கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 27. Februar 2011

சைனீஸ் ஃபிரைட்ரைஸ்

சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் சுவையானது.
கார்போஹைட்ரேட் மினரல் கரோட்டீன்
விற்றமின்(ஏ,பி,சி), பொட்டாஷியம்
பொஸ்பரஸ் கல்சியம், இரும்பு மக்னீசீயம்
போன்ற பல சத்துகள் அடங்கியதும்
சீன மக்கள் விரும்பி உண்ணும் உணவாகும்.
ஆகவே இதனை செய்து பார்த்து இதன்
சுவையை அறிவதுடன் இதில் காணப்படும்
சத்துகளையும் பெற்றுக்கொள்ளலாம். 


தேவையான   பொருட்கள் 
பஸ்மதி அரிசி(ஊறவைத்தது) - 2 கப்
கரட் நறுக்கியது - 200 கிராம்
பீன்ஸ் நறுக்கியது - 200 கிராம்
கறிமிளகாய்(குடைமிளகாய்) நறுக்கியது - 200 கிராம்
பச்சைமிளகாய் கீறியது - 8
சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி
லீக்ஸ் - ஒரு பிடி
செலரி - ஒரு பிடி
பட்டர் - தேவையானளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் நறுக்கியது - ஒரு கப் (200 கிராம்)

செய்முறை 

பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு
செய்யவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கியபின்பு அதில் பட்டர்
கழுவி துப்பிரவு செய்த பாஸ்மதி அரிசி
ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.

அதன் பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை
இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு
பாத்திரத்தில் போடவும்.

பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை
வைத்து அதில் முக்கால் பகுதி தண்ணீர்
விட்டு அதனை கொதிக்க விடவும்.

அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும்
அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு
அவியவிடவும்.

அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும்
அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு
அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு
பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு
அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில்
வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு
பொன்னிறமாக வதக்கவும்.

பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில்
 நறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும்.

பீன்ஸ் வதக்கிய பின்பு அதில் நறுக்கிய
கரட் போட்டு வதக்கவும்.

 கரட் வதக்கியதில் நறுக்கிய கறிமிளகாய்
(குடைமிளகாய்) போட்டு வதக்கவும்.

கறிமிளகாய்(குடைமிளகாய்) வதக்கிய
பின்பு அதில் சோயாசாஸ் லீக்ஸ் செலரி
உப்பு ஆகியவற்றையும் போட்டு பாத்திரத்தை
டைட்டாக மூடி மெல்லிய நெருப்பில்(தீயில்)
வேகவிடவும் .

வெந்த பின்பு இதனுடன் சோற்றை(சாதத்தை)
போட்டு நன்றாக கலந்தால் தாளிப்போ அல்லது
கரம்மசாலாவோ இல்லாத சைனீஸ்ஃப்ரைட்
ரைஸ் தயாராகிவிடும்.

பின்பு ஒரு தட்டில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸை
வைத்து இதனுடன் கறிவேப்பிலை துவையல்
 அல்லது இஞ்சித்துவையல் அல்லது வேறு
ஏதாவது துவையலுடன் பரிமாறவும்.



எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 26. Februar 2011

தாய் ஃபிரைட்ரைஸ்

தாய் ஃப்ரைட்ரைஸ் சுவையானது நோய்
எதிர்ப்புச் சக்திநிறைந்தது கார்போஹைட்
ரேட், மினரல், கரோட்டீன், விற்றமின் ஏ,பி,
சி, பொட்டாஷியம், பொஸ்பரஸ், கல்சியம்,
இரும்பு, மக்னீசீயம் போன்ற பல சத்துகள்
அடங்கியது, தாய்லாந்து மக்கள் விரும்பி
உண்ணும் உணவாகும் இது மிக விரைவில்
சமிபாடடைய கூடியது ஆகவே இதனை
செய்து பார்த்து இதன் சுவையை அறிவதுடன்
இதில் காணப்படும் சத்துகளையும் பெற்றுக்
கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் 

ஊறவைத்தபாஸ்மதி அரிசி - 250 கிராம்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
நறுக்கியகோவா(முட்டைகோஸ்) - 2 கப்
நறுக்கியகரட் - ஒரு கப்
நறுக்கியகறிமிளகாய்(குடைமிளகாய்)- ஒரு கப்
நறுக்கியவெங்காயம் - ஒரு கப்
நறுக்கியதக்காளிப்பழம் - ஒரு கப்
நறுக்கியவெங்காயத்தாள் - 2
பேபிக்கான் - 4
துளசி இலை - ஒரு கட்டு
நறுக்கியஇஞ்சி - ஒரு தேக்கரண்டி
நறுக்கியஉள்ளி(பூண்டு)- 8 பல்
நறுக்கியபச்சைமிளகாய்- 10
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - தேவையானளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்தகச்சான்(இரண்டாக உடைத்தது) - சிறிதளவு
நறுக்கியகறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு - சிறிதளவு

செய்முறை 

பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு
செய்த பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு
அதில் போட்டு வறுக்கவும்.

வறுத்த பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை
(வாணலியை) இறக்கி வறுத்த அரிசியை
வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து
அதில் முக்கால்பகுதி தண்ணீர் விட்டு
அதனை கொதிக்க விடவும்.

அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில்
கழுவி வறுத்த அரிசியை போட்டு அவிய
விடவும்.

அரிசிஅவிந்து சோறு(சாதம்) ஆகியதும்
அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு
அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு
பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு
எண்ணெய் விட்டு சூடாக்கி அதில்
வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு)
,இஞ்சி, வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

இவையாவும் வதங்கியபின் இதனுடன்
கறிமிளகாய்(குடைமிளகாய்), கோவா
(முட்டைகோஸ்), காரட், துளசியிலை
ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.

இவையாவும் வதங்கிய பின்பு இதனுடன்
தக்காளிப்பழம், பேபிக்கானையும் சேர்த்து
 நன்றாக வதக்கவும்.

வதங்கிய பின்பு அஜினோமோட்டோ,
மிளகுத்துள், கறிவேப்பிலை, தேசிக்காய்
(எலுமிச்சம்பழ)சாறு, பட்டர் சேர்த்து
நன்றாக கலந்து ஒரு நிமிடத்தின் பின்பு
அடுப்பிலிருந்து இறக்கவும்.

அதன் பின்பு வாயகன்ற பாத்திரத்தில்
சோற்றையும்(சாதத்தையும்) வதக்கிய
காய்கறிகளையும் மாறிமாறி போட்டு
நன்றாக கலந்து அதன் மேல் வறுத்து
இரண்டாக உடைத்த கச்சானை
வேர்கடலையை) போட்டு அலங்கரிக்
கரித்த பின்பு சுவையான தாய் ஃப்ரைட்
ரைஸ் தயாராகிவிடும்.

அதன் பின்பு அதை பரிமாறவும்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர், துளசிஇலை, பேபிக்கான்,
இஞ்சி, உள்ளி(பூண்டு), கச்சான் (வேர்கடலை)
அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

வல்லரைத் துவையல்

வல்லாரை துவையல் மிகமிக சுவையானதும்
சத்தானதுமாகும். அத்துடன் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பப்
படும் ஒரு சிறந்த துவையலாகும். இதில்
விற்றமின் மினரல் நார்சத்து கல்சியம்இரும்பு
கொழுப்பு போன்ற பல சத்துகள் காணப்படு
கின்றன .


தேவையானபொருட்கள்  

கழுவியவல்லாரைக்கீரை - 150 கிராம்
பச்சைமிளகாய் - 5
உள்ளி(பூண்டு) - ஒரு பல்
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தேங்காய்ப்பூ - அரைப்பாதி ( விரும்பினால்)
வெந்தயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - மிகமிக சிறியளவு
தேசிக்காய்சாறு(லைம் ஜூஸ்) - 1 /2தேக்கரண்டி
கடுகு - அரைத்தேக்கரண்டி
சீரகம்(சோம்பு) - அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


செய்முறை 
அடுப்பில் வெறும் வாணலி(தாச்சி)யை
 வைத்து அதை சூடாக்கவும்.

பின்பு அதில் கடலைப்பருப்பினை
போட்டு நன்றாக வறுக்கவும்.

ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை
ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

பின்பு இதனைப்போல உளுத்தம்
பருப்பினையும் நன்றாக வறுக்கவும் .

ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை
ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

பின்பு இதனைப் போல பச்சை
மிளகாயை நன்றாக வறுக்கவும்.

வறுத்ததும் அதை ஒரு தட்டில் போட்டு
ஆறவிடவும்.

இதனைப் போல வெந்தயதை போட்டு
உடனே எடுத்துவிடவேண்டும்
(இல்லாவிட்டால் கைப்பு சுவை ஏற்படும்).

அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

இதனைப் போல பெருங்காயத்தூள்
போட்டு உடனே எடுத்துவிடவேண்டும்.
 (இல்லாவிட்டால் கைப்பு சுவை ஏற்படும்).

அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

 அதன் பின்பு கழுவிய வல்லாரையுடன்
இருக்கும் நீருடன் நன்றாக வறுக்கவும்.

பின்பு வறுத்த வல்லாரையுடன்
எண்ணெய் விட்டு நன்றாக வறுக்கவும்.

 அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

அதன் பின்பு ஆறியதும் வறுத்த கடலை
ப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய்,
 உள்ளி,

வறுத்தவல்லாரை, வறுத்த வெந்தயம்,
வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு,
பெருங்காயத்தூள் இவையாவற்றையும்
போட்டு கிரைண்டரில் (மிக்ஸியில்)
அரைக்கவும்.

பின்பு தேங்காய்ப்பூ போட்டு கிரைண்டரில்
(மிக்ஸியில்) நன்றாக அரைக்கவும்.

பின்பு தேசிக்காய்சாறு (லைம் ஜூஸ்)
போட்டு கிரைண்டரில்(மிக்ஸியில்)
நன்றாக அரைக்கவும்.

பின்பு அடுப்பில் வாணலி(தாச்சி)யை
வைத்து எண்ணெய் விட்டு அதை
சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம்
(சோம்பு), வெங்காயம் தாளித்து
துவையலில் போட்டு சாதத்துடன்
அல்லது பாண் இட்லி, தோசை
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன்
பரிமாறவும்.

எச்சரிக்கை 
இருதய நோயாளர்,வல்லாரை
அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்



Freitag, 25. Februar 2011

மசாலைத்தோசை

மசாலைத்தோசை சுவையானதும் சத்தானதும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணகூடியதுமாகும். ஆகவே
இதை செய்து சாப்பிட்டு இதன் சுவையை
அறியவும்.


தேவையானபொருட்கள் 
புழுங்கலரிசி - 2 கப்
பச்சரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - ஒரு கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கிழங்கு பிரட்டல் கறி - தேவையானளவு

செய்முறை 
1.ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 2 மணித்தியாலம் ஊற
 வைக்கவும்.

2.இன்னொரு பாத்திரத்தில் பச்சரிசி, தண்ணீர்
  ஆகியவற்றை கலந்து 2 மணித்தியாலம் ஊற
  வைக்கவும்.

3.மற்றைய பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு,
   வெந்தயம், தண்ணீர் ஆகியவற்றை கலந்து
  15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

4.ஊறிய உளுத்தம்பருப்பு, வெந்தயம், தண்ணீர்
   ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)
    போட்டு பொங்க பொங்க அரைக்கவும்.

5.அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
   போடவும்.

6,அதன் பின்பு ஊறவைத்த பச்சரிசி, தண்ணீர்
    ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)
   போட்டு நைசாக அரைக்கவும்.

7.அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில்
   போடவும்.

8.பின்பு ஊறவைத்த புழுங்கல் அரிசி, தண்ணீர்
   ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்(மிக்ஸியில்)
   போட்டு நைசாக அரைக்கவும்.

9.அரைத்த பின்பு எடுத்து பச்சரிசிமா போட்ட
   பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.

10.பின்பு ஊறவைத்த  உளுந்து வெந்தயம்
     தண்ணீர் ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
   (மிக்ஸியில்) போட்டு நைசாக அரைக்கவும்

11.பின்பு அதனுடன் அரைத்த உளுந்து வெந்தயம்
  போட்டு கலந்து புளிக்க வைக்கவும்.

12.அடுத்த நாள் அதற்கு உப்பு போட்டு கலக்கவும்.

13.பின்பு அடுப்பில் தோசைக்கல்லைவைத்து
    அதை சூடாக்கவும்.

14.தோசைக்கல் சூடானதும் அதற்கு சிறிதளவு
     நல்லெண்ணெய் ஒருதுணியில் எடுத்து அதை
    தோசைக்கல்லில் தடவும்.

15.பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து
    தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தடவி
   தோசையை வேகவிடவும்.

16.தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதன்
    மேல் கிழங்குபிரட்டல்கறியை வைத்து
   அதன் இருபக்கமும் மடித்து அதை திருப்பி
   போட்டு வேகவிடவும்.

17.தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து
    ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

18.இதே போல மற்றைய தோசைகளை சுட்டு
    முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
     வைக்கவும்.

19.அதன் பின்பு ஒரு தட்டில் தேவையான
     மசாலைத்தோசைகளை  வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை - 
உளுந்து அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் -
தோசை குளிர்மையானது.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 24. Februar 2011

சோயா இடியப்பம்


சோயா இடியப்பம் சுவையானதும்
எல்லோராலும் விரும்ப கூடியதும்
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை
தேவைப்படும் சகல சத்துகள் நிறை
ந்ததும் போஷாக்கு உள்ளதுமான
ஒர் உணவு ஆகும்.

தேவையான பொருட்கள் 

சோயா - ஒரு கப்
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய்துருவல் - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு


செய்முறை 

1.முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் 
  சோயாவில் தண்ணீர் ஊற்றி ஊற
  வைக்கவும்(சோயாவை விட தண்ணீர் 
 கூடுதலாக இருக்கவேண்டும்).

2 .அடுத்த நாள் காலையில் ஊறிய
சோயாவை நன்றாக கழுவி அதனை 
 கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு 
அதனுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு 
சேர்த்து இட்லி பதத்திற்கு அரைத்
தெடுக்கவும்.


3•அதனபின்பு அடுப்பில் இட்லி பானையை 
வைத்து அதில் தண்ணீர் விட்டு அதன் 
மேல் பாத்திரத்தை வைத்து அதனுள் 
இட்லி தட்டினை வைத்து சூடாக்கவும்.

4•இட்லிதட்டு சூடானதும் இட்லி தட்டினை
 வெளியே எடுத்து சிறிதளவு எண்ணெய் 
தடவி அரைத்தமாவை போட்டு இட்லி 
பதத்திற்கு வேகவிடவும்.

6•வெந்த இட்லியை இடியப்ப உரலில் 
போட்டுஇடியப்பதட்டில் பிழிந்தால் 
சோயா இடியப்பம் தயாராகி விடும்.

7•தயாரான இடியப்பத்தினை பாத்திரத்தில் 
எடுத்து வைக்கவும். பின்பு அடுப்பில் 
தாட்சியை (வாணலி) வைத்து சூடானதும் 
அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு 
சூடாக்கவும்.

8 .எண்ணெய் சூடானது கடுகு, உளுத்தம்பருப்பு,
  கறிவேப்பிலை தாளித்து உப்பு, தேங்காய்
 துருவல் போட்டு வதக்கி செய்துவைத்துள்ள
  இடியப்பத்தின் மேல் தூவி சாப்பிடலாம். 
 அல்லது ஏதாவது குருமாவுடன் தொட்டு 
 சாப்பிடலாம்.

குறிப்பு


கவனிக்க வேண்டிய விசயங்கள் - 
இட்லி பதத்திற்கு அரைத்தெடுக்கவும்,
இட்லி பதத்திற்கு வேகவிடவும்.


 எச்சரிக்கை -
சோயா அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.


மாற்று முறை -
ஏதாவது குருமாவுடன்
தொட்டு சாப்பிடலாம்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 23. Februar 2011

மசாலா சிக்கின் நுகற்ஸ்

மசாலா சிக்கன் நுகற்ஸ் வித்தியாசமான
சுவையுடையது. அத்துடன் இதை
எல்லோரும் விரும்பி உண்பார்கள். இதில்
புரதச்சத்து(Protein), கார்போவைதரேட்,
சக்தி(Energy), ஈரப்பதம்/நீர்(Moisture), கொழுப்பு
(fat), தாதுக்கள்(Minerals), கல்சியம்(Calcium),
பொஸ்பரஸ் Phosporous), ரைப்போஃப்ளேவின்
(Riboflavin), ஃபோலிக்கமிலம் (Folicacid),
விற்றமின்(vittamin) ஆகிய சத்துகள் அடங்கி
யதும் ஆகும் அத்துடன் சுவையானது
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணக்கூடிய ஓர் சிற்றுண்டி
ஆகும். ஆகவே இதனை செய்து உண்ணவும்

தேவையானபொருட்கள் . 
கோழி (முள்ளில்லாதத்தசைப்பகுதி) - 1கிலோ
முட்டை - (4 - 5)
ரஸ்க்தூள்(காய்ந்த பாண்தூள்) - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி
மெட்ராஸ் கறித்தூள் - அரைத்தேக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - மிகமிகசிறியதுண்டு
உள்ளி - ஒரு பல்
தயிர் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி


செய்முறை 
ஒரு பலகையில் கோழியின் முள்ளில்லாத
தசைப்பகுதியை வைத்து கூர்மையான
கத்தியினால் (விரும்பிய வடிவில் அல்லது
விரும்பிய உருவத்தில் ) விரும்பிய
அளவில் துண்டுகளாக வெட்டவும் .

ஒரு பாத்திரத்தில் வெட்டியதுண்டுகள்,
அரைகால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை
போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.

நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு
அதிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்த
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டைவெள்ளைக்கரு,
 உப்பு ஆகியவற்றை எக்பீட்டரினால் நன்றாக
நுரைக்கும்படி அடித்து வைக்கவும்.

கிரைண்டரில்(மிக்ஸியில்) முட்டைமஞ்சள்கரு,
மிளகாய்த்தூள், மெட்ராஸ்கறித்தூள்,
கறிவேப்பிலை, இஞ்சி, உள்ளி தயிர், வினிகர்
அகியவற்றை போட்டு நன்றாகவும் ஒரளவு
தடிப்பாகவும் அடித்தெடுக்கவும்.

பின்பு வெட்டிய கோழி இறைச்சி உள்ள
பாத்திரத்தில் கிரைண்டரில் அடித்தவற்றை
ஊற்றி சிறிது நேரம் ஊறவிடவும்.

பின்பு ஒரு வாய் அகண்ட தட்டில் (உணவு
உட்கொள்ளும் தட்டு) காய்ந்தபாண்தூளை
(ரக்ஸ்தூள்)போட்டு பரப்பவும்.

அதன் பின்பு ஊறிய கோழியிறைச்சி துண்டு
ஒன்றை எடுத்து அதனை முட்டை வெள்ளை
க்கருவில் நனைக்கவும்.

முட்டையில் நனைத்த துண்டை ரக்ஸ்தூள்
(காய்ந்த பாண்தூள்) உள்ள தட்டில் போட்டு
நன்றாக ரக்ஸ் தூளை கோழியிறைச்சியில்
 பிரட்டவும் (ரக்ஸ்தூளினால் கோழியின்
எல்லா பக்கமும்(கோழி இறைச்சி வெளியில்
தெரியாதவாறு) நன்றாக மூடும்படி).

ரக்ஸ் தூள் பிரட்டிய கோழியிறைச்சி துண்டை
 கவனமாக (கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்
தூள் விழுந்து விடாமல்) எடுத்து அதனை
 ஒரு தட்டில் வைக்கவும்.

இதனைப்போல எல்லா கோழித்துண்டு
களுக்கும் செய்து முதலில் கோழித்
துண்டினை வைத்த தட்டில் வைக்கவும்.

இந்த கோழித்துண்டுகளை (5 - 10) நிமிடங்கள்
அப்படியே காய வைக்கவும் (இல்லாவிட்டால்
கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்தூள் இதனை
எண்ணெயில் பொரிக்கும் போது
கோழியிறைச்சியை விட்டு பிரிந்து விடும்).

அதன் பின்பு இதனை ஒரு பாத்திரத்தில்
வைத்து காற்று போகாதவாறு நன்றாக மூடி
அல்லது பாலித்தீன் (ஆயில் தாள்) தாளில்
அல்லது பாலித்தீன் பையில் போட்டு
நன்றாக மூடிக்கட்டவும்.

மூடிக்கட்டிய பின்பு இதனை ப்ரீசரில்
வைக்கவும் (தேவையான அளவுகளில்
பல பைகளிள் போட்டு நன்றாக மூடி கட்டி
வைக்கலாம் இதில் திறக்காமல் இருக்கும்
பையில் உள்ள கோழித்துண்டுகள்
 3 மாதங்கள் வரை பழுதடையாமல் வைத்து
 உண்ணலாம்).

மசாலா சிக்கின் நுகற் தேவையான
நேரங்களில் இதிலிருந்து தேவைப்படும்
 பைகளை எடுத்து அதனை திறந்து அதனை
ஒரு தட்டில் வைத்து அதனை சிறிது நேர
ம் அப்படியேவைத்து குளிர் இல்லாமல்
 செய்யவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி)
வைத்து தாட்சி(வாணலி) சூடானதும்
தேவையானளவு எண்ணெய் விட்டு
அதை சூடாக்கவும் எண்ணெய் சூடானதும்
மசாலா சிக்கின் நுகற்ஸை போட்டு
பொன்னிறமாக வரும்படி பொரிக்கவும்
(நுகற்ஸ் குளிருடன் இருந்தால் அதன்
உள்ளிருக்கும் கோழிறைச்சி பொரியாது).

நன்றாக பொரிந்த பின்பு இதனில் உள்ள
எண்ணெயை வடித்து விட்டு ஒரு
பாத்திரத்தில் போட்டு அதனை ஒரு
மூடியால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

சிறிது நேரத்தின் பின்பு சுவையான
சத்தான மசாலா சிக்கன் நுகற்ஸ் தயாராகிவிடும்.

பின்பு ஒரு தட்டில் மசாலா சிக்கன் தக்காளிபழ
சாஸ், பொம்பிரீட்ஸ் ஆகியவற்றை வைத்து
 பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் 
மசாலா சிக்கன் நுகற்ஸ் செய்து காய
வைத்தவுடனும் இதனை பொரிக்கலாம்.

மாற்று முறை 
எல்லா இறைச்சிவகையிலும் இதனை
செய்யலாம் மற்றைய இறைச்சி
வகைகளில் செய்யும் போது கூடியளவு
வினிகர் சேர்க்கவும் (வினிகர் சேர்த்தால்
தான் மற்றைய இறைச்சி வகைகள் மிக
விரைவாக பொரியும் எல்லாவிட்டால்
 இறைச்சி பொரியும் போது ரக்ஸ்தூள்
கருகிவிடும்).

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 22. Februar 2011

சிக்கின் நுகற்ஸ்

கோழி இறைச்சி எல்லோராலும் விரும்பகூடிய
சுவையுடையதும் புரதச்சத்து மிக்கதும், மேலும்
இன்றியமையாத அமினோஅமிலங்களையும்
குறைந்த கார்போஹைட்ரேடினையும் கொண்டு
ள்ளதும், அத்துடன் இதில் சக்தி(Energy), ஈரப்பதம்/
நீர்(Moisture), புரதம்(Protein)கொழுப்பு(fat), தாதுக்கள்
(Minerals), கல்சியம்(Calcium), பொஸ்பரஸ்(Phosporous),
 ரைப்போஃப்ளேவின்(Riboflavin), போலிக்அமிலம்
(Folic acid) ஆகிய சத்துகள் அடங்கியதும் ஆகும்.
இதில் செய்யப்பட்ட சிக்கின் நுகற்ஸில் இதில்
அடங்கிய சகலசத்துகளுடன், மாப்பொருள்,
விற்றமின் ஆகிய சத்துகள் அடங்கியது அத்துடன்
சுவையானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரை விரும்பி உண்ணக்கூடிய ஓர் சிற்றுண்டி
ஆகும். இதனை எல்லா நாட்டிலுள்ள மக்களும்
விரும்பி உண்பார்கள் ஆகவே இதனை செய்து
உண்ணவும்.

தேவையான பொருட்கள் 
கோழி (முள்ளில்லாத தசைப்பகுதி) - ஒரு கிலோ
முட்டை (வெள்ளைக்கரு) - (2-4)
ரஸ்க்தூள் (காய்ந்த பாண்தூள்) - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு

செய்முறை 
ஒரு பலகையில் கோழியின் முள்ளில்லாத
தசைப்பகுதியை வைத்து கூர்மையான
கத்தியினால் (விரும்பிய வடிவில் அல்லது
விரும்பிய உருவத்தில்) விரும்பிய அளவில்
துண்டுகளாக வெட்டவும்.

ஒரு பாத்திரத்தில் வெட்டியதுண்டுகள், (அரை
கால் தேக்கரண்டி) உப்பு, தண்ணீர் ஆகியவற்றை
 போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.

நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு அதிலுள்ள
 தண்ணீரை நன்றாக பிழிந்த பின்பு அதனை ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக்கரு, உப்பு
ஆகியவற்றை எக் பீட்டரினால் நன்றாக நுரைக்கும்
படி அடித்து வைக்கவும்.

ஒரு வாய் அகண்ட தட்டில் (உணவு உட்கொள்ளும்
தட்டு) ரக்ஸ்தூளை(காய்ந்தபாண்தூள்)போட்டு
பரப்பவும்.

அதன் பின்பு வெட்டிசுத்தம் செய்த கோழிஇறைச்சி
துண்டு ஒன்றை எடுத்து அதனை முட்டையில்
நனைக்கவும்.

முட்டையில் நனைத்தகோழி இறைச்சி துண்டை
ரக்ஸ்தூள் (காய்ந்த பாண்தூள்) உள்ள தட்டில் போட்
டு நன்றாக ரக்ஸ்தூளை கோழி இறைச்சியில்
பிரட்டவும் (ரக்ஸ்தூளினால் கோழி இறைச்சியின்
எல்லா பக்கமும் (கோழி இறைச்சி வெளியில்
தெரியாதவாறு) நன்றாக மூடும்படி).

ரக்ஸ்தூள் பிரட்டிய கோழி இறைச்சிதுண்டை
கவனமாக (கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்தூள்
விழுந்து விடாமல்) எடுத்து அதனை ஒரு தட்டில்
வைக்கவும்.

இதனைப்போல எல்லா கோழித்துண்டுகளுக்கும்
செய்து முதலில் கோழித்துண்டினை வைத்த
தட்டில் வைக்கவும்.

இந்த கோழித்துண்டுகளை (5-10) நிமிடங்கள்
அப்படியே காய வைக்கவும் (இல்லாவிட்டால்
எண்ணெயில் பொரிக்கும் கோழித்துண்டில்
ஒட்டிய ரக்ஸ்துள் கோழியிறைச்சியை விட்டு
பிரிந்து விடும் ).

அதன் பின்பு இதனை ஒரு பாத்திரத்தில் வைத்து
காற்று போகாதவாறு நன்றாக மூடி அல்லது
பாலித்தீன் (ஒயில் தாள்) தாளில் அல்லது பாலித்தீன்
 பையில் போட்டு நன்றாக மூடிக்கட்டவும்.

மூடிக்கட்டிய பின்பு இதனை ப்ரிசரில் வைக்கவும்
(தேவையான அளவுகளில் பல பைகளிள் போட்டு
நன்றாக மூடி கட்டி வைக்கலாம் இதில் திறக்காமல்
 இருக்கும் பையில் உள்ள கோழித்துண்டுகள் 3
மாதங்கள் வரை பழுதடையாமல் வைத்து
உண்ணலாம்).

கோழி நுகற்ஸ் தேவையான நேரங்களில்
தேவைப்படும் பைகளை எடுத்து திறந்து ஒரு
தட்டில் வைத்து அதனை சிறிது நேரம் அப்படியே
வைத்து குளிர் இல்லாமல் செய்யவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி) வைத்து
தாட்சி(வாணலி) சூடானதும் தேவையானளவு
எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கோழிநுகற்ஸை போட்டு
பொன்னிறமாக வரும்படி பொரிக்கவும் (நுகற்ஸ்
குளிருடன் இருந்தால் அதன் உள்ளிருக்கும் கோழி
இறைச்சி பொரியாது).

நன்றாக பொரிந்த பின்பு இதனில் உள்ள எண்ணெயை
வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை
ஒரு மூடியால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

சிறிது நேரத்தின் பின்பு சுவையான சத்தான சிக்கன்
நுகற்ஸ் தயாராகி விடும்.பின்பு ஒரு தட்டில் கோழி
நுகற்ஸ், தக்காளிபழ சாஸ், பொம்பிரீட்ஸ் ஆகிய
வற்றை வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை 
கோழி இறைச்சி அலர்ஜியுள்ளவர்கள்,
இருதயநோயாளர், சர்க்கரைநோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்


மாற்று முறை 
எல்லா வினிகர் சேர்க்கவும் (வினிகர் சேர்த்தால்
தான் மற்றைய இறைச்சி வகைகள் மிக விரைவாக
பொரியும் எல்லாவிட்டால் இறைச்சி பொரியும்
 போது ரக்ஸ்தூள் கருகிவிடும்).


கவனிக்க வேண்டிய விசயங்கள் 
கோழி இறைச்சி வெளியில் தெரியாதவாறு ,
கோழித்துண்டில் ஒட்டிய ரக்ஸ்தூள் விழுந்து
விடாமல், நுகற்ஸ் குளிருடன் இருந்தால்
அதன் உள்ளிருக்கும் கோழி இறைச்சி பொரியாது,
காற்று போகாதவாறு நன்றாக மூடி அல்லது
பாலித்தீன் (ஒயில் தாள்) தாளில் அல்லது
பாலித்தீன் பையில் போட்டு நன்றாக மூடிக்கட்டவும்,
கோழிநுகற்ஸை செய்து காயவைத்தவுடனும்
இதனை பொரிக்கலாம்.

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 21. Februar 2011

இட்லி வகைகள் - 2


சுவையானதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரையும் விரும்பி உண்ணும் உணவு இட்லி
ஆகும். அத்துடன் இது ஒரு பாரம்பரிய உணவாகும்
இதில் வைட்டமின், கல்சியம், மினரல்,
பொட்டாஷியம் ஆகிய பலசத்துகள் அடங்கியது.
அத்துடன் செய்வதிற்கு இலகுவானதுமாகும்
ஆகவே இதனை செய்து பார்த்து இதன் சுவையை
அறியவும்.


தேவையான பொருட்கள் 

உளுந்து - அரை சுண்டு
ரவை - ஒரு சுண்டு
ஜஸ் கட்டி - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
அப்பச்சோடா - அரை தேக்கரண்டி(விரும்பினால்)
உப்பு - தேவையானளவு

செய்முறை 

உளுந்தை (அரை - ஒரு) மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் ரவையை
போட்டு அதை பொன்னிறமாக வறுக்கவும்.

வறுத்த ரவையை ஆறவிடவும்.

கிரைண்டரில்(மிக்ஸியில்) உளுந்தை போட்டு
அதனுடன் தண்ணீர் விட்டு அதை இட்லி பதத்திற்கு
அரைக்கவும்.

நன்றாக இட்லி பதத்திற்கு அரைத்த பின்பு அதை
எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதன் பின்பு கிரைண்டரில் (மிக்ஸியில்) வறுத்த
ரவையுடன்,தண்ணீரை சேர்த்து கட்டியில்லாமல்
அடித்து கலக்கவும்.

அரைத்த உளுந்துள்ள பாத்திரத்தில் கட்டியில்லாமல்
 அடித்து கலந்த ரவையை சேர்த்து கலக்கவும்.

பின்பு அதனுடன் அப்பச்சோடா, ஐஸ்கட்டிகளை
சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்த கலவையை புளிக்கவைக்கவும்
(6 - 8 மணித்தியாலம்).

கலவை புளித்ததும் அதில் உப்பை போட்டு
கலக்கவும்.

பின்பு அடுப்பில் இட்லி செய்யும் பாத்திரத்தின்
கீழ் பகுதியின் உள் முக்கால் பகுதிக்கு தண்ணீர்
விட்டு அதனுள் இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன் மேற் மூடியால் மூடி பின்பு
அதனை சூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த
மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு
குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு
குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.

அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள்
 தயாராகிவிடும்.

அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு
பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம்
மூடி வைக்கவும்.

பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும்
 அவிக்கவும்.

பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன்
சம்பல் அல்லது சாம்பாரு அல்லது கறி அல்லது
இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.



மாற்று முறை 
ரவைக்கு பதிலாக 1 + 1/2 சுண்டு இட்லி அரிசி அல்லது
பச்சரிசியை பாவிக்கலாம்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 20. Februar 2011

முட்டைக்குழம்பு


இந்த முட்டைகுழம்பு சுவையானதும் புரதம்,
கொழுப்பு மினரல், விற்றமின், கல்சியம்,
 பொஸ்பரஸ், இரும்பு போன்ற பல சத்துகள்
அடங்கியதும் வித்தியாசமானதும், பெரியவர்
முதல் சிறியவர்கள் விரும்பகூடியது ஆகும். 

தேவையான பொருட்கள்  
முட்டை - 5
சிறிதாக வெட்டியவெங்காயம் - பாதி
துருவியகரட் (சிறியது) - பாதி
சிறிதாக வெட்டியலீக்ஸ்- சிறிதளவு
சிறிதாக வெட்டியதக்காளிப்பழம் - 2
சிறிதாக வெட்டியகறிவேப்பிலை - தேவையானளவு
சிறிதாக வெட்டியபச்சைமிளகாய் - ஒன்று
மிளகாய்தூள் - தேவையானளவு
மெட்ராஸ்கறித்தூள் - தேவையானளவு (விரும்பினால்)
மஞ்சள்தூள் - சிறிதளவு (விரும்பினால்)
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு ) - அரை தேக்கரண்டி
சிறிதாக வெட்டியஇஞ்சி - மிகமிக சிறியதுண்டு
சிறிதாக வெட்டியஉள்ளி(பூண்டு) - 4 பல்
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
பால், தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
கரைத்தபழப்புளி- தேவையானளவு
அஜினோமோட்டோ - கால்தேக்கரண்டி(விரும்பினால்)

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

அதனுடன் துருவிய கரட், சிறியதாக வெட்டிய லீக்ஸ்,
தக்காளிப்பழம், சிறிதாக வெட்டிய சிறிதளவு
கறிவேப்பிலை, ஒரு பச்சைமிளகாய், கால் கரண்டி
மிளகாய்த்தூள், மிகமிக சிறியதுண்டு இஞ்சி, சிறிதாக
வெட்டிய 2 பல் உள்ளி(பூண்டு), சிறிதளவு உப்பு
ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு
நன்றாக(கலந்து)அடிக்கவும்
(இதில் கலந்தவையாவும் நன்றாக அரைக்கப்பட்டு
முட்டைநுரைத்து காணப்பட வேண்டும்).

பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) அடித்தவற்றை
ஒரு தட்டையான பாத்திரத்தில் அல்லது நீராவியில்
வேகவைக்ககூடிய உயரம் குறைந்த பாத்திரத்தில்
போடவும்.

தட்டையான பாத்திரத்தில் போட்டால் அதனை
 மைக்ரோவேவ் அவனில் வைத்து பேக் செய்யலாம்
அல்லது நீராவியில் வைக்ககூடிய உயரம் குறைந்த
பாத்திரத்தில் போட்டால் அதை நீராவியில் அவிக்கவும்.

இவை பேக்செய்த அல்லது நீராவியில் அவித்த பின்பு
அதை ஓரளவு சிறிய சதுர அல்லது விரும்பிய அளவில்
அல்லது விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு
எண்ணெய் விட்டு அது கொதித்ததும் அதில் கடுகு
போட்டு வெடிக்கவிடவும்.

பின்பு அதில் வெட்டிய வெங்காயத்தை போடவும் .

வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு ) போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதில் மிளகாய்த்தூள் போட்டு நன்றாக
கலக்கவும்.

அதன் பின்பு மிகுதியாக உள்ள தக்காளிப்பழத்தை
போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அதனுடன் மிகுதியாக உள்ள உள்ளி(பூண்டு)
கறிவேப்பிலை மெட்ராஸ்கறித்தூள், மஞ்சள்தூள்,
உப்பு, பால், சிறிதளவு தண்ணீர், கரைத்தபழப்புளி,
அஜினோமோட்டோ ஆகியவற்றை சேர்த்து
கலக்கவும்.

கலந்தவற்றை நன்றாக கொதிக்கவிடவும் .

அவை நன்றாக கொதித்ததும் அதில் வெட்டிய
முட்டைதுண்டுகளை போட்டு கலந்து கொதிக்க
விடவும் (விரும்பினால் பிரட்டல் கறியாகவும்
செய்யலாம்).

கறிகொதித்ததும் சுவையானதும் வித்தியாசமா
னதுமான முட்டைகுழம்பு தயாராகிவிடும்.

பின்பு அடுப்பிலுள்ள பாத்திரத்தை இறக்கி
வைக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்திலுள்ள
குழம்பை சோற்றுடன் (சாதத்துடன்) அல்லது
இடியப்பம் புட்டு பாண் இட்லி தோசை சப்பாத்தி
ஆகியவற்றில் எதனுடனாவது சேர்த்து பரிமாறவும்.



மாற்று முறை 
மரக்கறிவகைகளில் விரும்பியதை அல்லது
எலும்பில்லாத இறைச்சி வகைகள், முள்ளு
எடுத்த மீன்வகைகள், சுத்தமாக்கப்பட்ட இறால்,
நண்டு இவையாவற்றையும் முட்டையுடன்
கலந்தும் செய்யலாம்.
இவற்றில் சிலவற்றை மட்டும் சேர்த்தும்
செய்யலாம், வெங்காயம் பச்சைமிளகாயை
மட்டும் சேர்த்தும் செய்யலாம்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர், முட்டை அலர்ஜி
உடையவர்கள் ஆகியோர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 19. Februar 2011

கத்தரிக்காய் பொரியல்

கத்தரிக்காய் கூடுதலாக கொலஸ்ட்ரோலின் அளவைக்
கட்டுப்படுத்தஉதவும் கத்தரிக்காயைசாறுபிழிந்து எடுத்து
காலின் வீக்கத்தைகுறைப்பதற்கு பூசிக் கொள்வார்கள்
அத்துடன் வியர்வையை தடைசெய்ய கத்தரிக்காயைசாறு
பிழிந்து எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும்
பூசுவார்கள் கத்தரிக்காய் போஷாக்குநிறைந்த உணவாகை
யால் ஏழைகளின்இறைச்சி என்று கூட சொல்வார்கள்.
கத்தரிக்காயில் நீர், புரதம், கல்சியம், கார்போஹைட்ரேட்,
நார்த்தன்மை, பொஸ்பரஸ், கொழுப்பு, விற்றமின் B1, B2, C,
அயன் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட
கத்தரிக்காயில் செய்யப்பட்ட பொரியலில் மேற்குறிப்பிட்ட
சகல சத்துகளுடன் உள்ளி(பூண்டு), உப்பு, மிளகு, ஒலிவ்,
லெமென் அகியவற்றின் சுவையும் சேர்ந்து மிகமிக சுவை
யாக காணப்படும். அத்துடன் இது செய்வதிற்கு இலகு
வானதும் ஆகும் கத்தரிக்காய் பொரியலை ஜெர்மனிய
மக்கள்விரும்பி உண்பார்கள். இதன் சுவையை இதனை
செய்து பார்த்து அறியவும். 

தேவையான பொருட்கள் 
கத்தரிக்காய் (பெரிது) - 2
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
உள்ளி (பூண்டு )- (2 - 3) பல்
ஒலிவ் எண்ணெய் - 2 கப்
லெமென் சாறு - 2
சிறிதுசிறிதாகவெட்டிய கறிவேப்பிலை- தேவையானளவு


செய்முறை 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில்
கத்தரிக்காயை போட்டு நன்றாக கழுவவும்.

கழுவிய கத்தரிக்காயினை ஒரு துணியால்
நன்றாக துடைக்கவும்.

துடைத்த பின்பு ஒரு பலகையில் கத்தரிக்காயை
வைத்து ஓரளவு தடிப்பான வட்டமாக வெட்டவும்.

ஓரளவு தடிப்பான வட்டமாக வெட்டிய கத்தரிகாயில்
ஒரு துண்டை எடுத்து அதன் வெள்ளைநிற பாகத்தில்
கத்தியால் குறுக்கு குறுக்காக பல கோடுகளை
ஒரளவு ஆழத்திற்கு கீறவும்.

கோடுகள் கீறிய பின்பு அதில் உப்புத்தூள் மிளகுத்தூள்
ஆகியவற்றை தூவவும் (கத்தரிக்காயில் உப்புத்தூள்
மிளகுத்தூள் நன்றாக தூவப்பட்டிருக்க வேண்டும்).

தூவிய பின்பு இதனை ஒரு தட்டில் வைக்கவும்.

ஒரு பலகையில் உள்ளியை(பூண்டு) வைத்து அதனை
கத்தியால் சிறு சிறு துண்டுகளாக நன்றாக வெட்டவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி) வைத்து
அதில் ஒலிவ் எண்ணெயை ஊற்றி அதை சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் வெட்டி வைத்துள்ள
உள்ளியை(பூண்டினை) போட்டு அதில் உள்ள சாறு
வெளியே வருமாறு நன்றாக கரண்டியால் நசிக்க
வேண்டும்.

உள்ளி(பூண்டு)  ஓரளவு பொரிந்ததும் அதில் உப்புத்தூள்
மிளகுத்தூள் பூசிய கத்தரிக்காயை போட்டு நன்றாக
கலந்து பொரிக்கவும்.

கத்தரிக்காயை நன்றாக பொரித்த பின்பு அதன் மேல்
லெமென் சாறினை பிழிந்து அதை தூவி 2 நிமிடங்களின்
பின்பு கத்தரிக்காய் பொரியலை தாட்சியில்(வாணலி
யில்) இருந்து எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறியசிறிய துண்டுகளாக வெட்டிய கறிவப்பிலையை
தூவி அலங்கரிக்கவும்.



எச்சரிக்கை 
கத்தரிக்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 18. Februar 2011

சிக் பஃவ் சோசேச் ரோல்ஸ்

சிக் பஃவ் சோசேச் ரோல் சுவைமிகுந்தது
கொழுப்பு விற்றமின் போன்ற பலசத்துகள் 
நிறைந்தது சிறுவர்கள்முதல்பெரியவர்கள் 
வரைவிரும்பிஉண்ணக்கூடியது செய்வதற்கு 
இலகுவானது ஜெர்மனியமக்கள் மிகவிரும்பி
 உண்ணும் உணவு ஆகும் . 

தேவையான பொருட்கள் 
நீளமானகோழி சோசேச் - 4
வெள்ளைக்கருமுட்டை - 1
ப்ரெஷ் பஃவ்பேஸ்ரி சீட்- 1பக்கெட்

செய்முறை 
1 )ஒரு பலகையின் மேல் ப்ரெஷ் பஃவ்பேஸ்ரி 
    சீட்டை விரித்து வைக்கவும். 

2 ) அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டை 
    வெள்ளைக்கருவை போட்டு எக் பீட்டரினால் 
    நன்றாக  அடித்து வைக்கவும்.
3)பின்னர் நீளமான கோழி சோசேச்சை எடுத்து 
   கத்தியால் 2 அல்லது 3 முறை கீறி விடவும்
   (இல்லாவிட்டால் சுற்றிய ரோலில் உள்ள 
  சோசேச் சுற்றை விட்டு வெளியேறிவிடும்).
4 )கீறிய பின்னர் விரித்து வைத்த ப்ரெஷ் பஃவ் 
    பேஸ்ரி சீட்டின் மேல் கோழிசோசேச் 
    ஒன்றை எடுத்து வைத்து (இரண்டு அல்லது 
    மூன்று) முறை நெருக்கமாக இருக்குமாறு 
    நன்றாக சுற்றவும் (ஒரு ப்ரெஷ் பஃவ் பேஸ்ரி 
   சீட்டில்(ப்ரெஷ் (3 அல்லது 4 ரோல் செய்யலாம்).
5 )சுற்றியதின் பின்னர் (ரோலை சுற்றுவதை போல
    சுற்றவும்) பின்பு அதன் கடைசி பகுதியை அடித்து 
    வைத்துள்ள முட்டையின் வெள்ளைகருவினை 
    பூசி ரோலை நன்றாக ஒட்டவும்.
6 )ஒட்டிய ரோல்களை ஒரு தட்டில் வைத்து அடுக்கி 
    பேக் செய்யவும் (250 டிகிரி C யில் (20 - 30)நிமிடங்கள்)
    (நேரமும் பாகையும் ஒவ்வொரு அவனுக்கிடையே
   வித்தியாசம் காணப்படும்).
7 )பேக் செய்தவற்றை அவனை விட்டு சிக் பஃவ் 
    சோசேச் ரோலை வெளியில் எடுத்து ஒரு தட்டில் 
   வைத்து பரிமாறவும்.
குறிப்பு 

1 .இருதயநோயாளர், சோசேச் அலர்ஜி உள்ளவர்கள் 
    வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். 
2 .முட்டைமஞ்சள்கரு, தயிர் மிளகாய்த்தூள், உப்பு 
   கலந்து அதில் சோசேச்சை(கோழி) நனைத்து 
    ரோல் செய்யலாம் அல்லது ஏதாவது சோஸில் 
    நனைத்தும் செய்யலாம். 
3 .எல்லாவகையான (நீளமான,கட்டையான, 
   தடிப்பான, மெல்லிய,வட்டமான, சதுரமான) 
   சோசேச்சிலும் செய்யலாம். ஆனால் சோசேச்சின் 
   வடிவத்திற்கேற்ப இந்த ரோலின் வடிவம் மாறும்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 17. Februar 2011

இஞ்சி அல்வா


இஞ்சியில் கொழுப்பு, புரதம், தாதுக்கள், கல்சியம்,
பொஸ்பரஸ், இரும்பு, மக்னீஸியம், நார்ச்சத்து,
கார்போஹைட்ரேட், விற்றமின் C ஆகிய சத்துகள்
அடங்கியுள்ளது. அத்துடன் இஞ்சி முக்கிய நறுமண
அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது ஒரு
மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சியை உண்பதால்
தீரும் நோய்களாவன - பசியின்மை, செரியாமை,
வயிற்றுப்பொருமல், தொண்டைக்கம்மல் ஆகும்.
இப்படிப்பட்ட இஞ்சியில் செய்யப்பட்ட அல்வா
சுவையானதும் சத்துகள் நிறைந்ததுமாகும் அத்துடன்
இது நல்ல ஜீரணத்தை தரக்கூடியது ஆகவே இஞ்சி
அல்வாவை செய்து சாப்பிட்டு இதன் பலனை
அறியவும்.

தேவையானபொருட்கள்  
இஞ்சி - 200 கிராம்
சீனி(சர்க்கரை) - அரை கிலோ
தண்ணீர் - 4 கப்
பட்டர் (உருக்கியது) - (3 - 4) மேசைக்கரண்டி
கயூ (முந்திரிகைபருப்பு (இரண்டாக்கியது) - 50 கிராம்

செய்முறை 

இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக
வெட்டவும்.

வெட்டிய இஞ்சி, 4 கப் தண்ணீர் ஆகியவற்றை
கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு விழுதாக
அரைக்கவும்.

விழுதாக அரைத்த இஞ்சியை ஓரளவான
துணியில் போட்டு நன்றாக பிழிந்து வடித்து
கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில்
சீனி(சர்க்கரை), வடித்த இஞ்சி சாறு ஆகிய
வற்றை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

இவையிரண்டும் நன்றாக கொதித்ததும்
அதில் இரண்டு மேசைக்கரண்டி பட்டரை
போட்டு நன்றாக கிளறவும்.

அதன் பின்பு இன்னும் கொஞ்சம் பட்டரை
எடுத்து அதை ஒரு தட்டின் எல்லா பக்கத்
திற்கும் நன்றாக தடவி வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் உள்ள பாத்திரத்தில்
 செய்த கலவை அல்வா பதத்திற்கு வந்ததும்
 அக்கலவையுள்ள பாத்திரத்தை அடுப்பி
லிருந்து இறக்கவும்.

இறக்கிய பாத்திரத்திலுள்ள கலவையை
பட்டர் பூசிய தட்டில் ஊற்றி அதன் எல்லா
பக்கங்களுக்கும் பரப்பவும் (1 CM தடிப்பு).
பின்பு இக்கலவையை ஆற விடவும்.

இக்கலவை ஓரளவு ஆறியதும் இக்
கலவையை ஒரளவு பெரிய நீள்சதுர
துண்டுகளாக கீறிவெட்டிக் கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை)வைத்து அதில் மிகுதியாக
உள்ள பட்டரை போட்டு சூடாக்கவும்.

சூடாக்கிய பட்டரில் இரண்டாக உடைத்த
கயூ துண்டுகளை போட்டு ஓரளவு
பொரிக்கவும்.

பொரித்த பின்பு அதனை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

அதன் பின்பு கீறிவெட்டிய ஒவ்வொரு
இஞ்சி அல்வா துண்டுகளின் மேற்பகுதியின்
நடுவில் ஒவ்வொரு பாதி கயூகளையும்
(முந்திரிய பருப்புகளையும்) அமர்த்தி
வைத்து அலங்கரிக்கவும்.

அலங்கரித்த பின்பு இஞ்சி அல்வா
துண்டுகளை நன்றாக ஆறவிடவும்.

ஆறிய பின்பு சுவையான சத்தான மருத்துவ
குணம் கொண்ட இஞ்சி அல்வா தயாராகி
விடும்.

அதன் பின்பு ஒரு தட்டில் இதை வைத்து
 பரிமாறவும்.


எச்சரிக்கை 
இஞ்சி அலர்ஜி உள்ளவர்கள், இருதயநோயாளர்,
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.
இஞ்சி அல்வாவை சாப்பிட விரும்பினால்
மரவள்ளிக்கிழங்கை உண்ணகூடாது
(இஞ்சியும் மரவள்ளிகிழங்கும் சேர்ந்தால்
நஞ்சாகிவிடும்).


மாற்று முறை 
பட்டர்ருக்கு பதிலாக நெய் அல்லது மாஜரீனை
பாவிக்கலாம், விரும்பினால் கயூகளையும்
(முந்திரியபருப்புகளையும்) அமர்த்தி வைத்து
அலங்கரிக்கவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
இஞ்சி விழுதை துணியில் போட்டு நன்றாக
பிழிந்து வடித்து கொள்ளவும்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 16. Februar 2011

சீஸ் சோசேஜ் சலாட்

சுவையானதும் கொழுப்பு, புரோட்டின்,
கல்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்
ஆகிய சத்துகள் நிறைந்ததும்
ஜெர்மனிய மக்கள் மிக மிக விரும்பி
சாப்பிடுகிற சலாட் சீஸ் சோசேஜ்
சலாட் ஆகும்.


தேவையான பொருட்கள் 
துளையுள்ள சுவிஸ் சீஸ் - 250கிராம்
கௌடா சீஸ் - 300 கிராம்
கோழி சோசேஜ் - 250 கிராம்
லீக்ஸ் - 150 கிராம்
கரட் - 100 கிராம்
கோன் சலாட் - 150 கிராம்
வினிகர் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
சீனி (சர்க்கரை) - தேவையானளவு
எண்ணெய் - 4 மேசைகரண்டி


செய்முறை 
இரு சீஸ்களையும் ஒரு சென்டிமீட்டர்
அளவு சிறிய சதுர துண்டுகளாக
வெட்டவும்.

 கோழி சோசேஜை மெல்லிய வட்ட
துண்டுகளாக வெட்டவும்.

லீக்ஸின் தேவையற்ற பகுதிகளை
அகற்றிய பின்பு நன்றாக கழுவவும்.

கழுவிய லீக்ஸை ஓரளவு சிறிய
(2செ.மீ - 4 செ.மீ) துண்டுகளாக
வெட்டவும்.

கோன் சலாட் இலையை நன்றாக
கழுவவும்.

கரட்டின் தோலை சீவியபின்பு
கழுவி துருவவும்.

ஒரு பாத்திரத்தில் உப்பு, மிளகுத்தூள்,
வினிகர், சீனி(சர்க்கரை) ஆகியவற்றை
நன்றாக கலக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் எண்ணெயை
ஊற்றி அதனை சிறிது நேரம் நன்றாக
அடிக்கவும்.

அடித்த எண்ணெயை உப்பு, மிளகுத்தூள்,
வினிகர், சீனி(சர்க்கரை) உள்ள
பாத்திரத்தில் விட்டு நன்றாக அடித்து
எல்லாவற்றையும் கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சீறிய சதுர சீஸ்துண்டுகள்,
 மெல்லிய வட்ட கோழி சோசேஜ் துண்டுகள்,
லீக்ஸ் துண்டுகள், கேரட் துருவல், கோன்
சலாட் இலைகள் ஆகியவற்றை அதில்
போடவும்.

அதன் மேல் அடித்து வைத்துள்ள கலவையை
(உப்பு, மிளகுத்தூள், சீனி(சர்க்கரை), வினிகர்,
எண்ணெய்) ஊற்றி நன்றாக கலக்கவும்.

அதன் பின்பு அதனை 5 நிமிடங்கள் ஊற விடவும்.

அது ஊறிய பின்பு சுவையான சீஸ் சோசேஜஸ்
சலாட் தயாராகி விடும். இதனை பாண்,
பட்டருடன் அல்லது சோற்றுடன் சாப்பிடலாம்.

எச்சரிக்கை
இருதயநோயாளர், சீஸ், கோழி
அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்று முறை
துளையுள்ள சுவிஸ் சீஸ் பதிலாக வேறு
ஏதாவது துளையுள்ள சீஸ் பாவிக்கலாம்.
 கௌடா சீஸ் பதிலாக வேறு ஏதாவது கட்டி
சீஸ் பாவிக்கலாம்
கோழி சோசேஜ் பதிலாக வேறு ஏதாவது
சோசேஜ் பாவிக்கலாம் கோன் சலாட்
பதிலாக வேறு ஏதாவது சலாட் பாவிக்கலாம்,
விரும்பினால் கரட் சேர்க்கலாம்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள்
 5 நிமிடங்கள் ஊற விடவும்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 15. Februar 2011

ரவை அல்வா

"செய்வதிற்கு இலகுவான சுத்தமான சுவையான
இனிப்பான அல்வாவே ரவை அல்வாவாகும்.
அத்துடன் இதில் கொழுப்புசத்து,சீனிசத்து,
மினரல்சத்து போன்ற பலசத்துக்கள் அடங்கியது
அத்துடன் சிறுவர் முதல் வயதானவரை
விரும்பியும் சாப்பிடுவதிற்கு இலகுவான ஒரு
உணவாவாகும்".


தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
நெய் -   1 கப்
சீனி(சக்கரை) - 2 கப்
கயு(முந்திரிப்பருப்பு) - விரும்பியளவு
தண்ணீர் - தேவையானளவு

செய்முறை 
(1)ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு அதனுடன்
    அரை கப் தண்ணீர் விட்டு சிறிதளவு நேரம்
    ஊறவிடவும்.

(2)ரவை நன்றாக ஊறிய பின்னர் அதிலுள்ள நீரை
    வடித்துவிடவும்.

(3)அடுப்பில் அடிகனமான பாத்திரத்தினை  வைத்து
     அதில் சீனி(இந்தியன் சக்கரையை) போட்டு அதன்
     மேல் தண்ணீர் விட்டு(சீனி(சக்கரை)யை விட
     தண்ணீர் ஓரளவு அதிகமாக இருக்கவேண்டும்)
     பாகாக   காச்சவும்.

(4)பாகாக காச்சிய பின்னர் அதனுடன் ஊறவைத்து
    வடித்த ரவையை போட்டு நன்றாக கிளறி அவிய
    (வேக) விடவும்  .

(5)ரவை ஓரளவு வெந்த பின்னர் அதனுடன் நெய்யை
    சிறிது சிறிதாக சேர்த்து கிளறி அவிய(வேக)விடவும்.

(6)ரவை அவிந்து(வெந்து)அல்வா பதமாக வந்த பின்னர்
    அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.

(7)அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கிய பின்னர்
     பாத்திரத்தில் இருந்து அல்வாவை எடுத்த ஒரு
     சிறிதளவு நெய் பூசிய தட்டில் போட்டு ஓரளவு
     பரவாலாக பரப்பவும்.

(8)பரப்பியபின்னர் அடுப்பில் தாட்சி(வாணலி)யை
    வைத்து சூடாக்கி அதில் சிறிதளவு நெய்யை
    விட்டு சூடாக்கி அதில் கயுவை(முந்திரியப்
    பருப்பை)போட்டு பொரிக்கவும்(வறுக்கவும்).

(9)பொரித்த(வறுத்த)கயுவை (முந்திரியப்பருப்பை)
    தட்டில் பரப்பி வைத்திருக்கும் அல்வாவின் மேல்
    போட்டு நன்றாக அலங்கரிக்கவும்.

(10)அலங்கரித்த பின்னர் சுத்தமான சுவையான ரவை
     அல்வா தயாராகிவிடும்.

(11 )சுத்தமான சுவையான ரவை அல்வா தயாராகிய
      பின்னர் அதனை தேவையானளவு துண்டுகளாக
      வெட்டி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும் .


கவனிக்கவேண்டியது 
(1)அல்வாபதமாக அவிய(வேக)விடவும்.
(2)சக்கரை நோயாளர்,இதய நோயாளர்
    ஆகியோர்   வைத்தியரின் ஆலோசனைப்படி
    சாப்பிடவும்.     

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 14. Februar 2011

இலங்கை உளுந்து வடை


இலங்கையில் மிகபிரபல்யமான பாரம்பரிய,
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பகூடிய, சத்துகள் நிறைந்த சுவையான
சிற்றுண்டியே இலங்கை உளுந்து வடை ஆகும்.


தேவையான பொருட்கள் 
உளுந்து - ஒரு சுண்டு
உப்பு - தேவையான அளவு
பெரியவெங்காயம்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - ஒன்று
பச்சைமிளகாய்(சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதன்
மேல் ஒரளவு கொதித்தநீரை)(நகச்சூடு)
விடவும். (உளுந்தினை விட தண்ணீர்
கூடுதலாக இருக்கவேன்டும்).

அதன் பின்பு அதை (கால் -அரை) மணி
நேரம் ஊறவிடவும்.

(கால்-அரை) மணித்தியாலங்களுக்கு பின்பு உளுந்தில்
உள்ள தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்
(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு
தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்
(நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர்
சேர்க்ககூடாது).

பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).

அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த உளுந்துடன் சிறிய
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி(பூண்டு),நசுக்கியஇஞ்சி
ஆகியவற்றை கலக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து
அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு அதை நன்றாக
கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம்
கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி
அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டி
அதன் நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும்.
இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு
ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து
விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு
சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி
நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால்
வடையின் உட்பகுதி நன்றாக அவியாது)

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த
எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக
பொரிக்கவும்

பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்பு அதை எடுத்து சிறிய தட்டில் வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை -
உளுந்து அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்று முறை -
1 :கருப்பு உளுந்துக்கு பதிலாக வெள்ளை உளுந்திலும்
செய்யலாம்,
2 :கபேச்(கோவா)சேர்த்தும் செய்யலாம்.
3 :உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.
4 :விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால்
தேக்கரண்டி சேர்க்கலாம்.
5 .வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்துவிட்டு
தேவையான நேரத்தில் அதை எடுத்து செய்யலாம்
6 .அல்லது வடையை செய்து விட்டு டீபீரீசரில் வைத்து
தேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ அவனில்
வைத்து சூடாக்கி உண்ணலாம் .


கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1 .வடையின் உட்பகுதி  நன்றாக அவிந்தது விட்டதா
 என்பதை கவனிக்கவும்.

2.வெங்காயம் சேர்த்தவுடன் வடையை பொரிக்கவும்
(கனநேரம் வைத்திருக்ககூடாது. வைத்திருந்தால்
வெங்காயத்தினுள் உள்ள நீர் வெளியேறி வடையை
பழுதாக்கிவிடும்.

பேரீச்சம்பழ சட்னி

இனிப்புசுவை உடையதும் இரும்புசத்து 
நிறைந்ததும் சிறுவர்கள் முதல் 
பெரியவர்கள் வரை விரும்பி உண்ண
கூடியதுமான பழமே பேரீச்சம்பழம் 
ஆகும் இதனுடன் மருத்துவகுணம் 
நிறைந்த இஞ்சியும் உள்ளியுடன் 
கல்சியம்,மக்னீஸியம் உள்ள மிளகாயும் 
சேர்ந்து இனிப்பு சுவையும் உறைப்பு 
சுவையும் கலந்து வித்தியாசமான 
சுவையுடன் காணப்படும் சட்னியே 
பேரீச்சம்பழம் சட்னி ஆகும். இதன் 
சுவையை அறிய நீங்களும் இதனை 
செய்து பார்த்து சுவைக்கவும்.


தேவையானபொருட்கள்  
பேரீச்சம்பழம் - 250 கிராம்
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்)- (10 -15)
இஞ்சி - 2"நீளமான ஒரு துண்டு
உள்ளி (பூண்டு) - 4 பல்
வினிகர் - ஒரு டம்ளர்
சீனி (சர்க்கரை) - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
கஜு(முந்திரிப்பருப்பு (சிறிதாக வெட்டியது) - 50கிராம்
உப்பு - தேவையானளவு


செய்முறை 

பேரீச்சம்பழத்தை விதை நீக்கி துப்பிரவாக்கி
 சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிரைண்டரில்
(மிக்ஸியில்) போட்டு அரைப்பதமாக
 அரைத்தெடுத்து ஒரு பாத்திரத்தில்
வைக்கவும்.


பின்பு செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்)
இஞ்சி, உள்ளி(பூண்டு)ஆகியவற்றை 2 
மேசைக்கரண்டி வினிகர் விட்டு நன்றாக 
அரைத்தெடுக்க வேண்டும்.


அதன் பின்பு அரைத்து வைத்துள்ள 
பேரீச்சம்பழம், அரைத்து வைத்துள்ள 
கலவை சீனி(சர்க்கரை)உப்பு மிகுதியான 
வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக 
கலக்கவும்.


அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை) வைத்து அது சூடானதும் 
அதில் கலந்து வைத்துள்ள கலவையை 
போட்டு காய்ச்சவும்.


இக்கலவை ஓரளவு தடிக்க தொடங்கும் 
போது கஜுவை(முந்திரிப்பருப்பு) சேர்த்து 
கிளறவும்.


இக்கலவை நன்றாக தடித்ததும் இக்
கலவையுள்ள பாத்திரத்தினை அடுப்பிலிருந்து 
இறக்கவும். 


அதன் பின்பு இக்கலவையை வேறு ஒரு 
பாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்


நன்றாக ஆறிய பின்பு இக்கலவையை 
தொற்று நீக்கிய ஜாம் போத்தலில் ஊற்றி 
அதை காற்று உட்போகாதவாறு நன்றாக 
மூடி வைக்கவும்.


அதன் பின்பு இச்சட்னி தேவைப்படும் 
நேரங்களில் எடுத்து பரிமாறவும்.


சட்னியை பற்றீஸ், ரோல்ஸ் கட்லெட், 
இடியப்பம், தோசை, இட்லி, சமோசா 
ஆகியவற்றுடன் பரிமாறலாம்.


 எச்சரிக்கை 
பேரீச்சம்பழம் அலர்ஜியுடையவர்கள், 
சர்க்கரைநோயாளர், இருதயநோயாளர்
 ஆகியோர் வைத்தியரின் ஆலோசனைப்படி 
உண்ணவும். 


கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
எல்லாவற்றையும் நன்றாக அரைத்
தெடுத்து நன்றாக (தடிப்பாக) காய்ச்சவும் 
அத்துடன் இந்த சட்னி வைத்திருக்கும் 
போத்தலில் ஈரமான அல்லது துப்பரவற்ற 
கரண்டியை வைக்க வேண்டாம்(அதை 
வைத்தால் சட்னி பழுதடைந்துவிடும்).

அப்பிள் கப் பேஸ்ரி


செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும்
விற்றமின் A, B1, B2, B3, B5, B6, B9, C,கல்சியம்,
இரும்பு, மக்னீஸியம், பொஸ்பரஸ்,பொட்டாஷியம்,
புரோட்டின், கார்போஹைட்ரேட் கொழுப்பு, நார்சத்து
ஆகிய சத்துக்களும்அடங்கியுள்ளதுமான ஒர்
சிற்றுண்டியே ஆப்பிள்கப் பஃவ் பேஸ்ரி ஆகும்

தேவையானபொருட்கள் 

அப்பிள் - 2
பஃவ் பேஸ்ரி சீட் (fresh) - ஒரு பாக்கெட்
முந்திரிப்பருப்பு (கயூ) (சிறுதுண்டுகள்) - (25- 50)கிராம்
வனிலா - ஒரு துளி (விரும்பினால்)
பிளம்ஸ் - 50 கிராம்


செயன்முறை 

அப்பிளை தோல்சீவி அதன் தேவையற்ற
பகுதிகளை அகற்றிய பின்பு அப்பிளை
சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு
 பாத்திரத்தில் வைக்கவும்.

முந்திரிப்பருப்பு(கயூ), பிளம்ஸ், வனிலா
ஆகியவற்றை கலந்து இன்னொரு
பாத்திரத்தில் வைக்கவும்.பஃவ் பேஸ்ரி
சீட்டினை எடுத்து விரித்து பெரிய
சதுரமாகவோ(9- 12துண்டுகள்) அல்லது
வட்டமாகவோ வெட்டவும்.

அதனை ஸ்பொஞ் கேக் தட்டில் அல்லது
சிறிய வட்ட பிஸ்ஸா தட்டில் உள்ள
குழிகளின் (ஒருதட்டில் 12கப்புகள்/குழிகள்
அமைக்கப்பட்டது) மேல் வெட்டிய
பஃவ்பேஸ்ரி துண்டினை விரித்து
வைக்கவும்.

அதன் பின்பு பஃவ்பேஸ்ரி சீட்
விரிக்கப்பட்டுள்ள குழிகளில் அப்பிள்
துண்டுகளை முன்பு தயாரித்த
கலவையுடன் (முந்திரிப்பருப்பு(கயூ),
பிளம்ஸ்,வனிலா) கலந்து வைக்கவும்.

அதன்பின்பு கலவை வைக்கப்பட்ட
 தட்டுகளை அவனில் வைத்து பேக்
செய்யவும் (250 டிகிரி Cயில் 10 - 15
நிமிடங்கள்).

பேக் செய்த பின்பு பேக் பண்ணிய தட்டை
அவனிலிருந்து எடுத்து அதிலுள்ள
அப்பிள் கப் பஃவ் பேஸ்ரியை சிறிய
தட்டுகளிள் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை
ஆப்பிள், முந்திரிப்பருப்பு அலர்ஜி
உடையவர்கள்,சர்க்கரை நோயாளர்,
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


மாற்றுமுறை
வனிலாக்கு பதிலாக தேன் அல்லது சீனி
(சர்க்கரை)பாகு சேர்க்கலாம். ஆப்பிளை மட்டும்
உள்ளீடாக வைக்கலாம் அல்லது முந்திரியபருப்பு
(கயூ),பிளம்ஸ்,வனிலா இவற்றில் மூன்றையோ
அல்லது இரண்டை மட்டும் கலந்த கலவை
யை வைக்கலாம்.
விரும்பிய பிரட்டல் கறிகளையும் உள்ளீடாக
வைக்கலாம்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஸ்பொஞ் கேக் தட்டில் (ஒரு தட்டில் 12 கப்புகள்
அல்லது குழிகள் அமைக்கப்பட்டது) அல்லது
குழியுள்ளது அல்லது கப்புள்ளது.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 13. Februar 2011

அரிசி மா புட்டு

அரிசிமா புட்டு சுவையான ஒர் சிற்றுண்டியாகும்.
இதனை இலங்கையை சேர்ந்த மக்கள் காலை
உணவாக அல்லது இரவு உணவாக கறியுடன்
அல்லது சம்பலுடன் உண்பார்கள் அத்துடன்
 இதில் கல்சியம், கார்போவைதரேட், மினரல், 
அயோடின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது

தேவையான பொருட்கள் 
வறுத்த அரிசிமா - 3 சுண்டு
கொதித்ததண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ- தேவையானளவு(விரும்பினால்)


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் அரிசிமா,உப்பு
ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்.

 அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக
கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும்
(அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).

குழைத்த மாவை கிரைண்டரில் (மிக்ஸியில்)
போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும்

அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு
உருண்டைகள் வரக்கூடியதாக
குழைக்கவும் (புட்டு பதத்திற்கு குழைக்கவும்).

புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர்
விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது
ஸ்டீமரை வைத்து அதனை அடுப்பில்
வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க
வைக்கவும்.

தண்ணீர் கொதித்து நீராவி வரத் தொடங்கிய
தும் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை
வெளியே எடுத்து அதில் கொஞ்சம் அரிசிமா
வை போடவும் அதன் பின்பு கொஞ்சம்
தேங்காய் பூவை போடவும். அதன் பிறகு
திரும்பவும் அரிசிமாவை போடவும்.

அதன் பின்பு தேங்காய் பூவை போடவும்
இப்படியே குழல் அல்லது ஸ்டீமர் நிரம்பும்
வரை அரிசிமாவையும் தேங்காய் பூவையும்
மாறி மாறி போடவும். குழைத்த அரிசிமா
நிரம்பிய புட்டு குழலை அல்லது ஸ்டீமரை
புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில்
அவிய விடவும்.

புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை
அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதிலுள்ள
புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக
அவிக்கவும்.

அதன் பின்பு ஒரு சாப்பாட்டு கோப்பையில்
(பிளேட்டில்) அவித்த புட்டை வைத்து அதனுடன்
கறி, சம்பல், பொரியல், வாழைப்பழம் இவற்றில்
ஏதாவது ஒன்றை வைத்து அதனை பரிமாறவும்
.
கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
அதிகளவு தண்ணீர் விடக்கூடாது.

மாற்று முறை -
அரிசிமாவுக்கு பதிலாக வறுத்த
மைதாமா(கோதுமைமா)பாவிக்கலாம்,
தேங்காய் பூவை போடாமலும் செய்யலாம்.


எச்சரிக்கை -
சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும் அத்துடன் ஆஸ்துமா நோயாளர்,
இருதய நோயாளர் தேங்காய் பூ போடாமல் உண்ணலாம்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 11. Februar 2011

ஸ்பாகிள் (அஸ்பராகஸ்)கறி

ஸ்பார்கிள்(அஸ்பராகஸ்) ஜரோப்பிய
மக்களின் மிகமிக பிரபல்யமான மரக்கறி
ஆகும் அத்துடன் இதனை ரோயல்
மரக்கறி எனவும் அழைப்பார்கள்
ஒவ்வொரு வருடமும் இந்த ஸ்பார்கிளுக்கு
விழாக்கள் நடத்துவார்கள் அவ்விழாகளில்
ஸ்பார்கிள்(அஸ்பராகஸ்) அரசியாக
வருபவர்களை அதிர்ஷடசாலிகளாக கருதி
அவர்களுக்கு மிகமிக மரியாதை செய்வார்கள்.
அத்துடன் இந்த ஸ்பார்கிளிள்(அஸ்பராகஸ்)
கார்போஹைட்ரேட், நார்சத்து, கொழுப்பு,
 புரதம், விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C,
கல்சியம், இரும்பு, மக்னீஸியம்,பொஸ்பரஸ்,
 பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் அடங்கி
யுள்ளது. இப்படிப்பட்ட ஸ்பார்கிளில்
(அஸ்பராகஸ்) செய்யபட்ட கறியானது
வித்தியாசமான சுவையுடனும் சத்துகளுடனும்
காணப்படும் இதன் சுவையை இதனை செய்து
பார்த்து அறியவும்

தேவையானபொருட்கள்  
ஸ்பார்கிள் (மஞ்சள்நிற அஸ்பராகஸ்) - 250கிராம்
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு
மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
பால் - தேவையானளவு
வெங்காயம் (சிறிதாக வெட்டியது) - ஒன்று
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை (சிறிதாக வெட்டியது) - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு (விரும்பினால்)
தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை 

மஞ்சள்நிற ஸ்பார்கிளை (அஸ்பராகஸ்)
தடிப்பான பகுதியில் சிறிய பகுதியை
வெட்டி அகற்றி விட்டு தடிப்பான
பகுதியிலிருந்து மெல்லிய பகுதிவரை
உள்ள தோலை சீவி அகற்ற வேண்டும்
தடிப்பான பகுதியிலிருந்து மெல்லிய
பகுதி வரை நேராக வெட்டவேண்டும்.

 அதை மெல்லிய ஒரளவான துண்டுகளாக
 வெட்டவும்.

பின்பு அதை நன்றாக கழுவவும்

அடுப்பில் வாயகன்ற சிறிய பாத்திரத்தை
வைத்து அதில் அரைவாசிக்கு தண்ணீரை
விட்டு அதில் வெட்டி துப்பிரவு செய்த
ஸ்பார்கிளை (அஸ்பராகஸ்) போட்டு
சிறிதுநேரம்(5 நிமிடங்கள்) அவிய விடவும்.

சிறிது நேரத்தின்(5 நிமிடங்கள்) பின்பு அதில்
பட்டரை போட்டு ஓரளவு அவிய விடவும்.

ஓரளவு அவிந்ததும் அதில் மிளகாய்த்தூள்,
 மஞ்சள் தூள் போட்டு சிறிது நேரம் (10
நிமிடங்கள்) அவிய விடவும்.

பின்பு அதில் பாலைவிட்டு நன்றாக(15 - 20
நிமிடங்கள்)அவிய விடவும்.

நன்றாக அவிந்த பின்பு அதில் உப்பு,
கறிவேப்பிலை, தேசிக்காய்சாறு
(எலுமிச்சம்பழம்) ஆகியவற்றை கலந்து
சிறிது நேரம் (5நிமிடங்கள்) அவியவிடவும்.

பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கவும்.

 அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை வைத்து அதில் எண்ணெய்
விட்டு அல்லது சிறிதளவு பட்டர் போட்டு
சூடாக்கி அதில் கடுகு, சீரகம்(சோம்பு),
வெங்காயம் தாளித்து அதனை செய்து
வைத்திருக்கும்.

ஸ்பார்கிள் கறியில் போட்டு கலக்கிய
பின்பு சுவையான சத்தான ஸ்பார்கிள்
கறி(அஸ்பராகஸ்) கறி தயாராகி
விட்டது.

அதனை சோற்றுடன்(சாதத்துடன்)
பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
வாயகன்ற பாத்திரத்தில் மஞ்சள்நிற
ஸ்பார்கிளை (அஸ்பராகஸ்) போட்டு
அவியவிடவும், பட்டரை போட்டு
அவியவிடவும் (இல்லாவிட்டால்
ஸ்பார்கிள் (அஸ்பராகஸ்)அவியாது)


 எச்சரிக்கை 
ஸ்பார்கிள்(அஸ்பராகஸ்) அலர்ஜி
உள்ளவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 10. Februar 2011

புடலங்காய் குழம்பு

புடலங்காய் குழம்பு மினரல் சத்து நிறைந்தது.
இது ஆசியா கண்டத்தினை சேர்ந்த நாடுகளில்
வாழும் மக்களால் பெரும்பாலும் விரும்பி
உண்ணப்படும் உணவு இதுவாகும். இதனைப்
போல பீன்ஸிலும் (அவரைக்காயிலும்)
செய்யலாம்.


தேவையானபொருட்கள்  

பொடியாக நறுக்கிய பிஞ்சு புடலங்காய் - ஒன்று
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம்(நறுக்கிய) - அரைப்பாதி
உள்ளி - 2 பல்
தேசிக்காய்(எலுமிச்சம்)சாறு - சிறிதளவு
மெட்ராஸ் கறித்தூள் - ஒரு தேக்கரண்டி
பசுப்பால்(ஆவின்பால்) - 3 கப்
தண்ணீர் - 3 கப்
அஜினோமோட்டோ - அரைகால் தேக்கரண்டி(விரும்பினால்)


செய்முறை 
அடுப்பில் வாணலியை (தாட்சியை) வைத்து
அதை சூடாக்கவும்.

பின்பு அதில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்.

நல்லெண்ணெய் சூடானதும் நறுக்கிய
புடலங்காயை அதில் போட்டு சுருள
வதக்கிக் கொள்ளவும்.

புடலங்காய் ஒரளவு சுருள வதங்கியதும்
அதனுடன் வெங்காயம், கடுகு, சீரகம்
(சோம்பு), உள்ளி ஆகியவற்றை சேர்த்து
சுருள வதக்கவும்.

ஒரளவு சுருள வதங்கியதும் அதனுடன்
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை,
மெட்ராஸ்கறித்தூள், அஜினோமோட்டோ
ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கவும்.

இவையாவும் சுருள வதங்கியதும் அதனுடன்
தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு
வெந்ததும் அதனுடன் பசுப்பாலை (ஆவின்
பாலை) சேர்க்கவும்.

பால் கொதித்து இவற்றுடன் சேர்ந்த பின்பு
உப்பை போட்டு கலக்கி வேகவிடவும்.

இவையாவும் வெந்ததும் தேசிக்காய்
(எலுமிச்சம்) சாற்றை பிழிந்து விடவும்.

பின்பு புடலங்காய் குழம்பு தயாராகிவிடும்
அதை அடுப்பிலிருந்து இறக்கவும்.

அதன் பின்பு இதை சோற்றுடன்
 (சாதத்துடன்) பரிமாறவும்.

எச்சரிக்கை - 

புடலங்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்

கவனிக்க வேண்டிய விஷயங்கள் - அஜினோமோட்டோ(விரும்பினால்)சேர்க்கவும்,
புடலங்காயை சுருள வதக்கிக்கொள்ளவும்,
இவை சுருள வதங்கியதும் அதனுடன் தண்ணீர்
சேர்த்து வேகவிடவும்,பிறகு வெந்ததும்
அதனுடன் பாலை சேர்க்கவும்
பசுப்பால்(ஆவின் பால்)பதிலாக தேங்காய்பாலும் பாவிக்கலாம்,நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய்எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மரக்கறிஎண்ணெய் ஆகியவற்றில் ஒன்றை பாவிக்கலாம்.

கத்தரிக்காய் பொரியல்

இந்த கத்தரிக்காய் பொரியலை எல்லோரும்
விரும்பி உண்பார்கள். இது சுவையானதும்
கார்போஹைட்ரேட், மினரல், பொஸ்பரஸ்,
விற்றமின், கல்சியம், அயோடின் ஆகிய
சத்துகள் நிறைந்ததுமாகுமாகும். அத்துடன்
இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில்
இதனை சிறுமிகள் சாமத்தியப்படும் போது
தினமும் சாப்பிட கொடுப்பது வழக்கம்.
அத்துடன் இதனை எல்லோரும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் 

கத்தரிக்காய்(பெரியதும் நீளமானதும்) - 2
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையானளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு (விரும்பினால்)
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை 
மரக்கறி வெட்டும் பலகையை எடுத்து அதன்
மேல் ஒரு கத்தரிக்காயை வைத்து கத்தரிக்
காயின் நீளபாட்டில் இரண்டாக வெட்டவும்.

அதன் பின்பு அதன் ஒரு பகுதியை எடுத்து
அதன் குறுக்குப்பாட்டில் பெரிய துண்டுகளாக
வெட்டவும் (அதில் 3 அல்லது 4 துண்டுகள்
கிடைக்கும்).

வெட்டிய பின்பு அதிலிருந்து ஒரு துண்டை
எடுத்து அதன் மேலே உள்ள சிறிய வெள்ளை
அரை வட்ட பகுதியின் நடுவில்(1" - 2")ஆழத்திற்கு
 மட்டும் நேரா ககத்தியால் கீறி வெட்டவும்
(கத்தரிக்காய் துண்டாகி விடகூடாது).

அதன் பின்பு கீறி வெட்டிய பகுதிக்கு குறுக்கால் 4
தடவைகள் கத்தியால்(1/2" - 1") ஆழத்திற்கு கீறி
வெட்டவும் (கத்தரிக்காய் துண்டாகி விடகூடாது).
இதனை போல எல்லா கத்தரிக்காய்களையும்
வெட்டவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனுள்
வெட்டிய கத்தரிக்காய்களை போட்டு கீறி
வெட்டிய பகுதி துண்டாகி விடாமல் கழுவவும்.

பின்பு அதிலிருந்து கத்தரிக்காய்களை வெளியே
எடுத்து அதிலுள்ள தண்ணீரை பிழிந்துவிட்டு
அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து அதற்கு மேல்
மிளகாய்த்தூள் உப்பு, மஞ்சள்தூள்(விரும்பினால்)
ஆகியவற்றை போட்டு அதனை நன்றாக பிரட்டி
அதனை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதில் எண்ணெய் விட்டு அதனை நன்றாக
 கொதிக்கவிடவும் .

எண்ணெய் நன்றாக கொதித்ததும் கத்தரிக்காய்களை
போட்டு முக்கால் பதம் வரும் வரை பொரிக்கவும்.

கத்தரிக்காய்கள் பொரிந்ததும் அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைத்து அதில் காணப்படும்
தேவையற்ற எண்ணெயை வடித்து விடவும்.

அதன் பின்பு சுவையான கத்தரிக்காய் பொரியல்
 தயாராகிவிடும்.

இதனை சோறு(சாதம்), இடியப்பம், பிட்டு, பாண்
இவையாவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.


கவனிக்கப்பட வேண்டியது - 

இதனை வெட்டும் விதத்தையும் அத்துடன்
இது பொரிந்தபின்பு ஒரளவு கோல்ட்
வைலட்டாக காணப்படும் (வைலட்
கத்தரிக்காயாக இருந்தால்) இல்லாவிட்டால்
ஒரளவு கோல்ட் நிறமாக காணப்படும்.
விரும்பினால் கோல்ட் நிறமாக பொரிக்கலாம்.


மாற்று முறை - 
நல்லெண்ணெய்க்கு பதிலாக வேறு ஏதாவது
(மரக்கறிஎண்ணெய், தேங்காய் எண்ணெய்,
ஆலிவ்எண்ணெய்)எண்ணெய் பாவிக்கலாம்.
விரும்பிய நிறம் அல்லது விரும்பிய வடிவ
கத்தரிக்காய்களை பயன்படுத்தலாம்.


எச்சரிக்கை -
இருதயநோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.