பிரெட் புட்டு சுவையானதும் மிக மிக
இலகுவாக செய்ய கூடியதும் சிறுவர்கள்
முதல் பெரியவர்கள்வரை விரும்பி
உண்ணக்கூடியதும் கார்போஹைட்ரேட்,
மினரல், கொழுப்பு போன்ற பல சத்துகள்
அடங்கியது. ஆகவே இதனை செய்து
பார்த்து இதன் சுவையை அறியவும்.
இலகுவாக செய்ய கூடியதும் சிறுவர்கள்
முதல் பெரியவர்கள்வரை விரும்பி
உண்ணக்கூடியதும் கார்போஹைட்ரேட்,
மினரல், கொழுப்பு போன்ற பல சத்துகள்
அடங்கியது. ஆகவே இதனை செய்து
பார்த்து இதன் சுவையை அறியவும்.
தேவையான பொருட்கள்
பாண் துண்டுகள்(நடுப்பகுதி) - (8 - 10)
தேங்காய்ப்பூ - தேவையானளவு
சர்க்கரைதூள் (தூள் வெல்லம்) - தேவையானளவு
ஏலக்காய்த்தூள் - (1 - 2)
உப்பு - அரைக்கால் தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாண் துண்டுகளை
நன்றாக உதிர்த்து வைக்கவும். உதிர்த்து
வைத்த பாண்துண்டுகளுடன் தேங்காய்ப்பூ,
சர்க்கரைத்தூள்(வெல்லத்தூள்) உப்பு
ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை நன்றாக
கலக்கவும்.
கலந்த பின்பு சுவையான ப்ரெட் புட்டு
தயாராகி விடும். இதனை ஒரு தட்டில்
வைத்து பரிமாறவும்.
எச்சரிக்கை
இருதய நோயாளர், சர்க்கரை நோயாளர்,
ஆஸ்துமா நோயாளர் ஆகியோர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.
மாற்று முறை
சர்க்கரைதூளுக்கு(வெல்லத்திற்கு) பதிலாக
சீனியை (சர்க்கரை)பாவிக்கலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.