கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 4. Juni 2014

தம் பிரியாணி

தேவையான பொருட்க
பாசுமதி அரிசி-1/4 கிலோ              
மாமிசம்-1/4 கிலோ                      
பெரிய வெங்காயம்-150 கிராம்
தக்காளி-150 கிராம்
எண்ணெய்-100 கிராம்
நெய்-150 கிராம்
தேங்காய்-பெரியது 1
சிவப்பு மிளகாய்த் தூள்
பச்சை மிளகாய்- 10
இஞ்சி-15-கிராம்
பூண்டு-பெரியது 1
சின்ன வெங்காயம்-25 கிராம்
கறுவா பட்டை-தாளிக்க
கராம்பு.தாளிக்க
பெருஞ்சீரகம் -தாளிக்க
லவங்கம்-தாளிக்க
மஞ்சள் தூள்-கொஞ்சம்
உப்பு- தேவையானளவு
புதினா
கருவேப்பிலை
கொத்தமல்லித் தழை
 கொஞ்சம்முந்திரிப் பருப்பு.-அலங்கரிக்க


செய்முறை
முதலில் அரிசியை ஒரு அரை மணி நேரம்
ஊற வைத்துக்கொள்ளவும்.

மாமிசத்தை லேசாக உப்பும் கொஞ்சம்
மிளகாய்த் தூளும் போட்டு அரை
வேக்காடாக வேக வைத்துக்கொள்ளவும் .

 தேங்காய்ப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

 பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும்
 சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை
விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை ஏற்றி அதில் எண்ணெய்
ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு,
லவங்கம்,சோம்பு போட்டு தாளித்துக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காய விழுதை
அத்துடன் சேர்த்து லேசாக வதக்கியபின், அரிந்து
வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து
வதக்கவும்.

அரிசியின் அளவைப்போல் இரு மடங்கு
தண்ணீர் தேவைப்படும். எனவே தேங்காய்ப்பால்,
மற்றும் மாமிசம் வேக வைத்த தண்ணீருடன்
எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அவ்வளவு
தண்ணீர் சேர்த்து குக்கர் பாத்திரத்தில்
 ஊற்றவேண்டும்.

எல்லாம் சேர்த்து மொத்தம் இரு மடங்கு
தண்ணீர்தான் இருக்கவேண்டும்

அதில் மாமிசத்தையும் ஊற வைத்த
அரிசியையும் நீரை வடித்துவிட்டுப் போடவும் .

அத்துடன் மீதமுள்ள மிளகாய்த்தூள்
மஞ்சள் தூள் போட வேண்டும்.

மாமிசத்துடன் சிறிது உப்பு சேர்த்திருப்பதால்,
உப்பை அளவு பார்த்து போடவேண்டும்.

இப்போது குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை
அடுப்பில் வைக்கவும்.

பிறகு ஸ்டவ்வை அணைத்துவிட்டு 10 நிமிடம்
கழித்து திறந்து அதில் புதினா, கருவேப்பிலை
மற்றும் கொத்தமல்லித் தழை போட்டு நெய்யைச்
சூடு பண்ணி அதில் ஊற்றிக் கிளறி இறக்கவேண்டும்.

 கொஞ்சம் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப்
போட்டுக்கொள்ள்லாம். சூடான பிரியாணி தயார்.

பிடித்தமான சைட் டிஷ்ஷுடன் பறிமாறலாம்.

குருமா, தயிர்ப் பச்சடி, மற்றும் கத்தரிக்காய்க்
கறி முதலியவை சூட்டாகும் .சூடாக சாப்பிட
சுவையாக இருக்கும். இது குக்கரில்
பிரியாணி செய்யும் முறை .

தம் பிரியாணியும் செய்யலாம்.
தம் பிரியாணி செய்யும் முறை:

இந்த முறையில் மேற்சொன்னபடி
பொருட்களைக் கலக்க வேண்டும்.
ஆனால், விறகு அடுப்பு தேவைப்படும்.

அடுப்பை எரியவிட்டு, அதில்
குக்கருக்குப் பதில் பிரியாணி செய்யும்
தாவாவை வைக்க வேண்டும்.

அனைத்துப் பொருட்களையும் கலந்தபின்
 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட
வேண்டும். நன்கு கொதித்து வருகையில்
ஒரு தட்டு போட்டு பிரியாணி வேகும்
பாத்திரத்தை மூடி அந்த தட்டில் அடுப்பை
அணைத்துவிட்டு அந்த தணலை
அள்ளிப்போடவேண்டும்.

கீழே தீ இருக்கவேண்டிய அவசியமில்லை.
அதேநேரத்தில் மேலிருத்து உஷ்ணம்
கிடைக்க வேண்டும்.

20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால்,
பிரியாணி உதிரியாக வந்திருக்கும்.
அதில் கொத்தமல்லித் தழை, புதினா,
 கருவேப்பிலை போட்டு சூடு பண்ணிய
 நெய் ஊற்றிக் கிளறி இறக்கவேண்டும்

. கொஞ்சம் முந்திரிப் பருப்பை நெய்யில்
வறுத்த் சேர்த்துக்கொள்ளலாம்.

தம் பிரியாணியின் சுவையும் அலாதியானது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.