கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 31. August 2013

சுக்கினி


சனிக்கிழமை


Donnerstag, 29. August 2013

ரோஸ்ட்பாண்


வியாழக்கிழமை


Mittwoch, 28. August 2013

பருத்திதுறைவடை


புதன்கிழமை


Dienstag, 27. August 2013

Montag, 26. August 2013

திருமணகேக்அலங்காரம்


திங்கள்கிழமை


Sonntag, 25. August 2013

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 24. August 2013

பப்பாசிகுழிப்பணியாரம்


தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
பப்பாளிப்பழ விழுது - அரை கப்
துருவிய வெல்லம் - கால் கப்
பால் - ஒரு கப்
பாதாம், முந்திரித்துருவல் - கால் கப்
கிஸ்மிஸ் - சிறிதளவு


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவை ,பப்பாசிப்பழவிழுது,
வெல்லம்,பால், பாதாம், முந்திரிப்பருப்பு(கயூ), 
கிஸ்மிஸ் ஆகியவற்றை போடவும் 

அதன் பின்னர் எல்லாவற்றையும் நன்றாக கலந்து 
ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.

 ஊறிய பின்பு  யாவற்றையும் நன்றாகக் கலக்கவும். 

 கலந்த பின்னர் குழிப்பணியாரச் சட்டியை 
அடுப்பில் வைக்கவும்

வைத்த பின்னர் குழிப்பணியாரச் சட்டியின் ஒவ்வொரு 
குழியிலும் நெய் விட்டு வைக்கவும்

 பின்னர் கலந்து வைத்துள்ள கலவையைக் குழியில்
 பாதியளவு ஊற்றவும் 

ஊற்றியவற்றை  மிதமான தீயில் வேக விடவும். 

வெந்தவற்றை குழியில் திருப்பிப் போடவும் 

 அதன் பின்னர் அதில் நெய் விட்டு பொன்னிறமாக 
பொரித்தெடுக்கவும் 

பொரித்தவற்றை ஒரு தட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.

சனிக்கிழமை


Freitag, 23. August 2013

வெள்ளிக்கிழமை



Donnerstag, 22. August 2013

ஜவ்வரிசி இட்லி

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி(சவ்வரிசி)  - 1/2 கப்
ரவை - 1 + 1/2 கப்
தயிர் - 1 +1/2 கப்
ஊறவைத்த கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1கப்
அப்பச்சோடா(சமையல்சோடா)- 1/4தேக்கரண்டி
கடுகு - 1தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 1 +1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கயூ(முந்திரி) - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1/4 கப்
கொத்தமல்லி இலை - 1/4 கப்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி,ரவை,உப்பு,தயிர் ஆகியவற்றை போடவும்.

அதன் பின்னர் அவற்றை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும் .

பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து அதில் எண்ணையை விட்டு கொதிக்கவிடவும் .

எண்ணைய் நன்றாக கொதித்ததும் அதில்
 கடுகு,கயூ(முந்திரி),பச்சைமிளகாய் ஆகிய
வற்றை போட்டு தாளிக்கவும் .

தாளித்ததும் அவற்றை ஊறவைத்த
கலவையில் போட்டு நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் ஊறவைத்த கடலை பருப்பு,
துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை, மல்லி இலை ஆகிய
வற்றையும் ஊறவைத்த கலவையில்
போட்டு நன்றாக கிளற வேண்டும்.

பின்பு இதனுடன் அப்பச்சோடாவை
போட்டு நன்றாக கலக்கவும்

பின்பு இட்லிப்பானையின் அரைவாசிக்கு
தண்ணீர்விட்டு இப்பாத்திரத்தை அடுப்பில்
வைக்கவும்.


அதன் பின்பு அதனுள் இட்லி தட்டுகளை
வைத்து மூடி சூடாக்கவும் .


இட்லி தட்டுகள் சூடாகியதும்மூடியை திறந்து
இட்லி தட்டுகளை வெளியே எடுத்து அதனுள்
தேவையானளவு கலந்தமாவை போட்டு இட்லி
பானையில் வைத்து வேகவிடவும்.


இட்லி வெந்தபின்பு அடுப்பிலுள்ள
பாத்திரத்தில்  இருந்து இட்லி தட்டை
வெளியே எடுத்து அதில் இருக்கும்
இட்லிகளை எடுத்து  ஒரு பாத்திரத்தில்
 போட்டு வைக்கவும்.


அதன் பின்பு சுவையான சுத்தமான  சத்தான ஜவ்வரிசி இட்லிகள் தயாராகிவிடும் .


இட்லிகள் தயாரான பின்பு ஒரு தட்டில்
தேவையான இட்லிகளை வைத்து 
அதனுடன் சம்பல்,சட்னி,சாம்பார்,
ஏதாவது கறி ஆகியவற்றில் ஒன்றை
வைத்து பரிமாறவும் .

வியாழக்கிழமை

http://fin6.com/wp-content/uploads/2013/08/2fcba9b40c3a8a2a90b02645aa9960e3.jpg

Mittwoch, 21. August 2013

மைதாமா (கோதுமைமா) வறுப்பது எப்படி?

தேவையான பொருட்கள்
மைதாமா (கோதுமைமா) - 1 கிலோ

செய்முறை ஒரு அரிதட்டினால் மைதாமாவை (கோதுமைமாவை) பூச்சி புழுக்கள் இல்லாதவாறு அரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போடவும்.
    பின்னர் அடுப்பில் வாணலியை (தாட்சியை) வைத்து சூடாக்கவும்
      சூடாக்கிய பின்னர் அதில் அரித்த(சலித்த) மாவை போட்டு ஒரு மர அகப்பையினாள் கட்டிபடாமல் மா கருகாமல் பொன்நிறமாக வறுக்கவும்
        மாவை வறுத்ததும் அதனை அடுப்பில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்
          அதன் பின்னர் அதனை ஆறவிட்டு அரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
            அதன் பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு காற்று புகாதவாறு மூடி வைக்கவும்.
              பின்பு வறுத்த மைதாமா (கோதுமைமா) தேவைப்படும் போது இதனை பாவிக்கலாம்.
              குறிப்பு
              மர அகப்பையினாள் மா கட்டிபடாமல் கருகாமல் பொன்நிறமாக வறுக்கவும் இந்த மாவில் புட்டு அவிக்கலாம் தோசை சுடலாம்

              புதன்கிழமை

              http://fin6.com/wp-content/uploads/2013/08/5f3497d98c25b17913cad7ab3885f7c8.jpg

              Dienstag, 20. August 2013

              அவித்த மைதாமா (கோதுமைமா)புட்டு

              தேவையான பொருட்கள்
              அவித்த மைதாமா (கோதுமைமா)-4 சுண்டு
                தண்ணீர் (கொதித்தது) - தேவையானளவு
                  உப்பு - தேவையானளவு
                    தேங்காய்ப்பூ, தேவையானளவு(விரும்பினால்)
                     

                    செய்முறை
                    ஒரு பாத்திரத்தில் அவித்த மைதாமா(கோதுமைமா),உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
                      அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும் (அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).
                        குழைத்த மாவை கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும் அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகள் வரக்கூடியதாக குழைக்கவும் (புட்டு பதத்திற்கு குழைக்கவும்).
                          புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
                            தண்ணீர் கொதித்து நீராவி வரத்தொடங்கியதும் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் குழைத்தமாவை போடவும்
                              அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும்.
                                அதன் பிறகு திரும்பவும் குழைத்தமாவை போடவும்.
                                  பின்பு தேங்காய் பூவை போடவும்
                                    இப்படியே குழல் அல்லது ஸ்டீமர் நிரம்பும் வரை குழைத்த மாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும்.
                                      குழைத்தமா நிரம்பிய புட்டு குழலை அல்லது ஸ்டீமரை புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் அவிய விடவும்.
                                        புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
                                          இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக அவிக்கவும்.
                                            இப்போது சுத்தமான சுவையான மாச்சத்து நிறைந்த அவித்த மைதாமா (கோதுமைமா) புட்டு தயாராகிவிட்டது
                                              அதன் பின்பு ஒரு சாப்பாட்டு கோப்பையில்(பிளேட்டில்) அவித்த மைதாமா (கோதுமைமா)புட்டை வைத்து அதனுடன் கறி, சம்பல், பொரியல், வாழைப் பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து அதனை பரிமாறவும்

                                              குறிப்பு


                                              கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
                                               அதிகளவு தண்ணீர் விடக்கூடாது. மாற்று முறை வறுத்த அல்லது அவித்த மைதாமா(கோதுமைமா)வுக்கு பதிலாக வறுத்தமைதாமா(கோதுமைமா) அல்லது வறுத்தஅரிசிமா பாவிக்கலாம்,தேங்காய் பூவை போடாமலும் செய்யலாம். 

                                               எச்சரிக்கை
                                               சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் அத்துடன் ஆஸ்துமா நோயாளர், இருதய நோயாளர் தேங்காய் பூ போடாமல் உண்ணலாம்.

                                              மைதாமா (கோதுமைமா) வறுப்பது எப்படி?

                                              தேவையான பொருட்கள் 
                                                மைதாமா (கோதுமைமா) - 1 கிலோ


                                                    செய்முறை

                                                    ஒரு அரிதட்டினால் மைதாமாவை (கோதுமைமாவை) பூச்சி புழுக்கள் இல்லாதவாறு அரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போடவும்.
                                                      பின்னர் அடுப்பில் வாணலியை (தாட்சியை) வைத்து சூடாக்கவும்
                                                        சூடாக்கிய பின்னர் அதில் அரித்த(சலித்த) மாவை போட்டு ஒரு மர அகப்பையினாள் கட்டிபடாமல் மா கருகாமல் பொன்நிறமாக வறுக்கவும்
                                                          மாவை வறுத்ததும் அதனை அடுப்பில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்
                                                            அதன் பின்னர் அதனை ஆறவிட்டு அரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
                                                              அதன் பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு காற்று புகாதவாறு மூடி வைக்கவும்.
                                                                பின்பு வறுத்த மைதாமா (கோதுமைமா) தேவைப்படும் போது இதனை பாவிக்கலாம்.
                                                                குறிப்பு
                                                                மர அகப்பையினாள் மா கட்டிபடாமல் கருகாமல் பொன்நிறமாக வறுக்கவும் இந்த மாவில் புட்டு அவிக்கலாம் தோசை சுடலாம்

                                                                செவ்வாய்க்கிழமை


                                                                Montag, 19. August 2013

                                                                மைதாமா (கோதுமைமா) அவிப்பது எப்படி?

                                                                தேவையான பொருட்கள்
                                                                  மைதாமா (கோதுமைமா) - 1 கிலோ
                                                                    தண்ணீர் - தேவையானளவு

                                                                     
                                                                    செய்முறை
                                                                    ஒரு அரிதட்டினால் மைதாமாவை (கோதுமைமாவை) பூச்சி புழுக்கள் இல்லாதவாறு அரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போடவும்.
                                                                      அதன் பின்னர் ஸ்டீமரின் கீழ்பகுதியை அல்லது ஒரு பானையை எடுத்து அதில் முக்கால் பகுதி தண்ணீரை விட்டு அதனை அடுப்பில் வைக்கவும்
                                                                        அதன் பின்னர் அதன் மேல் ஸ்டிமரின் மேற்பகுதி அல்லது நீத்துபெட்டிய வைக்கவும்
                                                                          அதன் பின்னர் ஸ்டீமரினை வைத்தால் அதனுள் சுத்தமான மெல்லிய பருத்தி வெள்ளைத்துணி ஒன்றை விரித்து வைக்கவும் ஆனால் நீத்து பெட்டியில் மாவை போடுவதானால் இது தேவை இல்லை
                                                                            அதன் பின்னர் அதில் அரித்த(சலித்த) மாவை போட்டு ஒரு மூடியினாள் மூடவும்
                                                                              அதன் பின்னர் அடுப்பை போட்டு மாவை (1 - 1.30) மணித்தியாலம் அவியவிடவும்.
                                                                                மா அவித்ததும் அதனை அடுப்பில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
                                                                                  அதன் பின்னர் அதனை ஓரளவு சூட்டுடன் 3 தடவைஅரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
                                                                                    மாவில் உள்ள சூடு ஆறியதும் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு காற்று புகாதவாறு மூடி வைக்கவும்.
                                                                                      பின்பு அவித்த மா தேவைப்படும் போது இதனை பாவிக்கலாம்.


                                                                                      குறிப்பு

                                                                                      புட்டு,இடியப்பம் அவிப்பத்திற்கும் அல்லது தோசை சுடுவதிற்கும் கொழுக்கட்டை செய்வதிற்கும் இந்த மாவை பயன்படுத்தலாம் 

                                                                                      திருமணக்கேக் அலங்காரம்


                                                                                      திங்கள்கிழமை


                                                                                      Sonntag, 18. August 2013

                                                                                      -பிறந்தநாள், கேக் அலங்காரம்












                                                                                      ஞாயிற்றுக்கிழமை


                                                                                      Freitag, 16. August 2013

                                                                                      -பிறந்தநாள், கேக் அலங்காரம்









                                                                                      வெள்ளிக்கிழமை


                                                                                      Donnerstag, 15. August 2013

                                                                                      திருமணக் கேக் அலங்காரம்





                                                                                      -பிறந்தநாள், கேக் அலங்காரம்