கரட்டினை பொதுவாக எல்லா குழந்தைகளும் விரும்பி உண்பார்கள் அத்துடன் இக்கரட்டில் உடலுக்கு தேவைப்படும் எல்லா சத்துக்களும் அடங்கியுள்ளது அத்துடன் இக்கரட் சலாட்டில் பால் சத்து ,மினரல்சத்து ,உயிர்சத்து இப்படியான பலசத்துக்கள் அடங்கி உள்ளது.தேவையான பொருட்கள்
சிறியதாக வெட்டிய வெங்காயம் - 1
சிறியவட்டமாகவெட்டிய பச்சைமிளகாய் -2
ஊறுகாய் - ஒரு சிறிய துண்டு
தக்காளிப்பழம் - அரைப்பாகம்
மிளகு (தூள்) - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு (லெமன் ஜூஸ்) -தேவையான அளவு
பால் அல்லது யோக்கற் - தேவையான அளவு
செய்முறை
(1)ஒருபாத்திரத்தில் துருவியகரட்,சிறியவட்டமாக
வெட்டிய பச்சைமிளகாய், சிறிய துண்டுகளாக
வெட்டியவெங்காயம், சிறியதுண்டுகளாகவெட்டிய
தக்காளிப்பழம் ஆகியவற்றை போடவும் .
(2)அதில் ஊறுகாய், உப்பு, மிளகுத்தூள், பால் அல்லது
யோக்கற், தேசிக்காய் சாறு (லெமன் ஜூஸ்) சேர்த்து
நன்றாக கலக்கவும்.
(3)கலக்கிய இக் கலவையை மூடி 2 நிமிடங்கள் ஊற
விடவும்.
(4)அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான கரட்
சம்பல் தயாராகிவிடும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.