கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 30. Oktober 2012

நெல்லிக்காய் தயிர் பச்சடி



சுத்தமான சுவையான விற்றமின் சி 
சத்து நிறைந்த நெல்லிக்காய் தயிர் 
பச்சடி 

தேவையானவை: 
 நெல்லிக்காய் / நெல்லிக்கனி- 6
 தயிர்: ஒரு கப் 
தேங்காய்த்துருவல்: கால் கப் 
பச்சை மிளகாய்: இரண்டு 
இஞ்சித்துண்டு: ஒன்று 
உப்பு: வேண்டிய அளவு 

 தாளிக்க: 
 கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை 
தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 

 செய்முறை: 
 நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும்

பின்னர் கிரைண்டரில் கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கிய நெல்லிக்கனிகள்,
தேங்காய்பூ,வெட்டிய பச்சை மிளகாய்,
தோல்நீக்கிநசுக்கிய இஞ்சி ஆகியவற்
றையும் போட்டு நன்றாக அரைக்கவும் 

அரைத்த ,பின்னர் அவற்றுடன்  தயிர் உப்பு 
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
தாளிக்காத நெல்லிக்காய் தயிர் பச்சடி 
தயாராகிவிடும்

 விரும்பினாள்
 அடுப்பிள் தாட்சியை வைத்து அதில் 
நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகை 
போட்டு வெடிக்கவிடவும்

கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயம் 
 தாளிக்காத பச்சடி ஆகியவற்றை போட்டு 
ஒன்றாகக் கலந்து, கிளறிவிடவும் 

அதன் பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை 
 வெளியே எடுத்து வைக்கவும்  

அதன் பின்னர் விற்றமின் சி சத்து நிறைந்த  
பச்சடி தயார் 

வாழைக்காய், மீன் வறுவல்


தேவையான பொருட்கள்   

அவித்த வாழைக்காய் - 2 
வரமிளகாய்-4
பெருஞ்சீரகம் (சோம்பு)-2 தேக்கரண்டி 
மிகச்சிறிதாக வெட்டிய இஞ்சி -1 தேக்கரண்டி
மிகச்சிறிதாக வெட்டிய உள்ளி (பூண்டு) -1 தேக்கரண்டி
மிகச்சிறிதாக வெட்டிய வெங்காயம் -2 தேக்கரண்டி
தேங்காய் பூ-2 தேக்கரண்டி 

 செய்முறை:   

கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் 
வரமிளகாய்பெருஞ்சீரகம் (சோம்பு)
மிகச்சிறிதாக வெட்டிய இஞ்சி மிகச்
சிறிதாக வெட்டிய உள்ளி (பூண்டு) 
மிகச்சிறிதாக வெட்டிய வெங்காயம் 
தேங்காய் பூ ஆகியவற்றை போட்டு 
நன்றாக  அரைத்துக் கொள்ளவும். 

 ஒரு நான் ஸ்டிக் பேனில் சிறிதளவு 
எண்ணெய் விட்டு வாழைக்காயைத்
 தோல் உரித்து, வட்டமாகக் கட் 
செய்த பொறிக்கவும். 

 பாதி ரோஸ்ட்டானவுடன் அரைத்து 
வைத்த மசாலாவைப் போடவும். 
தண்ணீர் சேர்க்க வேண்டாம். 

உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். 
 நன்றாக பொறிந்தவுடன் இறக்கவும். 

 இதே போல் மீனையும் பொறிக்கலாம்

Donnerstag, 18. Oktober 2012

கச்சான்(வேர்க்கடலை)பக்கோடா


தேவையான பொருள்கள் 
வறுக்காதகச்சான்(வேர்க்கடலை)-1கப்
கடலை மா-1/2கப்
அரிசிமா-4தேக்கரண்டி
மிளகாய் தூள்-1தேக்கரண்டி
இஞ்சி,விழுது-1/2தேக்கரண்டி
பூண்டு விழுது-1/2தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு

செய்முறை 

ஒரு பாத்திரத்தில்  வறுக்காதகச்சான்
(வேர்க்கடலை) ,கடலை மா,உப்பு,
இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,அரிசி
மா ஆகியவற்றை போட்டு நன்றாக
கலக்கவும்

கலந்தவற்றை 5நிமிடம் வைக்கவும்

அதன்  பிறகு அடுப்பில் தாட்சியை
வைத்து அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கவும்

எண்ணெய் சூடானதும் அதில் கலந்து
வைத்துள்ளவற்றில் சிறிதளவை
கையில் எடுத்து சூடான எண்ணெய்யில்
 தூவி விடவும்

அதன் பின்னர் தீயை குறைவாக வைத்து
பொன்னிறமாக நன்கு பொரிய விடவும்

பொன்னிறமானக பொரிந்ததும் அடுப்பில்
உள்ள தாட்சியில் இருந்து எடுத்து வேறு
ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறவிடவும்

சூடு ஆறியதும் சுத்தமான சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)பக்கோடா
தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான கச்சான்(வேர்க்கடலை)
பக்கோடாவை போட்டு பறிமாறவும்

இட்லி மஞ்சூரியன்

தேவையானபொருட்கள்
இட்லி - 6
தக்காளி சோஸ் - 1 கப்
ரெட் சில்லி சாஸ் - 1/4கப்
பொடியாக நறுக்கியஉள்ளி - 3 பல்
பொடியாக நறுக்கியவெங்காயத்தாள் - 1/2கப்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சோளமா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செயல்முறை

ஒரு தட்டில் இட்லிகளை சிறிய துண்டு
களாக வெட்டிவைக்கவும்.

பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது 
தண்ணீர் விட்டு அதனுடன் சோள மாவை 
போட்டு கரைத்து வைக்கவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் 
எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க
விடவும் 

எண்ணெய் கொதித்ததும் அதில் நறுக்கின 
இட்லி துண்டுகளை போட்டு பொரித்து
எடுக்கவும்.

பொரித்து எடுத்த துண்டுகளை ஒரு
பேப்பரில் பரவலாக போட்டு வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து 
அதில்  ஒலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்  

எண்ணெய் சூடானதும் அதனுள் பொடியாக
நறுக்கின உள்ளி, பொடியாக நறுக்கின
வெங்காயத்தாள் என்பவற்றைப் போட்டு
வதக்கவும்.

பின்னர் அதனுடன் தக்காளி சோஸ், ரெட்
சில்லி சாஸ் ஆகியவற்றை விட்டு கிளறவும்.

பிறகு அவற்றுடன் சோளமாவு கரைசல், சோயா
சாஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

கிளறிய கலவை கொஞ்சம் கெட்டியானதும்
அதனுள் பொரித்து வைத்த இட்லி
துண்டுகளை போட்டு கிளறவும்.

 அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும் 

பின்னர் ஒரு தட்டில்  சுத்தமான சுவையான 
சத்தான இட்லி மஞ்சூரியன் போட்டு அதன் 
மேல் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு இட்லியை பொரிக்காமல்  வதக்கியும் 
சேர்க்கலாம்.

Mittwoch, 17. Oktober 2012

நெல்லிக்காய் தயிர் பச்சடி



சுத்தமான சுவையான விற்றமின் சி 
சத்து நிறைந்த நெல்லிக்காய் தயிர் 
பச்சடி 

தேவையானவை: 
 நெல்லிக்காய் / நெல்லிக்கனி- 6
 தயிர்: ஒரு கப் 
தேங்காய்த்துருவல்: கால் கப் 
பச்சை மிளகாய்: இரண்டு 
இஞ்சித்துண்டு: ஒன்று 
உப்பு: வேண்டிய அளவு 

 தாளிக்க: 
 கொஞ்சம் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை 
தூள் பெருங்காயம், ஒரு சிட்டிகை கடுகு 

 செய்முறை: 
 நெல்லிக்கனிகளை கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் 
வைக்கவும்

பின்னர் கிரைண்டரில் கொட்டைகளின்றி 
சிறு துண்டுகளாக்கிய நெல்லிக்கனிகள்,
தேங்காய்பூ,வெட்டிய பச்சை மிளகாய்,
தோல்நீக்கிநசுக்கிய இஞ்சி ஆகியவற்
றையும் போட்டு நன்றாக அரைக்கவும் 

அரைத்த ,பின்னர் அவற்றுடன்  தயிர் உப்பு 
ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். 

அதன் பின்னர் சுத்தமான சுவையான 
தாளிக்காத நெல்லிக்காய் தயிர் பச்சடி 
தயாராகிவிடும்

 விரும்பினாள்
 அடுப்பிள் தாட்சியை வைத்து அதில் 
நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகை 
போட்டு வெடிக்கவிடவும்

கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயம் 
 தாளிக்காத பச்சடி ஆகியவற்றை போட்டு 
ஒன்றாகக் கலந்து, கிளறிவிடவும் 

அதன் பின்னர் அடுப்பிலிருந்து பாத்திரத்தை 
 வெளியே எடுத்து வைக்கவும்  

அதன் பின்னர் விற்றமின் சி சத்து நிறைந்த  
பச்சடி தயார் 

Donnerstag, 11. Oktober 2012

கச்சான் (வேர்கடலை) பக்கோடா


தேவையான பொருள்கள் 
 வறுக்காதகச்சான்(வேர்க்கடலை)-1கப் 
கடலை மா-1/2கப் 
அரிசிமா-4தேக்கரண்டி 
மிளகாய் தூள்-1தேக்கரண்டி 
இஞ்சிவிழுது-1/2தேக்கரண்டி 
உள்ளி(பூண்டு) விழுது-1/2தேக்கரண்டி 
உப்பு-தேவையானளவு 
எண்ணெய்-தேவையானளவு 

 செய்முறை 
ஒரு பாத்திரத்தில் வறுக்காதகச்சான்
(வேர்க்கடலை),கடலை மா,உப்பு,
இஞ்சிவிழுது,உள்ளி(பூண்டு) விழுது,
மிளகாய் தூள்,அரிசி மா ஆகியவற்றை 
போடவும்.

போட்ட பின்னர் எல்லாவற்றையும் 
நன்றாக கலக்கவும் 

கலந்த பின்னர் 5-10 நிமிடம் மூடி 
வைக்கவும்

அதன் பின்னர் ஒரு வாணலியினை 
அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதிற்கு 
தேவையானளவு எண்ணெய் விடவும் 

எண்ணெயை சூடாக்கவும்.

எண்ணெய் சூடான பின்னர் அதில் 
சிறிதளவு கலந்து வைத்தவற்றை 
போடவும்

அதன் பின்னர் அடுப்பின் நெருப்பு (தீ)
எரியும் அளவை குறைக்கவும். 

எண்ணெய்யில் போட்டவற்றை 
பொன்னிறமாக பொரிக்கவும்

பொன்னிறமாக பொரிந்ததும் 
அவற்றை எண்ணெய் வடித்து 
எடுத்து ஒரு பாத்திரத்தில் 
போடவும்

போட்ட பின்னர் அதனை சூடு 
ஆறவிடவும்

இதனை போல எல்லாவற்றையும் 
பொரித்து எடுக்கவும் 

எல்லாவற்றையும் பொரித்து எடுத்து 
ஒரு பாத்திரத்தில் போட்ட பின்னர் 
சுத்தமான சுவையான கச்சான் 
(வேர்கடலை) பக்கோடா தயாராகி
விடும்

கச்சான் (வேர்கடலை) பக்கோடா 
தயாரான பின்னர் ஒரு தட்டில் 
தேவையானளவு பகோடாவினை 
வைத்து பறிமாறவும்

Samstag, 6. Oktober 2012

கறிவேப்பிலை துவையல்-2



தேவையான பொருட்கள்: 
கறிவேப்பிலை - 1கப்,
சின்ன வெங்காயம் - 2,
பச்சை மிளகாய்- 3,
புளி - சிறிதளவு,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
உப்பு - தேவையானளவு
எண்ணெய் -2 தேக்கரண்டி

செய்முறை: 
அடுப்பில் தாட்சியினை வைத்து சூடாக்கவும்

அதன் பின்னர் அதில்  ஒரு தேக்கரண்டி
எண்ணெய் விட்டு அதனுடன் கறிவேப்பிலை,
பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்
ஆகியவற்றை போட்டு வதக்கவும்

வதக்கிய பின்னர் அதனை அடுப்பிலிருந்து
எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்

இவை யாவும் ஆறிய பின் வதக்கிய
எல்லாவற்றையும் மிக்ஸியில் போடவும்

பின்னர் அதனுடன் புளி, தேங்காய்ப்பூ, உப்பு ,
சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து
கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்தவற்றை எடுத்து ஒரு தட்டில் போடவும்

பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்

எண்ணெய்  சூடானதும் அதில் கடுகை போட்டு
தாளிக்கவும்

தாளித்த பின்னர் அதனை அரைத்தவற்றுடன்
போட்டு நன்றாக கலக்கவும்

கலந்த பின்னர் சுத்தமான சுவையான
கறிவேப்பிலை துவையல் தயாராகிவிடும்

ஒரு தட்டில் ரசம், சாம்பார்  சாதம் இட்லி புட்டு
பாண் இடியப்பம் தோசை இவற்றில் ஒன்றை
வைத்து அதனுடன் சுத்தமான சுவையான
கறிவேப்பிலை துவையலை வைத்து பறிமாறவும் 

Donnerstag, 4. Oktober 2012

கருவேப்பிலை துவையல்

ரசம், சாம்பார் சாதத்திற்கு அருமையான 
காம்பினேஷன். இட்லிக்கு தொட்டுக்
கொள்ளவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - 1 கப், 
சின்ன வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3 
புளி -  சிறிதளவு
தேங்காய் பூ - சிறிதளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் -  2 தேக்கரண்டி 

 செய்முறை: 

ஒரு தாச்சியை வாணலியை 
அடுப்பில் வைத்து அதில் 1 
தேக்கரண்டி எண்ணைய் விட்டு 
அதனுடன் கறிவேப்பிலை, பொடி
யாக நறுக்கிய வெங்காயம், 
மிளகாய்  ஆகியவற்றை போட்டு 
நன்றாக வதக்கிக் கொள்ளவும். 

வதக்கியவற்றை எடுத்து ஒரு 
பாத்திரத்தில் போட்டு நன்றாக 
ஆறவிடவும் 

ஆறிய பின் மிக்ஸியில் வதக்கிய
வற்றை போட்டு அதனுடன் புளி, 
தேங்காய் பூ, உப்பு சிறிதளவு 
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 
சேர்த்து, கர கரப்பாக அரைத்துக் 
கொள்ளவும். 

அதன் பின்னர் அடுப்பில் தாச்சியை 
வாணலியை வைத்து அதில் ஒரு
தேக்கரண்டி  எண்ணைய் விட்டு 
அதனுடன்  கடுகினை போட்டு 
தாளிக்கவும்  

தாளித்த பின்னர் இவற்றை 
அரைத்து வைத்தவற்றினுள் 
கொட்டவும்.