கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 26. November 2011

உளுந்துமுறுக்கு


பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
உளுந்துமுறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
உளுத்தம்பருப்பு - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமா(மைதாமாவு) - தேவையானளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை போட்டு 1
மணித்தியாலம் ஊறவிடவும்.

உளுத்தம்பருப்பு ஊறிய பின்னர் கிரைண்டரில்
அல்லது மிக்ஸியில் போட்டு ஒரளவு தண்ணீர்
விட்டு நன்றாக அரைக்கவும்.

அதன் பின்னர் அரைத்தவற்றை ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பத்திரத்தில் போட்டு வைத்த பின்னர்
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்
மிளகாய்(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு மிக மிக சிறிய
துண்டுகளாகஅரைக்கவும்.

பின்பு அரைத்த உளுந்து போட்ட பாத்திரத்தில்
அவித்தகோதுமைமா(மைதாமா), உப்பு, பெருஞ்
சீரகம் (சோம்பு),எள்,இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு)
விழுது, அரைத்தசெத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறிவேப்பிலைதுண்டுகள்,ஆகியவற்றை போட்டு
பிசைந்து(குழைத்து) கொள்ளவும் (இடியப்பமா
பதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.


இக்குறிப்பை தந்தவர்-
திருமதி அனுசாந்தி தசீலன் (கனடா)

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.