கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 31. Oktober 2013

வெள்ளிக்கிழமை


Mittwoch, 30. Oktober 2013

வியாழக்கிழமை


திருமணகேக் அலங்காரம்


புதன்கிழமை


Dienstag, 29. Oktober 2013

திருமணகேக்


செவ்வாய்க்கிழமை


Montag, 28. Oktober 2013

திருமணகேக் அலங்காரம்


திங்கள்கிழமை


Sonntag, 27. Oktober 2013

கச்சான்(வேர்க்கடலை) பக்கோடா


தேவையான பொருள்கள் 
வறுக்காதகச்சான்(வேர்க்கடலை)-1கப்
கடலை மா-1/2கப்
அரிசிமா-4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1தேக்கரண்டி
இஞ்சி,விழுது-1/2தேக்கரண்டி
பூண்டு விழுது-1/2தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு

செய்முறை 

ஒரு பாத்திரத்தில்  வறுக்காதகச்சான்
(வேர்க்கடலை) ,கடலை மா,உப்பு,
இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,அரிசி
மா ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்

கலந்தவற்றை 5நிமிடம் வைக்கவும்

அதன்  பிறகு அடுப்பில் தாட்சியை
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்

எண்ணெய் சூடானதும் அதில் கலந்து
வைத்துள்ளவற்றில் சிறிதளவை
கையில் எடுத்து சூடான எண்ணெய்யில்
 தூவி விடவும்

அதன் பின்னர் தீயை குறைவாக வைத்து
பொன்னிறமாக நன்கு பொரிய விடவும்

பொன்னிறமானக பொரிந்ததும் அடுப்பில்
உள்ள தாட்சியில் இருந்து எடுத்து வேறு
ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறவிடவும்

சூடு ஆறியதும் சுத்தமான சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)பக்கோடா
தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)
பக்கோடாவை போட்டு பறிமாறவும்

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 26. Oktober 2013

பயித்தம்பருப்பு தோசை

பயித்தம்பருப்பு தோசை சுவையானதும் சத்தானதும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணகூடியதும் ஆகும்
ஆகவே இதை செயது சாப்பிட்டு இதன்
சுவையை அறியவும்

தேவையான பொருட்கள்
பயித்தம்பருப்பு - 1 சுண்டு
மைதாமா(கோதுமைமா) - 2 சுண்டு
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 6
கடுகு - அரைதேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரைதேக்கரண்டி
கருவேப்பிலை( நறுக்கியது)- சிறிதளவு
நல்லெண்ணைய் - தேவையானளவு
முட்டை - 1(விரும்பினாள்)
உருளைக்கிழங்கு(சிறியது) - 1
வெங்காயம் (பெரிது ,நறுக்கியது) - 1

செய்முறை

ஒருபாத்திரத்தில் பயித்தம்பருப்பு,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து (1-2) மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

மற்றைய பாத்திரத்தில் வெந்தயம்,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

ஊறியவெந்தயம்,சிறிதளவு தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு நன்றாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போடவும்.

பின்பு ஊறிய பயித்தம்பருப்பு, தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு பொங்க பொங்க
அரைக்கவும்(தோசைமா பதத்திற்கு).

அரைத்த பின்பு அதை எடுத்து
வெந்தயம் அரைத்து வைத்து உள்ள
பாத்திரத்தில் போடவும்.

பின்பு அவிக்காத அல்லது அவிக்காத
கோதுமைமா(மைதாமா),தண்ணீர்
ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸி
யில்)போட்டு நன்றாக கலக்கவும்
(கட்டியில்லாமல்).

அரைத்த பின்பு அதை வெந்தயம், பயித்தம்
பருப்பு அரைத்து வைத்துள்ள பாத்திரத்தில்
கலந்த கோதுமைமா(மைதாமா) ஆகியவற்றை
போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

கலந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.

அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்பு
போட்டு கலக்கவும்.

பின்பு  விரும்பினாள் முட்டையை உடைத்து
அதன் கோதைஅகற்றிய பின்பு அதனை
அப்படியே தோசைமாவில் போட்டு நன்றாக
 கலக்கவும்(தோசைசுவையாகவும் தோசையை
அடுப்பில் உள்ளதோசைக்கல்லிருந்து எடுக்கும்
போதுஇலகுவாக வந்து விடும்).

பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணையை
ஊற்றி வைக்கவும்.

அதன் பின்பு உருளைக்கிழங்கை இரண்டு
பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி
உருளைகிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்
மாட்டி)வைக்கவும்.

இதனை நல்லெண்ணையுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணையில்படும்படி).

பின்பு செத்தல் மிளகாயையின்(காய்ந்த மிளகாயை)
காம்பினை அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு தட்டில் வைக்கவும்.

அதன்பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு
சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணையில் கடுகைபோட்டு வெடிக்க
விட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை
போட்டு ஓரளவு பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய்,
பெருஞ்சீரகம்,நறுக்கிய கருவப்பிலை ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு
நன்றாக கலக்கவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை
சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில்
குத்திய கிழங்கினால் (கிழங்கினை எண்ணையில்
நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணையை எடுத்து
அதை தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து
தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய
மாவை )தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி
போட்டு வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

இதே போல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து
அதனுடன் சம்பல் (துவையல்), சாம்பார், சட்னி, பிரட்டல்கறி(கிழங்கு,கத்தரிக்காய்,பீன்ஸ்)
ஆகியவற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.


எச்சரிக்கை
பயறு அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள்
தோசை குளிர்மையானது

சனிக்கிழமை


Freitag, 25. Oktober 2013

பயறு வடை



தேவையான பொருட்கள்
உடைத்தபயறு- ஒரு சுண்டு
உப்பு - தேவையான அளவு
சிறியதுண்டுகளாக்கியபெரியவெங்காயம்-1
சிறியதுண்டுகளாகநறுக்கியபச்சைமிளகாய்- 4
கறிவேப்பிலை(நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு)(நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறிய துண்டு
உடைத்த மிளகு-சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர்(நகச்சூடு) - தேவையான அளவு

செய்முறை 
ஒரு பாத்திரத்தில் உடைத்த பயற்றினை
போட்டு அதன்மேல் ஒரளவு கொதித்தநீரை)
(நகச்சூடு)விடவும். (பயற்றினைனை
விட தண்ணீர்கூடுதலாக இருக்கவேன்டும்).

அதன் பின்பு அதை (3-5) மணி
நேரம் ஊறவிடவும்.

(3-5) மணித்தியாலங்களுக்கு பின்பு ஊறிய
உடைத்த பயற்றில்உள்ள தண்ணீரை வடித்து
விட்டு அதை கிரைண்டரில்(மிக்ஸியில்)
அல்லது ஆட்டுகல்லில் போட்டு கொரகொர
வென்று அரைக்கவும்
(நன்றாக அரைக்ககூடாது)(தண்ணீர்
சேர்க்ககூடாது).

பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும்.
(சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக
கலக்காது).

பின்பு உப்பு கலந்து அரைத்த பயற்றுடன் சிறிய
சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம்,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை,நசுக்கியஉள்ளி
(பூண்டு),நசுக்கியஇஞ்சி உடைத்த மிளகு ஆகிய
வற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்துஅதில் அரைவாசிக்கு எண்ணெய்
 விட்டு அதை நன்றாக கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை
கொஞ்சம்கையில் எடுத்து அதை ஓரளவு
 உருண்டையாக்கிஅதை கையின் நடுப்
பகுதியில் வைத்து ஓரளவு தட்டிஅதன்
நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை
போடவும்.இதே போல் கொஞ்ச வடைகளை
செய்து போட்டுஓரளவு மஞ்சள் நிறமாக
பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை
வடித்துவிட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திர
த்தில் போட்டுசிறிது நேரம் மூடிவைக்கவும்
(வடையின் உட்பகுதிநன்றாக அவிவதற்காக
அப்படி செய்யாவிட்டால்வடையின் உட்பகுதி
நன்றாக அவியாது)

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும்
கொதித்தஎண்ணெயில் போட்டு நல்ல
பொன்னிறமாகபொரிக்கவும்

பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை
 வடித்து விட்டுஅதை ஒரு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.

பின்பு அதை எடுத்து சிறிய தட்டில் வைத்து
பரிமாறவும்.

எச்சரிக்கை -
பயறு அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர்
வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

மாற்று முறை -

1 :கபேச்(கோவா)சேர்த்தும் செய்யலாம்.

2 :உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம்.

3 :விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்)
அரைகால்தேக்கரண்டி சேர்க்கலாம்.

4.வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்து
விட்டுதேவையான நேரத்தில் அதை எடுத்து
 செய்யலாம்

5 .அல்லது வடையை செய்து விட்டு டீபீரீசரில்
வைத்துதேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ
அவனில் வைத்து சூடாக்கி உண்ணலாம் .

கவனிக்கவேண்டியவிஷயங்கள்

1 .வடையின் உட்பகுதி  நன்றாக அவிந்தது
விட்டதா என்பதை கவனிக்கவும்.

2.வெங்காயம் சேர்த்தவுடன் வடையை
பொரிக்கவும்(கனநேரம் வைத்திருக்ககூடாது.
வைத்திருந்தால்வெங்காயத்தினுள் உள்ள நீர்
வெளியேறி வடையைபழுதாக்கிவிடும்)

வெள்ளிக்கிழமை


Dienstag, 22. Oktober 2013

செவ்வாய்க்கிழமை


Dienstag, 15. Oktober 2013

செவ்வாய்க்கிழமை


Montag, 14. Oktober 2013

திங்கள்கிழமை


Sonntag, 13. Oktober 2013

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 12. Oktober 2013

சனிக்கிழமை


Freitag, 11. Oktober 2013

வெள்ளிக்கிழமை


Donnerstag, 10. Oktober 2013

வியாழக்கிழமை


Mittwoch, 9. Oktober 2013

புதன்கிழமை


Dienstag, 8. Oktober 2013

செவ்வாய்க்கிழமை


Sonntag, 6. Oktober 2013

முட்டை


ஞாயிற்றுக்கிழமை