கோதுமைமா (மைதாமா)இடியப்பம் இலகுவில்
சமிபாடடையும் ஒரு உணவுப்பொருள் ஆகும் .
இதில் உள்ள கோதுமைமாவில் காபோவைதரேட்
சத்து உள்ளது ,உப்பில் புளோரைட்சத்து உள்ளது
ஆகவே தான் இவை இரண்டையும் சேர்த்து
செய்யப்படும் கோதுமைமா இடியப்பத்தில்
புளோரைட்டு, காபோவைதரேட்டு ஆகிய இரண்டு
சத்துக்களும் காணப்படுகின்றன.அத்துடன் இந்த
கோதுமை மா இடியப்பம் சுத்தமானதும்
சுவையானதும்,மென்மையானதும் இலகுவில்
சமிபாடடையக்கூடியதும் ஆகும்.
தேவையானபொருட்கள்
(2)அவித்தமாவை மூன்று தடவைகள்
(3)அரித்த(சலித்த)மாவை ஒரு பாத்திரத்தில் போடவும் .
(4)பாத்திரத்தில் போட்டு வைத்துள்ள மாவில்
(5)அதன் பின்பு நன்றாக கொதித்த நீர் விட்டு
(6)நன்றாக குழைத்தபின்பு குழைத்த மா
(7)ஒன்றாக சேர்த்த மாவிலிருந்து சிறிதளவு
(8)இடியப்ப உரலில் போட்ட மாவை இடியப்ப
(9)இப்படியே ஓரளவு தேவையான இடியப்பங்களை
(11)பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்றாக கொதித்து
(12)எல்லா இடியப்ப தட்டுகளையும் சரியான முறையில்
(13)இடியப்பங்கள் ஆவியில் தேவையானளவு அவிந்த
(14)அதன் பின்பு இன்னொரு பாத்திரத்தில் இடியப்ப
(15)இப்போது சுவையானதும் சுத்தமானதும்
சமிபாடடையும் ஒரு உணவுப்பொருள் ஆகும் .
இதில் உள்ள கோதுமைமாவில் காபோவைதரேட்
சத்து உள்ளது ,உப்பில் புளோரைட்சத்து உள்ளது
ஆகவே தான் இவை இரண்டையும் சேர்த்து
செய்யப்படும் கோதுமைமா இடியப்பத்தில்
புளோரைட்டு, காபோவைதரேட்டு ஆகிய இரண்டு
சத்துக்களும் காணப்படுகின்றன.அத்துடன் இந்த
கோதுமை மா இடியப்பம் சுத்தமானதும்
சுவையானதும்,மென்மையானதும் இலகுவில்
சமிபாடடையக்கூடியதும் ஆகும்.
தேவையானபொருட்கள்
இலங்கை கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு
நன்றாக கொதித்த நீர் - தேவையான அளவு
செய்முறை
(1)இலங்கை கோதுமைமா(மைதாமா)ஒரு
மணித்தியாலத்திற்கு அவிக்கவும்
(2)அவித்தமாவை மூன்று தடவைகள்
அரிக்கவும் (சலிக்கவும்).
(3)அரித்த(சலித்த)மாவை ஒரு பாத்திரத்தில் போடவும் .
(4)பாத்திரத்தில் போட்டு வைத்துள்ள மாவில்
தேவையானளவு உப்பு போடவும்.
(5)அதன் பின்பு நன்றாக கொதித்த நீர் விட்டு
மர அகப்பையால் (மரக்கரண்டியால் )
நன்றாக குழைக்கவும்.
(6)நன்றாக குழைத்தபின்பு குழைத்த மா
எல்லாவற்றையும் ஒன்றாக்கி(பந்துபோல)
(7)ஒன்றாக சேர்த்த மாவிலிருந்து சிறிதளவு
எடுத்து இடியப்ப உரலில்(இடியப்ப அச்சுடன்
(சிறிய துளைகள் அதிகமுடைய))போடவும்.
(8)இடியப்ப உரலில் போட்ட மாவை இடியப்ப
தட்டில் வட்டமாக பிழியவும்.
(9)இப்படியே ஓரளவு தேவையான இடியப்பங்களை
இடியப்ப தட்டில் பிழிந்து அவற்றை ஒரு
பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்.
(ஸ்டீமர்) கீழ்ப்பகுதியினுள் தேவையானளவு
தண்ணீரை விட்ட பின்பு அதன் மேல் மேற்
பாத்திரத்தை வைத்து அதன் பின்பு மேற்
பாத்திரத்தை அதற்கு அளவான மூடியால்
நன்றாக மூடி அடுப்பில் வைத்து இப்பாத்திரத்தில்
உள்ள தண்ணீரை ஆவி வரும் வரை நன்றாக
கொதிக்கவிடவும்.
(11)பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்றாக கொதித்து
ஆவி வந்து மேல் உள்ள பாத்திரம் நன்றாக
சூடாகிய பின்பு மேல் உள்ள பாத்திரத்தில் இடியப்ப
தட்டில் பிழிந்து வைத்திருக்கும் இடியப்பங்களை
அவற்றுக்குரிய தட்டுக்கள் உடன் சரியான
முறையில் அடுக்கவும்.
(12)எல்லா இடியப்ப தட்டுகளையும் சரியான முறையில்
அடுக்கிய பின்பு இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தின்
(ஸ்டீமர்)மேற்பகுதியை மூடி இடியப்பங்களை
ஆவியில் அவிக்கவும்.
(13)இடியப்பங்கள் ஆவியில் தேவையானளவு அவிந்த
பின்பு மேல் ஸ்டீமரின் மேற்பகுதியை திறந்து
இடியப்ப தட்டுகளை எடுத்து ஒரு பாத்திரத்தில்
வைக்கவும்.
(14)அதன் பின்பு இன்னொரு பாத்திரத்தில் இடியப்ப
தட்டில் உள்ள அவிந்த இடியப்பங்களை எடுத்து
அடுக்கி வைக்கவும்.
(15)இப்போது சுவையானதும் சுத்தமானதும்
மென்மையானதுமான கோதுமைமா
(மைதாமா)இடியப்பம் தயாராகிவிட்டது.
மா(மைதா மா) இடியப்பத்தினை வைத்து
அதனுடன் ஏதாவது கறி,சொதி சம்பல்
இவற்றில் ஒன்றையோ அல்லது எல்லா
வற்றையும் வைத்து பரிமாறவும்.
கவனிக்க வேண்டிய விசயங்கள்
(1) எல்லோரும் (சர்க்கரை நோயுள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனையுடன்)
உண்ணக்கூடிய உணவு,
(2) (a)அவித்து(1 மணித்தியாலம்),
(b)3 தரம் அரித்த(சலித்த) இலங்கை
கோதுமைமா (மைதாமா ),
(c)நன்றாக கொதித்த நீர்
(3)இலங்கை கோதுமைமா(மைதாமா)
மாவை முதலிலே அவித்து அரித்து,
ஆறவைத்து காற்று,பூச்சி,புழு
போகாதவாறு மூடியுள்ள ஒரு
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து
இடியப்பம் தேவையான நேரத்தில்
செய்யலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.