கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 31. Mai 2014

முட்டைக்கோப்பி

தேவையான .பொருட்கள்  

சுடுநீர் - 3/4 கப்
முட்டை-1
கோப்பி - 1 தே.கரண்டி
சீனி - 2 1/2 தே.கரண்டி

செய்முறை 

முதலில் சுடுநீரில் சீனியையும், 
கோப்பியையும் சேர்த்து நன்றாகக் 
கலந்து கொள்ளவும்.

இன்னொரு கப்பில் முட்டையை
உடைத்து ஊற்றி நுரை பொங்க 
அடித்துக் கொள்ளவும்.

இதில் கலந்து வைத்திருக்கும் 
கோப்பியை சிறிது சிறிதாக ஊற்றி 
நன்றாகக் கலந்து சூட்டுடன் பருகவும்.

குறிப்பு 

 சுடுநீர் அதிக கொதியாக இருந்தால் முட்டை 
அவிந்துவிடும். ஆகவே மிதமான சூட்டிலேயே 
கலந்து கொள்ளவும்.

சனிக்கிழமை


Freitag, 30. Mai 2014

பச்சை பட்டாணி சப்பாத்தி

தேவையான பொருட்கள்: 

பச்சை பட்டாணி - 1 கப் 
கோதுமை மாவு - 1 கப் 
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி - 2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

 இஞ்சியை தோல் சீவி வைக்கவும். 

பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். 

 வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். 

பிறகு மாங்காய் தூள் சேர்த்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மா பதத்திற்கு மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 

பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே சிறிது பச்சை பட்டாணி கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் மெதுவாக சப்பாத்திகளாக தேய்க்க வேண்டும். 

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். 

இப்போது சுவையான சத்தான பச்சை பட்டாணி சப்பாத்தி ரெடி.

பச்சை மிளகாய் வெங்காய சட்னி

தேவையான பொருட்கள் :

பச்சை .மிளகாய் - 5 
சின்ன வெங்காயம் - 15 
உப்பு - சுவைக்கு 
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன் 

செய்முறை :

 ப.மிளகாய், சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

மிக்சியில் முதலில் ப.மிளகாயை போட்டு நன்றாக அரைத்த பின்னர் சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை. 

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போடவும். 

கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அந்த எண்ணெயை சட்னியில் ஊற்றி கலக்கவும். 

சுவையான பச்சைமிளகாய் வெங்காய சட்னி ரெடி. 

இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை


Donnerstag, 29. Mai 2014

பாசிப்பருப்பு தோசை

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு -2 கப், 
கோதுமை ரவை -1கப், 
பச்சை மிளகாய் 3, 
காய்ந்த மிளகாய் - 4, 
சீரகம் - 1 ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு 
ரட், பீன்ஸ், பச்சை பட்டாணி - 1 கப் (சேர்த்து), 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3, 
துருவிய சீஸ் சிறிதளவு, 
கடுகு, சீரகம் தாளிப்பதற்கு, 

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

 கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

நன்கு வதங்கியதும், அதில் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். ( தண்ணீர் சேர்க்க வேண்டாம். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு, துருவிய சீஸ் சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும். 

பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். 

அதில் கோதுமை ரவையைக் கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும். 

தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோசையாக ஊற்றவும். 

தோசை மாவு ஊற்றியதும், அதன் மேல் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து அதன் மேல் மூடி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

உருளைகுஃப்தா :

தேவையான பொருட்கள் 
எண்ணெய் – தேவையான அளவு
 அவித்து மசித்தஉருளைக்கிழங்கு – 4
 கொத்தமல்லி – சிறிதளவு
 உப்பு – தேவைகேற்ப
 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
 மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
 நறுக்கியபச்சை மிளகாய் – ஒன்று
 தனியாதூள் – அரை டீஸ்பூன்
 கரம் மசாலா – கால் டீஸ்பூன்
 பிரட் தூள் – ஒன்றை டீஸ்பூன்

 செய்முறை 
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி,
உப்பு, பச்சைமிளகாய்,மஞ்சள்தூள், மிளகாய்
தூள், தனியாதூள், கரம் மசாலா ஆகியவற்றை
ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறுசிறு
உருண்டைகளாக உருட்டி பிரட் தூளில் புரட்டி,
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
உருண்டைகளை போட்டு பொன்னிறமா
 வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

வியாழக்கிழமை


Mittwoch, 28. Mai 2014

வெள்ளரிக்காய் இட்லி



தேவையான பொருட்கள் 
வெள்ளரிக்காய் –250 கிராம்
ரவை–250 கிராம்
தேங்காய் திருவல் –3 தேக்கரண்டி
புளித்த தயிர்– 3 தேக்கரண்டி
சிறிதாக நறுக்கியபச்சைமிளகாய்–4 
உப்பு –தேவைக்கு


செய்முறை

வெள்ளரிக்காயை திருவி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும் 

அதனுடன் ரவையை போட்டு கலக்கவும் 

அதன் பின்னர் அதனுடன் தேங்காய் திருவல்
தயிர் பச்சைமிளகாய் உப்பு ஆகியவற்றை 
சேர்க்கவும் 

தேவைப்பட்டால் சிறிது நீர் ஊற்றவும் 

அதன் பின்னர் பத்து நிமிடம் வைத்திருக்கவும் 

வைத்திருந்த பின்னர் அடுப்பில் இட்லி பானையை 

வைத்து அதில் தேவையானளவு தண்ணீர் விடவும் 

அதன் பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றவும் 

ஊற்றிய பின்னர் அதனை இட்லி பானையில் வைத்து 
அவிய வைக்கவும் 

இட்லி அவிந்த பின்னர் அதனை ஒரு தட்டில் வைத்து 
சம்பல் அல்லது சாம்பாருடன் சேர்த்து சுவையுங்கள்.

புதன்கிழமை


Dienstag, 27. Mai 2014

தக்காளி அவல்

தேவையான பொருட்கள்

 அவல் - 1 கப்
 தக்காளி - 1
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1/2 கப்
கரட் - 1 சிறியது
 பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
 கொத்தமல்லி - சிறிதளவு
 மிளகாய் வத்தல் - 3
 பெருங்காயம் - 1 சிட்டிகை
 மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
 உப்பு - தேவையானளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
 கடுகு - 1 டீ ஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 1 மூடி

 செய்முறை
அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு,
உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி
10 நிமிடம் ஊறவைக்கவும்.

 பச்சைப் பட்டாணியை வேக
வைத்துக் கொள்ளவும். பெரிய
வெங்காயம், தக்காளி, கேரட்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி
ஆகியவற்றை சிறிதாக நறுக்கி
வைத்துக் கொள்ளவும்.

 அடுப்பில் வாணலியை வைத்து
எண்ணெயை ஊற்றவும்.

 எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு
 கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த
 மிளகாய் சேர்க்கவும். பிறகு பட்டாணி,
நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து
 பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை
சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம்
சேர்த்து இறக்கவும். சுவையான தக்காளி
 அவல் தயார்.

பச்சை மிளகாய் பச்சடி

தேவையான பொருள்கள் 

பச்சைமிளகாய் - 100 கிராம்  
சின்ன வெங்காயம் - 100 கிராம் 
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி  
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  
புளி - எலுமிச்சை அளவு  
உப்பு - தேவையான அளவு 

அரைக்க 

தேங்காய் திருவல் - 5 மேசைக்கரண்டி 

தாளிக்க 

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி  
கடுகு - 1 மேசைக்கரண்டி  
உளுந்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி 

செய்முறை 

பச்சை மிளகாய், வெங்காயம்
இரண்டையும் பொடியா நறுக்கிக்
 கொள்ளவும். 

இரண்டும் சம அளவாக எடுத்துக் 
கொள்ளவும். 

புளியை 100 மில்லி தண்ணீரில் 
ஊற வைத்து கரைத்து வைத்துக் 
கொள்ளவும். 

தேங்காயை மிக்ஸ்சியில் 
அரைத்து வைக்கவும்.   

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 
ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் 
பருப்பு போட்டு தாளித்தபின் நறுக்கி 
வைத்துள்ள பச்சை மிளகாய், 
வெங்காயத்தை போட்டு நன்றாக 
வதக்கவும். 

வதங்கியதும் கரைத்து வைத்துள்ள 
புளித்தண்ணீர், மல்லித் தூள் 
மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக 
கொதிக்க விடவும். 

மசாலா வாடை போனதும் அரைத்த 
தேங்காய் கலவையை சேர்த்து பச்சடி
கெட்டியானதும் அடுப்பிலிருந்து 
இறக்கி விடவும். 

* காரம் அதிகமாக இருந்தால் கூடுதலாக வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். 

* சுவையான மிளகாய் பச்சடி ரெடி. பச்சை மிளகாய் பச்சடியை பிரிஜ்ஜில் வைத்து சில நாட்கள் வரை கெடாமல் உபயோகிக்கவும். இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம். 

செவ்வாய்க்கிழமை


Montag, 26. Mai 2014

உருளைக்கிழங்கு கோதுமை தோசை

தேவையான பொருட்கள்

 உருளைக்கிழங்கு - 2 
 வெங்காயம் - 1 
 கோதுமை மா - 1 கைப்பிடி 
 பச்சை மிளகாய் - 2 
 கொத்தமல்லி - சிறிதளவு  
 எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
 உப்பு - தேவையானளவு 

 செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். 

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

 முதலில் வேக வைத்து தோரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும். 

பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் கோதுமை மா மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

 தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், உருளைக்கிழங்கு கோதுமை தோசை ரெடி!!!

அலங்காரம்-கேக்,


திங்கள் கிழமை


Sonntag, 25. Mai 2014

காய்கறி போளி

தேவையானவை

 கரட் துருவல் – கால் கப்,  
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப்,
 முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் (கலந்தது) – கால் கப், 
 கோதுமை மா– ஒன்றரை கப், 
 பால் – அரை கப், 
 பட்டை – 2 துண்டு,
 சோம்பு – அரை டீஸ்பூன், 
 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், 
 எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், 
 நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, 
 உப்பு – தேவையான அளவு. 

 செய்முறை: 

 ஒரு பாத்திரத்தில் கரட், முள்ளங்கி, 
முட்டை கோஸ் துருவலுடன் உப்பு 
சேர்த்து நன்கு கலந்து 

அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 
 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, 
மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, 
மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, 
நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து 
நன்கு பிசைந்து கொள்ளவும். 

 கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து 
சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் 
பிசைந்து கொள்ளவும். 

பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து…

 உருட்டிக் கிண்ணம் போல் செய்து, 
அதனுள் காய்கறி கலவையை வைத்து
 மூடவும். 

 அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று 
கனமாகத் தேய்க்கவும். 

 இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து 
தயார் செய்த பின் அவற்றை தோசைக்கல்லில் 
போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும். • சுவையான காய்கறி போளி ரெடி.

அலங்காரம்-கேக்,


ஞாயிற்றுக்கிழமை

Samstag, 24. Mai 2014

புல்கா முட்டை ரோல்

இந்த புல்கா முட்டை ரோல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
. தேவைப்பட்டால் இதில் காய்கறிகளை
சேர்த்து செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மா - 1 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
முட்டை - 2 (வெள்ளை கரு மட்டும்)
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக
நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில்
மீதமுள்ள 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
வெங்காயம், தக்காளியை போட்டு
நன்றாக வதக்கவும்.

பின்னர் இதில் சிறிதளவு உப்பு,
மிளகாய்தூள் போட்டு வதக்கியப்பின்
முட்டையின் வெள்ளை கருவை
உடைத்து ஊற்றி சிறிதுநேரம்
வதக்கினால் ஸ்டப்பிங் ரெடி.

கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர்,
உப்பு அத்துடன் 1 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு
பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

மாவை சிறு உருண்டைகளாக உருட்டி
மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து
வைக்கவும்..

தோசை கல்லை அடுப்பில் வைத்து
சூடானதும் சப்பாதியை போட்டு 2
நிமிடம் வைத்து இரண்டு புறமும்
திரும்பி போட்டு இடுக்கியால்
சப்பாத்தியை எடுத்து நேரடியாக
அடுப்பில் வைத்தால் சப்பாத்தி
பூரி போல் உப்பும். இதற்கு
 பெயர் தான் புல்கா.

புல்காவில் ஒரு புறம் இந்த
ஸ்டப்பிங் வைத்து ரோல் செய்தால்
புல்கா முட்டை ரோல் ரெடி.

வெஜிடபிள் குழிபணியாரம்

தேவையான பொருட்கள்

 இட்லி மா – ஒரு கப்,
 வெங்காயம் சிறியது - 1,
 கரட் துருவல் -2 டேபிள்ஸ்பூன்
முட்டைகோஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு,
 இஞ்சி – சிறிய துண்டு
 பச்சை மிளகாய் – 1
 எண்ணெய் - தேவையானளவு.
உப்பு – தேவையானளவு.

 செய்முறை 

வெங்காயம், கொத்தமல்லி, புதினா,
ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்
கொள்ளவும்.

 இஞ்சியை தோல் சீவி பொடியாக
 நறுக்கிக் கொள்ளவும்.

 இட்லி மாவில் வெங்காய துண்டுகள்,
 கரட் துருவல், முட்டைகோஸ் துருவல்,
 நறுக்கிய கொத்தமல்லி, புதினா,
இஞ்சி – பச்சை மிளாய் துண்டுகள்
 உப்பு சேர்த்துக் கலக்கவும்.

 குழி பணியார சட்டியில் எண்ணெய்
கொஞ்சம் விட்டு, மாவு கலவையில்
 ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.

வெந்ததும் திருப்பி விட்டு நன்கு
வெந்ததும் எடுக்கவும்.
 சத்து நிரம்பிய இந்த பணியாரம், எல்லா சட்னியும் தொட்டு சாப்பிட ஏற்றது

அலங்காரம்-கேக்,




சனிக்கிழமை


Freitag, 23. Mai 2014

கோழி

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி சுத்தம் செய்ததுண்டுகள் – 1 கிலோ 
நீளமாக வெட்டியவெங்காயம் – 2 பெரியது
நீளமாக வெட்டியபச்சை மிளகாய் – 5 
நீளமாக வெட்டியஉள்ளி: 5 - 6 பற்கள்
கடுகு -  1/2 
மேசைக் கரண்டி
பெருஞ்சீரகம் – 1/2 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை – 2 -3 காம்பு
எண்ணெய்  - தேவையானளவு
 மிளகாய்த்தூள் – 
தேவையானளவு
உப்பு - 
தேவையானளவு
தேசிக்காய் – பாதி 


செய்கை முறை


கோழி இறைச்சி, சிறிதளவு உப்புமிளகாய் தூள  குழைத்து வைக்கவும். 

கறிச்சட்டியில் எண்ணெயை விட்டு சூடாக்கவும் (கறிச் சட்டி ஒட்டாத நொன் ஸ்ரிக்காக இருப்பது நல்லது).


எண்ணெய் சூடு ஏறியதும் கடுகை போட்டு வெடித்ததும், பெருஞ்சீரகம், வெந்தயத்தைப் போடவும். 

வெந்தயம் சிவந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்   

பின்பு வெட்டிவைத்த வெண்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வதங்கி வரும் போது,  குழைத்து வைத்த இறைச்சியை சட்டியிலிட்டு பிரட்டி மூடிவிடவும்.

இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும் சட்டியில் உள்ள எண்ணெயிலும் அவிந்து பொரிய விடவும். இடைக்கிடை எரிந்து போகாது இருக்க அகப்பையால் துளாவி விடவும்.

கோழி முக்கால் பதம் பொரிந்ததும் அதற்குள் சரக்கு மிளகாய் தூளையும், கணக்காக உப்பும் போட்டு கொஞ்ச தண்ணீரும் சேர்த்து கொதித்து அவிய மூடிவிடவும்.

கோழி அவிந்ததும் நெருப்பைக் குறைத்து பொடுபொடுக்கும் அளவிற்கு (நீர் வற்றும் வரை) அடுப்பில் விடவும். 

அதன் பின் கருவேப்பிலையைப் போட்டு பிரட்டி மூடிய பின் அடுப்பை அணைத்துவிடவும். 

சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். இப்போது கோழிப்பிரட்டல் றெடி.

குறிப்பு  

பெரிய வெங்காயம் நீளமாக வெட்டப் பெற்றவை   
இவற்றுடன் சிலர் உறுளைக் கிழங்கும் சிறு துண்டுகளாக வெட்டி இறைச்சியோடு போடுவார்கள். 

பாதிக் கிழங்கு போதுமானது. 

உறைப்பு தேவைக் கேற்ப மிளகாய் தூளை கூட்டியும் குறைத்தும் பாவிக்கலாம். 

மசாலைகளை வதக்காது பிறிம்பாக அரைத்தெடுத்து இறைச்சியுடன் போட்டும் சமைப்பார்கள். வினகர் சேர்த்தால் இறைச்சி மெதுமெதுப்பாக இருக்கும். ஆனால் சிலர் விரும்புவதில்லை. 

இஞ்சி ஒரு சிறுதுண்டை சிரியதாய் சீவி அல்லது குத்திப் போட்டும் சமைப்பார்கள் 
இஞ்சி இறைச்சியை மெதுமயானதாக்கும் என்பர்.

பாசிப்பயிறு சப்பாத்தி

தேவையான பொருட்கள்  

 கோதுமை மா – 2 கப், 
 நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், 
 பாசிப்பயிறு – முக்கால் கப், 
 பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், 
பச்சை மிளகாய், 
பூண்டு – தலா 2 , 
 எண்ணெய்   தேவையான அளவு    
உப்பு – தேவையான அளவு. 

 செய்முறை

 பூண்டு, ப.மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். 

 பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். 

 வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்கு வதக்கவும். 

 பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். 

 கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 

 பின்னர் மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். 

 ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பயிறு கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

வாய்ப்பன்

தேவையான பொருட்கள் :

மைதா மா– ஒரு கப்
வாழைபழம் – இரண்டு
முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் கப்
சோடா மா– ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் மைதா மா,
நன்கு குழைத்தவாழைபழம் 
முந்திரி துண்டுகள், ஏலக்காய்
தூள், சர்க்கரை, சிறிதளவு
தண்ணீர் ஊற்றி அப்பம் மா
போல் கெட்டியாக பிழைந்து
கொள்ளவும்.
பிறகு, தாட்சி யில் எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும் கரண்டியில்
 ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி
வட்டமாக ஊற்றி பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்

இதோ சுத்தமான சுவையான
வாய்ப்பன் தயாராகிவிட்டது 

மஷ்ரூம் பிரியாணி

தேவையான பொருட்கள்:
நல்ல வெள்ளைமஷ்ரூம்  காளான் - 200 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
பிஸ்தா பருப்பு - 10
குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்).
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட்  1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டா - 1 சிறிய பாக்கெட்
தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
நெய் - 25 மி.லி.,
மல்லித்தழை நறுக்கியது - 1 கப்
மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்­ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.
* வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.
* மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீ­ரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்­ணீர் வடித்து எடுக்கவும்.
* இதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.

வெள்ளிக்கிழமை


Donnerstag, 22. Mai 2014

கோதுமை வெஜ் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
 கோதுமை மா - ஒரு கப் 
 அரிசிமா - ஒரு மேஜைக்கரண்டி
 வெங்காயம் - 1 
 பீன்ஸ் - 50 கிராம் 
 கரட் - 2 
 உருளைக்கிழங்கு - ஒன்று 
 கோவா (கோஸ்) - 100 கிராம் 
 மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 
 நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி 
 ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி 

 செய்முறை 

 பீன்ஸ், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

 கரட், உருளைக்கிழங்கு, கோவாவை (கோஸை) திருவிக் கொள்ளவும். 

 வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து அதனுடக் அத்துடன் அரிசி மா, உப்பு சேர்த்து கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மா பதத்திற்கு பிசையவும். 

நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கிய , பீன்ஸ், கரட், கோவா (கோஸ்) உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கிய பிறகு மிளகாய்த்தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். 

 பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும். 

 இவ்வாறு மீதமுள்ள மாவில் செய்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.  

மாலை நேர டிபனுக்கு சுவையான கோதுமை வெஜ் கொழுக்கட்டை தயார். 

குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இது.

அம்மி

 

Mittwoch, 21. Mai 2014

ஓமம் மோர்

தேவையான பொருட்கள் 

தயிர் - 200 மி.லி.
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு

தாளிக்க :

ஓமம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி

செய்முறை :

தயிரில் அரை லிட்டர் தண்ணீர் கலந்து 
அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்
தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்

வாணலியில் எண்ணெய் உற்றி ஓமம், 
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 
நன்கு வறுக்கவும்.

பின்பு அதில் கடைந்து வைத்த மோரை 
ஊற்றி சிறு தீயில் சுட வைக்கவும்.

மோர் முறிய ஆரம்பிக்கும் போது தீயை 
அணைத்து விடவும்,

இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், 
குடிக்கவும் செய்யலாம். இது பல்வேறு 
நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

Dienstag, 20. Mai 2014

மரக்கறி பிரியானி

தேவையான பொருட்கள் 
பாஸ்மதி அரிசி - 2கப் 
தண்ணீர் - 4கப் 
உப்பு . தேவையானளவு 
ஏலக்காய் - 6
கறுவாப்பட்டை -6
கிராம்பு -6 
பெருஞ்சீரகம் -2 தேக்கரண்டி 
பிரிஞ்சி இலை -2
பட்டர்- 2 மேசைக்கரண்டி 
நீளமாகவெட்டியகரட் -100கிராம் 
நீளமாகவெட்டியபீன்ஸ் -100கிராம் 
அவிந்த பட்டாணி -100கிராம் 
நீளமாகவெட்டியகோலிபிளவர் - அரைப்பூ 
நீளமாகவெட்டியகுடமிளகாய் - 2
நீளமாகவெட்டிய பெரிய வெங்காயம் - 2
சிறியதுண்டுகளாகவெட்டியதக்காளி- 10
எண்ணெய்-1மேசைக்கரண்டி 
தயிர் -2கப் 
மல்லித்தூள் -2தேக்கரண்டி 
கரம் மசாலத்தூள் -2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1தேக்கரண்டி
இஞ்சி -1 துண்டு 
உள்ளி -6 பல் 
பச்சைமிளகாய்-6
நறுக்கியகறிவேப்பிலை - தேவையானளவு 

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை 
போட்டு அதனுடன் தேவையானளவு 
தண்ணீர் விட்டு கழுவவும் .

கழுவியபின்னர்  அதனை அரை
மணித்தியாலம் ஊறவிடவும் 

அதன் பின்னர் அடுப்பில் ஒரு கனமான 
பாத்திரத்தை வைத்து சூடாக்கவும் 

பாத்திரம் சூடானதும் அதில் 1 
மேசைக்கரண்டி பட்டரை போட்டு 
உருக்கவும் 

பட்டர் உருகியதும்  அதில் பெருஞ்சீரகம் 
1 தேக்கரண்டி ,கறுவாப்பட்டை-4.கிராம்பு-4,
பிரிஞ்சி இலை,ஏலக்காய்-4 ஆகியவற்றை 
போட்டு தாளிக்கவும் .

அதன் பின்னர் ஊறிய அரிசியின் 
தண்ணீரை  நன்றாக வடிக்கவும் .

அதன் பின்னர் அதை தாளித்தவற்றுடன் 
போட்டு லேசாக வறுக்கவும் .

வறுத்த பின்னர் அதனுடன் 4 கப் தண்ணீர் ,
உப்பு ஆகியவற்றை போட்டு மூடி 
அவியவிடவும் .

அரிசி அவிந்து தண்ணீர் வற்றியதும் இப் 
பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி 
வேறு ஒரு இடத்தில் வைக்கவும் 

அடுப்பில் ஆவியில் வேகவைக்ககூடிய 
பாத்திரத்தை வைத்து அதில்  நீளமாக
வெட்டியகரட்,நீளமாகவெட்டிய
பீன்ஸ் ஆகியவற்றை போட்டு ஆவியில் 
வேகவிடவும் .

ஆவியில் வெந்ததும் அதனை எடுத்து 
வேறு ஒரு பாத்திரத்தில் போடவும் .

அதன் பின்னர் அடுப்பில் தாச்சியை 
வைத்து சூடாக்கவும் .

அதன்பின்னர் அதில் 1 மேசைக்கரண்டி 
பட்டரை போட்டு உருக்கவும் 

பட்டர் உருகியதும்  அதில் 1தேக்கரண்டி 
பெருஞ்சீரகத்தை போட்டு தாளிக்கவும் 

தாளித்தபின்னர் அதனுடன் வெங்காயம் 
தக்காளிப்பழம்-4  ஆகியவற்றை போட்டு 
அதனுடைய நிறம் மாற வதக்கவும் 

வதக்கியபின்னர் அதனுடன் கோலிபிளவர் 
குடமிளகாய் ஆகியவற்றை போட்டு ஓரளவு 
வதக்கவும் .

இவையாவும் வதங்கிய பின்னர் இதனுடன் 
ஆவியில் வெந்த கரட்,பீன்ஸ் உப்பு 
ஆகியவற்றை போட்டு காய்கறிகள் 
குழையாமல்  வேகவைக்கவும் 

அவையாவும் வேந்த பின்னர் அடுப்பில் 
இருந்து தாட்சியை இறக்கவும் 

இஞ்சி -1 துண்டு, உள்ளி -6 பல். பச்சை
மிளகாய்-6 ஆகியவற்றை பசையாக 
அரைக்கவும் 

இதில் இருந்து 1 மேசைக்கரண்டி 
அளவினை எடுத்து  தனியாக 
வைக்கவும் 

தயிரில் மல்லித்தூள்,கரம் மசாலத்தூள் 
மிளகாய்த்தூள் ,மஞ்சள் தூள் ஏலக்காய் - 2
கறுவாப்பட்டை -2கிராம்பு-2பசையாக 
அரைத்தவை (இஞ்சி ,உள்ளி பச்சை
மிளகாய்) சிறிய துண்டுகளாகவெட்டிய 
தக்காளி- 6,நறுக்கியகறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு கலந்து 1 
மணித்தியாலம் ஊறவிடவும் 

 1மணித்தியாலத்தின் பின்னர் அடுப்பில் 
வாய் அகன்ற பாத்திரத்தை  வைத்து அதில் 
வதக்கிய காய்கறிகள் ,ஊறிய தயிர்கலவை
ஆகியவற்றை சேர்த்து ஒரளவு சூட்டில் 
வைத்து கிளரவும் .

(காய்கறிகள் குழைந்து போகக்கூடாது )

மசாலாக்களில் உள்ள நீர் வற்றியதும் 
அடுப்பை அணைத்து பாத்திரத்தை 
அடுப்பில் இறந்து இறக்கவும் .

அதன் பின்னர் வாய் அகன்ற தட்டில் 
பிரியாணி சோற்றின்  ஒரு பகுதியை 
பரப்பி வைக்கவும் .

அதன் பின்னர் அதன் மேல் ஒரு பகுதி 
காய்கறி கலவையை பரப்பவும் .

அதன் பின்னர் அதன் மேல் பிரியாணி 
சோற்றின்  இன்னொரு  பகுதியை பரப்பி 
வைக்கவும் .

அதன் பின்னர் அதன் மேல் இன்னொரு 
பகுதி காய்கறி கலவையை பரப்பவும் 


அதன் பின்னர் அதன் மேல் பிரியாணி 
சோற்றின்  இன்னொரு  பகுதியை பரப்பி 
வைக்கவும்.


அதன் பின்னர் அதன் மேல் இன்னொரு 
பகுதி காய்கறி கலவையை பரப்பவும்.

அதன் பின்னர் அதன் மேல் பிரியாணி 
சோற்றின்  இன்னொரு  பகுதியை பரப்பி 
வைக்கவும்.

அதன் பின்னர் அதன் மேல் இன்னொரு 
பகுதி காய்கறி கலவையை பரப்பவும்.

இப்படி லேயர்லேயராக எல்லாவற்றையும் 
போடவும் .

போட்டபின்னர் இனி அத்தனை 
லேயரையும் மெதுமெதுவாக 
முள்ளுக்கரண்டியால் கிளறவும் 

தம் செய்யும் விதம் 

கனமான அடியுள்ள சிறிதளவு 
நெய் தடவிய பாத்திரத்தில்
கிளறிய பிரியாணியை  போடவும்.

அதன் பின்னர் அதனை குறைந்தளவு  
நெருப்புள்ள அடுப்பில் வைத்து 
அப்பாத்திரத்தை மூடவும் .

மூடிய பின்னர் 5நிமிடம் விடவும் .

அதன் பின்னர் அப்பாத்திரத்தை 
அடுப்பில் இருந்து மூடியை திறந்து 
பரிமாறவும் .

Montag, 19. Mai 2014

பாசிப்பருப்பு பகோடா

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 1/2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - அரை இன்ச்
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில்
நறுக்கிக் கொள்ளவும். 

பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் 
கொள்ளவும்.

 இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற 
வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து 
விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் 
தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக 
அரைக்கவும்.

அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில்
 எடுத்துக் கொள்ளவும்.

 அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை 
மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து 
 கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 
பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து 
எண்ணெயில் உதிர்த்து விடவும்.

 இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் 
எடுக்கவும்.

Sonntag, 18. Mai 2014

கோதுமைமா குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:
கோதுமை மா- ஒரு கப்
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பட்டாணி - கால் கப்
மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

உருளைக்கிழங்கையும் 
பட்டாணியையும் வேகவைக்கவும்.

உருளைக்கிழங்கை தோல் உரித்து, 
வெங்காயம், மிளகாய்தூள், சிறிது 
உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய 
உருண்டைகளாக உருட்டவும்.

 கோதுமை மாவில் உப்புப் போட்டுக் 
கரைத்துக் கொள்ளவும்.

 உருட்டி வைத்துள்ள மசாலா 
உருண்டைகளை, கோதுமை மாவி
ல் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் 
எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் 
எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் 
எடுக்க வேண்டும்.

Samstag, 17. Mai 2014

காரச்சேவு

தேவையான பொருட்கள்:
கடலை மா - 1 கிலோ
டால்டா - 100 கிராம்
அரிசி மா- 100 கிராம்
மிளகு தூள் - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா மா, பெருங்காயப்பொடி - 1 டீ ஸ்பூன்
நசுக்கிய பூண்டு - சிறிதளவு
எண்ணெய் - 500 கிராம்

செய்முறை

எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும்
 சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 
கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
 காரச்சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் 
பிரித்து கொள்ளவும்.

Freitag, 16. Mai 2014

பாசிப்பருப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்:
வறுத்துபொடித்தசலித்த பாசிப்பருப்பு மா - 1-1/2 கப்
ஊறவைத்து, இடித்துசலித்த அரிசி மா - 5 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1/2 டீ ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்
தேவையான - உப்பு
தேவையான எண்ணெய்

செய்முறை:
மா வகைகள், உப்பு, பெருங்காயப்பொடி
, எள், வெண்ணெய் அனைத்தையும்
 சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு
 பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு
 சூடான எண்ணெயில் பிழிந்து 
எடுக்கவும்.

Donnerstag, 15. Mai 2014

முந்திரி முறுக்கு

தேவையான பொருள்கள்:
பதப்படுத்திய பச்சை அரிசிமா   - 1/2 கிலோ
முந்திரி பருப்பு - 100 கிராம்
நெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

 முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற
வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

 பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய், உப்பு,
விழுது சிறிது நீர் சேர்த்து முறுக்கு மா
 பதத்திற்கு கெட்டியாக பிசைந்து முறுக்கு
அச்சில் பிழிந்து எண்ணெயில்
பொரித்தெடுக்கவும்.

சுவையான சத்தான முறுக்கு ரெடி.

Mittwoch, 14. Mai 2014

பட்டர் சிக்கன்

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பட்டர்  - 3 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்(துருவியது)
பூண்டு  - 3
பல்லாரி - 2
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 5
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய்தூள் - டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - 10 இலைகள்
மல்லித்தழை - 1 கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.

நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு(அரை பல்லாரி) மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பல்லாரியை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் தண்ணீ­ர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வைத்தால் தண்ணீ­ர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.)

 சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்­ணீரை வற்ற விடவும்.

சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.

பட்டரை  கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

 கறிவேப்பிலையும் பல்லாரியும் மொறுமொறுப்பாக வந்தவுடன் வெந்த சிக்கன் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும்
.
 பட்டருடன் சிக்கன் நன்கு வதங்கி எண்ணை கொப்பளிக்கும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

பட்டரில் சுருண்ட சிக்கன் டார்க் கலராகும். அதுவரைக்கும் அடிபிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

மணமும் சுவையும் கொண்ட பட்டர் சிக்கன் ரெடி.

Dienstag, 13. Mai 2014

நண்டுக்கறி

தேவையான பொருட்கள்:
நண்டு - 2 பெரியது
தேங்காய் (திருவியது) - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 25
மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு

செய்முறை:
 நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

தாட்சியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.

 வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

 இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும்.

இடையிடையே கிளறி விடவும்.

15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

நண்டில் இருக்கும் தண்ணீ­ர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும்.

இப்போது சுத்தமான சுவையான சத்தான நண்டுக்கறி தயார்.

Montag, 12. Mai 2014

புளியோதரை

தேவையான பொருட்கள் 

சாதம் - 2 கப்

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 10


புளிக்காய்ச்சல் 

புளி - 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 3

கடுகு, உளுந்து, மஞ்சள் தூள் - தலா ஒரு டீஸ்பூன்

ஊறவைத்த கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - அரை டிஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - அரை கப்


புளிக்காய்ச்சல் பொடி


காய்ந்த மிளகாய் - 3

தனியா, கருப்பு எள் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

புளிக்காய்ச்சல்   செய்முறை 

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். பிறகு ஊறவைத்த கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றுங்கள். பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்தால் எண்ணெய் பிரிந்து மேலே வந்து நிற்கும். அதுதான் பதம். அப்போது தேவையான அளவு உப்பைப் போட்டுக் கலந்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியதும் உலர்வான பாட்டிலில் எடுத்து வையுங்கள்.

புளிக்காய்ச்சல் பொடிசெய்முறை

புளிக்காய்ச்சல் பொடி தயாரிக்கக் கொடுத்துள்ளவற்றில் காய்ந்த மிளகாயை மட்டும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்தெடுங்கள். தனியா, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். எள்ளைத் தண்ணீர் விட்டுக் களைந்து, வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.


புளியோதரை செய்முறை'

வடித்த சாதத்தை அகலமான தாம்பாளத்தில் போட்டு அதன் மேல் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றுங்கள். அதன் மீது கறிவேப்பிலை, புளிக்காய்ச்சல், புளியோதரைப் பொடி சேர்த்துக் கலந்துவிடுங்கள். முந்திரிப் பருப்பு, வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்துச் சேருங்கள். அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் மணமும் சுவையும் நிறைந்த புளியோதரை தயார்.

திங்கள்கிழமை


Sonntag, 11. Mai 2014

அலங்காரம்-திருமணம்,


Samstag, 10. Mai 2014

பிறந்தநாள் கேக்











Freitag, 9. Mai 2014

பிறந்தநாள் கேக்




Donnerstag, 8. Mai 2014

கேக் அலங்காரம்













Mittwoch, 7. Mai 2014

அலங்காரம்-பிறந்தநாள்,




Dienstag, 6. Mai 2014

ஓமப்பொடி

தேவையான பொருட்கள்

கடலை மா – 2 கப்
மிளகாய்த்தூள் – 5 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு
எண்ணெய் – பொரிக்க


    தயாரிக்கும் முறை


    ஒரு பாத்திரத்தில் கடலை மா, மிளகாய்த்தூள்(5 தேக்கரண்டி), உப்பு, தண்ணீர் ஆகியவற்றை போட்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்(முறுக்கு மாவைப் போல).

    கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டு பிழிந்து விடவும். 

    பாத்திரம் முழுவதும் நிரப்பி விட வேண்டாம்.

    எண்ணெயில் சிறு சிறு குமிழ்கள் வருவதைப் பார்க்கலாம்.

     டனடியாக ஓமப்பொடியை எடுத்து விடவும்.

    Montag, 5. Mai 2014

    திங்கள்கிழமை