பீட்ருட் பொதுவாக எல்லோருக்கும் மிக நல்லது அத்துடன் இரத்த சுத்திகரிப்புக்கும் இரத்த விருத்திக்கும், வம்ச விருத்திக்கும் மிக மிக சிறந்தது இதில் பலவகைப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.
தேவையான பொருட்கள்
கழுவித் துருவியபீட்ருட் - 1
சிறியதாக வெட்டிய பச்சைமிளகாய் - 1
சிறியதாக வெட்டிய வெங்காயம் - பாதி
பால் அல்லது யோக்கற் - தேவையானளவு
உப்பு- தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
தேசிக்காய்சாறு (லெமென் ஜுஸ்) - தேவையானளவு
அஜினோமோட்டோ - சிறிதளவு (விரும்பினாள்)
செய்முறை
(1)இவை யாவற்றையும் ஒரு பாத்திரத்தில்
போட்டு கலக்கவும்.
(2)கலக்கிய கலவையை 5 நிமிடங்கள்
ஊறவிடவும்.
(3)ஊறவைத்து 5 நிமிடங்களின் பின்னர்
சுவையான சத்தான பீட்ருட் சலாட்
தயாராகிவிடும் .
(4)அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன் சுவையான
சுத்தமான பீட்ருட் சலாட்டினை வைத்து
பரிமாறவும் .
கவனிக்க வேண்டியவை
(1)சிறியதாக நறுக்கிய தக்காளிப்பழத்தை சேர்க்கலாம்,
(2)ஊறுகாய் (சிறிய துண்டு) சேர்த்து கலக்கலாம் .
(3)அஜினோமோட்டோ சேர்த்து கலக்கலாம்.
(4) தக்காளிப்பழம்,ஊறுகாய்,அஜினோமோட்டோ ஆகிய முன்றையும் சேர்த்து கலக்கலாம் .
.jpg)
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.