தேவையானவை
முற்றிய பெரியமாங்காய் - 1
இலங்கைமிளகாய்த்தூள்-(1-2)மேசைக்கரண்டி
சீனி (சர்க்கரை) - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 /2 தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) - 1 /2 தேக்கரண்டி
வெங்காயம்(சிறியதாகவெட்டிய)- 1/2பாதி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
பால் - 1/4 கப்
செய்முறை
(1)முற்றிய பெரிய மாங்காயின் தோலை
நன்றாக சீவவும்.
(2)அதன் பின்பு சீவிய மாங்காயை நன்றாக
(2)அதன் பின்பு சீவிய மாங்காயை நன்றாக
கழுவவும்.
(3)மாங்காயை கழுவிய பின்பு அதனுள்
(3)மாங்காயை கழுவிய பின்பு அதனுள்
இருக்கும் விதையை (கொட்டையை)
அகற்றவும்.
(4)விதையை அகற்றிய பின்பு மாங்காயின்
தசைப்பகுதியை ஓரளவு சிறு துண்டுகளாக
வெட்டவும்.
(5)வெட்டிய மாங்காய்த் துண்டுகளை ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
(6)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)
வைத்து சூடாக்கவும்.
(7)அடுப்பில் உள்ள தாட்சி(வாணலி)சூடாக்கிய
பின்னர் அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
(8)தாட்சியில்(வாணலியில்) உள்ள எண்ணெய்
சூடானதும் அதில் கடுகு போட்டு வெடிக்கவிடவும்
(9)கடுகு வெடித்த பின்னர் வெட்டிய வெங்காயம்,
சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
(10)இவை யாவற்றையும் தாளித்த பின்னர் அதில்
சிறிய துண்டுகளாக வெட்டிய மாங்காய்,உப்பு,
மிளகாய்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக
பிரட்டவும்.
(11)எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிரட்டி
அதனுடன் தண்ணீர் விடவும்..
(12)அதன் பின்னர் மாங்காயில் விடப்பட்ட
தண்ணீர் ஒரளவுவற்றும் வரை வேக
விடவும்.
(13)ஒரளவு தண்ணீர் வற்றி மாங்காய் ஓரளவு
வெந்ததும் அதனுடன் பால் விட்டு அவிய
விடவும்.
(14) பாலுடன் சேர்ந்து மாங்காய் அவிந்து பால்
ஒரளவுவற்றியதும் (பிரட்டலாகவந்ததும்)
அதனுடன் சீனியை(சர்க்கரை)போட்டுமூடி
(1 -2) நிமிடங்கள் வைக்கவும்.
(15) 1-2 நிமிடத்தின் பின்னர் சுத்தமான சுவையான
(15) 1-2 நிமிடத்தின் பின்னர் சுத்தமான சுவையான
சத்தான,இனிப்பு,புளிப்பு,உறைப்பு,உவர்ப்பு
ஆகிய நான்கு வகை சுவையுடைய மாங்காய்
கறி தயாராகிவிடும்.
(16)அதன் பின்னர் அடுப்பில் இருந்து மாங்காய்
கறிஉள்ளதாட்சியை(வாணலியை)இறக்கவும்.
(17 )மாங்காய் கறியை அடுப்பில் இருந்து இறக்கிய
பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம்) அல்லது
இடியப்பம்,புட்டு,பாண் இவையாவற்றில் ஒன்றை
வைத்து அதனுடன் சிறிதளவு கறியை வைத்து
பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.