கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 31. Dezember 2013

மாங்காய் ஊறுகாய்


தேவையான பொருட்கள் 

மாங்காய் - தேவையானளவு
மிளகாய் தூள் - தேவையானளவு
வெந்தயதூள் - தேவையானளவு
கடுகுத்தூள் - தேவையானளவு
பெருங்காயத்தூள்  - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
நல்லெண்ணை- தேவையானளவு 


செய்முறை

முதலில் மாங்காயின் விதையை 
நீக்கவும் 

அதன் பின்னர் அதனை மிகச்சிறிய 
துண்டுகளாக வெட்டவும் 

வெட்டிய பின்னர் சுத்தமான 
மட்பாத்திரம்பிங்கான பாத்திரம் 
அல்லது கண்ணாடிப்பாத்திரம் 
இதில் ஏதாவது ஒன்றை 
எடுக்கவும் 

வெட்டிய மாங்காய் துண்டுகளில் 
சிலவற்றை எடுத்து ஒரு வரிசை 
அடுக்கவும் 

அடுக்கிய பின்னர் அதன் மேல் 
சிறிதளவு மிளகாய்தூள் சிறிதளவு 
வெந்தயதூள் சிறிதளவு பெருங்காயத்
தூள் சிறிதளவு கடுகுத்தூள் சிறிதளவு 
உப்பு ஆகியவற்றை போடவும் 

அதன் பிறகு அதன் மேல் சிறிதளவு 
நல்லெண்ணை விடவும் 

அதன் பின்னர் வெட்டிய மாங்காய் 
துண்டுகளில் சிலவற்றை எடுத்து 
அடுத்த வரிசை அடுக்கவும் 

அடுக்கிய பின்னர் அதன் மேல் 
சிறிதளவு மிளகாய்தூள் சிறிதளவு 
வெந்தயதூள் சிறிதளவு பெருங்காயத்
தூள் சிறிதளவு கடுகுத்தூள் சிறிதளவு 
உப்பு ஆகியவற்றை போடவும் 

அதன் பிறகு அதன் மேல் சிறிதளவு 
நல்லெண்ணை விடவும்

 அதன் பின்னர் வெட்டிய மாங்காய் 
துண்டுகளில் சிலவற்றை எடுத்து 
அடுத்த வரிசை அடுக்கவும் 

அடுக்கிய பின்னர் அதன் மேல் 
சிறிதளவு மிளகாய்தூள் சிறிதளவு 
வெந்தயதூள் சிறிதளவு பெருங்காயத்
தூள் சிறிதளவு கடுகுத்தூள் சிறிதளவு 
உப்பு ஆகியவற்றை போடவும் 

அதன் பிறகு அதன் மேல் சிறிதளவு 
நல்லெண்ணை விடவும் 

இப்படியே வெட்டிய மாங்காய் 
முழுவதையும் செய்யவும் 

பின்னர் சிறிதளவு நல்லெண்ணையை 
அதன் மேல் ஊற்றவும் 

ஊற்றிய பின்னர் பாத்திரத்தின் மேல் 
சுத்தமான வெள்ளைத்துணியை போட்டு
 மூடி காற்றூட்புகாதவாறு இறுக்கமாக 
கட்டவும் 

அதன் பின்னர் இதை ஓரிடத்தில் 
வைக்கவும்  ஒரு கிழமைக்கு அதற்கு 
அருகில் செல்லக்கூடாது 

ஒரு கிழமையின் பின்னர் அந்த 
பாத்திரத்தை கட்டியபடியே எடுத்து  
ஒரு குழுக்கு குழுக்கி வைக்கவும் 

குழுக்கி வைத்த பின்னர் பாத்திரத்தின் 
மேல் கட்டிய துணியை அகற்றி 
பார்க்கவும் 

அப்போது இலகுவான சுத்தமான 
சுவையான நல்ல வாசனையான 
மாங்காய் ஊறுகாய் தயாராகிவிடும் 

அதன் பின்னர் மாங்காய் ஊறுகாய்
 தேவைப்படும் போது சுத்தமான 
நீர்தண்மையற்ற மர கரண்டியால் 
எடுத்து உபயோகிக்கலாம் 

Montag, 30. Dezember 2013

மில்க் ரொபி..

தேவையான.பொருட்கள்:-

ரின் மில்க் - 1 ரின்
சீனி - 2 சுண்டு (தலை தட்டி)
வனிலா - 1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி (மட்டமாக)
தண்ணீர் - 1/2 தம்ளர் / 10 மே.க
மாஜரின் - 2 மே.க (நிரப்பி)


செய்முறை:-

தாச்சியில் ரின் மில்க் , தண்ணீர் , சீனி 
மூன்றையும் போட்டு கரண்டியால் 
நன்கு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவை உள்ள தாச்சியை ஒரே 
அளவாக எரியும் அடுப்பில் வைத்து 
அடிப்பிடிக்காதவாறு கிளறிக் காய்ச்சவும்.

கலவை தடிக்கத் தொடங்கியதும் 
மாஜரின் , 1 மேசைக்கரண்டி ஏலப்பொடி, 
வனிலா மூன்றையும் சேர்த்து கிளறவும்.

சட்டியில் ஒட்டாது திரண்டு வரும் பதத்தில் 
இறக்கி மாஜரின் பூசிய தட்டு ஒன்றில் 
கொட்டிப் பரவவும்.

தட்டு முழுவதும் பரவும் வண்ணம் 
பூரிக்கட்டையால் நன்றாக பரப்பி, கத்தியால் 
உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கீறி 
விட்டு நன்றாக ஆறிய பின் பரிமாறலாம்.

Sonntag, 29. Dezember 2013

பருத்தித்துறை வடை


தேவையானபொருட்கள்

உழுந்து - 1/2 சுண்டு,
அவிக்காத வெள்ளை மா - 1 - 2 சுண்டு 
செ.மிள. பொடி - 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி 
உப்பு - தேவையானளவு 
பொடியாக வெட்டியகறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையானளவு 

செய்முறை 

உழுந்தை 2 மணி நேரம் ஊற 
வைக்கவும்.

உழுந்து ஊறியதும் அத்துடன் 
மற்றைய பொருட்களை சேர்த்து 3 -4
 மே.கரண்டி எண்ணெய் விட்டு 
நன்றாகக் குழைக்கவும்.

சிறிய பாக்களவு உருண்டைகளாக 
உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி 
வட்டமாக்கி ( மெல்லியதாக) 
கொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் 
விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள
 வடைகளை போட்டு பொன்னிறமானதும் 
எடுக்கவும்.

குறிப்பு  

அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு
பார்க்கவும்

Samstag, 28. Dezember 2013

கேக் ஜசிங் செய்யும் முறை


Freitag, 27. Dezember 2013

ரவா கேசரி .-2


தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்
சீனி - 1 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - 5 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கேசரிப்பவுடர் - தேவையானளவு
முந்திரி பருப்பு (கயூ)- 15-20
முந்திரி வற்றல் (பிளம்ஸ்)  - சிறிதளவு
ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை 

ரவையை 7 நிமிடம் குறைவான சூட்டில் வறுத்து வைக்கவும்.

முந்திரிப் பருப்பையும் ,முந்தரி வற்றலையும் (பிளம்ஸ்)நெய்யில் பொரித்து வைக்கவும்.

3 கப் தண்ணீரில் கேசரிப்பவுடரை நன்றாக கலந்து வைக்கவும்.

சட்டியை அடுப்பில் வைத்து , சட்டி சூடானதும் நெய்யையும் , எண்  ணெயையும் விட்டு அத்துடன் கலந்து வைத்திருந்த தண்ணீரையும் விட்டு கொதிக்க விடவும்.

கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக போட்டு நன்றாக சேரும் வண்ணம் கிளறவும்.

ரவை சேர்ந்ததும், சீனியையும் சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.

சட்டியில் ஒட்டாத பதத்தில் வரும் போது முந்திரிப்பருப்பு, முந்திரி வற்றல், ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

 பட்டர் தடவிய ஒரு தட்டில் பரவி விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
( விரும்பினால் எசென்ஸ் சேர்க்கலாம்.)

குறிப்பு 
நெய்யிற்கு பதிலாக பட்டரை பயன்படுத்தலாம் 

Donnerstag, 26. Dezember 2013

70 வது பிறந்தநாள் கேக்


Mittwoch, 25. Dezember 2013

உருளைக்கிழங்கு தோசை

தேவையான பொருட்கள் 

அவித்துதோலுரித்தஉருளைக்கிழங்கு - 2 
கோதுமை(மைதா)மா - 2 மேசைக்கரண்டி 
நறுக்கியபச்சை மிளகாய் - 2 
நறுக்கிய கருவப்பிலை - சிறிதளவு 
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 
உப்பு - தேவையானளவு 

 செய்முறை 

 அவித்துதோலுரித்த உருளைக்கிழங்கை 
 திருவிக் கொள்ள வேண்டும். 

 ஒரு பாத்திரத்தில் அவித்து தோலுரித்த 
 திருவிய உருளைக்கிழங்கு, கோதுமை 
(மைதா) மா , உப்பு,சிறிதளவுதண்ணீர் 
 ஆகியவற்றை போடவும் 

 அதன் பின்னர் அவற்றை இட்லி மா 
 பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும் 

இட்லிமா பதத்திற்கு கலந்தவற்றுடன் 
நறுக்கிய கருவப்பிலை நறுக்கிய
பச்சை மிளகாய் ஆகியவற்றை 
சேர்த்து நன்றாக கலந்து கொள்ள 
வேண்டும். 

 அதன் பிறகு ஒரு தோசைக்கல்லை 
 அடுப்பில் வைத்து சூடாக்கவும் 

 கல் சூடானதும் அதன் மேல் எண்ணெய் 
தடவி கலந்து மாவை தோசைகளாக 
ஊற்றி முன்னும்பின்னும் வேக வைத்து
 எடுத்தால், உருளைக்கிழங்கு தோசை ரெடி

Dienstag, 24. Dezember 2013

அவல் கேசரி..


தேவையானபொருட்கள்

அவல் - 2 கப்
சீனி - 1 கப்
நெய் - 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 15-20
ஏலக்காய் - 3 (பொடியாக்கி)
கேசரிப்பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை


முந்திரிப்பருப்பை 2 தேக்கரண்டி 
நெய்யில் வறுக்கவும்.

அவலை நன்றாக சிவக்க 
வறுக்கவும்.

 அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 
அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு அதில்  
கேசரிப் பவுடரை கலந்து கொதிக்க 
விடவும்.

கேசரிப்பவுடர் கலந்த தண்ணீர் 
கொதித்ததும் அவலைப் போட்டு 
வேக விடவும்.

அவல் வெந்து வரும் போது 
அதனுடன் சீனியைச் சேர்க்கவும்.

சீனி நன்றாக சேர்ந்து இளகிய பதம் 
வந்ததும் அதனுடன் நெய்யை 
சேர்க்கவும் 

 நெய் பிரிந்து வரும் பதத்தில் 
ஏலக்காயைப் பொடியாக்கி, 
முந்திரிப்பருப்புடன் சேர்த்துப் 
போட்டு கிளறி இறக்கவும். 

இப்போது சுத்தமான சுவையான 
அவல்கேசரி தயாராகிவிட்டது 

ஒருதட்டில் அவல் கேசரியை 
மெல்லிய சூட்டுடன் வைத்து 
பரிமாறவும்.

Montag, 23. Dezember 2013

சிக்கன் 65

தேவையான பொருட்கள் 
 சிறியதாக நறுக்கியஎலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
 மிளகு தூள் - 1 டீஸ்பூன்
 சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
 சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
 அரிசி மாவு - 1 டீஸ்பூன்
 முட்டை - 1
 கறிவேப்பிலை - சிறிது
 பச்சை மிளகாய் - 3
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை 

 சிக்கன் துண்டுகள நன்கு நீரில்
கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு,
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து,
10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.

 பின்னர் ஒரு பொளலில் சோள மாவு,
அரிசி மாவு, முட்டை, இஞ்சி பூண்டு
பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள்,
சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும்
உப்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.

 பிறகு ஊற வைத்துள்ள சிக்கன்
துண்டுகளை, சோள மாவு கலவையில்
சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்பு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் பொரிப்பதற்கு
 தேவையான அளவு எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.

 எண்ணெய் காய்ந்ததும், கறிவேப்பிலை
 மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1
நிமிடம் பொரித்து, எடுத்து விட
வேண்டும்.

 பின் அந்த எண்ணெயில் ஊற
வைத்துள்ள சிக்கன் துண்டுகளை
சேர்த்து, தீயை குறைவில் வைத்து
பொன்னிறமாக பொரித்து எடுக்க
வேண்டும்.

 இறுதியில் அதனை ஒரு தட்டில்
போட்மு, அதன் மேல் பொரித்து
வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும்
பச்சை மிளகாய் தூவி அலங்கரித்து
 பரிமாறினால், சுவையான ஆந்திரா
ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி ரெடி.

Sonntag, 22. Dezember 2013

சப்பாத்தி, பூரி

சப்பாத்தி, பூரி செய்வதற்கு கோதுமையை அரைக்கும் போது ஒரு கிலோவிற்கு கால் கிலோ வீதம் கொண்டைக்காலையோ அல்லது சோயாவோ சேர்த்து அரைத்தால் மேலும் சத்தான மா கிடைக்கும்.

Samstag, 21. Dezember 2013

காய்கறி

காய்கறிகளை திறந்த பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும். 

Freitag, 20. Dezember 2013

கிழங்கு

கிழங்குகளை மூடி பாத்திலத்தில் வேகவைக்க வேண்டும். 

Donnerstag, 19. Dezember 2013

பஜ்ஜி

பஜ்ஜிக்கு மா கரைக்கும் கடலை மாவுடன், அரிசி மாவிற்கு பதில் இட்லி மாவு சேர்த்து கரைத்து பஜ்ஜி சுடலாம். சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி மிருதுவாக இருக்கும்.

Mittwoch, 18. Dezember 2013

சேமியா

சேமியாக, ஜவ்வரிசி பாயாசம் செய்த பின்னர் அதில் ஒரு டம்ளம் வெந்நீர் ஊற்றி வைத்தால் பாயாசம் கெட்டியாகாமல் இருக்கும். 

Dienstag, 17. Dezember 2013

வெந்தயம்

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு குழம்பை இறக்கும்முன் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும். 

Montag, 16. Dezember 2013

பூரி

பூரி செய்ய தயாரிக்கும் மாவை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும். 

Sonntag, 15. Dezember 2013

திருமணகேக்




Samstag, 14. Dezember 2013

பேரிச்சம்பழகேக்



 பேரீச்சம்பழத்தில் அதிகளவு இரும்புசத்து
நிறைந்ததுள்ளது பேரீச்சம்பழத்துடன்
கொழுப்புசத்து நிறைந்த பட்டர் காபோவைத
ரேற்று சத்து நிறைந்த மைதாமா(கோதுமை)
மா கயூ, பிளம்ஸ் ஆகியவை சேர்ந்து பேரீச்சம்
பழ கேக் மிக மிக சுவையுடன் காணப்படும் .

 தேவையான பொருட்கள் 

பேரீச்சம்பழம் - 800 கிராம்
கோதுமை மா - 500 கிராம்
உருக்கியபட்டர் - 500 கிராம்
சீனி - 350 - 400கிராம்
முட்டை - 8
பிளம்ஸ்(சிறுதுண்டுகளாகவெட்டிய) - 300 கிராம்
வனிலா - (2 - 4 ) தேக்கரண்டி
தேயிலை - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
கயூ(சிறுசிறுதுண்டுகளாகவெட்டிய) - (100 )கிராம்

 செய்முறை 

முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் விதை
நீக்கிய பேரீச்சம்பழத்தினை சிறுசிறு துண்டு
களாக வெட்டிய பின்பு அதனுடன் சிறுசிறு
துண்டுகளாக வெட்டியபிளம்ஸ் சேர்த்து
நன்றாககலக்க வேண்டும்.

 அதன் பின்னர் இவையிரண்டையும் தேனீரில் ஊறவைக்கவேண்டும்(பேரீச்சம்பழம்,பிளம்ஸ்
 இவையிரண்டும் தேநீரில் மூழ்கி இருக்க
 வேண்டும்).

 அடுத்த நாள் ஒரு பாத்திரத்தில் உருக்கிய
 பட்டர், சீனி, முட்டை ஆகிய மூன்றையும்
 ஒன்றாய்சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக
 அடிக்க வேண்டும்.

 சீனி நன்றாக கரையும் வரை கலந்து அடித்த
 பின்பு அதனுடன் கோதுமைமா(மைதாமா).
 பேக்கிங்பவுடர் கலந்துஅரித்து அடித்தகலவை
 யுடன் வனிலாகலக்கவும்.

 அதன் பின்பு இக்கலவையுடன் பேரீச்சம்பழக்
 கலவை சிறு சிறு துண்டுகளாக வெட்டிய கயூ
 ஆகியவற்றை போட்டு ஒரளவாக கலக்கவும்.

 அதன் பின்பு அளவான கேக் தட்டில் பட்டர்
 தடவி அதில் கேக்கலவையை தட்டின்
 அரைவாசிஉயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி
 250 டிகிரியில் 20 நிமிடங்கள் அதன் பின்பு 200
 டிகிரியில் 20அல்லது 25 நிமிடங்கள் (உங்கள்
 ஓவனின் வெப்ப தட்பத்தை பொறுத்து உள்ளது)
 பேக் செய்யவும்.

பேக்கிங்செய்தபின்பு செய்வதிற்கு இலகுவான
 சுவையான சத்தான பேரீச்சம்பழ கேக்
 தயாராகிவிடும். ´

 கவனிக்க வேண்டிய விசயங்கள்- 

 நல்லதேயிலைதூளாக இருக்கவேண்டும்.
 (அப்போது தான் கேக் நல்ல கொக்கோ
நிறமாகவும் அழகாகவும் இருக்கும்)

 ஆயத்த நேரம்

 40 நிமிடங்கள்

 சமைக்கும் நேரம் 

 (45- 50) நிமிடங்கள்

Freitag, 13. Dezember 2013

வடையின் மேல்புறத்தை பொருமொருப்பாக அதிக நேரம் வைத்திருக்க


வடையின் மேல்புறத்தை 
பொருமொருப்பாக அதிக 
நேரம் வைத்திருக்க

ஒரு கோப்பை உளுந்துக்கு ஒரு 
தேக்கரண்டி பச்சரிசி அல்லது
 துவரம்பருப்பை சேர்த்து ஊற
வைத்து அரைக்கவும். 

Donnerstag, 12. Dezember 2013

பிறந்தநாள்கேக்


Mittwoch, 11. Dezember 2013

திருமணக்கேக்


Dienstag, 10. Dezember 2013

திருமணகேக்


Montag, 9. Dezember 2013

பிறந்தநாள்கேக்


Sonntag, 8. Dezember 2013

திருமணகேக்


Samstag, 7. Dezember 2013

காய்கறி

காய்கறிகளை துணிப்பைகளில் போட்டு வைத்தால் அதனுடைய நீர் சத்து குறைந்துவிடும். 

Freitag, 6. Dezember 2013

உளுந்து வடை

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2  தேக்கரண்டி
இஞ்சி - தேவையானளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - 1/2  மேசைக்கரண்டி


செய்முறை:  

ஒரு பாத்திரத்தில் உளுத்தம் 
பருப்பை  போட்டு  அதனுள் 
தேவையானளவு தண்ணீர் விட்டு, 
இரவு படுக்கும் போது ஊற வைத்து 
விட வேண்டும்.

அதன் பின்னர் கிரைணடரில்  
மிளகை போட்டு நன்றாக  
அரைத்துக் கொள்ள வேண்டும். 

இஞ்சி, கறிவேப்பிலை பச்சை 
மிளகாய் ஆகியவற்றை சிறிதாக 
நறுக்கி  தனியாக வைத்துக் 
கொள்ளவேண்டும்.


அதன் பின்னர் உளுத்தம் பருப்பை கழுவி, 
அதனை கிரைண்டரில் போட்டு அதன் 
மேல் லேசாக தண்ணீர் விட்டு, 
நன்றாகவும்  மென்மையாகயும் சற்று 
கெட்டியாகவும்  அரைத்துக் கொள்ள 
 வேண்டும். 

பின்பு அரைத்த உளுந்து மாவில் 
மிளகுத் தூள், நறுக்கி வைத்திருந்த 
 இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் 
உப்பு சேர்த்து கலந்து கொள்ள 
வேண்டும்.

பிறகு தாட்சியை அடுப்பில்
 வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி 
சூடேற்ற  வேண்டும். 

அதே சமயம் ஒரு பாலிதீன் கவரை 
 எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் 
சிறிது தடவி, கொஞ்சம் உளுந்து
 மாவை எடுத்து, வட்டமாக தட்டி, 
எண்ணெய் சூடானதும் அதில் போட்டு 
பொன்னிறமாக முன்னும், பின்னும் 
பொரித்து எடுக்க வேண்டும்.

இதே போன்று அனைத்து மாவையும் 
செய்ய வேண்டும்.

இப்போது சுவையான சுத்தமான 
சத்தான உளுந்து வடை ரெடி

இதனை மிளகாய் சம்பல், 
  அல்லது தேங்காய் சட்னியுடன்   
அருமையாக இருக்கும். 

அல்லது ஒரு கப் காப்பி  , டீ குடித்துக் 
கொண்டேசாப்பிட்டால், அருமையாக 
இருக்கும். 

Donnerstag, 5. Dezember 2013

திருமணகேக்


Mittwoch, 4. Dezember 2013

பிறந்தநாள்கேக்


Dienstag, 3. Dezember 2013

திருமணகேக்


Montag, 2. Dezember 2013

பச்ச அரிசி

 பச்சஅரிசியில் கல் உப்பை சேர்த்து கலந்து வைத்தால் பூச்சி வராது

Sonntag, 1. Dezember 2013

பிறந்தநாள் கேக்


Samstag, 30. November 2013

திருமணகேக்


Freitag, 29. November 2013

பப்பாசிக்காய்அல்வா,

தேவையான பொருட்கள்

பப்பாசிக்காய்துண்டுகள் : 2 கப்
சர்க்கரை : 1 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் 
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
கேசரிபொடி- சிறிதளவு 



செய்முறை        

 பப்பாளிக்காயை தோல் நீக்கி 
துறுவிக்கொள்ளவும்.

முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து 
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். 

  பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது 
நெய்விட்டு துறுவிய பப்பாசிக்காய் 
போட்டு வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும் காய்ச்சின 
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.

பப்பாளி குழைந்து வரும், 

அதனுடன் சர்க்கரை  கேசரிபொடி 
ஆகியவற்றை சேர்த்து கிளறி 
விடவும்.

அல்வா சுண்டிவரும்போது 
மீதமுள்ள நெய்விட்டு 
கிளறிவரவும்.

பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் 
வரும்பொது முந்திரி, பாதாம், 
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்

பப்பாசிக்காய் அல்வா தயார்.

Donnerstag, 28. November 2013

திருமணகேக்


Mittwoch, 27. November 2013

சிக்கன் லிவர் பஜ்ஜி

தேவையானப் பொருட்கள்: 

 சிக்கன் ஈரல்- 1/4கிலோ 
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன் 
கடலைமா- 100கிராம் 
சோடாமா- 1சிட்டிகை
 கலர்பவுடர்- 1சிட்டிகை 
 இஞ்சிபூண்டுவிழுது- 1ஸ்பூன் 
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன் 
உப்பு – தேவைக்கு 
எண்ணெய்- பொறிக்க 

செய்முறை: 

ஈரலுடன் மஞ்சள்த்தூள் சேர்த்து 
கொஞ்சம் தண்ணீர் விட்டு 10நிமிடம்
 வேக வைத்து இறக்கவும். 

தண்ணீரய் வடித்து விட்டு ஈரலுடன் 
கடலைமாவு சோடாமாவு, கலர்பவுடர், 
இஞ்சிபூண்டுவிழுது, மிளகாய்த்தூள் 
உப்பு தேவையான தன்னீர் ஊற்றி 
கொஞ்சம் திக்காக கலந்து வைக்கவும். 

 வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் 
பஜ்ஜியில் முக்கிய ஈரலை பொறித்து 
எடுக்கவும்.

Dienstag, 26. November 2013

முளைகட்டிய நவதானிய சூப்

முளைகட்டிய நவதானிய சூப் 

தேவையானவை


முளைகட்டிய பயறுகள் - ஒரு கப், 
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பால் - 1 கப்
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,
உப்பு - தேவையான அளவு. 



செய்முறை


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். 

மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். 


காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். 

பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Montag, 25. November 2013

பப்பாசிபழ அல்வா

தேவையான பொருட்கள்

பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப்
நெய் : 4 தேக்கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் 
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7

செய்முறை    



முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து 
சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். 

  பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்
கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது 
நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை 
போட்டு வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும் காய்ச்சின 
பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.

பப்பாளி குழைந்து வரும், 

அதனுடன் சர்க்கரை சேர்த்து 
கிளறி விடவும்.

அல்வா சுண்டிவரும்போது 
மீதமுள்ள நெய்விட்டு 
கிளறிவரவும்.

பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் 
வரும்பொது முந்திரி, பாதாம், 
ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்

.பப்பாளி பழ அல்வா தயார்.

குறிப்பு:

பப்பாளி நன்றாக பழுத்ததாக 

இருக்கவேண்டும் (தோல் 
மஞ்சள் நிறமாக இருக்கும்)

பப்பாளி இயல்பாகவே இனிப்பு 
என்பதால் சர்க்கரை அளவை 
குறைத்துக்கொள்ளுங்கள்.

Sonntag, 24. November 2013

கல் தோசை

 தேவையானவை

தோசை மா – இரண்டு கப்
எண்ணெய்  - தேவையானளவு


 செய்முறை

சூடான தோசைக் கல்லில்,
மாவை சற்று கனமாக விட்டு,
சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி,
மிதமான தீயில் வேக விடவும்.

அப்போதுதான் ஓரத்தில் முறுகலாகவும்,
நடுவில் ‘மெத்’தென்றும் இருக்கும்

. இதனை ஒரு பக்கம் மட்டுமே வேக
வைக்க வேண்டும்.

 எந்த சட்னி வைத்து பரிமாறினாலும்
சுவையாக இருக்கும்.

Samstag, 23. November 2013

பீட்சா தோசை


தேவையானவை: 

இட்லி மா– 2 கப், 
நறுக்கிய வெங்காயம்-1 
குடமிளகாய் -1
 தக்காளி –1 
 பச்சை மிளகாய் – 2
சீஸ் துருவல் – 2 மேசைகரண்டி
தக்காளி கெட்சப் – ஒரு மேசைகரண்டி
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)– 2 பல்,
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய்– தேவையானளவு
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை

தாட்சியில் வெண்ணெய் விட்டு நறுக்கிய 
உள்ளி(பூண்டு), வெங்காயம், குடமிளகாய், 
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், 
உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி
தக்காளி, சிறிதளவு சீஸ் துருவல் 
சேர்த்து இறக்கவும். 

 தோசைக் கல் சூடானதும் எண்ணெய் 
தேய்த்து, சற்று தடிமனாக மாவை 
வார்த்து மூடி வைத்து, அடுப்பை 
மிதமான தீயில் வைக்கவும். 

பிறகு, மூடியைத் திறந்து.. தோசை 
மீது தக்காளி கெட்சப் விட்டு, வதக்கிய 
காய்கறியைப் பரப்பி, கடைசியாக 
வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல் 
ஆகியவற்றைத் தூவி, வாசனை 
வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

Freitag, 22. November 2013

புளிப்பு-கார தோசை

தேவையானவை:

 புழுங்கல் அரிசி -ஒரு கப்,
பச்சரிசி – ஒரு கப், 
கடலைப்பருப்பு – அரை கப், 
புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், 
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4, 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
எண்ணெய், தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு, 

 செய்முறை:

 புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பைத் 
தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற 
வைக்கவும். 

அவற்றை ஒன்றாக்கி, தேங்காய் துருவல், 
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 
அரைக்கவும். 

கடைசியாக, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, 
20 முதல் 30 நிமிடங்கள் வரை புளிக்க 
வைத்து, தோசைக்கல்லில் எண்ணெய் 
தேய்த்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும். 

 இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னி 
தேவையில்லை

வெள்ளிக்கிழமை


Donnerstag, 21. November 2013

பனீர் தோசை

தேவையானவை

தோசை மா– இரண்டு கப், 
பனீர் துருவல் – ஒரு கப், 
நறுக்கிய பச்சை மிளகாய் – 3, 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, 
சீரகம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய்- தேவையானளவு. 
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை:

 பனீர் துருவலுடன் பச்சை மிளகாய்,
 கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து
 நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். 

தோசைக் கல்லில் மாவை தோசையாக 
வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு 
பாதி வெந்ததும் பனீர் கலவையை
 அதன் மேலே தூவி, சிறிது நேரம் 
மூடி வைக்கவும். 

பிறகு மூடியைத் திறந்து தோசையை 
திருப்பி போட்டு, வெந்தவுடன் 
எடுத்து சூடாகப் பரிமாறவும்.

Mittwoch, 20. November 2013

தக்காளி தோசை

தேவையான பொருட்கள் :
அரிசி - மூன்று கப்
உளுந்து மூன்று கப்,
துவரை ஒரு கப்
தக்காளி எட்டு
வெங்காயம் இரண்டு.
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்,
பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை : 

முதலில் தக்காளியை வெந்நீரில் 
இட்டு தோலை உரித்து விடவும், 

பின்னர் நாம் உளுந்து மா  அரிசி 
ஆட்டி(வழக்கமாக மாவு அரைப்பது 
போல), மாவை எடுக்கும் தருவாயில்
 மூன்று அல்லது நாலு தக்காளியை 
மாவில் விட்டு ஆட்டவும். 

சில சுற்றுக்களில் தக்காளி அரைத்ததும் 
மாவை எடுத்து, சில மணி நேரம் 
மாவை புளிக்க விடவும்

.வெங்காயத்தை சிறிதாக அரிந்து, 
வாணலியில் இட்டு வதக்கிப், பின்னர் 
அதில் மீதம் உள்ள தக்காளியை 
நறுக்கி அல்லது பிய்த்து போட்டு,
மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள் 
சேர்த்து வதக்கி, மாவில் கலக்கி 
தோசை இடவும்

Dienstag, 19. November 2013

பப்பாளி தோசை


தேவையானவை: 
தோசை மா – இரண்டு கப், 
பப்பாளிப்பழத் துண்டுகள் – ஒரு கப், 
பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் – 3, 
வெங்காயம் – ஒன்று, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

 செய்முறை: 

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு 
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் 
(அ) காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். 

கடைசியாக, பப்பாளிபழத் துண்டுகளைப் 
போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். 

ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து, 
தோசை மாவில் கலந்து தோசைகளாக 
வார்த்தெடுக்கவும்.

சுரைக்காய் தோசை

தேவையான பொருட்கள்

அரிசி- 3 கப் 
துவரம் பருப்பு- ஒரு பிடி
சிறிய சுரைக்காய் ஒன்று
உப்பு தேவையானளவு.

செய்முறை : 

அரிசியையும் துவரம் பருப்பையும் 
ஒன்றாக இட்டு, தண்ணீரில் ஒரு 
ஜந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

சுரைக்காயை தோலுரித்து அதன்
 சதைப் பகுதிகளை மட்டும் 
தனியாக வெட்டி எடுத்துப் பின்னர்
 மாஅரைக்கும் போது சுரைக்காயும் 
சேர்த்து அரைக்கவும்.

 மா புளிக்க வைத்து தோசை 
ஊற்றினால் மிகவும் மென்மையான 
சுவையான சுரைக்காய் தோசை ரெடி. 

Montag, 18. November 2013

புதினா – கொத்தமல்லி தோசை

தேவையானவை: 
தோசை மா – 2 கப், 
நறுக்கிய புதினா, –1/2 கப், 
கொத்தமல்லி –1/2 கப், 
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், 
பச்சை மிளகாய் – 3, 
பூண்டு – 2 பல். 

 செய்முறை: 

புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், 
பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து,
 எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

 இந்தக் கலவையை தோசை மாவுடன் 
கலந்து கொள்ளவும்

இதை தோசைக் கல்லில் எண்ணெய் 
தேய்த்து, தோசைகளாக வார்த்த
சுட்டெடுக் கவும்

.இது, வித்தியாசமான சுவையுடனும் 
மணத்துடனும் இருக்கும்.

Sonntag, 17. November 2013

கரட் தோசை

தேவையானவை

தோசை மா – இரண்டு கப், 
கரட் விழுது – அரை கப், 
பொடித்த காய்ந்த மிளகாய் – தேவையானளவு
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு – தேவையான அளவு. 

 செய்முறை: 

தோசை மாவில் கரட் விழுது, 
பொடித்த காய்ந்த மிளகாய், 
உப்பு சேர்த்து நன்கு கலந்து 
கொள்ளவும். 

தோசைக் கல்லில் சிறிது கனமாக 
மாவை வார்த்து, இருபுறமும் 
எண்ணெய் விட்டு வேகவிட்டு 
எடுக்கவும். 

(விருப்பப்பட்டால் பொடியாக 
நறுக்கிய வெங்காயத்தை மாவில் 
சேர்த்தும் செய்யலாம்). 

 இந்த தோசையை எந்த சட்னியுடனும் 
பரிமாறலாம்.

Samstag, 16. November 2013

பீட்ரூட் தோசை

தேவையானவை
தோசை மா – இரண்டு கப்
அரைத்த பீட்ரூட் விழுது – அரை கப்
எண்ணெய் – தேவையானளவு

 செய்முறை
 தோசை மாவுடன் பீட்ரூட் விழுதைச் 
சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

தோசைக் கல்லில் ஊத்தப்பத்தை விட 
மெல்லியதாக வார்த்து, இருபுறமும் 
எண்ணெய் விட்டு வெந்தவுடன் 
எடுத்துப் பரிமாறவும்

 சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம்.

சனிக்கிழமை


Freitag, 15. November 2013

வெள்ளிக்கிழமை


Donnerstag, 14. November 2013

வியாழக்கிழமை


Mittwoch, 13. November 2013

புதன்கிழமை


Dienstag, 12. November 2013

செவ்வாய்க்கிழமை


Montag, 11. November 2013

திங்கள்கிழமை


Sonntag, 10. November 2013

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 9. November 2013

சனிக்கிழமை


Freitag, 8. November 2013

வெங்காய பஜ்ஜி


தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம்   -  3
கடலைமா  – 1  கப்
அரிசிமா– 1 மேசைக்கரண்டி
அப்பசோடா   – 1/2 சிட்டிகை
மிளகாய்த்தூள்  – 1  தேக்கரண்டி
சீரகம்  – 1 /2  தேக்கரண்டி
உப்பு  –தேவையானளவு 
எண்ணெய்  – தேவையானளவு

செய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய 
வட்டமாக வெட்டி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும். 

இன்னொரு பாத்திரத்தில் கடலைமா  
அரிசிமா  அப்பசோடா  மிளகாய்த்தூள்  
சீரகம் உப்பு  ஆகியவற்றை போடவும் 

அதன் பின்னர்  சிறிது தண்ணீர் விடவும் 

அதன் பின்னர் அவற்றை இட்லி மா 
பதத்தில் கரைக்கவும். 

பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து 
அதில் எண்ணெய் விட்டு நன்றாக 
சூடாக்கவும் 

பின்னர் வெங்காய வில்லைகளை 
கரைத்து வைத்துள்ள மாவில் நன்றாக  
அமிழ்த்து எடுக்கவும்

 அதன் பின்னர் அதனை   சூடான 
எண்ணெயில் போடவும் போட்ட 
வெங்காய வில்லைகளை பொரிய
விடவும்  

பின்னர் மற்றய பக்கம் திருப்பி 
போட்டு பொரியவிடவும் 

வெங்காய வில்லைகள் இருபுறமும் 
பொரிந்த பின்னர் அதனை எடுத்து 
ஒரு பாத்திரத்தில் வைக்கவும் 

இப்போது சுத்தமான சுவையான 
வெங்காய பஜ்ஜி தயாராகிவிட்டது 

அதன் பின்னர் இப்படியே எல்லா
வற்றையும் பொரித்தெடுக்கவும் 

பின்னர் ஒரு தட்டில் வெங்காய 
பஜ்ஜியை வைத்து அதனுடன் 
தேவையானளவு தக்காளி சோஸ் 
அல்லது மிளகாய் சோஸ் வைத்து 
பறிமாறவும்

வெள்ளிக்கிழமை


Donnerstag, 7. November 2013

வியாழக்கிழமை


Mittwoch, 6. November 2013

புதன்கிழமை


Dienstag, 5. November 2013

சோள தோசை





தேவையான பொருட்கள்

வெள்ளைச் சோளம்- 1 கப், 
பச்சையரிசி – 1 கப், 
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு. 
எண்ணெய் – தேவையானளவு. 

 செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் வெள்ளைச்
சோளம் தண்ணீர் ஆகியவற்றை 
போட்டு இரண்டு மணி நேரம் 
ஊற வைக்கவும். 

இன்னொரு பாத்திரத்தில் பச்சையரிசி 
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 
இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். 

வேறு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு 
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 
இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். 

பிறகு கிரைண்டரில் ஊறிய வெள்ளை 
சோளம் தண்ணீர் ஆகியவற்றை  
போட்டு தோசைமா பதத்தில் தனியாக 
அரைக்கவும். 

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் 
போட்டு வைக்கவும்

பின்பு கிரைண்டரில் ஊறிய உளுத்தம்
பருப்பு தண்ணீர் ஆகியவற்றை  போட்டு 
தோசைமா பதத்தில் தனியாக 
அரைக்கவும். 

அரைத்தவற்றை அரைத்தசோளம் போட்ட
 பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

பின் கிரைண்டரில் ஊறிய பச்சையரிசி  
தண்ணீர் ஆகியவற்றை  போட்டு 
தோசைமா பதத்தில் தனியாக 
அரைக்கவும்

அரைத்தவற்றை அரைத்த சோளம் 
உழுத்தம்பருப்பு ஆகியவை போட்ட  
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

பிறகு பாத்திரத்தில் போட்ட எல்லா 
மாவையும் ஒன்றாக கலந்து 
அதனுடன் உப்பு போட்டு கலக்கவும். 

கலந்த பின்னர் இந்த மாவை, 10 முதல் 
12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். 

சூடான தோசைக் கல்லில், எண்ணெய் 
பூசிஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் 
வகையில் அரைத்த மாவை தோசைக்
கல்லில் ஊற்றவும்.

அதன் பின் ஒரு பக்கம் வேகவிடவும்

பிறகு சிறித்தளவு எண்ணெயை தோசை 
மேல் விடவும் 

அதன் பின்னர் தோசையை மற்றைய
பக்கம் திருப்பிப் போட்டு வேகவிடவும் 

தோசை இருபக்கமும் நன்றாக வெந்ததும் 
எடுக்கவும். 

இப்போது சுத்தமான சுவையான சத்தான 
சோளதோசை தயாராகிவிட்டது  

அதன் பின்னர் எடுத்த தோசையை
 ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும் 

இப்படியே மற்றதோசைகளையும் சுட்டு 
எடுத்து முதல் தோசை போட்ட 
பாத்திரத்தில் வைக்கவும்

பின்பு ஒரு தட்டில் தேவையானளவு 
தோசைகளை வைத்து அதனுடன் காய்கறி 
குருமா சிறிதளவு வைத்து பறிமாறவும்

செவ்வாய்க்கிழமை


Montag, 4. November 2013

சோயாபீன்ஸ் தோசை


தேவையான பொருட்கள்
சோயாபீன்ஸ் – 1கப்
புழுங்கல் அரிசி – 1கப் 
வெந்தயம் – 1தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு. 

 செய்முறை: 
 ஒரு பாத்திரத்தில் சோயாபீன்ஸை 
போடவும் 

அதன் பின்னர் அதனுள் சோயாபீன்ஸ் 
மூழ்கும் அளவு  தண்ணீர் விடவும் 

பின்பு அதனை 10 மணி நேரம் ஊற 
வைக்கவும்

இன்னொரு பாத்திரத்தில் புழுங்கல் 
அரிசிவெந்தயம் ஆகியவற்றை 
போடவும் 

அதன் பின்னர் அதனுள்ஒரு கப் தண்ணீர் 
விடவும் 

பின்பு அதனை ஒரு மணி நேரம் ஊற 
வைக்கவும்

அதன் பின்னர் கிரைண்டர்ல் ஊறிய 
சோயாபீன்ஸ் தண்ணீர் ஆகியவற்றை 
போடவும் 

போட்டவற்றை தோசைப்பதத்தில் 
அரைக்கவும். 

அரைத்தவற்றை ஒருபாத்திரத்தில் 
போடவும் 

அதன் பின்னர் கிரைண்டர்ல் ஊறிய 
புழுங்கல் அரிசி வெந்தயம் ஆகிய
வற்றை போடவும் 

போட்டவற்றை தோசைப்பதத்தில் 
அரைக்கவும். 

அரைத்தவற்றை  அரைத்த சோயாபீன்ஸ் 
போட்ட பாத்திரத்தில் போடவும் 

பாத்திரத்தில் போட்ட இரண்டு மாவையும் 
நன்றாக கலக்கவும் , 

பின்னர் அதனுடன் உப்பு போட்டு நன்றாக 
கலக்கவும் 

கலந்தவற்றை ஒரு இரவு முழுவதும் புளிக்க 
வைக்கவும். 

சூடான தோசைக் கல்லில் எண்ணெய் பூசவும் 

அதன் பின்னர் அதில் புளித்த மாவை விடவும் 

பின்னர் இருபுறமும் எண்ணெய் விட்டு 
தோசையாக சுடவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
சோயாபீன்ஸ்தோசை தயாராகிவிடும்

சுட்ட தோசைகளை ஒரு பாத்திரத்தில்
 போடவும்

இப்படியே மற்ற தோசைகளையும் சுட்டு 
பாத்திரத்தில் போடவும் 

 அதன் பின்னர் ஒரு தட்டில்  சுத்தமான 
சுவையான சத்தான சோயாபீன்ஸ் தோசை 
தேங்காய் சட்னி  ஆகியவற்றை வைத்து 
பறிமாறவும் 

திங்கள்கிழமை


Sonntag, 3. November 2013

ஞாயிற்றுக்கிழமை


Freitag, 1. November 2013

சனிக்கிழமை


Donnerstag, 31. Oktober 2013

வெள்ளிக்கிழமை


Mittwoch, 30. Oktober 2013

வியாழக்கிழமை


திருமணகேக் அலங்காரம்


புதன்கிழமை


Dienstag, 29. Oktober 2013

திருமணகேக்


செவ்வாய்க்கிழமை


Montag, 28. Oktober 2013

திருமணகேக் அலங்காரம்


திங்கள்கிழமை


Sonntag, 27. Oktober 2013

கச்சான்(வேர்க்கடலை) பக்கோடா


தேவையான பொருள்கள் 
வறுக்காதகச்சான்(வேர்க்கடலை)-1கப்
கடலை மா-1/2கப்
அரிசிமா-4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1தேக்கரண்டி
இஞ்சி,விழுது-1/2தேக்கரண்டி
பூண்டு விழுது-1/2தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு

செய்முறை 

ஒரு பாத்திரத்தில்  வறுக்காதகச்சான்
(வேர்க்கடலை) ,கடலை மா,உப்பு,
இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,அரிசி
மா ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்

கலந்தவற்றை 5நிமிடம் வைக்கவும்

அதன்  பிறகு அடுப்பில் தாட்சியை
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்

எண்ணெய் சூடானதும் அதில் கலந்து
வைத்துள்ளவற்றில் சிறிதளவை
கையில் எடுத்து சூடான எண்ணெய்யில்
 தூவி விடவும்

அதன் பின்னர் தீயை குறைவாக வைத்து
பொன்னிறமாக நன்கு பொரிய விடவும்

பொன்னிறமானக பொரிந்ததும் அடுப்பில்
உள்ள தாட்சியில் இருந்து எடுத்து வேறு
ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறவிடவும்

சூடு ஆறியதும் சுத்தமான சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)பக்கோடா
தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)
பக்கோடாவை போட்டு பறிமாறவும்

ஞாயிற்றுக்கிழமை