கத்தரிக்காயில்காபோவைதரேற்று,சீனிச்சத்து,
நார்ச்சத்து,கொழுப்புச்சத்து,உயிர்ச்சத்து-சி,
தியோமின்(B1),ரிபோபிளேவின்(B2), நியாசின்
(B3),பென்தொதினிக் அசிட்(B5),B6 ,புளோரைட்,
கல்சியம்,இரும்புச்சத்து,மக்னீசியம்,பொஸ்பரஸ்,
பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியது
ஆகவே கத்தரிக்காயில் இருந்து செய்யப்படும்
சலாட் சுத்தமானது சுவையானது சத்துக்கள்
அடங்கியது ஆகவே இதன் சுவையை அறிய
இதனை செய்து சுவைக்கவும்.
தேவையான பொருட்கள்
சுட்டுதோல் உரித்த கத்தரிக்காய் - 1
பால் அல்லது ஜோக்கற் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
சிறியதாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
சிறியதாக நறுக்கிய வெங்காயம் - 1 /2பாதி
சிறியதாக நறுக்கிய பச்சைமிளகாய்- 1
செய்முறை
(1)சுட்டு தோலை உரித்த கத்தரிக்காயை
பாலில் அல்லது ஜோக்கற்றில் நன்றாக
கட்டியில்லாமல் குழைக்கவும் (ஒரளவு
தண்ணீர் பதத்திற்கு).
(2)அதன் பின்னர் அதனுடன் நறுக்கிய
வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய்,
மிளகுத் தூள் , சிறியதாக வெட்டிய
கறிவேப்பிலை, உப்பு, தேசிக்காய்ச்சாறு
இவையாவற்றையும் போடவும்:
(3)அதன் பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து
குழைக்கவும்.
(4)சேர்த்து குழைத்த பின்னர் 2 நிமிடம்
ஊறவிடவும்.
(5)ஊற விட்ட பின்னர் சுத்தமான சுவையான
சத்தான கத்தரிக்காய் சாலட் தயாராகிவிடும்
(6)அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றுடன்
(சாதத்துடன்)கத்தரிக்காய் சலாட்டினை வைத்து
பரிமாறவும்.
எச்சரிக்கை
கத்தரிக்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.
கவனிக்கவேண்டியவை
(1)முழு கத்தரிக்காயை அடுப்பில் (அடுப்பு,
மின்னடுப்பு )சுடவும்
(2)சுட்ட பின்னர் சிறிதளவு நீரினை சேர்த்து
கசக்கி தோலை உரிக்கவும்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.