கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 31. Januar 2014

கேக்

கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

வெள்ளிக்கிழமை


Mittwoch, 29. Januar 2014

அலங்காரம்-திருமணம்,



Dienstag, 28. Januar 2014

காய்ந்தபழங்கள்

காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

Montag, 27. Januar 2014

முட்டை

ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

திங்கள்கிழமை


Sonntag, 26. Januar 2014

சட்னி

இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

ஊறுகாய்

ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

Samstag, 25. Januar 2014

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

Freitag, 24. Januar 2014

வெங்காயம்

 வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

Donnerstag, 23. Januar 2014

இனிப்புகள்

இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

Mittwoch, 22. Januar 2014

சப்பாத்தி

கோதுமை மா அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

Dienstag, 21. Januar 2014

தேங்காய்

தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

Montag, 20. Januar 2014

கேக்

வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

திங்கள்கிழமை


Sonntag, 19. Januar 2014

முட்டை கட்லெட்


தேவையான பொருட்கள்:

வேகவைத்து சுத்தப்படுத்தியமுட்டை - 4
முட்டை - 1
மிளகாய்தூள் - 1 கரண்டி
வேகவைத்துசுத்தப்படுத்தியஉருளைக்கிழங்கு - 1/2கிலோ
வெங்காயம் - 1
பால் -1/2 கப்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கோதுமைமா/மைதாமா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்
ரக்ஸ்தூள் -தேவையானளவு

செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும்.

 முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும்.

ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் பால், வெங்காயம், மைதாமா / கோதுமைமா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.

 அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும்.

அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து

எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.

Samstag, 18. Januar 2014

வெங்காயம்

வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

சனிக்கிழமை


Freitag, 17. Januar 2014

மஞ்சள் கிழங்கு சலாட்
















இது நாம் பொங்கல் பானையில் கட்டி 
விட்டுத் தூக்கிப் போடும் பச்சை(இளம் 
காய வைக்காத ) மஞ்சள் கிழங்கு . 
இந்த மஞ்சளில் சலாட்

தேவையான பொருட்கள் 

காயவைக்கதாத மஞ்சள் -150 -200 கிராம்,
பெரிய வெங்காயம் -3
தக்காளிப்பழம்-3,
எண்ணெய் -5-4 ஸ்பூன்,
பெருஞ்சீரகம் -கைப் பிடி 
தயிர் - 1 கப்.
உப்பு - தேவையானளவு
பெருங்காயத்தூள்-சிறிதளவு


தாளிக்க தேவையானபொருட்கள்

கறிவேப்பிலை-சிறிதளவு
வரமிளகாய்- 3 - 5
வெள்ளுத்தம் பருப்பு-சிறிதளவு



செய்முறை 

முதலில் பச்சை (இளம்) மஞ்சள் கிழங்கைத் 
தோலுரித்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக 
கொள்ளுங்கள்,

பின்னர் வெங்காயத்தை நீளமாகவே 
அல்லது சிறிய துண்டுகளாக வெட்டிக் 
 கொள்ளுங்கள்(வதங்கும் வண்ணம்).

பின் தக்காளிப்பழத்தை  8 துண்டுகளாக 
அல்லது பொடிப் பொடியாக வெட்டிக் 
கொள்ளுங்கள்(வதங்கும் வண்ணம்). 


அடுப்பில் தாட்சியை (வாணலியினை)
 வைத்து அதில் எண்ணெய் விட்டு 
சூடாகவும்

 சூடானதும் அதில் கடுகு,வெள்ளுத்தம் 
பருப்பு, பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை,
மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் ஆகிய
வற்றை போட்டுத் தாளிக்கவும்

தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைப் 
போட்டு பொன்னிறமாக வதக்கவும்,

வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன், 
இவற்றுடன் எண்ணெய்யில் மஞ்சளை 
சிறிது வதங்கவும்,

பின்னர் இவற்றுடன் தக்காளிப்பழம் ,உப்பு 
ஆகியவற்றை போட்டு நன்றாக  வதக்கவும். 

 மஞ்சளை நன்றாக வதக்க வேண்டும்,

மஞ்சள் நன்றாக  வதங்கி சுருண்டு வரும் 
போது அடுப்பை அனைக்கவும்  

அணைத்த பின்னர் வரும்  சூட்டில் சிறிது
வேக விடவும்

இது அடுப்பின் சூட்டில் இருக்கும் போது, 1கப்
 தயிரில் சிறிது தண்ணீர் விட்டு தளர்க்கமாக 
செய்து கொள்ளுங்கள்.

அதிக தண்ணீர் இல்லாமல் அதே சமயம் 
கெட்டியாக இல்லாமலும் இருக்கட்டும்

கைப் பிடி சீரகத்தை இரு கைகளிலும் 
நல்லா திருகி அல்லது தேய்த்து அதன் 
மேல் நார் இருந்தால் ஊதி அப்புறப் படுத்தி 
விட்டு, தயிரில் போடவும்.

வெந்தவை ஆறிய பின் அவற்றை தயிரில்
 போட்டுக் கலக்கவும்

தயிரில் போட்டு கலந்த பின்னர் அவற்றுடன் 
சுவைக்கு ஏற்றவாறு உப்பு போடவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான மஞ்சள்
 கிழங்கு சலாட்தயாராகிவிடும்

ஒரு தட்டில்  ரொட்டி, சப்பாத்தி பாண் இவற்றில் 
ஒன்றை வைத்து இதனுடன் மஞ்சள் கிழங்கு 
சலாட்டை வைத்து பறிமாறவும் 


குறிப்பு 

 மஞ்சள் கிழங்கு மிகவும் சூடானது
(உடலுக்கு உஷ்ணம்)அதனால் 
நாங்கள் தயிர் ,பெருஞ்சீரகத்தைச் 
சேர்க்கின்றேம்.

வரமிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள் 
சேர்க்கலாம்

விரும்பினாள் வெங்காயத்தாள் (ஸ்பிரிங் 
ஆனியன்) லீக்ஸ்,சிறியசோளம் (பேபி கார்ன்), 
போன்றவற்றை இதனுடன் சேர்த்துக்
கொள்ளலாம் 

வெள்ளிக்கிழமை


Donnerstag, 16. Januar 2014

பிறந்தநாள் கேக்


வியாழக்கிழமை


Mittwoch, 15. Januar 2014

பாகற்க்காய் பிட்ல

தேவையான பொருட்கள் 

1.பாகற்க்காய் - 10
2. கடலைப் பருப்பு- ஒரு கைப்பிடி.
3.துவரம் பருப்பு - கால் கைப்பிடி,
4.புளிக்கரைசல் ஒரு டம்ளர்.
5.பச்ச மிளகாய் இரண்டு

அரைக்க தேவையான பொருட்கள் 

6.கடலைப்பருப்பு - 1ஸ்பூன்.
7.வெந்தயம் -1/2 ஸ்பூன்.
8.மிளகு - 1ஸ்பூன்
9.தனியா அல்லது கொத்தமல்லி- 2 ஸ்பூன்
10.தோங்காய்த்துருவல் - 3 ஸ்பூன்.

தாளிக்க தேவையான பொருட்கள் 

11. எண்ணெய் - 3ஸ்பூன்
12.கடுகு.
13.கறிவேப்பிலை



செய்முறை 

முதலில் பாகற்காயை படத்தில் காட்டியபடி
சிறு சிறு துண்டுகளாக வெட்டி,கொஞ்சூண்டு
உப்பு,மஞ்சள் பொடி எல்லாம் போட்டு,
அரைடம்ளர் தண்ணீர் விடலாம் அல்லது
தண்ணீர் தெளித்த மாதிரி விட்டு,குக்கரில்
ஒரு அடுக்கில் வைக்கவும், மறு அடுக்கில்
துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பைத்
 மூழ்கும் அளவுத் தண்ணீர் இட்டு

வேக வைக்கவும்.(பாகற்க்காய் குழையாத
 அளவுக்கு தண்ணீரும், விசிலும் விடவும்)

ஒரு பெரிய வாணலில் ஒரு டம்ளர் புளிக்
கரைசலில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு,
அதில் உப்பு(தேவையான அளவு, காயில்
உப்புப் போட்டுருப்பதால் பார்த்துப் போடவும்),
மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் போட்டு
கொதிவிடவும். பச்ச மிளகாயை இரண்டாக
கீறிப் போடவும்.

புளித்தண்ணீர் கொதிப்பதுக்குள் வெந்தயம்,
சிறிது கடலைப்பருப்பு,தனியா,மிளகு ஆகிய
வற்றை வறுத்து, தேங்காய்த்துருவலுடன்
 சேர்த்து, துவையல் போல அரைத்துக்
கொள்ளவும்.

புளித்தண்ணீர் பச்சை வாசம் போனவுடன்
அதில் பாகற்க்காய் மற்றும் வெந்த பருப்பு
க்களையும் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க
விடவும்.

பின்னர் அரைத்த விழுதினைப் போட்டுக்
கொதிக்க விடவும்.

நுரைக் கட்டி, கெட்டியாகி சாம்பார் வாசம்
 வரும் போது, இறக்கி வைத்து, அதில் கடுகு
,கறிவேப்பிலையைத் தேங்காய் எண்ணெய்யில்
 தாளித்துக் கொட்டவும்.

சுவையான பாகற்காய் பிட்ல ரெடி. இதுக்கு
 உருளை அல்லது கத்திரிக்காய் காரக் கறி
பண்ணினால் நல்லா இருக்கும்.

டிஸ்கி: உப்பு இரண்டு முறை போடுவதால்
கவனம் தேவை.

 இதுக்கு இரண்டு முறையும்குறைவாகப்
 போட்டு,சமைத்து முடித்த பின்னர் டேஸ்ட்
பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.

இது சாம்பார் போல கெட்டியாக இருக்க வேண்டும்.
 ஆதலால் பருப்புக்களை அதிகம் சேர்க்கவும்.
புளியில் தண்ணீர் பார்த்து விடவும்.

புதன்கிழமை


Dienstag, 14. Januar 2014

பிறந்தநாள் கேக்


செவ்வாய்க்கிழமை


Montag, 13. Januar 2014

1 வதுபிறந்தநாள் கேக்


திங்கள்கிழமை


Sonntag, 12. Januar 2014

பிறந்தநாள்கேக்


ஞாயிற்றுக்கிழமை


Samstag, 11. Januar 2014

பிறந்தநாள்கேக்


Freitag, 10. Januar 2014

ரோல்ஸ் சுற்றும் முறை

Donnerstag, 9. Januar 2014

சமையல் டிப்ஸ்,

தேயிலைத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

Mittwoch, 8. Januar 2014

முருங்கைக்கீரைத்துவையல்

முருங்கைக்கீரையில் காபோவைதரேற்று சத்து
சீனிச்சத்து நார்ச்சத்து கொழுப்புச்சத்து
புரதச்சத்து உயிர்சத்து A B9 C E K
கல்சியம் சத்து  இரும்புசத்து ஆகிய 
சத்துக்கள் காணப்படுகின்றன இப்படிப்
பட்ட கீரையுடன் வேறு பல பொருட்
களையும் சேர்த்து செய்யப்பட்டது 
சுத்தமான சுவையான சத்தான முருங்கைக்
கீரைத்துவையல் ஆகும் .இந்த முருங்கைக்
கீரைத்துவையல் கண் பார்வைக்கு சிறந்த
ஓர் உணவு.


தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை(கழுவிய) - 150 கிராம்
பச்சைமிளகாய் - 5
உள்ளி - ஒன்று (பெரியது)
கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தேங்காய்ப்பூ - பாதி (விரும்பினால்)
வெந்தயம் - 1 /4தேக்கரண்டி
எண்ணெய் - 1மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேசிக்காய்சாறு (லைம் ஜூஸ்)-1/4தேக்கரண்டி
கடுகு - 1 /4தேக்கரண்டி
சீரகம் (சோம்பு)- 1/2தேக்கரண்டி
எண்ணெய் - 1மேசைக்கரண்டி
வெங்காயம் - பாதி பாகம்


செய்முறை

1 .அடுப்பில் வெறுமையான வாணலி(தாச்சி)யை
   வைத்து அதை சூடாக்கவும்

2 .சூடாக்கிய பின்னர் அதில் கடலைப்பருப்பினை
   போட்டு நன்றாக வறுக்கவும்

3 .அது ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு
    தட்டில் போட்டு ஆறவிடவும்.

4.இதனைப் போல உளுத்தம் பருப்பினையும்
    போட்டு நன்றாக வறுக்கவும்.

5 ,அது ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு

    தட்டில் போட்டு ஆறவிடவும்.

6.அதன் பின்பு இதனைப்போல பச்சை மிளகாயை
   நன்றாக வறுக்கவும்

7.அது ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு
    தட்டில் போட்டு ஆறவிடவும்.

8.அதன் பின்பு வெந்தயதை போட்டு உடனே
   எடுத்துவிடவேண்டும் (இல்லாவிட்டால்
    கைப்பு சுவை ஏற்படும்)

9 .அதன் பின்னர் அதை ஒரு தட்டில் போட்டு
    ஆறவிடவும்.

10.அதன் பின்னர் கழுவிய முருங்கைக்கீரையுடன்
   இருக்கும் சிறிதளவு நீருடன் நன்றாக வதக்கவும்.

11.வதக்கிய பின்னர் அதனுடன் 1மேசைக்கரண்டி
   எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும்.

12 .அது ஓரளவு நன்றாக வதங்கியதும் அதை ஒரு
       தட்டில் போட்டு ஆறவிடவும்.


13.எல்லாம் ஆறியதும் கிரைண்டரில் (மிக்ஸியில்)
     வறுத்த கடலைப்பருப்பு வறுத்த உளுத்தம்பருப்பு,
     வறுத்த பச்சைமிளகாய், உள்ளி, வதக்கிய
     முருங்கைக்கீரை, வறுத்த வெந்தயம்,வெட்டிய
     வெங்காயம்,உப்பு இவையாவற்றையும் போட்டு
     போட்டு நன்றாக அரைக்கவும்

14.அரைத்த பிறகு இவற்றுடன் தேங்காய்ப்பூ போட்டு
     நன்றாக அரைக்கவும்.

15 .அரைத்த பின்பு அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில்
     போட்டு வைக்கவும் .

16.அதன் பின்னர் அடுப்பில் வாணலி(தாச்சி)யை வைத்து
     அதில் எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.

17.எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு வெடிக்க
    விடவும்

18.அதன் பின்னர் அதனுடன் சீரகம்(சேம்பு ), வெங்காயம்
    ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்

19.தாளித்த பின்னர் தாளித்தவற்றை அரைத்தவற்றுடன்
    போட்டு கலக்கவும்.

20.கலந்த பின்னர் அவற்றுடன் தேசிக்காய்சாறு (லைம்
     ஜூஸ்) போட்டு நன்றாக கலக்கவும்.

21.அதன் பின்னர்சுத்தமான சுவையான சத்தான
      முருங்கைக்கீரைத்துவையல் தயாராகிவிடும்

22.முருங்கைக்கீரைத்துவையல் தயாரான பின்னர்
     ஒரு தட்டில் சோறு(சாதம்) பாண் இடியப்பம் புட்டு
     தோசை இட்லி ஆகியவற்றில் ஒன்றினை வைத்து
      பரிமாறவும்


குறிப்பு 
விரும்பினால் தேங்காய்ப்பூ, உள்ளி சேர்க்கவும்.


எச்சரிக்கை 
இருதய நோயாளர் தேங்காய்ப்பூவை சேர்க்காமல்
செய்து சாப்பிடவும்

Dienstag, 7. Januar 2014

காய்களை வதக்கும் போது

காய்களை வதக்கும் போது 

சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் காய்கள் 
சீக்கிரம் வெந்துவிடும்

Montag, 6. Januar 2014

பிறந்தநாள்கேக்


திங்கள்கிழமை


Sonntag, 5. Januar 2014

குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால்

குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால் 

வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். 

Samstag, 4. Januar 2014

பிறந்தநாள்கேக்


Freitag, 3. Januar 2014

பிறந்தநாள்கேக்


Donnerstag, 2. Januar 2014

பிறந்தநாள்கேக்


வியாழக்கிழமை


Mittwoch, 1. Januar 2014

திருமணக்கேக்


புதன்கிழமை