தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் –250 கிராம்
ரவை–250 கிராம்
தேங்காய் திருவல் –3 தேக்கரண்டி
புளித்த தயிர்– 3 தேக்கரண்டிசிறிதாக நறுக்கியபச்சைமிளகாய்–4
உப்பு –தேவைக்கு
செய்முறை
வெள்ளரிக்காயை திருவி ஒரு பாத்திரத்தில்
வைக்கவும்
அதனுடன் ரவையை போட்டு கலக்கவும்
அதன் பின்னர் அதனுடன் தேங்காய் திருவல்
தயிர் பச்சைமிளகாய் உப்பு ஆகியவற்றை
சேர்க்கவும்
தேவைப்பட்டால் சிறிது நீர் ஊற்றவும்
அதன் பின்னர் பத்து நிமிடம் வைத்திருக்கவும்
வைத்திருந்த பின்னர் அடுப்பில் இட்லி பானையை
வைத்து அதில் தேவையானளவு தண்ணீர் விடவும்
அதன் பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றவும்
ஊற்றிய பின்னர் அதனை இட்லி பானையில் வைத்து
அவிய வைக்கவும்
இட்லி அவிந்த பின்னர் அதனை ஒரு தட்டில் வைத்து
சம்பல் அல்லது சாம்பாருடன் சேர்த்து சுவையுங்கள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.