கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. Oktober 2010

முளைக்கீரை கறி


முளைக்கீரை நார் சத்து நிறைந்த ஓர்
உணவு பொருள்.
தேவையான பொருட்கள்
முளைக்கீரை - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கடுகு - கால் தேக்கரண்டி
பால் - ஒரு கப்
உள்ளி - 4 பல்
வெங்காயம் - அரைப்பாகம்
மஞ்சள் தூள் - சிறிதளவு (விரும்பினால்)
மிளகாய்த்தூள் - சிறிதளவு  (விரும்பினால்)


செய்முறை

1.கீரையை ஆய்ந்து கழுவி ஓரளவு பொடியாக
   நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடவும் .

2 .அடுப்பில் பாத்திரத்தினை வைத்து அதில்
     வெட்டி கழுவிய முளைக்கீரை,உள்ளி
     பச்சை மிளகாயை (நீளவாக்கில்வெட்டிய)
    ஆகியவற்றை போட்டு வேகவிடவும்  .

3.இவையாவும் ஒரளவு அவிந்ததும் இவற்றுடன்
    சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு மிளகாய்த்தூள்
    பால் உப்பு ஆகியவற்றை விட்டு அவியவிடவும்.

4.இவையாவும் அவிந்த பின்னர் மத்தால் அல்லது
    மரக்கரண்டியால் நன்றாக மசிக்கவும்.

5.அதன் பின்பு இதனுடன் சிறிதளவு தேசிக்காய்
   (எலுமிச்சம்பழ ) சாற்றினை விட்டு நன்றாக
    கலக்கவும்.

6 .கலந்த பின்னர் அடுப்பிலி இருந்த கீழே
    இறக்கி வைக்கவும்

7.அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்து
   எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு,
   பெருஞ்சீரகம்(சோம்பு), வெங்காயம்ஆகிய
   வற்றை போட்டு  தாளிக்கவும்

8.தாளித்த பின்னர் தாளித்தவற்றை சமைத்து 
   அடுப்பில் இருந்து இறக்கி வைத்துள்ள 
   முளைக்கீரை கறியினுள் போடவும்

9. அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான 
     முளைக்கீரை கறி தயாராகிவிடவும்.

10. அதன் பின்பு ஒரு தட்டில் சோற்றினை
       (சாதத்தை)வைத்து அதனுடன் சுத்தமான 
        சுவையான சத்தான முளைக்கீரைக்கறியை  
        வைத்து பரிமாறவும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 
முளைக்கீரை வெந்ததும் மத்தால் அல்லது
மரக்கரண்டியால் மசிக்கவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.