தூதுவளை பொரியலை காலை,மாலை
எனத் தொடர்ந்து முன்று நாட்கள் சாப்பிட்டால்
இருமல் இளைப்பு போன்ற நோய்கள்
குணமாகும்
தேவையான பொருட்கள்
முள்நீக்கியதூதுவளைஇலை -10
தோல்நீக்கிய சின்னவெங்காயம் -5
நல்லெண்ணெய் -2 தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
செய்முறை
முள் நீக்கிய தூதுவளை இலையை பொடிப் பொடியாக
வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும் .
தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக
வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும் .
அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கவும்
தாட்சி(வாணலி)சூடான பின்னர் அதில் நல்லெண்ணையை
விட்டு சூடாக்கவும்
நல்லெண்ணெய் சூடான பின்னர் அதில் முள் நீக்கி
பொடிப் பொடியாக வெட்டிய தூதுவளை இலை,
தோல் நீக்கி பொடிப் பொடியாக வெட்டிய சின்ன
வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக
வதக்கவும் .
இவையாவும் வதங்கிய பின்னர் இவற்றுடன் உப்பை
சேர்த்து வதக்கவும்..
இவையாவும் வதங்கிய பின்னர் சுத்தமான சுவையான
சத்தான நோய்களை அகற்றக்கூடிய தூதுவளை
பொரியல் தயாராகிவிடும் .
அதன் பின்னர் ஒருதட்டில் சோற்றை (சாதத்தை )
வைத்து அதனுடன் சுத்தமான சுவையான
சத்தான நோய்களை அகற்றக்கூடிய தூதுவளை
பொரியலை வைத்து பரிமாறவும்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.