கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 28. Februar 2014

கீரை

கீரையை வேகவைக்கும் போது மூடி போட்டு வைக்கக்கூடாது. அவ்வாறு மூடி வேகவைத்தால் நிறமும் மணமும் மாறிவிடும்.

Donnerstag, 27. Februar 2014

கேசரி

கேசரி செய்யும் போதும் தண்ணீரின் அளவைக் குறைத்து பால் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும். 

Mittwoch, 26. Februar 2014

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

Dienstag, 25. Februar 2014

கோவா (முட்டைக்கோஸ்)

முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.





Montag, 24. Februar 2014

வடகம்

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

திங்கள்கிழமை


Sonntag, 23. Februar 2014

சட்னி

தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

Samstag, 22. Februar 2014

வெங்காய ஊத்தப்பம்

வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

Freitag, 21. Februar 2014

தோசை

தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

Donnerstag, 20. Februar 2014

சாதம்

சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

Mittwoch, 19. Februar 2014

ஜாம்

வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

Dienstag, 18. Februar 2014

பாண் (ரொட்டி)

பாணை (ரொட்டியை) போட்டு வைக்கும் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வைத்தால் பாண் (ரொட்டி)  பழுதாகப் (நமத்துப்) போகாமல் இருக்கும். . 

Montag, 17. Februar 2014

நெய்

நெய்யை உருக்கிய பின்னர்தான் சாப்பிட வேண்டும். கெட்டி நெய்யாக சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும். 

திங்கள்கிழமை


Sonntag, 16. Februar 2014

ரசம்

*ரசத்துக்கு நெய் விட்டுத் தாளித்தால் மணம் கூடும்

Samstag, 15. Februar 2014

தேன்குழல் அல்லது ஜிலேபி

மிகவும் எளிதானதும் இலகுவானதும் 
அனைவரும் விரும்பி உண்ணும் 
சிற்றுண்டி. 

தேவையான பொருட்கள்

கோது நீக்கியஉழுந்து -1 சுண்டு 
வெள்ளையரிசி -3 மேசைக்கரண்டி 
சீனி-
750 கிராம் 
செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு
எசென்ஸ் சிறிதளவு
எண்ணெய்- 
1 லீற்றர் 
தேசிக்காய் புளி- 
சிறிதளவு 

செய்முறை

முதலில் 750 கிராம் சீனியை எடுத்து 
அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் 
வைத்து காச்ச வேண்டும். 

சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் 
குளிர்தண்ணீரில் ஒரு துளியினை 
விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் 
உறையும் தன்மை வரும். 

 அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் 
அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், 
 தேசிப்புளி என்பவற்றை சேர்த்து
பாகினை உடனே இறக்கி வைக்க 
வேண்டும். 

வேறேர் பாத்திரத்தில் எண்ணையை 

கொதிக்க விட வேண்டும். 

எண்ணையை கொதிக்க விடும்போதே 

உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். 

உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் ஊற
வைத்து கெட்டியாக (இட்டலி பதத்திற்கு ) 
சிறிதளவு உப்பு, சிறிதளவு கலரிங் சேர்த்து
 மைபோல அரைத்து எடுக்கவும்.

பின்னர் அரைத்த உழுந்தினை இலகுவான 

முறையில் ஒரு பொலித்தீன் பையினுள் 
ஊற்றி வாய்ப்பகுதியை மூடி அடைத்துக் 
கொள்ளவும். 

பின்னர் ஒரு மூலையில் சிறு துவாரம் 
இட்டு அதனூடாக முறுக்கு பிளிவது 
போல் எண்ணையினுள் 2-3 வட்டமாக   
 பிளிந்து விடவேண்டும்.

பின்னர் இரண்டு பக்கமும் திருப்பி 

திருப்பி வேக விட வேண்டும். 

நன்கு வெந்ததும் எடுத்து பாகில் போட்டு 
கொள்ள வேண்டும். 

 பின்னர் வேறோர் தட்டில் அடுக்கி 
வைக்கவும். 

அவ்வாறே எல்லாவற்றையும் சுட்டு 
 எடுக்கவும். 

ஆறியதும் பரிமாறலாம்.



குறிப்பு: 

உழுந்தினை அரைத்து அதிக நேரம் 

வைத்தால் உழுந்து புளிப்பு தன்மையை
 அடைந்து விடும். எசென்ஸ்க்கு பதிலாக 
ஏலக்காய் பவுடரையும் பாவிக்கலாம்.

பாகு மிகுதியாக இருந்தால் அதனை 

தோய்த்தெடுத்த தேன்குழலின்மேல் 
ஊற்றிவிடலாம். 

மறுநாள் சாப்பிடும் போது மிகவும் 
சுவையாக இருக்கும்.

Freitag, 14. Februar 2014

வெள்ளிக்கிழமை


மஸ்கெற்

தேவையான பொருட்கள்

750 கிறாம் கோதுமை மா
1 கிலோ சீனி
1/6 லீற்றர் எண்ணெய்
75 கிராம் முந்திரிப்பருப்பு
40 கிராம் ஏலக்காய் (பொடி செய்து)

செய்முறை

கோதுமைமாவை தண்ணீர் சேர்த்து 
கெட்டியாக குழைத்து ஒரு வாய் 
அகன்ற பாத்திரத்தில் வைத்து 
 அதற்குள் நீர் ஊற்றி அதை முதல்
நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் அந்த மாக் கலவையை 
ஊறவைத்த தண்ணீருள் சிறிது சிறிதாக 
சேர்த்து கரைத்து துணியில் வடித்து 
பாலாக எடுக்கவும்.

பின்னர் அடுப்பில் கனமான பாத்திரத்தை 
வைத்து அதனுள் சீனியை போட்டு சீனியை 
உருக விடவும் 

. சீனி நன்றாக உருகியதும் அதனுள் 
அம்மாப் பாலை ஊற்றி கட்டி படாது 
 தொடர்ந்து கிண்டவும்.

கலவை ஒட்டும் பதம் வரும் போது 
எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து 
கிண்டவும் 

திரள தொடங்கும் போது அதனுள் 
முந்திரியை பருப்பு, ஏலக்காய் சேர்த்து 
கெட்டியாக கிண்டவும்.

கலவை ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி 
றேயினுள் கொட்டி பரவி ஆற விடவும். 

மறுநாள் விரும்பிய வடிவத்தில் வெட்டி 
பரிமாறலாம்

Donnerstag, 13. Februar 2014

நண்டுக்கறி

தேவையான பொருட்கள்

நண்டு - 500 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
சிறிய வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை – 1 இறகு
புளி – சிறிய தேசிக்காயளவு
இஞ்சி - சிறிது
மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
வெந்தயம் - சிதளவு
தேங்காய் - பாதி
எண்ணெய் – தாளிக்க தேவையானளவு
உப்பு - தேவையானளவு

செய்முறை

நண்டைச் சுத்தம் செய்து, பெரிய 
நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக 
உடைக்கவும்

சிறிய நண்டாயின் இரண்டாக
 உடைக்கவும்.

பெரிய கால்களை இரண்டாக 
முறிக்கவும்.

அவற்றை சிறிது மஞ்சள் தூள் 
சேர்த்து பிரட்டி வைக்கவும். 
(சிலர் மஞ்சள் பாவிப்பதில்லை)

பாதித் தேங்காயை துருவி ஒரு
 தட்டில் வைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், 
என்பனவற்றை நீட்டாக வெட்டி
தனித்தனியாக வைக்கவும்.

உள்ளியை சிறுதுகள்களாக 
சீவிக் கொள்ளவும்.

இஞ்சியையும் சீவிக் கொள்ளலாம் 
அல்லது குத்திக் கொள்ளவும்

ஒரு தாச்சியில் தேங்காய்பூ, 
பெருஞ்சீரகம், மிளகு, 
ஆகியவற்றை  இட்டு தேங்காய்பூ 
பொன்னிறமாகும் வரை வறுத்து 
எடுத்து ஒரு பாத்திரத்தில் 
 வைத்திருக்கவும்.

தாச்சியில் சிறிதளவு எண்ணெய் 
ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் 
அதில் கொஞ்ச கடுகு,பெருஞ்சீரகத்தை 
போடவும். 

கடுகு வெடித்ததும் அதற்குள் கொஞ்ச 
வெந்தயம் போடவும். 

வெந்தயம் பொரிந்து சிவத்ததும் 
 வெட்டிவைத்த பெரிய வெங்காயத்தையும், 
பச்சை மிள்காயையும், உள்ளியையும் 
 போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கி வந்ததும் அதற்குள்
 கழுவி வைத்த நண்டை போட்டு கிழறி 
வதங்க விடவும். 

கொஞ்சம் வதங்கி வந்ததும் அதற்குள் 
 பழப்புளியைக் கரைத்து விடவும்.

 அத்துடன் நண்டு அவிய தேவையான 
அளவு தண்ணீரையும் விடவும்.

அதற்குள் 3 தேக்கரண்டி மிளகாய்தூள் 
உப்பும், சீவி வைத்த இஞ்சியையும், 
வெட்டி வைத்த சின்ன வெங்காயமும் 
போட்டு கலக்கி மூடி அவிய விடவும். 

சிலர் வெட்டிய பச்சை மிளகாயை 
வதக்காது சின்ன வெங்காயத்துடன் 
சேர்த்து அவியப் போடுவார்கள்.

நண்டு அரை அவியல் அவிந்ததும் 
அதற்குள் நாம் வறுத்து வைத்த 
தேங்காய் வறுவலைப் போட்டு 
நன்கு கலக்கித் துளாவி திரும்பவும் 
கொதித்து அவிய விடவும்.

கறி வற்றி பிரட்டல் கறியாக வரும் 
போது கறிவேப்பிலையைப் போட்டு 
இறக்கி மூடிவிடவும்.

இப்போது நண்டுக் கறி ரெடி.

குறிப்பு:

சிலர் பழப் புளிக்கு பதிலாக தேசிக்காய் 
புளியும் விடுவார்கள்.

இன்னும் சிலர் கறிமுறுக்கம் இலை 
சேர்ப்பார்கள்,

தேங்காய் பாலாகவும் சேர்க்கலாம். 
கறி தடிக்காது. 

பூவை வறுத்துப்போட்டால் கறி தடிக்கும், 
ருசியாகவும் இருக்கும்

நண்டு வாங்கும்போது பாரமான பெட்டை
 நண்டாக பார்த்து வாங்கவும்


Mittwoch, 12. Februar 2014

ரவை லட்டு

தேவையான பொருட்கள்

1 சுண்டு ரவை
1சுண்டு சீனி
அரை ரின்பால்
1 சுண்டு தேங்காய் பூ
1 சுண்டு வெள்ளை அரிசி
அரை சுண்டு எள்ளு
50 கிராம் அவிக்காத கோதுமைமா
50 கிராம் ஏலக்காய்

செய்முறை

ரவை, தேங்காய்ப்பூ, எள்ளு 
என்பவற்றை தனித்தனியாக 
வறுத்து எடுக்கவும்.

சீனியை அரைத்து எடுக்கவும்.

பின்னர் வறுத்து எடுத்தவற்றை 
தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.

பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் 
அரைத்த ரவை, அரைத்த சீனி, 
அரைத்த எள்ளு, அரைத்த தேங்காய்பூ, 
ஏலக்காய் பவுடர் போட்டு ரின்பால் 
சேர்த்து நன்றாக கலக்கவும். 
 (உருட்டும் பதம் வரவில்லையென்றால் 
சிறிது கொதிநீர் சேர்க்கலாம்)

பின்னர் அக்கலவையை மிக்சியில் 
போட்டு அரைத்து எடுக்கவும். 

அரைத்து எடுத்தவற்றை சிறு உருண்டை
களாக உருட்டி எடுக்கவும்.

வெள்ளை அரிசியை ஊறவைத்து மாவாக
 அரைத்து எடுக்கவும்.

 பின்னர் அதனுடன் அவிக்காத கோதுமை
மாவையும்  தண்ணீர் சேர்த்து தடித்த 
கலவைபோல் எடுத்து , அவ் உருண்டைகளை 
அவ் மாவில் தோய்த்து எண்ணையில் 
 பொரித்து எடுத்து ஆறியபின்னர் பரிமாறலாம்.  

Dienstag, 11. Februar 2014

எலுமிச்சைச் சாறு

*எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங் களுக்கு, பச்சைமிளகாய் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும்.

Montag, 10. Februar 2014

தொதல்

தேவையான பொருட்கள்
பச்சையரிசி-1 சுண்டு
தேங்காய்-5
அல்லது
ரின் தேங்காய்ப்பால் 8 சிறியவை
ஏலக்காய்ப்பொடி -சிறிதளவு
200 கிராம் கஜு-200 கிராம்
சீனி- 1 கிலோ (4 சுண்டு)
 சவ்வரிசி -3 மேசைக் கரண்டி
பதிலாக
வறுத்த பாசிப்பயறையும் பாவிக்கலாம்
சக்கரை-250 கிராம்

செய்முறை

அரிசியை ஊறவைத்து இடித்து அரித்து
மாவாக எடுத்து கொள்ளவும்.

முழு தேங்காளாயின் துருவி முதல்
பால் தனியாகவும் மற்றைய பாலை
தனியாகவும் 8 கிளாஸ் தண்ணீர்
 சேர்த்து பிளிந்து எடுக்கவும்.

அல்லது ரின் பாலாயின் 8 கிளாஸ்
தண்ணீரை 2 ரின் தேங்காய்பாலுடன்
கலந்து வைக்கவும்.

பின்னர் வாய் அகன்ற கனமான
பாத்திரத்தில் மா, தேங்காய்ப்பால்,
சீனி, சர்க்கரை, சவ்வரிசி சேர்த்து
கரைத்து அடுப்பில் வைத்து 2
மணித்தியாலம் வரை கிண்டவும்.

கலவை திரள தொடங்கியதும்
மிகுதியாயுள்ள 6 ரின் தேங்காய்ப்பாலை
 அல்லது முதல்பாலை கொஞ்சம்
 கொஞ்சமாக சேர்த்து கிண்டவும்.

அத்துடன் தூளாக வெட்டிய கஜூவையும்
பொடி செய்த ஏலக்காயையும் போட்டு
கெட்டியாகும் வரை கிளறவும்.

பின்னர் கையில் ஒட்டாத பதம் வந்ததும்
இறக்கி கொட்டி ஆறவிடவும்.

பின்னர் மறுநாள் வெட்டி பரிமாறலாம். 

திங்கள்கிழமை


Sonntag, 9. Februar 2014

ஆட்டிறைச்சி - பிரட்டல் கறி

தேவையான பொருட்கள்:
ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ 
நீளமாக வெட்டியபெரியவெங்காயம் – 2 
சிறிதாகவெட்டியசிறிய உருளைகிழங்கு-1 
நீளமாக வெட்டியபச்சை மிளகாய் – 5 
நீளமாக பிளந்து இரண்டாக வெட்டியஉள்ளி: 5 - 6 பற்கள் 
கடுகு,– 1/2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1/2மேசைக்கரண்டி
வெந்தயம்- சிறிதளவு
கறிவேப்பிலை – 2 -3 காம்பு
றம்பை - சிறிதாக வெட்டிய 8-20 துண்டுகள்
எண்ணெய் – தேவையானளவு
மிளகாய்த்தூள் – தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேசிக்காய் – பாதி 
எண்ணெய்: தேவையானளவு

செய்கை முறை:

சுத்தம் செய்து சிறு துண்டுகளாக 
வெட்டியஆட்டிறைச்சியுடன் 
சிறிதளவு உப்பு கறிமிளகாய் 
தூள் ஆகியவற்றை போட்டு  
நன்றாக குழைத்து வைக்கவும். 

கறிச்சட்டியில் எண்ணெயை 
விட்டு சூடாக்கவும் 
(கறிச் சட்டி ஒட்டாத நொன் 
ஸ்ரிக்காக இருப்பது நல்லது).

எண்ணெய் சூடானதும் அதில் 
கடுகை போட்டு வெடிக்க
விடவும் 

அதன் பின்னர் அதில் பெருஞ்
சீரகம், வெந்தயம் ஆகியவற்றை 
போடவும். 

வெந்தயம் சிவந்ததும் அதில் 
உள்ளியை (பூண்டு) சேர்த்து 
வதக்கவும்   

பின்பு வெட்டிவைத்த வெங்காயம்,
 பச்சை மிளகாய் என்பவற்றை 
போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வதங்கி வரும் 
போது குழைத்து வைத்த இறைச்சியை 
சட்டியிலிட்டு பிரட்டி மூடிவிடவும்.

இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும் 
சட்டியில் உள்ள எண்ணெயிலும் 
அவிந்து பொரிய விடவும். 

 இடைக்கிடை எரிந்து போகாது 
இருக்க அகப்பையால் துளாவி 
விடவும்.

இறைச்சி முக்கால் பதம் பொரிந்ததும் 
அதற்குள் மிளகாய் தூள் சிறு துண்டு
களாக வெட்டிய உருளைக்கிழங்கையும்,
ணக்காக உப்பும் போட்டு கொஞ்ச 
 தண்ணீரும் சேர்த்து கொதித்து அவிய 
மூடிவிடவும்.

ஆட்டிறைச்சி அவிந்ததும் நெருப்பைக் 
குறைத்து பொடுபொடுக்கும் அளவிற்கு 
(நீர் வற்றும் வரை) அடுப்பில் விடவும். 

அதன் பின் கருவேப்பிலையைப் போட்டு 
பிரட்டி மூடிய பின் அடுப்பை அணைத்து
விடவும்.

சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச்
 சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். 

இப்போதசுத்தமான சுவையான கோழிப்
பிரட்டல் கறி தயாராகிவிடும் 

குறிப்பு: 

உருளைக்கிழங்கு பெரிதாயின் பாதி 
போதுமானது 

சிலர் உருளைக்கிழங்கு போடுவது 
இல்லை.

 உருளைக்கிழங்கு போட்டால் கறி 
 தடிப்பாக இருக்கும்.  

  மிளகாய் தூளை கூட்டியும் 
 குறைத்தும் பாவிக்கலாம். 

இன்னும் சிலர், மசாலைகளை 
வதக்காது தனியாக அரைத்தெடுத்து 
இறைச்சியுடன் போட்டும் 
சமைப்பார்கள். 

வினிகர் சேர்த்தால் இறைச்சி மெது
மெதுப்பாக இருக்கும். 

ஆனால் சிலர் விரும்புவதில்லை. 

இஞ்சி ஒரு சிறுதுண்டை சிறியதாய் 
சீவி அல்லது குத்திப் போட்டும் 
சமைப்பார்கள் இஞ்சி இறைச்சியை 
மெதுமயானதாக்கும் என்பர்.

Samstag, 8. Februar 2014

இட்லி

 இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை 

அப்பளங்களை தண்ணீரில் நனைத்து 

மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு 

மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். 

இட்லி பூ மாதிரி இருக்கும்.

Freitag, 7. Februar 2014

வெண்டிக்காய் வெள்ளைக் கறி

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கறி இதுவாகும்.


தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டிக்காய் - 15

பச்சைமிளகாய் - 4

சின்ன வெங்காயம் - சிறிதளவு

தேங்காய்ப்பால்/பசுப்பால்- 1 கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையானளவு

தேசிக்காய் சாறு - 1 மேசைக்கரண்டி

செய்முறை

வெண்டிக்காயை நன்றாகக் கழுவி அடி 
மற்றும் நுனி இரண்டையும் வெட்டி
 எடுக்கவும்.

. பெரிய வெண்டிக்காய்களை 2 அல்லது 
3 துண்டுகளாக வெட்டி கழுவி எடுக்கவும்.

தேங்காய்ப்பால், வெட்டிய பச்சை மிளகாய் ,
 வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை உப்பு 
ஆகியவற்றுடன் சேர்த்து அவிய விடவும்.

 பதமான பதத்தில் இறக்கி தேசிக்காய் 
சேர்க்கவும். 

தாளிதமும் போடலாம்.

 சூடான சுவையான வெண்டிக்காய் 
வெள்ளைக்கறி தயார்.

Donnerstag, 6. Februar 2014

பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ்

பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

Mittwoch, 5. Februar 2014

சிக்கன் மஞ்சூரியன்.

தேவையான பொருட்கள்

கோழி எலும்பில்லாமல் - அரை கிலோ
கோதுமை (மைதா)மா - 100 கிராம்
சோளமா (கார்ன் ஃப்ளார்) - 50 கிராம்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
முட்டை - ஒன்று
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

 மஞ்சூரியன் தயாரிக்க

 வெங்காயம் - 50 கிராம்
 பச்சைமிளகாய் - 10
உள்ளி (பூண்டு) - 10 பல்
 குடை மிளகாய் - 1
 சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
 வினிகர் - அரை தேக்கரண்டி
 அஜினமோட்டோ - அரை தேக்கரண்டி
 சோள மாவு - 1தேக்கரண்டி
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு   

செய்முறை

ஓரு பாத்திரத்தில் கோதுமை 
(மைதா)மா , சோளமா உப்பு, 
சோடா உப்பு ஆகியவற்றுடன் 
முட்டையை அடித்துஊற்றி 
மிளகுத்தூள் சேர்த்து, சிறிது
தண்ணீர் விட்டு கரைத்து 
வைக்கவும்.

நீளமாகவும், சிறுதுண்டாகவும் நறுக்கிய
கோழியை ஒவ்வொன்றாக முக்கி, ஒரு
கடாயில் எண்ணெய்யை காயவைத்து
போட்டு பொரித்து எடுக்கவும்

வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு
இவை மூன்றையும் பொடியாக நறுக்கவும்

ஒரு தாட்சியில்  எண்ணெய் விட்டு சூடாக்கி 
அதில் நறுக்கியகுடைமிளகாய், சோயா சாஸ், 
வினிகர், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 
கிளறவும் 

அதன் பின்னர் சோளமாவை 1/2 கிளாஸ் 
தண்ணீரில் கரைத்துகிளறியவற்றுடன் ஊற்றி 
கொதிக்கவிடவும் 

கொதித்துவற்றியவுடன் பொரித்த சிக்கனை 
போட்டுகிளறி இறக்கவும்..

Dienstag, 4. Februar 2014

வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள்

வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

Montag, 3. Februar 2014

சப்பாத்தி

சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

திங்கள்கிழமை


Sonntag, 2. Februar 2014

பருப்பு

குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளையும், ஒரு தேக்கரண்டி நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

Samstag, 1. Februar 2014

முட்டை

தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.