கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 6. Oktober 2010

ஹொலெண்டீஸ சோஸ்

ஜெர்மன் மக்கள் தங்களது பல வகைப்பட்ட 
உணவுகளுக்கு ஹொலெண்டீஸ சோஸ்
பயன்படுத்துகிறார்கள் இது ஜெர்மன் 
மக்களிடயே பிரபல்லியமானது இது 
பொதுவாக அவித்தஸ்பார்கில், அவித்த 
உருளைக்கிழங்கு போன்ற உணவுகளுக்கு 
கூடுதலாக பயன்படுத்துவார்கள்.

தேவையான பொருட்கள் 
முட்டை மஞ்சள் கரு - ஒன்று
லெமன் ஜுஸ் - ஒரு தேக்கரண்டி
பட்டர் (இளகிய,பாலாடையில்லாத)-(4- 6)தேக்கரண்டி
(clarified butter melted and the milk solieds remove)
உப்பு தூள் - ஒரளவு
மிளகு தூள் (கறுப்பு) - ஒரளவு

செய்முறை 
(1)ஒரு பாத்திரத்தில் முட்டை மஞ்சள் 
   கருவை போட்டு நன்றாக அடிக்கவும். 

(2)இன்னொரு பாத்திரத்தில் லெமன் 
     ஜுஸை நன்றாக அடிக்கவும்

(3)அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் 
    இரண்டையும் ஒன்றாக போட்டு 
   கலக்கி நன்றாக அடிக்கவும். 

(4)அதனுடன் உப்புத்தூள்,மிளகுத்தூள் 
    ஆகியவற்றை நன்றாக சேர்த்து 
    அடிக்கவும். 

(5)அடித்தவற்றுடன் பட்டரை 
    மெதுவாக சேர்த்து அடிக்கவும்.
 (ஏனென்றால் ஏற்கனவே முன்  
  கூறியவையாவும் நன்றாக 
   அடிக்கப்பட்டுள்ளன)

(6)அதன் பின்னர் பாத்திரத்தினை 
   திறந்து வைத்து ஆவியில் நன்றாக 
   வேகவிடவும். 

(7)வெந்த பின்பு இவற்றை நன்றாக 
   ஆறவிடவும் 

(8)ஆறியதும் குளிர்சாதனப்பெட்டியில் 
   வைத்து நன்றாக குளிரவிடவும்.

(9)நன்றாக குளிர்ந்ததும் சுத்தமான 
   சுவையான ஹொலெண்டீஸசோஸ் 
  தயாராகிவிடும். 

(10)அதன் பின்னர் இதனை கரண்டியால்
   நன்றாக கலக்கி விடவும்.

(11)ஒரு தட்டில் அவித்த உருளைக்கிழங்கு 
       அல்லது மரவள்ளிக் கிழங்குதுண்டுகள் 
       சிலவற்றினை வைத்து அவற்றுடன் 
       சுத்தமான சுவையான ஹொலெண்டீஸ 
      சோஸினை வைத்து பரிமாறவும்.

"குறிப்பு" 
(1)முட்டைமஞ்சள்கருவை நன்றாக 
    அடிக்கவும். 

(2)லெமன் ஜுஸை நன்றாக அடிக்கவும். 

(3)பட்டரை மெதுவாக சேர்த்து அடிக்கவும். 

(4) வட்டிலப்பம் அவிப்பது போல வேகவிடவும்

(5)இது ஒரளவு தடிப்பாக இருக்கும் மஞ்சள் 
    நிறமாக இருக்கும் 
  (Room temperature is too low; most stovetop burners and 
  even double boilers are too hot, and will overcook the egg 
 causing it to scramble, though skilled sauciers are able to 
 prepare their mixtures over an open burner.)

(6) உப்பு தூள், மிளகு தூள் (சுவை) 

                    Keine Kommentare:

                    Kommentar veröffentlichen

                    Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.