கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 14. April 2011

வைட் சோஸ்

இத்தாலிய மக்கள் தங்களுடைய உணவின்
சுவையை அதிகரிப்பதற்காக ஒயிட்சாஸை
அதிகளவில் உப யோகிப்பார்கள் கொழுப்பு
மினரல் கார்போஹைட்ரேட், கல்சியம்,
பொட்டாஷியம், பொஸ்பரஸ், விற்றமின்
ஆகிய சத்துகள் அடங்கியதுஇதன் சுவையை
அறிய இதனை செய்து சாப்பிட்டு அறியவும்.


தேவையான பொருட்கள் 
உருக்கியபட்டர் - 100 கிராம்
கோதுமைமா (மைதாமா) - ஒரு கப்
பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்


செய்முறை 

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை
வைத்து அதில் உருக்கிய பட்டரை
போட்டு ஓரளவு சூடாக்கவும்.

பட்டர் ஓரளவு சூடானதும் அதன்
மேல் கோதுமை மாவை(மைதாமாவை)
தூவினாற் போல போட்டு வறுக்கவும்.
வறுத்த பின்பு அதனுடன் பாலை ஊற்றி
நன்றாக கலக்கவும்.

பின்பு அதனுடன் உப்பு, மிளகுத்தூள்
ஆகியவற்றை போட்டு விடாமல் நன்றாக
கிளறி கலந்து கொண்டிருக்கவும்.

இவையாவும் ஓரளவு தடிப்பாக வந்ததும்
அதில் தண்ணீர் விட்டு நன்றாக கிளறவும்.

பின்பு ஒயிட் சாஸ் தயாராகி விடும்.

ஒயிட்சாஸ் தயாராகிய பின்பு ஒயிட்சாஸ்
உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கியபின்பு இதனை ஓரளவு
ஆறவிடவும். ஓரளவு ஆறிய பின்பு தொற்று
நீக்கிய போத்தல்களில் விடவும். பின்பு அதனை
நன்றாக ஆறவிடவும்.

நன்றாக ஆறிய பின்பு சாஸ் உள்ள போத்தலை
காற்று உட்புகாதவாறு நன்றாக மூடி வைக்கவும்.

எச்சரிக்கை 
இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி
 உண்ணவும்.

கவனிக்க வேண்டிய விசயங்கள் 
பட்டர் ஓரளவு சூடானதும் அதன் மேல் கோதுமை
மாவை (மைதாமாவை) தூவினாற் போல போட்டு
வறுக்கவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.