கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 31. Oktober 2011

ஆட்டாமா இடியப்பம்


ஆட்டாமா இடியப்பம் இலகுவில் சமிபாடடையும் 
ஒரு உணவுப்பொருள் ஆகும் . இதில் உள்ள ஆட்டா
மாவில் காபோவைதரேட் சத்து  உள்ளது ,உப்பில்
புளோரைட்சத்து உள்ளது ஆகவே தான்  இவை
இரண்டையும் சேர்த்து செய்யப்படும் ஆட்டாமா
இடியப்பத்தில் புளோரைட்டு, காபோவைதரேட்டு
ஆகிய இரண்டு சத்துக்களும் காணப்படுகின்றன.
அத்துடன் இந்த ஆடடாமா இடியப்பம்
செய்வதிற்கு இலகுவானதும் சுத்தமானதும்
சுவையானதும்,மென்மையானாதுமாகும்
அத்துடன் இலகுவில் சமிபாடடையக்
கூடியதும் ஆகும்.


தேவையானபொருட்கள் 
ஆட்டாமா (கோதுமைமா) - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு
நன்றாக கொதித்த நீர் - தேவையான அளவு

செய்முறை 
(1)ஆட்டாமா(கோதுமைமா) ஒரு மணித்தியாலத்திற்கு
    அவிக்கவும்
(2)அவித்தமாவை மூன்று தடவைகள் கட்டி,உமி,தோல் 
     ஆகியவை இல்லாமல் அரிக்கவும் (சலிக்கவும்). 
(3)அரித்த(சலித்த)மாவை ஒரு பாத்திரத்தில் போடவும் .
(4)பாத்திரத்தில் போட்டு வைத்துள்ள மாவில் 
      தேவையானளவு உப்பு போடவும்.
(5)அதன் பின்பு நன்றாக கொதித்த நீர் விட்டு 
    மர அகப்பையால் (மரக்கரண்டியால் ) 
    நன்றாக குழைக்கவும்.
(6)நன்றாக குழைத்தபின்பு குழைத்த மா 
    எல்லாவற்றையும் ஒன்றாக்கி(பந்துபோல) 
    சேர்க்கவும். 
(7)ஒன்றாக சேர்த்த மாவிலிருந்து சிறிதளவு 
      எடுத்து இடியப்ப உரலில்(இடியப்ப அச்சுடன்
      (சிறிய துளைகள் அதிகமுடைய))போடவும்.
(8)இடியப்ப உரலில் போட்ட மாவை இடியப்ப 
     தட்டில் வட்டமாக பிழியவும்.
(9)இப்படியே ஓரளவு தேவையான இடியப்பங்களை 
     இடியப்ப தட்டில் பிழிந்து அவற்றை ஒரு 
    பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்.
(9) பின்பு இடியப்பங்கள் அவிக்கும் பாத்திரத்தின் 
     (ஸ்டீமர்) கீழ்ப்பகுதியினுள் தேவையானளவு 
     தண்ணீரை விட்ட பின்பு அதன் மேல் மேற் 
     பாத்திரத்தை வைத்து அதன் பின்பு மேற் 
     பாத்திரத்தை அதற்கு அளவான  மூடியால்
     நன்றாக மூடி அடுப்பில் வைத்து இப்பாத்திரத்தில்
    உள்ள தண்ணீரை ஆவி வரும் வரை நன்றாக 
     கொதிக்கவிடவும்.
(10)பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்றாக கொதித்து 
       ஆவி வந்து மேல் உள்ள பாத்திரம் நன்றாக 
       சூடாகிய பின்பு மேல் உள்ள பாத்திரத்தில் இடியப்ப 
       தட்டில் பிழிந்து வைத்திருக்கும் இடியப்பங்களை 
       அவற்றுக்குரிய தட்டுக்கள் உடன் சரியான முறையில் 
       அடுக்கவும்.
(11)எல்லா இடியப்ப தட்டுகளையும் சரியான முறையில் 
      அடுக்கிய பின்பு இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தின் 
      (ஸ்டீமர்)மேற்பகுதியை மூடி இடியப்பங்களை 
      ஆவியில் அவிக்கவும்.
(12)இடியப்பங்கள் ஆவியில் தேவையானளவு அவிந்த 
       பின்பு மேல் ஸ்டீமரின் மேற்பகுதியை திறந்து 
     இடியப்ப தட்டுகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் 
     வைக்கவும்.
 (13)அதன்  பின்பு இன்னொரு பாத்திரத்தில் இடியப்ப 
     தட்டில் உள்ள அவிந்த இடியப்பங்களை எடுத்து 
    அடுக்கி வைக்கவும். 
(14)இப்போது சுவையானதும் சுத்தமானதும் 
      மென்மையானதுமான ஆட்டாமா இடியப்பம் 
      தயாராகிவிட்டது.
(15)ஒரு தட்டில் தேவையான அவித்த ஆட்டாமா 
     இடியப்பத்தினை வைத்து அதனுடன் ஏதாவது 
     கறி,சொதி சம்பல் இவற்றில் ஒன்றையோ 
     அல்லது எல்லாவற்றையும் வைத்து  பரிமாறவும்.


கவனிக்க வேண்டிய விசயங்கள் 

(1) எல்லோரும் (சர்க்கரை நோயுள்ளவர்கள்
    வைத்தியரின் ஆலோசனையுடன்)
     உண்ணக்கூடிய உணவு, 

(2) (a)அவித்து(1 மணித்தியாலம்),
      (b)3 தரம் அரித்த(சலித்த) கோதுமைமா
           (இலங்கை ஆட்டாமா),
    (c)நன்றாக கொதித்த நீர் 

(3)ஆட்டாமாவை முதலிலே அவித்து
    அரித்து,ஆறவைத்து காற்று,பூச்சி,
    புழு போகாதவாறு மூடியுள்ள ஒரு
   பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து
   இடியப்பம் தேவையான நேரத்தில்
    செய்யலாம்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 30. Oktober 2011

அவித்த கோதுமைமா (மைதாமா)


கோதுமைமா (மைதாமா)இடியப்பம் இலகுவில் 
சமிபாடடையும்  ஒரு உணவுப்பொருள் ஆகும் . 
இதில் உள்ள கோதுமைமாவில் காபோவைதரேட்
சத்து  உள்ளது ,உப்பில் புளோரைட்சத்து உள்ளது 
ஆகவே தான்  இவை இரண்டையும் சேர்த்து 
செய்யப்படும் கோதுமைமா இடியப்பத்தில் 
புளோரைட்டு, காபோவைதரேட்டு ஆகிய இரண்டு 
சத்துக்களும் காணப்படுகின்றன.அத்துடன் இந்த
கோதுமை மா  இடியப்பம் சுத்தமானதும் 
சுவையானதும்,மென்மையானதும் இலகுவில் 
சமிபாடடையக்கூடியதும் ஆகும்.


தேவையானபொருட்கள் 
இலங்கை கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு
நன்றாக கொதித்த நீர் - தேவையான அளவு

செய்முறை 
(1)இலங்கை கோதுமைமா(மைதாமா)ஒரு 
     மணித்தியாலத்திற்கு அவிக்கவும்


(2)அவித்தமாவை மூன்று தடவைகள் 
     அரிக்கவும் (சலிக்கவும்). 


(3)அரித்த(சலித்த)மாவை ஒரு பாத்திரத்தில் போடவும் .


(4)பாத்திரத்தில் போட்டு வைத்துள்ள மாவில் 
      தேவையானளவு உப்பு போடவும்.


(5)அதன் பின்பு நன்றாக கொதித்த நீர் விட்டு 
    மர அகப்பையால் (மரக்கரண்டியால் ) 
    நன்றாக குழைக்கவும்.


(6)நன்றாக குழைத்தபின்பு குழைத்த மா 
    எல்லாவற்றையும் ஒன்றாக்கி(பந்துபோல) 
    சேர்க்கவும். 


(7)ஒன்றாக சேர்த்த மாவிலிருந்து சிறிதளவு 
      எடுத்து இடியப்ப உரலில்(இடியப்ப அச்சுடன்
      (சிறிய துளைகள் அதிகமுடைய))போடவும்.


(8)இடியப்ப உரலில் போட்ட மாவை இடியப்ப 
     தட்டில் வட்டமாக பிழியவும்.


(9)இப்படியே ஓரளவு தேவையான இடியப்பங்களை 
     இடியப்ப தட்டில் பிழிந்து அவற்றை ஒரு 
    பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்.


(10) பின்பு இடியப்பங்கள் அவிக்கும் பாத்திரத்தின் 
     (ஸ்டீமர்) கீழ்ப்பகுதியினுள் தேவையானளவு 
     தண்ணீரை விட்ட பின்பு அதன் மேல் மேற் 
     பாத்திரத்தை வைத்து அதன் பின்பு மேற் 
     பாத்திரத்தை அதற்கு அளவான  மூடியால்
     நன்றாக மூடி அடுப்பில் வைத்து இப்பாத்திரத்தில்
    உள்ள தண்ணீரை ஆவி வரும் வரை நன்றாக 
     கொதிக்கவிடவும்.


(11)பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்றாக கொதித்து 
       ஆவி வந்து மேல் உள்ள பாத்திரம் நன்றாக 
       சூடாகிய பின்பு மேல் உள்ள பாத்திரத்தில் இடியப்ப 
       தட்டில் பிழிந்து வைத்திருக்கும் இடியப்பங்களை 
       அவற்றுக்குரிய தட்டுக்கள் உடன் சரியான 
       முறையில் அடுக்கவும்.


(12)எல்லா இடியப்ப தட்டுகளையும் சரியான முறையில் 
      அடுக்கிய பின்பு இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தின் 
      (ஸ்டீமர்)மேற்பகுதியை மூடி இடியப்பங்களை 
      ஆவியில் அவிக்கவும்.


(13)இடியப்பங்கள் ஆவியில் தேவையானளவு அவிந்த 
       பின்பு மேல் ஸ்டீமரின் மேற்பகுதியை திறந்து 
     இடியப்ப தட்டுகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் 
     வைக்கவும்.

(14)அதன்  பின்பு இன்னொரு பாத்திரத்தில் இடியப்ப 
     தட்டில் உள்ள அவிந்த இடியப்பங்களை எடுத்து 
    அடுக்கி வைக்கவும். 


(15)இப்போது சுவையானதும் சுத்தமானதும் 
      மென்மையானதுமான கோதுமைமா
      (மைதாமா)இடியப்பம் தயாராகிவிட்டது.


(16)ஒரு தட்டில் தேவையான அவித்த கோதுமை
       மா(மைதா மா) இடியப்பத்தினை வைத்து 
      அதனுடன் ஏதாவது கறி,சொதி சம்பல் 
      இவற்றில் ஒன்றையோ அல்லது எல்லா
      வற்றையும் வைத்து  பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் 

(1) எல்லோரும் (சர்க்கரை நோயுள்ளவர்கள்
    வைத்தியரின் ஆலோசனையுடன்)
     உண்ணக்கூடிய உணவு, 

(2) (a)அவித்து(1 மணித்தியாலம்),
     (b)3 தரம் அரித்த(சலித்த) இலங்கை 
          கோதுமைமா (மைதாமா  ),
     (c)நன்றாக கொதித்த நீர் 

(3)இலங்கை கோதுமைமா(மைதாமா)
     மாவை முதலிலே அவித்து அரித்து,
     ஆறவைத்து காற்று,பூச்சி,புழு 
     போகாதவாறு மூடியுள்ள ஒரு
     பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து
     இடியப்பம் தேவையான நேரத்தில்
     செய்யலாம்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 22. Oktober 2011

சோயா தோசை


தோசை சுவையானதும் சத்தானதும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணகூடியதும் ஆகும்
ஆகவே இதை செயது சாப்பிட்டு இதன்
சுவையை அறியவும் 

தேவையான பொருட்கள் 
சோயாபருப்பு - 1 சுண்டு
மைதாமா(கோதுமைமா) - 2 சுண்டு
அரிசி - சிறிதளவு
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 6
கடுகு - அரைதேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரைதேக்கரண்டி
கருவப்பிலை( நறுக்கியது)- சிறிதளவு
நல்லெண்ணைய் - தேவையானளவு
முட்டை - 1(விரும்பினாள்)
உருளைக்கிழங்கு(சிறியது) - 1
வெங்காயம் (பெரிது ,நறுக்கியது) - 1

செய்முறை 
ஒருபாத்திரத்தில் சோயாபருப்பு,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

மற்றையபாத்திரத்தில் வெந்தயம்,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
 ஊறவைக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் அரிசி,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
 ஊறவைக்கவும்.

ஊறியவெந்தயம்,சிறிதளவு தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு நன்றாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் ஊறவைத்த
அரிசி தண்ணீர் ஆகியவற்றை கலந்து
கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு
நைசாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போடவும்.

பின்பு ஊறிய சோயாபருப்பு, தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு பொங்க பொங்க
அரைக்கவும்(தோசைமா பதத்திற்கு).

அரைத்த பின்பு அதை எடுத்து அரிசி
,வெந்தயம் அரைத்து வைத்து உள்ள
பாத்திரத்தில் போடவும்.

பின்பு கோதுமைமா(மைதாமா),தண்ணீர்
ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்)
போட்டு நன்றாக கலக்கவும்(கட்டியில்லாமல்).

அரைத்த பின்பு அதை அரிசி,வெந்தயம்,
சோயாபருப்பு அரைத்து வைத்து உள்ள
பாத்திரத்தில் கலந்த கோதுமைமா(மைதாமா)
போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

கலந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.

அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்பு
போட்டு கலக்கவும்.

பின்பு முட்டையை உடைத்து அதன் கோதை
அகற்றிய பின்பு அதனை அப்படியே தோசை
 மாவில் போட்டு நன்றாக கலக்கவும்(தோசை
சுவையாகவும் தோசையை அடுப்பில் உள்ள
தோசைக்கல்லிருந்து எடுக்கும் போது
இலகுவாக வந்து விடும்).

பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணையை
ஊற்றி வைக்கவும்.

அதன் பின்பு உருளைக்கிழங்கை இரண்டு
பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி
உருளைகிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்
மாட்டி)வைக்கவும்.

இதனை நல்லெண்ணையுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணையில்படும்படி).

பின்பு செத்தல் மிளகாயையின்(காய்ந்த மிளகாயை)
காம்பினை அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு தட்டில் வைக்கவும்.

அதன்பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு
சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணையில் கடுகைபோட்டு வெடிக்க
விட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை
போட்டு ஓரளவு பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய்,
பெருஞ்சீரகம்,நறுக்கிய கருவப்பிலை ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு
 நன்றாக கலக்கவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை
 சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில்
 குத்திய கிழங்கினால் (கிழங்கினை எண்ணையில்
 நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணையை எடுத்து
 அதை தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து
தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய
 மாவை )தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி
போட்டு வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

இதே போல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து
அதனுடன் சம்பல் (துவையல்), சாம்பார், சட்னி, பிரட்டல்கறி(கிழங்கு,கத்தரிக்காய்,பீன்ஸ்)
ஆகியவற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை 
சோயாபருப்பு அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் 
தோசை குளிர்மையானது

மாற்று முறை 
அரிசி(பச்சையரிசி,குத்தரிசி இட்லி அரிசி
,சம்பா, புலுங்கள் )எல்லா அரிசிகளையும்
 பாவிக்கலாம்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 4. Oktober 2011

சோயா பருப்பு தோசை


தோசை சுவையானதும் சத்தானதும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
விரும்பி உண்ணகூடியதும் ஆகும்
ஆகவே இதை செயது சாப்பிட்டு இதன்
சுவையை அறியவும் 

தேவையான பொருட்கள் 
சோயாபருப்பு - 1 சுண்டு
மைதாமா(கோதுமைமா) - 2 சுண்டு
அரிசி - சிறிதளவு
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 6
கடுகு - அரைதேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரைதேக்கரண்டி
கருவப்பிலை( நறுக்கியது)- சிறிதளவு
நல்லெண்ணைய் - தேவையானளவு
முட்டை - 1(விரும்பினாள்)
உருளைக்கிழங்கு(சிறியது) - 1
வெங்காயம் (பெரிது ,நறுக்கியது) - 1

செய்முறை 
ஒருபாத்திரத்தில் சோயாபருப்பு,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

மற்றையபாத்திரத்தில் வெந்தயம்,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
 ஊறவைக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் அரிசி,தண்ணீர்
ஆகியவற்றை கலந்து 1 மணித்தியாலம்
 ஊறவைக்கவும்.

ஊறியவெந்தயம்,சிறிதளவு தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு நன்றாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதனுடன் ஊறவைத்த
அரிசி தண்ணீர் ஆகியவற்றை கலந்து
கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு
நைசாக அரைக்கவும்.

அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் போடவும்.

பின்பு ஊறிய சோயாபருப்பு, தண்ணீர்
ஆகியவற்றை கலந்து கிரைண்டரில்
(மிக்ஸியில்)போட்டு பொங்க பொங்க
அரைக்கவும்(தோசைமா பதத்திற்கு).

அரைத்த பின்பு அதை எடுத்து அரிசி
,வெந்தயம் அரைத்து வைத்து உள்ள
பாத்திரத்தில் போடவும்.

பின்பு கோதுமைமா(மைதாமா),தண்ணீர்
ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்)
போட்டு நன்றாக கலக்கவும்(கட்டியில்லாமல்).

அரைத்த பின்பு அதை அரிசி,வெந்தயம்,
சோயாபருப்பு அரைத்து வைத்து உள்ள
பாத்திரத்தில் கலந்த கோதுமைமா(மைதாமா)
போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

கலந்தவற்றை நன்றாக புளிக்க வைக்கவும்.

அடுத்தநாள் புளித்த தோசைக் கலவைக்கு உப்பு
போட்டு கலக்கவும்.

பின்பு முட்டையை உடைத்து அதன் கோதை
அகற்றிய பின்பு அதனை அப்படியே தோசை
 மாவில் போட்டு நன்றாக கலக்கவும்(தோசை
சுவையாகவும் தோசையை அடுப்பில் உள்ள
தோசைக்கல்லிருந்து எடுக்கும் போது
இலகுவாக வந்து விடும்).

பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நல்லெண்ணையை
ஊற்றி வைக்கவும்.

அதன் பின்பு உருளைக்கிழங்கை இரண்டு
பாதியாக வெட்டவும்.

முள்ளுக்கரண்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு பாதி
உருளைகிழங்கை குத்தி(முள்ளுஉள்ள பகுதியில்
மாட்டி)வைக்கவும்.

இதனை நல்லெண்ணையுள்ள தட்டில் வைக்கவும்
(கிழங்கு எண்ணையில்படும்படி).

பின்பு செத்தல் மிளகாயையின்(காய்ந்த மிளகாயை)
காம்பினை அகற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு தட்டில் வைக்கவும்.

அதன்பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு
சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணையில் கடுகைபோட்டு வெடிக்க
விட்ட பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை
போட்டு ஓரளவு பொரிய விடவும்.

ஓரளவு பொரிந்ததும் அதனுடன் செத்தல் மிளகாய்,
பெருஞ்சீரகம்,நறுக்கிய கருவப்பிலை ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும்.

தாளித்த பின்பு அதனை தோசை மாவில் போட்டு
 நன்றாக கலக்கவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதை
 சூடாக்கவும்.

தோசைக்கல் சூடானதும் அதில் முள்ளுகரண்டியில்
 குத்திய கிழங்கினால் (கிழங்கினை எண்ணையில்
 நன்றாக புரட்டி)சிறிதளவு நல்லெண்ணையை எடுத்து
 அதை தோசைக்கல்லில் தடவும்.

தடவிய பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து
தோசைக்கல்லில் ஊற்றி நன்றாக தேய்த்து(ஊற்றிய
 மாவை )தோசையை வேகவிடவும்.

தோசையின் ஒருபக்கம் வெந்ததும் அதை திருப்பி
போட்டு வேகவிடவும்.

தோசை நன்றாக வெந்தபின்பு அதை எடுத்து ஒரு
பாத்திரத்தில் வைக்கவும்.

இதே போல மற்றைய தோசைகளையும் சுட்டு
முதலில் சுட்ட தோசை போட்ட பாத்திரத்தில்
வைக்கவும்.

அதன் பின்பு ஒரு தட்டில் தோசைகளை வைத்து
அதனுடன் சம்பல் (துவையல்), சாம்பார், சட்னி, பிரட்டல்கறி(கிழங்கு,கத்தரிக்காய்,பீன்ஸ்)
ஆகியவற்றில் ஒன்றுடன் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை 
சோயாபருப்பு அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் 
தோசை குளிர்மையானது

மாற்று முறை 
அரிசி(பச்சையரிசி,குத்தரிசி இட்லி அரிசி
,சம்பா, புலுங்கள் )எல்லா அரிசிகளையும்
 பாவிக்கலாம்.

சோயா இட்லி

சோயா இட்லி சுவையானதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரையும் விரும்பி உண்ணும் உணவு
ஆகும். அத்துடன் இது ஒரு பாரம்பரிய உணவாகும்
இதில் விற்றமின், கல்சியம், மினரல்,பொட்டாஷியம்
ஆகிய பலசத்துகள் அடங்கியது.அத்துடன்
செய்வதிற்கு இலகுவானதுமாகும் ஆகவே இதனை
செய்து பார்த்து இதன் சுவையைஅறியவும்.

தேவையான பொருட்கள் 

சோயா  - அரை சுண்டு
ரவை - ஒரு சுண்டு
ஜஸ் கட்டி - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
அப்பச்சோடா - அரை தேக்கரண்டி(விரும்பினால்)
உப்பு - தேவையானளவு

செய்முறை 

சோயாவை(அரை - ஒரு) மணித்தியாலம்
ஊறவைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் ரவையை
போட்டு அதை பொன்னிறமாக வறுக்கவும்.

வறுத்த ரவையை ஆறவிடவும்.

கிரைண்டரில்(மிக்ஸியில்)சோயாவை போட்டு
அதனுடன் தண்ணீர் விட்டு அதை இட்லி பதத்திற்கு
அரைக்கவும்.

நன்றாக இட்லி பதத்திற்கு அரைத்த பின்பு அதை
எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதன் பின்பு கிரைண்டரில் (மிக்ஸியில்) வறுத்த
ரவையுடன்,தண்ணீரை சேர்த்து கட்டியில்லாமல்
அடித்து கலக்கவும்.

அரைத்த சோயாவுள்ள பாத்திரத்தில் கட்டியில்லாமல்
 அடித்து கலந்த ரவையை சேர்த்து கலக்கவும்.

பின்பு அதனுடன் அப்பச்சோடா, ஐஸ்கட்டிகளை
சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்த கலவையை புளிக்கவைக்கவும்
(6 - 8 மணித்தியாலம்).

கலவை புளித்ததும் அதில் உப்பை போட்டு
கலக்கவும்.

பின்பு அடுப்பில் இட்லி செய்யும் பாத்திரத்தின்
கீழ் பகுதியின் உள் முக்கால் பகுதிக்கு தண்ணீர்
விட்டு அதனுள் இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன் மேற் மூடியால் மூடி பின்பு
அதனை சூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த
மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு
குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு
குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.

அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள்
 தயாராகிவிடும்.

அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு
பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம்
மூடி வைக்கவும்.

பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும்
 அவிக்கவும்.

பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன்
சம்பல் அல்லது சாம்பாரு அல்லது கறி அல்லது
இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.


மாற்று முறை 
ரவைக்கு பதிலாக 1 + 1/2 சுண்டு இட்லி அரிசி அல்லது
பச்சரிசியை பாவிக்கலாம்.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்