவரம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் -தேவையானளவு 
செத்தமிளகாய்(வற்றல்)-தேவையானளவு 
பெருங்காயம்-தேவையானளவு
கறிவேப்பிலை-தேவையானளவு 
உப்பு - தேவையானளவு


செய்முறை

பச்சைப் பயிறைக் களைந்து அரிசி, 
பருப்பு வகைகளுடன் ஊற வைத்துக் 
கொள்ளவும்.

அவற்றுடன் பச்சை மிளகாய்,செத்த 
மிளகாய் (வற்றல்), பெருங்காயம் 
போன்றவற்றை தேவையான அளவு 
சேர்த்து வடைக்கு அரைப்பதைப் 
போன்று நன்கு அரைத்துக் 
கொள்ளவும்.

வெங்காயம், கோவா(கோஸ்)  கொத்த
மல்லி இலை கருவேப்பிலையைப் 
ஆகியவற்றை பொடியாக நறுக்கி 
அரைத்து வைத்த மாவுடன் கலக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கவும் 

சூடான எண்ணெயில் வடைகளாகவோ, 
போண்டாக்களாகவோ தட்டிப் போட்டு 
பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.

தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து சூடாகச் 
சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். 

வெங்காயத்தைத் தவிர்த்துப் பொடியாக 
நறுக்கிய கீரை, சௌ சௌ, கேரட் சேர்த்தும் 
செய்யலாம்.


வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


நெல்லிக்காய் தயிர் பச்சடி



சுத்தமான சுவையான விற்றமின் சி 
சத்து நிறைந்த நெல்லிக்காய் தயிர் 
பச்சடி 

தேவையானவை: 
 நெல்லிக்காய் / நெல்லிக்கனி- 6
 தயிர்: ஒரு கப் 
தேங்காய்த்துருவல்: கால் கப் 
பச்சை மிளகாய்: இரண்டு 
இஞ்சித்துண்டு: ஒன்று 
உப்பு: வேண்டிய அளவு 

 தாளிக்க: 
 கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை 
தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 

 செய்முறை: 
 நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும்

பின்னர் கிரைண்டரில் கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கிய நெல்லிக்கனிகள்,
தேங்காய்பூ,வெட்டிய பச்சை மிளகாய்,
தோல்நீக்கிநசுக்கிய இஞ்சி ஆகியவற்
றையும் போட்டு நன்றாக அரைக்கவும் 

அரைத்த ,பின்னர் அவற்றுடன்  தயிர் உப்பு 
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
தாளிக்காத நெல்லிக்காய் தயிர் பச்சடி 
தயாராகிவிடும்

 விரும்பினாள்
 அடுப்பிள் தாட்சியை வைத்து அதில் 
நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகை 
போட்டு வெடிக்கவிடவும்

கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயம் 
 தாளிக்காத பச்சடி ஆகியவற்றை போட்டு 
ஒன்றாகக் கலந்து, கிளறிவிடவும் 

அதன் பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை 
 வெளியே எடுத்து வைக்கவும்  

அதன் பின்னர் விற்றமின் சி சத்து நிறைந்த  
பச்சடி தயார் 

Montag, 18. März 2013

பலாப்பழ பாயாசம்

தேவையான பொருட்கள்
பலாப்பழச் சுளைகள் - 20, 30
சக்கரை அல்லதுவெல்லம் - 1/4கிலோ
நெய் அல்லது டால்டா தேவையானளவு
துளாக்கிய ஏலக்காய் தேவையானளவு

செய்முறை
முதலில் சக்கரை அல்லது வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பழச் சுளைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஏலக்காயை தூளாக்கி ஒரு தட்டில் வைக்கவும் .

பின்பு வாணலில் நெய் அல்லது டால்டா விட்டு  இளக்கவும் அது இளகியதும் நறுக்கிய பலாப்பழசுளைகளை இட்டு வதக்கவும்.

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேகவிட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்துவிடலாம்.

இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இது மிக சுவையாக இருக்கும்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ரவா இட்லி

தேவையான பொருட்கள்

ரவை- 1 கப்
தயிர் - 1 கப்
அப்பச்சோடா 1/2 தேக்கரண்டி
வெங்காயம் -தேவையானளவு
பச்சை மிளகாய் -தேவையானளவு
இஞ்சி -தேவையானளவு
சின்னசீரகம்  -தேவையானளவு
கடுகு  -தேவையானளவு
உளுந்து  -1 தேக்கரண்டி
கடலை பருப்பு /1 தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு

செய்முறை

 அடுப்பில் தாட்சியை வைத்து 
சூடாக்கி அதில் ரவையை போட்டு 
பொன்னிறமாக வறுக்க வேண்டும் .

ஒரு பாத்திரத்தில் தயிர் அப்பசோடா , 
வறுத்த ரவை ஆகியவற்றை போட்டு 
பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும் .

பிறகு அடுப்பில் தாட்சி வைத்து 
எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு 
போட்டு தாளிக்கவும் 

தாளித்த பின்னர் அதில் உளுந்து ,
கடலை பருப்பு, வெங்காயம் , பச்சை 
மிளகாய்,இஞ்சி , சீரகம் ஆகியவற்றை 
போட்டு நன்றாக வதக்கவும் 

வதக்கியவற்றை  ஊறவைத்தவற்றுடன் 
போடவும் .

 பின்னர் அவற்றுடன் தேவையானளவு 
தண்ணீர் . உப்பு ஆகியவற்றை போட்டு 
இட்லி மா பதத்திற்கு நன்றாகவும் 
கட்டிவராமல் கலக்கவும் 

பின்பு அடுப்பில் இட்லி செய்யும் 
பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு
 அதனுள்இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன்மேற் மூடியால் மூடி 
பின்பு அதனைசூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகி
யதும் அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தி
னுள் காணப்படும் தட்டிலுள்ள குழிகளில் 
அரைத்த மாவை ஒரு குழி கரண்டியால் 
எடுத்து( ஒருகுழிக்கு முக்கால் கரண்டி \
வீதம் விட்டு) ஒவ்வொரு குழியின் 
முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை 
மூடிஅவிய விடவும்.

அவிந்த பின்பு மெதுமையான சுவையான 
இட்லிகள் தயாராகிவிடும்.

அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி 
ஒரு பாத்திரத்தில் இட்லியை போட்டு சில 
மணித்தியாலம் மூடி வைக்கவும்.

பின்பு இதனைப் போல எல்லா இட்லி
களையும் அவிக்கவும்.

பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை 
வைத்து அதனுடன்சம்பல் அல்லது 
சாம்பார் அல்லது கறி அல்லது இட்லித்
தூள் கலவை தேங்காய் சட்னி , சாம்பார் 
இவற்றில் ஒன்றினை வைத்து பரிமாறவும்.

Sonntag, 17. März 2013

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 16. März 2013

Freitag, 15. März 2013

அவல்தோசை


அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள்
அவல்-1 கப்
தயிர்-1 கப்
பச்சையரிசி-1 கப்
புழுங்கல் அரிசி-1 கப்
சோறு (சாதம்)-1தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சையரிசி தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 1 மணித்தியாலம்
ஊற விடவும்

அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில்
புழுங்கல் அரிசி தண்ணீர் ஆகியவற்றை
போட்டு 1 மணித்தியாலம் ஊற விடவும்

இவையாவும் ஊறிய பின்னர் இன்னொரு
பாத்திரத்தில் அவல் ,தயிர் ஆகியவற்றை


போட்டு கலந்து  சிறிது நேரம் ஊற விடவும்.

இவையாவும் ஊறிய பின்னர் கிரைண்டரில்
அல்லது மிக்ஸியில் ஊறிய பச்சையரிசி,
ஊறியபுழுங்கல் அரிசி  தண்ணீர் ஆகியவற்
றை போட்டு ஓரளவு நன்றாக அரைக்கவும்.

இவையாவும் அரைத்த பின்னர் அவற்றுடன்
வேக வைத்த சோறு (சாதம்)சேர்த்து
அரைக்கவும்.

 அதன் பின்னர் அவற்றுடன் கலந்து ஊற
வைத்துள்ள அவல் ,தயிர் ஆகியவற்றையும்
 போட்டு  நன்றாக அரைக்கவும்.

இவையாவற்றையும் அரைத்த பின்னர் ஒரு
பாத்திரத்தில் போட்டு இரண்டு மணித்தியாலம்
புளிக்க விடவும்.

புளித்தபின்புஅதற்கு உப்பு,மஞ்சள்தூள்
போட்டு நன்றாக கலக்கவும்.

அதன்பின்பு அடுப்பில் தோசைக்கல்லை
(வாணலியை) வைத்து சூடாக்கவும்.

தோசைக்கல்(வாணலி) சூடானதும் ஒரு
துணியில் (அல்லது ஒரு சிறியஉருளைக்
கிழங்கினை பாதியாக வெட்டி அதன்தோல்
பாகத்தில் முள்ளுக்கரண்டியை செருகவும் )
சிறிதளவு நல்லெண்ணையில் தோய்த்து
எடுத்து அதை அதனை தோசைக்கல்லில்
தடவும்.

அதன் பின்பு கரைத்து புளிக்கவைத்துள்ள
மாவில் ஒரு குழிக்கரண்டி எடுத்து தோசைக்
கல்லில் ஊற்றி அதனை நன்றாககரண்டியால்
தடவி தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன்
மேல் கிழங்கு பிரட்டல் கறியை வைத்து அதன்
இரு பக்கமும் மடித்த பின்பு மடித்த தோசையை
திருப்பிபோட்டு வேகவிடவும்.

தோசையின் இரு பக்கமும் நன்றாக வெந்த
பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இதேபோல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தேவையானளவு
தோசைகளை வைத்து சட்னி,சம்பல்,கிழங்கு
பிரட்டல்கறி இவற்றில் ஏதாவது ஒன்றை
வைத்து  பரிமாறவும்.

வெள்ளிக்கிழமைவாழ்த்துக்கள்


Mittwoch, 13. März 2013

அவல் தோசை மா


அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள்
அவல்-1 கப்
தயிர்-1 கப்
பச்சையரிசி-1 கப்
புழுங்கல் அரிசி-1 கப்
சோறு (சாதம்)-1தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சையரிசி தண்ணீர்
ஆகியவற்றை போட்டு 1 மணித்தியாலம்
ஊற விடவும்

அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில்
புழுங்கல் அரிசி தண்ணீர் ஆகியவற்றை
போட்டு 1 மணித்தியாலம் ஊற விடவும்

இவையாவும் ஊறிய பின்னர் இன்னொரு
பாத்திரத்தில் அவல் ,தயிர் ஆகியவற்றை


போட்டு கலந்து  சிறிது நேரம் ஊற விடவும்.

இவையாவும் ஊறிய பின்னர் கிரைண்டரில்
அல்லது மிக்ஸியில் ஊறிய பச்சையரிசி,
ஊறியபுழுங்கல் அரிசி  தண்ணீர் ஆகியவற்
றை போட்டு ஓரளவு நன்றாக அரைக்கவும்.

இவையாவும் அரைத்த பின்னர் அவற்றுடன்
வேக வைத்த சோறு (சாதம்)சேர்த்து
அரைக்கவும்.

 அதன் பின்னர் அவற்றுடன் கலந்து ஊற
வைத்துள்ள அவல் ,தயிர் ஆகியவற்றையும்
 போட்டு  நன்றாக அரைக்கவும்.

இவையாவற்றையும் அரைத்த பின்னர் ஒரு
பாத்திரத்தில் போட்டு இரண்டு மணித்தியாலம்
புளிக்க விடவும்.


புளித்தபின்புஅதற்கு உப்பு,மஞ்சள்தூள்
போட்டு நன்றாக கலக்கவும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 10. März 2013

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 9. März 2013

சுக்கிடியா

தேவையான பொருட்கள் 

கோதுமை மா- 2 கப்,
நாட்டு சர்க்கரை - 1 கப்,
சூடான பால் - 1 கப்,
நெய் - 1 கப்.

செய்முறை

அடி கனமான பாத்திரத்தில் 
நெய்விட்டு, கோதுமை
மாவை பொன்னிறமாகும் 
வரை வறுக்கவும். 

பிறகு அதில் நாட்டு சர்க்கரை, 
பால் சேர்த்துக் கிளறவும். 

தேவைப்பட்டால் இன்னும் 
கொஞ்சம் நெய் விட்டு, 
சுருண்டு வரும் போது, நெய்  
தடவிய தட்டில் கொட்டி, 
ஆறியதும் வில்லைகள் 
போடவும்.

சனிக்கிழமை


Freitag, 8. März 2013

இட்லி மஞ்சூரியன்


தேவையானபொருட்கள்
இட்லி - 6
தக்காளி சோஸ் - 1 கப்
ரெட் சில்லி சாஸ் - 1/4கப்
பொடியாக நறுக்கியஉள்ளி - 3 பல்
பொடியாக நறுக்கியவெங்காயத்தாள் - 1/2கப்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சோளமா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செயல்முறை

ஒரு தட்டில் இட்லிகளை சிறிய துண்டு
களாக வெட்டிவைக்கவும்.

பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது 
தண்ணீர் விட்டு அதனுடன் சோள மாவை 
போட்டு கரைத்து வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க
விடவும் 

எண்ணெய் கொதித்ததும் அதில் நறுக்கின 
இட்லி துண்டுகளை போட்டு பொரித்து
எடுக்கவும்.

பொரித்து எடுத்த துண்டுகளை ஒரு
பேப்பரில் பரவலாக போட்டு வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து 
அதில்  ஒலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்  

எண்ணெய் சூடானதும் அதனுள் பொடியாக
நறுக்கின உள்ளி, பொடியாக நறுக்கின
வெங்காயத்தாள் என்பவற்றைப் போட்டு
வதக்கவும்.

பின்னர் அதனுடன் தக்காளி சோஸ், ரெட்
சில்லி சாஸ் ஆகியவற்றை விட்டு கிளறவும்.

பிறகு அவற்றுடன் சோளமாவு கரைசல், சோயா
சாஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

கிளறிய கலவை கொஞ்சம் கெட்டியானதும்
அதனுள் பொரித்து வைத்த இட்லி
துண்டுகளை போட்டு கிளறவும்.

 அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும் 

பின்னர் ஒரு தட்டில்  சுத்தமான சுவையான 
சத்தான இட்லி மஞ்சூரியன் போட்டு அதன் 
மேல் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு இட்லியை பொரிக்காமல்  வதக்கியும் 
சேர்க்கலாம்.- 6 
தக்காளி சோஸ் - 1 கப் 
ரெட் சில்லி சாஸ் - 1/4கப் 
பொடியாக நறுக்கியஉள்ளி - 3 பல் 
பொடியாக நறுக்கியவெங்காயத்தாள் - 1/2கப் 
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி 
சோளமா - ஒரு தேக்கரண்டி 
உப்பு - தேவையானளவு 
கொத்தமல்லித்தழை - சிறிது 
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 
எண்ணெய் - பொரிப்பதற்கு 

 செயல்முறை 
 ஒரு தட்டில் இட்லிகளை சிறிய துண்டு 
களாக வெட்டிவைக்கவும். 

 பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது
 தண்ணீர் விட்டு அதனுடன் சோள மாவை 
போட்டு கரைத்து வைக்கவும். 

 அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
 எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க 
விடவும் 

 எண்ணெய் கொதித்ததும் அதில் நறுக்கின 
 இட்லி துண்டுகளை போட்டு பொரித்து 
எடுக்கவும்.

 பொரித்து எடுத்த துண்டுகளை ஒரு 
பேப்பரில் பரவலாக போட்டு வைக்கவும். 

 அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து 
 அதில் ஒலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் 

 எண்ணெய் சூடானதும் அதனுள் பொடியாக 
நறுக்கின உள்ளி, பொடியாக நறுக்கின 
வெங்காயத்தாள் என்பவற்றைப் போட்டு 
வதக்கவும். 

 பின்னர் அதனுடன் தக்காளி சோஸ், ரெட் 
சில்லி சாஸ் ஆகியவற்றை விட்டு கிளறவும். 

 பிறகு அவற்றுடன் சோளமாவு கரைசல், 
சோயா சாஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து 
கிளறவும். 

 கிளறிய கலவை கொஞ்சம் கெட்டியானதும் 
அதனுள் பொரித்து வைத்த இட்லி துண்டுகளை 
போட்டு கிளறவும். 

 அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
 இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும்

 பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான
 சத்தான இட்லி மஞ்சூரியன் போட்டு அதன் 
 மேல் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். 

 குறிப்பு 
இட்லியை பொரிக்காமல் வதக்கியும் 
 சேர்க்கலாம்.

வெள்ளிக்கிழமை


Donnerstag, 7. März 2013

வியாழக்கிழமை


Mittwoch, 6. März 2013

சோளஇட்லி

தேவையானபொருட்கள்
அவித்து ஆறிய சோள முத்துகள் - 1 கப், 
இட்லி மாவு - 2 கப், 
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், 
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கேற்ப, 
எண்ணெய் - சிறிது. 

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அவித்து ஆறிய 
சோளமுத்தை போடவும்

பிறகு அதனுடன் இட்லி மாவை 
போட்டு நன்றாக கலக்கவும்

 பின்னர் அவற்றுடன் இஞ்சி-பூண்டு 
(உள்ளி) விழுது, மஞ்சள் தூள், உப்பு 
சேர்த்துக் கலக்கவும். 

அதன் பின்னர் அடுப்பில் இட்லி
செய்யும் பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு அதனுள்
இட்லி அவிக்கும் தட்டினைவைத்து அதன்
மேற் மூடியால் மூடி பின்பு அதனை
சூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் 
எண்ணெய் தடவும் 

அதன் பின்னர் கலந்த மாவை ஒரு குழி 
கரண்டியால் எடுத்து( ஒருகுழிக்கு முக்கால் 
கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொருகுழியின் 
முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லாகுழி
களையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.

அவிந்ததும் சின்னச் சின்ன துண்டுகளாக
வெட்டி, சட்னியுடன் பரிமாறவும்.

Dienstag, 5. März 2013

இட்லி மா -2


தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு - 1 சுண்டு
ரவை(பொன்னிறவறுவல்) - 2சுண்டு
ஜஸ்கட்டிகள் - தேவையானளவு
அப்பச்சோடா/Hefe  - சிறிதளவு(விரும்பினாள்)
உப்பு - தேவையானளவு


செய்முறை  

(1)ஒருபாத்திரத்தில் உளுத்தம்பருப்பை 
     போட்டு அதனுடன் நக சூடான
     தண்ணீரை(உளுத்தம்பருப்பிற்கு
     மேலே தண்ணீர் இருக்கவேண்டும்)
     விட்டு அரை மணித்தியாலம்
      ஊறவைக்கவும்.


(2) அரைமணித்தியாலத்தின் பின்பு
     கிரைண்டரில்(மிக்சியில்)ஊறிய
     உளுத்தம்பருப்பு ,தண்ணீர்
     ஆகியவற்றை சேர்த்து இட்லி
     பதத்திற்கு (நன்றாக அரைக்க 
     கூடாது) அரைக்கவும்.


(3)அதன் பின்பு அரைத்தவற்றை
     ஒருபாத்திரத்தில் போடவும் .


(4 )பின்பு கிரைண்டரில்(மிக்சியில்)
     பொன்னிறமாக வறுத்த ரவை,
     தண்ணீர் ஆகியவற்றை போட்டு
     நன்றாக  அரைக்கவும் (கட்டி
    இல்லாமல்) .


(5)அரைத்தபின்பு அரைத்த ரவையை
    உளுந்து போட்ட பாத்திரத்தில்
     போட்டு நன்றாக கலக்கவும் .


(6)அதன் பின்பு அதனுடன் ஜஸ்
    கட்டிகளை சேர்த்து கலக்கவும் .


(7)பின்பு இதனுடன் அப்பச்சோடா
    /Hefe (விரும்பினாள்) சேர்த்து
     கலக்கவும் .


(8) அப்பச்சோடா/Hefe சேர்த்து கலந்து
     இருந்தால் 6 மணித்தியாலங்கள்
     புளிக்கவிடவும்.
    (அப்பச்சோடா / Hefe சேர்த்து
     கலக்காவிட்டால் அடுத்தநாள்
     வரை புளிக்கவிடவும்)

செவ்வாய்க்கிழமை


Sonntag, 3. März 2013

மாங்காய்சாதம்


தேவையான பொருட்கள்
பச்சை மாங்காய்-1
பச்சை மிளகாய்-2
உப்பு -தேவையானளவு
சாதம் (சோறு)-1கப்
மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை
பெருங்காயம் அரைத்தது- ஒரு சிட்டிகை
எண்ணெய்/நெய்-2 தேக்கரண்டி
சாதா பருப்பு-2 தேக்கரண்டி

செய்முறை 

 மாங்காயின் தோல் சிவீ  சிறு சிறு துண்டுகளாக
நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்

அதன் பின்னர் பச்சை மிளகாயை சிறு சிறு
துண்டுகளாக நறுக்கி இன்னொரு பாத்திரத்தில்
போடவும்


 பின்னர் அடுப்பில் வாணெலி (தாட்சி)யை
வைத்து அதில் எண்ணெய் ஊற்றி
கொதிக்க வைக்கவும்

எண்ணெய் கொதித்ததும் அதில்கடுகு,பருப்பு
ஆகியவற்றை போட்டு அவற்றின் நிறம்
மாறும் வரையில் வதக்கவும்,

வதக்கிய பின்னர் அதனுடன் அரைத்த பெருங்
காயத்தை  போட்டு வதக்கவும்

 பின்னர் அவற்றுடன் பச்சை மிளகாயை போட்டு
வதக்கவும்,

வதக்கியதும் இதனுடன் மஞ்சள் தூள் நறுக்கிய
மாங்காய்
ஆகியவற்றை போட்டு வதக்கவும்,

மாங்காய் நன்றாக அவிந்ததும்,அதனுடன் சாதம்
சோறுஉப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக
கிளரவும்.

 கிளரிய பின்னர் சுத்தமான சுவையான சத்தான
மாங்காய் சாதம் தயாராகிவிடும்

பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி
வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு
சாதத்தை வைத்து ஏதாவது சட்னியுடன்
பறிமாறவும்

இட்லி மா-1


தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 2 கப்,
முழு உளுத்தம் பருப்பு - அரை கப்,
 உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை
ஒருபாத்திரத்தில் அரிசியை ஊறவைக்கவும்.

மற்றைய பாத்திரத்தில் முழு உளுத்தம்
பருப்பை ஊறவைக்கவும்.

இவையாவும் ஊறியபின்னர் மிக்ஸியில்
அல்லது கிரைண்டரில்அரிசியை  போட்டு
நைஸாக அரைக்கவும்

அரைத்த பின்னர் அதனை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போடவும்

அதன் பின்னர் உளுந்தை  மிக்ஸியில்
அல்லது கிரைண்டரில்போட்டுதண்ணீர்
தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக்
கொள்ளுங்கள்.

அரைத்த பின்னர் அதனை எடுத்து அரைத்த
அரிசி போட்ட பாத்திரத்தில் போடவும்

பின்னர் அவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக
அடித்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை
புளிக்கவிடுங்கள்.

அதன் பின்னர் இட்லி மா தயாராகிவிடும்

ஆரஞ்சுதேனீர்

தேவையானபொருட்கள்
பொடியாகநறுக்கியஆரஞ்சுப் பழத்தின் தோல் - 1
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை பிளம்ஸ் - சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கு

செய்முறை
தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய
ஆரஞ்சுத் தோலை சேர்த்து தழலை
மட்டாக வைத்து இரண்டு நிமிடங்கள்
கழித்து அணைத்து விடவும்.
(அதிகம் கொதிக்க விடக்கூடாது)

ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி பாலுடன்
பனை வெல்லமோ கற்கண்டோ சேர்த்து
பருகலாம்.

திருமணகேக் அலங்காரம்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 2. März 2013

பிறந்தநாள் கேக் அலங்காரம்


சனிக்கிழமை வாழ்த்துக்கள்