கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 3. Mai 2014

மரவள்ளிக்கிழங்கு வடை

தேவையான பொருட்கள்                                                                                  

மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மைதா மா- 2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்  - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு

 செய்முறை 

மரவள்ளிக்கிழங்கை துருவி  ஒரு 
பாத்திரத்தில் போடவும்

 பின்னர் அப்பாத்திரத்தில் துருவிய 
மரவள்ளிக்கிழங்கு மூழ்கும் அளவிற்கு 
தண்ணீர் விடவும்  

அதன் பின்னர் தண்ணீரை பிழிந்து விட்டு 
மரவள்ளிக்கிழங்கினை இன்னொரு 
பாத்திரத்தில் வைக்கவும். 

பின்னர்  அதனுடன் வெங்காயம் 
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய 
கறிவேப்பிலை ஆகியவற்றை  
போடவும் போட்டபின்னர் அதனுடன் 
மைதா மா மஞ்சள்த்தூள்  மிளகாய்த்
தூள் உப்பு  ஆகியவற்றை போடவும்

போட்ட பின்னர் அவற்றை ஒன்றாக 
சேர்த்து பிசையவும் 

பிசைந்த பின்னர் அதனை  சிறிய 
உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை 
வைத்து அதில்  எண்ணெய் விட்டு 
சூடாக்கவும் 

எண்ணெய் சூடானதும் அதில் அதில் 
உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக 
எடுத்து வடைகளாகத் தட்டிப் போடவும் 

போட்ட பின்னர் அவை பொன்னிறமாகப் 
பொரிந்த பின்னர் அவற்றை எடுத்து ஒரு
 தட்டில் போடவும் 

அப்படி போட்டபின்னர் சுத்தமான 
சுவையான சத்தான மாலை நேர 
சிற்றுண்டியாக எளிதில் செய்யக் 
கூடிய மரவள்ளிக்கிழங்கு வடை 
தயாராகிவிடும்  

அவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து
 சூடாக பரிமாறவும்

(சூடாகப் பரிமாறினால் தான் நன்றாக 
இருக்கும்).

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.