பாகற்காயானது சர்க்கரை நோயாளரின்
உடலில் உள்ள தேவையற்ற சர்க்கரையின்
அளவை கட்டுப்படுத்தும் ,சிறுவர்களின்
உடலில் ஏற்படும் பூச்சி, புழுக்களை
கட்டுப்படுத்தும். அத்துடன் சத்துமிக்கது
இப்படிபட்ட பாகற்காயில் செய்யப்பட்ட
சலாட்டானது சுத்தமானது,சுவையானது ,
சத்துமிக்கது,நோய்க்கிருமிகளிடமிருந்து
உடலைக்காக்கும் தன்மை உடையது
அத்துடன் இந்த பாகற்காய் சலாட்டானது
விஷேசமாக (ஸ்பெஷல் ) புளி இல்லாத
குழம்பிற்கு சரியான ஜோடி ஆகும் .
தேவையான பொருட்கள்
சுத்தமான வட்டமாகவெட்டியபாகற்காய்- 250 கிராம்தயிர் - ஒரு கப்
தேங்காய்ப்பூ - தேவையானளவு
புளி - தேவையானளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
வெங்காயம் - பாதி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெட்டியகறிவேப்பிலை - தேவையானளவு
தேங்காய்ப்பூ - தேவையானளவு
புளி - தேவையானளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
வெங்காயம் - பாதி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெட்டியகறிவேப்பிலை - தேவையானளவு
செய்முறை
(1)அடுப்பில் தாச்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கவும்.
(2)தாச்சி(வாணலி )சூடானதும்
எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
(3)எண்ணெய் கொதித்ததும் கடுகை
போட்டு பொரியவிடவும்.
(4)கடுகு வெடித்ததும் (பொரிந்ததும்)
பொரிந்த கடுகுடன் வெங்காயத்தை
போட்டு பொரியவிடவேண்டும் .
(5) வெங்காயம் ஒரளவு பொரிந்ததும்
அதனுடன் சீரகத்தை போட்டு
தாளிக்கவும்.
(6)இவையாவற்றையும் தாளித்த
பின்பு இதனை ஒரு பாத்திரத்தில்
எடுத்து வைக்கவேண்டும்.
(7)அதன் பின்பு இன்னுமொரு
பாத்திரத்தில் மஞ்சள்தூள்,
புளி,தண்ணீர் ஆகியவற்றை
சேர்த்து கலக்கவும்
(8)கலந்த பின்னர் அதில் சுத்தமாக்கி
வட்டமாக வெட்டிய பாகற்காயை
போட்டு கலக்கவும்.
(9) கலந்த பின்னர் இவற்றை 10 நிமிடம்
ஊற வைக்கவும்.
(10)அதன் அடுப்பில் தாச்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கவும்.
(11)தாச்சி(வாணலி )சூடானதும் அதில்
எண்ணையை விட்டு சூடாக்கவும்.
(12)எண்ணெய் சூடானதும் அதில் கலந்து
வைத்திருக்கும் பாகற்காய்களை
போட்டு பொரிய விடவும் .
(13)பாகற்காய்கள் பொன்னிறமாக
பொரிந்ததும் ஒரு கரண்டியால்
எண்ணெய் இல்லாமல் எடுத்து
ஒரு பாத்திரத்தில் போட்டு
ஆறவிடவும்.
(14)அதன் பின்னர் கிரைண்டரில்
(மிக்சியில் அம்மியில்) தயிருடன்
தேங்காய்ப்பூ , பச்சைமிளகாய்,
கடுகு இவை மூன்றையும் சேர்த்து
வைத்து விழுதாக அரைக்கவும்.
(15)அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில்
பொரித்த (வறுத்த) பாகற்காய்,
அரைத்தவிழுது,தாளித்தவெங்காயம்,
வெட்டியகறிவேப்பிலை,உப்பு,
தேசிக்காய் (லைம் )சாறு ஆகிய
வற்றை நன்றாக கலக்கவும்.
(16)ஆகியயாவும் கலந்த பின்னர்
சுத்தமான சுவையான சத்தான
பாகற்காய் சலாட் தயாராகிவிடும்.
(17)அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில்
சோற்றுடன்(சாதத்துடன்)சுத்தமான
சுவையான சத்தான பாகற்காயை
சலாற்றினை வைத்து பரிமாறவும்.
"முக்கிய குறிப்பு"
சர்க்கரை நோயாளர் உடலின் தேவைக்கு
அதிகமானளவு பாகற்காய் உணவுகளை
சாப்பிட்டால் (உண்டால்) இருதயநோய்
வர வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள்
கூறுகின்றனர் .
(அளவுக்கு மிஞ்சினால் அமிதமும் நஞ்சு)
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.