கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. Juni 2018

வியாழக்கிழமை


இலங்கை முட்டை குழம்பு


தேவையான பொருட்கள்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
பசுப்பால் /தேங்காய்ப்பால் -தேவையானளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இலங்கை மிளகாய்த் தூள் - 1/2 - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து(விரும்பினால்)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
பழப்புளி /தேசிக்காய் புளி - தேவையானளவு 

செய்முறை

மூன்று முட்டைகளை ஒரு  பாத்திரத்தில் 
வைத்து  அம்முட்டைகள் மூழ்கும் அளவு 
அதன் மேல் தண்ணீர் விடவும் .

அதன் பின்னர் அப்பாத்திரத்தினை 
அடுப்பில் வைத்து  அடுப்பினை பற்ற
வைத்து 10 நிமிடம் வரை முட்டைகளை 
வேகவைக்கவும்.

.அம் முட்டைகள்  வெந்ததும் அடுப்பினை 
அணைத்துவிட்டு அடுப்பிலிருந்து 
அவற்றை இறக்கி வைக்கவும் .

அதன் பின்னர் அதில் உள்ள தண்ணீரை 
வடிகட்டிய ,பின்னர்  அம்முட்டைகளை 
சூடு ஆறவிடவும் .

முட்டைகளில் உள்ள  சூடு ஆறியதும், 
முட்டைகளில் உள்ள ஓட்டினை  நீக்கவும் , 

அதன் பின்னார் ஒவ்வொரு முட்டை
களையும்  எடுத்து சரிபாதி இரண்டு  
துண்டுகளாக நீளவாக்கில்  வெட்டி ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு  வெங்காயத்தை தோல் உரித்து  
சுத்தம் செய்து பொடியாக  வெட்டி ஒரு 
பாத்திரத்தில் வைக்கவும் 

,வைத்த பின்னர் தக்காளி  பழத்தை  
எடுத்து சுத்தம்செய்து அதனை  
பொடியாக நறுக்கி இன்னொரு 
பாத்திரத்தில் வைத்து  கொள்ளவும்.

இதன் பின் உள்ளியை  ( பூண்டை) தோல் 
நீக்கி சுத்தம் செய்து அவற்றை ஓரளவு 
துண்டுகளாக வெட்டி ஒரு  பாத்திரத்தில் 
வைத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பினை  பற்ற வைத்து அதன் 
மேல் தாட்சியை(வாணலியை)வைத்து 
அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும் .

சூடானதும் அதில் வெட்டியா உள்ளியை 
(பூண்டை)போட்டு வதக்கவும். 

பிறகு நறுக்கிய வெங்காயத்தை 
அதனுடன்  போட்டு வதக்கவும்.

இவை யாவும்  வதங்கிய பின்னர் 
அதனுடன்  நறுக்கிய தக்காளியைப் 
போட்டு பச்சைவாசனைபோகும் 
வரை வதக்கவும்.

இவை யாவும் வதங்கிய பின்னர் 
இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், 
இலங்கை மிளகாய்த்தூள்ஆகியவற்றை 
சேர்த்து அதில் உள்ள பச்சைவாசனை 
போகும் வரை வதக்கவும் 

பின்னர் அவற்றுடன் தேவையான அளவு 
தண்ணீர்+பால்  சேர்த்து நன்கு 
கொதிக்க விடவும்.

கொதித்த  பின்னர்  மீதமுள்ள ஒரு 
முட்டையை உடைத்து கொதிக்கும் 
குழம்பில் சேர்த்து நன்கு கிளறி 
கொதிக்க விடவும்.

கிளறிய பின்னர் வெட்டி வைத்துள்ள 
வேக வைத்த முட்டைகளை அதில் 
முட்டைகள் உடையாமல் கவனமாக போடவும்.

பின்னர் அவற்றை நன்றாக கொதிக்க விடவும்.

அவையாவும் கொதித்த 
பின்னர்  பழப்புளி /தேசிக்காய் புளி
சேர்த்து அதனை சில நிமிடங்கள் 
கொதிக்கவைக்கவும் 

அவையாவும்  கொதித்த பின்னர் 
அடுப்பினை அணைத்துவிட்டு 
அப்பாத்திரத்தை அடுப்பிலிருந்து 
இறக்கவும்.

பின்னர் நறுக்கிய சுத்தம் செய்து 
கொத்தமல்லித்தழை, சுத்தம் செய்து 
நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை 
அதனுள் போட்டு அப்பாத்திரத்தினை  
சிறிது நேரம் மூடிவைக்கவும் .

இப்போது சுத்தமான சுவையான 
இலங்கை முட்டைக்குழம்பு  தயராகி
விட்டது .

ஒரு தட்டில் சோறு (சாதம் )புட்டு,
இடியப்பம்; பாண் இவையாவற்றில் 
ஒன்றை வைத்து அதனுடன் 
சுத்தமான சுவையான இலங்கை 
முட்டைக்குழம்பினையும்  வைத்து 
பரிமாறவும் :