நெல்லிக்காயில் புரதச்சத்து,கொழுப்புச்சத்து,மாச்சத்து,
கல்சியம்,பொஸ்பரஸ்,இரும்புச்சத்து,நியாசின்,
உயிர்ச்சத்து B1 ,c ,கரிச்சத்து,சுண்ணாம்புச்சத்து,தாதுப்
பொருட்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன ஒரு நெல்லிக்
கையில் 30 தோடம்பழங்களில் உள்ள உயிர்சத்து சி
காணப்படுகின்றது .இதன் பூ,பட்டை,வேர்,வேர்பட்டை,
காய்,பழம் ,காய்ந்த பழம்,விதை ஆகியாவை யாவும்
பயன்தரக்கூடியவை ஆகும்.அத்துடன் நெல்லிக்காயை
தினமும் சாப்பிட்டு வந்தால் தலைமயிர்(முடி)வளர்ச்சி
அடையும், ஞாபகசக்தி அதிகரிக்கும்,உடலுக்கு
குளிர்ச்சியை தரும்,ஆயுளை விருத்தியடைய செய்யும்,
இதயத்திற்கு வலிமையை கொடுக்கும் இப்படிப்பட்ட பல
பயன்களை கொடுக்ககூடிய நெல்லிக்காயுடன் பலவகை
சத்துக்களையுடைய கொடுக்கும் இஞ்சியையும் சேர்த்து
செய்யப்பப்பட சலாட்டானது சுத்தமானது சுவையானது,
சத்துக்கள் நிறைந்தது ,பலவகைப்பட்ட மருத்துவக் குணம்
உடையது ஆகும் ஆகவே இந்த நெல்லிக்காய் இஞ்சி
சலாட்டினை செய்து பார்த்து இதன் பயனை பெறவும்.
தேவையான பொருட்கள்
அவித்த பெரிய நெல்லிக்காய் - 20
தயிர் - 2 கப்
இஞ்சி - ஒரு துண்டு (ஒரளவு)
சிறியதாக வெட்டிய பச்சைமிளகாய்- 3 - 5
உப்பு - தேவையானளவு
சிறியதாக வெட்டிய கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
சிறியதாக வெட்டிய வெங்காயம் - பாதி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
செய்முறை
(1)அவித்த (வேக)வைத்து விதை(கொட்டை) நீக்கிய
நெல்லிக்காயுடன் இஞ்சியையும் சேர்த்து
மிக்ஸியில் (கிரைண்டரில்) அரைத்து கொள்ளவும்.
(2)அதன் பின்னர் அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில்
போடவும் .
(3)அரைத்து பாத்திரத்தில் போட்ட நெல்லிக்காயுடன்
தயிர், உப்பு, வெட்டிய பச்சைமிளகாய், வெட்டிய
கறிவேப்பிலை ஆகியவற்றினை போட்டு நன்றாக
கலக்கவும்.
(4)அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கவும் -
(5)சூடாக்கிய தாச்சியில் (வாணலியில்) எண்ணெய்
விட்டு கடுகு, சீரகம், வெங்காயம் தாளிக்கவும்.
(6)தாளித்தவற்றை கலந்து வைத்திருக்கும்
கலவையுடன் கலக்கவும்.
(7)கலந்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான,
மருத்துவ குணம் உடைய நெல்லிக்காய் இஞ்சி
சாலட் தயாராகி விடும் .

Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.