கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 21. April 2013

மசாலா முருங்கை முட்டை அவியல்




தேவையான பொருட்கள்
முட்டை - 5
உள்ளி (பூண்டு) - 2 பற்கள்
சின்னசீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
செத்தமிளகாய்- 2
முருங்கைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1/2 தேங்காய்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு 1 தேக்கரண்டி,
 தண்ணீ ர் -2 கப் 

செய்முறை:

முட்டையை வேக வைத்து தோலுரித்து
 வைத்துக் கொள்ள வேண்டும். 

சின்ன வெங்காயத்தை இரண்டாக நீளவாக்கில்
 நறுக்கிக் கொள்ள வேண்டும். 

தாச்சியில் எண்ணெய் விட்டு கடுகு, 
செத்தமிளகாய், கறிவேப்பிலை போட்டு 
தாளிக்கவும் 

 நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க
வேண்டும். 


பின் முருங்கைக்காயை போட்டு வதக்கவும்

 உப்பு , தண்ணிர் ஆகியவற்றினை போட்டு 
முருங்கைக்காய் வேகும் வரை மூடி வைக்க 
 வேண்டும். 

கிரைண்டரில் உள்ளி,சின்னசீரகம், பச்சை
மிளகாய்,தேங்காய் துருவல் ஆகியவற்றை 
போட்டு அரைக்கவும் .

முருங்கைக்காய் வெந்தபின் அரைத்தவற்றை 
போட்டு 1 நிமிடம் பச்சை வாசனை போகும் 
 வரை கிளற வேண்டும். 

வேக வைத்த முட்டையை போட்டு முட்டை 
உடைந்து விடாமல் மசாலாவுடன் கிளறி 2 
நிமிடம் சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.  

இப்போது சுத்தமான சுவையான சத்தான 
மசாலா முருங்கை முட்டை அவியல் தயார்

ஒருதட்டில் சோறு,இடியப்பம்,புட்டு பாண் 
இட்லி இவையாவற்றில் ஒன்றை வைத்து 
அதனுடன் தேவையானளவு சுத்தமான 
சுவையான சத்தான மசாலா முருங்கை 
முட்டை அவியல்  வைத்து பறிமாறவும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.